Popular Posts

Saturday, March 28, 2009


படைப்பாளர்கள் விதியை எழுதுவதில்லைஒருவேளை அவர்களது

படைப்புக்கள் புதிய விதிகளை எழுதலாம்...

பாட்டாளிகள் தத்துவத்தை அறிவதில்லை என்றாலும் அவர்கள்தான்

தத்துவத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்

Thursday, March 26, 2009

புளித்ததடி


வெள்ளி நிலா காயுதடி

வீதி ஒளி பாயுதடி-துள்ளி

எழும் விழி சிவந்ததடி-அன்பில்

வரும்காதல் கனிந்ததடி-மலரும்

தரும்மணம் மணந்ததடி-பார்வை

ஒருதரம் சினந்ததடி-பருவம்

மறுதரம் இணைந்ததடி-ஊடல்

வரும்வரை அணைத்ததடி-கூடல்

இறுதியிலே கலந்ததடி-பாடல்

ஒருபோது கசந்ததடி-இசையும்

மறுபோது புளித்ததடி

சமதர்ம மரம்


விழுது நிறஞ்சமரம்-இது
வெயிலுக்கு ஒதுங்கும் மரம்-குளிர்
நெழலுக்கு நல்லமரம்- நம்ம
நேசத்துக்கு உகந்தமரம்
எல்லோரும் தங்கும் மரம்
ஏழைக்கென புறந்தமரம்
ஏற்றதாழ்வில்லாத சமதர்ம மரம்

ஒத்துமை


விடிவெள்ளி நம்விளக்கு ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் ஐலசா

அடிக்கும் அலையே நம்தோழன் ஐலசா

அருமைமேகம் நமதுகுடை ஐலசா

பாயும் புயல் நம் ஊஞ்சல் ஐலசா

காயும் வெயில் நம்சட்டை ஐலசா

கட்டும்மரம் வாழும்வீடு ஐலசா

மின்னல்வலை அரிச்சுவடி ஐலசா

மின்னல் இடி நம்கூத்து ஐலசா

பிடிக்கும் மீன்கள் நம் மூலதனம் ஐலசா

வெண்மணலே பஞ்சுமெத்தை ஐலசா

முழு நிலா தான் நம் கண்ணாம் ஐலசா

தொழும் அன்புத்தலைவன் பெருவானம் ஐலசா

தொழிலாளர் தோழர்களே ஐலசா

ஒத்துமை கொண்டாடனும் ஐலசா

உரிமையை உயர்த்திடனும் ஐலசா

Tuesday, March 24, 2009

ஒத்துமையோடு


உன்னை நம்பி ஏலேலோ
நானிருக்கேன் ஐலசா
என்னை நம்பி ஏலேலோ
நீயிருக்க ஐலசா
நம்மல நம்பி ஏலேலோ
நாடிருக்குது ஐலசா
உரிமைய நம்பி ஏலேலோ
உழைப்பிருக்கு ஐலசா
உழைப்பவரெல்லாம் ஏலேலோ
ஒத்துமையோடு ஐலசா
ஓரணியில் ஏலேலோ
நடந்திடுவோம் ஐலசா
நாட்டுக்குள்ளே ஏலேலோ
நலம்பெறுவோம் ஐலசா

சுவைப்பாள்


தேன் தேன் கொம்புத்தேன் வந்தேன்

மான் மான் கொம்புமான் ஆனேன்

காட்டுமான் -காதல்

கூட்டுமான் என்றே

அன்பால் பண்பால் அணைக்கும் தமிழ்ப்பால்

கனிவால் இனிப்பாள் -வாழ்வில்

காலமெல்லாம் சுவைப்பாள்

சாய்ந்தாடம்மா


சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா

சந்தனக்கிளியே சாய்ந்தாடம்மா

சோலைக்கிளியே சுந்தரக்கிளியே

சூட்சுமகுயிலே தேனிசைமழையே

சுப்ரபாதமே அந்தி நிலவே

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா

கண்ணேமணியே சாய்ந்தாடம்மா

கருத்தே குருத்தே சாய்ந்தாடம்மா

உபதேசமே


சல்லடை சொல்லிற்றாம்

ஊசியில் ஓட்டையென்று-தன்

குற்றங்களை அறியாமலே-பிறர்

குற்றந்தனையே குறைசொல்லுவார்

தன்னை அறிந்துகொண்டாலே-உலகம்

தானே தெரிந்துவிடும் அல்லவா!

