Popular Posts

Sunday, March 28, 2010

வாக்கை விற்றால் போகும் உயிராம்! உரிமை போனால் எல்லாம் போகும்!

வாக்கை விற்றால் போகும் உயிராம்!
உரிமை போனால் எல்லாம் போகும்!
மேற்கே மழையாம் கிழக்கே வெள்ளமாம் !
கண்ணில் விருந்தாம் காதல் மருந்தாம!.
கருத்தில் அன்பாம் நெஞ்சின் பண்பாம்!
மண்ணில் நேசமாம் மனிதநேயமாம்!
நல்லவர் உறவாம் நாட்டின் நலமாம்!
வாக்கை விற்றால் போகும் உயிராம்!
உரிமை போனால் எல்லாம் போகும்!

Saturday, March 27, 2010

கண்டதே காட்சியும் இல்லையடா கொண்டதே கோலமும் இல்லையடா.அறிவினில் ஆராய்ந்து பாராத எதுவும் உண்மை இல்லையடா

கண்டதே காட்சியும் இல்லையடா
கொண்டதே கோலமும் இல்லையடா.அறிவினில்
ஆராய்ந்து பாராத எதுவும் உண்மை இல்லையடா!-பகுத்தறிவினில்
அறிவினைச் செலுத்தாத வாழ்க்கையும் வாழ்க்கையில்லையடா!
அன்பினாலே பழகாத உலகம் நல்லோர் வாழாத நரகமடா
அன்புவாழும் சுவர்க்கம் உருவாக்கும் மனித நேயம் வேண்டுமடா!

உள்ளது சொல்ல ஊருமில்லாமல் போனதே நல்லது சொல்ல நாடுமில்லாமல் போனதே!

உள்ளதெல்லாம் போகாது இல்லாதது வாராது!-என்று
நல்லவங்க நாலுபேரும் சொன்னாங்களே!இப்பவோ!
உள்ளது சொல்ல ஊருமில்லாமல் போனதே!
நல்லது சொல்ல நாடுமில்லாமல் போனதே!
உள்ளதெல்லாம் போகாது இல்லாதது வாராது!.என்று
நல்லவங்க நாலுபேரும் சொன்னாங்களே!

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது. இளமைக் காதல் நெஞ்சுக்கு அறியாது பருவம் பாயும் காட்டாறாகுமடா!அதிலும் பக்குவம் கொண்டால் இன்பமாகுமடா!

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இளமைக் காதல் நெஞ்சுக்கு அறியாது
பருவம் பாயும் காட்டாறாகுமடா!அதிலும்
பக்குவம் கொண்டால் இன்பமாகுமடா!
உருவம் பார்த்து வருகின்ற காதலெல்லாமே
உலகினில் வருத்தம் செய்யும் துன்பமாகுமடா!
கனவினில் வருகின்ற காதலே!
கருத்தினில் நிற்காது ஓடுமடா!
கானலாய் தெரிகின்ற காதலே
கையினில் ஒருபோதும் கிடைப்பதில்லையடா!
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இளமைக் காதல் நெஞ்சுக்கு அறியாது
பருவம் பாயும் காட்டாறாகுமடா!அதிலும்
பக்குவம் கொண்டால் இன்பமாகுமடா!

பல்லிக்கு இங்கே தலையக் காட்டுகிறான், பாம்புக்கு அங்கே வாலக் காட்டுகிறான். இடத்துக்கு இடம் நிறமாறும் இந்த அடிமட்ட பச்சோந்தி பயவாழ்க்கைக்கு சாகுறதே மேல

பல்லிக்கு இங்கே தலையக் காட்டுகிறான்,
பாம்புக்கு அங்கே வாலக் காட்டுகிறான்.
இடத்துக்கு இடம் நிறமாறும் இந்த அடிமட்ட
பச்சோந்தி பயவாழ்க்கைக்கு சாகுறதே மேலடா!
இவன் போகாத அரசியல் கட்சி இந்த உலக்த்தில் இல்லையடா
சந்திரமண்டலத்தில் ஒருஅரசியல் கட்சி துவங்கினாலே அதிலே இவன்
ஆமாஞ்சாமி வரிசையிலே முதல் ஜால்ராத் தொண்டனாவானடா!

