Popular Posts

Friday, December 3, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஹைக்கூக் கவிதைப் பறவையே!

ஹைக்கூக் கவிதைப் பறவையே!
தடையிருந்தும் தனி நடையினில்
தனித்துவமாய் வானைக் கிழித்து சிறகடித்துப்
- புதுமையாய்
தாரணியில் தனிவலம் வருகின்ற -இலக்கிய வானத்து
தன்னிரகற்ற ஆதவனே!
ஹைக்கூக் கவிதைப் பறவையே!

உன்னில் நீளமில்லை ஆனால்
உன்னில் ஆழமிருக்கிறதே!
உன்னில் பிரமாணடமில்லை ஆனால்
உன்னில் பிரபஞ்சமே ஒளிந்திருக்கிறதே!

உன்னில் எளிமையுண்டு ஆனாலும்
உன்னில் உண்மையுமுண்டே!!
உன்னுருவமோ சிறிதாகும் ஆனாலும்
உன்கருத்துக்களோ! பெரிதாகும் !

உன்னில் எந்ததேச மொழியும் பின்னிப் பிணைந்திருக்கும்
உன்னில் தேச,இன,மொழி,மத,பாகுபாடின்றி மொழிவளம் நிறைந்திருக்கும் !
உன்னில் புரட்சி இருக்கும், உன்னில் வசந்தம் இருக்கும் ,உன்னில் இயற்கை இருக்கும் !
உன்னில் மக்களின் சுதந்திரம் இருக்கும் ,உன்னில் மக்கள் ஜன நாயகம் இருக்கும்!

No comments: