Popular Posts

Thursday, June 5, 2008

சுற்றுச்சூழல் பாதுகாப்பு




  • சுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.


  • மனிதன் தன் தேவைக்காக மரங்களை அளவுக்கு அதிகமாகவே அழித்துவிட்டான். தற்போதைய சூழலில் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் தூய காற்று மக்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் எல்லா இடங்களிலும் மரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால், நம் இந்திய திருநாட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க அதிகரிக்க காற்றுமாசு ஏற்படுகிறது அதோடு கூட இரைச்சல் என்றும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கறது.


  • போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகவும், காற்றுமாசுக்கு முக்கிய காரணமாகவும் அமைவது தனிநபர்கள் (பணக்கார, நடுத்தர)பலர் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை அதிகமாக பயன் படுத்தி வருவதாகும். இதனால் ரோட்டில் நடந்தும், மிதிவண்டியிலும் செல்லும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.


  • நம்நாட்டில் பணக்கார, நடுத்தர வர்கத்தினர்களை விட அதிகமாக இருப்பவர்கள் ஏழை மக்கள் தான் என்பதை நாம் மறுக்க முடியுமா? டாட்டாவின் நானோ காரை பற்றி கேள்விபடுகிறோம். இந்தக்கார் நடுத்தர மக்கள் பலரும் வாங்கி அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்று பயணம் செய்தால் ரோட்டில் அந்த கார்கள் செல்ல இடம் இருக்குமா? அல்லது நெரிசல் தான் தவிர்கப்படுமா? அல்லது காற்று தான் மாசுபடாமல் இருக்குமா? அல்லது இரைச்சல் தான் கேட்காமல் இருக்குமா? அல்லது பயணம் செய்வது எதற்கோ அந்த வேலையை தான் உரியநேரத்தில் முடிக்கமுடியுமா? இப்போதே சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியால் ஒருமணி நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு அதிகபட்சம் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் நேரத்தில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கூட ஆகலாம்.


  • நாம் இந்த நிலையை போக்குவது எப்படி? சுற்றுச்சூழல் பாதிப்பால் இயற்கை அதன் தன்மையை மாற்றிக்கொண்டு வருவதால் வெள்ளம், போன்ற பல்வேறு இயற்கை பாதிப்புகள் ஏற்படுகின்றது.


  • ஓசோனில் ஓட்டை ஏற்பட்டுவிட்டது அதை அடைக்க முடியாது என்றாலும் இனிமேலும் ஓட்டை அதிகமாக ஏற்படா வண்ணம் முயற்சி மேற்கொள்வது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை.


  • மரம் வளர்போம்! காற்று மாசுபாட்டை தடுக்க முயற்சி மேற்கொள்ளோம்!

No comments: