Popular Posts

Monday, August 31, 2009

நித்தம் நித்தம் போராட்டம் தான் நித்தம் நித்தம் கோசங்கள் தான் நித்தம் நித்தம் ;அணிவகுப்புதான் நித்தம் நித்தம் தர்ணா தான் நித்தம் நித்தம் ஆர்ப்

நித்தம் நித்தம் போராட்டம் தான்
நித்தம் நித்தம் கோசங்கள் தான்
நித்தம் நித்தம் ;அணிவகுப்புதான்
நித்தம் நித்தம் தர்ணா தான்
நித்தம் நித்தம் ஆர்ப்பாட்டம் தான்
தினம் தினம் புரட்சிக்கான ஒத்திகைதான்
இந்த உலகம் முழுமையும் பொதுவுடைமை
பொன்னுலகமாய் மலரும்வரையிலே

எடுத்து விழிப்பாருமில்லை என்ன கவிதையடா எழுதுகின்றாய்? எவருக்காக நீ எழுதுகிறாய்? எவர் நலத்தைப் பாடுகிறாய்? எதற்காக ஓடுகிறாய்? உன்படைப்பு வெளியானால் போத

ஏனெனற பாடுமில்லை
எடுத்து விழிப்பாருமில்லை
என்ன கவிதையடா எழுதுகின்றாய்?
எவருக்காக நீ எழுதுகிறாய்?
எவர் நலத்தைப் பாடுகிறாய்?
எதற்காக ஓடுகிறாய்?
உன்படைப்பு வெளியானால் போதுமாடா?
அது யாருக்கு பயனென்று
ஒரு நாளாவ்து எண்ணினாயா?
உன் பொழுதுபோக்கு தினவுக்கு
உன்படைப்பினை அர்ப்பணித்தாயா?
அந்த நிலையிருந்து நீ மாறுபடு
இனிமேலாவது உன் தேசத்திற்காக எழுதடா?
உன் தேச நலத்திற்காக எழுதடா?
உன்மக்களுக்காக எழுதடா?
உண்மைக்காக எழுதடா:!
உண்மையாக நீ எழுதடா

ஏறும் தேமலடா! இறங்கும் படர்தாமரையடா! கூடும் புருவம் குடிதனைக் கெடுக்குமடா! தனியுடைமை அதிகாரமடா தன்னலத்தில் ஆடுமடா! தாந்தோன்றித் தனமடா இரக்கமனம் கொள்ளா

ஏறும் தேமலடா! இறங்கும் படர்தாமரையடா!
கூடும் புருவம் குடிதனைக் கெடுக்குமடா!
தனியுடைமை அதிகாரமடா தன்னலத்தில் ஆடுமடா!
தாந்தோன்றித் தனமடா இரக்கமனம் கொள்ளாதடா!
எல்லாமக்களையும் ஏழ்மைக்குள் தள்ளிவிட்டு
இல்லாதார் ஆக்கிபுட்டு சதிராட்டம் ஆடுமடா!
விலையை ஏற்றிவிட்டு வேதனைக்குள் அமுக்கிவிட்டு!
மக்களையெல்லாம் பஞ்சத்தில் புதைத்துவிட்டு சிரிக்கும்டா!

கழுதை கழுதை ஆக்கங்கெட்ட கழுதை கழுதை-அது தன்னைப் போல குரலும் தன் அக்காவைப் போல ஒயிலும்! இல்லையுனு சொல்லி கொல்லையில நின்னு ! காள் காளுனு கத்துச்சாம்-மனி

கழுதை கழுதை ஆக்கங்கெட்ட கழுதை கழுதை-அது
தன்னைப் போல குரலும் தன் அக்காவைப் போல ஒயிலும்!
இல்லையுனு சொல்லி கொல்லையில நின்னு !
காள் காளுனு கத்துச்சாம்-மனிதருள் சிலரும் இதுபோலவே!
தன்னைப்போல பெரியவங்க இந்த பூமியில இல்லையினு!
தன்னைத் தானே ;உயர்த்திக்கிட்டு ததிங்க நத்தம் போடுறாங்க!

ஊர் நல்லதா? வாய் நல்லதா? வாய் நல்லதானால் ஊர் நல்லதாகும்!- நீ நல்லவனானால் ஊர் நல்லதாகும்! நீ நன்மைக்காக போராடினால் உலகம் நல்லதாகும்- நீ நல்லோர்வழி ந

ஊர் நல்லதா? வாய் நல்லதா?
வாய் நல்லதானால் ஊர் நல்லதாகும்!- நீ
நல்லவனானால் ஊர் நல்லதாகும்! நீ
நன்மைக்காக போராடினால் உலகம் நல்லதாகும்- நீ
நல்லோர்வழி நடந்தால் இந்த பிரபஞ்சமே நல்லதாகும் !

ஊதுகிற சங்க ஊதிவையடா! --போராட்ட ஊதுகிற சங்க ஊதிவையடா!-வசந்தம் விடிகின்ற போது விடியட்டுண்டா! உண்மைய சொல்ல தயங்காதே! உரிமைய கேட்க மறக்காதே! நியாயத்தை

ஊதுகிற சங்க ஊதிவையடா! --போராட்ட
ஊதுகிற சங்க ஊதிவையடா!-வசந்தம்
விடிகின்ற போது விடியட்டுண்டா!
உண்மைய சொல்ல தயங்காதே!
உரிமைய கேட்க மறக்காதே!
நியாயத்தை உரைக்க மறுக்காதே!
நேர்மையாய் நடக்க பின்வாங்காதே!

ஊசாலாடி ஊசலாடி தன்னிலையில் நிற்கும்!- மன ஊசலாடி ஊசலாடி தன்னிலையை இழக்கும்!-கடல் அலைபாயும் அலைந்தலைந்து அமைதியாகும்!- நெஞ்சமோ!~ அலைந்த்லைந்து அவள் நினை

ஊசாலாடி ஊசலாடி தன்னிலையில் நிற்கும்!- மன
ஊசலாடி ஊசலாடி தன்னிலையை இழக்கும்!-கடல்
அலைபாயும் அலைந்தலைந்து அமைதியாகும்!- நெஞ்சமோ!~
அலைந்த்லைந்து அவள் நினைவில் சங்கமமாகும்!
நீந்திவந்த மீனகளெல்லாம் அவள்விழியில் துள்ளும்!
நிலவுக்குள்ளும் அவள்முகமும் நீண்டகவிதைசொல்லும்!

காடுகொள்ளுமா காடுகொள்ளுமா? கள்ளமனசுக்கு காடுகொள்ளுமா? காதல் வயசுக்கு இந்த உலகம் கொள்ளுமா? காதல மறிச்சு நின்னு யாரும் வெற்றிகொண்டதுண்டோ? காதலர பிரிச்ச

காடுகொள்ளுமா காடுகொள்ளுமா?
கள்ளமனசுக்கு காடுகொள்ளுமா?
காதல் வயசுக்கு இந்த உலகம் கொள்ளுமா?
காதல மறிச்சு நின்னு யாரும் வெற்றிகொண்டதுண்டோ?
காதலர பிரிச்சு வெச்சி வாழும்வாழ்க்கை ஒருவாழ்க்கையா?

துள்ளுது துள்ளுது கன்னி மனமே-கண்ணில் சொல்லுது சொல்லுது காதல் தினமே-ஆசை கிள்ளுது கிள்ளுது நெஞ்சைத் தினமே-அன்பை அள்ளுது அள்ளுது இன்பம் தினமே

துள்ளுது துள்ளுது கன்னி மனமே-கண்ணில்
சொல்லுது சொல்லுது காதல் தினமே-ஆசை
கிள்ளுது கிள்ளுது நெஞ்சைத் தினமே-அன்பை
அள்ளுது அள்ளுது இன்பம் தினமே

குட்டிச்சுவரே கழுதை கெட்டாலே-அந்த குட்டிச்சுவரே கூட இங்க ஏழைக்கில்லே! வேலைக்கேத்த கூலி இல்ல வெலவாசி ஏறுனது இறங்குவதில்ல படிப்புக்கேத்த வேலை இல்ல படிச்

குட்டிச்சுவரே கழுதை கெட்டாலே-அந்த
குட்டிச்சுவரே கூட இங்க ஏழைக்கில்லே!
வேலைக்கேத்த கூலி இல்ல
வெலவாசி ஏறுனது இறங்குவதில்ல
படிப்புக்கேத்த வேலை இல்ல
படிச்சவனுக்கே வேலை இல்ல
படிக்காதவனுக்கும் வேலை இல்ல
உழைப்புக்கேத்த ஊதியமில்ல
உழைப்பவருக்கு தகுந்த கூலி உயர்வுமில்ல!

கல்லுங்கரையுமே கல்லுங்கரையுமே ! கரைப்பார் கரைப்பார் கரைத்தாலுமே! காணும் இலக்கை தொடர்ந்து நடந்தால்! கடமை நெஞ்சம் கொண்டோர் வெற்றிகொள்வாரே!

கல்லுங்கரையுமே கல்லுங்கரையுமே !
கரைப்பார் கரைப்பார் கரைத்தாலுமே!
காணும் இலக்கை தொடர்ந்து நடந்தால்!
கடமை நெஞ்சம் கொண்டோர் வெற்றிகொள்வாரே!

கண்ணுக்கு கண்ணருகே காணலாம்! காதலுக்குள் காதலினைக் காணலாம்! காதலரின் நெஞ்சுக்குள்ளே! களிப்புலகம் காணலாம்-காதல் கரிசனமாய் பார்க்கும் ஓரக் கருவிழிமணியில

கண்ணுக்கு கண்ணருகே காணலாம்!

காதலுக்குள் காதலினைக் காணலாம்!
காதலரின் நெஞ்சுக்குள்ளே!
களிப்புலகம் காணலாம்-காதல்
கரிசனமாய் பார்க்கும் ஓரக்
கருவிழிமணியில் காணும்!

கண்ணுக்கு இமையும் தூரமில்லை ஊடலுக்கு கூடலும் தூரமில்லை காதலர்க்கு காத்திருக்க காலமில்லை-அவர்காணும் கனவுக்கோ காணத்தான் வானமே எல்லை!

கண்ணுக்கு இமையும் தூரமில்லை
ஊடலுக்கு கூடலும் தூரமில்லை
காதலர்க்கு காத்திருக்க காலமில்லை-அவர்காணும்
கனவுக்கோ காணத்தான் வானமே எல்லை!

பேரோ பொன்னம்மா பொன்னம்மா!-கட்டக் கருகமணி கூட ஏதும் இல்லம்மா! இல்லம்மா! பேரோ ஆரோக்கியம் ஆரோக்கியமாம்-ஆனா நாளும் இல்லாத நோயில்லை அவருக்கே!

பேரோ பொன்னம்மா பொன்னம்மா!-கட்டக் கருகமணி
கூட ஏதும் இல்லம்மா! இல்லம்மா!
பேரோ ஆரோக்கியம் ஆரோக்கியமாம்-ஆனா
நாளும் இல்லாத நோயில்லை அவருக்கே!

தாழங்காய் தாழங்காய்-கடற்கரை தாழங்காய்- நீ கீழே தங்கியென்ன? மேலே தொங்கியென்ன? யாருக்கும் பயனில்லை! மக்கள் நலனுக்காக போராடாத மக்கள் இருந்தென்ன? எதற்கும்

தாழங்காய் தாழங்காய்-கடற்கரை
தாழங்காய்- நீ
கீழே தங்கியென்ன? மேலே தொங்கியென்ன?
யாருக்கும் பயனில்லை!
மக்கள் நலனுக்காக போராடாத மக்கள் இருந்தென்ன?
எதற்கும் பயனில்லை!

உடல்வற்றிச் செத்த கொக்கின் வாழ்வுக்கு பின்னாலே கடல்வற்றி கருவாடு தின்னலாமென்ற ஆசைக் கருத்தும் இருக்கிறதே! ஆசை இல்லாத ஜீவராசிகள் இந்த பிரபஞ்சத்தில் இல்

உடல்வற்றிச் செத்த கொக்கின் வாழ்வுக்கு பின்னாலே
கடல்வற்றி கருவாடு தின்னலாமென்ற
ஆசைக் கருத்தும் இருக்கிறதே!
ஆசை இல்லாத ஜீவராசிகள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையடா!-தேவைக்கேற்ற
ஆசைகள் இல்லாமல் பேராசை தானே பெரும் நஷ்டம் ஆக்குமடா!
அத்யாவசிய தேவைகள் பூர்த்திசெய்து தாராத அரசு இருந்தென்ன?
இல்லாமல் போனால் என்ன? தூக்கி எறிந்திடும் திராணியில்லாத மக்கள்
மக்களே இல்லை இல்லை!

கடல்பெருகினால் கரையேது ?? கண்கள் பெருகினால் திரையேது? அணையேது? காதல் பெருகினால் தடையேது ?தடுப்பேது? காதலன்பிலே உருவாகும் ஒரு நேசவலையே! கண்ணில் துவங்கி

கடல்பெருகினால் கரையேது ??
கண்கள் பெருகினால் திரையேது? அணையேது?
காதல் பெருகினால் தடையேது ?தடுப்பேது?
காதலன்பிலே உருவாகும் ஒரு நேசவலையே!
கண்ணில் துவங்கி நெஞ்சில் இருத்தி கருத்தில் நிறுத்தி-வாழ்வில்
காணும் இன்பம் கனியும் இல்லம் காலம் எல்லாம் வசந்தமே!

கடலுக்கு கரைபோடுவாருமில்லை! காதலுக்குத் தடை நிற்பாருமில்லை! உடலுக்கு உயிர்சொந்தமா? உயிருக்கு உடல்சொந்தமா? உயிரும் உடலும் கலந்து நிற்கும் மூச்சு வாழ்க்

கடலுக்கு கரைபோடுவாருமில்லை!
காதலுக்குத் தடை நிற்பாருமில்லை!
உடலுக்கு உயிர்சொந்தமா?
உயிருக்கு உடல்சொந்தமா?
உயிரும் உடலும் கலந்து நிற்கும் மூச்சு வாழ்க்கை பந்தமென்று சொல்வதா?
என்னென்று சொல்வதோ ? ஏதென்று சொல்வதோ?
என்று நானும் குழம்பி நிற்கின்றேனே!

Sunday, August 30, 2009

வவுத்துக்கு கஞ்சியுமில்லை இடுப்புக்கு துணியுமில்லை இருந்திட குச்சுமில்லை-காலுக்கு நடந்திட செருப்புமில்லை-இடையில விலைவாசியும் விசம்போல ஏறிவருகுதே வேதனை

வவுத்துக்கு கஞ்சியுமில்லை
இடுப்புக்கு துணியுமில்லை
இருந்திட குச்சுமில்லை-காலுக்கு
நடந்திட செருப்புமில்லை-இடையில
விலைவாசியும் விசம்போல ஏறிவருகுதே
வேதனையும் மிகவும் கூடி விடுதே
காசுவாங்கி ஓட்டுப்போட்டேன்
மானங்கெட்டு மதிகெட்டேன்
கயவர்களை சிம்மாசனம் ஏற்றிவிட்டு-இன்னைக்கு
கடன்பட்டு உடன்பட்டு
கஞ்சிக்கின்றி அலையுறனே!

வவுத்துக்கு கஞ்சியுமில்லை இடுப்புக்கு துணியுமில்லை இருந்திட குச்சுமில்லை-காலுக்கு நடந்திட செருப்புமில்லை-இடையில விலைவாசியும் விசம்போல ஏறிவருகுதே வேதனை

வவுத்துக்கு கஞ்சியுமில்லை
இடுப்புக்கு துணியுமில்லை
இருந்திட குச்சுமில்லை-காலுக்கு
நடந்திட செருப்புமில்லை-இடையில
விலைவாசியும் விசம்போல ஏறிவருகுதே
வேதனையும் மிகவும் கூடி விடுதே
காசுவாங்கி ஓட்டுப்போட்டேன்
மானங்கெட்டு மதிகெட்டேன்
கயவர்களை சிம்மாசனம் ஏற்றிவிட்டு-இன்னைக்கு
கடன்பட்டு உடன்பட்டு
கஞ்சிக்கின்றி அலையுறனே!

வரப்போ வரப்போ தலைகாணி ஆச்சோ? வாய்க்காலோ வாய்க்காலோ பஞ்சுமெத்தை ஆச்சோ? வயற்காட்டு மச்சானுக்கு வரகரிசி கொண்டு வாரேன் வாதா மரத்தடியில குயில்பாடும் பாடும்

வரப்போ வரப்போ தலைகாணி ஆச்சோ?
வாய்க்காலோ வாய்க்காலோ பஞ்சுமெத்தை ஆச்சோ?
வயற்காட்டு மச்சானுக்கு வரகரிசி கொண்டு வாரேன்
வாதா மரத்தடியில குயில்பாடும் பாடும் பாட்டுக் கேட்டேன்
வம்பளக்கும்ஆணும் பெண்ணும் வரப்போரம் கூடக்கண்டேன்
வயற்க்காடெல்லாமே மனையிடமாய் ஆகிவருவதாலே
வயல்வரப்பு தென்றல்சுகம் பறவை ஓசை எல்லாமே-இனி
வரும்காலத்தில் அரிதாகப் போய் அந்த தேனின்பம்
இல்லாமல் போக வயற்பாட்டு மறைந்து போகுமோ?

மனிதர்களை நேசிப்பதும் மனிதர்களால் நேசிக்கப்ப்டுவதும் தானே! இல்வாழ்க்கையில் மனித நற்பேறுகளில் எல்லாம் மிக முக்கியமானதே என நம்புகிறேன் ----வல்லிக்கண்ணன்

மனிதர்களை நேசிப்பதும்
மனிதர்களால் நேசிக்கப்ப்டுவதும் தானே!
இல்வாழ்க்கையில் மனித நற்பேறுகளில்
எல்லாம் மிக முக்கியமானதே என நம்புகிறேன்
----வல்லிக்கண்ணன்-------
அய்யா அதற்கு பெயர்”மனித நேயம்!” என்று
சொல்லலாமா?

உளி நீ ! உளி நீ !எழுந்துவா! எழுந்துவா! அடிமை விலங்குகளை உடைப்பதற்கு! உண்மைப் போராளி நீ இழப்பதற்கு அடிமைவிலங்கு தவிர! அடைவதற்கு பொதுவுடைமை பொன்னுலகம் த

உளி நீ ! உளி நீ !எழுந்துவா! எழுந்துவா!
அடிமை விலங்குகளை உடைப்பதற்கு!
உண்மைப் போராளி நீ
இழப்பதற்கு அடிமைவிலங்கு தவிர!
அடைவதற்கு பொதுவுடைமை பொன்னுலகம் தவிர !
வேறென்ன இருக்கிறது உன்சமூகவாழ்க்கையிலே!
அய்யா வல்லிக்கண்ணனைப் போல
எதிலும் தன்னை இழந்துவிடாமல்
இலக்கியப் பயணத்தில்
இடராது தொடர்ந்து
நடைபோடும் மாமனிதர்கள்
சமூகத்தில் அரிதாகவே இருக்கிறார்கள்!

’எழுத்து என்பது எனது பிழைப்பு இல்லை” எனது வாழ்வு என்று வல்லிக்கண்ணனும் சொன்னாரே!- நான் சொல்கிறேன்! எழுத்து என்பது எனது மூச்சு ! எனது சுவாசம் எனது சுதந

’எழுத்து என்பது எனது பிழைப்பு இல்லை”
எனது வாழ்வு என்று வல்லிக்கண்ணனும் சொன்னாரே!- நான் சொல்கிறேன்!
எழுத்து என்பது எனது மூச்சு !
எனது சுவாசம் எனது சுதந்திரம்!~
எனது உயிர் எனது உரிமை!
எனது தேச ,உலக நல்வாழ்வுக்கான போராட்டம்!
எனது பிரபஞ்சத்தின் மக்கள் கலையாம்!

எழுந்திரு எழுந்திரு விழித்திரு விழித்திரு-உண்மைதனை உணர்ந்திரு உணர்ந்திரு நன்மை செய்ய ஒளிர்ந்திரு ஒளிர்ந்திரு விரைந்திடு விரைந்திடு இலட்சியத்தை அடையும்

எழுந்திரு எழுந்திரு விழித்திரு விழித்திரு-உண்மைதனை
உணர்ந்திரு உணர்ந்திரு நன்மை செய்ய ஒளிர்ந்திரு ஒளிர்ந்திரு
விரைந்திடு விரைந்திடு இலட்சியத்தை அடையும் வரை
சோர்வினை விட்டிடு துணிவுடன் நடந்திடு!

பூமரத்தின் பட்டுக் கூந்தல் மண்ணினுள் அழுதுகொண்டிருக்கும் கண்கள் விளைகின்ற தானியத்தை ஏற்றிவிடும் ஏணி விதையின் குழந்தை மண்ணுக்குள் ஓவியம் எழுதிடும் மரங்

பூமரத்தின் பட்டுக் கூந்தல்
மண்ணினுள் அழுதுகொண்டிருக்கும் கண்கள்
விளைகின்ற தானியத்தை ஏற்றிவிடும் ஏணி
விதையின் குழந்தை
மண்ணுக்குள் ஓவியம்
எழுதிடும் மரங்களின் தூரிகை
பூமிவயிற்றினில் வளர்ந்த வைரம்
மரங்களின் நங்கூரம்
சுவாசம் மேலே
இதயம் கீழே
என்றெல்லாம் படித்தேன்
இருந்தும் வேர்பற்றி நான் என்னசொல்லவோ!

குதிரை ஏறி என்ன? கோணகொம்பே ஊதி என்ன? வீணருக்கும் உண்மைக்கும் வெகுதூரமே! காலம் மாறினால் என்ன? கோலம் மாறினால் என்ன? கயவருக்கும் நல்லசெயலினுக்கும் வெகுதூ

குதிரை ஏறி என்ன? கோணகொம்பே ஊதி என்ன?
வீணருக்கும் உண்மைக்கும் வெகுதூரமே!
காலம் மாறினால் என்ன? கோலம் மாறினால் என்ன?
கயவருக்கும் நல்லசெயலினுக்கும் வெகுதூரமே!

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்துல ராசா ராசா! அகப்பட்டவனுக்கோ அஷ்டமத்துல சனியாம் சனியாம்! எத்தனை நாளைக்கு சோதிடம் பாத்து காலத்தை ஓட்டுவாரோ? சாதகம் பார்த

ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்துல ராசா ராசா!
அகப்பட்டவனுக்கோ அஷ்டமத்துல சனியாம் சனியாம்!
எத்தனை நாளைக்கு சோதிடம் பாத்து காலத்தை ஓட்டுவாரோ?
சாதகம் பார்த்து வாழ்வினைத் தொடர்ந்தால் உருப்படுமோ?

ஒரு காதல் அறிய இரு உள்ளங்கள் வேண்டும்-இரு உள்ளங்கள் இணைய நான்கு கண்கள் வேண்டும் நான்கு கண்களும் இரு உள்ளங்களும் ஒரு நேர்கோட்டில் சேரும்போது காதலன்பு

ஒரு காதல் அறிய இரு உள்ளங்கள் வேண்டும்-இரு
உள்ளங்கள் இணைய நான்கு கண்கள் வேண்டும்
நான்கு கண்களும் இரு உள்ளங்களும் ஒரு நேர்கோட்டில்
சேரும்போது காதலன்பு உருவாக்கும் இன்பமாகுமே!

கரும்பே கசக்கிறது கரும்பின் குற்றமில்லையடா~ கரும்பை உண்ணும் வாயின் குற்றமடா!-அளவுக்கு மிஞ்சினாலே! கரும்புகூட விரும்ப விரும்ப வேம்பாகுமே~ ஊடலிலே கரும்ப

கரும்பே கசக்கிறது கரும்பின் குற்றமில்லையடா~
கரும்பை உண்ணும் வாயின் குற்றமடா!-அளவுக்கு மிஞ்சினாலே!
கரும்புகூட விரும்ப விரும்ப வேம்பாகுமே~ ஊடலிலே
கரும்பான காதலும் வேம்பாகும் ஓர் நாளிலே!

காதல் கண்ணுக்கு புண்ணுமில்லை! காண்போருக்கு நோயுமில்லை! காதலிக்காதவர்கள் காசினியில் இல்லை! காதலை மறுப்பவர்கள் யாருமில்லை! காதலைப் பாடாத கவிஞர்களும் இல்

காதல் கண்ணுக்கு புண்ணுமில்லை!
காண்போருக்கு நோயுமில்லை!
காதலிக்காதவர்கள் காசினியில் இல்லை!
காதலை மறுப்பவர்கள் யாருமில்லை!
காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை!
காதலைத் தேடாத உலகமில்லை!

ஓரம் வெளுத்ததடி ஒருபக்கம் செல்லரித்ததடி! காதோரம் நரைத்தமுடி கதைமுடிவக் காட்டுதடி! ஓரம் வெளுத்தாலென்ன? ஒருபக்கம் செல்லரித்தாலென்ன? வயசும் ஆனாலென்ன? வால

ஓரம் வெளுத்ததடி ஒருபக்கம் செல்லரித்ததடி!
காதோரம் நரைத்தமுடி கதைமுடிவக் காட்டுதடி!
ஓரம் வெளுத்தாலென்ன?
ஒருபக்கம் செல்லரித்தாலென்ன?
வயசும் ஆனாலென்ன?
வாலிபமும் போனாலென்ன?உம்மனசு
வாலிபமா இருக்குதங்க மச்சானே- நல்ல மனசுக்கு
வயசும் வயசாமோ? நரையும் நரையாமோ?

ஒருமரத்துப் பட்டையே ஒருமரத்திலே ஒட்டுமாடா?-வாழ்வில் ஒட்டுறது தானே ஒட்டுமடா ஒட்டாதது ஒட்டாமல் போகுமடா-உலகினிலே ஒட்டாமலே தனித்திருந்து ஜெயித்ததாக சரித்த

ஒருமரத்துப் பட்டையே ஒருமரத்திலே ஒட்டுமாடா?-வாழ்வில்
ஒட்டுறது தானே ஒட்டுமடா
ஒட்டாதது ஒட்டாமல் போகுமடா-உலகினிலே
ஒட்டாமலே தனித்திருந்து ஜெயித்ததாக சரித்திரமில்லையடா!
ஒட்டாமலே மனித உயிரும் ஜனித்ததாக நடந்ததுமில்லையடா!

உலகமே உலகமே விசித்திரமடா!-அதில் வாழும் உள்ளங்கள் எல்லாம் விந்தையடா! ஒருத்தர் நினைத்தை ஒருத்தர் நினைப்பதில்லை! ஒருத்தர் கனவினை ஒருத்தர் காண்பதில்லை! ஒர

உலகமே உலகமே விசித்திரமடா!-அதில் வாழும்
உள்ளங்கள் எல்லாம் விந்தையடா!
ஒருத்தர் நினைத்தை ஒருத்தர் நினைப்பதில்லை!
ஒருத்தர் கனவினை ஒருத்தர் காண்பதில்லை!
ஒருத்தர் போனவழி ஒருத்தர் போகிறதில்லை!
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வழியாகும்
ஒருவர் மனதினில் ஓராயிரம் எண்ண்ங்கள்!
ஒவ்வொரு மனிதருள்ளும் கோடிகோடி எண்ணங்கள்!
எண்ண எண்ண அதிசயமடா! -அதில் ஒளிந்திருக்கும்
எத்தனை எத்த்னை ரகசியமடா!

ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு ஒரு வழியா? ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு பலவழியே! ஒருகதவு அடைத்துவிட்டால் மறுகதவு திறந்திடுமே! உலகினிலே நல்வாழ்விற்கு நாம் நல்வழியில

ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு ஒரு வழியா?
ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு பலவழியே!
ஒருகதவு அடைத்துவிட்டால் மறுகதவு திறந்திடுமே!
உலகினிலே நல்வாழ்விற்கு நாம் நல்வழியில் நாம் நடந்திடவே!
எத்தனையோ வழிகளிருக்கு மக்கள்வாழ வழிபிறக்கும்!
இந்த உலகினில் நீயும் இறங்கி நடந்து பாரடா!

ஒடிந்த கோலும் ஊன்றுகோலாகுமடா! துரும்புகள் ஒன்று சேர்ந்தாலே ஓடமாகும்டா! ஒட்டினா ஒட்டினா தொட்டிலும் கொள்ளுமடா ஒட்டாவிட்டாலோ கட்டிலும் கொள்ளாதடா! தனிமரம்

ஒடிந்த கோலும் ஊன்றுகோலாகுமடா!
துரும்புகள் ஒன்று சேர்ந்தாலே ஓடமாகும்டா!
ஒட்டினா ஒட்டினா தொட்டிலும் கொள்ளுமடா
ஒட்டாவிட்டாலோ கட்டிலும் கொள்ளாதடா!
தனிமரம் என்றும் தோப்பாவதில்லையடா!
தனிமையிலே இனிமையானதாய் சரித்திரமில்லையடா!
ஒன்றுபட்ட இதயங்களில் காதலன்பு மலருமடா!
ஒன்றுபட்ட மக்கள் ஜன நாயகம்
வாழும் மக்கள் அரசை உருவாக்குமடா!

ஒண்ணுகொண்டு எட்டுவைத்தாலே லாபமோ லாபமடா! ஒருகோடி கொண்டு படுத்துகிடந்தாலே நட்டமோ நட்டமடா! நடந்து பாருடா நாடே உன்பின்னாலே! நல்லோர் வழியினில் நடந்து பார

ஒண்ணுகொண்டு எட்டுவைத்தாலே லாபமோ லாபமடா!
ஒருகோடி கொண்டு படுத்துகிடந்தாலே நட்டமோ நட்டமடா!
நடந்து பாருடா நாடே உன்பின்னாலே!
நல்லோர் வழியினில் நடந்து பாருடா !
நாளைய பொன்னுலகம் கைமேலே!

ஏற ஒண்ணு இறங்க ஒண்ணு! எனக்கொண்ணு உனக்கொண்ணு! கப்பலுல வந்தாக்கா எங்க அக்கா மகனுக்கொண்ணு! இன்னுமொண்ணு இனிமேலுமொண்ணு! இலவசமா வாங்கி வாங்கி இந்த நாடு எங்

ஏற ஒண்ணு இறங்க ஒண்ணு!
எனக்கொண்ணு உனக்கொண்ணு!
கப்பலுல வந்தாக்கா எங்க அக்கா மகனுக்கொண்ணு!
இன்னுமொண்ணு இனிமேலுமொண்ணு!
இலவசமா வாங்கி வாங்கி இந்த நாடு
எங்கேயோ போயிருச்சு-காசுக்கு
ஓட்ட வித்து தரிசாவே போயிருச்சு!
கடன்மேல கடன்வாங்கி நாடும் !
கழுதை தேஞ்சி கட்டெறும்பா ஆயிருச்சு!

எல்லாமே சரியென்று நீயும் எண்ணலாமோ?- உலகினில் எதையும் ஆய்வுசெய்ய நீயும் மறக்கலாமோ?- நாட்டினில் எதற்கும் ஆமாம் சாமி நீயும் போடலாமோ?-பகுத்தறிவினில் அறிவி

எல்லாமே சரியென்று நீயும் எண்ணலாமோ?- உலகினில்
எதையும் ஆய்வுசெய்ய நீயும் மறக்கலாமோ?- நாட்டினில்
எதற்கும் ஆமாம் சாமி நீயும் போடலாமோ?-பகுத்தறிவினில்
அறிவினை செலுத்திடவே நீயும் மறக்கலாமோ?

Saturday, August 29, 2009

எண்ணை முந்தியதா? திரி முந்தியதா? முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? காற்று முந்தியதா? அசைவு முந்தியதா? காலம் முந்தியதா? பிரபஞ்சம் முந்தியதா? எது முந்தி

எண்ணை முந்தியதா? திரி முந்தியதா?
முட்டை முந்தியதா? கோழி முந்தியதா?
காற்று முந்தியதா? அசைவு முந்தியதா?
காலம் முந்தியதா? பிரபஞ்சம் முந்தியதா?
எது முந்தியதாய் இருந்தாலும் என்ன?
ஆய்வுக்குள் ஆய்ந்து தீர்வுரைப்போம்
அதற்குமுன் உன்னடிமை புத்தியிலே
ஆண்டாண்டு காலமாய் அடிமைபட்ட நிலைமாறிட
உழைப்போரே அதற்கு நீங்களென்ன நடவடிக்கை எடுத்தீர்?

எண்ணிமுடியாது எண்ணிமுடியாது - நினைத்திடும் எண்ணத்தையெல்லாமே எண்ணிமுடியாது ---எண்ணிமுடியாது உலகத்தினிலே நினைத்திடும் எண்ணத்தையெல்லாமே எழுதிவிடவே ஏட்டில

எண்ணிமுடியாது எண்ணிமுடியாது - நினைத்திடும் எண்ணத்தையெல்லாமே
எண்ணிமுடியாது ---எண்ணிமுடியாது உலகத்தினிலே
நினைத்திடும் எண்ணத்தையெல்லாமே எழுதிவிடவே
ஏட்டில் அடங்காதே ஏட்டில் அடங்காதே!
எண்ணினார் கோடி கோடியே
இழப்பதறியாமலே
இழப்பதற்கே உழைக்குமக்கள் அனைவருக்குமே!! அடிமைவிலங்கு தவிர வேறொன்றுமில்லையே!

ஊருக்கு ஆகாதது வீட்டுக்கும் ஆகாதது! உறவுக்கு ஆகாதது உள்ளத்துக்கும் ஆகாதது கண்ணுக்கு ஆகாதது காதலுக்கும் ஆகாதது! கருத்துக்கு ஆகாதது வாழ்வுக்கும் ஆகாதது!

ஊருக்கு ஆகாதது வீட்டுக்கும் ஆகாதது!
உறவுக்கு ஆகாதது உள்ளத்துக்கும் ஆகாதது
கண்ணுக்கு ஆகாதது காதலுக்கும் ஆகாதது!
கருத்துக்கு ஆகாதது வாழ்வுக்கும் ஆகாதது!
உண்மைக்கு ஆகாதது உரிமைக்கும் ஆகாதது!

ஊத அறிந்தவன் வாதியடா! உப்பை அறிந்தவன் யோகியடா! உணவை அறிந்தவன் போகியடா! உண்மை அறிந்தவன் ஞானியடா! உலகை அறிந்தவன் மார்க்சீய வாதியடா!

