Popular Posts

Saturday, January 16, 2010

தமிழ்பாலா-கவிதை/காதல்/தத்துவம்/முயன்றால் முடியாதது எதுவுமில்லையே ! முயன்று பாரடா வாழ்க்கை பூலோகசுவர்க்கமே!

சிறுக சிறுகவெட்டினால் தேவதாரு மரங்களும் வீழுமடா!
முயற்சி எல்லாம் இன்பம் அடைவதில்லையே!
முயற்சி இல்லாமல் இன்பம் என்பதில்லையே!ஓயாமல்
சொட்டும் நீர்த்திவலையாலே கல்லும் ஓட்டையாகிடுமே!
முயன்றால் முடியாதது எதுவுமில்லையே !
முயன்று பாரடா வாழ்க்கை பூலோகசுவர்க்கமே!

Wednesday, January 13, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/அனுபவம்/காதலியே உன் இளமைவதனம் சிவந்தது மோகத்தினாலா?இல்லை நாணத்தினாலா?இலை ஆணாதிக்க கொடுமையினாலா!

காதலியே!
உன்னை முத்தமிட்ட தென்றலையே நானும் முத்தமிட்டேன்-அன்பாம்
இந்த காதலிலே வந்த முதல் முத்தத்திலே!~
இன்ப நந்தவனமே தினம்தினம் மலர்ந்து மணம்வீசுகின்றதே!
உன் நாவினாலே சொல்லாத காதல் மொழிதனையே!
உன்பட்டு இதழ்களினாலே என் நெற்றியினிலே பதித்துவிடு!
உன்னிதழ்கள் ஒன்றொன்றை ஒன்று முத்தமிடுவதற்கே!
அஞ்சித்தான் நாணம் கொண்டு சிணுங்கியதோ?
வடிந்துவிட மனமில்லாத தேந்துளிகளைப் போலவே!
படிந்தது இனிய உதடுகளில் நாள்முழுவதுமே!
நொடிப்பொழுது இனியதோர் சிலிர்ப்பில்
துடித்திடும் என் நெஞ்சின்வழி பாய்ந்தது-உன்முத்தமது
முடிந்தபின்னும் வானமே வசப்பட்ட மாதிரியே!
மதுவினைத் தேடும் குடிகாரனல்ல நான் மாமலரே- நீயும் இந்த
கன்னகிண்ணத்தில் ஒருமுத்தத்தை மட்டும்விட்டுச் செல்லடி!
முத்ததில் மலர்ந்தது மோகமே -அதற்குள்
இளமை இனிமையூட்டுது அன்பு ராகமே!
இனிய அதரங்கள் நான்கு
இளமை இதயங்கள் இரண்டு
அழியாத காதல் ஒன்று அதில்
என்றென்றும் தித்திக்கும் இதழ்முத்தம்!
வரவேற்பு ஒன்றில் வந்தது முத்தம்-பிரியாவிடை
வந்ததில் அதில் தந்தது ஞாபகமுத்தம்-காதல்
நெகிழ்ச்சியில் மலர்ந்தது இனிமை முத்தம்
மறைவினில் தந்தது கள்ளமுத்தம்
கலந்து பரஸ்பரம் களிக்கும் முத்தம்
காதல் முத்தம் இன்பமுத்தம்
துன்பத்திலும் தோய்ந்த முத்தம்
வாக்குறுதி இல்லாத முத்திரையில் முத்தம்-இப்படி
மலர்சிரிப்புகள் பெருமூச்சுகள்
கண்ணீர்துளிகள் ஆயுதமாய் கொண்ட பெண்ணே நீயே!
என்றும் தோல்வியே அடையமுடியாதவளே
காதல் முத்தத்தில் கனிந்த அதரங்களாலே இள நங்கையே எனதருமைக்
காதலியே உன் இளமைவதனம் சிவந்தது மோகத்தினாலா?இல்லை
நாணத்தினாலா?இலை ஆணாதிக்க கொடுமையினாலா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்//அனுபவம்/பகுத்தறியும் பண்புதான் பகுத்தறிவாகுமடா! அந்த பகுத்தறிவுதான் மெய்ஞானமாய் ஆகுமடா!

ஆண்டுகள் நமைமுதியோராய் ஆக்கிவிடும் ஞானிகளாய அல்ல!மெய்யறிவு
ஒன்றுதானடா! பகுத்தறியும் பண்புதான் பகுத்தறிவாகுமடா!
அந்த பகுத்தறிவுதான் மெய்ஞானமாய் ஆகுமடா!
அந்த மெய்ஞான சிந்தாந்தவழி நீயும் நடந்திட மறக்காதேடா!

தமிழ்பாலா-கவிதை/தத்துவம்/அனுபவம்/தீயவை ஒழித்திடவே! சவுக்கினை எடுத்திடும்வேளை இரக்கப்பட்டால் தீயவர் நமைக்கொன்றிடுவார்!

