Popular Posts

Sunday, December 5, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /- என்னருமைக் காதலியே !

வசீகரமே -
முகவசீகரமே
கொண்டவளே
இனியவளே என்னவளே!
என்னருமைக் காதலியே!-அடி
சந்தனக் கட்டையில எலுமிச்சைச் சாற்றில்
அரைத்து நீயும் பூசி வந்தாயோ?

தேவதையோ?
தென்பாங்குப் பாட்டே!
தென் திசைத் தென்றலே!
உன்முகமோ பிரகாசமாய் மினுமினுக்குதே
-அட நீயும்
கானா வாழையும் மாவிலையும் -சமமாய்
கலந்து காய்ச்சி வடிகட்டி முகத்தில் தடவி
-அரைமணிக்
-காலம் கழித்து கழுவித்தான் நீயும் வந்தாயோ?

அடிச் சித்திரைக் கள்ளியே!
உம்மேனி ஆரஞ்சு மேனியாய்
மினுமினுத்து பளபளப்பது ஏனடியோ?
ஆரஞ்சுப் பழந்தன்னையே நீயும்
அனுதினமும் உண்டுவந்த காரணந்தானோ கூறடி?

காதலியே -உன்
கன்னஞ்சிவந்த காரணம் தெரியும் அது
காதலன் என்னை நீயும் கண்டதினாலே தானே
காதலியே -உந்தன்
கன்னிமேனி சிவந்த காரணம் என்னடி?
அட எஞ்சோடிக் காதலனே!- நான்
வெள்ளரிக்காய்தான் நறுக்கி மஞ்சள அரைச்சு
வேப்பம்பூவ சேத்து என்மேனியில பூசிக்
குளித்து குதித்து வந்தேனே எனதன்புக் காதலனே!

No comments: