என்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை!
கருவண்டாம் பார்வையிலே !முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த
கன்னங்களிலே காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்!
காணும் நேரமெல்லாம் வில்லாம் புருவங்கள் சிறகசைத்து சேதிசொல்லும்!
கண நேரமும் அமுத இதழ்கள் குவிந்ததாமரை மொட்டாகும் நெஞ்சங்களே!
கண்ணுற்றேன் மூங்கில் பொன்னிறத் தோள்கள் காதலுக்கு தோள்கொடுக்கும்!-அடிக்
கள்ளித்தோழியே உன்முத்துப்பல் வரிசையும் என்னுள்ளத்தையே ஈர்த்ததடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment