மணற்சிற்பமே நீ எப்போதெல்லாம் சிரிப்பாய்?
தூய்மையான காற்று உலகில்
உலவக் கண்டால் சிரிப்பேன்....
காடுகள் அழிக்கா மனிதன்
உலகில் கண்டால் சிரிப்பேன்...
வீட்டிற்கொரு மரம் வளர்க்கும்
குடும்பம் கண்டால் சிரிப்பேன்...
அசுத்தமில்லா நீரை மக்கள்
குடிக்கக் கண்டால் சிரிப்பேன்...
பாரில் மாதம் மும்மாரி
மழை பொழிந்தால் சிரிப்பேன்...
நிலத்தடி நீர் உயர மக்கள்
மழை நீரை சேமித்தால் சிரிப்பேன்...
இயற்கையான உரத்தை உழவன்
பயன்படுத்த கண்டால் சிரிப்பேன்....
தொழிற்சாலைகள் கழிவுகள் கலக்காத
ஆற்றை கண்டால் சிரிப்பேன்...
மாசுக்காற்றால் ஓசோனில் ஓட்டை பூமியில் வெப்பம்
அதிகரிக்காமல் இருந்தால் சிரிப்பேன்...
பனிப்பாறைகள் உருகாமல் கடல்நீர்
கூடாமல் இருந்தால் சிரிப்பேன்...
சுற்றுச்சூழல் பாதுகாக்கும் மக்கள்
தனை கண்டால் சிரிப்பேன்...
போரால் அணுகுண்டு வீசாத
வளர்ந்தநாடு தனை கண்டால் சிரிப்பேன்...
ஹிரோசிமா, நாகசாஹி நிலை
இனி நிகலாதென்றால் சிரிப்பேன்...
இயற்கையை செயற்கையால் அழிக்கும்
மக்கள் இல்லையென்றால் சிரிப்பேன்...
அத்துமீறி நுழையும் பெரியநாடு
இல்லா பூமி இருந்தால் சிரிப்பேன்...
எல்லை பிரச்சனையில்லா காஷ்மீரை (நிம்மதியை)
பாக்., கொடுத்தால் சிரிப்பேன்...
நாட்டின் எல்லைவாழ் மக்களின்
சுதந்திரம் கிடைத்தால் சிரிப்பேன்...
பலகட்சியில்லா பாரதம் கண்டால்
என்றென்றும் எப்போதும் சிரிப்பேன்...
அமைதியான உலகம் அழகான இயற்கை
கிடைக்குமென்றால் தொடர்ச்சியாக சிரிப்பேன்...
சற்றுபொறு.... ஆ... ஓடு... ஓடு...
இயற்கை என்னை
அழிக்க வருகிறது சுனாமி!
நான் அழுகிறேன்!
மணற்சிற்பம் மணலாக மாறியது.
No comments:
Post a Comment