உன்னை புரியாத போதினிலே

ஊருக்கு என்னடா? உபதேசமே

கரைதாண்டி


காற்று வலுத்தபோது

கல்தூணையும் வீழ்த்திவிடும்

கடலும் சுனாமியாகி

கரைதாண்டி அழித்துவிடும் - நம்

ஒன்றுபட்ட போராட்டம்

தனியுடைமைதனை ஒழித்துவிடும்

புரட்சியாக ஆகிவிடுமே


காலாலே நடக்காமலே-காதல்

காற்றாலே பறக்கின்றதே-அன்பும்

காயாகக் காய்த்திருந்ததே-பின்பும்

பூவாகப் பூத்துவிட்டதே-தனக்கொன்று என்றாலே

புயலாக மாறிவிடுமே-என்றும்

புரட்சியாக ஆகிவிடுமே

Monday, March 23, 2009

தித்தித்திருக்கின்றாள்

மந்திரம் என்பதே சொல்லுக்குள்
பொருளை சுருக்கி வைத்து அதனை
உணரும்படி செய்வதே-அவளோ மந்திரமாகவே
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றாளே. -அவளே
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது-அன்பாலே
உள்ளத்தின் உள்ளிருந் தாளே
உச்சிக்கும் கீழிருந்தாளே உள்நாக்கு மேலிருந்தாளே
நானென நீயென வேறில்லை என்றாளே
தேனென இன்பம் தித்திக்கின்றாளே

ஈழமண்ணிலே அமைதி திரும்புமா?


பசிக்கு எச்சில் விழுங்கினாலே

பசிதான் என்றும் தீர்ந்திடுமா?-போர்தனையே

பேசித்தான் தீர்க்காமலே-குண்டுகளினாலே

ஈழமண்தனிலே போர்தான் தீர்ந்திடுமா?

நிபந்தனையற்று பேசுகிறேன் -என்ற

விடுதலைபுலிகளின் கோரிக்கைதனையே

இலங்கை அரசு செவிமடுக்காமலே

இருக்கின்றதே நியாயம் தானா?

உலகமக்களே கேளுங்கள்-அதிகார

உன்மத்தரின் உதாசினத்தையே பாருங்கள்

அமைதி திரும்புமா? ஈழமண்தனிலே

ஆன்றோரே சான்றோரே

அன்புள்ளம் கொண்டோரே

Saturday, March 21, 2009

துணையாகணுமேஎண்ணை முந்தியதோ? திரி முந்தியதோ?


இந்த தீபம் எரியுமட்டுமே -அந்த


தியாகம் தானே முந்தியதே-


வேராகிப்போன நல்லோர்கள் வழியினிலே


நாமெல்லாம் செல்லுகின்ற நல்லபாதையிலே


நாம்வாழும் தத்துவத்தை உயர்த்தவேண்டுமே


நாள்தோறும் அந்தகொள்கைக்கு துணையாகணுமே


நிற்காது


உழைக்காமலே தின்னுற சோறு

உடம்புக்கு செய்யுமே கோளாறு

உழைக்கிறவர அடிமையாக்குற

தனியுடைமை இருக்குற வரைக்கும்

உழைக்காத மனிதனுக்கும்

உழைக்கின்ற மனிதனுக்கும்

நடக்கின்ற போராட்டம் நிற்காது

கட்டுற


இது உலர்ந்தகட்டை நல்லா காஞ்சகட்டை

உடைச்சாலும் வளையாத நாட்டுக்கட்டை

வைரம் பாஞ்சகட்டை பட்டையக் கிளப்புற

ஏழரைக்கட்டை அதனால நீயும் நடையகட்டுற

ஏ உலக்கை


ஏ உலக்கை உலக்கை

நீ ஊரச்சுத்துனா சுத்துடி சுத்துடி- நீ

நீ எங்க சுத்திசுத்தி வந்தாலும்-- நீயும்

உரலில வந்துவிழுந்து தானே

ஆகவேணும் உலக்கை உலக்கை-எத்தனை

சுத்துசுத்தி பூமிசுத்தி வந்தாலும்-சூரியன

விட்டுவிட்டு ஓடிபோகமுடியுமா?

போராலே


ரெண்டுபட்ட ஊருக்குள்ள-அடி

குரங்குகூட குடியிருக்காது

ஒன்றுபட்ட இதயத்தையே-எந்த

அணுகுண்டாலும் தகர்க்கமுடியாது-ஊரு

ரெண்டுபட்டாலே வஞ்சகனுக்கே

கொண்டாட்டந்தானே-அன்பே

வேறுபட்டு நிற்கவேணாம்-மனசே

கூறுகெட்டுப் போகவேணாம்-போராலே

மண்ணாகிப் போயிவிட்ட-இலங்கை அரசின்

வரலாறு தெரியலியா?

துண்டுபட்டால் திண்டாடும்-ஈழமக்கள் படும்

துயரக்கதை அறியவில்லையா?


இகத்தில் பரம்


இகத்தில் பரம்‘

என்பார் வள்ளலார்.

‘செத்த பிறகு என்னடா சிவலோகம்?, வைகுந்தம்?

இத்தரை மீதினில், இதே நாளில், இப்பொழுதே முக்தியை நாடி

சுத்த அறிவு நிலையில் களிப்போம்.’

