Popular Posts

Saturday, November 28, 2009

'உனது இதயத்தாலே குழந்தைகளைப் போலாகிவிடு! உன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் உனக்குப் வேறொன்றுமில்லையே!.

'உனது இதயத்தாலே குழந்தைகளைப் போலாகிவிடு!
உன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் உனக்குப் வேறொன்றுமில்லையே!.
உன்னைக் காட்டிலும் உனக்கு வேறோரு பகையும் கிடையாதே!. உனக்கு நீயே நட்பாகியபோது,
உலக முழுதும் உனக்கே நட்பாகி விடுமே! உனக்குத் நீயேதான் பகையாக ஆனபோது இவ்வுலகமெல்லாமே உனக்கே பகையாகிடுமே!உனது
. உள்ளப் பகையே பகையாகிடுமே!, வெளிப்பகை பகையல்லவே!.உனது உள்ளப் பகையின் மாயத் தோற்றமே வெளிப் பகையானதே.உனது உள்ளப் பகையை களைந்து விட்டால்,
வெளிப்பகையே தானே நழுவிப் போய்விடுமே!.

பத்தும் பசிவந்திடப் பறந்து போகுமே! பசிக்கு ருசியும் தெரிவதில்லையே!

பத்தும்
பசிவந்திடப் பறந்து போகுமே!
பசிக்கு ருசியும் தெரிவதில்லையே!
பசித்த வாய்க்கு புசிக்கத் தராதவன் மனிதனே இல்லையே!
பசித்தவன் வயிற்றுக்கு ஓடாத இடமும் இவ்வுலகினில் இல்லையில்லையே!
பசியுள்ள உலகினில் இன்பம் வாழ்விற்கு வெகுதூரமே என் தோழனே!
வசதியும் தராதபோது பசியும் அதைவிடாது துரத்துமே!பூகோள எல்லைவரையினிலே!
பசியினில் ஒருவன் வாடுவதே !அவன் உணவை ஒருவன் திருடியதே!
பசியினை வளர்த்து திருடும் தனியுடைமையே ஒரு நாளில் ஓடும் அப்போது பசியும் ஓடுமே!
பசியினை போக்கும் பொதுவுடைமை எல்லோரும் புசிக்கத் தத்துவத்தை நடைமுறை ஆக்கிடுமே!

நல்லாரைக் கண்டுகொண்டேன் இன்றே நன்றே

நல்லாரைக் கண்டுகொண்டேன் இன்றே நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்கின்றேன் அன்பில் நன்றே - நல்லாரின்
குணங்கள் உரைக்கின்றேன் பண்பில் நன்றே; அவரோடு
இணங்கி இருக்கின்றேன் நலமே என்றும்!

Thursday, November 26, 2009

நவீன காலனி ஆதிக்க அதிகாரத்தின் காலடியிலே உலகமடா!இவ்வுலகினிலே-தேசபக்த கட்டபொம்மர்களே எப்படி இல்லாமல் போனார்களோ?-எங்கிருந்து? இத்தனை எட்டப்பர்களே ?

கண்ணுக்கெதிரே எத்தனையெத்தனையோ?களேபரங்களே!-தோழனே அதைக்
கண்டும் நீயும் உணர்வின்றி வாளாதிருப்பதனோ?
காலம் நழுவும் = நவீன காலனி
ஆதிக்க அதிகாரத்தின் காலடியிலே உலகமடா!இவ்வுலகினிலே-தேசபக்த
கட்டபொம்மர்களே எப்படி இல்லாமல் போனார்களோ?-எங்கிருந்து? இத்தனை
எட்டப்பர்களே எப்படித்தான் முளைத்தார்களோ?
இதயத்தின் இரத்தக் கண்ணீராலே- மண்ணின்
உடம்பெல்லாமே கரிக்கின்றதே!
சூது கவ்விய தர்மத்தின் வாழ்வுதன்னிலே திரும்பவும் தர்மமே!
மீண்டும் வென்றிட துணிவானதொரு பாதைதான் இருக்கிறதா? நல்லோரின் துணை
நீயும்தான் கொண்டாயா?கேளிக்கையும் களியாட்டங்களிலும் மூழ்கிக்கிடக்கும் உங்களாலே-வ்ழி
மாறித் தடுமாறிக் கொண்டிருக்கும் உங்களாலே! உங்களுக்கு நீங்களே திசை
மாறிப் போவதையாவது உணரமுடிகிறதா?ஏகாதிபத்தியமே!
உங்களின் உணர்வுகளைப் பிழிந்து சக்கையாக்கியே!
உங்களின் அறிவுதனை உறிஞ்சி எந்திரமாக்கியே!- நவீன ஏகாதிபத்திய வாதிகளே!
உயிருடன் உணர்வின்றி உங்களையே உலவவிட்டிருப்பது தெரியவில்லையா?-அதுவும்
உங்களின் உழைப்பினையே சுரண்டிக் கொள்ளையடிக்கத்தான் என்ற உண்மையாவது
உங்களுக்குப் புரிகின்றதா? நீயும் மூளைச்சலவைதான் செய்யப்பட்டே! முடமாகியே
உன்னுரிமை இழந்து மூலமிழந்து நிற்கின்ற கையாகாலாத தனத்திலே
உங்களையே பார்த்திடும் போதெல்லாமே நல்லோரின் ஆவிதுடிக்கின்றதே
இந்த தேசத்தின் அங்கமெல்லாமே பதறித்தான் துடிக்கின்றதே!
உங்களது தகவல் தொழிலின் நுட்பம்தான் கண்டு நீயும் பூரிக்கின்றாயே!
உலகினைச் சுருக்கும் போக்குவரத்து என்று வியக்கின்றாயே?
அன்றைய ஆங்கிலேய அஞ்சல் சேவையும் இருப்புப்பாதையும் எதற்குப் பயன்பட்டதே
என்பதுதான் என்ற வரலாற்றினையே நீயும் தான் மறந்துதான் போனீரா?
நமது பரந்துபட்ட உலகினையே சுருக்குவது என்பதே உலகமக்களினையே
நாளெல்லாமே சுருட்டத்தான் ,சுரண்டிக் கொள்ளையடிக்கத்தான் என்பது தெரிந்தும்
நீயும் சுருண்டு கொடுக்கின்றாயே உங்களுக்கு மானமில்லையா? ஈனமில்லையா?
உங்களுக்கே ரோசமில்லையா? உணர்வில்லையா? திராணியில்லையா?
உங்களின் உடலினிலே குருதிதான் ஓடவில்லையா? நீங்கள் என்ன சுவாசமற்ற பிண்டமோ?தனியுடைமை மாற்றி,
அல்லது எதிர்த்து போராடமனமின்றி முடங்கிக் கிடக்காதே வீறுகொள்ளடா!விழித்தெழடா?

என் மனத்து இருளை ஒளியாய் மாற்றுவார் யார்தான் உளரோ?இந்த உலகினிலே! எவரும் இல்லையே!இது உண்மையின் எல்லையே!

எனதினிய காதலியே இவ்வுலக தேவதையே!
உனைப்போல் என்காதலாய் என் உளத்துள் அன்பாகத்தான்
வந்து உனையன்றி!
என் மனத்து இருளை ஒளியாய் மாற்றுவார் யார்தான் உளரோ?இந்த உலகினிலே!
எவரும் இல்லையே!இது உண்மையின் எல்லையே!

இம்மனமும் அந்த மாயனின் முன்னே போகாமலே இருப்பதுதான் - எந்தவிதமோ? எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?

அன்னம்தனை தூதுவிடுத்தேனே அன்னந்தான் அங்கு என்காதலன் அவனையே
இன்னம்தான் கண்டு அறியாது வந்ததே தோழியே

அப்பால் ஓர் வண்டை அனுப்பினேனே அவனிடத்து என்காதலை சொல்லாதே
அப்பால் நின்று திகைத்ததே! - தவறாது

மானைப் போய்த் தூது சொல்லி வா என்றேனே அதுதன் இணையைத்தேடி ஓடித்
தானெங்கோ காட்டுவழி போனதே-என் தோழி

ஆரணங்கை நான் தூது அனுப்பினேனே அப்பாவையும் தன்காதலன் வசம்
ஆகி காதலிலிலே மூழ்கிப்போனாளே - ஆகையினால்-
எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?
என்னிதய சாம்ராஜயத்தின் காதல் தலைவனிடமே!
இந்த மனத்தைத் தூதாய் போய்வா நீஎன்றேனே! இம்மனமும்
அந்த மாயனின் முன்னே போகாமலே இருப்பதுதான் - எந்தவிதமோ?
எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?

புத்திக்குள் உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?

உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு
விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?
அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே!
தித்திக்கும் தென்அமுதே தெள்ளமுதின் மேலான தெம்மாங்கே!
முத்திக் கனியே என் முத்தமிழே -செந்தமிழே செந்தேனே ! புத்திக்குள்

உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு
விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?

மனமே நீயும் மறவாதே தூதுசொல்லி வா! மனமே நீயும் மறவாதே தினமே உறங்காதே காதலனவன் விழிக்குள்ளே காதல் மொழிசொல்லவே மனமே நீயும் மறவாதே தூதுசொல்லி வா!

மனமே நீயும்
மறவாதே தூதுசொல்லி வா!
மனமே நீயும் மறவாதே தினமே உறங்காதே காதலனவன் விழிக்குள்ளே காதல் மொழிசொல்லவே மனமே நீயும்
மறவாதே தூதுசொல்லி வா!
சிந்தை மகிழ்ந்து அன்புனே தேடியநாள் ஓடிஎதிர்
வந்த காதலாம் விளையாட்டு இனிமேல் வாராதோ!
தென்பொதிகைச் சந்தனத்தோடு தென்றல் உறவாய் வந்தாய்!கனவு மெய்ப்பட காதல்
அன்புற என்னோடு உறவும் ஆக்காயோ?அன்பாலே
தேடும் நிழல் சிந்தனை ஆகினேன் வெம்பனியால்
வாடிய செந்தாமரை மலரானேன்!

