Popular Posts

Friday, December 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே! தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

எவ்வளவு பெரிய மக்கள் நெரிசலிலும்
எவ்வளவு நிறையக் கூட்ட கும்பலிலும்

எனக்கென்றே ஒரு தனிப் பார்வை
எனக்கென்றே உன் இதயத்திலே ஒரு தனியிடம்

எப்போதுமே உன்னிடத்தில் மிச்சம் இருக்குமே என் தோழி!

நிலவைத்
தொலைத்த வானம் மெளனமாய்
அழுகிறது போலவே அடிஉந்தன் கண்களில் அது என்ன கண்ணீர்
மழை !

நான்கு பகுதியாகவே ,
பிரிந்து கிடந்தபோதிலும் -இதயமே ,
ஒன்றாக சேர்ந்து துடிக்கிறதே!

கண்கள் நான்காய் தனித்தனியாய் இருந்த போதிலும்-ஒரே காட்சியாகியே
காதலினில் ஒன்றாகவே சேர்ந்து உறவானதே!.

முதல் பார்வைத் துடிப்பினிலே ஆயிரங்காலத்துப் பயிராம்
உயிர் ஒன்று பிறக்கிறதே!-உன்

ஒவ்வொரு அன்புப் படிப்பிலும்
உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே!

துன்பத்திலும்,
இன்பத்திலும்,காதலன்பே
அது இனிய அனுபவத்திலும் அனுதினமும் புதிய
உணர்வுகளுடனும் துடிக்கிறதே..

இதயத்தின் அந்த துடிப்பானதொரு அன்புச்
சத்தம் மட்டும் ஆண்டாண்டு காலமாகவே ,
உணர்தலின் நேச தேடலிலே காதில் ரீங்காரமாகியே
கேட்கிறதே!.
Saturday, December 25, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்ப்போடுதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்ப்போடு துவங்கிடுதே
அதுவும் ஒரு நல்ல அனுபவத்தோடு முடிகின்றதே!வாழ் நாளின்
ஒவ்வொரு நொடியும் நமக்களித்த கொடையல்லவா?-என்றும்
உண்மை வாழ நாமும் உறுதிகொள்வது நம் கடமையல்லவா?
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஈசல் குஞ்சுகளே !

தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!-தம்முயற்சியினாலே!
தன்னம்பிக்கையாலே !
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!-மானிடர்க்கோ!-எத்தனைமுறை
வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் சூட்சுமத்தை சொல்லித் தந்தனவே!

அந்திவேளை இது
ஆரஞ்சு ஒளிக்கோடுகளாய்
கூட்டம் கூட்டம் கூட்டமாய் இறகுகள் மினுங்கவே!
நூற்றுக் கணக்கினில் ஈசல் குஞ்சுகளே!-சுயமாய்
தாங்களும் பறந்திடவேண்டி
ஆகாயம் தேடிப் பறந்து போயினவே!-ஆனாலும்
பூமிதன்னில் சோர்ந்து வீழ்ந்தனவே!
சோர்ந்து வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிப் பறந்தனவே!
தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்மனசே என்மனசே!

என்மனசே என்மனசே!
ஒத்தையடி பாதையையும் மறந்துட்டியா>--அந்தகுளிர்

வேப்பமர நிழலையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னத்தமக போட்டுவச்ச அழகான
பரங்கிப்பூ வெச்சபச்சரிசி கோலத்தையும் மறந்துட்டியா?>

என்மனசே என்மனசே-என்னாசை
அத்தமகள காணப்போன கொல்லையிலே
தும்பப்பூவ உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சியையும் மறந்துட்டியா?

என்மனசே என்மனசே
காலமெல்லாம் காதுல ரீங்காரம் பண்ணுகின்ற- நம்ம
நாட்டுப்புறப் பாட்டையுந்தான் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே-
நானொருபக்கம் அவளொருபக்கம் உச்சிகுளிரும்
ஓடை நீரு குளியலையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அந்தக் குளத்து நீருல மழைவிழுகின்ற
அழகும் கொப்புளச் சத்தத்தையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
ஆடும்கம்பால் கொல்லைவிட்டுப் பறந்திடும்
காட்டுப் பறவைகளின் குரலோசையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அசையும் சிலந்தி வலையிலும் அழகுசெய்யும்
இளம்பனித் துளியைப் பார்த்ததையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
கருப்பசாமி கோவில் திருவிழாக் கொண்டாட்டம்-அந்த
வழுக்கை மண்டைத் தாத்தா கிண்டலுந்தான் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னதான் வருமானம் என்றாலுமே இழந்துபோன-பெரிதான
அந்தகிராமத்து சுகங்களையும் தான் நீயும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே!
Thursday, December 23, 2010

!தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் தேனமுதையே”

வெள்ளை நிறக் காகிதத்தில் ஒரே ஒரு வரியினிலே ஒரு கவிதை எழுதினேனே!!அதுவே
காதலியே உந்தன் பெயரானதோ?-இல்லை

உள்ளமிரண்டிலும் வெள்ளமான காதல் தேனமுதையே குழைத்து

நம்மிருவருக்கும் இன்பத்தின் எல்லையினை உணர்த்திய காவியமானதோ?


தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நெஞ்சினிலே!

மண்ணினைத் தொடாத விழுதாம் அவளின் கூந்தலிலே
அந்த காதல் ஒற்றை ரோஜாவே
ஊஞ்சலாடுகிறதே!
அன்பினையே ஒரு புன்முறுவலிலே எடுத்துச் சொல்லியே
ஆனந்த நடனத்தையே நெஞ்சினிலே ஆட்டுவித்ததே!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலாம் ஒரே தூண்டிலிலேதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

கண்ணாம் இரு மீன்கள்
மாட்டிக் கொண்டனவோ!
ஒரே தூண்டிலிலே -காதலாம்
ஒரே தூண்டிலிலே!
நெஞ்சாம் நேசத்திலே
நெருக்கும் பாசத்திலே
சிக்கிக் கொண்டனவோ!
அன்புகொண்ட இதயங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒருதலைக் காதலே!

அவன் ஒருதலையாகவே !
கானலுக்குள்
மீன் பிடித்தானே!
அவள்
கைகளுக்குள் அகப்படாத குரவைக் குஞ்சாகவே
கண்களுக்குள் சிக்காத புள்ளிமானாகவே துள்ளி ஓடிவிட்டாளே!
காதலிலே இருவருக்கும் கருத்தொருமித்திட வேண்டுமே!
கருத்தொற்றுமை இல்லையென்றால் அதுகாதலில்லை ஒருதலைக் காதலாகுமே!
தாடி வளர்த்தாலும் தத்துவம் பேசினாலும் ஓடி அடையாது ஒருதலைக் காதலே!!
தன்னுயிரினை மாய்த்துக் கொண்டாலும் கடையேறிடுமோ ஒருதலைக் காதலே!

தமிழ்பாலா-த/காதல்/கவிதை/தத்துவம்-மேகம் அழுகிறது.!

மண்ணில் வரதட்சணைக் கொடுமைகண்டு

மேகம் அழுகிறது....மழையாகவே


ஒரு சோக இலக்கியமாகவே !


பட்டுப்புடவையிலே சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சிகளே ஒரு துன்ப
ஓவியமாகவே அழுகின்றனவே!.
இனிக்கும் பாகாகவே சுவையாக்கும்
ஆலையினிலே அரைபட்ட ..
கட்டுக் கரும்புகளே ஒரு சோக
இலக்கியமாகவே தவிக்கின்றதே!த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-எங்கோ பிறந்த இலக்கியமே ,!

எங்கோ பிறந்த விதையும், நிலமும்,
கலந்தபோதோ வெள்ளாமையிலே!...

எங்கோ பிறந்த நதிகள்,
கலப்பதென்னவோ கடலினிலே!...........

எங்கோ பிறந்த இலக்கியமே ,
கலந்ததென்னவோ வாசகனின் உள்ளந்தன்னிலே!...

எங்கோ பிறந்த தேனும் பாலும்
கலப்பதென்னவோ சுவையினிலே!.
..

எங்கோ பிறந்த நானும், நீயும்,

\\\கலந்துவிட்டோமே நம் திருமணத்திலே!


த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-எங்கோ பிறந்த இலக்கியமே , த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-

எங்கோ பிறந்த விதையும், நிலமும்,
கலந்தபோதோ வெள்ளாமையிலே!...

எங்கோ பிறந்த நதிகள்,
கலப்பதென்னவோ கடலினிலே!...........

எங்கோ பிறந்த இலக்கியமே ,
கலந்ததென்னவோ வாசகனின் உள்ளந்தன்னிலே!...

எங்கோ பிறந்த தேனும் பாலும்
கலப்பதென்னவோ சுவையினிலே!.
..

எங்கோ பிறந்த நானும், நீயும்,

\\\கலந்துவிட்டோமே நம் திருமணத்திலே!


Friday, December 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-/-”:கடைத்தேங்காய்க் கடைகள்”

கடைத்தேங்காய்க் கடைகள் இருக்கின்ற வரையினில்-இங்கு
வழிப்பிள்ளையார்களுக்கு கொண்டாட்டம் தான்!
கையினில் காசு உள்ளவர்கள் எல்லாம் தேங்காய் உடைப்பார்கள்
காசில்லாத ஏழைகளோ! சூடத்தை ஏற்றிடுவார்கள்.
சூடத்தை ஏற்றிடக் கூட முடியாதவர்கள் கைதனைக் கூப்பி
ஆண்டவனைத் தொழுதிடுவார்கள்!
அவரவர் ஆண்டவனை அவரவர் வழியினில்
ஆண்டாண்டுக் காலமாய் தொழுதிடுவார் மக்கள் அனைவருமே!
மனதினை ஒருமுகப் படுத்திடவே முன்னோர்கள் வகுத்திட்ட
வழிமுறைகள் மரபுவழி வழிபாடுகள் ஆயினவே!-ஆனாலோ
மனிதரோ! பலபேதங்கள் கொண்டு மதவெறி கொண்டாரே!
ஒற்றுமைக்கு வழிசொன்ன முன்னோர் வழிவிட்டு
வேற்றுமையில் ஏனோ மனிதர்கள் பிரிந்து கிடக்கின்றாரோ?


தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-/-:

Sunday, December 5, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /- அவளுக்கு !

மருதாணியே மருதாணியே - நீயும்
தலையத் தலைய ஆட்டாதடி! -என்னையே
சீண்டித்தான் பார்க்காதடி! -
என்காதலியின் மேனி வழவழப்பாகவே -உன்னையே
அரைச்சுத் தேய்த்துக் குளிக்கச் சொல்லப் போறேண்டி!

கோரைக் கிழங்கே கோரைக் கிழங்கே!
காலையே தீண்டாதே !-என்காதலியாம் கனிமொழியாம்
அவளுக்கு !
காலமெல்லாம் அழகு மெருகு ஏறிடவே!
உன்னைய
தேனுல கலந்து உண்டுவரவே அவளோட
மேனி பொலிவு பெறும் அதனாலே
உன்னையே வேரோட எடுத்திடப் போறேனே!

அருகம்புல்லே அருகம்புல்லே சும்மா சும்மா ஆடாதே!
என்காதலிக்கு முகத்தழகும் கூடிடவே!
உன்னைய நீர்விட்டு நன்றாய்
அரைத்து வெல்லம் சேர்த்து கண்ணே
அனுதினமும் உண்டுவரச் சொல்லப் போறேண்டி!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /- என்னருமைக் காதலியே !

வசீகரமே -
முகவசீகரமே
கொண்டவளே
இனியவளே என்னவளே!
என்னருமைக் காதலியே!-அடி
சந்தனக் கட்டையில எலுமிச்சைச் சாற்றில்
அரைத்து நீயும் பூசி வந்தாயோ?

தேவதையோ?
தென்பாங்குப் பாட்டே!
தென் திசைத் தென்றலே!
உன்முகமோ பிரகாசமாய் மினுமினுக்குதே
-அட நீயும்
கானா வாழையும் மாவிலையும் -சமமாய்
கலந்து காய்ச்சி வடிகட்டி முகத்தில் தடவி
-அரைமணிக்
-காலம் கழித்து கழுவித்தான் நீயும் வந்தாயோ?

அடிச் சித்திரைக் கள்ளியே!
உம்மேனி ஆரஞ்சு மேனியாய்
மினுமினுத்து பளபளப்பது ஏனடியோ?
ஆரஞ்சுப் பழந்தன்னையே நீயும்
அனுதினமும் உண்டுவந்த காரணந்தானோ கூறடி?

காதலியே -உன்
கன்னஞ்சிவந்த காரணம் தெரியும் அது
காதலன் என்னை நீயும் கண்டதினாலே தானே
காதலியே -உந்தன்
கன்னிமேனி சிவந்த காரணம் என்னடி?
அட எஞ்சோடிக் காதலனே!- நான்
வெள்ளரிக்காய்தான் நறுக்கி மஞ்சள அரைச்சு
வேப்பம்பூவ சேத்து என்மேனியில பூசிக்
குளித்து குதித்து வந்தேனே எனதன்புக் காதலனே!

Saturday, December 4, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் --" இலங்கைத் தமிழர்கள் "

சுனாமியில் சுருட்டிச் சென்றவர்கள் எண்ணிலடங்காத மக்கள்- ஆனாலும்
சிங்கள வெறியர்களாலே கொலையுண்ட ஈழத் தமிழ்மக்களோ!
அதைவிட ஆயிரக்கணக்கினில் மாண்டு போனார்களே!
சம உரிமை கேட்டதாலே ஒரு இனமக்களையே அழித்து
சிங்களவெறியர்கள் பேயாட்டம் ஆடி பிணங்களைக் குவித்தார்கள்!
சுனாமியில்
சுருட்டிச் சென்றவர்கள் எண்ணற்றோர்
ஆனாலும் ,அதைவிட
ஈழமண்ணில் ,குருதிச்சேற்றில்
சிங்களவெறியர் களாலே
சூறையாடப்பட்ட
எங்கள்
ஈழத்
தமிழர்கள்
ஏராளமே!

Friday, December 3, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஹைக்கூக் கவிதைப் பறவையே!

ஹைக்கூக் கவிதைப் பறவையே!
தடையிருந்தும் தனி நடையினில்
தனித்துவமாய் வானைக் கிழித்து சிறகடித்துப்
- புதுமையாய்
தாரணியில் தனிவலம் வருகின்ற -இலக்கிய வானத்து
தன்னிரகற்ற ஆதவனே!
ஹைக்கூக் கவிதைப் பறவையே!

உன்னில் நீளமில்லை ஆனால்
உன்னில் ஆழமிருக்கிறதே!
உன்னில் பிரமாணடமில்லை ஆனால்
உன்னில் பிரபஞ்சமே ஒளிந்திருக்கிறதே!

உன்னில் எளிமையுண்டு ஆனாலும்
உன்னில் உண்மையுமுண்டே!!
உன்னுருவமோ சிறிதாகும் ஆனாலும்
உன்கருத்துக்களோ! பெரிதாகும் !

உன்னில் எந்ததேச மொழியும் பின்னிப் பிணைந்திருக்கும்
உன்னில் தேச,இன,மொழி,மத,பாகுபாடின்றி மொழிவளம் நிறைந்திருக்கும் !
உன்னில் புரட்சி இருக்கும், உன்னில் வசந்தம் இருக்கும் ,உன்னில் இயற்கை இருக்கும் !
உன்னில் மக்களின் சுதந்திரம் இருக்கும் ,உன்னில் மக்கள் ஜன நாயகம் இருக்கும்!

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /தமிழே!"

தமிழே நீ தனித்துவம் ஆனதாய்!
-எந்த திசைச் சொல்லையும் ,
-எந்த மொழி வளத்தையும் , எந்த பிரபஞ்ச தத்துவத்தையும் ,எந்த விஞ்ஞான முன்னேற்றத்தையும் ,
-எந்த தேசப் பொருளையும் , எந்த இலக்கியப் புதுமையையும் ,எதையும் உன் சேயாய் ஏற்கும் தாய்மை உள்ளம்
உன்னில் புதைந்து கிடக்கின்றதாலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

தமிழ்பாலா /காதல் / கவிதை / தத்துவம் / சின்ன சின்ன ஆலவிதைக்குள்ளே !"

சின்ன சின்ன ஆலவிதைக்குள்ளே !
எத்தனை பெரிய ஆலமரமே ஒளிந்திருக்கின்றதே!
சின்ன சின்ன மழலைக்குள்ளே !
எத்தனை எத்தனை தலைமுறைகளே ஒளிந்திருக்கின்றதே!