முட்டாளே முட்டாளே நீயொரு
முடிவு எடுக்குமுன்னே-ஒரு சந்தைகூட கூடி
முடிந்துவிடும் தெரியுமா?
குதிரைக்கு ஒருசவுக்கடா!
கழுதைக்கு ஒருகடிவாளமடா!
முட்டாளே உந்தனுக்கோ?வேண்டும் ஒருபிரம்படா?தீயவை ஒழித்திடவே!
சவுக்கினை எடுத்திடும்வேளை இரக்கப்பட்டால் தீயவர் நமைக்கொன்றிடுவார்!

Sunday, January 10, 2010

தமிழ்பாலா-/கவிதை/காதல்/தத்துவம்/அனுபவம்/உனதுமுகம் கோடிக்கோடி கவிதைகள் கூறிடுமே!

உனதுமுகமே கோடிக்கோடி கவிதைகள் கூறிடுமே!உனது முகமே
ஒருவரிகூட வரையப்படாத ஒருவேளை ஒரு நாள்மட்டும்
குறிக்கப்பட்டுள்ள அழகான அறிவான புத்தகமே அல்லவா?..உனது முகமே
மனதின் ஓவியமாம்!கண்களோ!அன்பாம் அதுஅதன் தூதுசெல்லும்
இன்பகாவியமாம்!உன்முகமாம் மொழி உள்ளத்தை
உலகத்தை தழுவும் மனத்தின் சுருக்கெழுத்தாம்!-உன்முகமே
மொழியால் ஒருவார்த்தை பேசும் முன்னே
விழியால் ஒருவாக்கியத்தை காட்டிவிடுமே!உன்முகமே
மனிதம் என்னும் நூலின் உள்ளடக்கத்தை குறித்திடும்
முகப்புப் பக்கமே என்றுசொன்னாலே மிகையாகுமோ?உன்முகத்தைத் தானே
காண்கின்றேன் உன் அகத்தை என்று நான் அறிந்திடுவேனோ?

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/மண்ணுலகினிலே மனிதரைத்தவிர மகத்தானது வேறெதுவுமில்லை இல்லையடா!

மண்ணுலகினிலே மனிதரைத்தவிர மகத்தானது வேறெதுவுமில்லை இல்லையடா!
மனிதனிலே மனிதமூளை எண்ணுகின்ற மனதினைத் தவிர
மகத்தானது மற்ற எதுவுமில்லை இலலையடா!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/அனுபவம்/அன்பின் இளமை............மனித நேயத்தினில் எதிர்ப்பினில் அல்ல!

மனத்தின் வலிமை .....பயிற்சியினில்
ஓய்வினில் அல்ல!
வாழ்வின் இனிமை ........முயற்சியினில்
சோர்வினில் அல்ல!
அன்பின் இளமை............மனித நேயத்தினில்
எதிர்ப்பினில் அல்ல!
காதலின் குளுமை..............ஒத்த இதயத்தினில் ..ஒருதலைக்
காதலினில் அல்ல!

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/காதல்/அனுபவம்/கண்கள் இரண்டையும் காவியம் ஆக்கிடும் உண்மைகாதல் பேசிடுமே!

இதயம் இரண்டும் பேசிடும் போதினிலே புகழ்கூட மனமாயை ஆகிடுமே!
கண்கள் இரண்டையும் காவியம் ஆக்கிடும் உண்மைகாதல் பேசிடுமே!
நெஞ்சினில் கலந்த அன்பில் வரைந்திடும் ஓவியம் கூட சிரித்திடுமே!
இன்ப உறவினில் உயர்ந்திடும் இலக்கியக் காதல் இனிமை கூட்டிடுமே!

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/முயலாத மனிதருக்கே இந்த பூலோகசுவர்க்கம் என்பதில்லையே!

முயற்சியில் தானே மனநிறைவே அடங்கியுள்ளதே! -தவிர அதன்
முடிவில் அல்லவே!
முயன்று பாராத மனதிற்கே ஆத்ம சந்தோசம் என்பதே இல்லையே!
முயன்றாலே முடியாததே இந்த உலகினில் எதுவும் இல்லையே!
முயற்சி உடைய மனிதரே என்றும் இகழ்ச்சி அடைவதில்லையே!
முயலாத மனிதருக்கே இந்த பூலோகசுவர்க்கம் என்பதில்லையே!
முயன்று பார்த்திடும் போதினிலே அயற்சி என்பதும் இல்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/விழித்துக் கொதித்ததே மனச்சான்று!-ஒரு நாள் கழிந்தபின்னே!காலந்தாழ்த்தியே வழக்கம்போலவே!

விழித்துக் கொதித்ததே மனச்சான்று!-ஒரு நாள்
கழிந்தபின்னே!காலந்தாழ்த்தியே
வழக்கம்போலவே!
விழிக்கும் காலத்தை நழுவவிட்டாலே உண்மைகூடவே ஊமையாகுமே!-காலதாமதமே!
உலகினில் நன்மை நடக்கும் நல்லகாலத்தையே பின்னுக்குத் தள்ளிடுமே!
விழித்துக் கொதித்ததே மனச்சான்று!-ஒரு நாள்
கழிந்தபின்னே!காலந்தாழ்த்தியே
வழக்கம்போலவே!

Saturday, January 2, 2010

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்ண்மீது வாழும் நாளிலே நீயும் மக்களுக்கே நல்லது செய்ய நினைத்தாயானால்! மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளி வரிசையினில்

ஒரே ஒருமரணமே ஒருசோக நிகழ்ச்சியாகுமே!
ஒருமில்லியன் மரணங்களே புள்ளிவிவரமாகுமே!மரணத்தின்
அமைதி இல்லாத மரணமே முதுமையானதே!மரணத்தைதவிர
எல்லாவற்றுக்கும் மருந்துண்டு இந்த பூவுலகினிலே!
மரணத்திற்குக் கூட லஞ்சம் கொடுக்கும் தட்டுக்கெட்ட உலகமடா!உன்
மரணத்திற்குப் பின்னே உனக்கு கடன் என்பது இல்லையடா!
வாழ்க்கையின் முன்னறிவிப்பே மரணமானதே!--இனியும்
சாகாமல் இருக்கவே - நாம் தினந்தோறும்
சாகின்றோமே!மரணமே
நாள்,கிழமைக் குறிப்பேட்டினையே பார்க்குமாடா?
ஓடுகின்ற மனிதனே நீ எங்கோதான் ஓடுகின்றாய்-உன்னையும் மரணமே
ஓடிவிரட்டிப் பிடித்துவிடும் தெரியுமா?
ஓ! மனிதனே! உன்வாழ்வின் ஓயாத உழைப்பெல்லாமே!
உனது மரணவீட்டினைக் கட்டுவதற்காகத் தானோ?
மனிதனே நீயும் மண் தானே!
மண்ணுக்கே மீண்டும் நீ செல்வாயே!- நீ
மண்ணிலே வந்தவனே - மீண்டும் நீயே
மண்ணோடு சேர்வாயே!
மண்மீது வாழும் நாளிலே நீயும் மக்களுக்கே நல்லது செய்ய நினைத்தாயானால்!
மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளி வரிசையினில் முன்னணியில் செல்லடா!

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/காலத்தில் சொல்லாத காதலும் காதலில்லையே காலத்தில் செய்யாத புரட்சியும் உயர்வில்லையே!

நீயும்-
எங்கே தேடுவாய் -கனிகளையே
எங்கே தேடுவாய் ?வசந்த காலத்தினிலே1
இளமொட்டுகள் இல்லாத போதினிலே!
இலையுதிர் காலத்தினிலே!கனிகளையே
நீயும்-
எங்கே தேடுவாய் -கனிகளையே
எங்கே தேடுவாய் ?
காலத்தில் தேடாத பொருளும் பொருளில்லையே
காலத்தில் கற்காத கல்வியும் அழகில்லையே
காலத்தில் சொல்லாத காதலும் காதலில்லையே
காலத்தில் செய்யாத புரட்சியும் உயர்வில்லையே!
நீயும்-
எங்கே தேடுவாய் -கனிகளையே
எங்கே தேடுவாய் ?வசந்த காலத்தினிலே1
இளமொட்டுகள் இல்லாத போதினிலே!
இலையுதிர் காலத்தினிலே!கனிகளையே
நீயும்-
எங்கே தேடுவாய் -கனிகளையே
எங்கே தேடுவாய் ?
தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/ஒருமலரையோ! ஒரு பட்டாம் பூச்சியையோ! அதன் தோற்றம் கண்டுகொண்டு அறிந்து,புரிந்துகொண்டேன் தோழி!-

ஒருமலரையோ! ஒரு பட்டாம் பூச்சியையோ!
அதன் தோற்றம் கண்டுகொண்டு அறிந்து,புரிந்துகொண்டேன் தோழி!-
ஆனாலும் மனிதரையோ! எப்படித்தான் கண்டுகொண்ட போதிலுமே-ஒன்றும்
அறியவும் முடியவில்லையே! ,வாழ் நாளெல்லாமே!
அவரை புரிந்திடவும் இயலவில்லையே!தோழி!

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/பாலை மணல்மீது நீயும் விதைகள் விதைப்பதென்ன! காணும் கடற்கரை தனிலே கலப்பைதான் போட்டு உழுவதென்ன!

பாலை மணல்மீது நீயும் விதைகள் விதைப்பதென்ன!
காணும் கடற்கரை தனிலே கலப்பைதான் போட்டு உழுவதென்ன!
காதல் கொள்ளாத பெண்ணின் பின்சென்று நீயும் காதலைச் சொல்வதென்ன?-ஒரு தலையாய்
காதலித்து உன்காதல் தனையே கானல் நீராக்கி காலமெல்லாம் கரைவதென்ன?

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/கவிதை/இம்மண்ணிலே அன்னையரும் ,தந்தையரும் சேர்ந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் வழிதான் பிறக்காதா?

அன்னையின் வாழ்க்கையில் நிலை நிறுத்தும் நங்கூரமே மழலையாகுமே!
அன்னை மண்ணின் உயர்வுக்கு தாய்மை அனுபவமே கலங்கரை விளக்காகுமே!
அன்னையை போற்றும் சமூகமே அதைவிட பேரின்பம் வேறில்லையே!
அன்னை ,மாதராம் அவரை இழிவுசெய்யும் சமூகமே அழிந்துபோயிடுமே!
அன்னை மண்ணின் ஆணாதிக்கம் தான் அழிந்துதான் போகாதோ!இம்மண்ணிலே
அன்னையரும் ,தந்தையரும் சேர்ந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் வழிதான் பிறக்காதா?