என்று சங்கினை முழங்குவார் பாரதி.

'தன்னையறிந்து இன்பமுற' வேண்டும் என்பாரே வள்ளலாரே

ஏழ்கடலில் பெரிதன்றோ நான் அடைந்த சுகம்?"

என்று தலைவி அவள் வியப்பது

வள்ளலாரின் தமிழன்றோ!

செத்த பிறகு சிவலோகமா?

வைகுந்தமா? சேர்ந்திட லாமென்றே

எண்ணியிருப்பார்பித்த மனித ரவர்

சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்

இப்பொழு தேமுத்தி சேர்ந்திட

நாடிச்சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்

தூயர ராமென்றிங் கூதேடா சங்கம்-என்று

கூறிடுவாரே பாரதி

Thursday, March 19, 2009

வாழ்வோங்கும்


இதயத்தில் இருந்தால் தானே

இல்லத்தில் இடமிருக்கும்

அன்புகொண்ட உறவுகளில் -இருந்தால்

ஆண்டவனின் அருளிருக்கும்

பிறந்தோம் வளர்ந்தோம்

இருந்தோம் வாழ்ந்தோம்

வாழ் நாளில் என்ன செய்தோம்?- நல்ல

வாழ்வோங்கும் சமுதாயம் அமைக்கும்- நல்ல

சான்றோரின் சொல்கேட்டோமோ?

அன்பு


ஓடமே ஓடமே -அன்பு

ஓடமே ஓடமே-அது

எந்தமலை மீதும் ஏறுமே

எந்தவிண் மீதும் தாவுமே-வாழ்வில்

என்றும் கற்றுத்தரும் மனித நேயப்பாடமே

மனிதகுலம் மேலோங்கவே-பண்பு

மலர்கின்ற பூந்தென்றலே

உழைபாலேஅதிகமாக கேளு குறைவாக பேசு


அன்பாக பழகு அறிவாலே உயரு


பண்பான உறவில் நல்லோரின் நட்பில்


பாட்டாளி இணைப்பில் கூட்டாளி ஆகு


உழைப்பாலே உலகில் மேலோங்கப் பாரு

Wednesday, March 18, 2009

கண்ணருகே வெகுதூரமில்லை


கண்ணே பார்த்தாய்

கண்ணசைத்தாய்

கண்ணால் சிரித்தாய்

கண்ணில் பேசினாய்

கண்ணுள் நின்றாய்
கண்ணாய் இருந்தாய்
கண்ணை இணைத்தாய்
கருத்தில் கலந்தாய்
காலத்தை நீட்டினாய்
கோலத்தை மாற்றினாய்
கொள்கையை ஊட்டினாய்
குறிக்கோள் ஆகினாய்

கண்பார்வையாலே கொன்றாய்

காதல் நோய்க்கு காரணமானாய்
காதல் நோய்க்கு மருந்துமானாய்
கண்ணில் தேன்தந்தாய்

காதல் பூவென மலர்ந்தாய்-பெரும்

கண்ணின் போருக்கு காரணமானாய்-ஆனந்த

கண்ணாகி அழுதாய்-பிரிவாலே

கண்ணீரில் அழுகாதே-பிரிவே

கண்ணில் ஒருபொழுதே-மீண்டும்

கண்ணுக்குள் சந்திப்போமே

கண்மணியே சேரும்காலம்

கண்ணருகே வெகுதூரமில்லை

முத்தமழை தாராயோ?


முகந்திரியாமலே -பார்வை

முகத்திரண்டு கொண்டு-காதலன்

முகத்தின் முகம் நோக்கியே-அன்பில்

முகந்த காதலிலே- நெஞ்சே

முகத்தின் இனிய காதலியே- நிலவின்

முகம்போல் ஒளிவீசுவாய்

முகங்கவிழாமாலே -காதலன்

முகங்காணுகின்றாய்-ஆசை

முகங்கொடுத்தே-- நேர்

முகமுகமாயே-முகத்தில்

முகஞ்சேர்த்து -அந்தி

முத்தமழை தாராயோ?

உயிர்களுமில்லை


ஆணும் பெண்ணும்
இணையும்போதெல்லாம்
கரு உருவாகிவிடுவதில்லை-அந்தக்கருவின்
உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான்.
மூச்சுக்கு மூச்சுதருவது காற்றுதான்
காற்று இல்லையென்றால் மனிதகுலமே இல்லை
காற்று இல்லாத இடத்தினிலே
மூச்சுமில்லை பேச்சுமில்லை உயிர்களுமில்லை