ஆரால கேடு! ஆரால கேடு?-உன் , வாயால கேடு. வாயால கேடு-வெட்டி வாயால கேடு. வாயால கேடு

ஆரால கேடு! ஆரால கேடு?-உன்
, வாயால கேடு. வாயால கேடு-வெட்டி
வாயால கேடு. வாயால கேடு
ஆரால கேடு! ஆரால கேடு?-உன்
, வாயால கேடு. வாயால கேடு-வெட்டி
வாயால கேடு. வாயால கேடு

வளவளத்த பேச்சு! கொளகொளத்துப் போச்சு!
வம்பளந்த ஏச்சு !வம்பாத்தான் ஆச்சு!
நல்லாத்தான் சொல்லு நல்லதத்தான் சொல்லு!
இனிப்பாதான் சொல்லு இனிமையாத்தான் சொல்லு!
உண்மையாத்தான் சொல்லு உருப்படியாத்தான் சொல்லு!
ஊர்வாழசொல்லு உலகம் உயரத்தான் வழிசொல்லு!~

எல்லார்க்கும் உணவு உடைவீடு மூன்றும் கிடைப்பதுதானே -மனிதனின் அடிப்படைத் தேவையாகவே மண்ணில் ஏங்குதே!

அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை என்றாலுமே -மனசே
ஆனைமேல் அம்பாரி வேணுமுனு கேட்குதடி
ஒன்றுமில்லை என்றாலும் ஓராயிரம் கனவானதே-மனசே
உலகைவிட்டு வானத்தில் பறந்து மிதக்கின்றதே!எல்லார்க்கும்
உணவு உடைவீடு மூன்றும் கிடைப்பதுதானே -மனிதனின்
அடிப்படைத் தேவையாகவே மண்ணில் ஏங்குதே!

அன்பே காதலடா! அன்பே இதயமடா!உள்ளத்தில் அன்பை எழுதியவன் -அதை அழித்து எழுதுவானா?

அன்பே காதலடா! அன்பே இதயமடா!உள்ளத்தில்
அன்பை எழுதியவன் -அதை
அழித்து எழுதுவானா?
அன்பே உலகமடா! அன்பே வாழ்க்கையடா!
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகுமடா!.
அன்பு இல்லையென்ற போது
ஆகுவதும் ஆகாது போகுமடா!
அன்பே காதலடா! அன்பே இதயமடா!உள்ளத்தில்
அன்பை எழுதியவன் -அதை
அழித்து எழுதுவானா?

கைப்பிடி சாம்பல அள்ளமுடியாத வயசுலயும் உனக்கு என்னடா சம்சாரம் கேட்குதாடா?

கைப்பிடி சாம்பல
அள்ளமுடியாத வயசுலயும் உனக்கு என்னடா சம்சாரம் கேட்குதாடா?
கிழட்டு எருமைமாடே!-வங்
கிழட்டு எருமைமாடே!
அறுப்புக் காலத்துல எலிக்கும் ஐந்து பெண்சாதியுனு சொல்லிபுட்டு-உன்னோட
ஆயுள் முடியுற கம்பூண்டும் வயசுலயும் உனக்கு வயசுபொண்ணு கேட்குதாடா!
கிழட்டு எருமைமாடே!வங்
கிழட்டு எருமைமாடே!
வயசுக்கேத்த நடப்பு நடக்காத ஜென்மங்களே-உங்கள் எந்த
கணக்குலதான் சேக்குறது சொல்லுங்கடா?-கைப்பிடி சாம்பல
அள்ளமுடியாத வயசுலயும் உனக்கு என்னடா சம்சாரம் கேட்குதாடா?

புரிந்துகொண்டே செய்யாதடா ரவுடித்தனத்தையே-உன்னோட பொய்யும் புரட்டும் வீடுவிட்டுப் போகுமடா நாட்டுக்குள்ளே!

அறிந்தறிந்து செய்யாதடா பாவத்தையே - நீயும்
அழுதழுது தொலைக்கவேண்டும் இந்த உலகத்திலே
புரிந்துகொண்டே செய்யாதடா ரவுடித்தனத்தையே-உன்னோட
பொய்யும் புரட்டும் வீடுவிட்டுப் போகுமடா நாட்டுக்குள்ளே!
சுயநலத்தில் ஆடுகின்ற ஆட்டமடா அது எத்தனை நாளைக்குடா? -மக்கள்ஜனநாயக
எழுச்சியிலே நீயும் மண்ணுக்குள் மண்ணாக போவாயடா!
புரிந்துகொண்டே செய்யாதடா ரவுடித்தனத்தையே-உன்னோட
பொய்யும் புரட்டும் வீடுவிட்டுப் போகுமடா நாட்டுக்குள்ளே!