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/செய்தே தீருவேன் என்று சொல்பவனே ,செய்பவனே எதையும் சாதிப்பாண்டா!

செய்தே தீருவேன் என்று சொல்பவனே ,செய்பவனே எதையும் சாதிப்பாண்டா!
செய்யமாட்டேன் என்று சொல்பவனே ,செய்யாமலே எதையும் எதிர்ப்பாண்டா!
செய்ய இயலாது என்று சொல்பவனே,எதையும் செய்யாது எதிலும் தோற்ப்பாண்டா!-எதிலும்
செயலற்று இருப்பவனே இம்மண்ணின் பாரமாவானடா!-இதிலும் எல்லாவற்றிலும்
செயலிலே இறங்குபவனே எதிலும் ஜெயிப்பானடா!

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/எல்லோரும் தெரிந்தவராக பாவனைகள் செய்திடும் போதினிலே! நல்லோரின் வழிதன்னிலே நேர்மை தவறாது ,உண்மை மார்க்சீய மெய்ஞான !

எல்லோரும் தெரிந்தவராக பாவனைகள் செய்திடும் போதினிலே!
நல்லோரின் வழிதன்னிலே நேர்மை தவறாது ,உண்மை
மார்க்சீய மெய்ஞான விஞ்ஞான வழி நின்று !உழைப்போரின் தலைமையிலே!
பொதுவுடைமை பொன்னுலகமே-அமைப்பதுதான் யாரடா?

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/,எதையும் பகுத்துணறும் மானுடத்தின் பண்பான நடைமுறையில் இந்த பாரினில் என்னாளும் இம்மண்ணில் சுவர்க்கம் கண்டிடலாமே!

மகிழ்ச்சி இல்லாமலே அமைதி இருக்கலாமே!
அமைதி இல்லாமலே மகிழ்ச்சி இருக்கலாமே!-ஆனாலும் இவை
இரண்டும் இல்லாமலே வாழ்வினில் பேரின்பம் என்பதில்லையே!எதையும்
பகுத்துணறும் மானுடத்தின் பண்பான நடைமுறையில் இந்த
பாரினில் என்னாளும் இம்மண்ணில் சுவர்க்கம் கண்டிடலாமே!

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று இருப்பது அல்லாமல் வேறொன்று மகிழ்ச்சியே இம்மண்ணில் இல்லையே உழைப்போரே!

நலம் என்பது மகிழ்ச்சி ஒன்றாகுமே!
நல்லோர் வழியினில் நாமும் நடப்போமே!எல்லோரும்
மகிழ்ச்சி எய்தும் காலமும் இன்றே ஆகுமே!யாவரும்
மகிழவேண்டிய இடமும் இம்மண்ணே ஆகுமே!அனைவரும்
மகிழும்வழியே எல்லோரையும் மகிழச்செய்வதே ஆகுமே!
எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று இருப்பது
அல்லாமல் வேறொன்று மகிழ்ச்சியே இம்மண்ணில் இல்லையே உழைப்போரே!

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/மனமகிழ்ச்சி உள்ள இதயமே நித்திய விருந்தாகுமே!

மனமகிழ்ச்சி உள்ள இதயமே நித்திய விருந்தாகுமே!
”மக்களுக்கு நீதேவைப் படுகின்றாய்!
மக்களுக்கு நீ நெருக்கமாக இருக்கின்றாய்!
என்ற உணர்வே!
இன்பங்களின் தலையாயது
மகிழ்ச்சிதனில் நிலையானது”--என்று
என் ஆசாண் மாக்சிம்கார்க்கியும் சொன்னாரே!
தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/ல்லோருக்கும் நாற்காலி ஆசை இருக்குதடா!-பதவி ஆசைகள் இல்லாத மானுடம் உலகினில் இல்லையடா!

என்வீட்டினில் மூன்று நாற்காலிகள் உண்டு
என் தனிமைக்கு ஒன்றாகும்
என் நண்பர்க்கு இரண்டாகும்
என் விருந்தினர்க்கு மூன்றாகும்
எல்லோருக்கும் நாற்காலி ஆசை இருக்குதடா!-பதவி
ஆசைகள் இல்லாத மானுடம் உலகினில் இல்லையடா!
தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/களையே முளைக்காத மண்ணுமில்லை!தவறு களையே செய்யாத மனிதருமில்லை!

துரும்புகள் போலவே தவறுகளே மேலே மிதந்து வருமடா!
முன்னிரவில் உன்சொந்தத் தவறுகளை நினைத்திடவே வேண்டுமடா!
பின்னிரவில் பிறர்செய்த தவறுகளை நினைத்துப் பார்த்திடவேண்டுமடா!
களையே முளைக்காத மண்ணுமில்லை!தவறு
களையே செய்யாத மனிதருமில்லை!