ஊத அறிந்தவன் வாதியடா!
உப்பை அறிந்தவன் யோகியடா!
உணவை அறிந்தவன் போகியடா!
உண்மை அறிந்தவன் ஞானியடா!
உலகை அறிந்தவன் மார்க்சீய வாதியடா!

ஊசிக் கண்ணிலே ஊசிக் கண்ணிலே-இந்த உலகத்தைப் காண்பதைப் போலவே-திருக் குறளின் இரண்டு அடியினிலே-இந்த பிரபஞ்சத்தையே காண்கிறேன்!

ஊசிக் கண்ணிலே ஊசிக் கண்ணிலே-இந்த
உலகத்தைப் காண்பதைப் போலவே-திருக்
குறளின் இரண்டு அடியினிலே-இந்த
பிரபஞ்சத்தையே காண்கிறேன்!

உள்ளங்கையிலே தேனவெச்சிபுட்டு புறங்கையினை நக்கற உலகமடா! உரிமையினை கையிலவெச்சுக் கிட்டு! அடிமைபட்டு கிடக்குற உழைப்பாளர் கூட்டமடா!

உள்ளங்கையிலே தேனவெச்சிபுட்டு
புறங்கையினை நக்கற உலகமடா!
உரிமையினை கையிலவெச்சுக் கிட்டு!
அடிமைபட்டு கிடக்குற உழைப்பாளர் கூட்டமடா!

உழக்கிலே கிழக்கு மேற்கா? உலகிலே நாடு ,இன,சாதி,மத பேதமா? உள்ளத்திலே ஏற்றதாழ்வா? உதிரத்திலே கருப்பா? சிவப்பா?பார்ப்பதை மாற்றிவிடடா! மனிதரை மனிதர் சரி நி

உழக்கிலே கிழக்கு மேற்கா?
உலகிலே நாடு ,இன,சாதி,மத பேதமா?
உள்ளத்திலே ஏற்றதாழ்வா?
உதிரத்திலே கருப்பா? சிவப்பா?பார்ப்பதை மாற்றிவிடடா!
மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய் மதிப்பது நம் கடமையடா!

உனக்கென்ன வயதுக்கு நரைக்கவில்லை! உன்முடிக்குத் தானே நரைவிழுந்தது! எந்த வயதிலும் இருபது வயதாய் வாழலாமே! நல்ல எண்ணம் , நல்ல உழைப்பு , நாட்டுக்குழைத்தல்

உனக்கென்ன வயதுக்கு நரைக்கவில்லை!
உன்முடிக்குத் தானே நரைவிழுந்தது!
எந்த வயதிலும் இருபது வயதாய் வாழலாமே!
நல்ல எண்ணம் , நல்ல உழைப்பு , நாட்டுக்குழைத்தல்,- நல்வழியினில்
நடந்து பார்த்தாலே என்றும் நமக்கு இளமைதானடா!

உப்போடே முப்பத்தியிரண்டும் உறவோடே ஒருகோடிசொந்தமும் உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும் வேண்டும் விருந்துக்கு விருந்துக்கு-இருந்து இருந்து உண்ட

உப்போடே முப்பத்தியிரண்டும்
உறவோடே ஒருகோடிசொந்தமும்
உப்போடு ஒன்பதும்
பருப்போடு பத்தும்
வேண்டும் வேண்டும் விருந்துக்கு விருந்துக்கு-இருந்து இருந்து
உண்டு உண்டு போங்க போங்க!விருந்துண்ண வந்தவங்களே!
உப்பில்லாத பண்டம் குப்பையிலே!
உரிமைக்காக போராடாத மனிதரும் குப்பையிலே!

ஊதாரிக்கு பொன்னும் துரும்பாகுமே உலுத்தவனுக்கு எதுவும் கரும்பாகுமே வஞ்சகனுக்கோ உலகம் சுரும்பாகுமே கோழைக்கோ பஞ்சும் இரும்பாகுமே உதட்டுத் துரும்பு ஊதின

ஊதாரிக்கு பொன்னும் துரும்பாகுமே
உலுத்தவனுக்கு எதுவும் கரும்பாகுமே
வஞ்சகனுக்கோ உலகம் சுரும்பாகுமே
கோழைக்கோ பஞ்சும் இரும்பாகுமே
உதட்டுத் துரும்பு ஊதினாலே போவதில்லையே
உள்ளத்து இரும்போ அன்பாலே மாறிவிடுமடா!

காலை இளவெயிலை தாங்காதவளே! கண்ணைப் பிரிந்தாளே , நெஞ்சை மறந்தாளே காதல்ப் பிரிவுத் தீயினைத் தாங்கிடுவாளோ? ஊடல் ஒருபொழுதே தாங்காத நெஞ்சம்! ஒரு நாளில் பிரி

காலை இளவெயிலை தாங்காதவளே!
கண்ணைப் பிரிந்தாளே , நெஞ்சை மறந்தாளே
காதல்ப் பிரிவுத் தீயினைத் தாங்கிடுவாளோ?
ஊடல் ஒருபொழுதே தாங்காத நெஞ்சம்!
ஒரு நாளில் பிரிவென்றாலெ தாங்கிடுமோ கொஞ்சம்!
அன்புக்கு வந்ததென்ன பஞ்சம்
அவளின் பிரிவாலே தந்ததென்னவோ! வஞ்சம்

போலிச் சாமியாரடி இவன் கல்லாது கற்றவனடி -தன் உள்ளங்கையினில் வைகுண்டமும்-தன் முழங்கையினில் கைலாசமும் காட்டுவானடி! எல்லாருக்கும் கல்வி,எல்லாருக்கும் உணவு

போலிச் சாமியாரடி இவன் கல்லாது கற்றவனடி
-தன்
உள்ளங்கையினில் வைகுண்டமும்-தன்
முழங்கையினில் கைலாசமும் காட்டுவானடி!
எல்லாருக்கும் கல்வி,எல்லாருக்கும் உணவு,உடை,வீடு கொடுங்கள்,
அத்யாவசிய தேவைகளை பூர்த்திசெய் கொள்கை சொல்லுங்கள்,
என்று கேட்டாலோ? துண்டைக் காணோம் ,துணியைக் காணோம்
என்று கண்ணுக்கெட்டாத தூரத்திலே ஓடிப்போனாரே!

இல்லாதவனே பொல்லாதவனில்லை -அவனை பொதுவுடைமை கொள்கை வென்றால்! இருப்பவனாக்கிவிடலாமே!~ கல்லாதவனே செல்லாதவனில்லையே !-அவனுக்கு கற்பித்தாலோ அறிவாளியாகிடுவான்

இல்லாதவனே பொல்லாதவனில்லை -அவனை பொதுவுடைமை கொள்கை வென்றால்!
இருப்பவனாக்கிவிடலாமே!~
கல்லாதவனே செல்லாதவனில்லையே !-அவனுக்கு
கற்பித்தாலோ அறிவாளியாகிடுவான் பூமியிலே!
விலைமோரிலே வெண்ணை எடுத்தாளாம்-இவ
தலைமகனுக்கு கல்யாணம் செஞ்சாளாம்!
சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் ஒரு நூலு தானே வித்தியாசமே
இதை சிக்கனம் என்று சொல்வதா?
கஞ்சத்தனம் என்று சொல்வதா? எனக்கே புரியவில்லையே
உங்களுக்குத் தெரிந்தாலே சொல்லுங்களேன்?

இல்லறமல்லது நல்லறமில்லையடா! நல்லறமல்லது இல்லறமில்லையடா! இல்லறம் என்பது தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிக்கும் இல்லறங்கள் சமூகத்தில் உரு

இல்லறமல்லது நல்லறமில்லையடா!
நல்லறமல்லது இல்லறமில்லையடா!
இல்லறம் என்பது தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழிக்கும் இல்லறங்கள் சமூகத்தில் உருவாகும்
நல்லறமான பொழுதுதான் இல்லறத்தின் உண்மையானதொரு
நல்லறத்திற்கு முத்தாய்ப்பாகும் சமூகத்தின் கலங்கரை விளக்கமாகும்!

ஒரு சண்டைக்கு ஆரம்பமே இரு நாய்களுக்கு ஒரு எலும்பே சமூக வறுமைக்கு காரணமே! மனித தேவைகளுக்கு ஏற்ற உணவுப் ப்ங்கீடு இல்லாமையே - நாட்டின் எல்லாச் சொத்தும் த

ஒரு சண்டைக்கு ஆரம்பமே
இரு நாய்களுக்கு ஒரு எலும்பே
சமூக வறுமைக்கு காரணமே!
மனித தேவைகளுக்கு ஏற்ற உணவுப் ப்ங்கீடு இல்லாமையே - நாட்டின்
எல்லாச் சொத்தும் தனிமனிதனின் கைகளில் இருக்கின்றவரையினிலே- நாட்டின்
எல்லாச் சொத்தும் மக்கள் நல
அரசின் கைகளில் வருகின்ற வரையினிலே
இல்லாமை இந்ததேசத்தில் இல்லாமல் போவதில்லையே!

கோலங்கள் சமூக அவலங்களுக்கு சவுக்கடி கொடுக்கின்ற பெண்ணடிமை சாடுகின்ற நெடுந்தொடர் ஆக்கித்தந்த என்னருமை நண்பர் திரு,திருச்செலவம் அவர்களுக்கு, ஆணும்,பெண்

கோலங்கள் சமூக அவலங்களுக்கு சவுக்கடி கொடுக்கின்ற
பெண்ணடிமை சாடுகின்ற நெடுந்தொடர் ஆக்கித்தந்த
என்னருமை நண்பர் திரு,திருச்செலவம் அவர்களுக்கு,
ஆணும்,பெண்ணும் அடிமைப்பட்ட சமூகத்தில்
ஆணாதிக்கம் கோலோச்சும் சமூகத்தில்
பெண்ணடிமை தீரவென்று போராடும் அதேவேளை
ஆணும்,பெண்ணும் அடிமைப் பட்டிருப்பதையும்
அதற்கான விடுதலையையும் சொல்கின்ற பக்குவத்தில்-பணத்தின்
ஆதிக்கப் போட்டி மட்டுமல்ல அடிமை சமூக அமைப்பை மாற்றும்
உழைப்பாளர்களின் சமூகக் கடமையையும் கூறுகின்ற
உங்களது மகத்தான பணி தொடர் என்றாலே அழுகைதான்
என்பதை மாற்றி அதற்கு ஒரு மக்கள் கலையின் மகத்தான சக்தியுமுண்டு
என்பதை உறுதிபட இயக்குகின்ற தங்களின் இயக்கும் இயக்கம் மென்மேலும் மெருகேறி மிளிரட்டும்!
இசையில்லாத பாட்டென்றும் இழுக்காகுமே-ஒரு
அசைவும் இல்லாத வாழ்க்கை அழிவாகுமே!
கொடுமை கண்டு கொதிக்காத நெஞ்சிருந்தாலென்ன?
இல்லாமலே போனாலென்ன?
தனகொன்று வந்தபோது கொந்தளிக்காத மானுடமே!
தன்சமூகத்திற்கு ஒன்றென்றாலே கொந்தளிப்பாயா?- நீ
தூங்கிக் கிடக்கின்ற ஒவ்வொரு நாளும் உன்னை
துவம்சமே செய்கின்ற தன்னல அரசின் கயமையே தெரியவில்லையா?
தூக்கத்தைக் களைத்துவிடு, விழித்தெழு!

மலை ஊத்துல வந்த தண்ணீருக்கு சாதி,மத,இன,மொழி, பேதமுண்டோ? தண்ணீருக்கு தேசமுண்டோ? தண்ணீருக்கு பகையுமுண்டோ? ஆத்தாகுடி ,அப்பன் குடி அண்ணன்குடி,தம்பிகுடி ச

மலை ஊத்துல வந்த தண்ணீருக்கு
சாதி,மத,இன,மொழி, பேதமுண்டோ?
தண்ணீருக்கு தேசமுண்டோ?
தண்ணீருக்கு பகையுமுண்டோ?
ஆத்தாகுடி ,அப்பன் குடி
அண்ணன்குடி,தம்பிகுடி
சொந்தம் குடி, பந்தம்குடி
சுற்றம்குடி, எல்லாம்குடி
ஊரும்குடி ,உறவும்குடி
நாடுகுடி, நகரம்குடி
நாட்டுக்குள்ளே தண்ணீருக்கு பேதம் பார்க்கலாமோ?
நாமெல்லாமே ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் அல்லவா?
எல்லாம் குடி , நல்லாகுடி
மா நில எல்லைகளை களைவோம்-குடிக்கும்
நீரை எல்லார்க்கும் பொதுவாக்குவோம்

ஆவிதான் போனபின் ஆவென்று ஆனபின் அள்ளி இடுவதாரோ? ஆவ் ஆவென்று பறந்தாலும் அங்குமிங்கும் ஓடினாலும் என்னதான் கூடவருமோ? எவருக்குத்தான் எது சொந்தமோ? மூச்சின்ற

ஆவிதான் போனபின்
ஆவென்று ஆனபின்
அள்ளி இடுவதாரோ?
ஆவ் ஆவென்று பறந்தாலும்
அங்குமிங்கும் ஓடினாலும்
என்னதான் கூடவருமோ?
எவருக்குத்தான் எது சொந்தமோ?
மூச்சின்றி போனபின்னே
முச்சந்தியில் தூக்கிப்போன பின்னே
முற்றுமெந்த உறவுமில்லை
முந்தாணை துணையுமில்லை
மூச்சுள்ள போதினிலே
பேச்சுள்ள போதினிலே
எல்லாரும் வாழும் தத்துவத்தை தந்த
மார்க்ஸ் அய்யா வழி நின்று
மாபெரும் உழைப்பவர் ஆட்சி அமைத்திடவே
போராட்டக் குணம் கொள்ளடா!

ஆருக்கு வந்ததோ! என்று அசட்டையாக இல்லாமலே ஊருக்கு வந்ததோ! என்று பாராமுகமில்லாமலே பேருக்கு வந்ததோ! என்று கவனத்தில் கொள்ளாமலே உறவுக்கு வந்ததோ ! என்று உதா

ஆருக்கு வந்ததோ! என்று அசட்டையாக இல்லாமலே
ஊருக்கு வந்ததோ! என்று பாராமுகமில்லாமலே
பேருக்கு வந்ததோ! என்று கவனத்தில் கொள்ளாமலே
உறவுக்கு வந்ததோ ! என்று உதாசினம் செய்யாமலே- நமக்கு
எந்த கொடுமையையும் எதிர்த்திடும் போராடும் குணம்வேண்டுமே!

இது கோடிக்கட்டு கோடிக்காலத்து பயிரு இது அண்டத்தையே தாங்குமடா!-இன்றோ! தானடிமையாகி தன்சுதந்திரம் கெட்டு தறிகெட்டு கிடக்குதடா! தலைமுறை தலைமுறையாக குரங்

இது கோடிக்கட்டு
கோடிக்காலத்து பயிரு
இது அண்டத்தையே தாங்குமடா!-இன்றோ!
தானடிமையாகி தன்சுதந்திரம் கெட்டு
தறிகெட்டு கிடக்குதடா!
தலைமுறை தலைமுறையாக குரங்கிலிருந்து பிறந்து
தான்வளர்ந்து கோடிகோடி ஆண்டுகளாக
தவழ்ந்து தாவி ஊர்ந்து கூன் நிமிர்ந்து எழுந்து நடந்து ஓடி த்திரிந்து
தானே வளர்ந்து நிற்கும் மனிதனடா!!
மனிதனை மனிதன் சுரண்டிடும் கொடுமை நீக்க மறந்து போனதாலே
மனிதரை மனிதன் இனத்தால் , மொழியால் ,தேசத்தால் ,சாதியால்
பிரித்துவைத்து சூட்சுமம் செய்யும் ஆளும் வர்க்கமே!
தனியுடைமை தத்துவத்தை ஆளவிட்டு வேடிக்கைபார்க்குது ஆளும்
அரசாங்கமே அதைமாற்றும் வரையினில் மானுடமே
உனக்கில்லை ஊனுறக்கம் இல்லையடா!

ஆங்காரத்தில அழிந்தது அனந்தப்பேர் கோபத்தாலே அழிந்தவர் கோடிப்பேர்- கோபப் படுவதற்கு கோபப்படாத தேசத்திலே-கயவரே கோலோச்சுவார் இவ்வுலகினிலே பொறுத்தார் பூமி ஆ

ஆங்காரத்தில அழிந்தது அனந்தப்பேர்
கோபத்தாலே அழிந்தவர் கோடிப்பேர்-
கோபப் படுவதற்கு கோபப்படாத தேசத்திலே-கயவரே
கோலோச்சுவார் இவ்வுலகினிலே
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பாரே!
பொறுத்துக் கொண்டே இருந்தால் தனியுடைமை வஞ்சகரே
பூமியிலே ஆண்டு நம்மை அடிமை ஆக்கிடுவாரே!

அன்றுமில்லை காத்து இன்றுமில்லை குளிரு அன்னைக்கு தச்சதுமில்லை இன்னைக்கு பொத்தலுமில்லை என்னைக்கும் குட்டிச்சுவருமில்லை உண்மைக்கே குடிக்க கஞ்சியுமில்லை அ

அன்றுமில்லை காத்து
இன்றுமில்லை குளிரு
அன்னைக்கு தச்சதுமில்லை
இன்னைக்கு பொத்தலுமில்லை
என்னைக்கும் குட்டிச்சுவருமில்லை
உண்மைக்கே குடிக்க கஞ்சியுமில்லை
அன்ன நடை நடக்க எண்ணி
உள்ள நடையும் போனதடா!
நல்ல சோறு சாப்பிட்டு ரொம்ப
நாளாக ஆச்சுடா!

ஆகாசத்தில் எறிந்தகல்லு அங்கேயே நிற்பதில்லை இது உண்மையான் அறிவியல் விதியாகும் ஆகாசத்தில் ஏறின விலைவாசியோ இறங்குவதில்லை-இது பொய்யான ஒருவழிப் பாதையாக ஆக

ஆகாசத்தில் எறிந்தகல்லு அங்கேயே நிற்பதில்லை இது உண்மையான் அறிவியல் விதியாகும்
ஆகாசத்தில் ஏறின விலைவாசியோ இறங்குவதில்லை-இது பொய்யான
ஒருவழிப் பாதையாக ஆகிவிட்ட சமுதாய விதியாடா?
ஐந்தாண்டுக்கு ஒருமுறை வருகின்ற தேர்தல்வாக்குறுதிகளில்
விலைவாசி பற்றிப் பேசாத போலிஅரசியல்வாதிகளே இல்லையடா!
சிம்மாசனம் ஏறியவுடன் வாக்குறுதிகளே
கடலில் கரைத்த பெருங்காயமாகுமடா!
விலைவாசிதன்னை கட்டுக்குள் வைக்கின்றதகுதி ஆனதொரு அரசு
அரியணையில் ஏறுகின்ற நாள்வரையினில் நம் போராட்டம் தொடருமடா!

அறிவார் அறிவார் அறிவாலே அறிவுகொண்டு ஆய்ந்தறிவார் அறிவாரே!-உண்மையைப் புரிவார் புரிந்தால் புவிமேலே-ஏமாற்றி வாழ்வார் வீழ்வார் மண்மீதே ஆண்டாண்டு காலங்க

அறிவார் அறிவார் அறிவாலே
அறிவுகொண்டு ஆய்ந்தறிவார் அறிவாரே!-உண்மையைப்
புரிவார் புரிந்தால் புவிமேலே-ஏமாற்றி
வாழ்வார் வீழ்வார் மண்மீதே
ஆண்டாண்டு காலங்கள் அடிமைப்பட்ட உழைப்பாளரே
வெகுண்டு எழுந்து ஆளும்தகுதி வருகின்ற வரையினிலே
இல்லாமை இவ்வுலகினில் அறவே போகாதடா!

அறங்கையும் புறங்கையும் நக்காதே-கையூட்டாம் இலஞ்சப் பணத்தை வாங்கிக் கிட்டு -வாழும் ஈனப்பொழப்ப நடத்தும் ஈனர்களே!இந்த ஈனப்பொழப்பிற்கு சாவதே மேலடா!!

அறங்கையும் புறங்கையும் நக்காதே-கையூட்டாம்
இலஞ்சப் பணத்தை வாங்கிக் கிட்டு -வாழும்
ஈனப்பொழப்ப நடத்தும் ஈனர்களே!இந்த
ஈனப்பொழப்பிற்கு சாவதே மேலடா!

ஏழைகளின் நலனை காவுகொடுக்குறாங்க-முதலாளி லாபத்திற்கு பணியாற்றி வாறாங்க இந்தமன் மோகன்சிங் அரசாங்கம் தாறுமாறாக எகிறுதே விலைவாசி -அதுக்கு ஐமுகூ அரசின் கொ

ஏழைகளின் நலனை காவுகொடுக்குறாங்க-முதலாளி
லாபத்திற்கு பணியாற்றி வாறாங்க இந்தமன்
மோகன்சிங் அரசாங்கம்
தாறுமாறாக எகிறுதே விலைவாசி -அதுக்கு
ஐமுகூ அரசின் கொள்கையே காரணம்-அதுக்கு அவங்க முதலில்
அனைவருக்கும் ரேசன் முறையை அமுலாக்கிடவேணும்!
விவசாயத்துறையினில் பொதுமுதலீடு செய்திடவேணும்!
மா நிலங்களுக்கு உரிய உணவுதானியம் ஒதுக்கீடு செய்திடவேணும்!

அள்ளிக் கொடுத்தா சும்மா சும்மாதான்! அளந்து கொடுத்தா கடன் கடன் தான்! சொல்லிக் கொடுத்தா அறிவு அறிவு தான்! சொல்லாமக் கொடுத்தா அன்பு அன்பு தான்! சொந்தம் க

அள்ளிக் கொடுத்தா சும்மா சும்மாதான்!
அளந்து கொடுத்தா கடன் கடன் தான்!
சொல்லிக் கொடுத்தா அறிவு அறிவு தான்!
சொல்லாமக் கொடுத்தா அன்பு அன்பு தான்!
சொந்தம் கொடுத்தா உறவு உறவு தான்!
பந்தம் தொடுத்தா சுற்றம் சுற்றம் தான்!
யாதும் ஊரே யாவரும் நம் மக்களே!
யாதும் உலகே யாவரும் நம் சொந்தங்களே!

அளக்குற நாழிக்கு தெரியுமா? அது அகவிலை அறியுமா? அளந்தளந்து நாழியே - நீயும் ஒளிந்தொளிந்து வாராதே! ஏறுற விலைவாசிய கயத்தக்கட்டி இழுக்கத்தான் முடியுமா? எட்

அளக்குற நாழிக்கு தெரியுமா?
அது அகவிலை அறியுமா?
அளந்தளந்து நாழியே - நீயும்
ஒளிந்தொளிந்து வாராதே!
ஏறுற விலைவாசிய கயத்தக்கட்டி இழுக்கத்தான் முடியுமா?
எட்டாமத்தான் ராக்கேட்டா பறக்குது விலைவாசி தானடா?
அரசாங்கத்துல அதுக்கொரு நிலையான கொள்கையில்லை தெரியுமா?

அழையாத வீட்டிற்கு நுழையாதே சம்மந்தி!-எங்க இலைய போட்டாலும் உட்காராதே முதல்பந்தி! சம்மந்தம் இல்லாம பேசாதே முச்சந்தி! சபையில் குறுக்காவே நுழையாதே பச்சோந

அழையாத வீட்டிற்கு நுழையாதே சம்மந்தி!-எங்க
இலைய போட்டாலும் உட்காராதே முதல்பந்தி!
சம்மந்தம் இல்லாம பேசாதே முச்சந்தி!
சபையில் குறுக்காவே நுழையாதே பச்சோந்தி!

அழுக்கைத் துடைத்து மடியில வெச்சாலும் புழுக்கைக் குணம் மாறாதுடா! வஞ்சகரை அழைத்து சிம்மாசனம் தந்தாலும்-அவரின் வஞ்சமனம் மாறாதுடா! கயவரை கூப்பிட்டு தோழமை

அழுக்கைத் துடைத்து மடியில வெச்சாலும்
புழுக்கைக் குணம் மாறாதுடா!
வஞ்சகரை அழைத்து சிம்மாசனம் தந்தாலும்-அவரின்
வஞ்சமனம் மாறாதுடா!
கயவரை கூப்பிட்டு தோழமை ஆக்கினாலும்-அவரின்
கயமைகுணம் மாறாதுடா!

அழகுப்பெண்ணே அழகுப்பெண்ணே காத்தாடி-மச்சான் அழைக்குறாண்டி அழைக்குறாண்டி கூத்தாடி அம்மாடி அம்மாடி கண்ணுக்குள்ளே ஆலாட்டம் போடுறாளே வேலாகி அமுதாட்டம் இனிக

அழகுப்பெண்ணே அழகுப்பெண்ணே காத்தாடி-மச்சான்
அழைக்குறாண்டி அழைக்குறாண்டி கூத்தாடி
அம்மாடி அம்மாடி கண்ணுக்குள்ளே
ஆலாட்டம் போடுறாளே வேலாகி
அமுதாட்டம் இனிக்கிறாளே கரும்பாகி!

அம்மா அம்மா குதிர்போல அய்யா அய்யா கதிர்போல சும்மா சும்மா நிக்காதே சுழிவா சுழிவா பாக்காதே கம்மா பக்கம் போகாதே கருவை நிக்கும் மோதாதே பம்மாத்து வேலை பண்ண

அம்மா அம்மா குதிர்போல
அய்யா அய்யா கதிர்போல
சும்மா சும்மா நிக்காதே
சுழிவா சுழிவா பாக்காதே
கம்மா பக்கம் போகாதே
கருவை நிக்கும் மோதாதே
பம்மாத்து வேலை பண்ணாதே
பருவம் பாத்து சொடுக்காதே
உருவம்பாத்து தொடுக்காதே
அரவம் பாத்து ஓடாதே
அஞ்சாதே கண் துஞ்சாதே!

.மறக்காததேனோ! காதலென்ன காதலருக்கு தூரமானதோ ?அன்புத்தொல்லையும் கூட ஒருபொழுது ..துயரமானதோ? ஊடல் வந்து சேரும்போது இன்ப வேதனையானதோ?..எண்ணி எண்ணி ஏங்கிடும்

.மறக்காததேனோ! காதலென்ன காதலருக்கு
தூரமானதோ ?அன்புத்தொல்லையும் கூட ஒருபொழுது
..துயரமானதோ? ஊடல் வந்து சேரும்போது இன்ப
வேதனையானதோ?..எண்ணி எண்ணி ஏங்கிடும் காலங்களில் கூட அது
விரக்தியானதோ? பிரிவு என்று வந்தபோது என்ன மனங்களென்ன
காயமானதோ?. துணிவுற்ற நெஞ்சங்களின் முன்னாலே என்றும் நேசங்கள்.கருகாததே,பிரிவுத்துன்பம் வந்தபோதே காதல் சுடு
நெருப்பானதோ?.கூடல் கொண்டு கொஞ்சும் வேளை காதல் என்ன? குளிர்
.நீரானதோ? இருமனங்களின் ஒருமனதினில் காதல் ஏற்றிவைக்கும் தீப
ஒளியானதோ?.ஒருவரை ஒருவர் புரியாதபோது காதல் கவிழும் கருமை
.இருளுமானதோ? மனத்தாங்கல் வருகின்ற நெஞ்சத்தில் இதய
வலியானதோ?ஒருமித்த காதலருக்கு தினம் தினம் சந்தோச .வரமுமானதோ?
நடைமுறைக்கு வாராத நேசங்கள் எல்லாமே
கனவானதோ?.மனதிருந்து சொல்லாத காதலென்றும்
..கனமுமானதோ? சேராத காதலரின் மனக்கணிப்பில் காதலென்ன
விதியானதோ? அன்பிருந்தும் இல்லாவிட்டாலும் இல்லறகாதல் அதோ
...கதியானதோ? காதலை வெளிச்சொல்லாத காதலரின் நிலையென்ன?
கேள்விக்குறியானதோ? விளையாட்டாய் நடத்துகின்ற காதலரின் தவிப்பென்ன?
...கேலியானதோ? நல்லகாதலிக்கு நல்ல காதலனின் தரும் காதலன்புதான்
பதிலானதோ? துணிவுக் காதலர்கள் காதல் வென்றிடவே
.
போராடியதோ?காசுக்கு வேசம்போடும் கள்ளக்காதல்
...பொய்யானதே? கால நேரம் பாராது காலமெல்லாம் காதலரே உண்மைக் காதலுக்கே
காத்திருந்ததோ? தேசம் மீது வைக்கின்ற தேசப்பற்றுக் காதலே காலங்காலமானதோ?
...காலமானது கவிதையானது நல்ல கோலமானது பருவக்காதலே எங்கெங்கும்
தேடலானட்தோ?பருவம் உள்ளபோதே தேடாத காதலே
..திரும்பாததோ? ஒருதலையாய் காதலென்பது மிகமிக
சுமையானதோ?. காதலர்கள் காதலுக்கு காத்திருப்பது என்பது சுகமானதோ?
அறிவாலே நேசித்ததோ அன்பாலே
...நெருங்கியதோ?இன்பத்தமிழ்
கேட்டதோ? எழில் கீதம்..ரசித்ததோ? வாழ்க்கைப்
பாட்டானதோ? ஈருடலும் ஓருடலாய் ஓருயிரில் சங்கமித்து
..பழகியதோ?காதல் என்ன
அழகானதோ உண்மைக் காதல்..உயர்வானதோ?
உயிரினில் உயிராகி ஆனந்தமானதோ?

Friday, August 28, 2009

உன்னை நான் நேசித்தேன்...காதலாலே நெருங்கினேன்-உன் தமிழ்மழலைச் சொல்லினை கேட்டேன் உன்கண்ணில் ஒரு காவியமே ..ரசித்தேன் அன்றாடம் படும் பாட்டானேன்.இன்ப இலக்க

உன்னை நான்
நேசித்தேன்...காதலாலே
நெருங்கினேன்-உன் தமிழ்மழலைச் சொல்லினை
கேட்டேன் உன்கண்ணில் ஒரு காவியமே
..ரசித்தேன் அன்றாடம் படும்
பாட்டானேன்.இன்ப இலக்கியமாய் நானுன்னை
.பழகினேன் இயற்கை நமக்குத் தந்த காட்சிகளின்
அழகானேன்.உன்னை நேசித்த நாள்முதலாய் வாழ்வில்
..உயர்வானேன் உன் துணையினிலே போராடும் பாதையிலே
ஆனந்தமானேன் காதலின்பம் கூட்டுகின்ற இனிமையானதொரு
..மயக்கமானேன் , முரண்பாடான வாழ்வைவாழும் நாளில்

இன்பமானேன் நல்லோர்கள் சொல்லும் வழி நான்சென்று
..இடருமானேன் உழைப்பாளர் ,உழுபவர்களின் கோஷங்களின்
இரவலானேன்..மக்கள் ஜன நாயகத்தின் உன்னதமானேன்
அணிவகுத்து ஊர்வலத்தில் கடல் அலையாகவே
ஆர்ப்பரித்தேன்..அலைபாய்ந்தேன் பொதுவுடைமைப்
பொன்னுலகினை எதிர்பார்த்தேன்..
வரும் தலைமுறையின் நல்வாழ்விற்காக .ஏங்கினேன்
பொதுவுடைமைத் தேசங்களின் வளர்ச்சியினை பிரமித்துப்
பார்த்தேன்...மக்கள்கலை இலக்கியத்தை என் தலைமுறைக்கு
பரிமாறினேன் எல்லா இலக்கியத்தையும் படித்திடவே அனைத்து நூல்களையும் துணையாக்கி அறிவுத்தேன் குடித்திடவே அலைந்து திரிந்து அன்பாலே
அணைத்தேன்.,அனைத்தையும் படித்தபோதும் மேலும் மேலும் அறிவு தாகமெடுத்து ஓடினேன் அறிவுச்செல்வங்களை படித்து படித்து
.இனித்தேன் , மக்களுக்குச் சொந்தாமானேன் ஆளாக பறந்தேன் அவர்களுக்குச்
சொந்தாமானேன் இவ்வுலகினில் இருக்கும்போதே வாழ்ந்து பார்த்திடுவோம்
பூலோக சொர்க்கமென்றேன்,தத்துவஞானிகளாம் காரல் மார்க்ஸ் வகையறாக்களின்
உறவானேன், கயவர்கள்,தனியுடைமை சிந்தாந்தவாதிகளின் தத்துவத்தில்
..பிரிவுமானேன் ,முரண்பட்டேன் ,அவர்தமை எதிர்த்துப்போராடினேன்
அறிவியலாய் தன்னைவகுத்த மார்க்ஸியமே
நிஜமென்றேன் ,மற்றெல்லாமே நம்மை ஏமாற்றும் ...நிழலென்றேன் சாத்திரங்கள் சதுர்மறைகள்
மந்திரமில்லை மாயமில்லை மூட நம்பிக்கை வேண்டாம் என்றேன்..


சாரத்தை விட்டுவிட்டோம் - நாம சக்கையைப் பிடித்துகொண்டோம் -வாழுகின்ற சமுதாயத்துல மூட நம்பிக்கையில நாம போற பாதையில எத்தனை கலகமடா?எத்தனை போராட்டமடா? , ந

சாரத்தை விட்டுவிட்டோம் - நாம
சக்கையைப் பிடித்துகொண்டோம் -வாழுகின்ற
சமுதாயத்துல மூட நம்பிக்கையில நாம போற பாதையில
எத்தனை கலகமடா?எத்தனை போராட்டமடா?
, நாம என்னசெய்கின்றோம்? நாமே எங்கே போகின்றோம்?
நல்லவழி போகாமலே நாச வழி போகுறமே!
-கிழக்கே
போவதற்கே மேற்கே போனாலோ போகுமிடம் போய்சேர்வோமா?

அழ அழச்சொல்லுறவன் பிழைக்கச் சொல்லுவானே! சிரிக்கசிரிக்க ஏமாற்றிவன் சீரழியச் செய்திடுவானே! ஏமாற்று உலகமடா! ஏமாறக்கூடாதடா!-இதுவரையினில் ஏமாந்தது போதுமடா

அழ அழச்சொல்லுறவன் பிழைக்கச் சொல்லுவானே!
சிரிக்கசிரிக்க ஏமாற்றிவன் சீரழியச் செய்திடுவானே!
ஏமாற்று உலகமடா! ஏமாறக்கூடாதடா!-இதுவரையினில்
ஏமாந்தது போதுமடா! சுய நல விஷமிகளை இனங்காணடா!