வாழ்க்கையை கற்றுக் கொண்டேன் சமூகத்திடமே! ஊடலாம் பிரிவை கற்றுக் கொண்டேன் .காதலிடமே பொதுவுடைமை கற்றுக் கொண்டேன் மார்க்சீயத்திடமே!

மெய்யறிவினையே கற்றுக்கொண்டேன் பகுத்தறிவிடமே!
அன்பை கற்றுக் கொண்டேன் அம்மாவிடமே!
அறிவை கற்றுக் கொண்டேன் அப்பாவிடமே!
பாசத்தை கற்றுக் கொண்டேன் தங்கையிடமே!
நட்பை கற்றுக் கொண்டேன் நண்பர்களிடமே!
உறவுகளை கற்றுக் கொண்டேன் சொந்தபந்தங்களிடமே!
வாழ்க்கையை கற்றுக் கொண்டேன் சமூகத்திடமே!
ஊடலாம் பிரிவை கற்றுக் கொண்டேன் .காதலிடமே
பொதுவுடைமை கற்றுக் கொண்டேன் மார்க்சீயத்திடமே!

Tuesday, November 24, 2009

புறத்தே தவக்கோலம் பூணுவாரே! அகத்தே வஞ்சக எண்ணம் கொள்ளுவாரே!

உடலெல்லாம் சிவப்பாகவே! மூக்குமட்டும் கறுப்பாகவே இருக்கும் குன்றிமணிபோலவே
புறத்தே தவக்கோலம் பூணுவாரே!
அகத்தே வஞ்சக எண்ணம் கொள்ளுவாரே!

பண்பில்லாத மனிதரிடமே ! உண்மை அன்பினையே வேண்டுவது என்பதே! மணமில்லாத மலரிடமே வாசத்தையே வேண்டுவது போலாகுமே!

பண்பில்லாத மனிதரிடமே !
உண்மை அன்பினையே வேண்டுவது என்பதே!
மணமில்லாத மலரிடமே வாசத்தையே வேண்டுவது போலாகுமே!

வஞ்சகரின் பொய்யுரையை மெய்யென்று எத்தனைபேர் கூறினாலுமே மெய்யறிவார் பகுத்தறிவாளரே!அதைஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே!

நஞ்சினையே அமுதென்று கோடிப்பேர் கூறினாலும் உண்மை உணர்ந்தவரே அதைஒரு நாளும்
ஒப்புக்கொள்ள மாட்டாரே!-
அதுபோலவே!வஞ்சகரின் பொய்யுரையை மெய்யென்று எத்தனைபேர் கூறினாலுமே மெய்யறிவார் பகுத்தறிவாளரே!அதைஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே!

Monday, November 23, 2009

மண்ணொன்று தானே பலமண்பாண்டமாய் ஆகிடுமே!பகுத்தறிவு ஒன்றுதான் என்ற போதிலுமே! உயிர்கள் அனைத்திலுமே உறைந்துதான் கிடக்கின்றதே!

மண்ணொன்று தானே பலமண்பாண்டமாய் ஆகிடுமே!பகுத்தறிவு ஒன்றுதான்
என்ற போதிலுமே!
உயிர்கள் அனைத்திலுமே உறைந்துதான் கிடக்கின்றதே!
உண்மை உலகினில் மறைந்திருப்பது போலவே! உள்ளெங்குமே,வெளியேங்குமே -பகுத்து
அறியும் ஆழமும் ஆழ்ந்துதான் இருக்கின்றதே!

மவுனவித்தை யாதென்றால் காதல் என்ற மூன்றெழுத்தே! காதலாம் மோனவித்தை அறிந்தாலே-வாழும் காலமெல்லாம் போராட்டம் போராட்டமே!

மவுனவித்தை யாதென்றால்
காதல் என்ற மூன்றெழுத்தே!
காதலாம் மோனவித்தை அறிந்தாலே-வாழும்
காலமெல்லாம் போராட்டம் போராட்டமே!

கண்ணின் விழியேது? விழிக்குள்ளே விழியங்கேது? அன்பு வெளியேது? அன்புவெளிக்குள்ளே அன்பு வெளியேது? காதல் மொழியேது? காதல் மொழிக்குள்ளே காதல் மொழியங்கேது?

கண்ணின் விழியேது? விழிக்குள்ளே விழியங்கேது?
அன்பு வெளியேது? அன்புவெளிக்குள்ளே அன்பு வெளியேது?
காதல் மொழியேது? காதல் மொழிக்குள்ளே காதல் மொழியங்கேது?
பார்வை வழியேது? பார்வை வழிக்குள்ளே பார்க்கும் வழியேது?

எந்தக் காலம் எந்தக் காலமே -அன்பு சித்தி கொண்டு கூடுவது எந்தக் காலமே! அந்தக் காலம் அந்தக் காலமே!காதல் பேரின்ப முத்தி கொண்டு கூடுவது அந்தக் காலமே!

எந்தக் காலம் எந்தக் காலமே -அன்பு
சித்தி கொண்டு கூடுவது எந்தக் காலமே!
அந்தக் காலம் அந்தக் காலமே!காதல் பேரின்ப
முத்தி கொண்டு கூடுவது அந்தக் காலமே!

Friday, November 20, 2009

வான்நின்று அழைக்கும் மழைபோல் தலைவனும் தானினறு அழைக்கும்அன்பிலே தலைவியே மயங்குவாள்-பார்வையாலே நெஞ்சிலே தாமென்று அழைப்பது காதல் கருதியே!.

வான்நின்று அழைக்கும் மழைபோல் தலைவனும்
தானினறு அழைக்கும்அன்பிலே தலைவியே மயங்குவாள்-பார்வையாலே நெஞ்சிலே

தாமென்று அழைப்பது காதல் கருதியே!.

Thursday, November 19, 2009

அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே ! மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே! சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே! மணமாகி ரசித்ததுவே!

அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே !
மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே!
சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே!
மணமாகி ரசித்ததுவே!
அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே!

இம்மண்ணிலே வீடேது இங்கு உறவேது? உயிரேது ? தவமேது? யோகமேது? நாடேது? நகரமேது ? தானேது? தனதேது? எல்லாமே நமதென்றால் தவறேது?

வீண்பேச்சினாலே ! நற்கொள்கை இல்லாமலே! நல்லோர் துணையில்லாமலே!
கோடான கோடிப்பேர் உலகினிலே!
மாண்டு போனாரே! மறைந்து போனாரே! !இம்மண்ணிலே
வீடேது இங்கு உறவேது? உயிரேது ? தவமேது? யோகமேது?
நாடேது? நகரமேது ? தானேது? தனதேது? எல்லாமே நமதென்றால் தவறேது?

மானங்கெட்ட செயலாகுமடா! நீயும் குருட்டுத் தனமாகவே ஒரு தனிமனிதனையோ? ஒரு மதத்தையோ ? பின்பற்றுவது என்பதே! மானங்கெட்ட செயலாகுமடா!

மானங்கெட்ட செயலாகுமடா! நீயும் குருட்டுத் தனமாகவே ஒரு தனிமனிதனையோ?
ஒரு மதத்தையோ ? பின்பற்றுவது என்பதே!
மானங்கெட்ட செயலாகுமடா!- நீயும் பகுத்தறிவுப் படியே நடப்பது என்பதே வாழ்வின்
கண்ணியமாகுமடா!

எதையும் தாங்கும் இதயம் கொள்ளடா! உன்மனதினிலே உண்மை உறுதிகொண்ட வலிமை வேண்டுமடா! உனது துணிவே உனக்குத் துணை நின்று உனக்கு வெற்றிக் கனிதனையே பறித்துத் தரும்

எதையும் தாங்கும் இதயம் கொள்ளடா!
உன்மனதினிலே உண்மை உறுதிகொண்ட வலிமை வேண்டுமடா!
உனது துணிவே உனக்குத் துணை நின்று உனக்கு வெற்றிக் கனிதனையே பறித்துத் தருமடா!

குறுக்கு வழிகளே ஒருபோதும் நமதுவாழ்வினில் உண்மைவெற்றியை தருவதில்லையே! நேர்வழியில் நாமே நடப்பதற்கே எந்த தடைகள் வந்தபோதிலுமே உடைத்து முன்னேறடா!

குறுக்கு வழிகளே ஒருபோதும் நமதுவாழ்வினில் உண்மைவெற்றியை தருவதில்லையே!
நேர்வழியில் நாமே நடப்பதற்கே எந்த தடைகள் வந்தபோதிலுமே உடைத்து முன்னேறடா! நாம்
வாழும் வாழ்வினிலே சந்தோச தியாகமே வெற்றிக்கு என்றென்றும் வழிகாட்டுமே! நீ நல்லவனாய்வாழும் வாழ் நாளிலே நீயெதைச் செய்தாலுமே சந்தோசமாய் செய்திட கற்றுக்கொள்ளடா!

நாமே பிரபஞ்சப் பயணிகளடா! நமக்கே நமதுழைப்பே நமக்கு சிறந்த மதமாகுமடா!-அட நாமெல்லாம் மானுடமே எதிலும் நீயும் உற்சாகத்துடனே ஓடோடி வாடா!

