Popular Posts

Friday, March 19, 2010

வியாதிக்கும் மருந்துண்டு விதிக்கும் மருந்துண்டு ராசாத்தி வேதனைகளை சாதனைகளாய் மாற்றிடலாமே ராசாத்தி

வாழ்வும் தாழ்வும் சில காலம் ராசாத்தி!
வாழ்ந்து பார்த்திடலாமே என்ராசாத்தி

விண் பொய்த்தால்தானே மண் பொய்க்கும் ராசாத்தி!
வீண்விவாதத்தால் தானே துன்பங்கள் தொடர்ந்திடுமே ராசாத்தி!

விதி எப்படியோ மதி அப்படியே என்பதெல்லாம் ராசாத்தி பழங்கதையே பத்தாம்பசலித் தனமே ராசாத்தி!மதியாலே எதையும் வெல்லலாம் ராசாத்தி

வியாதிக்கும் மருந்துண்டு விதிக்கும் மருந்துண்டு ராசாத்தி
வேதனைகளை சாதனைகளாய் மாற்றிடலாமே ராசாத்தி

2 comments:

ரவிசாந் said...

அழகா எழுதுறிங்கள் ..........

தமிழ்பாலா said...

ரவிசாந் அவர்களே நன்றி
உங்களின் ஆக்கபூர்வமான உத்வேகவேகமான அன்பு வார்த்தைகளுக்கு கோடி வணக்கங்கள்,.