அந்தலை சிந்தலை கெட்டு! குண்டக்க மண்டக்க ஆகி! சிந்தனை மாறிக் கிடக்குது பூமியிது! சிந்திக்க மறந்த மனிதர சீர்திருத்த வேணும் மக்களே! செயலின்றி சோம்பிக் கி

அந்தலை சிந்தலை கெட்டு!
குண்டக்க மண்டக்க ஆகி!
சிந்தனை மாறிக் கிடக்குது பூமியிது!
சிந்திக்க மறந்த மனிதர சீர்திருத்த வேணும் மக்களே!
செயலின்றி சோம்பிக் கிடக்கும் கூட்டத்தையே!
நேர்வழியினில் கவனத்த செலுத்தவைக்கணும் மக்களே!
ஒரு நூற்றாண்டு தூங்கிய உறக்கம் போதுமுங்க-இனியும் நம்ம தேசத்திற்கே!
இங்கஎருமைமாட்டுல மழைபெஞ்ச நிலைமை வேணாமுங்கஉண்மை சுதந்திர மூச்சுக் காற்றை சுவாசிக்க வேணுமுங்க!

அரைச்சுட மாயம்! கரைச்சுட மாயம்-உன்ன கண்டிட மாயம்-கள்ளமனம் துள்ளுற மாயம் கூடாது! மெய்யாகவே காதலிக்குற எண்ணத்த விட்டுறக் கூடாது!- நீயும் பொய்யாகவே வே

அரைச்சுட மாயம்!
கரைச்சுட மாயம்-உன்ன
கண்டிட மாயம்-கள்ளமனம்
துள்ளுற மாயம் கூடாது!
மெய்யாகவே காதலிக்குற எண்ணத்த விட்டுறக் கூடாது!- நீயும்
பொய்யாகவே வேசம்போட்டு திரிந்திடவே கூடாது!

அரிசியும் கறியும் வேணுமா? அக்கா வீடு வேணுமா? ஆக்குன சோத்துக்கு ஆளாப்பறக்காதே! அருக்காமணி அருக்காமணி முருக்கம்பூ முருக்கம்பூ அடியாத்தாடி குருவம்மா!- வி

அரிசியும் கறியும் வேணுமா?
அக்கா வீடு வேணுமா?
ஆக்குன சோத்துக்கு ஆளாப்பறக்காதே!
அருக்காமணி அருக்காமணி
முருக்கம்பூ முருக்கம்பூ
அடியாத்தாடி குருவம்மா!-
விழிகூத்தாடி வருதம்மா!

அரிசி என்று அள்ளிப்பார்க்க ஒருபிள்ளை வேணுமடா! உமியென்று ஊதிப்பார்க்க மழலைச் செலவம் வேணுமடா! வறுமையின்றி அரசை உருவாக்கும் மக்கள்செல்வம் வேணுமடா!-எல்லோர

அரிசி என்று அள்ளிப்பார்க்க ஒருபிள்ளை வேணுமடா!
உமியென்று ஊதிப்பார்க்க மழலைச் செலவம் வேணுமடா!
வறுமையின்றி அரசை உருவாக்கும் மக்கள்செல்வம் வேணுமடா!-எல்லோரும்
வாழுகின்ற கொள்கைசெயலாக்கும் நல்லோர்வழி போகணுண்டா!

அரங்கின்றி வட்டாடவே கூடாது-ச்பையினில் அறிவின்றி பேசவே கூடாது தன்னலத்தில் காரியங்கள் செய்திடவே கூடாது தாந்தோன்றித் தனமாய் நடந்திடவே கூடாது-உனது அனுபவத்

அரங்கின்றி வட்டாடவே கூடாது-ச்பையினில்
அறிவின்றி பேசவே கூடாது
தன்னலத்தில் காரியங்கள் செய்திடவே கூடாது
தாந்தோன்றித் தனமாய் நடந்திடவே கூடாது-உனது
அனுபவத்தை சமூக முன்னேற்றத்திற்கு
துணையாக்கும் நல்லபணியினிலே இணைக்கணும்!

பேரோ! ஆலா ஆலா விருட்சமாம் ஆனா தங்க நிழல்கூட இல்லையாம்! ஆளோ அழகாம் அழகாம் அவனுக்கோ அன்பு நெஞ்சைத்தரும் பக்குவமே இல்லையாமே! அனைவரையும் அரவணைக்கும் மனித

பேரோ! ஆலா ஆலா விருட்சமாம்
ஆனா தங்க நிழல்கூட இல்லையாம்!
ஆளோ அழகாம் அழகாம் அவனுக்கோ
அன்பு நெஞ்சைத்தரும் பக்குவமே இல்லையாமே!
அனைவரையும் அரவணைக்கும் மனித நேயமே இல்லையாமே!

எனது இதயத்தால் உன் தோழமைக்கு வழிகண்டுபிடித்து உன்னைத் ;துணையாய கொண்டு புதியசமுதாயத்தை-அமைக்க நல்வழிகண்டு பிடித்து நல்லோர்பாதையில் நடக்கின்றேன்!

எனது இதயத்தால் உன் தோழமைக்கு வழிகண்டுபிடித்து
உன்னைத் ;துணையாய கொண்டு புதியசமுதாயத்தை-அமைக்க
நல்வழிகண்டு பிடித்து நல்லோர்பாதையில் நடக்கின்றேன்!

’என்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது ஆனால் ,என்படங்கள் இந்த சமுதாயத்தைப் பிரதிபலிக்கும்” - நடிகர் கமலஹாசன் மானுடமே! உன்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது என்

’என்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது ஆனால் ,என்படங்கள் இந்த
சமுதாயத்தைப் பிரதிபலிக்கும்” - நடிகர் கமலஹாசன்
மானுடமே!
உன்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது என்று ஒதுங்காதே
உனது படைப்புக்கள் சமுதாயத்தை மாற்றும் என்பதை மறக்காதே
உன்சமூகக் கடைமைதனை என்னாளும் மறக்காதே
என்னால் சமுதாயத்தை மாற்றமுடியாது என்று சொல்லாதே!
உனது திரைப்படங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிப்பதை மட்டுமல்ல- நல்ல
நமது சமுதாயத்தை கொண்டுவரும் சமுதாயக்கடமை நமக்குண்டு
அனுபவசாலியே நீயே மாற்றமுடியாது என்று ஒதுங்கிவிட்டாலே
ஆர்தான் பூனைக்கு மணிகட்டுவது என்றுபேசியே ஒரு நூற்றாண்டு
ஓடிப்போய் இந்த தலைமுறையும் அடிமைசமூக அமைப்பினிலே
அன்றாடம் செத்து செத்து பிழைக்கும் வாழ்க்கையில் தவிக்கவேண்டியது தான்!

அஞ்சிலேயும் அறியவேண்டி இருக்குடா! ஐம்பதிலேயும் அறியவேண்டி இருக்குடா!-எதையும் அறிவதற்கு வயசில்லே தெரியுமாடா அம்மாடியம்மோ! அம்மாடியம்மோ! உலகை அறிவதற்கு

அஞ்சிலேயும் அறியவேண்டி இருக்குடா!
ஐம்பதிலேயும் அறியவேண்டி இருக்குடா!-எதையும்
அறிவதற்கு வயசில்லே தெரியுமாடா
அம்மாடியம்மோ! அம்மாடியம்மோ!
உலகை அறிவதற்கு ஆயுள் போதுமாடா?
எம்மாடியம்மோ!எம்மாடியம்மோ!
அஞ்சிலேயும் வளையாததை
ஐம்பதிலேயும் வளைப்போமே வாடா!

அக்கண்ணா முக்கண்ணா அரியண்ணா புரியண்ணா நோக்குவந்த விதியென்ன? விதியெண்ணி நோகாதே விரக்தியிலே சாகாதே! வாழுற எண்ணத்த தூக்கி நிறுத்துடா எதுக்கும் நீயே வாழ்

அக்கண்ணா முக்கண்ணா அரியண்ணா புரியண்ணா
நோக்குவந்த விதியென்ன?
விதியெண்ணி நோகாதே
விரக்தியிலே சாகாதே!
வாழுற எண்ணத்த தூக்கி நிறுத்துடா எதுக்கும் நீயே
வாழ்ந்திடும் காலத்தில மனச விட்டுவிடாதே!

அக்கா இருக்குற வரைக்கும் தானே மச்சானின் உறவு அண்ணன் தம்பி உறவெல்லாமே காசாகும் காலமடா! பத்துவயசுக்கு மேலத்தான் பங்காளினு சொன்னாங்க - நானுமத நம்பல ஆனா

அக்கா இருக்குற வரைக்கும் தானே மச்சானின் உறவு
அண்ணன் தம்பி உறவெல்லாமே காசாகும் காலமடா!
பத்துவயசுக்கு மேலத்தான் பங்காளினு சொன்னாங்க -
நானுமத நம்பல ஆனாலும் அது
அனுபவத்துல சரியாப்போச்சுடா!
பசிவந்திட பத்தும் பறந்தேபோகுமடா!
பணம் வந்திட பத்தும்மறந்தே போகுமடா!
பதவியும் பவிசும் கண்களை மறைக்குமடா!
கயமையும் துரோகமும் முதுகிலே குத்துமடா!
அஞ்சனக்காரன் முதுகில வஞ்சனக்காரன் ஏறுறாண்டா!
அஞ்சனகாரன் விழிச்சுக்கிட்டா வஞ்சனக்காரன் பாடு திண்டாட்டந்தாண்டா!

ராசாங்கம் ராசாங்கமே பூக்கள் மலர்ந்த சோலையிலே தேனீக்கள் நடத்தும் ராசாங்கம் ராசாங்கமே! இளந்தென்றல் துணையினிலே இனிக்கும் மாலைப் பொழுதினிலெ குளிர் நிலவின்

ராசாங்கம் ராசாங்கமே பூக்கள் மலர்ந்த சோலையிலே
தேனீக்கள் நடத்தும்
ராசாங்கம் ராசாங்கமே!
இளந்தென்றல் துணையினிலே
இனிக்கும் மாலைப் பொழுதினிலெ
குளிர் நிலவின் ஒளியினிலே-இயற்கை
குமரி வந்தாள் அன்பினிலே

எனது இதயத்தையே காதலி நீ ஏனடி சிறைபிடித்தாய்? என் இதயத்துள் நீயே இருக்கையிலே நீயும் தானே சிறைப்பட்டாயே! விடுதலை காற்றைச் சுவாசிக்கும் எண்ணமுனக்கு இல்லை

எனது இதயத்தையே காதலி நீ ஏனடி சிறைபிடித்தாய்?
என் இதயத்துள் நீயே இருக்கையிலே நீயும் தானே சிறைப்பட்டாயே!
விடுதலை காற்றைச் சுவாசிக்கும் எண்ணமுனக்கு இல்லையா?-இருவருக்கும்
விடுதலையே பெறவேண்டி போராடும் குணமுனக்கு எழவில்லையா?
எனது பார்வையில் உன்முகம் தெரியாவிட்டால் காதலியே!
எனது இதயத்திற்கு என்னாளும் ஓய்வுண்டோ?ஒழிவுண்டோ?

முடிவே இல்லாத உனது ஸ்பரிசத்தாலே !எனது சின்ன இதயம்-உனது முத்தமழை பொழியும் புன்னகை இதழ் சொன்ன கவிதையிலே! மகிழ்வின் மந்திரமாய் தவழும் இளந்தென்றலாகியே!-

முடிவே இல்லாத உனது ஸ்பரிசத்தாலே !எனது சின்ன இதயம்-உனது
முத்தமழை பொழியும் புன்னகை இதழ் சொன்ன கவிதையிலே!
மகிழ்வின் மந்திரமாய் தவழும் இளந்தென்றலாகியே!-வாழும்
சந்தோசத்தின் எல்லைகளை கடந்துபோனது இதயத்தேனது!

வாழ்க்கைப் பயணதூரம் அதிகம் அதிகம் போகும் பாதை வெகு தூரம் தூரம் வாழ்ந்து பார்த்திடுவோம்!-இம்மண்ணில் வளத்தைச் சேர்த்திடுவோம்! மக்களுக்கு பாதகம் செய்யும்

வாழ்க்கைப் பயணதூரம் அதிகம் அதிகம்
போகும் பாதை வெகு தூரம் தூரம்
வாழ்ந்து பார்த்திடுவோம்!-இம்மண்ணில்
வளத்தைச் சேர்த்திடுவோம்! மக்களுக்கு
பாதகம் செய்யும் வீணர்களை மாய்த்திடுவோம்!-!அரசியல்
போலிகளை காலிகளை ஓரங்கட்டுவோம்-கயமைப்
பொய்யர்களின் முகத்திரையினைக் கிழித்திடுவோம்!~மக்கள் ஜன நாயக
நல்லோரின் துணையினைச் சேர்த்திடுவோம்!- நாட்டின்
நலம்சொல்லும் நற்கருத்தை ஏற்றிடுவோம்!

புல்லாங்குழலாய் நானும் இருக்கையிலே - நீயும் இளந்தென்றலாகவே நுழைந்து குழலோசை இசைத்தாயோ? அன்பிருக்கும் இதயத்தில் பண்பிருக்கும் காதலியே அரவணைக்கும் மனமி

புல்லாங்குழலாய் நானும் இருக்கையிலே - நீயும்
இளந்தென்றலாகவே நுழைந்து குழலோசை இசைத்தாயோ?
அன்பிருக்கும் இதயத்தில் பண்பிருக்கும் காதலியே
அரவணைக்கும் மனமிருந்தால் பேரின்பம் ஆகிடுமே!
இருவருக்கும் ஒருவழியே வாழ்வுப் பாதையென்பதானால்!
ஒருவருக்கும் சுமையின்றி நல்வழியில் பயணம்போகலாம்!-வாழ்க்கைத்
துணையின்றி உண்மைசுதந்திரம் என்பது வெறும் மாய்மாலமே!

ஒரு இளவேனிற்காலத்திலே நானும் ,காதலி இன்றி அவளை நினைத்து தனியே துயில்கின்ற வேளையிலே-என்காதலியின் ஸ்பரிசமாகவே இளந்தென்றல் காற்று சன்னல்வழியே விட்டு விட

ஒரு இளவேனிற்காலத்திலே நானும் ,காதலி இன்றி அவளை நினைத்து
தனியே துயில்கின்ற வேளையிலே-என்காதலியின் ஸ்பரிசமாகவே
இளந்தென்றல் காற்று சன்னல்வழியே விட்டு விட்டு வீசிவீசி
இதமாக மெல்ல மெல்ல தவழ்ந்து பதமாக குயிலாய் கூவி
என்னில் இன்பகீதம் இசைத்து எழில் நாதம் ஆகி அணைத்து
அசைந்தசைந்து இனிமையானதே!அழகு தமிழ் கவிதையானதே!

கவிஞனுக்கே ஆண்பெண்காதலே மதமானதோ?-அவனது கவிதைக்கே காதல்தான் பொருள் ஆனதோ? காதலிக்கும் மனிதரெல்லாம் கவிஞராகலாம்-அவர் கவிதையிலே காதல்மணம் இலக்கியத்தேன் ஆக

கவிஞனுக்கே ஆண்பெண்காதலே மதமானதோ?-அவனது
கவிதைக்கே காதல்தான் பொருள் ஆனதோ?
காதலிக்கும் மனிதரெல்லாம் கவிஞராகலாம்-அவர்
கவிதையிலே காதல்மணம் இலக்கியத்தேன் ஆகலாம்!
காதலரே கவிதைக்குள்ளே கவிதையாகி பேரின்பமாக்கலாம்!

அமாவசை அன்று பவுணர்மி நிலவாகி சிரித்தது யாரென்று பார்த்தேன் அது எந்தன் காதலி என்று அறிந்தவுடன் சந்தோசத்தில் சிரித்தேன் அமாவசையும் பவுர்ணமியும் மாறி மா

அமாவசை அன்று பவுணர்மி நிலவாகி சிரித்தது யாரென்று பார்த்தேன்
அது எந்தன் காதலி என்று அறிந்தவுடன் சந்தோசத்தில் சிரித்தேன்
அமாவசையும் பவுர்ணமியும் மாறி மாறி வரும் மண்ணுலகினிலே
அமாவசையே பவுணர்மியாய் ஆனபோது அமாவசை என்பதேது?

ஓட்டுவாங்கிய போலி அரசியல்வாதியோ-பதவி பவிசோடு ஓட்டிச் செல்வாரே ஏசிகாரையே ஓட்டுப் போட்ட ஏழைமக்களோ!-திரு ஓட்டைத் தூக்கிக் கொண்டு தெருவோடே!!

ஓட்டுவாங்கிய போலி அரசியல்வாதியோ-பதவி பவிசோடு
ஓட்டிச் செல்வாரே ஏசிகாரையே
ஓட்டுப் போட்ட ஏழைமக்களோ!-திரு
ஓட்டைத் தூக்கிக் கொண்டு தெருவோடே!

இமைமூடிய பின்னும் இறவாத கண்களே செத்தும் கொடுத்தான் செலவத்தை சீதக்காதி இறந்தும் விழிதிறந்தான் கண் தானத்தாலே-தானத்தில் சிறந்தது கண் தானம் கண் தானம் செய்

இமைமூடிய பின்னும் இறவாத கண்களே
செத்தும் கொடுத்தான் செலவத்தை சீதக்காதி
இறந்தும் விழிதிறந்தான் கண் தானத்தாலே-தானத்தில்
சிறந்தது கண் தானம்
கண் தானம் செய்வோரே கண்கண்ட மனிதர்கள்!

மனங்கள் மரத்துப் போனது மரணப் பாதைக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் பெரியவர்க்ளை குரோதமில்லாத குழந்தைகளாக்க எங்கேனும் இருக்கிறதா நல்லதொரு வகுப்பறை!

மனங்கள் மரத்துப் போனது
மரணப் பாதைக்குச்
சிவப்புக் கம்பளம் விரிக்கும் பெரியவர்க்ளை
குரோதமில்லாத குழந்தைகளாக்க
எங்கேனும் இருக்கிறதா நல்லதொரு வகுப்பறை!

சீட்டியடிக்குது சூறைக்காத்து சிலுக்க அடிக்குது குளுந்த காத்து ப்யூஜி மலையின் ஷிண்டோ” கோவிலருகே சூரிய உதயத்தை உச்சியிலே அங்கிருந்து பாக்கிறதுக்கு இன்னொ

சீட்டியடிக்குது சூறைக்காத்து
சிலுக்க அடிக்குது குளுந்த காத்து
ப்யூஜி மலையின் ஷிண்டோ” கோவிலருகே
சூரிய உதயத்தை உச்சியிலே
அங்கிருந்து பாக்கிறதுக்கு
இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் கூட போதாது-அடியே
மனசே இல்லை மலைவிட்டு இறங்கிடவே!

சொல்லாததும் உண்மை தானடா!-பொய் சொன்னாலதுவும் பொய்தானடா! வெல்லபோவதும் வெற்றிதானடா!-தோல்வி கொள்ளபோவதும் தோல்விதானடா!

சொல்லாததும் உண்மை தானடா!-பொய்
சொன்னாலதுவும் பொய்தானடா!
வெல்லபோவதும் வெற்றிதானடா!-தோல்வி
கொள்ளபோவதும் தோல்விதானடா!

Wednesday, August 26, 2009

என்னதான் கற்றால் என்ன? எப்பொருளும் பெற்றால் என்ன?-உலகினிலே உண்மை அறியாதார் பூஜ்யமே!

என்னதான் கற்றால் என்ன?
எப்பொருளும் பெற்றால் என்ன?-உலகினிலே
உண்மை அறியாதார் பூஜ்யமே!

தூங்காமல் தூங்கி சுகந்தந்தாள் காதலி-கண்ணிரண்டும் மூடி நெஞ்சினில் கலந்திருந்தாள் காதலி ஏங்காமல் ஏங்கி மயங்கி நின்றாள் காதலி-உள்ளத்தில் எழுதாமல் எழுதி உ

தூங்காமல் தூங்கி சுகந்தந்தாள் காதலி-கண்ணிரண்டும்
மூடி நெஞ்சினில் கலந்திருந்தாள் காதலி
ஏங்காமல் ஏங்கி மயங்கி நின்றாள் காதலி-உள்ளத்தில்
எழுதாமல் எழுதி உள்ளன்புதந்தாள் காதலி!

ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதிசென்று- இல்லாமை இல்லாமல் ஆக்க போராடும் பேரின்ப வீடுகண்டு பெற்றிருந்தேன் பொற்காலம்-மாயை சூத்திரத்தை சுட்டு பொய்சதுர்மறைய

ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதிசென்று-
இல்லாமை இல்லாமல் ஆக்க போராடும்
பேரின்ப வீடுகண்டு பெற்றிருந்தேன் பொற்காலம்-மாயை
சூத்திரத்தை சுட்டு பொய்சதுர்மறையை பொய்யாக்கி-மார்க்சீய
சூத்திரத்தை கண்டு துயரறுத்தேன் பொற்காலம்-வாழ
என்னைவிட்டு நீங்காமல் துணைவி துணைகொண்டு-பொதுவுடைமை
பொன்னுலகம் இவ்வுலகினில் கண்டுஏற்றேன் பொற்காலம்!

உற்றார் யாரடா? பெற்றோர் யாரடா? உடன்பிறந்தோர் யாரடா? சுற்றத்தார் யாரடா? மனைவி ஏதடா? மக்கள் ஏதடா?-உனது உயிர் மூச்சு நின்று போன பின்னே யார்தானோ உறவாவாரே?

உற்றார் யாரடா? பெற்றோர் யாரடா?
உடன்பிறந்தோர் யாரடா? சுற்றத்தார் யாரடா?
மனைவி ஏதடா? மக்கள் ஏதடா?-உனது உயிர்
மூச்சு நின்று போன பின்னே
யார்தானோ உறவாவாரே?
வாழும் காலத்தை வளமாக்கும் நலமானதொரு பாதையில்
வாழும்போதே வாழாத மானுடமிருந்து என்ன? போயுமென்ன?
உலகினிலே உலகத்தாரை நேசிக்காத வாழ்விருந்தென்ன?
உள்ளத்தில் கள்ளம்கொண்டு வாழ்வதென்ன? வாழ்வாகுமோ?

கண்காட்டும் காதலர்தம் கண்வலையில்-சிக்காத காதலர் தான் உலகினில் உண்டோ? காத்திருக்கும் காலத்தை சுமையாகவே-எந்த காதலரும் சொன்னதாக வரலாறுண்டோ? விண் எட்டும்

கண்காட்டும் காதலர்தம் கண்வலையில்-சிக்காத
காதலர் தான் உலகினில் உண்டோ?
காத்திருக்கும் காலத்தை சுமையாகவே-எந்த
காதலரும் சொன்னதாக வரலாறுண்டோ?
விண் எட்டும் வரையினில் அனுதினமும்
கனவுகள் காணாத காதலர்தாம் உண்டோ?
மண்விட்டுப் போகின்ற நாள்வரையினில்-காதல்
மனம்தொட்டு பேசாத மானுடமுண்டோ?

காட்டுக்கு எரித்த நிலா!-என் காதலைச் சொன்ன நிலா கண்ணில் கண்டதெல்லாமே கனவாச்சே!-என் வீட்டுக்கு வராத நிலா! -அது வீணுக்கு காய்ந்த நிலா! காட்சியை மறைத்த

காட்டுக்கு எரித்த நிலா!-என்
காதலைச் சொன்ன நிலா
கண்ணில் கண்டதெல்லாமே கனவாச்சே!-என்
வீட்டுக்கு வராத நிலா! -அது
வீணுக்கு காய்ந்த நிலா!
காட்சியை மறைத்த நிலா!-எனக்கு
கானலாய் ஆன நிலா!
நிலா நிலா நில்லாமலே ஓடும் நிலா-என்
நெஞ்சினில் நிற்காமலே போகும் நிலா!

வாயஞானம் பேசித்தான் பெரிது என்பாரே! வீணரே!-அவரே தான்வாழும் தன்னலம் தானறிவார் தன்னை அறியாரே! தன்னை அறிந்தால் தானே தரணியை அறியலாம்! தரணி ஆள்வோர் தன்னை

வாயஞானம் பேசித்தான் பெரிது என்பாரே! வீணரே!-அவரே
தான்வாழும் தன்னலம் தானறிவார் தன்னை அறியாரே!
தன்னை அறிந்தால் தானே தரணியை அறியலாம்!
தரணி ஆள்வோர் தன்னையே நினைத்தால் சரியாமோ?

என்னை அறியாமலே எனக்குள்ளே நீயிருந்தாயே! உன்னை புரியாமலே உனக்குள்ளே நானிருந்தேனே! உன்னை நீ தெரியாமலே எனக்குள்ளே நீஇருந்தாயே! நம்மை நாம் தெளியாமலே நாம

என்னை அறியாமலே எனக்குள்ளே நீயிருந்தாயே!
உன்னை புரியாமலே உனக்குள்ளே நானிருந்தேனே!
உன்னை நீ தெரியாமலே எனக்குள்ளே நீஇருந்தாயே!
நமக்குள்ளே நாமிருக்க நாமெதையோ தேடினோமே!
நம்மை நாம் தெளியாமலே நாமிருந்தால் அதுவாழ்வாகுமோ?

பிறப்பது ஒருமுறை இறப்பது ஒருமுறை பிறப்புமுதல் இறப்புவரை இடையினில் இருக்கும் வாழ்வினில் வாழ்ந்துபார்த்திடுவோம் இந்த மானுடதையே உடம்பை ஓட்டைத் துருத்தியெ

பிறப்பது ஒருமுறை இறப்பது ஒருமுறை
பிறப்புமுதல் இறப்புவரை இடையினில்
இருக்கும் வாழ்வினில் வாழ்ந்துபார்த்திடுவோம்
இந்த மானுடதையே
உடம்பை ஓட்டைத் துருத்தியென்பார்
உடையும் புழுக்கூடு என்பார்-வாழ்வுதன்னை
நீர்மேல் குமுழி என்பார்-இன்னும்
நீர்மேல் எழுத்து என்பார்-தாழ்வு மனப்பான்மையில்
வாழ்வினை வாழத்தெரியாதவர்களின்
சோம்பேறித் தனமான உரைகள் அல்லவா?
பிறப்பும் இறப்பும் இயற்கைதானே -இதை
பேதைமையோடு விரக்தியிலே புலம்புவதாலே
பயனென்ன?வாழ்கின்ற பூமியிலே!

ஓரின்பம் காட்டும் -பகுத்தறிவு உயர் ஞானவீதி வான் சென்று பேரின்பவீடு நான்கண்டேன் மூட நம்பிக்கை ஒழித்திடவே-தன் வாழ் நாளெல்லாம் பாடுபட்ட பெரியாரை நாம்ம

ஓரின்பம் காட்டும் -பகுத்தறிவு
உயர் ஞானவீதி வான் சென்று
பேரின்பவீடு நான்கண்டேன்
மூட நம்பிக்கை ஒழித்திடவே-தன் வாழ்
நாளெல்லாம் பாடுபட்ட பெரியாரை
நாம்மறந்தால் -அறிவு சார்ந்த
இந்த நல்லோர் உலகம்
நம்மை ஒரு நாளும் மன்னிக்காதே!

தூறோடு இசைந்து சுழன்றுவரும் தத்துவத்தை-பகுத்தறிவாலே வேரோடு இசைந்து விளங்கிவிட்டேன் உலகினிலே பாரோடு பயன்கொண்டு பகிர்ந்துண்ணும் காரணத்தை பாராத தனியுடைமை

தூறோடு இசைந்து சுழன்றுவரும் தத்துவத்தை-பகுத்தறிவாலே
வேரோடு இசைந்து விளங்கிவிட்டேன் உலகினிலே
பாரோடு பயன்கொண்டு பகிர்ந்துண்ணும் காரணத்தை
பாராத தனியுடைமை அழிவாக வழிகண்டு நடக்கின்றேன்!

தேன் என்று அறிந்தவனை-காதலில் நான் அறிந்து கொண்டவனை-காதலன் தான் என்று சொன்னவனை-காதலி நானும் தழுவும் தென்றலாகினேன்-ஊடலை ஏன் என்று கேட்டவனை -கூடலை வான

தேன் என்று அறிந்தவனை-காதலில்
நான் அறிந்து கொண்டவனை-காதலன்
தான் என்று சொன்னவனை-காதலி நானும்
தழுவும் தென்றலாகினேன்-ஊடலை
ஏன் என்று கேட்டவனை -கூடலை
வான் அளவு கண்டவனை- நானும்
ஊன் உறக்கம் மறந்து நினைத்தேனே!-தினமும்
உள்ளத்தில் ஒளியேற்றி வைத்தேனே!

நினைக்கும் நினைவுதோறும்-உன்னை நேசத்தில் காணுந்தோறும்-அனுதினமுன்னை கனவினிலே ரசிக்குந்தோறும்- நீயும் என் கருத்தினிலே நிற்குந்தோறும்-என்றென்றும் இன்பந

நினைக்கும் நினைவுதோறும்-உன்னை
நேசத்தில் காணுந்தோறும்-அனுதினமுன்னை
கனவினிலே ரசிக்குந்தோறும்- நீயும் என்
கருத்தினிலே நிற்குந்தோறும்-என்றென்றும்
இன்பந்தந்த காதலுக்கு நான் நன்றிசொல்லுவேன்!
அன்புமலர் சூட்டி நின்ற உன் வருகைக்கு வாழ்த்துரைப்பேன்!

ஆர் என்று கேட்டதுவும்-கன்னி அறிவுவந்து கண்டதுவும்-காதலனை பார் என்று சொன்னதுவும்-அன்பான பருவமகள் கண்ணல்லவோ?

ஆர் என்று கேட்டதுவும்-கன்னி
அறிவுவந்து கண்டதுவும்-காதலனை
பார் என்று சொன்னதுவும்-அன்பான
பருவமகள் கண்ணல்லவோ?

நினைவை காதலாலே நிறுத்திவை! கன்வு காணுதல் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க -உன் நினைவை காதலாலே நிறுத்திவை! நனவாகும் காலமது வருகின்றவரையிலே!

நினைவை காதலாலே நிறுத்திவை!
கன்வு காணுதல் போல் எனக்குக்
காட்டி மறைத்தே இருக்க -உன்
நினைவை காதலாலே நிறுத்திவை!
நனவாகும் காலமது வருகின்றவரையிலே!

Tuesday, August 25, 2009

என்னைவிட்டு நீங்காது என்னிடத்து நீயிருக்க உன்னைவிட்டு நீங்காது ஒன்றிவிட்டேன் கண்ணைவிட்டு இமையென்ன நீங்கிடுமோ?-உன் கருத்தைவிட்டு நானென்ன மாறுவனோ?

என்னைவிட்டு நீங்காது என்னிடத்து நீயிருக்க
உன்னைவிட்டு நீங்காது ஒன்றிவிட்டேன்
கண்ணைவிட்டு இமையென்ன நீங்கிடுமோ?-உன்
கருத்தைவிட்டு நானென்ன மாறுவனோ?

உள்ளமறியாமல் ஒளிந்திருந்த நாயகனை-அறிவாலே க்ள்ளமனம் தெளிந்து நானும் கண்டுகொண்டேன் தோழி! இல்லாமை நீக்குகின்ற நல்லோர்கள் வழிசெல்ல்லும் காதலனை என்னாளும்

உள்ளமறியாமல் ஒளிந்திருந்த நாயகனை-அறிவாலே
க்ள்ளமனம் தெளிந்து நானும் கண்டுகொண்டேன் தோழி!
இல்லாமை நீக்குகின்ற நல்லோர்கள் வழிசெல்ல்லும் காதலனை
என்னாளும் கரம்பிடித்து துணைகொண்டு வாழும் வழிகண்டேன் தோழி!

காதல் கரைகடந்து போவதற்கே காதலி ஓடம் தேவை வாழ்வதற்கே கண்ணில்லாத காதலுமில்லை காதலில்லாத கண்ணுமில்லை காதலன்பு இல்லாதபோது-உண்மை காதல் வெல்வதில்லை!

காதல் கரைகடந்து போவதற்கே
காதலி ஓடம் தேவை வாழ்வதற்கே
கண்ணில்லாத காதலுமில்லை
காதலில்லாத கண்ணுமில்லை
காதலன்பு இல்லாதபோது-உண்மை
காதல் வெல்வதில்லை!

தியானமே! மனத்திரையினில் எந்தகாட்சியும் ஏற்படாத மோன நிலையே! சப்தங்களைக் கடந்த ஓசையற்ற ஓசையே! ஒருகைஓசையே!

தியானமே!
மனத்திரையினில் எந்தகாட்சியும் ஏற்படாத
மோன நிலையே!
சப்தங்களைக் கடந்த ஓசையற்ற ஓசையே!
ஒருகைஓசையே!

மூளையே ஆயிரத்து நானூறு செல்களாலான மூளையே! ஊகமுண்டு உன்னிடத்தில் ஞாபகமுண்டு உன்னிடத்தில் புத்திகூர்மை உண்டு உன்னிடத்தில், நுண்ணறிவுண்டு உன்னிடத்தில் கற

மூளையே ஆயிரத்து நானூறு செல்களாலான மூளையே!
ஊகமுண்டு உன்னிடத்தில் ஞாபகமுண்டு உன்னிடத்தில்
புத்திகூர்மை உண்டு உன்னிடத்தில், நுண்ணறிவுண்டு உன்னிடத்தில்
கற்பனையுண்டு உன்னிடத்தில் பேச்சுண்டு,எழுத்துண்டு, பரிமாண
உணர்வு திறனுண்டு,கலையுணர்வுண்டு உன்னிடத்தில்
உன்னைக்கொண்ட மனிதனிடத்திலோ மனித நேயமில்லையே ஏன்?

உங்கள் வாழ்வுக்குப் பின்னும்! உங்கள் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! உங்கள் கண்களைக் கொடுத்து உங்கள் விழிகளின் மூலமாக உலகினைப் பாருங்கள்! உங்கள்

உங்கள் வாழ்வுக்குப் பின்னும்!
உங்கள் மரணத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
உங்கள் கண்களைக் கொடுத்து
உங்கள் விழிகளின் மூலமாக
உலகினைப் பாருங்கள்!
உங்கள் இதயத்தைக் கொடுத்து வேறொருவர் வாழ்க்கையினை
தொடரச் செய்யுங்கள்!
உங்கள் இரத்தத்தைக் கொடுத்து இன்னொருவர் வாழ்க்கைக்கு
ஒளியேற்றுங்கள்!