நாமே பிரபஞ்சப் பயணிகளடா! நமக்கே நமதுழைப்பே நமக்கு சிறந்த மதமாகுமடா!-அட
நாமெல்லாம் மானுடமே எதிலும் நீயும் உற்சாகத்துடனே ஓடோடி வாடா!
நாமே நமதுவாழ்வினிலே எதையும் எப்போதுமே சந்திக்க தயாராகவே இருடா!
நமது மனித நேயமே நம்வாழ்வினிலே பொன்னான பண்பான அன்பாகுமே!

நமக்கு நாமே ஆசாணடா! நல்ல உறவுகள் வெற்றிதனைத் தந்திடுமே! நாள்தோறும் நாம்வாழ்வில் கற்றுக்கொள்ளும் அனுபவங்களே வெற்றிக்கு வித்தாகுமே!

நமக்கு நாமே ஆசாணடா! நல்ல உறவுகள் வெற்றிதனைத் தந்திடுமே!
நாள்தோறும் நாம்வாழ்வில் கற்றுக்கொள்ளும் அனுபவங்களே வெற்றிக்கு வித்தாகுமே!

முயற்சி நீயும் செய்து நம்பிக்கை கொண்டு செல்லும் பாதைதனிலே !உனக்கு என்றும் உனது வாழ்வினில் நிச்சயம் வெற்றியின் வாசல் கதவு திறந்திடுமே!

எதையும் நாளைக்கு என்று நீயும்
தள்ளிப் போடாதே!முயற்சி நீயும் செய்து நம்பிக்கை கொண்டு செல்லும் பாதைதனிலே !உனக்கு
என்றும் உனது வாழ்வினில் நிச்சயம் வெற்றியின் வாசல் கதவு திறந்திடுமே!

தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா!

தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது
தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா!
தகுதி இல்லாத வாழ்வுதனையே வாழ்வதிலே உனக்கு-வாழும்
தகுதி என்பது உலகினிலே இல்லையென்றாலே சவத்திற்குச் சமமாகுமே !

உன்னை நீயும் வெல்லப் பழகிவிட்டாலே உலகமே உன்கைக்குள் வந்திடுமே! உலகினில் சகலமும் அறிந்துகொள்ளவே உனது அறிவினையே நீயும் விசாலப்படுத்துவாயே!

உன்னை நீயும் வெல்லப் பழகிவிட்டாலே உலகமே உன்கைக்குள் வந்திடுமே!
உலகினில் சகலமும் அறிந்துகொள்ளவே உனது அறிவினையே நீயும் விசாலப்படுத்துவாயே!

தோல்வியே உனக்கு ஒரு சிறந்த ஞானகுருவாகுமே!என்றும் உனது தன்னம்பிக்கையே உன் வாழ்வுதனிலே சிறந்த நாணய மந்திரமாகுமே!

தோல்வியே உனக்கு ஒரு சிறந்த ஞானகுருவாகுமே!என்றும் உனது தன்னம்பிக்கையே உன்
வாழ்வுதனிலே சிறந்த நாணய மந்திரமாகுமே!
கசப்புணர்வினை விட்டுவிட்டு விருப்புணர்வினில் நீயும் எந்த செயலிலுமே நடைபோடுவாயே!

எல்லாப் பிரச்னைக்கும் தீர்வுண்டு!- நீயும் எப்போதுமே விழித்திருப்பாயே!உனது நம்பிக்கை எப்போதுமே தடைகளை உடைக்கும் சாவியாகும்!

எல்லாப் பிரச்னைக்கும் தீர்வுண்டு!- நீயும்
எப்போதுமே விழித்திருப்பாயே!உனது நம்பிக்கை
எப்போதுமே தடைகளை உடைக்கும் சாவியாகும்!சந்தேகக் கண்ணாலே நீயும்
எப்போதுமே விடைதேடி விடைதேடி குழம்பித் திரியாதே!
எப்போதுமே உன்முயற்சிதனைத் நீயும் தூண்டினால் போதுமே!

தேவை தேவை வெற்றிக்கு உண்மையும் நேர்மையும் தேவையாகுமே!

தேவை தேவை வெற்றிக்குத் தேவை மனத்தெளிவாகுமே!
தேவை தேவை லட்சியத்தில் கவனம் தேவை தேவையே!
தேவை தேவை வெற்றிக்கு உண்மையும் நேர்மையும் தேவையாகுமே!

Friday, November 13, 2009

நாமேஎல்லாம்! , நாமன்றி எல்லாம் வேறில்லை! , நம் ஒற்றுமையன்றி வேறில்லை! , நமையன்றி நன்மைதீ மைகளும் இல்லை!

நாமேபிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை!, நாமே கடவுள் , நாமே கடவுளன்றி வேறில்லை! ,நாமே ஆத்மா நாமன்றி ஆத்மாவும்! , வேறில்லை, நாமே பரமாத்மா, நமையன்றி பரமாத்மாவும் வேறில்லை! , நாமே மனிதம்! , நாமே மனிதமன்றி வேறில்லை! நாமே புனிதம்! , நமையன்றி புனிதம் வேறில்லை! , நாமே மதம், நமையன்றி ஆம் மதமும் வேறில்லை! நாமேஎல்லாம்! , நாமன்றி எல்லாம் வேறில்லை! , நம் ஒற்றுமையன்றி வேறில்லை! , நமையன்றி நன்மைதீ மைகளும் இல்லை!

மரத்தின் வேரே வலிய நிலத்தையும் பிளந்துகொண்டு ஊன்றி நிலைபெறுமே!-அதுபோலவே நல்லோர்கள் நட்பும் உறுதிப்பிடியுடன் அமைந்திடுமே!

மரத்தின் வேரே வலிய நிலத்தையும் பிளந்துகொண்டு ஊன்றி நிலைபெறுமே!-அதுபோலவே
நல்லோர்கள் நட்பும் உறுதிப்பிடியுடன் அமைந்திடுமே!

பயிலும்தோறும் புதிது புதிதாய் தோன்றும் நூல் நயம் போலே! பழகுந்தோறும் பண்புடையவரின் நட்பு வளர்ந்துதான் சிறக்குமே!

பயிலும்தோறும் புதிது புதிதாய் தோன்றும் நூல் நயம் போலே!
பழகுந்தோறும் பண்புடையவரின் நட்பு வளர்ந்துதான் சிறக்குமே!
குளத்தில் நீரற்றுப் போனபோதும் வேரற்றுப்போகாதே நெய்தல்,கொட்டி ,அல்லிக்கொடிகளே- அது போலவே ஒருவர் தாழ்வுற்றபோதும் அவரைவிட்டுப்
போகாதவரே உண்மையான நட்பினர் ஆவாரே!

Thursday, November 12, 2009

திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்குமே!

திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்குமே!
இலையில் சிதறும் மழைத்துளியானாய்- நானும்
இமைகொட்டும் விண்மீன் சிதறலானேன்!

தூரிகை தூவும் வர்ணச்சிதறலே!நானும்
தூவானம் தூவும் எல்லையிலா வானமானேன்!

பால்கொட்டி உலாவரும் வெள்ளி நிலாவேநானும்
பனிதூவி தேவார துயிலெழுப்பும் மார்கழி காலையானேன்

இமைபிரித்து உலகறியும் மழலையின் மந்தகாசமமேநானும்
இதயம் வருடி இதம்கூட்டும் குழலோசையானேன்

இறையின் திருமுன் அமர்ந்து தவமியற்றும் ஒற்றைப்பூவேநானும்
இன்னிசை பாடிடும் புல்லினக்கூட்டமானேன்

ஜதிகூட்டும் காட்டாற்று புதுவெள்ளமமேநானும்
ஜாலம் காட்டும் காட்டு மின்மினியானேன்

மகரந்தம் தூவும் மலர்ச்சரமே நானும்
மண்மீது துளிர்க்கும் ஒற்றைத்தாவரம்

தேன்குடித்து மயங்கி கிடந்த ராணி பட்டாம்பூச்சியே! நானும்
தின்று தித்தித்து இன்னும் கேட்ட திணை மாவுமானேன்!

பால் தேடி ஓடும் பாப்பா கன்றுக்குட்டியே!
கால் தொட்டு வளைந்து ஓடும் ஆட்டுகுட்டியானேன்!

கதைகேட்க நீவந்தாய்! கதை சொல்ல நானுமிருந்தேன்!அடியே சகியே நமக்கு
பகல்களும், இரவுகளும் போதவில்லையே!
நினைத்து சிரிக்கவும் காலமில்லை! , கனவில் மிதக்கவும் நேரமில்லையே! "
திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்க்குமே!


!

.

விதை சிறிதென்றாலுமே ஆலமரம் ஆயிரம்பேருக்கு நிழல்கொடுத்திடுமே! விதை பெரிதென்றாலுமே பனைமர நிழலிலே யார்தான் தங்கிடமுடியுமோ?

பெரியவர் எல்லாமே பெரியவர் இல்லையே!
சிறியவர் எல்லாமே சிறியவர் இல்லையே!
விதை சிறிதென்றாலுமே ஆலமரம் ஆயிரம்பேருக்கு நிழல்கொடுத்திடுமே!
விதை பெரிதென்றாலுமே பனைமர நிழலிலே யார்தான் தங்கிடமுடியுமோ?

ஆலைப் பலாவாக்க முடியாதே! நாயின் வாலை நிமிர்த்தமுடியாதே! காக்கையைப் பேசவைக்க முடியாதே!-அது போலவே! மூர்க்கரின் குணத்தையும் சீராக்கிடவே முடியாதே!

ஆலைப் பலாவாக்க முடியாதே!
நாயின் வாலை நிமிர்த்தமுடியாதே!
காக்கையைப் பேசவைக்க முடியாதே!-அது போலவே!
மூர்க்கரின் குணத்தையும் சீராக்கிடவே முடியாதே!

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம் அவர்களுக்கு! நண்பரே ! தங்களின் கோலங்கள் சின்னத்திரையினில் ஒரு சகாப்தம்!

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம் அவர்களுக்கு!
நண்பரே ! தங்களின் கோலங்கள் சின்னத்திரையினில் ஒரு சகாப்தம்!
திருப்பங்கள் பல திடீரென்று வந்து ஆவலை ஏற்படுத்தும்; மக்களுக்கு தினந்தோறும் ஒரு
க்ளைமாக்ஸ் வருமாறு இயக்கும் தங்களின் திரைக்கதைக்கு எனது வாழ்த்துக்கள்!
ஏராளமான ரசிகர்களின் உள்ளத்தில் இடம்பிடித்த தங்களின் இயக்கம் மென்மேலும் மிளிர எனது
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்!

Wednesday, November 11, 2009

பெண்ணிலும் ஆண்கள் உயர்ந்தவர் என்று சொல்வது மடமையடா!-இரண்டுக் கண்களிலும் எந்தக்கண் தான் உயர்ந்தது என்று நீயும் கூறடா? எத்தனை நாளைக்குத்தான் பெண்ணடிமை ?

பெண்ணிலும் ஆண்கள் உயர்ந்தவர் என்று சொல்வது மடமையடா!-இரண்டுக்
கண்களிலும் எந்தக்கண் தான் உயர்ந்தது என்று நீயும் கூறடா?
எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை அடிமையாக்கி ஆணாதிக்கம் செய்வாய் கூறடா?
அத்தனை பெண்களும் விழித்துவிட்டார் பெண்ணடிமை வீழ்த்த எழுந்துவிட்டார் பாரடா?

அந்தக் காதலின் நுட்பத்தை அறிந்தவர் உலகினிலே !சிலர்தானே காதலின் நுட்பத்தை எல்லோரும் அறிந்தாலே இங்கு எந்த சண்டைகளும் மோதலு இல்லையே இந்த உலகினிலே!

மெல்லியது மெல்லியது மலராகும்! அதனிலும்
மெல்லியது காதலாகும் அந்தக் காதலின் நுட்பத்தை அறிந்தவர் உலகினிலே !சிலர்தானே
காதலின் நுட்பத்தை எல்லோரும் அறிந்தாலே இங்கு எந்த சண்டைகளும்
மோதலு இல்லையே இந்த உலகினிலே!

பத நீரிலே மூழ்கிக்கிடந்து வயிறு நிறைந்தது தெரியாது உண்டு சாகும் பதனீர் புழுபோலவே!

பத நீரிலே மூழ்கிக்கிடந்து வயிறு நிறைந்தது தெரியாது உண்டு சாகும்
பதனீர் புழுபோலவே!
காதல் பேரின்பம் அறியாமலே அன்பிலே உயராமலே -சிலரே
உடல் சிற்றின்பத்தில் அதிகமாகவே
ஓடி உறவாடி அவ்வின்பத்தில் மூழ்கிக் கிடந்தே அழிவாரே!

உள்ளதை உணராமலே வெறும் மயக்கத்தில் திருமணம் செய்தோர் மணவாழ்க்கையே ஓடி வெளிச்சத்தைக் கண்டு வீழ்ந்து மடியும் விட்டில்பூச்சிகள் போன்றதே!

உள்ளதை உணராமலே வெறும் மயக்கத்தில் திருமணம் செய்தோர் மணவாழ்க்கையே
ஓடி வெளிச்சத்தைக் கண்டு வீழ்ந்து மடியும் விட்டில்பூச்சிகள் போன்றதே!

கணவன் மனைவியின் கருத்துவேறு பாட்டினையே !அன்பாலே திருத்திக்கொள்ள வேண்டுமே!

கணவன் மனைவியின் கருத்துவேறு பாட்டினையே !அன்பாலே திருத்திக்கொள்ள வேண்டுமே!
காணும் உலகினிலே அன்புஒன்று தானே எந்தக் கொடிய விலங்கினைக் கூட மனிதனாக்கும்
வாழ்வியல் மந்திரமாகுமே!

குடும்பம் என்றவண்டியிலே! இல்லறம் என்ற சரக்கை ஏற்றிக்கொண்டு போகும் கணவன் மனைவியாம் குதிரைகளே!- நீங்கள் ஒன்றுபட்டு செல்லாவிட்டாலே !

குடும்பம் என்றவண்டியிலே!
இல்லறம் என்ற சரக்கை ஏற்றிக்கொண்டு போகும்
கணவன் மனைவியாம் குதிரைகளே!-
நீங்கள் ஒன்றுபட்டு செல்லாவிட்டாலே !-வாழ்க்கையிலே குடும்ப
வண்டியும் ஒடிந்து இல்லறசரக்கும் அழிந்து வாழ்வே சின்னாபின்னா மாகிப்போகும் தெரியுமா?

நீரைவிட்டு பிரிந்தபோது தாமரை செழிக்குமோ?-கொழு கொம்பைவிட்டு பிரிந்தபோது கொடிதான் பிழைக்குமோ? காதலியே நீயும் காதலன் என் நெஞ்சைவிட்டு பிரிந்தபோது !

நீரைவிட்டு பிரிந்தபோது தாமரை செழிக்குமோ?-கொழு
கொம்பைவிட்டு பிரிந்தபோது கொடிதான் பிழைக்குமோ? காதலியே நீயும் காதலன் என்
நெஞ்சைவிட்டு பிரிந்தபோது வாழ்வுதான் சுகமாகுமோ?

இனியபாட்டுடன் இசையும் இணைந்து தேனாய் இனிப்பது போலவே!- இளமாலையில் தென்றலும் இசைந்து இதமாய் சுகந்தருவது போலவே!

இனியபாட்டுடன் இசையும் இணைந்து தேனாய் இனிப்பது போலவே!-
இளமாலையில் தென்றலும் இசைந்து இதமாய் சுகந்தருவது போலவே!
காதல் கணவனும் மனைவியும் !
காலமெல்லாம் ஒன்றுபட்டு பேரின்ப வாழ்வினையே கனிவுடன் அடைந்திடவே வேண்டுமே!

காதல் கணவனும் மனைவியுமே ! ஓர் ஒத்தக் கருத்தினிலே ஒருமித்து வாழ்வினிலே உயர்ந்திடவேண்டுமே! ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நல்வாழ்வினிலே வளம்பெறவேண்டுமே!

கண்ணிரண்டும் ஓர்காட்சிதனைக் காண்பது போலவே!
காதல் கணவனும் மனைவியுமே !
ஓர் ஒத்தக் கருத்தினிலே ஒருமித்து வாழ்வினிலே உயர்ந்திடவேண்டுமே!
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நல்வாழ்வினிலே வளம்பெறவேண்டுமே!

பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து கணவன் அணைக்கும் பண்பாகும்!

பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து
கணவன் அணைக்கும் பண்பாகும்!
மரமறிந்து வேர்விடவே மண்செய்யும் உரம்போலவே!
மனதறிந்து பார்வைதந்து காதலியிடத்து அன்பால் பழகிடும் காதலனின் காதலாகும்!

கணவனும் மனைவியுமே ! ஒன்றுபட்டு ஓர் நிலையினிலே உடலும் உயிரும் போலவே நில்லாமலே! வாழ்வினிலே! மாறுபட்டு உடலும் உயிரும் போராடுவது போலவே! இல்லறமே! என்றால் !

கணவனும் மனைவியுமே !
ஒன்றுபட்டு ஓர் நிலையினிலே உடலும் உயிரும் போலவே நில்லாமலே! வாழ்வினிலே!
மாறுபட்டு உடலும் உயிரும் போராடுவது போலவே! இல்லறமே! என்றால் அது என்ன நல்லறமா?

அறிவு நூலாம் ஆசாண் இல்லாமலே பகுத்தறிந்து மெய்யுணர்வினை அடைந்திட முடியாதே! ஒன்றுபட்டுப் போராடாமலே பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திவிட முடியாதே?

கண்களில்லாமலே ஒளியின் பயனையே அடைந்திட முடியாதே!சாவி
இல்லாமலே பூட்டினையே திறந்திட முடியாதே!அதுபோலவே
அறிவு நூலாம் ஆசாண் இல்லாமலே பகுத்தறிந்து மெய்யுணர்வினை அடைந்திட முடியாதே!
ஒன்றுபட்டுப் போராடாமலே பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திவிட முடியாதே?

பூ மலர்வதையே வண்டினமும் எதிர்பார்த்திருக்குமே!அதுபோலவே மக்கள்ஜன நாயகப் புரட்சிப் போராளியையே மக்களே எதிர் நோக்கிக் காத்திருப்பாரே!

கதிரவன் வருகையை தாமரை எதிர்பார்த்திருக்குமே! நிலவின்
கதிரையே,வரவையே அல்லியும் எதிர்பார்த்திருக்குமே!பூ
மலர்வதையே வண்டினமும் எதிர்பார்த்திருக்குமே!அதுபோலவே
மக்கள்ஜன நாயகப் புரட்சிப் போராளியையே மக்களே எதிர் நோக்கிக் காத்திருப்பாரே!

?வாய்மட்டும் தானே இதழ்குவித்துப் பேசும்!காதுமட்டும் தானே தேனிசையை ரசிக்கும்! அதுபோலவே பகுத்தறிவுதானே !அறிவுக்கண் திறந்து உண்மைதனையே காணும்!

இதழும்,செவியும்,கண்ணும் மணத்தை அறிந்திடுமோ?
எந்த மணத்தையும் அறிவது மூக்கல்லவா?வாய்மட்டும் தானே
இதழ்குவித்துப் பேசும்!காதுமட்டும் தானே தேனிசையை ரசிக்கும்!
அதுபோலவே பகுத்தறிவுதானே !அறிவுக்கண் திறந்து உண்மைதனையே காணும்!

மக்கள் நலனை விரும்பும் மக்கள் ஜன நாயகபுரட்சிப் போராளியே ! இமைபொழுதும் துஞ்சாது எப்போதுமே மக்களின் நினைவாகவே இருப்பானே!

காதலாலே ஒருபெண்ணை விரும்பும் காதலனே அந்தப் பெண்ணையே !
கால நேரமின்றி எண்ணிகொண்டே எப்போதுமே அவளின் நினைவாகவே! இருப்பானே!அதுபோலவே!
மக்கள் நலனை விரும்பும் மக்கள் ஜன நாயகபுரட்சிப் போராளியே !
இமைபொழுதும் துஞ்சாது எப்போதுமே மக்களின் நினைவாகவே இருப்பானே!

உள்ளத்துள் நீயே இருப்பதை அறியாமலே வேறு எங்கெங்கோ உனது உள்ளத்தையே - நீயும் தேடி அலைவதேனோ? தேன்குயிலே! இளந்தென்றலே!

கடலுக்குள் ஒருபொருளைத் தொலைத்துவிட்டே குளத்துக்குள் அதைத்தேடுதல் போலவே!உனது
உள்ளத்துள் நீயே இருப்பதை அறியாமலே வேறு
எங்கெங்கோ உனது உள்ளத்தையே - நீயும்
தேடி அலைவதேனோ? தேன்குயிலே! இளந்தென்றலே!

உயிரைத்தான் கண்டவருண்டா? அன்புருவே மெய்ப்பொருளே! உள்ளத்தைத்தான் பார்த்தவருண்டா? பூவிதழே பொன்மானே! என்றாலும் உண்டென்று நாமெல்லாம் உணர்கின்றோமே!

வானத்தைத்தான் கண்டவருண்டா? தேன்மொழியே தெம்மாங்கே!
காற்றைத்தான் பார்த்தவருண்டா? செந்தேனே தென் தமிழே!
உயிரைத்தான் கண்டவருண்டா? அன்புருவே மெய்ப்பொருளே!
உள்ளத்தைத்தான் பார்த்தவருண்டா? பூவிதழே பொன்மானே!
என்றாலும் உண்டென்று நாமெல்லாம் உணர்கின்றோமே!
அதுபோல பகுத்தறிவும் உண்டென்று உணர்தல் வேண்டுமே!

காணுமுலகில் மெய்யுணர்வு இல்லாதவ்ன் பகுத்தறிவு இல்லையென்று பிதற்றி திரிவானே!

கண்ணொளி இல்லாதவன் கதிரொளி இல்லை என்பது போலவே!
காதுகேளாதவன் கடலுக்கு ஓசையில்லை என்பது போலவே!
காணுமுலகில் மெய்யுணர்வு இல்லாதவ்ன் பகுத்தறிவு இல்லையென்று பிதற்றி திரிவானே!

நீரும் பாலும் இரண்டறக் கலந்தது போலவே-காதலியே உந்தனுக்கு நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?

நீரும் பாலும் இரண்டறக் கலந்தது போலவே-காதலியே உந்தனுக்கு
நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?
வானும் நிலவாய் மண்ணும் மரமாய்
தேனும் சுவையாய் தென்றலும் இதமாய்
நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?

மூங்கிலின் உள்ளே மூண்டிடும் தீயாய் ! மேனியின் உள்ளே தீண்டிடும் நெருப்பாய்-என் காதலியே! காதலும் கனலாய் நம்மை எரிக்குதடி!-அந்த கதகதப்பும் ஓர்சுகமாய்!

மூங்கிலின் உள்ளே மூண்டிடும் தீயாய் !
மேனியின் உள்ளே தீண்டிடும் நெருப்பாய்-என் காதலியே!
காதலும் கனலாய் நம்மை எரிக்குதடி!-அந்த
கதகதப்பும் ஓர்சுகமாய் அணைத்ததடி!

நெஞ்சக் கோட்டைக்குள் இருக்கும் காதல் என்ன இனபம் என்று யாருக்கும் தெரியாது! ஆனாலும் காதலின்பம் பேரின்பமாகவே எல்லோரும் உணரமுடியுமே!

தேனின்பம் உண்ரும் இன்பமல்லவா?
தேனுக்குள் இருக்கும் இன்பம் கருப்பா? சிவப்பா? யாருக்கும் தெரியாது- நெஞ்சக்
கோட்டைக்குள் இருக்கும் காதல் என்ன இனபம் என்று யாருக்கும் தெரியாது!
ஆனாலும் காதலின்பம் பேரின்பமாகவே எல்லோரும் உணரமுடியுமே!

காற்றின் உயிர்ப்பே! கரும்பின் இனிப்பே !கண் திறவாயே பாலின் நெய்யே ! பழத்தின் சுவையே! பார்வைக்குள் வாராயே!

காற்றின் உயிர்ப்பே! கரும்பின் இனிப்பே !கண் திறவாயே
பாலின் நெய்யே ! பழத்தின் சுவையே! பார்வைக்குள் வாராயே!
பூவின் மணமே ! புன்னகை மனமே! நெஞ்சினில் நிற்பாயே!
தேனின் இனிமையே ! தென்றலின் குளுமையே! வாழ்வுக்குள் துணையாவாயே!

கவிஞன் இன்றி காவியம் இல்லை ஓவியன் இன்றி ஓவியமில்லை இசைப்பவன் இன்றி இசையுமில்லை உண்மை இன்றி வாழ்க்கையில்லை உழைப்பவன் இன்றி உலகமே இல்லை !~

கவிஞன் இன்றி காவியம் இல்லை !
ஓவியன் இன்றி ஓவியமில்லை !
இசைப்பவன் இன்றி இசையுமில்லை !
உண்மை இன்றி வாழ்க்கையில்லை !
உழைப்பவன் இன்றி உலகமே இல்லை !
காதலின்றி நாமே இல்லை இல்லையே !

காற்றின்றி உலகில்லை இல்லையே தோழி காதலின்றி நாமேஇல்லை இல்லையே தோழி

வானின்றி மழையில்லை இல்லையே என்தோழி
வயலின்றி விளைச்சலுமில்லை இல்லையெ என்தோழி
கண்ணின்றி பார்வையில்லை இல்லையே என்தோழி
கதிரின்றி ஒளியில்லை இல்லையே என்தோழி
காற்றின்றி உலகில்லை இல்லையே என்தோழி
காதலின்றி நாமேஇல்லை இல்லையே என்தோழி

Monday, November 9, 2009

அவளின் சமத்துவ தத்துவத்தோடும் ஆணாதிக்க எதிர்ப்போடும்-துணை நிற்கின்றது என் நெஞ்சமே

அவளின்
தாமரைக் கண்களோடும்,
செங்கனிவா யொன்றி னொடும்
செல்கின்ற தென்நெஞ்சமே
அவளின்
அன்பின் சிந்தையோடும்
அறிவிலொன்றி காதலோடும்
பறக்கின்றது என் நெஞ்சமே
அவளின்
சமத்துவ தத்துவத்தோடும்
ஆணாதிக்க எதிர்ப்போடும்-துணை
நிற்கின்றது என் நெஞ்சமே

காண்கின்ற மனிதரெல்லாம் அழகே காண்கின்ற அன்பெல்லாம் அழகே காண்கின்ற இயற்கையெல்லாம் அழகே காண்கின்ற மனித நேயமெல்லாம் அழகே

காண்கின்ற காதலெல்லாம் அழகே
காண்கின்ற கண்ணெல்லாம் அழகே
காண்கின்ற உலகெல்லாம் அழகே
காண்கின்ற பிரபஞ்சமெல்லாம் அழகே
காண்கின்ற காற்றெல்லாம் அழகே
காண்கின்ற மூச்செல்லாம் அழகே!
காண்கின்ற இசையெல்லாம் அழகே ,
காண்கின்ற கடலெல்லாம் அழகே
காண்கின்ற மனிதரெல்லாம் அழகே
காண்கின்ற அன்பெல்லாம் அழகே
காண்கின்ற இயற்கையெல்லாம் அழகே
காண்கின்ற மனித நேயமெல்லாம் அழகே

காண்கின்ற மக்கள் ஜன நாயகம் அழகே
காண்கின்ற பொதுவுடைமை அழகே
காண்கின்ற சுதந்திர மூச்சே அழகே
காண்கின்ற மத நல்லிணக்கமே அழகே

மனித நேயத்தில் அரவணைத்து புரிகின்ற பேரின்பமே!

உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுகின்ற காதலுயிரினிலே உயிரானவளே!
வெள்ளமென கரைபுரளும் ஆசையினை அன்புருவாக்கும் சூட்சுமத்தின் அழகானவளே!
அள்ளுகின்ற சுகமெல்லாம் சுகமில்லை என்று அறிவினாலே அறிகின்ற பகுத்தறிவானவளே!
கொள்ளுகின்ற இன்பமெல்லாம் மனித நேயத்தில் அரவணைத்து புரிகின்ற பேரின்பமே!

Sunday, November 8, 2009

"காதலிக்கும் பெண்ணையே கல்யாணம் செய்திட முடியுமென்று சொல்ல முடியுமா?.. கல்யாணம் செய்தவன் எல்லாமே மனைவியைத்தான் காதலிப்பான்னு சொல்ல முடியுமா?

"காதலிப்பவனுக்கு காதலிதான் அழகாவாளே!..
காதலிக்காதவனுக்கு அழகானவள் எல்லாம் காதலியாவாளே!