Sunday, March 21, 2010

இனிப்பும் புளிப்பும் மணமும் ரசனையில் இருக்குதடி! அனுபவம் தந்திடும் ஆயிரம் பாடங்களே!

தாய்ப்பாலோ இனித்தாள்,​​
மகள் தயிரோபுளித்தாள்,​​
பேத்தி நெய்யோ மணத்தாளே​
இனிப்பும் புளிப்பும் மணமும் ரசனையில் இருக்குதடி!
அனுபவம் தந்திடும் ஆயிரம் பாடங்களே!

பூவிலே பிறந்து;​ நாவிலே இனிக்கும் தேன்பெண்ணே! தேனாய் இனித்தும் எந்த நோய்க்கும் மருந்தும் ஆன கண்ணே!

தேன்பெண்ணே தெவிட்டாத அமுதே
பூவிலே பிறந்து;​ நாவிலே இனிக்கும் தேன்பெண்ணே!
தேனாய் இனித்தும் எந்த நோய்க்கும் மருந்தும் ஆன கண்ணே!

ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்​ வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்

ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்​
வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்
காலமெல்லாம் கருத்தாக வளர்க்கும் பிள்ளைசுமை சுமந்து அசைந்துவந்தாள்
காத வழி போனாலும்,​​ கைகடுக்காச் சுமைகொண்டு நங்கைவழி நடந்துவந்தாள்
ஆயிரங்காலத்துப் பயிரினையே சுமந்து அமைதியாக ஆத்தோரம் வருகின்றாள்​
வருங்கால சந்ததியையே உள்வைத்து வெளியினில் துன்பம்தாங்கி நிற்கின்றாள்

சுளைகளில் தேன்கூடு கட்டவில்லை என்றாலும் இதழ்களில் தேன்சுவை கூட்டும் கரும்புகளாம்

பலாச்சுளைகளாம் இனிப்புச் சக்ரவர்த்தியாம்!
வெல்லக் கட்டிப் பிள்ளைகளாம்;​
முள்ளால் இருக்குது தொல்லைகளாம்.​
சுளைகளில் தேன்கூடு கட்டவில்லை என்றாலும்
இதழ்களில் தேன்சுவை கூட்டும் கரும்புகளாம்

தேசாந்திரியாய் ஒரு ஞானியைப் போல அமைதியாக நல்லது செய்யும் பொது நலவிரும்பியுன்னை நானே நேசிக்கின்றேனே!

தபால்தலைப் பறவையே! தபால்தலைப் பறவையே!
- நீங்கள்
தலை மட்டும் கொண்‌டு சிறகில்லாத பறவையாக தேசமெல்லாம் சுத்தும் சூட்சுமமே என்ன?
எத்தனை செய்திகள் எத்தனை கருத்துக்களைச் சுமந்து எங்கெங்கோ?சுற்றி தேசாந்திரியாய்
ஒரு ஞானியைப் போல அமைதியாக நல்லது செய்யும் பொது நலவிரும்பியுன்னை நானே
நேசிக்கின்றேனே!

கடல் அலைகளே கடல் அலைகளே! நீங்கள்? உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமலே அலைவதுவும் ஏனோ?

கடல் அலைகளே கடல் அலைகளே! நீங்கள்?தனிமையிலே
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமலே அலைவதுவும் ஏனோ?-உங்கள்
உள்ளம் கவர்ந்த காதலன் இன்னும் உங்களையே காணவில்லையோ?
இன்னும் துணையின்றி தனிமையிலே வாடுவது தான் உங்கள் சாபமோ?

Saturday, March 20, 2010

புரட்சி செய்ய விரும்பு புதுமை கற்க திரும்பு; தனியுடைமை நெருப்பு அதையே பொதுவுடைமை நீர்கொண்டு அணைப்பாய்

புரட்சி செய்ய விரும்பு
புதுமை கற்க திரும்பு;
தனியுடைமை நெருப்பு அதையே
பொதுவுடைமை நீர்கொண்டு அணைப்பாய்
அடிமையுணர்வு வேண்டாம் மடமை;
மக்கள்ஜனநாயகம் உயர்த்துவது நம் கடமை
எறும்பு போல இருப்பாய்! சமதர்ம சமுதாயம் காணும்வரை உனக்கேது தூக்கம்?
புரட்சி செய்ய விரும்பு
புதுமை கற்க திரும்பு;
தனியுடைமை நெருப்பு அதையே
பொதுவுடைமை நீர்கொண்டு அணைப்பாய்

காதலே ஓடி வா கலங்காமல் ஓடி வா; கண் மீது ஏறி வா கண்சாடை கொண்டு வா;கருத்தில் உறுதி கொண்டு வா

காதலே காதலே ஓடி வா
கலங்காமல் ஓடி வா;-அன்பு
கண் மீது ஏறி வா
கண்சாடை கொண்டு வா;கருத்தில் உறுதி கொண்டு வா
திட்ட திட்ட காதலே
திண்டுக்கல் ஆகிவா-எந்த எதிர்ப்புப் புயலையும் எதிர்த்தே காதலே நீயும்
பட்டம் போலே பறந்து வா-போராடி ஜெயிக்க ஓடி வா -வாழ்வில்
பம்பரம் போல் சுற்றி வா-காதலே நீயும்
பயமின்றி விண்ணோக்கி ஓடி வா;
காதலே காதலே ஓடி வா
கலங்காமல் ஓடி வா;-அன்பு
கண் மீது ஏறி வா
கண்சாடை கொண்டு வா;கருத்தில் உறுதி கொண்டு வா

காதல்; கண்ணுக்குள் கலந்து; நெஞ்சுக்குள் நுழைந்து -அன்புவேர்விட்டு மண்ணுக்குள் செழிக்கும்;

காதலம்மா காதல்;
காதலர்கள் கண்ட காதல்;
காதலன் அவனும் காதலி அவளும்
கலந்து கொண்ட காதல்;
கண்ணுக்குள் கலந்து;
நெஞ்சுக்குள் நுழைந்து -அன்புவேர்விட்டு
மண்ணுக்குள் செழிக்கும்;
இன்பத்தில் ஆயினும்-துன்பத்தில் ஆயினும்;-சேர்ந்து
எண்ண எண்ண இனிக்குமே -காதல்
ஆயிரம் காலத்து பயிராகுமே
காதலம்மா காதல்;
காதலர்கள் கண்ட காதல்;
காதலன் அவனும் காதலி அவளும்
கலந்து கொண்ட காதல்;
போராடி வெல்லும் புதுமைக் காதல்
புரட்சியில் நிமிர்ந்திடும் பொதுவுடைமை சமுதாயக் காதல்

மண்ணுக்குள் கிடந்தவளே மங்களமானவளே! மஞ்சள் பெண்ணே மஞ்சள் பெண்ணே!

மஞ்சள் பெண்ணே மஞ்சள் பெண்ணே
மண்ணுக்குள் கிடந்தவளே மங்களமானவளே!
மஞ்சள் பெண்ணே மஞ்சள் பெண்ணே
பெண்ணுக்குள் கண்ணாக முகத்தினிலே மின்னவந்தாயோ?-காதலன்
ஒண்ணுக்குள் ஒண்ணாக உறவினிலே சிரித்து நின்றாயோ?

இதயமே நீயே ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஒட்டம் -உன் ஓட்டம் நின்றுபோனால் வாழ்வோட்டம் ஓடிப்போகுமே!

இதயமே நீயே
ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஒட்டம் -உன்
ஓட்டம் நின்றுபோனால் வாழ்வோட்டம் ஓடிப்போகுமே!
இதயமே உன்னிலே -காதலியே
ஆடும் இன்ப ஆட்டம் ஓடியபின் இனிமை ஓட்டமே!
இதயமே நீயே
ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஒட்டம் -உன்
ஓட்டம் நின்றுபோனால் வாழ்வோட்டம் ஓடிப்போகுமே!

Friday, March 19, 2010

இம்மண்ணில் கண்ணாடி மட்டும் இல்லையென்றாலே எல்லாரும் அழகு தானே

அழுவாள் , சிரிப்பாள் அனைத்தும் செய்வாள் கண்ணாடிப் பெண்ணே !
அவள் முன்னே நாம் நின்றால் நம்மையே வியக்க வைத்திடுவாளே!இம்மண்ணில்
கண்ணாடி மட்டும் இல்லையென்றாலே எல்லாரும் அழகு தானே
காதலுக்கு முகம்பார்த்து கவிதை சொல்லும் கண்ணாடிக் கண்ணே!

வியாதிக்கும் மருந்துண்டு விதிக்கும் மருந்துண்டு ராசாத்தி வேதனைகளை சாதனைகளாய் மாற்றிடலாமே ராசாத்தி

வாழ்வும் தாழ்வும் சில காலம் ராசாத்தி!
வாழ்ந்து பார்த்திடலாமே என்ராசாத்தி

விண் பொய்த்தால்தானே மண் பொய்க்கும் ராசாத்தி!
வீண்விவாதத்தால் தானே துன்பங்கள் தொடர்ந்திடுமே ராசாத்தி!

விதி எப்படியோ மதி அப்படியே என்பதெல்லாம் ராசாத்தி பழங்கதையே பத்தாம்பசலித் தனமே ராசாத்தி!மதியாலே எதையும் வெல்லலாம் ராசாத்தி

வியாதிக்கும் மருந்துண்டு விதிக்கும் மருந்துண்டு ராசாத்தி
வேதனைகளை சாதனைகளாய் மாற்றிடலாமே ராசாத்தி

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் கடன்மட்டுமல்ல ராசாவே! முத்தமும் கூடவே ராசாவே

மேற்கே மழையாச்சு கிழக்கே வெள்ளமாச்சு ராசாவே!
வடக்கே கருத்தாச்சு தெற்கே மழையும் வந்தாச்சு ராசாவே!

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் கடன்மட்டுமல்ல ராசாவே!
முத்தமும் கூடவே ராசாவே !
உன்வாய்மட்டும் சர்க்கரை ஆக இருந்தா போதாது ராசாவே! உன்னோட கையும் கருணைக் கிழங்கு இல்லாம இருக்கவேணும் ராசாவே!

Monday, March 15, 2010

மயக்கும் பொழுதே மயங்கும் பொழுதே தனிமைப் பொழுதே .மாலைக் காலமாய் அணுகுண்டாய் தோன்றியதே, நான் எவ்வாறு பொறுப்பேனோ.?

நான் எவ்வாறு பொறுப்பேனோ?
மயக்கும் பொழுதே மயங்கும் பொழுதே தனிமைப் பொழுதே!
.மாலைக் காலமாய் அணுகுண்டாய் தோன்றியதே,
நான் எவ்வாறு பொறுப்பேனோ.?-என்
தலைவனின் பிரிவினால் தனித்துத் துணையில்லாது
தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற என்னுயிரை
தனிமை தினமும் அணுவாய்ப் பிளக்கின்றதே!
கரியவண்டுகள் முல்லை மலர்களில் பறந்து ரீங்காரம் செய்ததே ,-அது தலைவனின் அருகிருக்கும் பாவையர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால்
தலைவனின் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற என்னுயிரை தனிமை கூராய்ப் பிளக்கின்றதே. நான் எவ்வாறு பொறுப்பேனோ?
மயக்கும் பொழுதே மயங்கும் பொழுதே தனிமைப் பொழுதே
.மாலைக் காலமாய் அணுகுண்டாய் தோன்றியதே,
நான் எவ்வாறு பொறுப்பேனோ.?

என் கண்கள் அவனைக் காணும் ஆர்வத்தில் நீரருவியாகவே ஆனந்த கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்குமே

என் தலைவன் அவனின் வருகைதனையே எதிர் நோக்கியே!
வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் அவனைக் காணும் ஆர்வத்தில் நீரருவியாகவே
ஆனந்த கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்குமே
என் இனிய தோழியே!
உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது
பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடியதே, ஒன்றோடொன்று மோதியதே, காற்றோடு கலந்ததே மழைபொழியத் துடிக்கும்படியானதே -அந்த,
வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.
என் இனிய தோழியே!
என் தலைவன் அவனின் வருகைதனையே எதிர் நோக்கியே!
என் கண்கள் அவனைக் காணும் ஆர்வத்தில் நீரருவியாகவே
ஆனந்த கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்குமே

எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றுவாழும் பொதுவுடைமை நல்லுலகினைப் படைப்பதற்குப் போராடுதல் மிகவினிதே!

எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றுவாழும் பொதுவுடைமை நல்லுலகினைப் படைப்பதற்குப் போராடுதல் மிகவினிதே!
முத்தான முறுவலாள் சொல் இனிது;
சத்தான தமிழ்பேசும் தேனிசை இனிது
மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும்
ஒன்றுபடக் கூடுமின்ப மனை வாழ்க்கை இனிது. .
'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.
அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
மழலைச் செல்வங்களாம் அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது.
அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது.
அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது.
தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.- நாட்டினிலே
வஞ்சகர்களை நீக்குதல் இனியது.
அறிவுடைய பொதுவுடைமைத் தத்துவஞானியர் வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது.
பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.
மாட்சிமை இல்லாத தனியுடைமை அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.

வளமான சோலையுடன் கூடிய உலக நதிகளையே இணைத்தல் இனிது.
தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது , தாழ்வுற்று அடிமைப்பட்டு வாழாது உரிமைக்கு போராடி ஜெயித்து வாழ்தல் இனிதாகும்.
எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.
பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.
எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்றுவாழும் பொதுவுடைமை நல்லுலகினைப் படைப்பதற்குப் போராடுதல் மிகவினிதே!
என் தலைவியிடத்து நான் செல்வதற்குள் என் மனம் சென்றுவிட்டதே

மூங்கில்கள் தென்றலில் இசைந்து இன் குழல் ஊதும் பொழுது

மூங்கில்கள் தென்றலில் இசைந்து
இன் குழல் ஊதும் பொழுது
என் தலைவன் விரைந்து வருவான் எனச்சொல்லுதே!
பொன்மாலை மயக்கத்தில் பூத்த இளம்பூவில் வண்டும் ரீங்காரம் பாடும் ரம்மியமான காலமிதிலே!
மூங்கில்கள் தென்றலில் இசைந்து
இன் குழல் ஊதும் பொழுது
என் தலைவன் விரைந்து வருவான் எனச்சொல்லுதே!

எழில் வானம் மின்னும், காதலன் அவன் தூது உரைத்தே!

தோழி தலைவியிடம் கூறினாள் ஒருசேதியே !சுகச்சேதியே !
எழில் வானம்
மின்னும், காதலன் அவன் தூது உரைத்தே!
வளைந்த குழையையுடையாளே,
ஆதவனின் வெங்கதிர் குறைந்ததே,
கார்பருவம் துவங்கியதே-
நீண்ட நெடிய காடெல்லாம் மிக்க
அரும்புகளைத்தந்திடவே, உனது,
எனது , நமது தலைவன் இப்பொழுதே வருவான்
என்றே மேகம் தூது சொன்னதே! என்று தோழி தலைவியிடம் கூறினாள்.
என்று

வானம் கரு இருந்து ஆலிக்கும் அந்திப்பொழுதே!

இன்தோழியே!என்தோழியே!மாலையிடும் நாளைச் சொல்லிடவே இன்பம் அள்ளிடவே!
வருவேன் என்றுசொன்ன காதலனே வந்துவிட்டான் சுகந்தந்துவிட்டான்
வானம்
கரு இருந்து ஆலிக்கும் அந்திப்பொழுதே!
வருவேன் என்றுசொன்ன காதலனே வந்துவிட்டான் சுகந்தந்துவிட்டான் இன்தோழியே!
என்தோழியே!

Saturday, March 13, 2010

காலைச் செய்வோம் என்று நல்லதைச் செய்வாரே

இன்றே இப்போதே
காலையே செய்வோம் என்று நல்லதைச் செய்வாரே
காலமெல்லாம் நல்லதையே செய்திடுவாரே- நாளையோ?
மாலையோ செய்திடுவோம் என்று சொல்லிடுவார் என்றும் எதையும் செய்யமாட்டாரே!