மக்கள் கலையாக இருந்தது தான் பல ஆண்டுகளுக்குப் பின்னும் வாசிக்கப்படுகிறது மக்களால் நேசிக்கப்படுகிறது மக்கள் கலைதான் மக்கள் நலத்திற்காகவே போராடுகிறது ம

மக்கள் கலையாக இருந்தது தான்
பல ஆண்டுகளுக்குப் பின்னும்
வாசிக்கப்படுகிறது மக்களால்
நேசிக்கப்படுகிறது
மக்கள் கலைதான்
மக்கள் நலத்திற்காகவே போராடுகிறது
மக்கள் கலைதான் அதன் எதிரிகளால்
தாக்கப்படுகிறது எதையும்தாங்கி உயர்ந்தது
ஆக்கப்படுகிறது!

முயற்சி இல்லாதவர்கள் வளமுள்ள நாட்டை உருவாக்கமுடியுமா? மூட நம்பிக்கை உள்ள தேசம் உருப்பட்டதாக சரித்திரமுண்டா? பகுத்தறிவு இல்லாத நாட்டில் அறிவியல் எப்படி

முயற்சி இல்லாதவர்கள் வளமுள்ள நாட்டை உருவாக்கமுடியுமா?
மூட நம்பிக்கை உள்ள தேசம் உருப்பட்டதாக சரித்திரமுண்டா?
பகுத்தறிவு இல்லாத நாட்டில் அறிவியல் எப்படி வளரும்:?
பாகுபாடு காட்டும் தேசத்தில் பொதுவுடைமை எப்படி இருக்கும்?
தனியுடைமை கோலோச்சும் நாட்டில் வறுமை எப்படி போகும்?

கற்களையெல்லாமே சிற்பங்களாக்குவோம்! காணுமிடமெல்லாமே கல்விக்கூடங்களாக்குவோம்! மானுட மனங்களையெல்லாமே மனித நேயமுள்ள மாசற்ற அன்புகொண்ட உயர்ந்த உள்ளமாக்குவோ

கற்களையெல்லாமே சிற்பங்களாக்குவோம்!
காணுமிடமெல்லாமே கல்விக்கூடங்களாக்குவோம்!
மானுட மனங்களையெல்லாமே மனித நேயமுள்ள
மாசற்ற அன்புகொண்ட உயர்ந்த உள்ளமாக்குவோம்!

சரித்திரம் என்பது வர்க்கப்போராட்டத்தை நிர்ணயிப்பதுதான்! சரித்திரம் படைப்பதும் வர்க்கப்போராட்டத்தை நடத்தும் பாட்டாளி வர்க்கம்தான்!அதில் வெற்றிகொள்ளும்

சரித்திரம் என்பது வர்க்கப்போராட்டத்தை நிர்ணயிப்பதுதான்!
சரித்திரம் படைப்பதும் வர்க்கப்போராட்டத்தை நடத்தும்
பாட்டாளி வர்க்கம்தான்!அதில் வெற்றிகொள்ளும் போதுதான்
பாட்டாளி மக்களுக்கு உண்மையான சுதந்திரமே கிடைக்கின்றது!

உன்னை நீயே செதுக்கும் போது = நீ இன்னொரு பிறப்பெடுக்கிறாய்-அது உனது ;இலட்சியங்களை நிர்ணயித்துக் கொள்வதில் இருக்கிறதே! மனரீதியான மறுபிறப்பு இருந்தும் உட

உன்னை நீயே செதுக்கும் போது = நீ
இன்னொரு பிறப்பெடுக்கிறாய்-அது
உனது ;இலட்சியங்களை நிர்ணயித்துக் கொள்வதில்
இருக்கிறதே!
மனரீதியான மறுபிறப்பு இருந்தும்
உடலின்மீது அதன் தாக்கமிருக்கிறது
இது
சாதாரண நிகழ்வல்ல
தன்னிலிருந்து தன்னை பிரசவிப்பதல்லவா?

துணைவியே என் தோழியே வாழும் நம் விழிப்புணர்வுதான் நம்மை வான் விண்மீன்களுக்கு அருகிலும் கொண்டு செல்லுமே! நாடல்ல இந்த உலகத்துக்கும் நமது ஒற்றுமை நல்லு

துணைவியே என் தோழியே
வாழும் நம் விழிப்புணர்வுதான் நம்மை
வான் விண்மீன்களுக்கு அருகிலும் கொண்டு செல்லுமே!
நாடல்ல இந்த உலகத்துக்கும் நமது ஒற்றுமை
நல்லுலகத்தை உருவாக்கும் என்பது திண்ணம்!

ஈழத்தில் நாங்கள் உங்களுக்காக நூற்றாண்டு காலமாய் காடுகளை கரும்புச் சோலைகளாய், காப்பித்தோட்டங்களாய் ஆக்கினோம்! நிலத்தை கழனிகளாய் விருட்சங்களாய் உருவாக

ஈழத்தில்
நாங்கள் உங்களுக்காக நூற்றாண்டு காலமாய்
காடுகளை கரும்புச் சோலைகளாய்,
காப்பித்தோட்டங்களாய் ஆக்கினோம்! நிலத்தை
கழனிகளாய் விருட்சங்களாய் உருவாக்கினோம்!-ஆனால் நீங்களோ!
இன்று எங்களையோ
கம்பி வேலிகளுக்கு இடையில் ஆடுமாடுகளாய் அடைத்து
சித்ரவதை முகாம்களில் சிறைவைத்தீரே சிங்களரே
நாங்கள் பாலைவனத்தை சோலைவனமாகத் தானே ஆக்கினோம்
நீங்களோ எங்களின் வாழ்க்கையையே பாலைவனமாக்கிவிட்டீரே!

விதையே! உன்வேர்களோடு ஓராயிரம் இளவேனில்கள், இலையுதிர்காலங்களை கடந்து மண்ணின் நினைவுகளோடு - நீயும் தங்கி இருக்கின்றாயே!!

விதையே! உன்வேர்களோடு
ஓராயிரம் இளவேனில்கள்,
இலையுதிர்காலங்களை கடந்து
மண்ணின் நினைவுகளோடு - நீயும்
தங்கி இருக்கின்றாயே!

உன் அழகின் உதட்டின் மேல் புன்முறுவல்-ஏ “ என் நந்தவனத்து ரோஜாவே! உன் இதயம் வைகறையில் மலர்ந்ததடி என் காதலி உன்னை முத்தமிட்டு தன் நெஞ்சின்மீது வைத்து சீர

உன் அழகின் உதட்டின் மேல் புன்முறுவல்-ஏ “
என் நந்தவனத்து ரோஜாவே!
உன் இதயம் வைகறையில் மலர்ந்ததடி
என் காதலி உன்னை முத்தமிட்டு
தன் நெஞ்சின்மீது வைத்து சீராட்டினாளே!
அதன் பாராட்டில் நீயும் சிலிர்ந்துபோனாய்!-என் காதலி
அவளின் அன்புப்பரிசாக நீ எனக்கு கிடைத்தாயே!
அன்பு ரோஜாவே உனக்கு எந்தன் கோடிமுத்தங்கள்!

அன்பே நானும் ஒரு அழகிய அல்லிமலர் பனிப்பாளங்களை உடைத்து மேலே எழுந்து தலை நிமிர்ந்து நிற்கக் கண்டேனே! இளந்தென்றலே மெல்ல தவழ்ந்து இழைந்து குழைந்து இசை

அன்பே நானும்
ஒரு அழகிய அல்லிமலர் பனிப்பாளங்களை
உடைத்து மேலே எழுந்து தலை நிமிர்ந்து நிற்கக் கண்டேனே!
இளந்தென்றலே மெல்ல தவழ்ந்து இழைந்து குழைந்து
இசைந்து அசைந்து அணைத்து மகிழ்ந்திடக் கொண்டேனே!

உன்னை பார்த்தாலே கண்மணக்கும்-உன்னை தொட்டாலே கைமணக்கும்-உன்பெயரை சொன்னாலே வாய்மணக்கும்-உன்னை நினைத்தாலே நெஞ்சினிக்கும்-உன் பார்வையே என் இதயத்தையே மல்ர

உன்னை
பார்த்தாலே கண்மணக்கும்-உன்னை
தொட்டாலே கைமணக்கும்-உன்பெயரை
சொன்னாலே வாய்மணக்கும்-உன்னை
நினைத்தாலே நெஞ்சினிக்கும்-உன்
பார்வையே என் இதயத்தையே மல்ர்வனம் ஆக்குமடி
பாவையே தேனிலக்கிய மின்னலே
இம்மண்ணின் சிலிர்ப்பே
என்காதலியே தேன்மொழியே!

வாழ்க்கையிது வாழ்க்கையிது பயன்களைத் தாண்டியது வாழ்க்கையிது! பூக்கள் எந்த பயன்கருதியும் பூப்பதில்லை-குயில் கூவுவது எந்த பயன்கருதியும் கூவுவதில்லை ஞாயிற

வாழ்க்கையிது வாழ்க்கையிது பயன்களைத் தாண்டியது
வாழ்க்கையிது!
பூக்கள் எந்த பயன்கருதியும் பூப்பதில்லை-குயில்
கூவுவது எந்த பயன்கருதியும் கூவுவதில்லை
ஞாயிறு உதித்தலும்,மழை பெயதலும்,
தென்றல் தழுவலும் தாமரை,மலர்தலும்
எந்தபயன் கருதியும் அல்ல அல்ல!

ஒரு சின்ன எறும்பு ஒரு சின்ன எறும்பு காதினில் நுழைந்தாலே-ஒரு யானையைக் கூட வீழ்த்திவிடுமே கடுகு சிறுத்தாலும் காரம் போகாதே கனமில்லாத பஞ்சு அதிகம் ஏற்றிய

ஒரு சின்ன எறும்பு
ஒரு சின்ன எறும்பு
காதினில் நுழைந்தாலே-ஒரு
யானையைக் கூட வீழ்த்திவிடுமே
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதே
கனமில்லாத பஞ்சு அதிகம் ஏற்றிய வண்டியும் பாரம்
அதிகமான போது அதன் அச்சாணியும் உடைந்திடுமே!-அதனாலே
சின்னதென்று எதையும் குறைவாக எடையே போடக்கூடாதே!

நம் மதிப்பீடுகள் நம்மோடு இருக்கட்டும் -அடுத்தவர்கள் நம்மைப் போலவே எண்ணவேண்டுமென்று எதிர்பார்ப்புகளைத் தகர்த்திடுங்கள்! நமக்கும் அவர்களுக்கும் இருக்க

நம் மதிப்பீடுகள் நம்மோடு இருக்கட்டும் -அடுத்தவர்கள்
நம்மைப் போலவே
எண்ணவேண்டுமென்று
எதிர்பார்ப்புகளைத் தகர்த்திடுங்கள்!
நமக்கும் அவர்களுக்கும் இருக்கின்ற
நல்லதொடர்புகளை நிகழ்காலத்தில் மட்டுமே
நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை இன்னும்
நீடித்து மகிழ்ச்சியானதாய் இருக்குமே!

விதையே! உயிரின் ஜூவனே உனக்குத் தகுந்த நீரும் வெளிச்சமும் நான் தந்தால் நீயும் முளைத்து வெளிவருவாய் உன் ஒவ்வொரு இலைவிடும் பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ம

விதையே!
உயிரின் ஜூவனே
உனக்குத் தகுந்த நீரும் வெளிச்சமும் நான் தந்தால்
நீயும் முளைத்து வெளிவருவாய்
உன் ஒவ்வொரு இலைவிடும் பொழுதும்
இந்த பிரபஞ்சத்தின் மலர்ச்சியாகுமே!

உன்னால் பூக்கமுடியும்
உன் பூவிதழால் தேனீக்களுக்கு தேன் தரமுடியும் - நீ
நறுமணம் தருவாய்! நிழல் தருவாய்
மனதில் மகிழ்ச்சி தருவாய்
நீ ஒர் செடியின் இயக்கம்
நீயொரு காலத்தின் கருப்பை !

Monday, August 24, 2009

முழு நிலவில் எழில்வானம் அழகுமலர் புதுதென்றல் மாலையிலே சேர்த்திருக்கும் சோலையிலே சிலிர்ப்பிருக்கும்-காதலனே கண்ணேறி நெஞ்சிலேறி காதல் தந்தான் கருத்தேறி உ

முழு நிலவில் எழில்வானம்
அழகுமலர் புதுதென்றல்
மாலையிலே சேர்த்திருக்கும்
சோலையிலே சிலிர்ப்பிருக்கும்-காதலனே
கண்ணேறி நெஞ்சிலேறி காதல் தந்தான்
கருத்தேறி உயிர் ஏறி கலந்து விட்டான்!

பொன் ததும்பும் அந்திவானமே புன்னகைக்கும் பூஞ்சோலையே அந்திமலர் மந்தாரையே எண்ண இனிக்கின்றதே-இயற்கை இனிக்கும் காட்சிக்கு ஈடு ஏது கோவில்? ஏது தீபம்?

பொன் ததும்பும் அந்திவானமே
புன்னகைக்கும் பூஞ்சோலையே
அந்திமலர் மந்தாரையே
எண்ண இனிக்கின்றதே-இயற்கை
இனிக்கும் காட்சிக்கு ஈடு
ஏது கோவில்? ஏது தீபம்?

இனி நாமும் இன்பமும் - நாம் தனி இலை என்றுமே- நம்மில் பனியாய் போகும் துன்பமும் -அன்பு கனியாய் பெறுவோம் அன்பினை இருட்காட்டினை அழித்த நிலவும் காயுதடி-அத

இனி நாமும் இன்பமும் - நாம்
தனி இலை என்றுமே- நம்மில்
பனியாய் போகும் துன்பமும் -அன்பு
கனியாய் பெறுவோம் அன்பினை
இருட்காட்டினை அழித்த நிலவும் காயுதடி-அது
என்னாளும் துனபமிலை என்று பறைசாற்றுதடி

முத்தந்தான் எனக்குத் தருவாய் நித்தந்தான் !-அன்பும் உனக்குத்தான் ஆருயிரும் உன்னத்தான் நான் !-இன்பக்குயிலே நீயும் எனக்குத்தான் நீதருவாய் முத்தந்தான்! என

முத்தந்தான் எனக்குத் தருவாய் நித்தந்தான் !-அன்பும்
உனக்குத்தான் ஆருயிரும் உன்னத்தான் நான் !-இன்பக்குயிலே நீயும்
எனக்குத்தான் நீதருவாய் முத்தந்தான்!
என்னெஞ்சை உன்னெஞ்சாய் ஆக்கிவிட்டாய்!
இளமைக்கு ஒருகதவை திறந்துவிட்டாய்!
இனிமைக்கு வெண்ணிலவை தந்துவிட்டாய்!
தனிமைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டாய்!

காற்று குளிர்ந்தடிக்குதடி கவிதை சிறகடிக்குதடி பூக்கள் மணங்கமழுதடி-உன் புன்னகை இதழ்விரிக்குதடி பூபூவா பூத்திருக்கு நந்தவனமே-என் மனசுக்குள் காத்திருக்கு

காற்று குளிர்ந்தடிக்குதடி
கவிதை சிறகடிக்குதடி
பூக்கள் மணங்கமழுதடி-உன்
புன்னகை இதழ்விரிக்குதடி
பூபூவா பூத்திருக்கு நந்தவனமே-என்
மனசுக்குள் காத்திருக்கு அன்புதினமே

அறிவாலே ஊரை எழுப்பவேண்டுமென்றாலே முதலில் பூசாரியை எழுப்படா?! மூட நம்பிக்கை இருக்குற வரைக்கும் நேற்றிக்கடன்கள் நெய்வேத்தியங்களுக்கு பஞ்சமில்லையடா!

அறிவாலே ஊரை எழுப்பவேண்டுமென்றாலே
முதலில் பூசாரியை எழுப்படா?!
மூட நம்பிக்கை இருக்குற வரைக்கும்
நேற்றிக்கடன்கள் நெய்வேத்தியங்களுக்கு பஞ்சமில்லையடா!
!

ஆள் மேலே இடிவிழுந்த பின்னே ஆளாளுக்கு பஞ்சாங்கம் பார்க்கின்ற துப்புகெட்ட உலகமடா! புரியாத விசயத்திற்கு நாமாக கற்பித்துக் கொள்ளும் விளக்கங்கள் தானடா மூட

ஆள் மேலே இடிவிழுந்த பின்னே
ஆளாளுக்கு பஞ்சாங்கம் பார்க்கின்ற
துப்புகெட்ட உலகமடா!
புரியாத விசயத்திற்கு நாமாக கற்பித்துக் கொள்ளும்
விளக்கங்கள் தானடா மூட நம்பிக்கையடா!
குறிசொல்லும் குறிகாரருக்கு அவரின் விதிக்
குறியே அவருக்கு தெரியுமாடா?ஏழ்மை இருக்கும் வரை
ஏழைகள் ஜோசியர் வீட்டை முற்றுகை இடத்தான் செய்வாரடா!

உலகம் ஒரு ஏணியாகும் அதில் சிலர் ஏறுறாங்க- ஒரு சிலர் இறங்குறாங்க ஏறுறவங்கஏறும்போது சிரிக்குறாங்க இறங்குறவங்க இறங்கும் போது அழுகுறாங்க என்று சொல்றாங்

உலகம் ஒரு ஏணியாகும்
அதில் சிலர் ஏறுறாங்க- ஒரு சிலர்
இறங்குறாங்க
ஏறுறவங்கஏறும்போது சிரிக்குறாங்க

இறங்குறவங்க இறங்கும் போது அழுகுறாங்க என்று சொல்றாங்க -ஆனா
ஏத்தமும் இறக்கமும் மாறி மாறி வருமுனு சொல்லமுடியாதுங்க-இங்க
ஏறுனவன் ஏறிக்கிட்டே இருக்கானுங்க
இறங்குனவன் இறங்கிக்கிட்டே இருக்கானுங்க!

காற்றினில் ஆடாத மரமுமில்லை காதலை நாடாத உயிருமில்லை கனவு காணாத மனிதருமில்லை இனிமை தாராத குயிலுமில்லை இலக்கணமில்லாத இலக்கியமில்லை ஊடலில்லாத காதலில்லை போ

காற்றினில் ஆடாத மரமுமில்லை
காதலை நாடாத உயிருமில்லை
கனவு காணாத மனிதருமில்லை
இனிமை தாராத குயிலுமில்லை
இலக்கணமில்லாத இலக்கியமில்லை
ஊடலில்லாத காதலில்லை
போராட்டமில்லாத வாழ்க்கையில்லை!

மனுசனப் படிச்சுட்டு வாடா! நீயும் புத்தகத்த படிக்கும் முன்னே மனுசனப் படிச்சுட்டு வாடா!-அவன் மனசில என்னனு தெரிஞ்சிட்டு வாடா-அவனின் மாற்றத்த என்னனு அறிஞ்

மனுசனப் படிச்சுட்டு வாடா! நீயும்
புத்தகத்த படிக்கும் முன்னே
மனுசனப் படிச்சுட்டு வாடா!-அவன்
மனசில என்னனு தெரிஞ்சிட்டு வாடா-அவனின்
மாற்றத்த என்னனு அறிஞ்சிட்டுவாடா
மனுசனப் போல நடந்துகொள்ளும்
மனுசன புரிஞ்சிக்கிட்டு வாடா!

மனிதனே உன்வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் உன் சரித்திரத்தில் ஓர் ஏடாகும்! வாழ்வினிலே கடந்தகாலம் என்ற கனவுமுண்டு எதிர்காலம் என்ற விருப்பமுண்டு நிகழ்காலம்

மனிதனே உன்வாழ்க்கையின்
ஒவ்வொரு நாளும்
உன் சரித்திரத்தில் ஓர் ஏடாகும்!
வாழ்வினிலே
கடந்தகாலம் என்ற கனவுமுண்டு
எதிர்காலம் என்ற விருப்பமுண்டு
நிகழ்காலம் என்ற போராட்டமுண்டு
வாழ்வென்றால் போராட்டம் உண்டு
போராட்டமென்றால் வாழ்வினில் இருக்கும்!

மனிதனே மனிதனே அழுதுகொண்டே பிறந்த மனிதனே குறைசொல்லிக் கொண்டே வாழ்ந்த மனிதனே ஏமாற்றம் அடைந்து இறந்த மனிதனே ஏமாற்றும் மனிதரை அறியாது மறைந்த மனிதனே-இனி ஒர

மனிதனே மனிதனே
அழுதுகொண்டே பிறந்த மனிதனே
குறைசொல்லிக் கொண்டே வாழ்ந்த மனிதனே
ஏமாற்றம் அடைந்து இறந்த மனிதனே
ஏமாற்றும் மனிதரை அறியாது மறைந்த மனிதனே-இனி
ஒரு விதி செய் மனிதகுலமே
நல்லது கெட்டது தெரிந்து நாளும் அறிந்து
கெட்டது அழிக்க மறவாது
வாழவேண்டும் மனிதனே

வெங்காயம் வெங்காயம் வாழ்க்கை என்பது ஒரு வெங்காயம் அதை உரிக்க உரிக்க கண்ணீர்வரும்- அது ஆனந்தக் கண்ணீராக இருக்கலாம் ! துக்கக் கண்ணீராகவும் இருக்கலாம்!

வெங்காயம் வெங்காயம் வாழ்க்கை என்பது ஒரு
வெங்காயம் அதை உரிக்க உரிக்க கண்ணீர்வரும்- அது
ஆனந்தக் கண்ணீராக இருக்கலாம் !
துக்கக் கண்ணீராகவும் இருக்கலாம்!

Sunday, August 23, 2009

தமிழ்மணம் நீ தமிழை மட்டுமல்ல ,தமிழ் நாட்டை மட்டும் அல்ல எல்லாதேசத்தையும் இணைக்கும் பாலமே ! யாதும் ஊரே ,எல்லாரும் எம்மக்களே என்ற உனது உயர்ந்த நோக்கங்கள

தமிழ்மணம் நீ தமிழை மட்டுமல்ல ,தமிழ் நாட்டை மட்டும் அல்ல எல்லாதேசத்தையும் இணைக்கும் பாலமே ! யாதும் ஊரே ,எல்லாரும் எம்மக்களே என்ற
உனது உயர்ந்த நோக்கங்கள் நிறைவேற்றும் உந்தன் பணி மென்மேலும் தொடர எனது அன்பான தோழமையுடன் ஆன புரட்சிகர வாழ்த்துக்கள்!
புதிய ஆண்டில் புதிய உணர்வில் புத்தெழுச்சியில் புரட்சிப்பாதையில்
தமிழ்மணமே தமிழ்மணமே உன்வாசமே எங்கள் நேசமே
தேச, நாடு,உலக எல்லைகளை தாண்டி -தென்மதுரைத்தமிழ்
தென்றலையும் துணைக்குக் கொண்டு ம்ணம் பரப்புமே
உலகமக்கள் நலம்காண கருத்துக்கள் கூறுகின்ற உன் பாசம்
எங்களின் பூவாசம் போலிவேசம் கலைக்கின்ற உன்கோஷம்
உன் அடிச்சுவட்டில் நல்லோர் கூறும் நல் கருத்தை ஏற்றுவோம்!

கடலே கடலே எந்த நதியையும் விலக்கிடுமோ? காதல் எந்த ஜீவனையும் விட்டுவிலகிடுமோ? அன்பு சாம்ராஜ்யத்தில் கோட்டைகட்டி வாழ்கின்றேன் -காதலி அவளின் வருகைக்கு கால

கடலே கடலே எந்த நதியையும் விலக்கிடுமோ?
காதல் எந்த ஜீவனையும் விட்டுவிலகிடுமோ?
அன்பு சாம்ராஜ்யத்தில் கோட்டைகட்டி வாழ்கின்றேன் -காதலி
அவளின் வருகைக்கு காலமெல்லாம் காத்துக்கிடக்கின்றேன்
காதலி வருவாளா?
காதலைத் தருவாளா?
கண்மட்டும் தானே தூது வந்தது பின் இதயத்தில் ஏனோ?
கருத்து வீழ்ந்தது கனவும் தொடர்ந்தது காரணம் ஏனோ?

உன் ஆயுட்கால பக்தியும்-உனது ஒரு நிமிட தியானத்திற்கு ஈடாகுமோ? பிராணயாமமும்,யோகாவும் நம்வாழ்க்கை ஆரோக்கியத்திற்கு நம்முன்னோர் சொல்லித்தந்த அறிவான நல்ல க

உன் ஆயுட்கால பக்தியும்-உனது
ஒரு நிமிட தியானத்திற்கு ஈடாகுமோ?
பிராணயாமமும்,யோகாவும் நம்வாழ்க்கை
ஆரோக்கியத்திற்கு நம்முன்னோர் சொல்லித்தந்த
அறிவான நல்ல கருத்துக்கள் அல்லவா?!
அதை நீயும் அறிந்து நோயை எதிர்த்து
இன்பமாய் வாழ வழிவகை கொள்ளடா!

பறவைகளே சுதந்திரமாய் வானத்தில் பறந்திடும் போதினிலே மனிதர்களே உன் வாழும் உரிமை பறிபோக நீயும் கிடக்கலாமா? எல்லாரும் வாழும்கொள்கை- நீயும் எழு ந்து நடக்கு

பறவைகளே சுதந்திரமாய்
வானத்தில் பறந்திடும் போதினிலே
மனிதர்களே உன் வாழும் உரிமை
பறிபோக நீயும் கிடக்கலாமா?
எல்லாரும் வாழும்கொள்கை- நீயும்
எழு ந்து நடக்கும் தத்துவத்தை
உயர்த்திப் பிடிக்க மறக்கலாமா?

கல்விக் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் கட்சிக் கொள்கை இல்லாத கட்சியில் சேர்ந்திருக்க வேண்டாம் மக்களை மதிக்காத ஆயிரமாய் கட்சிகள் இங்கு ஏனடா?

கல்விக் கோவில் இல்லாத ஊரில்
குடியிருக்கவேண்டாம்
கட்சிக் கொள்கை இல்லாத கட்சியில்
சேர்ந்திருக்க வேண்டாம்
மக்களை மதிக்காத ஆயிரமாய் கட்சிகள் இங்கு ஏனடா?
மக்களை நேசிக்கின்ற பொது நல கட்சிதனில் சேரடா!

அன்பு மனதில் இருந்தாலே -இந்த பிரபஞ்சமும் சுவராகும்-அதில் அன்பு இல்லை என்றபோது-அந்த சிலந்திவலையும் சிறையாகும் அன்பில்லாத மனதுக்குள்ளே காதலில்லையே-அதில்

அன்பு மனதில் இருந்தாலே -இந்த
பிரபஞ்சமும் சுவராகும்-அதில்
அன்பு இல்லை என்றபோது-அந்த
சிலந்திவலையும் சிறையாகும்
அன்பில்லாத மனதுக்குள்ளே காதலில்லையே-அதில்
அறிவும்கூட இல்லாவிட்டால் இன்பமில்லையே!

அறிவுக் களஞ்சியமே -என் அனுபவக் களஞ்சியமே அன்பு பரிச்சயமே-என் இன்ப இலக்கணமே காதல் இலக்கியமே-என் வாழ்வின் இலட்சியமே வாழ்ந்து பார்த்திடுவோம்-அதை வளமாய் ஆ

அறிவுக் களஞ்சியமே -என்
அனுபவக் களஞ்சியமே
அன்பு பரிச்சயமே-என்
இன்ப இலக்கணமே
காதல் இலக்கியமே-என்
வாழ்வின் இலட்சியமே
வாழ்ந்து பார்த்திடுவோம்-அதை
வளமாய் ஆக்கிடுவோம்!

காதல், நெருப்பு, இருமல் இந்த மூன்றையும் மறைத்திட முடியாது காதல் சாதி,மத,இன,மொழி வேற்றுமைகளை கண்டு சிரிக்கிறது காதல் வந்தது ஏழுவி நாடிகளே= அது கருத்தின

காதல், நெருப்பு, இருமல் இந்த
மூன்றையும் மறைத்திட முடியாது
காதல் சாதி,மத,இன,மொழி
வேற்றுமைகளை கண்டு சிரிக்கிறது
காதல் வந்தது ஏழுவி நாடிகளே= அது
கருத்தினில் நின்றது யுகயுகமாகவே
காதலே இனிமையான சிறைவாசமே

காதல் தானே காதலை வெல்லமுடியுமே!

காலத்திற்கும் காலமுண்டு- ஆனால் காதலுக்கு காலமில்லை காதலுக்கு மருந்துமில்லை காதலர்க்கு மருத்துவனில்லை காதலின் உச்சத்தில்-காதலர் பேச்சும் குறைந்துவிடும்

காலத்திற்கும் காலமுண்டு- ஆனால்
காதலுக்கு காலமில்லை
காதலுக்கு மருந்துமில்லை
காதலர்க்கு மருத்துவனில்லை
காதலின் உச்சத்தில்-காதலர்
பேச்சும் குறைந்துவிடும்
காதலதனை புதுப்பிக்கும்
காதலரின் சிறு ஊடலே
வானத்தில் பறவையின்
பாதையும் ;தெரிவதில்லை
காதலர்க்கு பூமிதன்னில்
காரணமும் புரிவதில்லை
காதலர்க்கு முத்தங்கள்
காதலதின் திறவுகோலாகும்
காதலரின் கடிதங்களுக்கு
தேதியொன்றும் தேவையில்லை
காதலரின் கோபமும் பொய்மையே
காதலுக்கது புத்துயிராகும்
காதலரின் தூதுவர் கண்களே
காதல் தானே காதலுக்குப் பரிசாகும்
காதலர்தானே காதலுக்கு வித்தாவர்!

இனிப்புக்குத் தேனும் அன்புக்குத் துணைவியும் அவசியம் தேவை வாழ்வினிலே நல்லதுணை இல்லாத வாழ்வு மட்டுமல்ல இந்த சமுதாயமும் சந்தோசம் கொள்வதில்லை இந்த தேச வி

இனிப்புக்குத் தேனும்
அன்புக்குத் துணைவியும்
அவசியம் தேவை வாழ்வினிலே
நல்லதுணை இல்லாத வாழ்வு மட்டுமல்ல
இந்த சமுதாயமும் சந்தோசம் கொள்வதில்லை
இந்த தேச விடுதலை ஆணோடு சேர்ந்த பெண்ணோடு
அணிவகுக்கும் போரினில் இருக்குதடா!

ஒருவருக்காக எல்லோரும் எல்லோருக்குமாக ஒவ்வொருவரும் ஒற்றுமையே சக்தியாகும் துண்டுபட்டால் தாழ்வாகும்- பலமில்லாதவை கூட ஒன்றுசேர்ந்தாலே பலமுள்ளவை ஆகிடுமே!

ஒருவருக்காக எல்லோரும்
எல்லோருக்குமாக ஒவ்வொருவரும்
ஒற்றுமையே சக்தியாகும்
துண்டுபட்டால் தாழ்வாகும்-
பலமில்லாதவை கூட ஒன்றுசேர்ந்தாலே
பலமுள்ளவை ஆகிடுமே
கட்டாக உள்ள கழிகளையே ஒடிக்கமுடியுமா?
கட்டியிருக்கும் கதிர்கட்டை உடைக்கமுடியுமா?

கடன்வாங்கி விருந்துவைத்து காணும் உலகினில் ஆண்டியாகிட வேண்டாமே! காசிருந்தா இன்னைக்கு விருந்து--அட காசில்லாட்டா நாளைக்கு பட்டினி கடனவாங்கி டாமு டூமு கொண

கடன்வாங்கி விருந்துவைத்து
காணும் உலகினில் ஆண்டியாகிட வேண்டாமே!
காசிருந்தா இன்னைக்கு விருந்து--அட
காசில்லாட்டா நாளைக்கு பட்டினி
கடனவாங்கி டாமு டூமு கொண்டாட்டம்!
கடன்காரன் காசக்கேட்டா திண்டாட்டம்!
வெலவாசி எகிறிப்போச்சு சின்னக்கா- நம்ம
வேதனையும் கூடிப்போச்சு ராமக்கா

பத்து வயதினில் விசித்திரக் குழந்தை பதினைந்து வயதினில் கெட்டிக்கார இளைஞன் இருபதிலே சாதாரண மனிதன் வாலிபத்தில் காரணமின்றி துள்ளாதே வயதான காலத்தில் வருந்த

பத்து வயதினில் விசித்திரக் குழந்தை
பதினைந்து வயதினில் கெட்டிக்கார இளைஞன்
இருபதிலே சாதாரண மனிதன்
வாலிபத்தில் காரணமின்றி துள்ளாதே
வயதான காலத்தில் வருந்தாதே
வாலிப வயதிலும் வெள்ளைத்தாளிலும்
எதை எழுதினாலும் பதிந்துவிடுமே
இளமையில் செயல்பட வேண்டும்
இளமையொரு ரோஜாமாலையாகும்
இந்த உலகம் இளைஞருக்கு உரியது அல்லவா?-மென்மையான
இளமைக் களியில் எந்த உருவமாகவும் பிடிக்கலாமே!-மதுவின்றி
இளமைவெறி கொள்ளும் வாலிபமே!
காலை நேரம் இருக்கும்போதே
காலைமலர்களைப் பறிக்கவேணும்
இளமை இருக்கும்போதே சாதனை படைத்திடவேணும்!

சவபெட்டி தொட்டிலின் சகோதரன் மரணம் உலகின் எஜமானன் சாவைப் பற்றி பயப்படாதவன் புதிய சரித்திரத்தை படைக்கின்றான் சாவு நிச்சயம் என்று தெரிந்தும் போராளி-பொதும

சவபெட்டி தொட்டிலின் சகோதரன்
மரணம் உலகின் எஜமானன்
சாவைப் பற்றி பயப்படாதவன் புதிய
சரித்திரத்தை படைக்கின்றான்
சாவு நிச்சயம் என்று தெரிந்தும் போராளி-பொதுமக்களின்
வாழ்வுக்காக போராடுகின்றான்
தன்னலவாதியோ தனக்காகவே வாழ்ந்து சாகின்றான்!
மரணம் எல்லார்க்கும் ஒன்றுதான் -ஆனால் எதற்காக யார்?
மரணிக்கின்றார் என்பதைப் பொறுத்துதான் அதன் மதிப்பு!