பிறரது தவற்றுக்கு சமாதானங்கள் கூறினாலும் தன் தவற்றுக்கு சமாதானமே
கூறிடவே கூடாது!
தவறுவது என்பது இயல்பாகுமே!ஆனாலதையே அடுத்தவரின்
தவறாய் ஆக்கிடுவது என்பது போலி அரசியலாகுமே!பிறரின்
தவற்றை அறிந்து தன் தவற்றை திருத்துபவனே அறிவாளி!
தவறு என்பது கதவு இடுக்கினில் கூட நுழைந்து விடுமே!
களையே முளைக்காத மண்ணுமில்லை!தவறு
களையே செய்யாத மனிதருமில்லை!
அறியாமை என்பது வெற்றுக்காகிதமடா
அதைக்கிழித்து விட்டுத்தான் எழுதவேண்டுமடா!
தவறு என்பது கிழிக்கப்பட்ட காகிதமடா!
அதை அழித்துவிட்டுத்தான் எழுதவேண்டுமடா!
தவறு நேரிடவில்லை
தவறு நேர்ந்ததுமில்லை
தவறு நேரிடவும் நேரிடாது-என்று
யாரும் இந்த உலகினில்
அரிதியிட்டு கூறிடவே முடியுமா?
உனது எதிரிகளை முதலில் கவனித்து பாரடா! ஏனென்றால்
உனது எதிரிகள் தான் முதலில் உனது தவறுகளை கண்டுபிடித்து கூறுவாரடா!

தமிழ்பாலா-/கவிதை/தத்துவம்/அனுபவம்/மக்கள் என்ற ஊற்றினிலே தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொள்பவனே! மகோன்னதமான தலைவனென்று தோழர் லெனினும் சொன்னாரே!

மக்கள் என்ற ஊற்றினிலே தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொள்பவனே!
மகோன்னதமான தலைவனென்று தோழர் லெனினும் சொன்னாரே!
மக்கள்ஜன நாயகம் வெல்லாத தேசத்தில் சுதந்திரமான சுவாசம் என்பதில்லையே!
மக்கள்சக்தியை உணராத தேசமே மனிதர்கள் இருந்தும் பாலைவனமாகுமே!

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/மக்களுக்கே நன்மை செய்வதையே குறிக்கோளாய் கொண்டிருக்க வேண்டுமே!

தலைவன் தலைவன் தலைவனே!என்றும் உண்மை அறிந்த
தலைமையில் முதல்வனாய் இருக்கவேண்டுமே!உண்மை
அறிந்ததையே செயல்முறையில் செய்திட வேண்டுமே!மக்களுக்கே
நன்மை செய்வதையே குறிக்கோளாய் கொண்டிருக்க வேண்டுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/கோடிகோடித் தூரத்தில் நீ போனாலுமே உன்பார்வை என்னை இழுக்குமடி

நூறு ஜோடிமாடுகள் இழுப்பதைக் காட்டிலும்
உன்னொரு தலைமுடிச்சுருள்
என்னை ஈர்த்து இழுத்து விட்டதடி காதலியே! எந்தன் தோழியே !என்பிரியசகியே!
கோடிகோடித் தூரத்தில் நீ போனாலுமே உன்பார்வை என்னை இழுக்குமடி!
எத்தனைபேர் தடுத்து நின்றாலு நம்காதலை யாரும் தடுத்திடத்தான் முடியுமோடி?
காதலியே! எந்தன் தோழியே !என்பிரியசகியே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/!மனதிருந்தால் எந்த வயதிலும் இளமை என்பது வாழும் நாளெல்லாம் தொடர்ந்து வந்திடுமடா!

காலம் அவனின் தலைமுடிதன்னை வெள்ளியாக மாற்றிவிட்ட போதிலுமே!அவனின்
கனவுகள் என்னவோ இன்னும் இளமையாகத்தான் இருக்கின்றதே!
முதுமை என்பது வயதினில் இல்லையடா! நம் மனதினில் உள்ளதடா!மனதிருந்தால்
எந்த வயதிலும் இளமை என்பது வாழும் நாளெல்லாம் தொடர்ந்து வந்திடுமடா!

தமிழ்பாலா-/கவிதை/அனுபவம்/தத்துவம்/தனியுடைமை அதிகாரத்தை தூக்கி எறியாத சமூகமே நீயும் சீரழிந்து போவாயே!

தனியொரு தலைமுடிக்குக்கூட ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக நிழலுண்டு-அதுபோலவே
தனியொரு மனிதர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மகத்துவமுண்டு!
தனிமனிதன் திறமைதனை மதிக்கத் தெரியாத சமூகமே நீ சீரழிந்து போவாயே!
தனியுடைமை அதிகாரத்தை தூக்கி எறியாத சமூகமே நீயும் சீரழிந்து போவாயே!

தமிழ்பாலா-/தத்துவம்/அனுபவம்/கவிதை/தலையில்லாத மனிதனுக்கு தொப்பியொன்றும் தேவையில்லையடா!- நல்லரசுத் தலைமை இல்லாத தேசமக்களுக்கு மானம்,ரோசம் ,சுதந்திரமில்

தலையில்லாத மனிதனுக்கு தொப்பியொன்றும் தேவையில்லையடா!- நல்லரசுத்
தலைமை இல்லாத தேசமக்களுக்கு மானம்,ரோசம் ,சுதந்திரம் இல்லையடா!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/நீயும் வாதாடிப் பயனில்லையடா! பண்பு,அன்பு நெறிகளையே மறுத்துக் கூறும்-அன்பற்ற, பண்பற்ற விதண்டவாத மனிதரிடமே!