Wednesday, March 10, 2010

பூரணமாய் புதுப்பொலிவாய் பொன்னொளியாய் கொண்டவளே என்னருமைக் காதலியே

பூரணமாய் புதுப்பொலிவாய் பொன்னொளியாய்
கொண்டவளே என்னருமைக் காதலியே
செங்கனி வாயழகும் தீந்தேன் மொழியழகும்
பொங்கும் சிரிப்பழகும் பூமுகத்து ஒளியழகும்-- எங்கும்

புகழும் கல்வியழகும் சிங்கார முகத்தழகும்
பழகும் பாட்டழகும் படிக்கும் ஏட்டழகும் -
தித்திக்கும் கட்டழகும் தெவிட்டாத தமிழழகும்
பகுத்தறிவால் சிந்திக்கும் ஞானமழகும்- பூரணமாய் புதுப்பொலிவாய் பொன்னொளியாய்
கொண்டவளே என்னருமைக் காதலியே

கதித்த வரை சேர்ந்தாளே கதித்தவரைச் சேராளே-காதல் கதித்தவரைச் சேர்ப்பாள் காதலியே!

கதித்த வரை சேர்ந்தாளே கதித்தவரைச் சேராளே-காதல்
கதித்தவரைச் சேர்ப்பாள் காதலியே!

மண்ணில் மழைவரும் மரம்வளர்த்தாலே! மனதில் உனைவளர்த்தேன் காதலியே!

மண்ணில் மழைவரும் மரம்வளர்த்தாலே!
மனதில் உனைவளர்த்தேன் காதலியே! - அன்பால் காதல் தேன்மழை
மளமள என்று என்னெஞ்சினில் வார்த்ததே!
மண்ணில் மழைவரும் மரம்வளர்த்தாலே!
மனதில் உனைவளர்த்தேன் காதலியே!

Wednesday, March 3, 2010

எல்லாமே தானே கற்றுவிட்டோம் என்று நீயும் துள்ளிக் குதிக்காதேடா!

இவ்வுல்கினிலே முற்றும் உணர்ந்தவரே இல்லையடா எல்லாமே தானே
கற்றுவிட்டோம் என்று நீயும் துள்ளிக் குதிக்காதேடா! - சிற்றுளியும் பெரும்
கல்லினையே தகர்த்திடுமடா! சிறிய அணுவும் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்துமடா!

பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும் தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?

பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும்
தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?
நீரிற் குமிழி யிளமையடா! நாம் சம்பாதிக்கும் காசே
நீரில் சுருட்டும் நீண்ட அலைகளடா! - நீரில்
எழுத்தாகும் நமது உடம்படா!-இக்கலியுலகினிலே நீயும் தனி நலத்திற்கே
நித்தமும் ஆளாய் பறப்பதுதான் ஏனடா?
மெய்யை உணராமலே பொய்யை வீழ்த்தாமலே
உண்மையில் நீயும் உறங்குவதுதான் ஏனடா?
பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும்
தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?
நீண்ட வாழ்வுதனிலே ஒற்றுமையின்றி வேற்றுமையே கொண்டு
நீயும் தனிமைத் தீவாய் வாழ்வதுதான் ஏனடா?
பொதுவுடைமை சுவர்க்கத்தைப் படைக்காமலே!- நீயும்
தனியுடைமை நரகத்தில் அமிழ்ந்து கிடப்பதுவும் ஏனடா?

Tuesday, March 2, 2010

எனதினிய தோழியே என்சோட்டு சேடியே -எனதினிமைக் காதலனை இனிமேல் நானும் காணும் வழி யாது? ஆராய்ந்து கூறிடுவாயே!

எனதினிய தோழியே என்சோட்டு சேடியே -எனதினிமைக் காதலனை இனிமேல்
நானும் காணும் வழி யாது? ஆராய்ந்து கூறிடுவாயே!
என் தந்தை, கவர்ந்து வந்த இறால் மீன்களைக்
கவர வருகின்ற பறவைகளை
ஓட்டியபடி புன்னை மரங்கள் பொருந்திய கானலில் நானும் இருந்தபோது
பொய்யான புகழுரைகளைக் கூறி என்னிடமே இன்பம் துய்த்த
நெய்தல் நிலத் தலைவனை இனிமேல் நானும் காணும் வழி யாது? ஆராய்ந்து கூறிடுவாயே .

Monday, March 1, 2010

காதலியே உன்னிடமே ! காமனின் அம்பான ஐந்தும் உள்ளதடி! நம் காதல் கவிதையின் இசைதனையே மீட்டுதடி

காதலியே உன்னிடமே !
காமனின் அம்பான ஐந்தும் உள்ளதடி!
காதல் கவிதையின் இசைதனையே மீட்டுதடி!
. அவற்றுள் காதல் கதவினைத் திறக்கவே
காணும் கண்களிலே இரண்டு அம்புகளை விழிகளில் உள்ளதாகவே - காமன் தலைவியாம் உந்தனுக்குக் கொடுத்தானோ! அதனாலே காதல் துணைவனாம்! தலைவனாம் என் உயிருக்கு யாது நிகழுமோ? என அஞ்சும் முன்னே, காமன் உனக்களித்த
உனது மீதமுள்ள அம்புகளும் புன்னகை வடிவினில் என்னெஞ்சினை கவ்விடவே!
எனை நோக்கி பாய்ந்து வந்தனவோ?எந்தனையே நிலைகுலைய வைத்தனவோ?
காதலியே உன்னிடமே !
காமனின் அம்பான ஐந்தும் உள்ளதடி!- நம்
காதல் கவிதையின் இசைதனையே மீட்டுதடி!

புரட்சியும் நீயடி,புதுமையும் நீயடி புன்னகையும் நீயடி , பூரணமும் நீயடி காதலும் நீயடி,கவிதையும் நீயடி கானமும் நீயடி ,ஞானமும் நீயடி!

வானும் நீயடி,வரப்பும் நீயடி!
வையமும் நீயடி,மேகமும் நீயடி!
நிலவும் நீயடி, நீல அலையும் நீயடி!
மதியும்நீயடி,மரகதமும் நீயடி!
கதிரும் நீயடி,காலமும் நீயடி!
ஊனும் நீயடி,உறவும் நீயடி!
உயிரும் நீயடி,உண்மையும் நீயடி
உள்ளமும் நீயடி,ஊக்கமும் நீயடி!
இல்லமும் நீயடி.இன்னமுதும் நீயடி!
புரட்சியும் நீயடி,புதுமையும் நீயடி!
புன்னகையும் நீயடி , பூரணமும் நீயடி!
காதலும் நீயடி,கவிதையும் நீயடி!
கானமும் நீயடி ,ஞானமும் நீயடி!
அன்பும் நீயடி,அறிவும் நீயடி!
அழகும் நீயடி, பண்பும் நீயடி!
தோழியும் நீயடி, துணையும் நீயடி!

என்னில் ஏகமா யிருந்தாய் நீ,- நெஞ்சினில் என்றென்றும் நின்றாய் நீ.!

-என்னில்
ஏகமா யிருந்தாய் நீ,- நெஞ்சினில்
என்றென்றும் நின்றாய் நீ.
ராகமாய் இணைந்தாய் நீ-உண்மை
யாகமாய் அணைத்தாய் நீ -வாழ்வின்
யோகமாய் விழுந்தாய் நீ-காதலென்னும்
மோகமாய் விளைந்தாய் நீ,
தாகமே தீர்த்தாய் நீ--அன்பாலே
மவுனமாய் அழைத்தாய் நீ,-என்னில்
ஏகமா யிருந்தாய் நீ,- நெஞ்சினில்
என்றென்றும் நின்றாய் நீ.

கொக்குமாமா!கொக்கு மாமா!-அட மக்கு மாமா! மக்கு மாமா!

கொக்குமாமா கொக்குமாமா கன்னியாம்
ஓடுமீன் ஓடவே உறுமீன் கன்னியரே வரும் அளவும்
ஒற்றைக்காலிலே நின்று தவமிருந்தே!
வாடி இருக்கீங்களா? வதங்கி விட்டீங்களா?
கொக்குமாமா!கொக்கு மாமா!-அட
மக்கு மாமா! மக்கு மாமா!

இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே! இசையே புனிதமா? தெய்வீகமா?இனிமையா? அமுதமா? ஆனந்தமா?

இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே!
இசையே புனிதமா? தெய்வீகமா?இனிமையா? அமுதமா? ஆனந்தமா?
புல்மீது பூவிழுவது போலவே!
புன்னகைகளுக்கு நடுவினிலே வார்த்தைகளைத் தேடுகின்றேன்!
கல்மனமதையும் கரைத்துவிடுமே!
கானமழைபெய்து இடையினிலே இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே!
இனியகவிதைக்கும் உயிர் இசைக்குமே!
இசையே புனிதமா? தெய்வீகமா?இனிமையா? அமுதமா? ஆனந்தமா?