முற்றும் கனிந்த கனி முதலில் விழுவதொன்றும் ஆச்சரியமில்லையே-எல்லா மனிதர்களும் நினைவினில் சிரஞ்சீவிகளே-ஆனாலும் மனிதர்களே நீங்களோ புழுதிதான் நீங்களோ? புழு

முற்றும் கனிந்த கனி
முதலில் விழுவதொன்றும் ஆச்சரியமில்லையே-எல்லா
மனிதர்களும் நினைவினில் சிரஞ்சீவிகளே-ஆனாலும்
மனிதர்களே நீங்களோ
புழுதிதான் நீங்களோ?
புழுதிக்கே திரும்ப வேண்டும்-இது
நான் சொன்னதல்ல விவிலியம் சொன்னது!

அதிர்ஷ்டம் உண்டென்றால் அதிஷ்டம் சிலருக்கு உண்டு-மரணமில்லையென்றாலும் மரணமோ எல்லோருக்குமுண்டு மரணமென்ப து புனிதமான உறக்கமானது-மனிதர்களே பகலை இரவில் புகழ

அதிர்ஷ்டம் உண்டென்றால்
அதிஷ்டம் சிலருக்கு உண்டு-மரணமில்லையென்றாலும்
மரணமோ எல்லோருக்குமுண்டு
மரணமென்ப து புனிதமான உறக்கமானது-மனிதர்களே
பகலை இரவில் புகழுங்கள்-வாழ்வை
முடிவில் முடிவாய் புகழுங்கள்
எட்டடி நிலமே அனைவரையும் சமமாக்கியதே!
அந்தமரணமே மருத்துவனுக்கும் அஞ்சாததே
வாழும்போதே வாழ்த்தாத நெஞ்சங்களே
வாழ்ந்தென்ன பூவுலகில் பூஜ்யமே

மனிதன் பிறக்கும் போது அவனழுகின்றானே மற்றவர் சிரிக்கின்றாரே! மனிதன் இறக்கும் போதோ அவன்சிரிக்கின்றானே மற்றவர் அழுகின்றாரே அழுவதும் சிரிப்பதும் அவரவர் மன

மனிதன் பிறக்கும் போது அவனழுகின்றானே
மற்றவர் சிரிக்கின்றாரே!
மனிதன் இறக்கும் போதோ அவன்சிரிக்கின்றானே
மற்றவர் அழுகின்றாரே
அழுவதும் சிரிப்பதும் அவரவர் மன நிலை
அழாமல் சிரிக்காமல் இருப்பது ஒரு நிலை

இறந்தவனுக்கு மரியாதை நம் நினைவுகளாகும் நம் கண்ணீரன்று இருப்பவருக்கு மரியாதை நம் இரக்கமன்று நம் உதவிக்கரங்கள்தான் இறந்தவரைப் பார்த்து உச் கொட்டுதல

இறந்தவனுக்கு மரியாதை
நம் நினைவுகளாகும்
நம் கண்ணீரன்று
இருப்பவருக்கு மரியாதை
நம் இரக்கமன்று
நம் உதவிக்கரங்கள்தான்
இறந்தவரைப் பார்த்து
உச் கொட்டுதல் அன்று
அவரின் நல்ல கெட்ட செயல் ஆய்ந்து
வாழும் நல்லவாழ்க்கை முறைதான்!

வாரந்தோறும் ஓய்வெடுக்க ஞாயிறும் உண்டு வாரந்தோறும் விரதமிருக்க வெள்ளியும் உண்டு-உனக்கு வாழுந்தோறும் மனிதனாய் இருக்க எண்ணமுண்டா?-எல்லாம் வாழ நினைக்கும்

வாரந்தோறும் ஓய்வெடுக்க ஞாயிறும் உண்டு
வாரந்தோறும் விரதமிருக்க வெள்ளியும் உண்டு-உனக்கு
வாழுந்தோறும் மனிதனாய் இருக்க எண்ணமுண்டா?-எல்லாம்
வாழ நினைக்கும் மனிதனாக மாற வழியும் கண்டாயா?

கல்லறையுள்ளே அரசன் யாரடா? ஆண்டி யாரடா?-பொதுவாக நாம் எல்லோரும் சந்திக்குமிடம் இந்த சமாதி தானடா! நிரந்தர அமைதி தானடா! இருக்குற காலத்தில எல்லோரும் வாழ

கல்லறையுள்ளே
அரசன் யாரடா?
ஆண்டி யாரடா?-பொதுவாக
நாம் எல்லோரும் சந்திக்குமிடம்
இந்த சமாதி தானடா!
நிரந்தர அமைதி தானடா!
இருக்குற காலத்தில
எல்லோரும் வாழ எண்ணாத
வாழ்க்கை என்ன வாழ்க்கையடா?

வீடுதோறும் அடுப்புமுண்டு வீதிதோறும் அனுபவம் உண்டு நாடுதோறும் நடந்து நல்ல நடப்ப புரிந்து நல்லது கெட்டது அறிந்து வாடா! நீயும் உறுதியாக இல்லாவிட்டாலோ!

வீடுதோறும் அடுப்புமுண்டு
வீதிதோறும் அனுபவம் உண்டு
நாடுதோறும் நடந்து
நல்ல நடப்ப புரிந்து
நல்லது கெட்டது அறிந்து வாடா! நீயும்
உறுதியாக இல்லாவிட்டாலோ
நல்லவனா இருக்கமுடியுமா?

அனுபவம் ஜெயித்துவிடும்-ஒரு அனுபவம் ஜெயித்துவிடும் ஓராயிரம் அறிவுரைகளையுமே அனுபவம் ஜெயித்துவிடும்-ஒரு அனுபவம் ஜெயித்துவிடும் வல்லவனுக்கு வல்லவனுண்டு உல

அனுபவம் ஜெயித்துவிடும்-ஒரு
அனுபவம் ஜெயித்துவிடும்
ஓராயிரம் அறிவுரைகளையுமே
அனுபவம் ஜெயித்துவிடும்-ஒரு
அனுபவம் ஜெயித்துவிடும்
வல்லவனுக்கு வல்லவனுண்டு உலகினிலே
திறமையுள்ளவரை தொடர்ந்து எப்போதுமே
திறமையுள்ளவரே வந்திடுவார்களே!

நீ இனிமையாக இருந்துவிட்டாலோ! உன்னை உலகம் விழுங்கப்பார்க்குமடா! நீ கசப்பாக இருந்துவிட்டாலோ! உன்னை ;உலகம் துப்பப் பார்க்குமடா?!-உலகத்தை விழுங்கவும் வ

நீ இனிமையாக இருந்துவிட்டாலோ!
உன்னை உலகம் விழுங்கப்பார்க்குமடா!
நீ கசப்பாக இருந்துவிட்டாலோ!
உன்னை ;உலகம் துப்பப் பார்க்குமடா?!-உலகத்தை
விழுங்கவும் விடாமல் துப்பவும் விடாமல்
உலகினில் நீயும் வாழ்வது சுலபமில்லையடா!

பணமே பணமே நீயும் பேசாதே - பணமே நீயும் பேசத்துவங்கினால் உலகம் ஏனோ? வாயைமூடிகொண்டதே- நீயும் உருண்டு உருண்டு ஓடினாய் பத்து பத்தாய் என்ன? கோடி கோடி பேசினா

பணமே பணமே நீயும் பேசாதே -
பணமே நீயும் பேசத்துவங்கினால்
உலகம் ஏனோ? வாயைமூடிகொண்டதே- நீயும்
உருண்டு உருண்டு ஓடினாய்
பத்து பத்தாய் என்ன? கோடி கோடி பேசினாய்- நீ
உள்ள இடத்தில் இரும்பும் மிதந்தது
நீயும் மன நிறைவும் ஒன்றுசேர்ந்து இருந்ததில்லையே
நீயும் தேவைக்கு அதிகமாக இருந்தாலே
தேவையற்றதை வாங்கிவிட எண்ணமாகுமே!
உன்னை கோடிகோடியாக கொண்டவனும்
எட்டடி நிலத்தினில் ஆழ்ந்திருக்கும் போதினிலே
ஒற்றைத் துணியோடு தானே போகின்றானே!

வயதினை எண்ணும் ஆண்டுகளில் அல்ல ஆண்டுகளில் அல்ல- நீ உன் செயல்களில் வாழவேண்டும்- தவறான வழிதன்னில் எவ்வளவு தூரம் நீ சென்ற போதும் தவறான பாதைவிட்டு திரும்

வயதினை எண்ணும்
ஆண்டுகளில் அல்ல ஆண்டுகளில் அல்ல- நீ உன்
செயல்களில் வாழவேண்டும்-
தவறான வழிதன்னில் எவ்வளவு தூரம் நீ சென்ற போதும்
தவறான பாதைவிட்டு திரும்பி நீயும் வந்துவிடு-உன்
தீமைகளை மணலில் எழுதிவிடு உனது
நன்மைகளை கல்லில் வடித்துவிடு-உனது தவமே
தீமைகளை செய்யாத மானுட வாழ்க்கையாகுமே!

இன்பம் இன்பம் நாம்செய்யும் நன்மை இன்பமாகுமே இன்பம் இன்பம் என்பது அன்பின் குழந்தையாகுமே-இன்பம் இன்பம் தன்னில் துன்பத்தை தாங்கி நிற்குமே இன்பம் நிலையில

இன்பம் இன்பம் நாம்செய்யும் நன்மை இன்பமாகுமே
இன்பம் இன்பம் என்பது அன்பின் குழந்தையாகுமே-இன்பம்
இன்பம் தன்னில் துன்பத்தை தாங்கி நிற்குமே
இன்பம் நிலையில்லை -அது
சிறகுமுளைத்து பறந்துவிடுமே-உண்மை
இன்பத்திற்கு எல்லையில்லையே-துன்பமில்லாமலே
இன்பம் எனபது இல்லையில்லையே
இன்பத்தில் நேரம் போவது தெரிவதில்லையே!
எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று இருப்பது
இவ்வுலகின் பேரின்பமாகுமே!

சிரிக்காத நாளே - நீயும் சிரிக்காத நாளே-வீணாக போன நாளே வீணாக ப் போன நாளே!- நீயும் சிரிக்கின்ற போதெல்லாமே உன்னாயுள் கூடுகின்ற நாளல்லவா?-உன் மலர்ந்த முகம

சிரிக்காத நாளே - நீயும்
சிரிக்காத நாளே-வீணாக போன நாளே
வீணாக ப் போன நாளே!- நீயும்
சிரிக்கின்ற போதெல்லாமே உன்னாயுள்
கூடுகின்ற நாளல்லவா?-உன்
மலர்ந்த முகமே முகமே
கஞ்சித் தண்ணீரையும் விருந்தாக்கிடுமே!

அறிவின் அறிகுறியே இடைவிடாத முகமலர்ச்சியே-வாழ்க்கையில் மகிழ்வுள்ள வழித்துணையாலே -வாழும் துன்ப வலியின் தூரமும் குறையுமடா!-உனது அழுகை ஓர் இரவு தானே நிற்

அறிவின் அறிகுறியே
இடைவிடாத முகமலர்ச்சியே-வாழ்க்கையில்
மகிழ்வுள்ள வழித்துணையாலே -வாழும் துன்ப
வலியின் தூரமும் குறையுமடா!-உனது
அழுகை ஓர் இரவு தானே நிற்குமடா!-விடிகாலையில்
இன்பம் வீடுதேடி வந்துவிடும்டா!

அன்பு என்பது என்ன என்னவோ? அது மனித சமூகந்தன்னை மனித நேயத்தோடு நேசித்தலாகும் அறிவு என்பது என்ன என்னவோ?- மனித சமூகந்தன்னை அவர் நலத்திற்கு மனித முன்னேற்ற

அன்பு என்பது என்ன என்னவோ?
அது மனித சமூகந்தன்னை
மனித நேயத்தோடு நேசித்தலாகும்
அறிவு என்பது என்ன என்னவோ?-
மனித சமூகந்தன்னை அவர் நலத்திற்கு
மனித முன்னேற்றந்தன்னை அறிந்து ஏற்றுதலே!

காலம் தாழ்த்திசெய்யும் உதவி உதவி ஆகாதே காலத்தில் செய்யாத உழவும் வீடு சேராதே காலத்தில் செய்யாத மணமும் திருமணம் ஆகாதே காலத்தை மதியாத மானுடம் வெற்றிகாண்ப

காலம் தாழ்த்திசெய்யும் உதவி உதவி ஆகாதே
காலத்தில் செய்யாத உழவும் வீடு சேராதே
காலத்தில் செய்யாத மணமும் திருமணம் ஆகாதே
காலத்தை மதியாத மானுடம் வெற்றிகாண்பதில்லையே!

ஆறு கடக்குற வரைக்கும் நீயும் நானும் அண்ண்ன் தம்பி ஆற்றைக் கடந்த பின்னே நீயாரோ நான்யாரோ? ரயில் சி நேகமாய் ஆகிவருகுதே மனிதவாழ்க்கையே-மனித நேயமே மறைந்த

ஆறு கடக்குற வரைக்கும் நீயும் நானும் அண்ண்ன் தம்பி
ஆற்றைக் கடந்த பின்னே நீயாரோ நான்யாரோ?
ரயில் சி நேகமாய் ஆகிவருகுதே மனிதவாழ்க்கையே-மனித
நேயமே மறைந்து வருகுதே மானுடத்தின் இந்தகால வாழ் நாளிலே!
தன்னைப் போல பிறரை எண்ணும் எண்ணம் குறைந்து வருகுதே
தன்னலமே மாறி பொது நலத்தின் கருத்துக்கள் உயரவேணுமே

நன்றிமறத்தலே அன்பின் கல்லறையாகும் நன்றி என்பது இதயத்தின் இசையாகும் நன்றி மறப்பது நல்லமனிதனுக்கு அழகில்லையே நன்றி நினையாத மானுடம் இருந்தும் இலாத ந

நன்றிமறத்தலே அன்பின் கல்லறையாகும்
நன்றி என்பது இதயத்தின் இசையாகும்
நன்றி மறப்பது நல்லமனிதனுக்கு அழகில்லையே
நன்றி நினையாத மானுடம் இருந்தும் இலாத நிலையே!

நம்பிக்கை இல்லாத மனதுள்ளே முயற்சியும் இருப்பதில்லையே நம்பிக்கை நாம் வாழும் நாளின் இறுதிவரையினில் நம்புங்கள் -வாழ் நாளின் முடிவினில் கடைசியாக இழக்க

நம்பிக்கை இல்லாத மனதுள்ளே முயற்சியும் இருப்பதில்லையே
நம்பிக்கை நாம் வாழும் நாளின் இறுதிவரையினில் நம்புங்கள் -வாழ்
நாளின் முடிவினில் கடைசியாக இழக்கும்பொருள் நம்பிக்கையாகட்டும்
நம்பிக்கைக் குதிரைகள் பாய்ந்து சென்று வெற்றிகனி பறிக்கட்டும்

அழகானது பிடித்தமாக இருக்கிறதா?-இல்லை பிடித்தாமானது அழகாகத் தெரிகிறதா? எளிமையாக இருந்தபோதும் அழகு அழகுதானே அலங்காரமாய் இருந்தாலும் அழகு அழகுதானே அழகை அ

அழகானது பிடித்தமாக இருக்கிறதா?-இல்லை
பிடித்தாமானது அழகாகத் தெரிகிறதா?
எளிமையாக இருந்தபோதும் அழகு அழகுதானே
அலங்காரமாய் இருந்தாலும் அழகு அழகுதானே
அழகை அழகாய் ஆராதிக்க முடியாத உலகத்தில்
அழகை அலங்கோலமாய் சித்தரிக்கும் அவலங்களே

அழகே உண்மையாகும் உண்மையே அழகாகும்-அலங்கார அழகே வாடும் மலராகும்-அந்த அழகே பார்ப்பவர் கண்ணில் இருக்கிறதே!- நல்ல அழகுக்கே பூட்டிய கதவுகளும் திறந்திடுமே!-

அழகே உண்மையாகும்
உண்மையே அழகாகும்-அலங்கார
அழகே வாடும் மலராகும்-அந்த
அழகே பார்ப்பவர் கண்ணில் இருக்கிறதே!- நல்ல
அழகுக்கே பூட்டிய கதவுகளும் திறந்திடுமே!-காதல்
அழகே மவுனாயிருந்து பேசிடுமே!-என்றும்
அழகுள்ள கடைக்காரியாலே
அழகாக பேசி புளித்த கள்ளையும் விற்கமுடியுமே!
அழகான பொருள்களாலே சின்ன சின்ன தொந்தரவுண்டு!-யாரும்
அழகாலே உயிர்வாழ முடியாதே!

Friday, August 21, 2009

உறுதியான உழைப்புக்குள்ளே இருக்குதடா உண்மையான வழிபாடு-அதன் உரிமையிலே தேசத்தின் இன்பமடா-சுதந்திர உண்மை மூச்சுகாற்றினில் தேச நலமடா!

உறுதியான உழைப்புக்குள்ளே இருக்குதடா
உண்மையான வழிபாடு-அதன்
உரிமையிலே தேசத்தின் இன்பமடா-சுதந்திர
உண்மை மூச்சுகாற்றினில் தேச நலமடா!

உன்னிடம் சிறந்ததை உலகிற்குக் கொடுத்துவிடு உலகத்தில் உயர்ந்தது உன்னைத் தேடிவந்துவிடும் உண்மை உழைப்பினை ஊருக்கு அர்ப்பணித்துவிடு உலகமே நலமாய் வாழ்ந்து இ

உன்னிடம் சிறந்ததை உலகிற்குக் கொடுத்துவிடு
உலகத்தில் உயர்ந்தது உன்னைத் தேடிவந்துவிடும்
உண்மை உழைப்பினை ஊருக்கு அர்ப்பணித்துவிடு
உலகமே நலமாய் வாழ்ந்து இன்பத்தில் பூத்துவிடும்!

செயலே சிந்தனையின் மலராகும் இன்பதுன்பம் சேர்ந்தது அதன் கனிகளாகும் - நல்ல செயல்கள் இன்பக்கனி பறிக்கும்--தீய செயல்கள் துன்பக்கனி எடுக்கும்

செயலே சிந்தனையின் மலராகும் இன்பதுன்பம்
சேர்ந்தது அதன் கனிகளாகும் - நல்ல
செயல்கள் இன்பக்கனி பறிக்கும்--தீய
செயல்கள் துன்பக்கனி எடுக்கும்

இரவே உன்னில் எல்லாக் கறைகளும் மன்னித்துவிடும் இரவினில் எல்லாத்தவறுகளும் மன்னிக்கப்படும் இரவே ஊடலின் முடிவிற்கு அச்சாரம் போடும் இரவே துனபத்தையும் இன்பம

இரவே உன்னில் எல்லாக் கறைகளும் மன்னித்துவிடும்
இரவினில் எல்லாத்தவறுகளும் மன்னிக்கப்படும்
இரவே ஊடலின் முடிவிற்கு அச்சாரம் போடும்
இரவே துனபத்தையும் இன்பமாய் ஆக்கிவிடும்
இரவே காதல் அன்பினில் சேர்ந்து உறவாடும்!

இவ்வுலகம் இனிதானது இவ்வானம் இனிதானது காற்றும் இனிதானது நீரும் இனிதானது நிலமும் இனிதானது-காதலியே நின்காதலும் இனிதானது!

இவ்வுலகம் இனிதானது
இவ்வானம் இனிதானது
காற்றும் இனிதானது
நீரும் இனிதானது
நிலமும் இனிதானது-காதலியே
நின்காதலும் இனிதானது!

ஒவ்வொரு இதயத்திற்கும் ஒருதனியான சுகமும் துக்கமும் உண்டடா! ஓவ்வொரு மனிதருக்கும் ஓராயிரம் கனவுகளும் ,இலட்சியமும் உண்டடா!

ஒவ்வொரு இதயத்திற்கும்
ஒருதனியான சுகமும் துக்கமும் உண்டடா!
ஓவ்வொரு மனிதருக்கும்
ஓராயிரம் கனவுகளும் ,இலட்சியமும் உண்டடா!

உன் உதடுகளை மூடிவிடு உன்னிதயத்தைத் திறந்துவிடு உள்ளத்தில் ஒன்றுவைத்து உதட்டினில் ஒன்றுவைக்காதே கள்ளமனமாய் துள்ளாதே கபட நாடகம் போடாதே கானல்பார்வைப் பார

உன் உதடுகளை மூடிவிடு
உன்னிதயத்தைத் திறந்துவிடு
உள்ளத்தில் ஒன்றுவைத்து
உதட்டினில் ஒன்றுவைக்காதே
கள்ளமனமாய் துள்ளாதே
கபட நாடகம் போடாதே
கானல்பார்வைப் பார்க்காதே-வெட்டிக்
கனவினில் நீயும் பறக்காதே-அன்பு
கருத்தினை நீயும் ஒதுக்காதே-உண்மைப்
பண்பினை நீயும் மறுக்காதே!

அன்பும் ஆற்றலும் சேர்ந்த போது அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில் அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே

அன்பும் ஆற்றலும் சேர்ந்த போது
அற்புதப் படைப்பு உருவாகிடுமே-அதில்
அறிவும் சேர்ந்து உன்னதமாகிடுமே-அதுவே
உலகின் சிறந்த கலைவிஞ்ஞானமாகிடுமே

ஓங்கி எழுந்து ஆர்ப்பரிக்கும் புயற்காற்றே-- நீ விரைவில் வீசி ஓய்ந்து போய்விடுவாய் அன்பாய் தவழும் இளந்தென்றல் காற்றே -- நீ இனிமை கலந்த இலக்கியம் ஆகிடுவா

ஓங்கி எழுந்து ஆர்ப்பரிக்கும் புயற்காற்றே-- நீ
விரைவில் வீசி ஓய்ந்து போய்விடுவாய்
அன்பாய் தவழும் இளந்தென்றல் காற்றே -- நீ
இனிமை கலந்த இலக்கியம் ஆகிடுவாய்!

எச்சரிக்கை எச்சரிக்கை பொறுமைசாலி ஆத்திரங்கொண்டால் பொறுக்கமுடியாது எச்சரிக்கை பொறுமை ஒரு நாள் சுனாமியாகும்-அதில் கயமையும் துரோகமும் அழிவாகும்

எச்சரிக்கை எச்சரிக்கை
பொறுமைசாலி ஆத்திரங்கொண்டால்
பொறுக்கமுடியாது எச்சரிக்கை
பொறுமை ஒரு நாள் சுனாமியாகும்-அதில்
கயமையும் துரோகமும் அழிவாகும்

ஆசையின் தாகம் முழுவதும் தீர்வதுண்டோ?-பேராசை ஒருபோதும் முடிவாகவே தணிவதுண்டோ? அன்பில்லாத ஆசையும் பண்பில்லாத ஆசையும் உலகினில் வென்றதாக சரித்திரம் இல்லைய

ஆசையின் தாகம் முழுவதும் தீர்வதுண்டோ?-பேராசை
ஒருபோதும் முடிவாகவே தணிவதுண்டோ?
அன்பில்லாத ஆசையும் பண்பில்லாத ஆசையும்
உலகினில் வென்றதாக சரித்திரம் இல்லையே!

ஒன்றின் மீது அன்பு கொள்ளாமலே-எதையும் ஒருவராலே புரிந்துகொள்ள முடியுமா? அன்புகொண்ட நெஞ்சம் அறியாமலே-எதிலும் ஒன்றுபட்டு இன்பமாக முடியுமா?

ஒன்றின் மீது அன்பு கொள்ளாமலே-எதையும்
ஒருவராலே புரிந்துகொள்ள முடியுமா?
அன்புகொண்ட நெஞ்சம் அறியாமலே-எதிலும்
ஒன்றுபட்டு இன்பமாக முடியுமா?

அன்பு பெறுவதல்ல கொடுப்பதாகும்-அது இதயத்தின் அழியாத தாகமே வளமான பண்பே அன்பே வாழ்வின் நிறைவாகும் அதுவே இன்ப நிறைவாகும் அறிவே அன்பின் தந்தையாகும் அதன் ஞா

அன்பு பெறுவதல்ல கொடுப்பதாகும்-அது
இதயத்தின் அழியாத தாகமே
வளமான பண்பே
அன்பே வாழ்வின் நிறைவாகும்
அதுவே இன்ப நிறைவாகும்
அறிவே அன்பின் தந்தையாகும்
அதன் ஞானமே அன்பே ஆகும்

இலைக்கு மூடத்தெரியாது அதனாலே மூடுகின்றோம் கல்லுக்கு நீச்சல் தெரியாததனால் அது மூழ்குகிறதோ? நாம் பெட்டுக்கு படுக்கசெல்கின்றோம் ஏனென்றால் பெட்டுக்கு நம்

இலைக்கு மூடத்தெரியாது அதனாலே மூடுகின்றோம்
கல்லுக்கு நீச்சல் தெரியாததனால் அது மூழ்குகிறதோ? நாம்
பெட்டுக்கு படுக்கசெல்கின்றோம் ஏனென்றால்
பெட்டுக்கு நம்மிடத்தில் வரத்தெரியாதததினாலே
காகம் கரையும் கரையும் என்பதினாலே முதல் நாள்
பெரிதான் பெரிதான காகம் மறு நாள் சிறிதானதோ?

இதழ்கள் சேர்ந்து மலராகும் மலர்கள் சேர்ந்து மாலையாகும் மாலைகள் சேர்ந்து புகழாகும் புகழெல்லாம் சேர்ந்து இமயமாகும்

இதழ்கள் சேர்ந்து மலராகும்
மலர்கள் சேர்ந்து மாலையாகும்
மாலைகள் சேர்ந்து புகழாகும்
புகழெல்லாம் சேர்ந்து இமயமாகும்

முடங்கிக் கிடந்தால் உனை சிலந்தியும் சிறைபிடிக்குமடா!-- நீ எழுந்து நடந்து வந்தால் உனக்கு எரிமலையும் வழிகொடுக்குமடா! படுத்துக்கிடந்தால் உனக்கு பாயும் பக

முடங்கிக் கிடந்தால் உனை சிலந்தியும் சிறைபிடிக்குமடா!-- நீ
எழுந்து நடந்து வந்தால் உனக்கு எரிமலையும் வழிகொடுக்குமடா!
படுத்துக்கிடந்தால் உனக்கு பாயும் பகையாகுமடா- நீயும்!
நடந்து பார்த்தால் இந்த நாடும் உனக்காகுமடா!
--

Thursday, August 20, 2009

உழைப்பினை உழைப்பினை கூட்டிவிடு பயணத்தை பயணத்தை குறைத்துவிடு நடையினை நடையினை வழக்கமாக்கு உபதேசத்தை உபதேசத்தை குறைத்துவிடு உரிமையை உரிமையை

கவலைகள் கவலைகள் குறைத்துவிடு
உழைப்பினை உழைப்பினை கூட்டிவிடு
பயணத்தை பயணத்தை குறைத்துவிடு
நடையினை நடையினை வழக்கமாக்கு
உபதேசத்தை உபதேசத்தை குறைத்துவிடு
உரிமையை உரிமையை உயர்த்திவிடு







உள்ளத்துக்குத் தேவை பணிவாகும் - நல் உயர்வுக்குத் தேவை துணிவாகும் உழைப்புக்குத் தேவை உரிமையாகும்-அந்த உரிமைக்குத் தேவை ஒற்றுமையாகும் ஒற்றுமைக்குத் தேவை

உள்ளத்துக்குத் தேவை பணிவாகும் - நல்
உயர்வுக்குத் தேவை துணிவாகும்
உழைப்புக்குத் தேவை உரிமையாகும்-அந்த
உரிமைக்குத் தேவை ஒற்றுமையாகும்
ஒற்றுமைக்குத் தேவை உறுதியாகும்-அந்த
உறுதிக்குத் தேவை போராட்டமாகும்

விலையென்பதில்லை இல்லை மரியாதைக்கு ஆனாலும் மரியாதையோ! எதையுமே விலைகொடுத்து வாங்கிவிடும்!!

விலையென்பதில்லை இல்லை மரியாதைக்கு
ஆனாலும் மரியாதையோ!
எதையுமே விலைகொடுத்து வாங்கிவிடும்!

கசப்பானதொரு வார்த்தை வெறுப்பாகும் கனிவாவனதொரு வார்த்தை விருப்பாகும் மகிழ்வானதொரு வார்த்தை சந்தோசமாகும் அன்பானதொரு வார்த்தை பேரின்பமாகும்!

கசப்பானதொரு வார்த்தை வெறுப்பாகும்
கனிவாவனதொரு வார்த்தை விருப்பாகும்
மகிழ்வானதொரு வார்த்தை சந்தோசமாகும்
அன்பானதொரு வார்த்தை பேரின்பமாகும்

ஒரு கடுமையான வார்த்தை ஒரு வாழ்க்கையைக் கூட முடித்துவிடும் தெரியுமா? ஒரு இனிமையான அன்புபார்வை ஒரு பிரபஞ்சத்தையே பேரினபம் ஆக்கிவிடும் தெரியுமா?!

ஒரு கடுமையான வார்த்தை
ஒரு வாழ்க்கையைக் கூட முடித்துவிடும் தெரியுமா?
ஒரு இனிமையான அன்புபார்வை
ஒரு பிரபஞ்சத்தையே பேரினபம் ஆக்கிவிடும் தெரியுமா?

உனதன்பானதொரு வார்த்தைகளே--எல்லாக் காயங்களையும் ஆற்றிவிடும் உனதுகுளுமை யானதொரு பார்வையிலே எந்த துன்பமும் ஓடிவிடும் உனதமுதான பேச்சினிலே பேரின்பம் கூ

உனதன்பானதொரு வார்த்தைகளே--எல்லாக்
காயங்களையும் ஆற்றிவிடும்
உனதுகுளுமை யானதொரு பார்வையிலே
எந்த துன்பமும் ஓடிவிடும்
உனதமுதான பேச்சினிலே
பேரின்பம் கூட்டிவிடும்!

நல்லதையே நல்லதையே கூட்டிக்கொள்ளடா தீயவற்றை தீயவற்றை கழித்துக்கொள்ளடா நல்லன்பை நல்லன்பை பெருக்கிக்கொள்ளடா! நல்வாழ்க்கைதனை நன்றாக வகுத்துக்கொள்ளடா

நல்லதையே நல்லதையே கூட்டிக்கொள்ளடா
தீயவற்றை தீயவற்றை கழித்துக்கொள்ளடா
நல்லன்பை நல்லன்பை பெருக்கிக்கொள்ளடா!
நல்வாழ்க்கைதனை நன்றாக வகுத்துக்கொள்ளடா!

உனது நல்ல செயல்களாலே எல்லோர்க்கும் நல்லவழி காட்டியாக இருந்துவிட மறந்துவிடாதே - நீ நடக்கும் நல்லோரின் பாதை தானடா நல்லுலகினை உருவாக்கும் தெரியுமா?

உனது நல்ல செயல்களாலே
எல்லோர்க்கும் நல்லவழி காட்டியாக
இருந்துவிட மறந்துவிடாதே - நீ நடக்கும்
நல்லோரின் பாதை தானடா
நல்லுலகினை உருவாக்கும் தெரியுமா?

உந்தன் குறை என்பதுவே கீழே விழுவது அல்ல கீழே விழுந்தும் எழாமல் இருப்பது தானடா! தோல்வியை படியாக்கு இல்லையென்றாலோ- அந்த தோல்விபயமே !உன்னை பள்ளத்தில் தள்

உந்தன் குறை என்பதுவே
கீழே விழுவது அல்ல
கீழே விழுந்தும் எழாமல் இருப்பது தானடா!
தோல்வியை படியாக்கு இல்லையென்றாலோ- அந்த
தோல்விபயமே !உன்னை பள்ளத்தில் தள்ளிவிடும்

மனமகிழ்ச்சியும், சாந்தமான போக்கும்,மவுனமும் மனதினை அடக்கி ஆளுதலும் உள்ளத்தூய்மை யாவும் - நம் மனத்தால் செய்கின்ற தவமல்லவா?

மனமகிழ்ச்சியும், சாந்தமான போக்கும்,மவுனமும்
மனதினை அடக்கி ஆளுதலும்
உள்ளத்தூய்மை யாவும் - நம்
மனத்தால் செய்கின்ற தவமல்லவா?

விரும்பியதை அடைந்துகொண்டு வரம்பின்றி அதிகமாக மகிழ்ந்திடவே கூடாது!-மனம் சிதைந்திடவே கூடாது மனதில் உறுதியுடன் மயக்கத்திற்கு இடந்தாராது நல்மெய்ப்பொருளை

விரும்பியதை அடைந்துகொண்டு வரம்பின்றி
அதிகமாக மகிழ்ந்திடவே கூடாது!-மனம்
சிதைந்திடவே கூடாது
மனதில் உறுதியுடன் மயக்கத்திற்கு இடந்தாராது
நல்மெய்ப்பொருளை உணர்ந்து நல்லயோக
நிலை காணும் பேரின்பம் அடைந்திடவே வேண்டும்!

வாக்குறுதி தன்னையே கொடுத்துவிட்டு காப்பாற்றாமல் இருப்பதைவிட கொடுக்காமல் இருப்பதே மேலடா

வாக்குறுதி தன்னையே
கொடுத்துவிட்டு காப்பாற்றாமல் இருப்பதைவிட
கொடுக்காமல் இருப்பதே மேலடா
வாக்குகளை காசுக்கு விற்பனைசெய்யும் சமூகத்தில்
வன்முறையும் ரவுடிஸமும் தலைதூக்கி ஆடுவதில்-ஒன்றும்
ஆச்சரியமில்லை!

முட்டாளின் புகழுரையை கேட்காதே அறிவாளியின் சிந்தனையை கேட்டிட மறக்காதே முகஸ்துதி செய்யாதே முகஸ்துதியை ஏற்காதே வெற்றுப் புகழுரைகள் உன்னைக் குழியினில் தள்

முட்டாளின் புகழுரையை கேட்காதே
அறிவாளியின் சிந்தனையை
கேட்டிட மறக்காதே
முகஸ்துதி செய்யாதே
முகஸ்துதியை ஏற்காதே
வெற்றுப் புகழுரைகள் உன்னைக்
குழியினில் தள்ளிவிடும் நீ பெருமை அடித்தால்
உன்புகழே அதல பாதாளத்தில் போயிவிடும்

Wednesday, August 19, 2009

புத்தகங்களே கனவுகளையும் திறக்கும் கதவுகளே நல்ல எண்ணங்களை உண்டாக்கும் திறவுகோல்களே நல்ல செயல்களை உருவாக்கும் செயல்களே !