Tuesday, March 17, 2009

சொல்லுங்களேன்

உலகத்தில் இரண்டே நல்லவர்கள் தானடா
ஒருவன் இறந்துவிட்டான்
இன்னொருவன் இன்னும் பிறக்கவே இல்லையடா
இருக்கும் மனிதரெல்லாம் நல்லவராகவே
இருக்க முயற்சிதானிங்கு செய்கின்றாரே-வேறு
நல்லவர்கள் யாரேனும் இருந்தால் நாட்டோரே எனக்கு சொல்லுங்களேன்

கோழையாகவே வாழக்கூடாது

உயிருடன் உள்ளபோதே வாழவேண்டுமே
உயிர்போகுமுன்னே சாகக்கூடாதே-தினம் தினம்
செத்துப்பிழைக்கும் கோழையாகவே
ஆகக்கூடாதே
உண்பது என்பது உயிர்வாழ்வதற்கன்றி
உயிர்வாழ்வது என்பது
உண்பதற்காக மாறக்கூடாது

விளக்கேற்றும்

உண்மை செருப்பணிந்து வலம்வருமுன்னே
பொய்மை உலகத்தையே வலம்வந்துவிடும்
பொய்மை அறிந்துகொண்டு விலக்கிவிட்டால்
உண்மை வாழ்வினிலே விளக்கேற்றும்

சரியாகுமோ?

எப்போதும்
கோடித்தவறுகள் ஒன்றுசேர்ந்தபோதும்
ஒருசரியாகுமோ?
எப்போதும் சரியென்பது சரியானதே
சரியென்பது எப்போதும் தவறாகுமோ?

ஏதுமில்லை

யோக்கியதை ஏதுமில்லை
காலமறிந்து தொழில்செய்யாத மனிதருக்கு
காற்றடிக்கும் மாவுவிற்கும் போதினிலே
கடுமழை பெய்யும் உப்புவிற்கும் போதினிலே
பருவத்திலே பயிர்செய்ய மறந்தவருக்கு-
அறுவடைபற்றிசிந்திக்க
யோக்கியதை ஏதுமில்லை

பார்த்தாயா?

உனது கண்ணின்
உத்திரத்தை பார்த்தாயா
தெரியாது –ஒன்றும்
தெரியாது-உன்
கண்ணின் குற்றம்
உனது இமைக்குத் தெரியாது-தன்
நெஞ்சின் குற்றம் நமக்குத் அறியாது
அடுத்தவர் கண்ணின் தூசியைப் பார்ப்பவனே-
உனதுகண்ணின் உத்திரத்தை பார்த்தாயா

சுவர்க்கமாகும்

ஆண்கள் மலைகள்-
அவர்களின் நெம்புகோல்கள் பெண்கள்
ஆணும் பெண்ணும் சமமானால்
இந்த உலகம் பேரின்பமாகும்
ஆண் உழைப்பாளியின் உரிமையிலே
பெண் பாட்டாளியின் உரிமையும்
சேர்த்து இருக்குது இருவரும்
சேர்ந்து எழுந்தால் இந்த
பிரபஞ்சமே சுவர்க்கமாகும்

சலாம்

சலாம் சலாம்
சலாம் சலாம் சலாம் சலாம்
ஆபத்துல சிக்கிக்கிட்டா சலாம் சலாம்
அந்த மண்ணாங்கட்டிக்கும் சலாம் சலாம்
அகஸ்து மகஸ்தா மாட்டிக்கிட்டா
சலாம் சலாம்
இந்த கம்மாக்கரைக்கும் சலாம் சலாம்
சலாம் சலாம் சலாம் சலாம்

தேர்ந்து

அறிவியல் கோடிகற்றுத் தேர்ந்து
அறிவினில் மேலோங்கடா -உன்
அரைகுறை அறிவு –அது
அரைக்கிணறு தாண்டும்-அது
ஆபத்தானது
நிறைகுடமது ததும்பாதே
குறைகுடமது கூத்தாடுமே- நீயும்
நுனிப்புல் மேயும் மாடாகாதே-ஆழப்
படிக்கின்ற அறிவினில் மேலோங்கடா!

பார்த்தியா?

பாத்தியா?
பாத்தியா? –அடி பாத்தியா?
அத்திப்பூவப் பாத்தியா?
ஆந்தை குஞ்சப் பாத்தியா?
சிப்பி ஓடுறத பாத்தியா?
முத்து வெளைஞ்சத பாத்தியா?உன்
இதயத்தை பாத்தியா?ரத்த
ஓட்டத்தை பாத்தியா?
காத்தத்தான் பாத்தியா?உயிர்
வாரதத்தான் பாத்தியா?-அந்த உயிர்
போறதத்தான் பாத்தியா?