நீயும் வாதாடிப் பயனில்லையடா!
பண்பு,அன்பு நெறிகளையே மறுத்துக் கூறும்-அன்பற்ற,
பண்பற்ற விதண்டவாத மனிதரிடமே!
நீயும் வாதாடிப் பயனில்லையடா!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/அனுபவம்/கவிதை/கேள்விகள இல்லாமலே எந்த தத்துவமும் இல்லையடா! கேள்விகள் இல்லாமலே மனித வாழ்க்கையும் கூட இல்லையடா!

மனிதா! மனிதா! உனது
ஏனென்ற கேள்விக்கு பின்னே!
ஏனென்றால் என்ற பதிலே உன்னிடம் பிறக்குமடா!
கேள்விகள் இல்லாமலே எந்த விஞ்ஞானமும் இல்லையடா!
கேள்விகள் இல்லாமலே எந்த இலக்கியமும் இல்லையடா!
கேள்விகள இல்லாமலே எந்த தத்துவமும் இல்லையடா!
கேள்விகள் இல்லாமலே மனித வாழ்க்கையும் கூட இல்லையடா!

தமிழ்பாலா-/கவிதை/காதல்/தத்துவம்/அனுபவம்/எதையும் தாங்கி உலகினில் வாழும் மகத்துவத்தை நாமும் புரிந்துவாழவேண்டும் தெரியுமா!

வாழ்க்கை முழுவதும் நாம் வாழ்க்கைதன்னில் தயங்கி
வாழ்வதிலே தள்ளாட்டம் என்பதென்ன?இந்த
தடுமாற்றம் உருவானதென்ன?
நேற்றுத் தோற்றதை இன்று ஜெயிக்கின்றோம்!
இன்று வென்றதையே நாளை தோற்கின்றோம்!
எதையும் தாங்கி உலகினில் வாழும்
மகத்துவத்தை நாமும் புரிந்துவாழவேண்டும் தெரியுமா!

தமிழ்பாலா/கவிதை/காதல்/தத்துவம்/அனுபவம்/உனது தயக்கத்தின் மூலம் உன்வாய்ப்புகள் பலவேளைகளில் பறிபோய்விடுமே-அதனாலே என்றும் எதற்கும் தயங்காதேடா!

உனது தயக்கத்தின் மூலம்
உன்வாய்ப்புகள் பலவேளைகளில் பறிபோய்விடுமே-அதனாலே
என்றும் எதற்கும் தயங்காதேடா!
என்றும் துணிந்தவனுக்கு கடல் நீரும் கணுக்கால் அளவே ஆகுமடா!
தமிழ்பாலா/கவிதை/காதல்/தத்துவம்/அனுபவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவ்ம்/தத்துவ..தத்துவமாம்!உண்மையை தோலுரித்து அந்த தோலுக்குள் திணிக்கப் பட்டதே தத்துவமாகுமே!

மெய்மையை வாய்மையை ஆய்வுசெய்யும்-மெய்யியலாம்
அறிவியலே தத்துவமாகும்!’
நல்குரவின் இன்னமுதம்
மெய்யியல் தத்துவமென்று
சேக்ஸ்பியரும் சொன்னாரே!
மண்ணிலும் ,விண்ணிலும்
மறைந்து கிடக்கின்றனவே- நம்
தத்துவ மெய்யியல்..கனவுகூட காணாத பலபுதுமைகளே!
தத்துவ..தத்துவமாம்!உண்மையை தோலுரித்து
அந்த தோலுக்குள் திணிக்கப் பட்டதே தத்துவமாகுமே!
தீராத பிரச்னைக்குக் கூட
தெளிவான விடைகள் தருவதும்
தத்துவ மெய்யியல் ஆகுமே!

Friday, January 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/தத்துவம்/அடி வெயிலுமில்லை ,மழையுமில்லை எதற்குக் குடை? அடி,மின்னிடும் உந்தன் உடை! நம்காதலை எதிர்க்க உலகினில் ஏது படை?

அன்ன நடை,பின்னல் சடை -அடி நீயும்
என்ன எடை?உந்தன் கண்ணின் கடை- நம் அன்பின் கொடை!- உன்புன்னகை
சொன்ன விடை-அதில் நம்காதலுக்கு என்னதடை?
அடி வெயிலுமில்லை ,மழையுமில்லை எதற்குக் குடை?
அடி,மின்னிடும் உந்தன் உடை! நம்காதலை எதிர்க்க உலகினில் ஏது படை?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவம்/காதலே எவ்வுயிரையும் நெகிழச்செய்யும் கற்பகவனமே! காதலே பருவம் கொண்டுவந்த உருவமில்லாத பரிசே!