புத்தகங்களே கனவுகளையும் திறக்கும் கதவுகளே
நல்ல எண்ணங்களை உண்டாக்கும் திறவுகோல்களே
நல்ல செயல்களை உருவாக்கும் செயல்களே

உலகினில் முடியாது என்று சொன்ன மனிதர்கள் முன்னேறியதில்லை உலகினில் முடியாது என்பது எதுவுமில்லை உண்மை உழைப்பினில் உயராத மானுடமில்லை !

உலகினில் முடியாது என்று சொன்ன மனிதர்கள்
முன்னேறியதில்லை
உலகினில் முடியாது என்பது எதுவுமில்லை
உண்மை உழைப்பினில் உயராத மானுடமில்லை

கல்லாத பேருக்கு கல்வி புகட்டுவோம் -அறிவு இல்லாத உலகத்தை இல்லாது ஆக்கிடுவோம் கல்வியும் அறிவும் சிறந்த நண்பர்களல்லவா ? கல்வி கற்றுத்தருவது ந

கல்லாத பேருக்கு கல்வி புகட்டுவோம் -அறிவு
இல்லாத உலகத்தை இல்லாது ஆக்கிடுவோம்
கல்வியும் அறிவும் சிறந்த நண்பர்களல்லவா ?
கல்வி கற்றுத்தருவது நல்ல நட்பல்லவா?

பண்பே இல்லாத நாட்டினிலே பகுத்தறிவு வாடும் சிறையினிலே சுதந்திரம் இல்லாத உலகினிலே -வாழ்வது மூச்சுள்ள சடலங்களே !

அன்பே இல்லாத மாளிகையே

அது மிருகங்கள்

வாழும் குகையாகும்
பண்பே இல்லாத நாட்டினிலே
பகுத்தறிவு வாடும் சிறையினிலே
சுதந்திரம் இல்லாத உலகினிலே -வாழ்வது
மூச்சுள்ள சடலங்களே

மறந்தா மறப்பதில்ல மருந்துதின்னா ஆறுவதில்ல உன்ன நான் மறப்பதில்ல என்னுசுரு போறவர-கண் அசந்து தூக்கமில்ல படுத்தா உறக்கமில்ல-விண் அண்ணாந்து பாத்ததில்ல உன்ன

மறந்தா மறப்பதில்ல மருந்துதின்னா ஆறுவதில்ல
உன்ன நான் மறப்பதில்ல என்னுசுரு போறவர-கண்
அசந்து தூக்கமில்ல படுத்தா உறக்கமில்ல-விண்
அண்ணாந்து பாத்ததில்ல உன்னமறந்து பாத்ததில்ல

கதிரறுத்து கிறுகிறுத்து கண்ணுரெண்டும் சோரவிட்டு -சின்னக் கட்டு கட்டசொல்லி சிமுட்டுறாளே மேமுழிய குதிரைவாலு கொண்டை போட்டு குதிச்சிவாறா பொண்ணுமக-அவ கோடா

கதிரறுத்து கிறுகிறுத்து கண்ணுரெண்டும் சோரவிட்டு -சின்னக்
கட்டு கட்டசொல்லி சிமுட்டுறாளே மேமுழிய
குதிரைவாலு கொண்டை போட்டு குதிச்சிவாறா பொண்ணுமக-அவ
கோடாலிக் கொண்டையில என்னைய சுருட்டிவச்சு போறாளே!

அச்சுவெல்ல பச்சரிசி அன்னக்கிளி தந்தரிசி-பருவ பச்ச புள்ள கையாலே பாவிமகன் தின்னரிசி எச்சிலேது பண்ணவில்ல எட்டி எட்டி போகவில்லே-அடே தின்னுருசி பாத்த

அச்சுவெல்ல பச்சரிசி
அன்னக்கிளி தந்தரிசி-பருவ
பச்ச புள்ள கையாலே
பாவிமகன் தின்னரிசி
எச்சிலேது பண்ணவில்ல
எட்டி எட்டி போகவில்லே-அடே
தின்னுருசி பாத்துபுட்டா
திரும்பத்தர விரும்பலியா?-காதல்
உனக்குள்ளே அருப்பலியா?

தந்தானே தந்தானே வெத்தலைய தந்தானே தந்தானே -வாய்சிவக்க மென்னேனே மென்னேனே-வாய் நிறைய மென்னேனே மென்னேனே பந்தானேன் பந்தானேன் காதலடிக்கும் பந்தானேன் பந்தானே

தந்தானே தந்தானே வெத்தலைய
தந்தானே தந்தானே -வாய்சிவக்க
மென்னேனே மென்னேனே-வாய் நிறைய
மென்னேனே மென்னேனே
பந்தானேன் பந்தானேன் காதலடிக்கும்
பந்தானேன் பந்தானேன்
பித்தானேன் பித்தானேன் மாமன எண்ணி
பித்தானேன் பித்தானேன்
சத்தானேன் சத்தானேன் அவன் துணையாலே
சத்தானேன் சத்தானேன்
அத்தானே அத்தானே என்னாசை
அத்தானே அத்தானே

பாசிப்பயறா பழகிப்புட்டு அட நீயும் என்னைய தட்டப்பயறா தட்டழிய விடலாமா? பாவிமகனே பார்வையாலெ கொன்னுட்டியே-உம் பழக்கத்த மாத்தவழி ஏதும் தெரியலியே=கண்ணுப் பக

பாசிப்பயறா பழகிப்புட்டு அட நீயும் என்னைய
தட்டப்பயறா தட்டழிய விடலாமா?
பாவிமகனே பார்வையாலெ கொன்னுட்டியே-உம்
பழக்கத்த மாத்தவழி ஏதும் தெரியலியே=கண்ணுப்
பக்கத்துல வந்துவந்து கலகமேதும் செய்யாதேடா?
கெனாவில நின்னு நின்னு சிறுக்கிமனச கெடுக்காதடா?
தாலிக்கட்ட திராணியில்லேனா
நீயேண்டா என்ன சுத்திசுத்திவந்து பூவாசம்புடிச்சடா?

இடையும் சிறுத்தவளே என்மனச கேட்டவளே என்மனசு கேட்டவளே-உன்விழிக் கடையும் கண்ணடிக்கும்-உன்பார்வை காலத்த வெல்லுமடி-அன்புக் காதலத்தான் சொல்லுமடி கோலத்த மாத்

இடையும் சிறுத்தவளே
என்மனச கேட்டவளே
என்மனசு கேட்டவளே-உன்விழிக்
கடையும் கண்ணடிக்கும்-உன்பார்வை
காலத்த வெல்லுமடி-அன்புக்
காதலத்தான் சொல்லுமடி
கோலத்த மாத்திபுட்டா -உன் நேச
கொந்தளிப்பும் மாறிடுமா?
எந்த அணை போட்டாலும்
இந்த ஆசை நதிய நிறுத்தமுடியுமா?

வாடாத மரிகொழுந்தே -ஒன்ன தேடாத நாளுமில்ல ஓடாத அருவி நீரே- உன்ன பாடாத பொழுதுமில்ல கூடாத செந்தேனே-உன்ன நாடாத காலமுமில்ல ஆடாத தென்னங்கீற்றே-உன்ன ஆட்டாத

வாடாத மரிகொழுந்தே -ஒன்ன
தேடாத நாளுமில்ல
ஓடாத அருவி நீரே- உன்ன
பாடாத பொழுதுமில்ல
கூடாத செந்தேனே-உன்ன
நாடாத காலமுமில்ல
ஆடாத தென்னங்கீற்றே-உன்ன
ஆட்டாத தென்றலுமில்ல

கன்னிமக பருவசிட்டு கலங்கிறாம கட்டுக்குலையாம கட்டக்கட்டு மெல்லக்கட்டு!

நெல்லு கதிரறுத்து
நேரம் பாத்து கட்டுக் கட்டி-அட
தூக்கிவிடு அந்தபுள்ள
தொலைதூரம் போறகட்டு
கல்லுமுள்ளு பாதையில
கரடுமுரடு பாறையில
காததூரம் போறகட்டு
கச்சிதமா நீயும் கட்டு
கன்னிமக பருவசிட்டு
கலங்கிறாம கட்டுக்குலையாம
கட்டக்கட்டு மெல்லக்கட்டு

வாதா மரத்தடியில வார மச்சான் வந்திடவே காணேனே காத்திருக்கும் பூமனச காளைமகன் நினைக்கலையோ?

நாத்தரிச்சு நானறியேன்
நடவு நட்டு நானறியேன்
சேத்துக்குள்ள இறங்கிக்கிட்டு
செல்லமுகம் வாடுறனே
வாக்கப்பட்டு போன இடம்
வளமான மண்ணுமில்ல
சோத்துக்கே சிங்கியடிக்கும்
சோதாப்பய ஊரடியோ?
வாதா மரத்தடியில
வார மச்சான் வந்திடவே காணேனே
காத்திருக்கும் பூமனச
காளைமகன் நினைக்கலையோ?

காதல கிள்ளி கிள்ளி தாராம எட்ட எட்ட போறியே - நீயுமென்னை ஏமாத்த பாக்குறியே!

வட்டவட்ட சிவந்திப்பூவே
வாடாத மரிக்கொழுந்தே-அடித்
தேடாத பிச்சிப்பூவே-என்
தில்லானா தெம்மாங்கே
கிட்ட கிட்ட வாராம -காதல
கிள்ளி கிள்ளி தாராம
எட்ட எட்ட போறியே - நீயுமென்னை
ஏமாத்த பாக்குறியே
குட்ட குட்ட சிரிக்கிறயே
குங்குமப்பூ சிவக்கிறியே
விட்ட தொட்ட குறையாக -இன்ப
வேதனைய கூட்டுறயே

உண்மையிலும் ஆக்கம் தருவதே-உலகினில் வேறொன்று உளதோ சொல் என் தோழனே?-ஒற்றுமை உரிமையிலும் ஊக்கம் தருவதே-இவ்வுலகினில் வேறொன்று உளதோ சொல் என் தோழனே?

உண்மையிலும் ஆக்கம் தருவதே-உலகினில்
வேறொன்று உளதோ சொல் என் தோழனே?-ஒற்றுமை
உரிமையிலும் ஊக்கம் தருவதே-இவ்வுலகினில்
வேறொன்று உளதோ சொல் என் தோழனே?

உலகியலாவது ஒப்புரவாம் உறவுகளும் நட்புகளுமே நமது அன்பு சுற்றங்களாம் ஒன்றுபட்ட உள்ளங்கள் உயர்வாக்கும் வாழ்வினையே!!

உலகியலாவது ஒப்புரவாம்
உறவுகளும் நட்புகளுமே நமது அன்பு சுற்றங்களாம்
ஒன்றுபட்ட உள்ளங்கள் உயர்வாக்கும் வாழ்வினையே!

ஒருவரோடு ஒருவர் கலந்துபேசி நகைத்து மகிழ்ந்து ஒருமித்து வாழ்ந்து இணைந்து அறியாத மனிதருக்கு இந்த உலகத்திலே பகலும் இருள் நிறைந்த இரவே ஆகும்!

ஒருவரோடு ஒருவர் கலந்துபேசி
நகைத்து மகிழ்ந்து
ஒருமித்து வாழ்ந்து இணைந்து
அறியாத மனிதருக்கு
இந்த உலகத்திலே பகலும்
இருள் நிறைந்த இரவே ஆகும்!

உறங்குவோர்க்கும் செத்தோர்க்கும் வேறுபாடு மூச்சொன்று தானே மூச்சிருக்கும் வரையினிலே பேச்சிருக்கும் உயிரிருக்கும் உயிரிருக்கும் வரையினிலே உண்மை பண்புகொள

உறங்குவோர்க்கும் செத்தோர்க்கும்
வேறுபாடு மூச்சொன்று தானே
மூச்சிருக்கும் வரையினிலே
பேச்சிருக்கும் உயிரிருக்கும்
உயிரிருக்கும் வரையினிலே
உண்மை பண்புகொள்ளடா!
உயரிய இலட்சியம் காணடா!
உரிமைகொண்டு வாழடா!

நாற்காலி உனக்கு பெருமை தருவது அல்ல--உனது நல்லசெயல்கள் தானடா உன்பேரைச் சொல்லும்-பதவி நாற்காலி வந்து போகும் உன் நல்லகுணத்தை -இந்த நாடும்,உலகும் நாள்

நாற்காலி உனக்கு பெருமை தருவது அல்ல--உனது
நல்லசெயல்கள் தானடா உன்பேரைச் சொல்லும்-பதவி
நாற்காலி வந்து போகும் உன் நல்லகுணத்தை -இந்த
நாடும்,உலகும் நாள்தோறும் போற்றி புகழுமடா!

பெரிய பதவியில் சின்னபுத்தி காரங்களும் சின்ன இடத்தில் பெரியபுத்தி ,மிகப்பெரிய பண்புடையோரும் இருக்கின்ற தேசமடா! பதவியாலே பெருமைகொண்ட மனிதரும் உண்டு-உலக

பெரிய பதவியில் சின்னபுத்தி காரங்களும்
சின்ன இடத்தில் பெரியபுத்தி ,மிகப்பெரிய
பண்புடையோரும் இருக்கின்ற தேசமடா!
பதவியாலே பெருமைகொண்ட மனிதரும் உண்டு-உலகினிலே
பதவிக்குப் பெருமை சேர்த்த நல்ல மனிதரும் உண்டு!

சான்றாண்மை ஆகும் சான்றாண்மை ஆகும் பிறரின் குற்றத்தையே சொல்லாத நல்ல குணமே-- தான் தோன்றித் தனமாகும் தான் தோன்றித் தனமாகும் பிறர் குறைகளைச் சொல்லித்திரி

சான்றாண்மை ஆகும் சான்றாண்மை ஆகும்
பிறரின் குற்றத்தையே சொல்லாத நல்ல குணமே--
தான் தோன்றித் தனமாகும் தான் தோன்றித் தனமாகும்
பிறர் குறைகளைச் சொல்லித்திரிவது என்ற கெட்டகுணமே!

பெருமைக்கு அடையாளம் பணிவாகும் சிறுமைக்கு அடையாளம் கர்வமும் தற்புகழ்ச்சியாகும் நல்லோர்க்கு அடையாளம் நலம்பல செய்வதாகும் கெட்டோர்க்கு அடையாளம் உள்ளதையு

பெருமைக்கு அடையாளம் பணிவாகும்
சிறுமைக்கு அடையாளம்
கர்வமும் தற்புகழ்ச்சியாகும்
நல்லோர்க்கு அடையாளம்
நலம்பல செய்வதாகும்
கெட்டோர்க்கு அடையாளம்
உள்ளதையும் கெடுப்பதாகும்!

சிறுமைகளை மறைத்து பெருமைகூறும் பெருமையே பெருமைகளை மறைத்து குற்றங்களைக் கூறும் சிறுமையே கெட்டதை மறைத்து நல்லதைக்கூறுவார் நல்லோரே நல்லதை மறைத்து கெட்டத

சிறுமைகளை மறைத்து பெருமைகூறும் பெருமையே
பெருமைகளை மறைத்து குற்றங்களைக் கூறும் சிறுமையே
கெட்டதை மறைத்து நல்லதைக்கூறுவார் நல்லோரே
நல்லதை மறைத்து கெட்டதைச் சொல்லுவார் கெட்டோரே!*

எல்லா உயிர்களும் கூட பிறப்பாலே ஒன்றுதானடா! இயல்பினிலே உரிமையிலே ஒரேதன்மை தானடா!-ஆனாலும் இந்தவெட்கங் கெட்ட மனிதன் மட்டும் ஏனடா?-மனிதகுலத்தை கூறுபோட்டு

எல்லா உயிர்களும் கூட பிறப்பாலே ஒன்றுதானடா!
இயல்பினிலே உரிமையிலே ஒரேதன்மை தானடா!-ஆனாலும்
இந்தவெட்கங் கெட்ட மனிதன் மட்டும் ஏனடா?-மனிதகுலத்தை
கூறுபோட்டு ஏற்றதாழ்வு பேதம்பாராட்டி சீர்கெட்டு போனானடா?

தீமைக்கும் நன்மை என்ற நியதியே-மனித உலகத்தை வாழ்விக்கும் வழிகாட்டுகின்ற தத்துவமடா தீமைசெய்யும் மனதுள்ள கயவர்களும் திருந்த நல்ல பாதைசொல்லு வார் நல்லோர்க

தீமைக்கும் நன்மை என்ற நியதியே-மனித உலகத்தை
வாழ்விக்கும் வழிகாட்டுகின்ற தத்துவமடா
தீமைசெய்யும் மனதுள்ள கயவர்களும்
திருந்த நல்ல பாதைசொல்லு வார் நல்லோர்களே!

Tuesday, August 18, 2009

கொத்தமல்லித் தோட்டத்திலே - நான் குளிக்கப்போய் நிக்கையிலே-என் அத்தமகன் முத்தழகு தூக்கிப்போட்டான் பிச்சிச்சரம் எந்தப்புரம் போனாலும்-என் அத்தமகன் பாடுறபா

கொத்தமல்லித் தோட்டத்திலே - நான்
குளிக்கப்போய் நிக்கையிலே-என்
அத்தமகன் முத்தழகு
தூக்கிப்போட்டான் பிச்சிச்சரம்
எந்தப்புரம் போனாலும்-என்
அத்தமகன் பாடுறபாட்டு
ஆலோலம் போடுதடி-மனசு
கோலாகலம் ஆகுதடி

ஆத்துக்கு அந்தப்புறம் என் அத்தமகன் பாடுறபாட்டு இக்கரையில் என்னைய வாட்டி சக்கரையாய் இனிப்பதென்ன?-காதல் காத்துக்கு வேலிபோட்டவங்க எல்லாமே- காலமெல்லாம் த

ஆத்துக்கு அந்தப்புறம் என்
அத்தமகன் பாடுறபாட்டு
இக்கரையில் என்னைய வாட்டி
சக்கரையாய் இனிப்பதென்ன?-காதல்
காத்துக்கு வேலிபோட்டவங்க எல்லாமே-
காலமெல்லாம் தோத்துத்தானே போனாங்க-அன்புக்கு
அணைய கட்டவந்தவங்க
ஆளாளுக்கு ஓடிபோனாங்க

இந்த சந்தன மரத்த மச்சான் நீங்க சந்திக்க வேணுமுனா பொழுதுசாய பூஞ்சோலைக்கு வந்திடுங்க நீங்க-இந்த பொண்ணுமகள பாத்திடுங்க கண்ணு நிறைய சேத்துடுங்க நெஞ்சு ந

இந்த
சந்தன மரத்த மச்சான் நீங்க
சந்திக்க வேணுமுனா பொழுதுசாய
பூஞ்சோலைக்கு வந்திடுங்க நீங்க-இந்த
பொண்ணுமகள பாத்திடுங்க
கண்ணு நிறைய சேத்துடுங்க
நெஞ்சு நிறைய பூத்துடுங்க
காலமெல்லாம் துணையிருஙக

காதலும் காற்றும் ஒன்று தானடா இரண்டும் மண்ணில் இல்லாத இடமில்லை இல்லாத காலமில்லை-அவை இல்லாவிட்டால் காலமிடம் ஏதுமில்லை காலத்தையும் கடந்து நிற்கும் காதலன்

காதலும் காற்றும் ஒன்று தானடா
இரண்டும் மண்ணில் இல்லாத இடமில்லை
இல்லாத காலமில்லை-அவை
இல்லாவிட்டால் காலமிடம் ஏதுமில்லை
காலத்தையும் கடந்து நிற்கும்
காதலன்பு நிலைத்து நிற்கும்
காற்றில்லை என்றாலும் உயிரில்லை
காதலில்லை என்றாலும் உயிரில்லை

சாமத்துல பூத்தபூவு இந்த சாமந்திப்பூவு நானிருக்க-இந்த அமுத தேனிருக்க-காஞ்ச சவுத்துப்போன பூவுக்குத்தான் -மச்சான் நீயும் சந்து சந்தா சுத்தலாமா? மானிருக்

சாமத்துல பூத்தபூவு இந்த சாமந்திப்பூவு
நானிருக்க-இந்த அமுத தேனிருக்க-காஞ்ச
சவுத்துப்போன பூவுக்குத்தான் -மச்சான் நீயும்
சந்து சந்தா சுத்தலாமா?
மானிருக்க மயிலிருக்க -அந்த
கோட்டானத்தான் தேடி நீயும் போகலாமா?
உள்ளங்கையில் நானிருக்க
ஊரைச்சுத்தி நாயாக திரியலாமா?

இன்பங்கள் யாவும் பெருகிடுமே-இங்கு யாவரும் ஒன்றெனக் கொண்டாலே-இன,சாதி,மொழி மதங்கள் பேதங்கள் காணாத தேசமே எல்லோரும் ஓர் இனம் என்றெண்ண வேண்டுமே!

இன்பங்கள் யாவும் பெருகிடுமே-இங்கு
யாவரும் ஒன்றெனக் கொண்டாலே-இன,சாதி,மொழி
மதங்கள் பேதங்கள் காணாத தேசமே
எல்லோரும் ஓர் இனம் என்றெண்ண வேண்டுமே

உணவோ? உறக்கமோ? --இதில் எது மிகுந்தாலும் எது குறைந்தாலும் வாதம் வரும் ,பித்தம் வரும் ,கபமும் வரும்

உணவோ? உறக்கமோ? --இதில்
எது மிகுந்தாலும் எது குறைந்தாலும்
வாதம் வரும் ,பித்தம் வரும் ,கபமும் வரும்

அளவறிந்து உண்ணவேணும் அறுசுவையோடு உண்ணவேணும்- எல்லோரின் பசியையும் போக்கவேணும் இல்லாமை இல்லாமல் நீக்கவேணும்!

அளவறிந்து உண்ணவேணும்
அறுசுவையோடு உண்ணவேணும்-
எல்லோரின் பசியையும் போக்கவேணும்
இல்லாமை இல்லாமல் நீக்கவேணும்!

எத்தனையோ பொங்கல் வந்தது போனது எத்த்னையோ தீபாவளி வந்தது போனது--ஆனாலும் ஏழைகள் இன்னும் கண்ணீரிலே ஏழ்மை வாட்டும் வென்னீரிலே இல்லாமை கொட்டும் பனியிலே வறும

எத்தனையோ பொங்கல் வந்தது போனது
எத்த்னையோ தீபாவளி வந்தது போனது--ஆனாலும்
ஏழைகள் இன்னும் கண்ணீரிலே
ஏழ்மை வாட்டும் வென்னீரிலே
இல்லாமை கொட்டும் பனியிலே
வறுமை எரிக்கும் நெருப்பினிலே

காலங்கள் நமக்கு காத்திருக்குமோ? காலச்சுவடுகள் நம் கூடவந்திடுமோ? கனவுலகம் நமக்கு வாழ்வு தந்திடுமோ? கடமையை மறந்தால் வாழ்வு செழிக்குமோ? காதலும் வீரமும்

காலங்கள் நமக்கு காத்திருக்குமோ?
காலச்சுவடுகள் நம் கூடவந்திடுமோ?
கனவுலகம் நமக்கு வாழ்வு தந்திடுமோ?
கடமையை மறந்தால் வாழ்வு செழிக்குமோ?
காதலும் வீரமும் பிரிந்தால் பண்பாகுமோ?
உரிமையை மறந்து வாழலாமோ?

த” என்பது தெய்வீகமோ? ம” என்பது மூலமந்திரமோ? ழ்” என்பது நாதத்தின் குறியீடோ?-இல்லை த” என்பது அமுத ஆண் எழுத்தாமோ? மி” என்பது ஆணும் பெண்ணும் கலந்த எழுத்தா

த” என்பது தெய்வீகமோ?
ம” என்பது மூலமந்திரமோ?
ழ்” என்பது நாதத்தின் குறியீடோ?-இல்லை
த” என்பது அமுத ஆண் எழுத்தாமோ?
மி” என்பது ஆணும் பெண்ணும் கலந்த எழுத்தாமோ?
ழ்” என்பது அமுத பெண் எழுத்தாமோ?

ஆணும் பெண்ணும் சரிசமமாய் சேர்ந்து இருப்பது தான் தமிழாமோ?

சுதந்திரமாம் சுதந்திரம் உயிர்மூச்சுக் கொடுத்த சுதந்திரம் சுதந்திரமாம் சுதந்திரம் உரிமை தந்த சுதந்திரம் சுதந்திரமாம் சுதந்திரம் அடிமைப் பட்ட வாழ்க்கையை

சுதந்திரமாம் சுதந்திரம் உயிர்மூச்சுக் கொடுத்த சுதந்திரம்
சுதந்திரமாம் சுதந்திரம் உரிமை தந்த சுதந்திரம்
சுதந்திரமாம் சுதந்திரம் அடிமைப் பட்ட வாழ்க்கையை
அழிக்கவந்த சுதந்திரம் ஆக்கம் தந்தசுதந்திரம்
சுதந்திரமாம் சுதந்திரம் அத்யாவசிய தேவைகளை
பூர்த்தி செய்யும் சுதந்திரம் விலைவாசி இல்லாத
சுதந்திரமாம் சுதந்திரம் எல்லோருக்கும் எல்லாமும்
கிடைக்கின்ற சுதந்திரம் வறுமையில்லாத நாட்டையே
உருவாக்கும் சுதந்திரம் தனியுடைமை அழிக்கவந்த
சுதந்திரமாம் சுதந்திரம் இல்லாரே இல்லாத
பொன்னான சுதந்திரம் பொதுவுடைமை உலகத்தையே
உருவாக்கும் சுதந்திரம் சுதந்திரமாம் சுதந்திரம்

பாடம் கேட்டு பள்ளியில் நாம் தலையை தலையை ஆட்டுகிறோம் பார்க்கபோனால் நாமெல்லாமே பூம் பூம் மாடுதான் புரியாத பாடம் தான் கேட்பதில்லை ஐய்யமிருந்தும் கேள்விகள

பாடம் கேட்டு பள்ளியில் நாம்
தலையை தலையை ஆட்டுகிறோம்
பார்க்கபோனால் நாமெல்லாமே
பூம் பூம் மாடுதான்
புரியாத பாடம் தான்
கேட்பதில்லை ஐய்யமிருந்தும் கேள்விகளே
ஆமாம் சாமி தான் போடுகிறோம்
பார்க்கபோனால் நாமெல்லாமே
பூம் பூம் மாடுதான்

பாடம் படிக்காத ஒருபையனே பள்ளிக்குச் செல்லாத அந்த பையனே-படிக்கிற வயதிலே படிக்காமலே மூடன் ஆனான் முன்னாலே-அறிவாலே பாடம்படிக்காத தாலே மூட்டை சுமந்தானே பின

பாடம் படிக்காத ஒருபையனே
பள்ளிக்குச் செல்லாத அந்த பையனே-படிக்கிற வயதிலே
படிக்காமலே மூடன் ஆனான் முன்னாலே-அறிவாலே
பாடம்படிக்காத தாலே
மூட்டை சுமந்தானே பின்னாலே

மழையே மழையே வாருங்கடி மக்களின் உள்ளத்தில் குளிருங்கடி பூமியின் பஞ்சத்தை போக்குங்கடி மழையெ மழையே கொட்டுங்கடி மலர்கள் மலர்ந்திட தூறுங்கடி மழையே மழையே

மழையே மழையே வாருங்கடி
மக்களின் உள்ளத்தில் குளிருங்கடி
பூமியின் பஞ்சத்தை போக்குங்கடி
மழையெ மழையே கொட்டுங்கடி
மலர்கள் மலர்ந்திட தூறுங்கடி
மழையே மழையே பெய்யுங்கடி
தண்ணீர் பஞ்சம் நீக்குங்கடி
மழையே மழையே வாருங்கடி
மண்ணைப் பொன்னாக்க வாருங்கடி

காக்கையாரே வந்தாராம் கா காவென்றாராம் காலைவரவைக் கூறினாராம் கா கா வென்றாராம் நாவல் மரத்தில் ஏறினாராம் கா கா வென்றாராம் நல்ல பழத்தைத் தந்தாராம் கா கா வெ

காக்கையாரே வந்தாராம் கா காவென்றாராம்
காலைவரவைக் கூறினாராம் கா கா வென்றாராம்
நாவல் மரத்தில் ஏறினாராம் கா கா வென்றாராம்
நல்ல பழத்தைத் தந்தாராம் கா கா வென்றாராம்
வேப்பமரத்தில் ஏறினாராம் கா கா வென்றாராம்
விருந்துவருகை கூறினாராம் கா கா வென்றாராம்
கூட்டுக்குரலில் கூவினாராம் கா கா வென்றாராம்
கூடிவாழ்ந்து காட்டினாராம் கா கா வென்றாராம்
கூடிவாழச் சொன்னராம் கா கா வென்றாராம்

ஊருக்கு நீயே வணக்கம் செய்யடா உனக்கு ஊரே வணக்கம் செய்யுமடா- நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வடா - நாமே துண்டுபட்டால் வாழ்வே தாழ்வடா உரிமைக்கு குரலாகி ஒலித்

ஊருக்கு நீயே வணக்கம் செய்யடா
உனக்கு ஊரே வணக்கம் செய்யுமடா- நாம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வடா - நாமே
துண்டுபட்டால் வாழ்வே தாழ்வடா
உரிமைக்கு குரலாகி ஒலித்திடடா
உண்மை சுதந்திரம் உன் உயிர்மூச்சடா
ஊர்வாழ உன் உழைப்பை உயர்த்தடா

குட்டை குட்டை ஆனவையே எட்டு குட்டிப் பூனைகளே அட்டை அட்டைப் பெட்டிக்குள்ளே எட்டி எட்டிப் பாக்குதடி முட்டி முட்டி பாத்துபுட்டு கிட்ட கிட்ட பொட்டிக்குள்ள!

குட்டை குட்டை ஆனவையே
எட்டு குட்டிப் பூனைகளே
அட்டை அட்டைப் பெட்டிக்குள்ளே
எட்டி எட்டிப் பாக்குதடி
முட்டி முட்டி பாத்துபுட்டு
கிட்ட கிட்ட பொட்டிக்குள்ள
குட்டை குட்டை சுண்டெலியே
வட்டமிட்டு சட்டெனவே
எட்டி வெளியில் வந்ததுவே

விரும்பு விரும்பு நீ பள்ளிசெல்ல விரும்பு--அடி கரும்பு கரும்பு பாடம் எல்லாம் கரும்பு --அட திரும்பு திரும்பு நீயும் படித்துவிட்டு திரும்பு-வெட்டிக் குற

விரும்பு விரும்பு நீ பள்ளிசெல்ல விரும்பு--அடி
கரும்பு கரும்பு பாடம் எல்லாம் கரும்பு --அட
திரும்பு திரும்பு நீயும் படித்துவிட்டு திரும்பு-வெட்டிக்
குறும்பு குறும்பு நீயும் பண்ணவேண்டாம் குறும்பு
அரும்பு அரும்பு இ ந்த நாட்டின் அரும்பு- நீயும்
எழும்பு எழும்பு இமயமாய் நீயும் எழும்பு
அழும்பு அழும்பு செய்யாதே நீயும்வீண் அழும்பு- நீயும்
விளம்பு விளம்பு கற்றததையே அடுத்தவருக்கு விளம்பு

பூ பூவே புளியம்பூ பூ பூவே பொன்னாங்கன்னிக்குத் தாழம்பூவே தாழம்பூவே அடிவிருப்பந்தானா? கடி கடிக்க புளிக்கும் தானா? கா கா கருப்பங்கா கஞ்சி குடிச்சா நெல்ல

பூ பூவே புளியம்பூ பூ பூவேபூ பூவே புளியம்பூ பூ பூவே
பொன்னாங்கன்னிக்குத் தாழம்பூவே தாழம்பூவே
அடிவிருப்பந்தானா? கடி கடிக்க புளிக்கும் தானா?
கா கா கருப்பங்கா கடிச்சுப்பாத்தா கசப்புத்தானா?
கஞ்சி குடிச்சா நெல்லிக்கா தண்ணிகுடிச்சா இனிப்புத் தானா?
கைய புடிச்சது யாரக்கா?-உன்
கருத்துல நின்னது கூறக்கா?

ஒன்றே நினைத்திருந்தேன் காதல் நெஞ்சே ஒன்றே துணிந்திருந்தேன் அன்பு கொண்டே ஒன்றே உள்ளத்தின் உள் உணர்ந்தேன் நேச உறவே ஒன்றே ஒற்றுமை ஏற்றுக் கொண்டேன் பாச நி

ஒன்றே நினைத்திருந்தேன் காதல் நெஞ்சே
ஒன்றே துணிந்திருந்தேன் அன்பு கொண்டே
ஒன்றே உள்ளத்தின் உள் உணர்ந்தேன் நேச உறவே
ஒன்றே ஒற்றுமை ஏற்றுக் கொண்டேன் பாச நிலவே!

ஊரை அறிந்தேனே ஊரினை உணர்ந்தேனே ஊரால் வாழ்ந்தேனே ஊருக்கு உழைத்தேனே ஊரினுக்கு தோள்கொடுத்தேனே ஊருக்கே போராடினேனே ஊரே உயர்ந்திடவே ஊருக்குள் நடந்தேனே!

ஊரை அறிந்தேனே
ஊரினை உணர்ந்தேனே
ஊரால் வாழ்ந்தேனே
ஊருக்கு உழைத்தேனே
ஊரினுக்கு தோள்கொடுத்தேனே
ஊருக்கே போராடினேனே
ஊரே உயர்ந்திடவே
ஊருக்குள் நடந்தேனே

இந்த காதல்பார்வை தந்தது அவளல்ல இந்த நெஞ்சினில் நின்று இனித்தது அவளல்ல அவள் நினைத்தது உன்னையல்ல அவள் அழைத்தது உன்னையல்ல

இந்த காதல்பார்வை தந்தது அவளல்ல
இந்த நெஞ்சினில் நின்று இனித்தது அவளல்ல
அவள் நினைத்தது உன்னையல்ல
அவள் அழைத்தது உன்னையல்ல
அவள் உள்ளத்தில் நின்றது நீயல்ல
நீ மட்டும் நினைத்து நாளினை கானலாக்கி
நெஞ்சினில் கனலாய் நீறுபூத்து போகாதே!