ந்ம்மாளு

முதல் பந்தியென்ன? கடைசி பந்தியென்ன?
ராமையா-அட ராமையா?
அகப்பை புடிச்சவன் நம்மாளு
சமையல் கட்டுல நம்மாளு

உருவாகாது

பதமாகாது –அடியே
இதமாகாது
அடித்துப் பழுத்தாலே
கனிமட்டுமல்ல காதலும்தானே

சுகமாகாது –அடியே
சுவையாகாது
ஒருமனதில் மட்டும் காதல்
உருவெடுத்தாலே
அன்பாகாது
இருமனதும் கலந்துவிட்டால்
எவராலும் பிரிக்கமுடியுமா?
ஒருமனதுமட்டும் நினைத்துவிட்டால்
உண்மைகாதல் உருவாகுமா?

சரியில்லை

சரியில்லை சரியில்லை
சரியில்லை சரியில்லை
முறித்துவளர்க்காத முருங்கையும்
சரியில்லை சரியில்லை
சரியில்லை சரியில்லை
அடித்துவளர்க்காத பிள்ளையும்
சரியில்லை சரியில்லை-தேர்தலில்
வாக்கைப் போட்டுவிட்டு-கேள்வி
கேட்காத மக்களும்
சரியில்லை சரியில்லை-அரசியல்வாதி
வாக்குக்கு காசுகொடுப்பதும்
சரியில்லை சரியில்லை-மக்கள்
வாக்குக்கு காசுவாங்குவதும்
சரியில்லை சரியில்லை-அரசியல்வாதிகள்
அரசியலை வியாபாரமாக்கியதும்
சரியில்லை சரியில்லை
தனியுடைமை அதிகாரத்தில் இருப்பதும்
சரியில்லை சரியில்லை
பொதுவுடைமை அரியாசனத்தில் ஏறாதிருப்பதும்
சரியில்லை சரியில்லை-போலி அரசியல்வாதிகளை
மக்கள் விரட்டாமலிருப்பது
சரியில்லை சரியில்லை-உண்மை அரசியல் நல்லோரை
மக்கள் புரியாமல் இருப்பது
சரியில்லை சரியில்லை

Monday, March 16, 2009

படைப்பேன்

எங்குங் கலந்தாய் என் உள்ளத் து எழுகின்றாய்-காதல்
இருந்த மனத்தில் இசைய இருந்தாய்
நானே அறிந்தேன் அன்பினாலே
ஊனாய் உயிராய் உணர்வாய்
நானே அறிந்தேன் மெய்யி னாலே
தூராதி தூரமே
-
நானே பறந்தேன்
தேசாதி தேசமே
நானே தெரிந்தேன்

எங்கும் மானுடம் வாழ்கின்ற நல்வழிகொண்டு
எதிலும் புதுமைதான் அறிவியல் தானறிந்து
பொங்கும் வசந்தம்தான் மண்ணில் உயர்த்தி
போரில்லா அமைதி உலகந்த்னை படைப்பேன்

காணுமுன்னே

குழலினிது யாழினிது -உன்
குரலினையே கேட்குமுன்னே
குயிலினிது கிளியினிது-உன்
தமிழிசையை சுவைக்குமுன்னே
நிலவழகு மலரழகு-உன்
முகந்தனையே பார்க்குமுன்னே
மின்னழகு மானழகு-உன்
நடையினையே காணுமுன்னே
மீனழகு அம்பழகு-உன்
கண்ணதையே சேருமுன்னே

காதல்

குழல்வழி நின்றது யாழே
குமரிவழி சென்றது நானே
கரைவழி அசைந்தது தென்னை
கன்னிவிழி ஈர்த்தது என்னை
பனிமலர் பூத்தது காலை
கனியிதழ் சுவைத்தது காளை
உனையெனை இணைத்தது காதல்
சிக்கென அணைத்தது கூதல்

அன்புள்ளங்களே

ஆசை தருங்கோடி அதிசயங்கள் கண்டதிலே
காதல் தருமோடி விசித்திரங்கள் கண்ணதிலே
நெஞ்சம் வருமோடி யுகங்களின் இன்பங்களே
தஞ்சம் மஞ்சமோடி இணைகின்ற அன்புள்ளங்களே

Sunday, March 15, 2009

முன்னேறனும்

நீதிநெறியாலும் ஞான நூலாலும்
நாமெல்லாம் சேர்த்தொன்றாய் அறிந்து
உட்பகையும் வெளிப்பகையும்
அறுத்தெறிந்து முன்னேறனும் பூமியிலே

காளைகளே

நல்லூருக்கு போகின்ற வழிய
நல்லது கெட்டது அறிந்து- நாட்டுல
நல்லவழி செல்லவேணும் காளைகளே
மதத்தாலே இனத்தாலே மொழியாலே
சாதியாலே பிரிக்கின்ற தீக்குணமறிந்து
சண்டையின்றி நடக்கவேணும் காளைகளே

எல்லையாகும்

மோனம் என்பது ஞானத்தின் எல்லையாகும்
காதல் என்பது அன்பதின் எல்லையாகும்
கானம் என்பது இசையதின் எல்லையாகும்
கவிதை என்பது ஆத்மாவின் எல்லையாகும்