"காதலிக்கற பொண்ணையே கல்யாணம் செய்திடமுடியுமா?
..கல்யாணம் செய்தவனெல்லாமே
மனைவியைத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியுமா?


"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது காமமாகும்.
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதலாகும்

மனைவியை மட்டும் காதலிக்க
நினைப்பது நல்லபுத்தியாகும்
காதலிப்பவரையெல்லாமே மனைவியாக
நினைப்பது என்பது வக்கிரபுத்தியாகும்


"காதலித்த பொண்ணையே கல்யாணம் செய்கின்றவன் தைரியசாலி
கல்யாணம் செயத பொண்ணையே காதலிக்கிறவன் புத்திசாலி


காதலி அவள் அழகென்று சொல்கின்றவனின் காதல் பொய்க்காதலாகும்
காதலி அவள் அன்பானவளென்று சொல்கின்றவனின் காதல் மெய்க்காதலாகும்


"காதலியை மனைவியாக ஆக்கமுடியாதவனே அவனின் மனைவியையே
காதலியாக ஆக்கிவிடுவான்!


"கல்யாணத்தில் காதல் முடியலாம்.. ஆனாலும்
காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் முடியும்! முடியாமல் போனாலும் போகும்!

"காதலிக்கும் பெண்ணையே
கல்யாணம் செய்திட
முடியுமென்று சொல்ல முடியுமா?..
கல்யாணம் செய்தவன் எல்லாமே
மனைவியைத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியுமா?


!

கல்வி என்பது யாரும் பிச்சை போட்டு பெறுவது அல்ல!. கல்வி என்பது நமது அடிப்படை உரிமை அல்லவா?

கல்வி என்பது யாரும் பிச்சை போட்டு பெறுவது அல்ல!.
கல்வி என்பது நமது அடிப்படை உரிமை அல்லவா?

கல்வியை வியாபார நோக்கினில் பார்க்கின்ற கொடுமையை அழிக்காமலே!
கட்டணக் கொள்ளையை தடுக்காமலே !

எவருக்கோ வந்தது என்று நாமும் தூங்கி விட்டால்…
இங்கு தொடரும் தற்கொலை மனநிலை ,தாழ்வுமனப்பான்மை எல்லாமே
எவர்தான் வந்து மாற்றுவாரோ?
போராடாமலே நமக்கு விடிவுவரும் என்பது பழைய பஞ்சாங்கம் அல்லவா?
தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு இந்த சமூகத்தில்
தன்மானத்தோடு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை! வசந்தமும் இல்லை இல்லையே

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டாமலே! - நாம் அனைவரும்
வீதியில் இறங்கி போராடாமலே !
இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம் என்பது கானல் நீர் கனவாகுமே!

Saturday, November 7, 2009

நம்பிக்கையாலே உயரப் பறக்கும் சிறகினை அசைத்தேனே! வானமே அருகினில் தானே!

வைர நகை கனவினிலே கவரிங் நகையும் களவுபோனதே!
வானினைவினிலே மண்ணின் மணமும் மறைந்து போனதே! - நம்பிக்கையாலே
உயரப் பறக்கும் சிறகினை அசைத்தேனே! வானமே அருகினில் தானே!
உண்மை உழைப்பினில் ஒற்றுமை உணர்வுடன் ஓங்கி உயர்ந்தேனே!

பயனில்லை!பயனில்லையே! மக்கள்ஜன நாயகம் அறியாத மக்களும் பயனில்லையே! பயனில்லை!பயனில்லையே!, அடிமைவிலங்கினை உடைக்காத பாட்டாளியும் பயனில்லையே!

பயனில்லை!பயனில்லையே!
ஆபத்துக்கு உதவாத தோழமையும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
உழைப்போரைத் திரட்டாத போராளியும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
மக்கள்ஜன நாயகம் அறியாத மக்களும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!,
அடிமைவிலங்கினை உடைக்காத பாட்டாளியும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
பகிர்ந்துண்டு வாழாத சமூக அமைப்பும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
தனியுடைமை மாற்றக் கொள்கையில்லாத அரசியலும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
மனிதத்தை செழுமைப் படுத்தாத தத்துவங்கள் பயனில்லையே!

காலம்போகும் வேகத்திற்கு காதலும் ஓடுதே! கலந்துப் பழகத்தான் துடித்துத் தான்போகுதே!

-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத!
காதலும் காதலாக இருப்பதில்லையே
கண்ணனென்று காதலாலே கொஞ்சுவதும் !
கருத்தில்வைத்து அன்பாலே மிஞ்சுவதும்!- நேரம்பார்த்து
காத்திருந்து நாணத்தாலே அஞ்சுவதும் !-கனவினிலே!
காதலிலே காலம் அறியாது துஞ்சுவதும்!
காதலியரின் இலக்கணமென்று அறிந்தாலும்!-இந்த
காலத்திலே விஞ்ஞானக் காதலாகவே,விரைந்துதான் பறக்குதே!
காலம்போகும் வேகத்திற்கு காதலும் ஓடுதே!
கலந்துப் பழகத்தான் துடித்துத் தான்போகுதே!
கலந்து பழகாத காதலும் காதலில்லையே
-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத!
காதலும் காதலாக இருப்பதில்லையே

எந்தன் சிந்தைக்குள் நீயும் சிந்தனையாகவே இருப்பதாலேயே! உன்னொரு நிலையான மனமும் துயரந்தான் கொண்டதோ?

கண்களுக்குள் நீயும் இருப்பதாலே காரிகையே-என்கண்ணில் ஆனந்த
கண்ணீரும் வரவில்லையே!எந்தன்
மனதிற்குள் நீயும் குடியிருப்பதாலே !மனதின் சத்தமும் உனக்கு தொல்லை தருகின்றதோ?எந்தன்
சிந்தைக்குள் நீயும் சிந்தனையாகவே இருப்பதாலேயே! உன்னொரு நிலையான மனமும் துயரந்தான் கொண்டதோ?

உன்னாலே சின்னவளே சிரித்தவளே ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவுகளடி!உன்பார்வையாலே சித்திரமே சிவந்தவளே என்றும் மனதில் தோன்றும் நனவுகளடி!

என்னவளே இனியவளே உன்புருவவில்லை நீயும் வளைத்ததாலே!காதலாம் பேரின்பம்
என்னெஞ்சினிலே தோன்றுதடி நினைவுகளைத் தோணியாக்கியே காமப் பெருங்கடலலையையும் எதிர்த்து நின்றாயே!அன்பாலே இதழசைவினாலே மவுனத்தில் அழைத்தவளே-உன்னாலே
சின்னவளே சிரித்தவளே ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவுகளடி!உன்பார்வையாலே
சித்திரமே சிவந்தவளே என்றும் மனதில் தோன்றும் நனவுகளடி!

Friday, November 6, 2009

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெய்துவரும் பருவமழையாலே!

இலங்கையில்
வடக்கு கிழக்கு பகுதிகளில்
பெய்துவரும் பருவமழையாலே! இடம்பெயர்ந்த நாங்கள்
பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.
எங்களுக்கு பாடசாலைகள், விளையாட்டரங்குகள், பொதுமண்டபங்கள்தான் வீடுகளாயின
நாங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயித் தவிக்கின்றோம்!கூடாரங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ள நாங்கள் மழையினால் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளோம்!.
பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக நாங்கள் பாதித்துள்ளோம்!. சிங்களக் காட்டேறிகளின் தாக்குதல் காரணமாக வீடுகளை இழந்தோம்!
நாங்கள் இப்பிரதேசங்களில் கூடாரங்களில் முடங்கிக் கிடக்கின்றோம்!
எங்களது கூடாரங்கள் காற்றினால் அடித்துசெல்லப்பட்டுள்ளது!
இதனைவிட தாழ்வான பிரதேசங்களில் வாழும் எங்கள் தமிழின மக்கள் வெள்ள அபாயத்தினையும் எதிர்கொண்டு சோகத்திலே!.

வானைப்போல வளைந்து கொண்டு ஆனந்தத் தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்த மெய்ஞ்ஞானக் காதல் தேவதையே!

நான்சொல்லும் விண்ணப்பங்கேட்பாயே!
எனக்குள்ளே உயிராக இருக்கும் நீயே -அன்பென்னும் அற்புதத்தை எனக்களிப்பாயே
நினைக்கவோ அறியாது என்றது நெஞ்சமே!ஆயினும்
நினைவுக்குள் நினைவாக நிற்கும் காதல் அன்பே!
வானைப்போல வளைந்து கொண்டு ஆனந்தத்
தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்த மெய்ஞ்ஞானக் காதல் தேவதையே!உன்னில் உறவாகி கலந்து நானும் காலமெல்லாம் உன் துணையே சிறந்ததென்று உறுதிபூண்டு தொடர்ந்தே!
தஞ்சமென்று உன்னை நானும் சரணடைந்தேனே!
!

கரும்பினைக் கண்டு கொண்டென் உன் இதழினிலே காதலியே ! கண்ணிணை களிக்கு மாறே கண்பாவை அசைப்பதுதான் ஏனோ? அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமானவளே!

கரும்பினைக் கண்டு கொண்டென் உன் இதழினிலே காதலியே !
கண்ணிணை களிக்கு மாறே கண்பாவை அசைப்பதுதான் ஏனோ?
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமானவளே!
ஆனந்தபூர்த்தியான தேவதையே!உனது இயற்கையாம்!
அழகோடு நிறைந்ததெது? தன்னன்பு வெளிக்குளே நேயமாய்!
எழிலாக மறைந்ததெது? வாழ்வினிலே பேரின்பமாய் !
உயிர்க்குயிராய் நம் உள்ளத்தில் தழைத்ததெது? காதல் பேரின்பமல்லவா?அதுவே

நம் கருத்திற்கிசைந்ததுவே!அத்தோடு
நாட்டோர் போற்றுகின்ற பகிர்ந்துண்ணும் தத்துவத்தை
கண்டுஇணைத்து நாமும் எல்லோரும் வாழுகின்ற பொன்னாளை உருவாக்கும்
வழிசெய்குவாம்!.

உள்ளமோ ஒன்றில் நில்லாது அலைபாய்வது ஏனோ? காதலியே கனிமொழியே !

உள்ளமோ ஒன்றில் நில்லாது அலைபாய்வது ஏனோ? காதலியே கனிமொழியே !
கொள்ளிமே லெறும்பு போலக் பதைத்து நிற்பதுவும் ஏனோ?உன்னெழிலைக் கண்டு
குழையுமா லென்ற னுள்ளம்அழைத்தாலும் ஆதரவாய் விழித்தாலும் பேசிடுமோ விழிகளே! காதல் மொழிகளே!
உன்னையன்றி ஒருபோதும் காதலினால் ஆரிடத்தும் உருகிடவில்லையே என்தோழியே!

அடியென்னோடும் நின்னோடும் காதலன்பாம் பேரின்பம் துணையோடு.!

அடியென்னோடும் நின்னோடும் காதலன்பாம் பேரின்பம் துணையோடு.!
உறவோடு உயிரோடு பிரிவின்றி வாழ்ந்திருப்போம் ஆயிரம்பல்லாண்டு !
எந்நாளோ?எம்பெருமாட்டி உயிரோடு உயிராகி எழுதப்பட்ட வாழ்க்கைத் தத்துவத்தை!
அந்நாளே ஆயிரமாம் காலத்துப் பயிரினிலே பந்தமாகும் சொந்தமும் சுற்றமாகிடுமே!
இந்நாள் தொட்டு வாழும் நாளெல்லாம் இன்பமே இனிதுன்பமிலை என்று வாழும் பூரணமே !
பொன்னாள் இதுவென்று போற்றி உன்னையே பல்லாண்டு கூறுதுமே!

Thursday, November 5, 2009

இருவரின் துணையாலே காமனை மட்டும் அல்ல இவ்வுலக அடிமைவிலங்கினையும் நொறுக்கிடுவோம் வாயென் புரட்சிகர அக்கினிக்குஞ்சே!

இதமாகச் சொல்லவோ? எப்படித்தான் சொல்லவோ?
இன்னமுஞ் சொல்லவோ இன்னமுதே தேன்சுவையே
எப்படித்தான் சொன்னாலும் எத்தனைமுறை சொன்னாலுமே
உன்மனமென்ன கல்லோ ?
நல்லதையே சொன்னாலும் பகுத்தறிவினிலே பலமுறை உரைத்தாலுமே
செந்தமிழே தெம்மாங்கே உன் நெஞ்சமென்ன?
இரும்போ பெரும்பாறையோ, சுதந்திர சுவாசத்தைபற்றி
ஏதேது சொன்னாலும் என்னென்ன பாடினாலும் கேளாது உன்
இருசெவியு மந்தமோ பழகாத பந்தமோ கண்ணே உந்தனுக்கு அடிமைவாழ்வு
அழகுதானோ?,அடிமைசுகமும் சுகமோ? தாழ்வுற்றுக் கிடப்பதிலே
என்ன மோகமோ? இதுவென்ன சாபமோ?தெரிந்துசெய்கிறாயா? தெரிந்தே செய்யும்
இதுவேவுன் செய்கைதானோ?,
விரக தாபமோ யார்மீது ஊடலாலே உன்னில் பொய்மைக் கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,அணைத்துமுத்தம் தராமலே போவேனோ?
உன்னைவிட் டெங்கு சென்றாலும் வாழ்வெனக்கு சுவர்க்கம் ஆகிடுமோ?
நான் உனையே விடுத்து வாழ்வினையே வாழ்ந்திடுவேனோ?
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை புறக்குற்றமன்றோ?
யுற்றுப்பார் உன்கண்ணில் என்கண்கள் தெரிவது தெரியலையா?
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும் நம்குற்றமாகி அதை திருத்திடல் நம்கடைமையன்றோ? நாம்
இருவரின் துணையாலே காமனை மட்டும் அல்ல இவ்வுலக அடிமைவிலங்கினையும் நொறுக்கிடுவோம் வாயென் புரட்சிகர அக்கினிக்குஞ்சே!

மக்கள்ஜன நாயக புரட்சியின்றி தனியுடைமை கொடுமையிலே கருகிக் கிடக்கின்றோம்

கடலென்ற உலகமீதில் அலையாகி அலைகின்றோம்!
கனவென்று வாழ்வைநம்பிக்,காலமெல்லாம் கழித்துவிட்டோம்
காற்றென்ற மூவாசை மந்திரச் சுழலிலே சிக்குண்டு தவித்து நின்றோம்
காதலாலே கட்டுண்டு நித்த நித்தம்,காத்திருந்து நொந்துபோனோம்
உடலென்ற பற்வைக்கு உணவென்ற இரைதேடி பிரபஞ்சத்தில் சுற்றித்திரிந்தோம்
ஓயாமலிரவு பகலும், ஓராயிரம் கனவுகளோடு ஓடோடி வாழ்வினில் இன்பந்தேடி அலைந்தோம்
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது வேறென்ன பகிர்ந்துண்டு வாழும் தத்துவம்தனை அறிந்தோமா?
ஒருபயனடைந்திடவே பலதவறுகள் செய்தே பேராசையிலே பொய்மையிலே திரிந்தோம்
தனதென்ற தானெனற பந்தபாசங்களெனும் வலையினிலே சிக்குண்ட பறவைகளானோம்

தாயென்ற தாய்மையை வீதியிலே எறிந்து வேடிக்கைப் பார்த்தோம்
சேயென்று பாராது தம்கருத்தை திணித்து செயலற்று போகவே காரணமானோம்
நீயென்று விலக்கி உயர்வென்று சொல்லி பிறரை தாழ்வுக்குள் தள்ளினோம்
நானென்று சுய நலத்தில் அதிகாரம் செய்து அடுத்த்வரை கொச்சைப் படுத்தினோம்
இடையென்று எதையெதையோ எண்ணி ஏமாந்துபோய் விட்டோம்
கடைநின்று விழிப்பின்றி எழுந்திடாமல் வீழ்ச்சியுற்று வீதியினிலே கிடந்தோம்
ஏனென்று கேளாது போராட்ட குணமின்றி தாழ்வுற்று தரித்திரமானோம்
மக்கள்ஜன நாயக புரட்சியின்றி தனியுடைமை கொடுமையிலே கருகிக் கிடக்கின்றோம்

Monday, November 2, 2009

உனது நினைவினிலே காலமெல்லாம்! லயித்து இருந்தேன் பல நாள் -உனதுகாதலின் ஆழத்தைக் காண்கிலனே!

காதலிலே உனையே!
நம்பியிருந்தேன் பலநாள்! - உனதன்பு
ரகசியங் காண்கிலனே!
கனவினிலே தினமும்!
மிதந்திருந்தேன் சில நாள் -உனதழகின்
அதிசயங் காண்கிலனே!-உனது
நினைவினிலே காலமெல்லாம்!
லயித்து இருந்தேன் பல நாள் -உனதுகாதலின்
ஆழத்தைக் காண்கிலனே!

உலகத்தின் அழகே உழைப்பவனின் கைவண்ணத்தில் உயர்ந்து நிற்கும் இமயமல்லவா?

என்ன? என்ன ?
என்ன? அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லாம் அமைத்தோன் உழைப்பாளன் தான் என்ற உண்மைதனை அறிவீரா?
இயற்கையை எதிர்த்து மனிதன் உருவாக்கிய படைப்பிலெல்லாமே உழைப்பவனின்
உழைப்பு ஒளிவீசி ஜொலிக்கின்ற அழகினையே உலகோர்கள் ரசித்திடவில்லையா?
உலகத்தின் அழகே உழைப்பவனின் கைவண்ணத்தில் உயர்ந்து நிற்கும் இமயமல்லவா?

கண்கள் காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்!-இயற்கை காணரிய பொருளாகுங் காணும் போதே!

கண்கள்
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்!-இயற்கை
காணரிய பொருளாகுங் காணும் போதே!
கண்கள் தானே காதலுக்கு சாட்சியாகும்-அதை
கருத்தினிலே இருத்தாவிட்டால் பூஜ்யமாகும்!-திட்டமான
எண்ணங்கள் இல்லாமல் அதுவும் செயல் வடிவில் செல்லாமல்
எந்த அடியும் எடுத்துவைத்து வென்றதாக சரித்திரமில்லையே!

கூடுவிட்டு கூடு பாய்ந்தவளே! எனதன்புத் துணையே! தோழியே! உன்னெஞ்சக் கூடுவிட்டுக் என்னெஞ்சக்கூடு வந்தவளே!

கூடுவிட்டு கூடு பாய்ந்தவளே! எனதன்புத் துணையே! தோழியே!
உன்னெஞ்சக் கூடுவிட்டுக் என்னெஞ்சக்கூடு வந்தவளே! !-என் காதலியே!
என்னெஞ்சக் கூட்டினிலே குடியிருப்பவளே!
உன்னெஞ்சக் கூட்டினிலே நானிருப்பது -காதலி
உன்னெஞ்சினிலே புலப்படவே இல்லையா?