Monday, August 17, 2009

உண்மைக் காதலென்றும் உதிர்ந்துவிடப் போவதில்லை இல்லை!!

காதலியை பாவித்த விதத்தில்
காதல் மனைவியை பாவிக்க மறுப்பதாலே-அந்த
முட்டாள்தனமான முடிவினாலே ,பிரிவினாலே
இன்று அவர்களின் காதலில் லயிப்பு என்பதில்லை
கடமை உணர்வுதான் ;இருக்கிறது-இதை
கவனிக்காமல் ;விட்டுவிட்டாலோ உண்மைக்
காதல் காணமல் போய்விடுமே
உண்மைக்
காதலுக்கு கால எல்லைகள் இல்லை இல்லை
உருவமாற்றத்திலோ? அது
உறவாகி விட்டதாலோ!-அல்லது
உறவின்றி போனதாலோ!-உண்மைக்
காதலென்றும் உதிர்ந்துவிடப் போவதில்லை இல்லை!

காதலின் குற்றமல்ல காத்ல் தலைவனும் ,தலைவியும் பிரிந்து வாழ்வதுவே-இரண்டு மாறுபட்ட உண்மை நிலையை மனதுவிட்டு சந்திக்க தயாராக இல்லாத காதலரின் குறைபாடுதானே!

காதலின் குற்றமல்ல காத்ல் தலைவனும் ,தலைவியும்
பிரிந்து வாழ்வதுவே-இரண்டு
மாறுபட்ட உண்மை நிலையை
மனதுவிட்டு சந்திக்க தயாராக
இல்லாத காதலரின் குறைபாடுதானே!
உலகமே ;அழிந்தாலும் --எங்கள்
காதல் அழியாது
என்று சொன்னவர்கள் கூட
திருமணத்திற்கு பிறகு-ஏன்
பிரியமே இல்லாமலே வாழ்கிறார்கள்?-அது
காதலின் குற்றமல்ல காத்ல் தலைவனும் ,தலைவியும்
பிரிந்து வாழ்வதுவே-இரண்டு
மாறுபட்ட உண்மை நிலையை
மனதுவிட்டு சந்திக்க தயாராக
இல்லாத காதலரின் குறைபாடுதானே!
புரிந்தும் புரியாமலும்
சேர்ந்தும் சேராமலும்
பிரிந்தும் பிரியாமலும் வீழ்கிறார்கள்

ல்லோரும் வைத்தியராம் -அந்த டாக்டர் தானுங்க தனக்கு நோய்வந்து தாக்காதவரையினிலே அறிவுரைகள் ஆயிரமே சொல்லலாமே-தனக்குன்னு கஷ்டங்கள் நமக்கு வாராத வரையிலே

எல்லோரும் வைத்தியராம் -அந்த
டாக்டர் தானுங்க
தனக்கு நோய்வந்து தாக்காதவரையினிலே
அறிவுரைகள் ஆயிரமே சொல்லலாமே-தனக்குன்னு
கஷ்டங்கள் நமக்கு வாராத வரையிலே

திருட்டு திருட்டு ஒருவரின் அறிவைத் திருடினாலே திருட்டே தழுவல் தழுவல் இருவரின் எழுத்தை திருடினாலே இலக்கிய தழுவலே பலரின் அறிவைத் திருடினாலே ஆய்வு செய்யு

திருட்டு திருட்டு ஒருவரின் அறிவைத்
திருடினாலே திருட்டே
தழுவல் தழுவல் இருவரின் எழுத்தை திருடினாலே
இலக்கிய தழுவலே
பலரின் அறிவைத் திருடினாலே
ஆய்வு செய்யும் ஆராய்ச்சி

விழும் இடமெல்லாம் விதைப்போல விழுவதற்கும் எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதற்கும் நாங்கள் சே”யிடமிருந்து கற்றுக்கொண்டோம் தன் நாடு பெற்ற இன்பம் எல்லா நாடுக

விழும் இடமெல்லாம்
விதைப்போல விழுவதற்கும்
எழும் இடமெல்லாம்
மலைபோல எழுவதற்கும்
நாங்கள் சே”யிடமிருந்து
கற்றுக்கொண்டோம்
தன் நாடு பெற்ற இன்பம்
எல்லா நாடுகளும் பெறவேண்டும்
என்று எண்ணிச் செயல்பட்ட மாவீரன் சே” யின்
அடிச்சுவட்டில் எங்கள் உலக இளைஞர்கள்
எழுச்சிபெற மார்க்சீயத்தை முன்னெடுத்து செல்வோம்

கோழைகளே கோழைகளே சுட்டீர்கள் நீங்கள் சுட்டது எங்கள் சே” யை அல்ல- மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த - ஒரு சாதாரண மனிதனைத்தான்” எங்கள் முன்னோர்கள் கம்யூன

கோழைகளே கோழைகளே சுட்டீர்கள்
நீங்கள் சுட்டது எங்கள் சே” யை அல்ல-
மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த
-
ஒரு
சாதாரண மனிதனைத்தான்”
எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர்
நாங்களோ சே” வைப்போல இருப்போம்”
சே” விட்டுச்சென்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழியில்
எங்களை நாங்கள் அர்ப்பணிப்போம்

ந்தியனே ஓ இந்தியனே ! ஒருமைப்பாடே ஒருமைப்பாடே-தேசிய ஒருமைப்பாடே-உனது அடித்தளமே உந்தன் கிராமத்தில் அல்லவா இருக்கிறது

இந்தியனே ஓ இந்தியனே !
ஒருமைப்பாடே ஒருமைப்பாடே-தேசிய
ஒருமைப்பாடே-உனது அடித்தளமே
உந்தன் கிராமத்தில் அல்லவா இருக்கிறது

நாட்டுப்பற்று குறைந்திடும் போதினிலே நாடுகளெல்லாமே அடிமைப்படுவதிலே ஆச்சரியம் ஒன்றுமில்லையே-சுதந்திரத்தின் சுவாசத்தை போராடாமல் யாரும் பெற்றதாகவே சரித்த

நாட்டுப்பற்று குறைந்திடும் போதினிலே
நாடுகளெல்லாமே அடிமைப்படுவதிலே
ஆச்சரியம் ஒன்றுமில்லையே-சுதந்திரத்தின் சுவாசத்தை
போராடாமல் யாரும் பெற்றதாகவே சரித்திரமில்லையே!
நாட்டுப்பற்று என்பது வேள்வியாகுமே
வேள்விதனை நாமே தவறவிட்டு விட்டாலே
நம் சுதந்திரமே என்றுமே கேள்வியாகுமே!

துவங்குதே துவங்குதே ஞானத்தின் முதிர்ச்சியிலே துவங்குதே உண்மையான வணக்கமே துவங்குதே-முற்றிய கதிர்மணி அல்லாத பதர் என்னாலும் வணங்கிடுமோ?

துவங்குதே துவங்குதே ஞானத்தின் முதிர்ச்சியிலே
துவங்குதே உண்மையான வணக்கமே துவங்குதே-முற்றிய
கதிர்மணி அல்லாத பதர் என்னாலும் வணங்கிடுமோ?

எல்லா ஊர்களும் நமது ஊர்களே எல்லா மக்களும் நம் உறவினர்களே எல்லா உலகும் நம் உலமே எல்லா ஜூவ ராசிகளும் நம் சொந்தங்களே எல்லா மதமும் சம்மதமே எல்லாச் சுற்றமு

எல்லா ஊர்களும் நமது ஊர்களே
எல்லா மக்களும் நம் உறவினர்களே
எல்லா உலகும் நம் உலமே
எல்லா ஜூவ ராசிகளும் நம் சொந்தங்களே
எல்லா மதமும் சம்மதமே
எல்லாச் சுற்றமும் நம் சுற்றமே

Sunday, August 16, 2009

பாதைசொல்லவா - நல்ல பாதைசொல்லவா- அந்த பாதையிலே நடந்தவர்கள் மேதையல்லவா? பெண்ணே!

பாதைசொல்லவா - நல்ல
பாதைசொல்லவா- அந்த
பாதையிலே நடந்தவர்கள்
மேதையல்லவா? பெண்ணே

காரல்மார்க்சும் ஏங்கல்சும்
காட்டிய பாதை
மேதை லெனினும் ஸ்டாலினும்
நடந்த பாதை
வள்ளுவரும் வள்ளலாரும்
வார்த்திட்ட பாதை
தெள்ளுத் தமிழ் அவ்வையாரும்
சொல்லியபாதை
கவிக்குயிலும் தாகூரும்
கண்டபாதை
விடுதலையில் பாரதியின்
அற்புதப்பாதை
புத்தபிரான் ஏசு நாதர்
புறப்பட்டப் பாதை
தத்துவத்தை தந்த நபி
சரித்திரப் பாதை

அறிவில் தெளிவில்லாதவர்கள் ஆற்றலிலே உறுதியில்லாதவர்கள் வெந்ததைத் தின்றவர்கள் -எண்ணத்தில் விதிவந்தால் செத்தவர்கள் விதியை நோகாதவர்கள் வெற்றிக்கொடி நாட்டி

அறிவிலே தெளிவில்லாதவர்கள்
ஆற்றலிலே உறுதியில்லாதவர்கள்
வெந்ததைத் தின்றவர்கள் -எண்ணத்தில்
விதிவந்தால் செத்தவர்கள்
விதியை நோகாதவர்கள்
வெற்றிக்கொடி நாட்டினார்கள்
நமக்காக எல்லாமும் எல்லாருக்குமாக நாம்-என்ற
கூட்டுயர்வே நாட்டுயர்வே என்றதத்துவத்தை-உணர்ந்து
பாராத மனிதனுக்கு உரிமையில்லை
சுதந்திரமில்லை உயிரிருந்தும் உயிரற்ற உடல்கள் தானே அவர்கள்

சிலர்வாழுவதும் பலர் வாடுவதும்-கொண்ட தனியுடைமை சமூக அமைப்பு தகர்கின்ற நாளின்னும் தொலைவினில்லை இல்லை!

சிலர்வாழுவதும்
பலர் வாடுவதும்-கொண்ட
தனியுடைமை சமூக அமைப்பு
தகர்கின்ற நாளின்னும்-வெகு
தொலைவினில்லை இல்லை

மொழிவழித் தமிழர்களே-- நாட்டின் வழி இந்தியர்களே -கூடி வாழ உலகமனிதர்களே சேர்ந்து இருக்க பிரபஞ்ச மானுடர்களே!!

மொழிவழித் தமிழர்களே-- நாட்டின்
வழி இந்தியர்களே -கூடி
வாழ உலகமனிதர்களே
சேர்ந்து இருக்க பிரபஞ்ச மானுடர்களே!

வாக்காளர்கள் முட்டாள்களாய் இருக்கும்வரை தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அயோக்கியர்களாய் இருப்பதிலே ஆச்சரியம் ஒன்றுமில்லை!

வாக்காளர்கள் முட்டாள்களாய் இருக்கும்வரை
தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்கள் அயோக்கியர்களாய்
இருப்பதிலே ஆச்சரியம் ஒன்றுமில்லை

கூடித்தொழில் செய்தால் கோடிலாபம் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை கூட்டுப் பண்ணை விவசாயம் எல்லாத்தொழிலும் தேசவுடைமை ,எல்லாரும் இன்புற்று இருக்கும் எல்லாரும் எ

கூடித்தொழில் செய்தால் கோடிலாபம்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டுப் பண்ணை விவசாயம் ,எல்லாத்தொழிலும்
தேசவுடைமை ,எல்லாரும் இன்புற்று இருக்கும்
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு
இல்லாமை இல்லாத அரசு அமைய வேண்டும்
எல்லார்க்கும் உண்மை சுதந்திரம் வேண்டும்

காதல் விண்ணில் சிறகுகட்டிப் பறக்கும் போது காதலி நீயும் அன்பினில் கூடாதிருக்கலாமோ? காதலன் தோழன் ஆன பின்னும் காதல் இல்லை என்று ஆனால் தோழியை பிரிந்து காத

காதல் விண்ணில் சிறகுகட்டிப் பறக்கும் போது
காதலி நீயும் அன்பினில் கூடாதிருக்கலாமோ?
காதலன் தோழன் ஆன பின்னும்
காதல் இல்லை என்று ஆனால்
தோழியை பிரிந்து காதலனும் எங்கு போவானோ?

வாழ்க்கைத்துணை சரியாக இல்லை என்றாலே வாழும் இல்லறம் என்றும் சிறப்பதில்லை இல்லாள் இல்லாத இல்லறம் சொபிப்பதில்லை இல்லாளை துணைகொண்டு நல்லாட்சி அமைத்திடவேண்

வாழ்க்கைத்துணை சரியாக இல்லை என்றாலே
வாழும் இல்லறம் என்றும் சிறப்பதில்லை
இல்லாள் இல்லாத இல்லறம் சொபிப்பதில்லை
இல்லாளை துணைகொண்டு நல்லாட்சி அமைத்திடவேண்டும்!

தொழிலாளர்கள் உலகம் நாடு எல்லைகளை கடந்து ஒன்றானது தொழிலாள்ர்களுக்கல்ல எல்லை,வேலி,சுவர் எல்லாமே-அவையெல்லாமே தனியுடைமை கயவர்கள் படைத்த அடிமை சாசனமடா!-

தொழிலாளர்கள் உலகம் நாடு எல்லைகளை கடந்து ஒன்றானது
தொழிலாள்ர்களுக்கல்ல எல்லை,வேலி,சுவர் எல்லாமே-அவையெல்லாமே
தனியுடைமை கயவர்கள் படைத்த அடிமை சாசனமடா!-இயற்கையிலே
எந்த வரைமுறையும் எல்லைகளும் இல்லை இல்லையடா!

இளவெயிலே -பொதிகை இளந்தென்றலே-எம் இளைய பாரதமே-எழுச்சிமிகு எம் இளைய தலைமுறையே உம் கையில் தான் இருக்கிறதே நம் பாரத தேசத்தின் புத்தெழுச்சி நம்பாரதம் வல்

இளவெயிலே -பொதிகை
இளந்தென்றலே-எம்
இளைய பாரதமே-எழுச்சிமிகு எம்
இளைய தலைமுறையே
உம் கையில் தான் இருக்கிறதே
நம் பாரத தேசத்தின் புத்தெழுச்சி
நம்பாரதம் வல்லரசாய் விழித்து எழசெய்யுங்கள்
நம்பாரதம் நல்லரசாய் ஆக்கும்வழி செல்லுங்கள்

எந்தமொழிக்கும் இல்லாத சிறப்புண்டே தமிழுக்கே ஓங்கி வளர்ந்த இலக்கண மரபுண்டே எழுத்தோடு சொல்லும் சொல்லோடு தொடர்புடைய பொருளுக்குமே-தமிழினிலே ஓங்கி வளர்ந்த

எந்தமொழிக்கும் இல்லாத சிறப்புண்டே தமிழுக்கே
ஓங்கி வளர்ந்த இலக்கண மரபுண்டே
எழுத்தோடு சொல்லும் சொல்லோடு தொடர்புடைய
பொருளுக்குமே-தமிழினிலே
ஓங்கி வளர்ந்த இலக்கண மரபுண்டே

பழைய நல்ல நினைவுகளே நினைவுகளே உங்கள் ஞாபகத்தில் நீங்கள் புதுப்பிக்கப்படும் போதினிலே எங்கள் பாசங்களும் நேசங்களும் வளமாகுதே நல்ல சுகமாகுதே!

பழைய நல்ல நினைவுகளே நினைவுகளே
உங்கள் ஞாபகத்தில் நீங்கள்
புதுப்பிக்கப்படும் போதினிலே
எங்கள் பாசங்களும் நேசங்களும்
வளமாகுதே நல்ல சுகமாகுதே

மலர்களைப் பேணும் மன நிலையில் மாணவ மனங்களைப் பேணிட வேண்டுமெ தோழமை உணர்வோடுதான் இளையதலைமுறையை தோள்கொடுத்து தொடர்ந்துபோய் புத்துலக சமுதாயத்தை துணிந்து ந

மலர்களைப் பேணும் மன நிலையில்
மாணவ மனங்களைப் பேணிட வேண்டுமெ
தோழமை உணர்வோடுதான் இளையதலைமுறையை
தோள்கொடுத்து தொடர்ந்துபோய் புத்துலக சமுதாயத்தை
துணிந்து நாமே உருவாக்கிட சபதமேற்போம்!

உனது விருப்பங்களை மட்டும் நிறைவேற்ற முயன்றாலே-சமூகம் என்ற அமைப்பே இருக்காது மற்றவரின் விருப்பந்தனை அறிந்து அவை நிறைவேறத் துணை செய்வது தான் அறிவியல் சா

உனது விருப்பங்களை மட்டும்
நிறைவேற்ற முயன்றாலே-சமூகம்
என்ற அமைப்பே இருக்காது
மற்றவரின் விருப்பந்தனை அறிந்து
அவை நிறைவேறத் துணை செய்வது தான்
அறிவியல் சார்ந்த சமூகவாழ்வியல் முறையாகுமே
சுகமாக துங்குவதும்
சுவையாக உண்பதுவும்
வாழ்க்கை என்று எண்ணுகின்ற
வளமற்ற தனி நலமே
வக்கனையில்லாத சோம்பேறிக் கூட்டமே
சுறுசுறுப்பில் எறும்பாக நாட்டைச் சீர்தூக்கும்
நல்லோர் வழிதனிலே முன்னேற்றம் காணவேண்டுமே!

தான்பெற்ற நல்லின்பம் இவ்வையகம் பெறவே தன்னலமற்ற பகிர்ந்தளிக்கும் நல்லுள்ளம் வேண்டுமே தானென்ற அகந்தை நீங்கி நாம் என்ற உணர்வு மேலோங்கனுமே நாமென்ற நல்லெண

தான்பெற்ற நல்லின்பம் இவ்வையகம் பெறவே
தன்னலமற்ற பகிர்ந்தளிக்கும் நல்லுள்ளம் வேண்டுமே
தானென்ற அகந்தை நீங்கி நாம் என்ற உணர்வு மேலோங்கனுமே
நாமென்ற நல்லெண்ணம் நம்தேசமுன்னேற்றம் கண்டிடுமே!

வெட்டிவாது பேசிக்கொண்டு வீண்ஜம்பம் அடிப்போரை- நய வஞ்சகம் செய்வோரை நல்லவராய் நடிப்போரை -மக்களுக்கு துரோகம் நாளெல்லாம் செய்துகொண்டு இருப்போரை -அடிமையாக

வெட்டிவாது பேசிக்கொண்டு வீண்ஜம்பம் அடிப்போரை- நய
வஞ்சகம் செய்வோரை நல்லவராய் நடிப்போரை -மக்களுக்கு
துரோகம் நாளெல்லாம் செய்துகொண்டு இருப்போரை -அடிமையாக்கி
இந்த உலகினை ஆட்டிப் படைக்கின்ற தனியுடைமை ஆள்வோரை
கயவரை கல் நெஞ்சகாரர்களை தேசத்துரோகிகளை-இனம்
காணாமல் எத்தனை நாளைக்குத்தான் தூங்குவீங்களோ?

சொன்னாலே தொடருமென்று என்கதையை சுருக்கிவிட்டேன்-கண்ணில் நான் கண்ட கதை சொல்லவா?- என்னெஞ்சில் நீ கொண்ட காதல்கதை சொல்லவா?-பூமி நாம் வந்தகதை சொல்லவா?உன்னை

சொன்னாலே தொடருமென்று
என்கதையை சுருக்கிவிட்டேன்-கண்ணில் நான்
கண்ட கதை சொல்லவா?- என்னெஞ்சில் நீ
கொண்ட காதல்கதை சொல்லவா?-பூமி நாம்
வந்தகதை சொல்லவா?உன்னை நான் நினைத்து
வாடும் கதை சொல்லவா?அனுதினமும்
கனவுக்கதை சொல்லவா? நாம்வாழப்போகும்
நனவுக்கதை சொல்லவா?

Saturday, August 15, 2009

அதுவென்று இதுவென்று அலைமோதும் மனமே-உண்மை எதுவென்று தேடாமல் ஒரு நாளும் சுகமில்லையே தன்னலத்தில் இன்பமில்லையே பொது நலத்தில் துன்பமில்லையே தானென்ற தத்துவத

அதுவென்று இதுவென்று அலைமோதும் மனமே-உண்மை
எதுவென்று தேடாமல் ஒரு நாளும் சுகமில்லையே
தன்னலத்தில் இன்பமில்லையே பொது நலத்தில் துன்பமில்லையே
தானென்ற தத்துவத்தை வீழ்த்தாமல் வாழ்க்கையில்லையே
வாழ்க்கைமட்டும் இல்லை சமூக அமைப்பும் இல்லை இல்லையே

என் துன்பத்தில் இன்பம் கண்டவரைப் பார்த்து நான் மகிழ்ந்தேன் என் துயரத்தில் பங்குபெறாதாரைப் பார்த்து நான் ரசித்தேன் என்சிறுமையில் சேராதவர்களைப் நான்சென

என் துன்பத்தில் இன்பம் கண்டவரைப் பார்த்து நான் மகிழ்ந்தேன்
என் துயரத்தில் பங்குபெறாதாரைப் பார்த்து நான் ரசித்தேன்
என்சிறுமையில் சேராதவர்களைப் நான்சென்று பார்த்தேன்
என்வளர்ச்சி கண்டு வாழ்த்தியவர்களைப் பார்த்து வணங்கினேன்
என் தேச முன்னேற்றத் திற்குழைத்தவரைப் பார்த்து நடந்தேன்

தனித்தனி வயிற்றினில் பிறந்தபோதும்--மண்தன்னில் தானே அனைவரும் வாழ்கின்றோம் தனிமையிலே இனிமையில்லை ஒற்றுமையிலே தாழ்வுமில்லை -மக்கள் துண்டுபட்டாலே வாழமுடிய

தனித்தனி வயிற்றினில் பிறந்தபோதும்--மண்தன்னில்
தானே அனைவரும் வாழ்கின்றோம்
தனிமையிலே இனிமையில்லை
ஒற்றுமையிலே தாழ்வுமில்லை -மக்கள்
துண்டுபட்டாலே வாழமுடியுமா?-மக்களைத்
துண்டுபோடும் மனிதரைத் துண்டுபோடுவோம்

இறப்பில்லாத பிறவியேது? இரவில்லாத பகலுமேது? சொர்க்கமும் நரகமும் ஏது? ஏது?-அதை சொல்லித் திரிவதிலே பயனேது? வாழும்போது வாழ்த்தாத நெஞ்சங்களே சாகும்போது அழு

இறப்பில்லாத பிறவியேது?
இரவில்லாத பகலுமேது?
சொர்க்கமும் நரகமும் ஏது? ஏது?-அதை
சொல்லித் திரிவதிலே பயனேது?
வாழும்போது வாழ்த்தாத நெஞ்சங்களே
சாகும்போது அழுவதினாலே பயனேது?-வாழ்வு
இருக்கும் போது சொர்க்கத்தை நாமெல்லாமே!
இந்த பிரபஞ்சமுழுதும் கொண்டுவருவோமே!

உயிர்,உடல்வாழமட்டும் வாழ்ந்தவர்கள் பலகோடி உலகுக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி உறவுக்காக வாழ்ந்தவர்கள் பலகோடி உண்மைக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி ஊரை அடித்து

உயிர்,உடல்வாழமட்டும் வாழ்ந்தவர்கள் பலகோடி
உலகுக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி
உறவுக்காக வாழ்ந்தவர்கள் பலகோடி
உண்மைக்காக வாழ்ந்தவர்கள் சிலகோடி
ஊரை அடித்து உலையினில் போடும் மனிதருக்கு
உலகமனிதர் எல்லாம் ஆடுமாடாய்தான் தெரியுமடா!
ஊரும் பேரும் வாழ்வும் இவர்களுக்கேது
உலகமக்கள் வாழதத்துவ நடைமுறை சொல்லி செயல்பட்டோர்க்கு-போலி
உறவும்,துறவும் ,வேடமரபும்,இவர்களுக்கேது?

எனதினிய காதலியே என்னருமைத் தோழியே! எனை ஆய்வுசெய்ய வந்திடுவாய் காதல் விஞ்ஞானியே! உன்னை நானும் என்னை நீயும் புரிந்துகொண்டாலே நாமிருவரும் வாழ்வியல் மெய்

எனதினிய காதலியே என்னருமைத் தோழியே!
எனை ஆய்வுசெய்ய வந்திடுவாய் காதல் விஞ்ஞானியே!
உன்னை நானும் என்னை நீயும் புரிந்துகொண்டாலே
நாமிருவரும் வாழ்வியல் மெய்ஞானியே!

ஆயுட்காலமும் நீளலாம் -ஒரு இராப்பொழுதிலும் முடியலாம் - நீங்கள் போவது சொர்க்கமா? நரகமா? எதுவென்று சஞ்சலங்கள் ஏனடா? வாழும்போதே ஒன்றுபட்டு வாழும் வசந்தவாழ

ஆயுட்காலமும் நீளலாம்
-ஒரு
இராப்பொழுதிலும் முடியலாம்
- நீங்கள்
போவது சொர்க்கமா? நரகமா?
எதுவென்று சஞ்சலங்கள் ஏனடா?
வாழும்போதே ஒன்றுபட்டு வாழும் வசந்தவாழ்வை
வாழப்பழகி எல்லோரும் வாழவழிவகை கொள்ளடா!

உன்னில் என்னை அறிவது எப்போது? என்னில் உன்னை புரிவது எப்போது? காதல் அன்பில் கனியும் உறவினிலே காத்து கிடக்கும் இனிக்கும் இனிமையிலே கண்ணே மணியே பொன்னே பூ

உன்னில் என்னை அறிவது எப்போது?
என்னில் உன்னை புரிவது எப்போது?
காதல் அன்பில் கனியும் உறவினிலே
காத்து கிடக்கும் இனிக்கும் இனிமையிலே
கண்ணே மணியே பொன்னே பூந்தென்றலே

மெய்யெது பொய்யெது அறிய தவறிவிட்டோம் தனியுடைமை கொடுமை அழிக்கத்தவறி விட்டோம் தன்னலத்தில் ஆழ்ந்து வீழ்ந்துவிட்டோம் பொது நலத்தில் கவனமின்றி வாழ்ந்துவிட்டோ

பகைமை பாராட்டி பேசிக்கொண்டோம்- நல்ல
பண்பை நேசிக்க மறந்துவிட்டோம்
கயவரை கண்டு வீழ்த்தமறந்தோம்
கண்ணில் காண்பதெல்லாம் நம்பிவிட்டோம்
மெய்யெது பொய்யெது அறிய தவறிவிட்டோம்
தனியுடைமை கொடுமை அழிக்கத்தவறி விட்டோம்
தன்னலத்தில் ஆழ்ந்து வீழ்ந்துவிட்டோம்
பொது நலத்தில் கவனமின்றி வாழ்ந்துவிட்டோம்

அன்பும் நீயே அறிவும் நீயே மனமும் நீயே மதியும் நீயே கருவும் நீயே கதியும் நீயே காதலி நீயே தோழியும் நீயே!

நடப்பும் நீயே நடிப்பும் நீயே
படைப்பும் நீயே வடிப்பும் நீயே
படிப்பும் நீயே துடிப்பும் நீயே
உணர்வும் நீயே உயிரும் நீயே
உறவும் நீயே உயர்வும் நீயே
வாழ்வும் நீயே வளமும் நீயே
அன்பும் நீயே அறிவும் நீயே
மனமும் நீயே மதியும் நீயே
கருவும் நீயே கதியும் நீயே
காதலி நீயே தோழியும் நீயே

எண்ணாத இன்பமே சொல்லாத துன்பமே எனக்கு ஏனடிக் கண்ணே?-காதல் மின்னாத மேகமோ பொல்லாத மோகமோ - நெஞ்சில் யாரடி கண்ணே!

எண்ணாத இன்பமே சொல்லாத துன்பமே
எனக்கு ஏனடிக் கண்ணே?-காதல்
மின்னாத மேகமோ பொல்லாத மோகமோ - நெஞ்சில்
யாரடி கண்ணே

நீங்கினாலே சுடுது சுடுது நெருங்கினாலே குளிருது குளிருது சுடு நெருப்பினையும் பனிக்குளிரினையும்-காதலி இவளே எங்குதான் பெற்றாளோ?அன்பு விருந்துக்கு விருந்

நீங்கினாலே சுடுது சுடுது
நெருங்கினாலே குளிருது குளிருது
சுடு நெருப்பினையும் பனிக்குளிரினையும்-காதலி
இவளே எங்குதான் பெற்றாளோ?அன்பு
விருந்துக்கு விருந்துமானாளே-காதல்
நோய்தீர்க்க மருந்தும் ஆனாளே
வாழ்க்கை முழுவதும் துணையாய் தொடரும்
வாழ்க்கைத் துணைவியாய் தோழியாக ஆனாளே!

உறவினில் ஒரு முகம் உள்ளத்தில் பலமுகம் இல்லத்தில் இன்பம் காணுமா?-அந்த உறவுக்கு உறவுதான் உறவாகுமா? உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டினில் ஒன்று சொன்னால் ஒட

உறவினில் ஒரு முகம் உள்ளத்தில் பலமுகம்
இல்லத்தில் இன்பம் காணுமா?-அந்த
உறவுக்கு உறவுதான் உறவாகுமா?
உள்ளத்தில் ஒன்று வைத்து
உதட்டினில் ஒன்று சொன்னால்
ஒட்டுகின்ற உறவும் தான் கிட்டவருமா?

என்வாழ்க்கை முகவரி தேடும்போது உன்முகம் பார்த்து கண்ணில் முகவரி கேட்டேன் - நீயோ என் நெஞ்சில் குடியிருக்கவே உன் நெஞ்சினையே நீயே தந்துவிட்டாய்!

என்வாழ்க்கை முகவரி தேடும்போது
உன்முகம் பார்த்து கண்ணில் முகவரி கேட்டேன் - நீயோ
என் நெஞ்சில் குடியிருக்கவே உன் நெஞ்சினையே
நீயே தந்துவிட்டாய்!

காதல் பொருத்தம் பார்ப்பதில்லை காதல் வருத்தம் பார்ப்பதில்லை காதல் காலம் பார்ப்பதில்லை காதல் சாதி பார்ப்பதில்லை காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை கா!

காதல் காதலே அறிவின் ஆழமே
காதல் காதலே பேசிப் பழகுமே
காதல் காதலே சிலரின் வெறுப்பாகும்
காதல் காதலே தூய அன்பாகும்
காதல் சிலரை அடிமையாக்கும்
காதல் காதலே தியாகமாகும்
காதல் சிலபோது மோகமாகும்
காதலில் கசப்புமுண்டு
காதலில் இனிப்புமுண்டு
காதலில் சிரிப்புமுண்டு
காதலில் அழுகையுமுண்டு
காதல் கண்ணிலுண்டு
காதல் நெஞ்சிலுமுண்டு
காதல்குதிரைக்கு கடிவாளமில்லை
காதல் பொருத்தம் பார்ப்பதில்லை
காதல் வருத்தம் பார்ப்பதில்லை
காதல் காலம் பார்ப்பதில்லை
காதல் சாதி பார்ப்பதில்லை
காதல் மத இன மொழி தேசம் பார்ப்பதில்லை
காதல் காசுபணம் நகை நட்டை பார்ப்பதில்லை

கவிஞரானார் காதலிக்கத் தெரிந்தவரெல்லாம் கவிஞரானார் கவிஞரானார் கவிஞரானார் காதல்தனை வெறுத்தவரெல்லாம் கவிஞரானார் காதலை மெய்யென்றவரும் கவிஞரான

கவிஞரானார் கவிஞரானார்
காதலிக்கத் தெரிந்தவரெல்லாம் கவிஞரானார்

கவிஞரானார் கவிஞரானார்
காதல்தனை வெறுத்தவரெல்லாம் கவிஞரானார்
காதலை மெய்யென்றவரும் கவிஞரானார்
காதலை பொய்யென்றவரும் கவிஞரானார்

மண்ணை ஆண்டாய் பெண்ணை ஆண்டாய் உன்னில் உன்னைக் காண மறந்தாய் பொன்னைக் கண்டாய் விண்ணைக் கண்டாய் தன்னைத் தானே உணர மறந்தாய்

மண்ணை ஆண்டாய் பெண்ணை ஆண்டாய்
உன்னில் உன்னைக் காண மறந்தாய்
பொன்னைக் கண்டாய் விண்ணைக் கண்டாய்
தன்னைத் தானே உணர மறந்தாய்

விழிகள் பேசினால் காதல் விந்தை பிறக்கும் மூளை பேசினால் அறிவு சிறகினை விரிக்கும் மொழிகள் பேசினால் பண்பாடு சிறக்கும் புரட்சி பேசினால் வாழும் வழி நிலைக்கு

விழிகள் பேசினால் காதல் விந்தை பிறக்கும்
மூளை பேசினால் அறிவு சிறகினை விரிக்கும்
மொழிகள் பேசினால் பண்பாடு சிறக்கும்
புரட்சி பேசினால் வாழும் வழி நிலைக்கும்

கருணை உள்ளம் தாயே அல்லவா? அன்பு இதயம் அவளது அல்லவா? ஆதரிக்கும் கரங்கள் அகிலமல்லவா? அணைத்து மகிழ்வது தாயுள்ளமல்லவா? காலம் கரித்துண்டையும் வைரமாக்கலையா?

கருணை உள்ளம் தாயே அல்லவா?
அன்பு இதயம் அவளது அல்லவா?
ஆதரிக்கும் கரங்கள் அகிலமல்லவா?
அணைத்து மகிழ்வது தாயுள்ளமல்லவா?
காலம் கரித்துண்டையும் வைரமாக்கலையா?
காக்கைதன் குஞ்சையும் கொஞ்சவில்லையா?

ஏழிசையும் உனைப் பாடுமோ? கூறும் கவிஞர்களின் பாடலுமே உனைப்பாடுமோ? குயிலும் உனைப்பார்த்து கூவித்தான் பார்த்திடுமோ? காதலியே கனிமொழியே கண்மணியே கற்கண்டே!

ஆறு நதிஓடம் அலைகள் கவிபாடுமோ?
உன் எண்ணம் இனிதாகுமோ?
ஏழிசையும் உனைப் பாடுமோ?
கூறும் கவிஞர்களின் பாடலுமே உனைப்பாடுமோ?
குயிலும் உனைப்பார்த்து கூவித்தான் பார்த்திடுமோ?
காதலியே கனிமொழியே கண்மணியே கற்கண்டே!

Friday, August 14, 2009

சு ய ம்

தமிழ்பாலா

எனது புனைபெயர்,எனது பெயர் பாலசந்திரன்,எனது மகள் தமிழ்செல்வி நினைவாக இந்த வலையில் நல்ல இலக்கியங்களை எழுதுவதற்கு முயற்சித்து வருகின்றேன், நான் மதுரையில் பிறந்தவன்,உயர்கல்வி சேதுபதி உயர் நிலைபள்ளி,கல்லூரி நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி,கடந்த 25 வருடங்களாக மில்வேலை மதுரைகோட்ஸ் செண்டினரி மில்லில் வேலை பார்த்து விருப்ப ஓய்வில் இருக்கிறேன், அரசு உரிமம் பெற்று பத்திரம் எழுதி வருகிறேன்,எனக்கு திருமணம் ஆகி மனைவி,இரண்டு மகன்களோடு மதுரையில் வசித்து வருகிறேன், மக்களுக்கான கலையினை மக்களுக்காக கொண்டுவர ஒரு போராட்டம் நடத்திகொண்டு இருக்கின்றேன்,வாசிக்கும் பழக்கம் எனது தாயாரால் ஏற்பட்டது, அடிக்கடி மதுரை சிம்மக்கல் நூலகத்திற்கும்,எல்லிஸ் நகர் சிங்காரவேலர் நூலகத்திற்கும் சென்று படித்தும், நூலகளை எடுத்துவந்து வாசிக்கின்ற பழக்கம் உண்டு,மேலும் நல்ல இலக்கியங்களை படித்து நல்ல இலக்கியங்களை படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் கடைசி மாணவனாக இருந்து நல்ல படைப்புகளை படைக்க விரைந்து ;வந்துகொண்டிருக்கிறேன்

பெண்கள் வாழாத சமூக அமைப்பே உன்னில் மக்கள் வாழ்கின்ற சுதந்திரமூச்சுக் காற்று என்பதில்லையே!

காலங்காலமாகவே
ஆளும்வர்க்கமே ,ஆணாதிக்க சமுதாயமே
ஆளுக்கொரு விதிசெய்து பெண்களையெல்லாம்
அடிமையாக்கி ஆழ அமிழ்த்திவிட்டார்-பெண்கள்
வாழாத சமூக அமைப்பே உன்னில் மக்கள்
வாழ்கின்ற சுதந்திரமூச்சுக் காற்று என்பதில்லையே!

கவிஞன் நிரந்தரமானவன்0-- அவனது கவிதைக்கு மரணமில்லை பாடல்கள் பரிசுத்தமானவை- அவை நல்ல பாதைசொல்லும் தத்துவங்கள்

கவிஞன் நிரந்தரமானவன்0-- அவனது
கவிதைக்கு மரணமில்லை
பாடல்கள் பரிசுத்தமானவை- அவை நல்ல
பாதைசொல்லும் தத்துவங்கள்

காதலுக்கு ஒரு பைரனடி கடவுளுக்கு ஒரு மில்டனடி போருக்கொரு மயோ நொஸ்கி புரட்சிகொரு செல்லி விடுதலைக்கொரு பாரதி மக்களுக்கொரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மா

காதலுக்கு ஒரு பைரனடி
கடவுளுக்கு ஒரு மில்டனடி
போருக்கொரு மயோ நொஸ்கி
புரட்சிகொரு செல்லி
விடுதலைக்கொரு பாரதி
மக்களுக்கொரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மானுடத்திற்கொரு கண்ணதாசனே

காதல் என்பது என்ன? 0- அது கண்கள் சொல்லும் சாடை கருத்தில் மணக்கும் பூவாடை- மாலைத் தென்றல் துள்ளும் நீரோடை!

காதல் என்பது என்ன? 0- அது
கண்கள் சொல்லும் சாடை
கருத்தில் மணக்கும் பூவாடை- மாலைத்
தென்றல் துள்ளும் நீரோடை

மூங்கிலே துளைகளில்லாத புல்லாங்குழலே-சில நேரங்களில் உனது எதேச்சையான துளைகளில் கூட தென்றல் புகுந்து தேனிசை தந்தினிக்குமே!

மூங்கிலே
துளைகளில்லாத புல்லாங்குழலே-சில நேரங்களில்
உனது எதேச்சையான துளைகளில் கூட
தென்றல் புகுந்து தேனிசை தந்தினிக்குமே

உலகெல்லாம் நம் ஊராகும் ஊரெல்லாம் நம் உறவாகும் உறவெல்லாம் நம் அன்பாகும் அன்பெல்லாம் நம் உலக பண்பாகும்

உலகெல்லாம் நம் ஊராகும்
ஊரெல்லாம் நம் உறவாகும்
உறவெல்லாம் நம் அன்பாகும்
அன்பெல்லாம் நம் உலக பண்பாகும்

கிணற்றில் இருந்துகொண்டு கிணற்றைக் கடலாக எண்ணி அளப்பார்கள் ஒருகோடி

கிணற்றில் இருந்துகொண்டு
கிணற்றைக் கடலாக எண்ணி
அளப்பார்கள் ஒருகோடி

வானத்தை உன் சிறகுகளால் அளந்துவிடலாம் என்று எண்ணுகின்ற பறவையே- நீயும் வானில் ஒரு எல்லைவரை தானே உன்னாலே பறக்கமுடியும்!

வானத்தை உன் சிறகுகளால் அளந்துவிடலாம்
என்று எண்ணுகின்ற பறவையே- நீயும்
வானில் ஒரு எல்லைவரை தானே உன்னாலே
பறக்கமுடியும்

சின்னவட்டத்தில் சுருங்கிப்போய் ஆனந்தம் கொள்ளும் கிணற்றுத்தவளைகளே

சின்னவட்டத்தில் சுருங்கிப்போய்
ஆனந்தம் கொள்ளும் கிணற்றுத்தவளைகளே
அவர்களின் சிறுவட்ட உலகத்தை போன்று
இனிமையானது
இந்த உலகினில் வேறெங்குமில்லை
என்று நினைக்கின்ற எண்ணம்தான் தவறானது

உலக அனுபவத்தின் ஆழத்தை அறியும் பயணமிது வாழ்வின் பயணமிது-!

பயணமிது நாம் வாழும் வாழ்வின் பயணமிது
உலக அனுபவத்தின்
ஆழத்தை அறியும் பயணமிது
வாழ்வின் பயணமிது-அன்பின்
ஆழத்தை அறியும் பயணமிது
வாழ்வின் பயணமிது
ஆழத்தை புரியும் பயணமிது
வாழ்வின் பயணமிது-அழகின்
ஆழத்தை தேடும் பயணமிது
வாழ்வின் பயணமிது0பண்பின்
ஆழத்தை நாடும் பயணமிது
வாழ்வின் பயணமிது
மனித நேயத்தின் ஆழத்தை உணரும் பயணமிது-
வாழும் வாழ்வின் பயணமிது
பயணமிது நாம் வாழும் வாழ்வின் பயணமிது
உலக அனுபவத்தின்
ஆழத்தை அறியும் பயணமிது
வாழ்வின் பயணமிது

அன்பிருக்கும் இடத்தினிலே மனக்கவலை இருக்காது அன்பு அமைதி இருக்குமிடமாம் அன்புக்கு அழிவில்லை அன்பு தன்னலமற்றது அன்பு உரிமைக்கு குரல் கொடுக்கும் அன்பு உழ

அன்பிருக்கும் இடத்தினிலே மனக்கவலை இருக்காது
அன்பு அமைதி இருக்குமிடமாம்
அன்புக்கு அழிவில்லை
அன்பு தன்னலமற்றது
அன்பு உரிமைக்கு குரல் கொடுக்கும்
அன்பு உழைப்பவரை ஒன்றுபடவைக்கும்
அன்பு மக்கள்ஜன நாயகத்தை நிர்மாணிக்கும்

இந்தசுதந்திர தினக் கொண்டாட்டத்தில் எங்கள் பூமிப்பந்தின் தென்பகுதியில் ஈழமண்ணில் எங்கள் தமிழ் சகோதர சகோதரர்கள் இன்னும் வேலிகளின் உள்ளே கொட்டடியில் ஆடும

இந்தசுதந்திர தினக் கொண்டாட்டத்தில்
எங்கள் பூமிப்பந்தின் தென்பகுதியில்
ஈழமண்ணில் எங்கள் தமிழ் சகோதர
சகோதரர்கள் இன்னும் வேலிகளின் உள்ளே
கொட்டடியில் ஆடுமாடுகளைப் போலவே
சம உரிமை கிடைக்காமலே
சமவாய்ப்பும் இல்லாமலே
இனப்படுகொலை கொடுமை இன்னும்
ஆறாத புண்ணாக வடுக்களாக நினைவுகூறும்
என்று எங்கள் ஈழதமிழ்மக்களின் சந்தோசங்க்ளோ?
அன்றுதான் எங்கள் சுதந்திர கொண்டாட்டமும் மகிழ்ச்சி உண்டாக்கும்

விலைவாசி விசம்போல ஏறிக்க்கொண்டு இருக்கின்ற தருணத்தில் இடைத்தேர்தல்களில் ஜன நாயகம் பண நாயகம் ஆகி நிற்கும் காசுக்கு வாக்குகளை விலைபேசி நிற்கும் சமயத்தி

விலைவாசி விசம்போல ஏறிக்க்கொண்டு
இருக்கின்ற தருணத்தில்
இடைத்தேர்தல்களில் ஜன நாயகம் பண நாயகம்
ஆகி நிற்கும் காசுக்கு வாக்குகளை
விலைபேசி நிற்கும் சமயத்தில்
சுதந்திர தினமும் வந்து ஒப்புக்காக நாங்களும்
கொடியேற்றி இனிப்பும் சாப்பிட்டு சமபந்தி உண்டு
சம்பிரதாயமாக செய்யும் செயலாக கொண்டாடுகிறோம்

ஆகஸ்ட் 15 என்றாலே எங்களுக்கு சுதந்திர சிந்தனை இன்னும் வரவில்லை மக்கள் ஜன நாயகம் உயர்த்திப்பிடிக்கும் மகத்தான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் மட்டற்ற மக

ஆகஸ்ட் 15 என்றாலே எங்களுக்கு
சுதந்திர சிந்தனை இன்னும் வரவில்லை
மக்கள் ஜன நாயகம் உயர்த்திப்பிடிக்கும்
மகத்தான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்
மட்டற்ற மகிழ்ச்சியான காலத்தை எதிர் நோக்கி- இந்த
சுதந்திர தினத்தை வரப்போகும் சுதந்திர தினத்திற்கு
ஒத்திகை பார்க்கின்றோம்

சுதந்திரம் எங்கிருக்கு? சொத்துசுகம் எல்லாம் எங்கிருக்கு?-எல்லோருக்கும் சோத்துக்கில்லாத சுதந்திரம் யாருக்கு?!

சுதந்திரம் எங்கிருக்கு?
சொத்துசுகம் எல்லாம் எங்கிருக்கு?-எல்லோருக்கும்
சோத்துக்கில்லாத சுதந்திரம் யாருக்கு?
ஏழைக்கு சுதந்திரம் எங்கே வந்திருக்கு?
ஏழ்மைக்கு சுதந்திரம் எங்கே வந்திருக்கு?
ஏற்றதாழ்வு சமூக அமைப்பில்
உண்மையான சுதந்திரம் எப்படி இருக்கும்?
சுதந்திரம் வாக்கு சுதந்திரத்தை காசுக்குவாங்கும் போலிச்
சுதந்திரம் இங்க இருக்கு
ஜன நாயகம் பண நாயகம் ஆன சுதந்திர வேடம் இங்கிருக்கு
உண்மை சுதந்திரம் காணும் அசல்
மக்கள்ஜன நாயகம் இந்த நாட்டில் எங்கிருக்கு?

அன்பின் வழியது உயிர் நிலையாகும் அன்பே உலகத்தை ஆளுமென்ற தத்துவத்தை நானுணர்ந்தேனே!

அன்பின் வழியது உயிர் நிலையாகும்
அன்பே உலகத்தை ஆளுமென்ற
தத்துவத்தை நானுணர்ந்தேனே

பயனில்லை பயனில்லை எல்லோருக்கும் எல்லாமில்லாத சுதந்திரமே பயனில்லை பயனில்லை உரிமையில்லாத உழைப்பாளர் தேசமே1!

பயனில்லை பயனில்லை நெருப்பினில் இட்ட் நெய்யே
பயனில்லை பயனில்லை ஆற்றில் கரைத்த புளியே
பயனில்லை பயனில்லை கடலில் கரைத்த பெருங்காயமே
பயனில்லை பயனில்லை தரையினில் சிந்திய பாலே
பயனில்லை பயனில்லை பேய்க்கு செய்கின்ற பூசையே
பயனில்லை பயனில்லை காற்றில் வெடித்த பஞ்சே
பயனில்லை பயனில்லை கடற்சுழிவிழுந்த கப்பலே
பயனில்லை பயனில்லை காட்டுக்கு எரிந்த நிலவே
பயனில்லை பயனில்லை விழலுக்கு எரித்த நீரே
பயனில்லை பயனில்லை வீணருக்கு செய்த உதவியே
பயனில்லை பயனில்லை பூனைவாய் கோழியே
பயனில்லை பயனில்லை ஆனைவாய் கரும்பே
பயனில்லை பயனில்லை தேர்தல் கால பொய்வாக்குறுதியே
பயனில்லை பயனில்லை எல்லோருக்கும் எல்லாமில்லாத சுதந்திரமே
பயனில்லை பயனில்லை உரிமையில்லாத உழைப்பாளர் தேசமே

அழகில்லை அழகில்லை பொதுவுடைமை இல்லாத தேசமடி அழகில்லை அழகில்லை தனியுடைமை ஆளும் உலகமடி!

அழகில்லை அழகில்லை பள்ளி இல்லாத ஊரே
அழகில்லை அழகில்லை பயிரில்லாத நிலமே
அழகில்லை அழகில்லை பாடு இல்லாத பயிரே
அழகில்லை அழகில்லை பாலர் இல்லாத இல்லமே
அழகில்லை அழகில்லை ப்ண்பில்லாத வாழ்க்கையே
அழகில்லை அழகில்லை அன்பில்லாத பார்வையே
அழகில்லை அழகில்லை பக்தியில்லாத நெஞ்சமே
அழகில்லை அழகில்லை கருணையில்லாத உள்ளமே
அழகில்லை அழகில்லை இரக்கமில்லாத சிந்தனையே
அழகில்லை அழகில்லை மூட நம்பிக்கை பக்தியே
அழகில்லை அழகில்லை நீரில்லாத குளமடி
அழகில்லை அழகில்லை விளக்கில்லாத வீடடி
அழகில்லை அழகில்லை மனம் போன போக்கடி
அழகில்லை அழகில்லை புரண்டுபேசும் நாக்கடி
அழகில்லை அழகில்லை கபடம் நிறைந்த நெஞ்சமே
அழகில்லை அழகில்லை பொய்கூறும் வடி நாவடி
அழகில்லை அழகில்லை கனிதராத மரமடி
அழகில்லை அழகில்லை லஞ்சம் வாங்கும் கையடி
அழகில்லை அழகில்லை மூடன் கொண்ட விரதமடி
அழகில்லை அழகில்லை மூர்க்கம் கொண்ட முகமடி
அழகில்லை அழகில்லை வழிபாடு இல்லாத கோவிலடி
அழகில்லை அழகில்லை சொல்திறனில்லாத அறிவடி
அழகில்லை அழகில்லை வாயில்லாத மனைவியடி
அழகில்லை அழகில்லை நல்சொல்கேளாத பிள்ளையடி
அழகில்லை அழகில்லை மழலையில்லாக் குடும்பமடி
அழகில்லை அழகில்லை விதவை மறுமணம் இல்லாததடி
அழகில்லை அழகில்லை தனிமையான வாழ்க்கையடி
அழகில்லை அழகில்லை ஈயாதார் செல்வமடி
அழகில்லை அழகில்லை முயற்சி இல்லாத வாழ்க்கையடி
அழகில்லை அழகில்லை உய்ந்துணர்ந்து கற்றுத்தராத கல்வியடி
அழகில்லை அழகில்லை ஊக்கமில்லாத உழைப்படி
அழகில்லை அழகில்லை ஏற்றமில்லாத வாழ்க்கையடி
அழகில்லை அழகில்லை வருவாய்க்கு மிஞ்சிய செலவடி
அழகில்லை அழகில்லை அகந்தைகொண்ட எண்ணமடி
அழகில்லை அழகில்லை ஆற்றல் இல்லாத வீரமடி
அழகில்லை அழகில்லை கோழையின் கைவாளடி
அழகில்லை அழகில்லை வெற்றிகாணாத வெற்றுத்திட்டமடி
அழகில்லை அழகில்லை கலையில்லாத சிலையடி
அழகில்லை அழகில்லை கண்ணில்லாத முகமடி
அழகில்லை அழகில்லை கருத்தில்லாத நூலடி
அழகில்லை அழகில்லை பொதுவுடைமை இல்லாத தேசமடி
அழகில்லை அழகில்லை தனியுடைமை ஆளும் உலகமடி

ஞானக்கண் குருடனாலே மெய்ப்பொருளினை உணரமுடியுமா?!

ஞானக்கண் குருடனாலே மெய்ப்பொருளினை உணரமுடியுமா?
நல்லோரை நாடாத நாட்டின் தலைமையே நன்மைகொடுக்குமா?
வானத்தை அண்ணாந்து பார்த்து அமர்ந்திருந்தால் வாழ்வுசுகமாகுமா?
வரவில்லாமல் செலவுசெய்து வாழ்ந்திருந்தாலே வளம்வருமா?

மெய்யறிவே நல்லது கெட்டது அறிந்து அதன் உண்மைக்கேற்றவாறு தன்னைத் திருத்திக் கொள்ளுதலே!

மெய்யறிவே
நல்லது கெட்டது
அறிந்து அதன்
உண்மைக்கேற்றவாறு
தன்னைத் திருத்திக் கொள்ளுதலே

Thursday, August 13, 2009

உன் விரல் நுனியில் இருக்குதடா வெற்றியின் முடிச்சுக்களே உன் உள்ளங்கையில் இருக்குதடா சாதனைகளின் சூ ட்சமங்களே !

உன் விரல் நுனியில் இருக்குதடா
வெற்றியின் முடிச்சுக்களே
உன் உள்ளங்கையில் இருக்குதடா
சாதனைகளின் சூ ட்சமங்களே

-உனது தூரிகையின் வண்ண ஸ்பரிசத்திற்காகவே காத்திருக்கும் எண்ணத்திரையாகவே நான்!

ஓவியமே நீயும் ஓர் அனுபவமே
காவியமாய் நெஞ்சினில் சிறகடித்தாயே-உனது
தூரிகையின் வண்ண ஸ்பரிசத்திற்காகவே
காத்திருக்கும் எண்ணத்திரையாகவே நான்

இனியொரு விதிசெய்வேன் ஏற்றதாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்கும் நல்லோர்வழி நானும் நடக்கின்றேன்!

ஆசைக்கடலில் துரும்பானேன்
அக்கினி வேள்வியில் எறும்பானேன்
சாண்வயிற்றுக்கு சோறிடவே படாத
பாடுபட்டு மெலிவானேன்
பொய்யை மெய்யென்றேன்
மெய்யை பொய்யென்றேன்
நல்லத்தை கெட்டதென்றேன்
கெட்டதை நல்லதென்றேன்
கையூட்டுக்கு துணையும் போனேன்
கயவர்செய்யும் தீமையை பாராதிருந்தேன்
உழைப்பவர் உரிமையினை பறிக்கப்பார்த்திருந்தேன்
என்னை அடிமையாக்கி ஆள்பவரை வீழ்த்தாதிருந்தேன்
தனியுடைமை சமூக அமைப்பை மாற்றாதிருந்தேன்
இனியொரு விதிசெய்வேன் ஏற்றதாழ்வில்லாத சமுதாயத்தை
உருவாக்கும் நல்லோர்வழி நானும் நடக்கின்றேன்

ஆலமரங்களும் விழுதுகள் மூலமே பூமிக்கு அறிவுரை சொல்லிவருமே!

ஆலமரங்களும் விழுதுகள் மூலமே
பூமிக்கு அறிவுரை சொல்லிவருமே
நாமே புறப்பட்ட இடம் எது?
நாமே போய்ச்சேரும் தடம் எது?
நமது இடைப்பட்ட தூரம்தான் எது?
நமக்கு வந்த இடமும் தெரியவில்லையே
நமக்கு போகுமிட்மும் தெரியவில்லையே
நமது வாழும் இடைவெளியில்
நல்லதை செய்து நன்மையை கொடுத்து
நாளெல்லாம் வாழும் நல்லோருக்கு தோள்கொடுப்போம்

முடிவும் துவக்கமும் அண்டத்தில் இல்லை இல்லையே நடுவில் நாமே ஓடும் பாத்திரங்களே@

ஆசைக் கயிற்றினில் நீயும் ஆடாதே
அன்பே நீயும் தப்புக் கணக்குப் போடாதே
முடிவும் துவக்கமும் அண்டத்தில் இல்லை இல்லையே
நடுவில் நாமே ஓடும் பாத்திரங்களே
அன்பும் சிவமும் ஒன்று அறிவால் நீயும் ஒன்று
அந்தஒன்றாம் பிரம்மத்தில் ஒன்று
உனக்குள் நீயே ஒன்று நமக்குள் நாமே ஒன்று

சித்தாந்த ஏடுகளும் மவுனமே மந்திரத்தில் சிறந்த மந்திரம் மவுனமே அல்லவா?

அண்டங்களாம் பேரண்டங்களாம்
மோனத்திலே யுகயுகமாய் இருக்குதே
ஞானத்தின் எல்லையே மவுனம் அல்லவா?இதை
ஞானிகள் அன்று சொன்னது அல்லவா?
மலர்களும் மவுனமே மலைகளும் மவுனமே
மலர்ந்த பனித்துளிகளும் மவுனமே
சிலைகளும் மவுனமே சித்திரமும் மவுனமே
சித்தாந்த ஏடுகளும் மவுனமே மந்திரத்தில்
சிறந்த மந்திரம் மவுனமே அல்லவா?

காலமெல்லாம் கதைசொல்லும் கட்டில்கயிறு-ஆயிரங் காலத்து பயிரினையே தாலாட்டும் தொட்டில் கயிறு!

கயிறு கயிறு பலவிதமான
கயிறு கயிறு
வாலுப்பையன் பட்டம் விடுகிற நூலுக்கயிறு
நாம ரகசியமா தாயத்துக்கு அவசியமா இடுப்புக்கயிறு
ஊரு உபத்திரவம் தாங்காமலே ஊரவிட்டு காசிபோக
உத்திராட்சம் சேர்த்த காவிக்கயிறு மந்திரிச்ச
சிகப்புக்கயிறு தூய்மையான வெளுப்புக்கயிறு
காலமெல்லாம் கதைசொல்லும் கட்டில்கயிறு-ஆயிரங்
காலத்து பயிரினையே தாலாட்டும் தொட்டில் கயிறு
காளைமாட்டு க் கழுத்தில் கட்டுகிற கழுத்துக்கயிறு
அந்தகயிறு இந்தகயிறு ஆசைக்கயிறு பாசக்கயிறு
எந்தகயிறு கேட்டாலும் விற்கிறவரு மறுப்பதில்லை
இந்த தாலிக்கயிறு மட்டும் கடன்கேட்பதுமில்லை
கடன்கொடுப்பதும் இல்லை

மாணவனின் கேள்விக்கு ஒருதலைமுறையே நிமிர்கிறது!

எப்படி ஆப்பிள் விழுந்தது என்ற கேள்விக்கு
அறிவியல் கண்டான்
நியூட்டனே-சட்டசபை கேள்வியில்
சரி எது தவறு எது என்று தெரிகிறது
பட்டிமன்ற கேள்வியில் கலகலப்பும்
சிந்தனையும் வளர்கிறது
வாழ்க்கைத்துணையின் கேள்விக்கு
வாழும் இல்லறம் நல்லறமாகிறது
மாணவனின் கேள்விக்கு ஒருதலைமுறையே நிமிர்கிறது

எத்தனையோ? எத்தனையோ? அண்டங்கள் எத்தனையோ அதிலுள்ள உயிர்கள்தான் எத்தனையோ?

எத்தனையோ ? எத்தனையோ?-
அண்டங்கள்
எத்தனையோ?
அதிலுள்ள உயிர்கள் எத்தனையோ?
அத்தனையும் அந்தரத்தில்
ஆடியாடிக் கொண்டாடி
அளவின்றிக் கொண்டாடி
அளவின்றி விளையாடி
இன்பத்திலும் துன்பத்திலும்
துணையிலும் தனிமையிலும்
வாழ்கின்றது எத்த்னையோ
வளர்கின்றது எத்தனையோ?
தளர்கின்றது எத்தனையோ?
தாழ்கின்றது எத்தனையோ?
எல்லைக்குள் எத்தனையோ?
எல்லையின்றி எத்தனையோ?
உயிர்துடிப்பிலே எத்தனையோ?
உருவானது எத்தனையோ?
கருவானது எத்தனையோ?
கருகிப்போனது எத்தனையோ?
கனவானது எத்தனையோ?
நனவானது எத்தனையோ?
அறிவானது எத்தனையோ?
அறியாமை எத்தனையோ?
அன்பானது எத்தனையோ?
உயர்வானது எத்தனையோ?
தாழ்வானது எத்தனையோ?
அன்பானது எத்தனையோ?
அன்பில்லாதது எத்தனையோ?
அண்டங்கள் எத்தனையோ?
அதிலுள்ள உயிர்கள்தான் எத்தனையோ?
சித்தமானது எத்தனையோ?
சித்த்ம்கலங்கி எத்தனையோ?
சிரித்த்து எத்தனையோ?
அழுதது எத்தனையோ?
போரானது எத்தனையோ?
சமாதானம் எத்தனையோ?
புரிந்தது எத்தனையோ?
புரியாதது எத்தனையோ?
எத்தனையோ? எத்தனையோ?
அண்டங்கள் எத்தனையோ
அதிலுள்ள உயிர்கள்தான் எத்தனையோ?

கண்ணிலே கண்ணிலே காணாமல் காணாமல் கனவினில் நினைவினில் நனவினில் இனிமையில் இதமாகிப் போனவளே !

தன்னிலே தன்னிலே
தானாக தானாக
நினைந்து இனித்து கனிந்து
மனதினில் சுகமாகிப் போனவளே
கண்ணிலே கண்ணிலே
காணாமல் காணாமல்
கனவினில் நினைவினில் நனவினில்
இனிமையில் இதமாகிப் போனவளே

காதல்துணைவியின் துணையின்றி சமூகத்தில் காணுகின்ற புரட்சியும் இல்லை என்பது தெரியுமா?

காதலியே உனதன்புப் பார்வையினாலே
நானும் சித்தி முத்தி பெற்றிடுவேனே
காதலன்றி இவ்வுலகினில் வீரமுமில்லை-இது
காலங்காலமாய் நம் தமிழர் பண்பாடல்லவா?
காதல் துணையின்றி வாழ்வினில் வென்றவர் உண்டோ?
காதலும் வீரமும் நம்மிரு கண்கள் அல்லவா?
காதல்துணைவியின் துணையின்றி சமூகத்தில்
காணுகின்ற புரட்சியும் இல்லை என்பது தெரியுமா?

இந்த உலகத்தை மெய்யென்று நம்பி-அந்த மெய்யிற்கே போராடாத மானுடமே இந்த மானுடப் பிறப்பெடுத்து என்னபயன்?

இந்த உலகத்தை மெய்யென்று நம்பி-அந்த
மெய்யிற்கே போராடாத மானுடமே
இந்த மானுடப் பிறப்பெடுத்து என்னபயன்?

காற்றினில் பறந்திடும் இறகினைப்போலவே-என்னைக் கனவினில் பறந்திட வைத்தது யாரடியோ?

காதல் காதல் அக்கினியே பட்டது பாரடியோ?
எந்தன் மனதைத் தொட்டது சுட்டது ஏனடியோ?
காற்றினில் பறந்திடும் இறகினைப்போலவே-என்னைக்
கனவினில் பறந்திட வைத்தது யாரடியோ?

இன்ப கடல் காத்து இந்த ஊருக்குள்ள வந்து என்னமா சுத்திக்கிட்டே சொல்லுது ஒரு ஜோசியமே அதுக்கு தலைய தலைய ஆட்டுது தென்னங்கீத்து சாம்ராஜ்யமே

ஏதோ ஏதோ ஒருரகசியமே சொல்லுகிற அவசியமே
என்னதான் அவசரமோ?
அந்த அலைகடல் உப்பு வாசத்தோடே
இன்ப கடல் காத்து இந்த ஊருக்குள்ள வந்து
என்னமா சுத்திக்கிட்டே சொல்லுது ஒரு ஜோசியமே
அதுக்கு தலைய தலைய ஆட்டுது தென்னங்கீத்து சாம்ராஜ்யமே

Wednesday, August 12, 2009

நீ எந்த ஆயுதத்தை தூக்கிக்கொண்டு இருக்கிறாய்?

புரட்சி வந்துகொண்டு இருக்கிறது
புரட்சி வந்துகொண்டு இருக்கிறது
பழையசமூக அமைப்பே
முதலாளித்துவ அமைப்பே சாவதற்கே - நீ
எந்த ஆயுதத்தை தூக்கிக்கொண்டு இருக்கிறாய்?

மக்கள்கலையோடு மனித நேய உறவின் துணையினில் நடக்கும் போராட்டத்தில் மாற்றங்கள் உண்டு என்றுகூறிடும் ந்ல்லோர்வழி வெல்லட்டுமே!

புதியகலையே புதியகலையே - நீயும்
புதிய மனிதனோடு பிறக்கின்றாயே
மக்கள்கலையே மக்கள்கலையே - நீயும்
மக்களிடமிருந்து தானே பிறக்கின்றாயே-மக்கள்கலையோடு
மனித நேய உறவின் துணையினில் நடக்கும் போராட்டத்தில்
மாற்றங்கள் உண்டு என்றுகூறிடும் ந்ல்லோர்வழி வெல்லட்டுமே

. காதல் காணாத வாழ்வொன்று இவ்வுலகினில் தேவையில்லையே!

சுகங்கள் காணட்டும் வாழ்வெல்லாமே
, துக்கங்கள் வ்ரும் போகும் கவலைவேண்டாமே பாதையெல்லாமே
. கோபங்கள்,பார்க்கும் இடமெல்லாமே மறந்திடவேண்டுமே
தாபங்கள் தவிக்கும் உள்ளங்கள் நிலைகொண்டு வெல்லவேண்டுமே
உடன்பாடுகள் காணவிழைகின்ற மனங்கள் தீர்வுக்குள் நுழையட்டுமே
முரண்பாடுகள் மோதி நிற்கும் போராட்டங்கள் முடிவுக்கு வரட்டுமே
ஒட்டுதல்கள் உருவாக்கும் மனிதர்கள் ஓங்கிவளரும் கனிமரமாகட்டுமெ
. விரிசல்கள் கொண்டு துடிக்கும் நாட்கள் வேதனை விலக துணிவுவேண்டுமே
. பிடிவாதங்கள் உறவுகளை சிதைத்திடுமே ஒரு நல்ல முடிவு காணவேண்டுமே
. விட்டுக்கொடுத்தல்கள் இருந்தாலே இன்பங்களே

. சுயநலங்கள் போய்விட்டால் இனிமைவந்து சேர்ந்துவிடுமே

. தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு விதையாக ஆகிடுமே
1. எதிர்பார்ப்புக்கள் அளவோடு இருந்தால் நலமே அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாமே

. ஏமாற்றங்கள் கண்டு சோர்ந்து போகாத முயற்சி வேண்டுமே



துரோகங்கள் மன்னிக்கமுடியாது தூக்கி எறிந்திட வேண்டுமே

. காதல் காணாத வாழ்வொன்று இவ்வுலகினில் தேவையில்லையே

. காமம் களைந்தெடுக்க வேண்டிய களையாகுமே

. மன நெகிழ்ச்சிகள் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் சுகமாக்கட்டுமே

மன எரிச்சல்கள் மனிதவாழ்வினில் தூக்கி எறியப்படவேண்டியவையே
புரட்சி செய்யாமல் நல்சமுதாய அமைப்பு அமைப்பது சாத்தியமில்லையே

எங்க வீடு குடிசை தானென்றாலும் எங்க மனசு கோபுரமாகுமே!

எங்க வீடு குடிசை தானென்றாலும்
எங்க மனசு கோபுரமாகுமே!
எங்களிடத்தில் காசில்லை என்றாலும்-ஒற்றுமையான
உண்மை உழைப்பு உயர்வாகுமே
உரிமைகேட்கும் ரோசமுள்ள
உள்ளம் கொண்ட ராசா நாங்க

விடு கதையல்ல கதையல்ல காதலென்று ஊடலெழுந்து விழுந்து- காதலன்பும் கூடலின்பமும் கட்டிப் பார்க்குதடி!

புதிரல்ல புதிரல்ல வாழ்வு என்று
மறைந்தெழுந்து
புதிதாய் புதிதாய்- நிலவும்
எட்டிப்பார்க்குதடி-விடு
கதையல்ல கதையல்ல காதலென்று
ஊடலெழுந்து விழுந்து-
காதலன்பும் கூடலின்பமும்
கட்டிப் பார்க்குதடி!

தோழமையை வளர்க்கின்ற மனித நேயக்கவிஞர்களின் வழியினிலே மக்கள்கலை படைக்கின்ற படைப்பாளிகளே நடந்திட வேண்டுமே!

ஆற்றுப்படுகையிலே
ஏரிக்கரையினிலே-பெரும்
புல்வெளிப் பரப்பினிலே எல்லாம்
தோழமையை அடர்ந்த மரக்காடு போல
ஊன்றிவைப்பேன் என்று
வால்ட்விட்மனாம்
மாபெரும் கவிஞனும் சொன்னானே
தோழமையை வளர்க்கின்ற மனித
நேயக்கவிஞர்களின் வழியினிலே மக்கள்கலை
படைக்கின்ற படைப்பாளிகளே நடந்திட வேண்டுமே!