Popular Posts

Wednesday, June 25, 2008

புதுக்குறள்


அன்புடைமை

1. பூவிற் சிறந்த பூ அன்பு
அப்பூ மானிட பண்பு.
2. அன்பு இல்லதவன் மனிதனே யானாலும்
அவன் மிருக ஜாதி.
3. சிறப்பாக வாழ அன்பு செலுத்து
இன்பம் உன் தலையெழுத்து.
4. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்பாள்
மனம்போட்ட பூட்டிற்கு பிறகு.
5. கண்ணில் கருணை காட்டு காட்டிற்
கடவுள் உன் காலடியில்.
6. அன்பு உன் குண மானால்
என்றும் நீ ஒன்று.
7. நீயுண்டு உன் வேலையுண்டு என்றிலாமல்
உயிர்களிடம் அன்பு காட்டு.
8. அன்பால் உயர்ந்தோர் சிலர் அன்புசெலுத்து
நீயுமொரு அன்னை தெரசா.
9. அன்பிலார் அன்பை ஏளனம் செய்வார்
இழிநிலை அடையும் பொருட்டு.
10. அன்பை அன்பால் அன்பின்பால் அன்பால்
அன்பு காட்டுதல் மாண்பு.

மணற்சிற்பத்தின் சிரிப்பு!


மணற்சிற்பமே நீ எப்போதெல்லாம் சிரிப்பாய்?


தூய்மையான காற்று உலகில்


உலவக் கண்டால் சிரிப்பேன்....


காடுகள் அழிக்கா மனிதன்


உலகில் கண்டால் சிரிப்பேன்...


வீட்டிற்கொரு மரம் வளர்க்கும்


குடும்பம் கண்டால் சிரிப்பேன்...


அசுத்தமில்லா நீரை மக்கள்


குடிக்கக் கண்டால் சிரிப்பேன்...


பாரில் மாதம் மும்மாரி


மழை பொழிந்தால் சிரிப்பேன்...


நிலத்தடி நீர் உயர மக்கள்


மழை நீரை சேமித்தால் சிரிப்பேன்...


இயற்கையான உரத்தை உழவன்


பயன்படுத்த கண்டால் சிரிப்பேன்....


தொழிற்சாலைகள் கழிவுகள் கலக்காத


ஆற்றை கண்டால் சிரிப்பேன்...


மாசுக்காற்றால் ஓசோனில் ஓட்டை பூமியில் வெப்பம்


அதிகரிக்காமல் இருந்தால் சிரிப்பேன்...


பனிப்பாறைகள் உருகாமல் கடல்நீர்


கூடாமல் இருந்தால் சிரிப்பேன்...


சுற்றுச்சூழல் பாதுகாக்கும் மக்கள்


தனை கண்டால் சிரிப்பேன்...


போரால் அணுகுண்டு வீசாத


வளர்ந்தநாடு தனை கண்டால் சிரிப்பேன்...


ஹிரோசிமா, நாகசாஹி நிலை


இனி நிகலாதென்றால் சிரிப்பேன்...


இயற்கையை செயற்கையால் அழிக்கும்


மக்கள் இல்லையென்றால் சிரிப்பேன்...


அத்துமீறி நுழையும் பெரியநாடு


இல்லா பூமி இருந்தால் சிரிப்பேன்...


எல்லை பிரச்சனையில்லா காஷ்மீரை (நிம்மதியை)


பாக்., கொடுத்தால் சிரிப்பேன்...


நாட்டின் எல்லைவாழ் மக்களின்


சுதந்திரம் கிடைத்தால் சிரிப்பேன்...


பலகட்சியில்லா பாரதம் கண்டால்


என்றென்றும் எப்போதும் சிரிப்பேன்...


அமைதியான உலகம் அழகான இயற்கை


கிடைக்குமென்றால் தொடர்ச்சியாக சிரிப்பேன்...


சற்றுபொறு.... ஆ... ஓடு... ஓடு...


இயற்கை என்னை


அழிக்க வருகிறது சுனாமி!


நான் அழுகிறேன்!


மணற்சிற்பம் மணலாக மாறியது.

பாரில் சிறந்த பாரத நாடே!


பார் உந்தன் அழுக்கதனை
பாரத நாடே!
பண்பு கெட்ட மனிதர் சிலர் பார்
பாரத நாடே!
லஞ்சம் வாங்கும் அதிகாரி தனை பார்
பாரத நாடே!
குடிமக்கள் இரத்தம் குடிக்கும் அதிகாரி, அரசியல்வாதி தனை பார்
பாரத நாடே!
கருப்பு பணமாக மாறும் பணம் தனை பார்
பாரத நாடே!
வரி ஏய்ப்பு செய்யும் செல்வந்தன் தனை பார்
பாரத நாடே!
இந்நிலை எப்போது மாறும் உன் வண்ணம் என்று பொழிவு பெறும்?

Thursday, June 5, 2008

சுற்றுச்சூழல் பாதுகாப்பு




  • சுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.


  • மனிதன் தன் தேவைக்காக மரங்களை அளவுக்கு அதிகமாகவே அழித்துவிட்டான். தற்போதைய சூழலில் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் தூய காற்று மக்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் எல்லா இடங்களிலும் மரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால், நம் இந்திய திருநாட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க அதிகரிக்க காற்றுமாசு ஏற்படுகிறது அதோடு கூட இரைச்சல் என்றும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கறது.


  • போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகவும், காற்றுமாசுக்கு முக்கிய காரணமாகவும் அமைவது தனிநபர்கள் (பணக்கார, நடுத்தர)பலர் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை அதிகமாக பயன் படுத்தி வருவதாகும். இதனால் ரோட்டில் நடந்தும், மிதிவண்டியிலும் செல்லும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.


  • நம்நாட்டில் பணக்கார, நடுத்தர வர்கத்தினர்களை விட அதிகமாக இருப்பவர்கள் ஏழை மக்கள் தான் என்பதை நாம் மறுக்க முடியுமா? டாட்டாவின் நானோ காரை பற்றி கேள்விபடுகிறோம். இந்தக்கார் நடுத்தர மக்கள் பலரும் வாங்கி அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்று பயணம் செய்தால் ரோட்டில் அந்த கார்கள் செல்ல இடம் இருக்குமா? அல்லது நெரிசல் தான் தவிர்கப்படுமா? அல்லது காற்று தான் மாசுபடாமல் இருக்குமா? அல்லது இரைச்சல் தான் கேட்காமல் இருக்குமா? அல்லது பயணம் செய்வது எதற்கோ அந்த வேலையை தான் உரியநேரத்தில் முடிக்கமுடியுமா? இப்போதே சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியால் ஒருமணி நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு அதிகபட்சம் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் நேரத்தில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கூட ஆகலாம்.


  • நாம் இந்த நிலையை போக்குவது எப்படி? சுற்றுச்சூழல் பாதிப்பால் இயற்கை அதன் தன்மையை மாற்றிக்கொண்டு வருவதால் வெள்ளம், போன்ற பல்வேறு இயற்கை பாதிப்புகள் ஏற்படுகின்றது.


  • ஓசோனில் ஓட்டை ஏற்பட்டுவிட்டது அதை அடைக்க முடியாது என்றாலும் இனிமேலும் ஓட்டை அதிகமாக ஏற்படா வண்ணம் முயற்சி மேற்கொள்வது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை.


  • மரம் வளர்போம்! காற்று மாசுபாட்டை தடுக்க முயற்சி மேற்கொள்ளோம்!