காதலே எவ்வுயிரையும் நெகிழச்செய்யும் கற்பகவனமே!
காதலே பருவம் கொண்டுவந்த உருவமில்லாத பரிசே!
காதலே அன்புமுத்திரையே !
காதலே ஏக்கம் கொண்டு நெஞ்சினைப் பிழியும் காரணமென்ன?
வாழ்விலே சொல்லமுடியாத ,சொல்லாமல் இருக்கமுடியாத
ஓர் உன்னதமான வாழ்வின் உண்மை அவசிய ரகசியமே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/அனுபவம்/கவிதை/அனுபவமே நீ உலகினில் கற்றுத் தரும் பாடங்களே!

அனுபவமே !வாழ்க்கை அனுபவமே! நீயே
அறிவு உலகத்தின் சூன்யப்பகுதியைக் கூட நிரப்பிவிடுவாயே!அனுபவமே நீ
உலகினில் கற்றுத் தரும் பாடங்களே! தோல்விதனைக் கூட-முயற்சி
உள்ளத்தின் வெற்றியாக்கிடும் மாயமென்ன? நீயும் சொல் அனுபவமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவம்/அன்புமரமே! அமைதியான தென்றல் தன்னில் சிரித்துவாழும் உன்னையே! அரிவாளால் வெட்டுகின்ற வீணரையே நான் என்ன?செய்ய?

ஆயிரம் காலத்து மவுனமரமே!- நீயும்
வீழும் போதே காடே அதிர்வதேனோ?அன்புமரமே!
அமைதியான தென்றல் தன்னில் சிரித்துவாழும் உன்னையே!
அரிவாளால் வெட்டுகின்ற வீணரையே நான் என்ன?செய்ய?
உன்சுவாசத் தாலே எங்களுக்கு மழையான் மாறி உதவிசெய்தாயே!
உன்னை வெட்டும் நன்றிகெட்ட மக்கள்தன்னை நான் என்னவென்றுதான் சொல்லவோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அனுபவம்/சலனமற்ற அமைதியான வாழும் மனப்போக்கினை உருவாக்குமடா! நடைமுறையோ வாழ்வின் மகத்துவத்தை உயர்த்தி வாழும் பக்குவத்தை

விஞ்ஞானம் இலக்கிய ரகசியத்தை அறிய உதவுமடா!
சமயமோ வாழ்வினை பயபக்தியுடன் அணுகுதடா!
இலக்கியமோ வாழ்வுதன்னை வியப்புடன் உற்று நோக்குதடா!
தத்துவமோ வாழ்க்கைதன்னை பலகோணத்தில் ஆராய்ந்து
சலனமற்ற அமைதியான வாழும் மனப்போக்கினை உருவாக்குமடா!
நடைமுறையோ வாழ்வின் மகத்துவத்தை உயர்த்தி வாழும் பக்குவத்தை கொடுக்குமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மணலில் கலந்த சர்க்கரைதன்னை பிரித்து எடுத்துச் செல்லும் எறும்பினைப் போலவே! கெட்டதை விட்டுவிட்டு நல்லதை மட்டும் எடுத்து!

மணலில் கலந்த சர்க்கரைதன்னை பிரித்து எடுத்துச் செல்லும் எறும்பினைப் போலவே!
கெட்டதை விட்டுவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் நல்லமன நிலையே!
இந்த உலகம் தன்னிலே நமக்கு வேண்டுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/தர்க்கத்தை மறுப்பவன் கண்மூடியாவான்!-அந்த தர்க்கத்திற்கு உட்படாதவன் அறிவிலியாவான்!

தர்க்கத்தை மறுப்பவன் கண்மூடியாவான்!-அந்த
தர்க்கத்திற்கு உட்படாதவன் அறிவிலியாவான்!-அந்த
தர்க்கத்திற்கு உட்பட துணிவற்றவன் கோழையாவான்!-அந்த
தர்க்கத்தின் உண்மையை அறியாதவன் முட்டாளாவான்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/நன்றாய் நான் ஒன்றுபடுகின்றேன்! நன்றாய் நான் போராடுகின்றேன்! நன்றாய் நான் உரிமைகேட்கின்றேன்! நன்றாய் நான் மக்கள்ஜன நாயக!

நன்றாய் நான் சிந்திக்கின்றேன்!
நன்றாய் நான் செயல்படுகின்றேன்!
நன்றாய் நான் ஒன்றுபடுகின்றேன்!
நன்றாய் நான் போராடுகின்றேன்!
நன்றாய் நான் உரிமைகேட்கின்றேன்!
நன்றாய் நான் மக்கள்ஜன நாயகப் போராளியாகின்றேன்!
நன்றாய் நான் வாழ்ந்திடுவேன்!