தாழ்வில்லையடா

வெள்ளைமனத்துக்கு இல்லை
கள்ளசிந்தையடா
உண்மை ஒன்றே
உயர்த்தும் குணமானால்
உலகினில் சண்டை ஏதும் இல்லையடா
உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் தாழ்வில்லையடா

ஆண்பெண் சமத்துவத்தில்

இல்லறம் அல்லது நல்லறமில்லை-துணைவியுடன்
இல்லறமும் சமூகமும் நலம்பெறவே
ஆண்பெண் சமத்துவத்தில் உயர்வுறவே
அணிவகுக்கும் ஆண்பெண் ஒற்றுமையிலே
சமத்துவ உலகினைப் படைத்திடுவோமே

குற்றம்

குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லையடா-அடுத்தவர்
குறைகளைச் சொல்லித்திரியாதே-உனது
குறைகளை மாற்ற மறக்காதே-உன்
குற்றத்தை ஒத்துகொள்ள மறுக்காதே

தீர்வு

தீராக்கோபம் கேடாய் முடியும்
ஆராப்பகையும் போராய்முடியும்-பேசித்
தீராதது இம்மண்ணில் ஏதுமில்லை-எதற்கும்
தீர்வு என்பது இல்லாமலில்லை

பிரிவுபட்டால்

நல்லிணக்கம் இல்லையென்றால் துன்பம்வந்து சேருமடா
நாமெல்லாம் வேறுபட்டால் வாழ்வு துயரம் ஆகுமடா
ஒன்றுபட்ட தேசத்திலே உயர்வு தானே ஆகுமடா
வேற்றுமையில் பிரிவுபட்டால் தாழ்வாகிப் போகுமடா

உண்மையில்லையே

தனது நெஞ்சம் அறியாத பொய்யில்லையே-காதலி
உனது நெஞ்சத்தை ஒழித்துஒரு வஞ்சகமில்லையே- நீ
அறியாது எந்த தவறும் நடப்பதுமில்லையே-காதலை
புரியாத காதலரின் அன்பு உண்மையில்லையே

சிரிக்கும்

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும
வளர்த்திடும் மகவின் வளர்ச்சியும் புரியும்
உழைப்பின் பயனே அறுவடையில் அறியும்
முயற்சியின் விளைவே வெற்றியில் சிரிக்கும்

வேணும்

பால்பழம் தேன் அமுதம் ஆனாலும்
காலமறிந்து உண்டிடவேணும்-புரட்சிப்
படையும் பருவமறிந்து நடத்திடவேணும்- நல்ல
பருவமறிந்து பயிரும் மணமும் விளைத்திடவேணும்

தூரமிலலை

எந்ததுன்பம் வந்தபோதுமே
அன்பு நெஞ்சே கலங்காதிருப்பாயே
எந்த துயரமும் நம்மை
என்னசெய்யும் சோர்ந்துவிடாதே -
நம்பிக்கை ஒன்றே வாழ்வானால்-முயற்சியிலே
நாமே உயரும் காலம்தூரமில்லை

கற்றுவிடு

மோகம் தன்னை முறித்துவிடு-அன்பு
காதல் தன்னை ஜெயித்துவிடு-பேராசை
போக்கி நல்வழி நடந்துவிடு-மக்கள்
வாழும் வழிமுறை கற்றுவிடு

வேண்டாம்

மனமொத்த மனைவியோடு கூடிடவேணும்
சமமான தரையிலே படுக்கவேணும்-தெற்கே
கிழக்கே தலைவைத்து படுத்திடவேணும்-தனக்கு
பொருத்தமில்லா இடத்தினிலே தூங்கிடவேண்டாம்
தேவையில்லாத மாதரோடு உறவும் வேண்டாம்
தெனாவெட்டாக எப்போதும் பேசிடவேண்டாம்

குற்றமாகும்

ஒருசெய்தியை சொல்லவேண்டியிருந்தாலே
அந்தசெய்தியை உண்மையாக சொல்லிடவேண்டும்
அதுவல்லாது பேசாதிருப்பதே மேலாகும்
வதந்தியைப் பரப்புவது பெருங்குற்றமாகும்

Saturday, March 14, 2009

தேர்தல்திருவிழா


ஐந்தாண்டுக்கு ஒருமுறை வருகிற
தேர்தல் திருவிழா-இப்போதும்
வந்துவிட்டது
கரண்ஸி நோட்டுகள்
கதவைததட்டுகிற காலமிது
கை நீட்டிக் காசு வாங்கிவிட்டால்- நீங்கள்
கை நீட்டிக் கேள்விகேட்க முடியாதே
ஜன நாயகம் பண நாயகம் ஆகின்ற
அசிங்கமான வெட்கக்கேடான அவலமிது
ஓட்டுவஙகி நீங்களாக இருக்கும்வரையில்
உங்களுக்கு ராஜம்ரியாதைதான்
காரில் பவனி வந்த எம்பிக்கள்
கால்கடுக்க நடந்துவ்ருவதெல்லாம்
எதற்காக? உங்களுக்காக நாளெல்லாம்
சேவகம் புரிவதற்காகவா? இல்லை
உங்களின் ஜன் நாயக் உரிமையை
அபகரிக்கத்தானே?
ஓட்டுபோடும் உரிமைதனை
கரண்ஸியாலே களவாடும்
களவாணிகளை நீங்கள் புரியாத்வரையில்
உங்களின் இன்பவாழ்வு
கானல் நீர்தானே-தேர்தல்களத்தில்
நல்லவரும் இருக்கும்போது
நல்லவரை இனங்கண்டு
ஓட்டினைப் போடாதவரையினில்
உங்களின் ஓட்டால்
உங்களுக்கு எந்தபயனும்
விளைந்து விடப்போவதில்லை

Friday, March 13, 2009

காதல் கனி


காய்ச்ச மரந்தானடி கல்லடிபடும்

கண்ணடிபடும் சொல்லடிபடும்-காதல்

கனிஞ்ச மரத்த வெட்டுறாங்க குத்துறாங்க

காணாமத்தான் ஆக்கிடவே ஊருலதான்

கங்கணந்தான் கட்டுறாங்க-அடி எந்த

கம்படி கொம்படி பட்டாலுமே- நானும் நீயும்

கனியவிடப் போறதில்லே-அன்பாம் காதல்

கனியவிடப் போறதில்லே

கண்டுகண்டு


பூவாடை தூக்குது

புதுக்காத்து வீசுது-அடி

பாவாடை பருவத்து-பழகிய

பழங்கதைய ஏன்மறந்த-உன்

மேலாடை பறக்குது-என் நெனப்பு

மெல்லமெல்ல மறக்குது-கனவுக்குதிரை

வானத்துல ஓடுது-தெம்மாங்கு

வர்ணமெட்டுல பாடுது-என் நெஞ்சத்துல

காதலாகி கசியுது--கண்ணிரண்டும்

கண்டுகண்டு ரசிக்குது


வசந்தமாகும்


இன்று மிகமிக நல்ல நாளாகும்-மன்னிப்பு


என்றும் மிகமிக நல்ல வெகுமதியாகும்-வாழ்வில்


பணிவு மிகவும் வேண்டியதாகும்--வெறுப்பு


எப்பவும் வேண்டாததாகும்-சமயோகிதபுத்தி


மிகப்பெரிய தேவையாகும்-பேராசை


மிகக்கொடிய நோயாகும்-அன்பு


மிகப்பெரிய வேதமாகும்-குற்றம் காணுதல்


மிகவும் சுலபமாகும்--பொறாமை


மிகவும் கீழ்த்தரமான ஒன்றாகும்-வதந்தியென்றும்


மிக நம்பக்கூடாததாகும்-அதிகப்பேச்சு


ஆபத்தைக் கொடுப்பதாகும்-தேவையில்லாத


உபதேசம் செய்யக்கூடாததாகும்--உதவியென்றும்


அடுத்தவருக்கு செய்யக்கூடியதாகும்-பயனில்லாவிவாதம்


ஒதுக்கிவிட வேண்டியதாகும்-உழைப்பென்றும்


உயர்வினுக்கு வழியாகும்-வாய்ப்புகளையே


ஒருபோதும் நழுவவிடக் கூடாததாகும்-- நட்புஒருபோதும்


பிரியக்கூடாத்தாகும் - நன்றி ஒரு நாளும்


மறக்கக்கூடாததாகும்-பொதுவுடைமை தத்துவமே


பிரபஞ்சத்திற்கே வசந்தமாகும்

Thursday, March 12, 2009

ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோம்
ததிங்கணத்தோம் ததிங்கணத்தோம்
அடுத்தவன வம்புக்கிழுத்தவனே
அன்னைக்கே போட்டுருவான் ததிங்கணத்தோம்
ஆம்பளசொல்ல கலக்காம செய்யுற பொம்பள
அறைக்குள்ள போட்டிடுவா ததிங்கணத்தோம்
பொம்பளசொல்ல கேட்காம போன ஆம்பள
பொழுதுசாய போட்டிடுவான் ததிங்கணத்தோம்
அடுத்தவன் பொண்டாட்டிய பல்லக்காட்டுறவன்
முதுகில வாங்கிடுவான் ததிங்கணத்தோம்
தேர்தலுல தோத்தவன் திரும்பவுமே
தெருவுல போட்டிடுவான் ததிங்கணத்தோம்
தேர்தலில சரியான கட்சிக்கு ஓட்டுப்போடாதவங்க
தினந்தோறும் போடுவாங்க ததிங்கணத்தோம்
காதலையே சரியான நேரத்துல சொல்லாத
காதலரே போட்டிடுவாங்க ததிங்கணத்தோம்
ஓட்டுக்கு காசுவாங்கி ஓட்டுப்போட்டவங்க
ஓயாம போடுவாங்க ததிங்கணத்தோம்
பக்கவாத்தியம் சரியில்லாத பாடகனே
பாடமுடியாம போடுவாங்க ததிங்கணத்தோம்
ஓடாத படமெடுத்த தயாரிப்பாளரே
எப்போதும் போடுவாரு ததிங்கணத்தோம்
மெட்டுக்கு பாட்டெழுத முடியாத பாடலாசிரியரே
துட்டுக்கு தினந்தோறும் ததிங்கணத்தோம்
உழைக்கமுடியாத சோம்பேறி நாயகளே
நாளெல்லாம் போட்டிடுவான் ததிங்கணத்தோம்

Wednesday, March 11, 2009


மடியும்வரை மாறுசெய்யமாட்டேன் என்றவனே

மாறுசெய்துவிட்டான் ம்னமேபொறுக்குதில்லையே

விடியும்வரை விழித்திருந்தேன் அவனுக்காகவே

வேர்த்திருந்தேன் விதிர்விதிர்த்தேன் அந்திமாலையே

பார்த்திருந்தேன் பதைபதைத்தேன் பருவக்கனவிலே

பழகியதையே நினைத்திருந்தேன் இன்றுவரையிலே

தலைவனவன் வந்திடுவானா? தவித்திருந்தேனே

தப்பாது வந்துவிட்டால் மகிழ்ந்திடுவேனே

Friday, March 6, 2009

யாரோ?


யாரோ? இவர் யாரோ?

என்னபேரோ? அறிந்தேனே


கணினியாவும் பார்புகழாகும் மதுரையில்

பல்கலை கற்றுநின்றவர் (யாரோ?)

Monday, March 2, 2009

அமைதி என்று திரும்பும்?


யாருமற்ற நிர்கதியாய்-எங்கள்

வயல்களும் தோப்புகளும்

கடல்புரத்து கிராமங்களும்

அமில நெடியினில்

வெடிகுண்டுச் சிதறலில்

அழிவின் விளிம்பிலே-எங்கள்

தேசத்து அப்பாவிமக்களுக்கு-அரக்ககுண

இனவெறியின் தாக்குதலின்

உக்கிரங்கள்

என்றுதணியும் ஈரமற்ற ஈழப்போர்

கண்விழிக்க மனமில்லை

கன்வில் அம்மா

விழித்தால் பீரங்கிச்சத்தம்

வெடிகுண்டின் கோரஒலி

கனவிலும் அதுதானே

காதுகளைத் துளைக்கிறது

துயில்கிற குழந்தைக்கு

துயிலெங்கே?ஓய்வெங்கே?

போர்க்களத்தில் உயிர்விட்டாரே

அன்பு மழலையின் பெற்றோரே-இந்த

விரல்களின் நுனியினிலே

பசிதான் அடங்கிடுமோ

பாலுக்கு வழியில்லை

பசியினிலே உறங்கிடுமோ?

தூங்கியும் தூங்காமலும்

துக்கமில்லாத போரில்லாத

தூக்கத்திற்கான காலமிதுவல்ல

இனவெறிப் போரோ உச்சத்தில்

துயரத்திலும் துன்பத்திலும்

அழுகிறது அழகுக் குழந்தை--இங்கே

ஈழப்பிரதேசத்தின் வசந்தவிடியலை--அது

எப்போதுதான் காணப்போகிறதோ?-உன்

நித்திரைக்கு தூளியேதும் இல்லையடா

துளியூண்டு இடம் போதுமடா-உனது

நிம்மதியான தூக்கத்திற்கு

போர்மேகம் என்று மறையுமோ?

அமைதி வாழ்வுதான் என்றுதிரும்புமோ?

தொப்புள்கொடி அறுபட்டு

பூஒன்று தரைமீது-உன்

சகோதர சகோதரிகள்

தோழர் தோழியர்

உற்றார் உறவினர்

தாயார் தந்தையர்

அனைவரையும் சந்தோசத்தில்

காணும் நாள் தித்திக்கும் நாள்

கண்ணான நாள் எந்நாளோ?இவ்வுலக

ஈழத்தில்

சந்தோசவாழ்வு என்று திரும்பும்?

-

Sunday, March 1, 2009

அமுதே


அறிந்தேன் அன்பே அமுதே

புரிந்தேன் காதல் மலரே

தெரிந்தேன் நெஞ்சில் நிலவே

தொடர்ந்தேன் வாழ்வின் கனியே

உணர்ந்தேன் இன்ப உணர்வே

கலந்தேன் உயிரின் உயிரே

களித்தேன் தேனின் சுவையே