தமிழ்பாலா -/கவிதை/காதல்/அனுபவம்/ஏ! சுறுசுறுப்பான தேனீயே! உந்தனுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரம் என்பது இல்லையோ? உனைப் பார்த்தும் பலமனிதர் இன்னும் சோம்பலிலே

ஏ! சுறுசுறுப்பான தேனீயே!
உந்தனுக்கு ஓய்வெடுக்கக் கூட நேரம் என்பது இல்லையோ?
உனைப் பார்த்தும் பலமனிதர் இன்னும் சோம்பலிலே இருப்பதுதான் ஏனோ?
அந்த புத்திகெட்ட மனிதரை நீயும் நாலுகொட்டு கொட்டினாலும் புத்திவரக் காணோமே?
அந்த எறும்பப் பார்த்தும் சேமிக்கத் தெரியாத மனிதரும் மண்ணில் உள்ளாரே!
அந்த உடும்ப பார்த்தும் உறுதி இல்லாத மானிடரும் உலகினில் உள்ளாரே!
அந்த புத்திகெட்ட மனிதரை இன்னும் எதைத்தான் சொல்லித் திருத்திடவோ?
தமிழ்பாலா -/கவிதை/காதல்/அனுபவம்/

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/இன்பத்தில் உண்டாகும் மறதியடா! துன்பத்தில் உண்டாகும் உறுதியடா! அனுபவங்கள் வாழ்வினில் ஆயிரமாயிரம் கற்றுத் தந்திடுமே!

இன்பத்தில் உண்டாகும் மறதியடா!
துன்பத்தில் உண்டாகும் உறுதியடா!
அனுபவங்கள் வாழ்வினில்
ஆயிரமாயிரம் கற்றுத் தந்திடுமே!
எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும்
முன்னேறிச் செல்லும் வழியாகின்ற படிக்கட்டுத் தானடா!
தோல்வியில் பிறக்கும் ஞானம் தானடா!-வெற்றிக்கு
தொடர்ந்து செல்கின்ற பாதையாகுமடா!
தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/

தமிழ்பாலா/கவிதை/காதல்/அனுபவம்/எந்த தனியுடைமை கொடுமையையும் வெல்வது மக்கள் ஜனநாயகபுரட்சி தானடா! எந்த வேற்றுமையையும் ஒன்றுசேர்ப்பது ஒன்றுபட்ட போராட்டம் !

எந்த அதிகாரத்தையும் வெல்வது அன்பாகுமடா!
எந்த பயத்தையும் வெலவது துணிவாகுமடா!
எந்த தாழ்வுமனப்பான்மையும் வெல்வது நம்பிக்கையாகுமடா!
எந்த தனியுடைமை கொடுமையையும் வெல்வது மக்கள் ஜனநாயகபுரட்சி தானடா!
எந்த வேற்றுமையையும் ஒன்றுசேர்ப்பது ஒன்றுபட்ட போராட்டம் தானடா!
எந்த குறைகளையும் இல்லாது செய்வது வளரும் விஞ்ஞான மார்க்சீய தத்துவம் தானடா!
தமிழ்பாலா/கவிதை/காதல்/அனுபவம்/

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/எந்த நேரத்தில் எந்த பருவநிலை மாறிடும் என்று இந்தக் காலத்தில் சொல்லிடமுடியாத கோலமடி

தமிழ்பாலா-/கவிதை/காதல்/அனுபவம்/
மறக்காதே !கண்ணே நீயும்
மறக்காதே!
மழைக்காக நீயும் பிரார்த்தனை செய்ய சென்றாலும் - நீயும்
குடைதன்னை எடுத்துச் சென்றிட மறந்திடாதே!
எந்த நேரத்தில் எந்த பருவநிலை மாறிடும் என்று
இந்தக் காலத்தில் சொல்லிடமுடியாத கோலமடி-அதனாலே
மறக்காதே !கண்ணே நீயும்
மறக்காதே!
மழைக்காக நீயும் பிரார்த்தனை செய்ய சென்றாலும் - நீயும்
குடைதன்னை எடுத்துச் சென்றிட மறந்திடாதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/காதலியே நாள்தோறும் உன்னைபற்றி நான் எழுதியதெல்லாமே நினைவுகளாகுமே!-காதலியே இன்னும் உன்னைபற்றி நான்எழுதாதவை எல்லாமே கனவு

காதலியே நாள்தோறும்
உன்னைபற்றி நான் எழுதியதெல்லாமே நினைவுகளாகுமே!-காதலியே இன்னும்
உன்னைபற்றி நான்எழுதாதவை எல்லாமே கனவுகளாகுமே!
உன்னைபற்றி நான் எண்ணுபவை எல்லாமே காவியமாகுமே!காதலியே இதுவரை
உன்னைபற்றி நான் அறிந்தவை எல்லாமே இமயமாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அனுபவம்/வாழ்வுதன்னை சுவைக்கச் செய்வது அன்பாகும்! வாழ்வெல்லாம் சொர்க்கமாக்கி மகிழச்செய்வது அன்பாகும்!

வாழ்வை வளமாக்குவது அன்பாகும் துன்பதிலிருந்து மனிதரையெல்லாம்
மீளச்செய்வது அன்பாகும்!-குடும்ப
வாழ்வுதன்னை மேன்மை ஆக்குவதும் அன்பாகும் அழகற்ற
மாந்தரையும் அழகூட்டுவது அன்பாகும்!-உலக
வாழ்வுதன்னை சுவைக்கச் செய்வது அன்பாகும்!
வாழ்வெல்லாம் சொர்க்கமாக்கி மகிழச்செய்வது அன்பாகும்!