உளமெல்லாம் நீயாக போனாயே தனிமையில்லை -இனி நாமே இரண்டில்லை ஒன்றெனவே அறுதியிட்டாயே

உளமெல்லாம் நீயாக போனாயே தனிமையில்லை -இனி நாமே
இரண்டில்லை ஒன்றெனவே அறுதியிட்டாயே!ஒருபோது
நானென்று அறிந்த என்னை-உன்னில்
நானறியாத காலமெல்லாம்-மறுபோது
என்னெஞ்சினில் நெஞ்சாக
தானென்று நீயிருந்தாய் என்னுயிரினில் உயிராகியே
தனைமறந்து எனை நினைந்தாய் என்னில்கலந்தாய் விண்ணில் பறந்தாய் சகியே !

இன்னதென்று சொல்லவொண்ணா வெல்லையற்ற பேரின்பத்தை தந்தவன் யாரடி? வாழ்தத்துவத்தை சொன்னவனை நானறிந்து சொல்வதினி என்ன உண்டு இந்த பிரபஞ்சந்தன்னிலே!

கண்ணினொளி பாய்ந்ததடி காதல்மணம் புரிந்ததடி கன்னிமனம்
கருத்தறிந்து கொண்டதடி அன்புசுமை கொண்டதடி விடியவிடிய தனிமையிலே
விண்ணொளி கண்டதடி இன்பவேதனை தந்ததடி
கனவுகண்டது போலெனக்குக் காட்டிமறைந் தேபோனவன்தான் யாரடி?!
நினைவை நெஞ்சினில் வைத்து நினைத்தவன் யாரடி?
ஆரென்று கேட்டவனே அருகில்வந்து கண்டவனே யாரடி?- இளமாலைப்
பாரென்று சொன்னதுவும் பகுத்தறிந்து பாவைமனதுள் நுழைந்தவனே யாரடி

நினைக்குந் தினந்தோறும் நிறைந்த காதலின்பத்தை
அணைக்குள்ளே கண்டுகொண்டு புன்னகை முத்துதிர்த்த கள்வன் யாரடி?
இன்னதென்று சொல்லவொண்ணா வெல்லையற்ற பேரின்பத்தை தந்தவன் யாரடி? வாழ்தத்துவத்தை
சொன்னவனை நானறிந்து சொல்வதினி என்ன உண்டு இந்த பிரபஞ்சந்தன்னிலே!

தனியுடைமைக் கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்தே-பொதுவுடைமை உள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம் ?

தனியுடைமைக்
கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்தே-பொதுவுடைமை
உள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம் ?
மக்கள் ஜன நாயகம் தானுணர்ந்து நமை தெளிந்து, எழுந்து,போராடி
மக்கள் எல்லாம் நலம்பெற்று வசந்தமாய் வாழ்வதுதான் எக்காலம்?

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த உள்பொருளே!காதலின்ப முத்திக்கு வித்தையே! கோடிக்காலப் பயிருக்கே நீரான என்சகியே!

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த உள்பொருளே!காதலின்ப
முத்திக்கு வித்தையே! கோடிக்காலப் பயிருக்கே நீரான என்சகியே!
எத்திக்கும் இனிமையான இல்லறமாம் நல்லறத்தில் எனை இணைத்தாயே!
என்னாளும் துணையாக வாழ் நாளெல்லாம் என்கூட வந்திடுவாயே!

கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருந்தது அந்தக்காலம்.!-உண்மையிலே! மண்ணில்மாதர் தலை நிமிர்ந்து எதையும் எதிர்கொள்வது இந்தக் காலம் !

என்னுயிர்க் காதலியே! எனதினிய தோழமையே!அவளே
அன்பு மனதினாலே!
முத்திதரும் வேத மொழியானாள்!காதலாம் பகுத்தறிவு!
மெய்ஞானஞ் சொல்ல வந்தாள்! -பெண்மை
கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருந்தது அந்தக்காலம்.!-உண்மையிலே!
மண்ணில்மாதர் தலை நிமிர்ந்து எதையும் எதிர்கொள்வது இந்தக் காலம் !

கெட்டதே சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே- நரிக்குண வஞ்சகர் சொல்கேட்டு நாசங்கள் புரியாதே

கெட்டதே சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே- நரிக்குண வஞ்சகரின் சொல்கேட்டு நாசங்கள் புரியாதே!
!கயவரோடு உறவாடி மக்களுக்கு பயனில்லாதததை செய்யாதே!
காசுதனை வாங்கிக் கிட்டு வாக்குரிமை விற்காதே!உனது சுதந்திரத்தை அடகுவைத்து
அடிமைவாழ்வு வாழாதே!

இன்னுயிர் சகியே! எனதினிமைத் தோழியே! நீயும் உன்காதலாம் அரிய தவமும் உந்தனது கோபத்தால் அழிந்து போகாதோ?

இன்னுயிர் சகியே!
எனதினிமைத் தோழியே! அன்பே!
உன்காதலாம்
அரிய தவமும் உந்தனது கோபத்தால் அழிந்து போகாதோ?!-அன்புக் காதலியே
பண்புத் துணைவியே!- அறிவே!
உனதன்பாம்
பெரிய வரமும் எந்தனது இதயமே குளிரத் தருவாயோ?!

Sunday, November 1, 2009

காதலிதன் - கலங்காத வுள்ளத்தை உந்தன் கண்ணிலே வைத்து. நெஞ்சினில் இருத்திக் காதல்தான் பேரின்பமென்றுக் காட்டுநீயே

கண்ணே காதலினைத் தந்த கண்கண்ட தெய்வமே!
பிரியாத பேரன்பின் பெருக்கெடுத்த அன்புள்ளத்தைக்
காதலர்க்கு கொண்டுபோய்க் காதலிதன்!-
கலங்காத வுள்ளத்தை உந்தன்!
கண்ணிலே வைத்து. நெஞ்சினில் இருத்திக்
காதல்தான் பேரின்பமென்றுக் காட்டுநீயே!

வண்ணமலராளே! வான் நிலவாளே ! மண்மணத்தால் சிந்தைகுளிர்வாளே!காதலன்பு எண்ணசிறகாளே! நெஞ்சில் பறந்தாளே! இன்முகத்தால் கலந்திடுவாளே

சிற்றிடையாளே! பேரின்பத் தேன்மொழியாளே! மென்முறுவல்
பொற்கொடியாளே! -அசைந்திடும்
அன்ன நடையாளே! ஆர்த்தெழும் புன்னகையாளே! தென்பாங்கு
முத்தமழையாளே!.மணத்திடும்
வண்ணமலராளே! வான் நிலவாளே ! மண்மணத்தால்
சிந்தைகுளிர்வாளே!காதலன்பு
எண்ணசிறகாளே! நெஞ்சில் பறந்தாளே! இன்முகத்தால்
கலந்திடுவாளே!

தினம்தினமும் நாமே திகட்டாமலே தேன்கவிதையாகவே!- நாமே இல்லறத்தை நல்லறமாய்ப் படிப்போமா?

தினம்தினமும் நாமே திகட்டாமலே!
தேன்கவிதையாகவே இல்லறத்தை - நாமே
நல்லறமாய்ப் படிப்போமா?
ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றியே !
உயிரில் உயிராய் இருவரும் ஆகியே!
ஓராயிரம் இலக்கியங்கள் தந்த புத்தகமாய் -காதலன்பினையே!
ஒருவருள் ஒருவராகி பகுத்து அறிவான கருத்துக்களையே!
தினம்தினமும் நாமே திகட்டாமலே
தேன்கவிதையாகவே!- நாமே
இல்லறத்தை நல்லறமாய்ப் படிப்போமா?

காதல் முட்டாள் தனத்தினில் ஆரம்பித்து அறிவாளித்தனத்தில் முடிந்தால் சுவையாகுமே! காதல் அறிவாளிக்குணத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிந்தால் அபத்தமே!

காதல் முட்டாள் தனத்தினில் ஆரம்பித்து அறிவாளித்தனத்தில் முடிந்தால் சுவையாகுமே!
காதல் அறிவாளிக்குணத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிந்தால் அபத்தமாகுமே!

மன்னவனைத் தன்மனத்தே கொண்டு சின்னவளே நினைத்த தென்ன? சொல்லு? என்னதினம் தினம் கனவிலென்ன கூறு? வண்ண நினைவினில் வந்ததென்ன தோழி?

மன்னவனைத் தன்மனத்தே கொண்டு
சின்னவளே நினைத்த தென்ன? சொல்லு?
என்னதினம் தினம் கனவிலென்ன கூறு?
வண்ண நினைவினில் வந்ததென்ன தோழி?
சொன்ன கதையினில் திருப்பமென்ன தோழி?முத்தமழையினில்
இன்று நனைந்த காட்சியினைக் கூறு?

பூவரைந்த மாசிலாப் பூங்குழலாளே! புன்னகையில் கோடிக்கவிதை சொல்லவந்தாளே!

பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாளே!
புன்னகையில் கோடிக்கவிதை சொல்லவந்தாளே!காதல் தலைவராம்
உற்றவரைக் காணநின்று
ஊசலாடி விட்டாள் உள்ளமே!
உவகையிலே ஒன்றிவிட்ட காதலன்பு பார்வையினாலே!
இறுமாந்து புளங்காகிதம் கொண்டு விட்டாளே!

இன்பக் கடை விரித்திடும் புன்னகை புடைசூழ்ந்திட அசைந்து நின்றிடும் அன்பு ஞானியே

நடை குலுக்கியும் முகம்மினுக்கியும் நகை நகைத்திடும் மன்மத ராணியே!- கண்ணில்
விடை கொடுத்திடும் நெஞ்சில் மடை திறந்திடும் காதல் அற்புத வேணியே!-வண்ண
உடை மின்னிடும் ஒருகுடையினில் இதயத்தை கொண்டு வந்திடும் வாணியே!இன்பக்
கடை விரித்திடும் புன்னகை புடைசூழ்ந்திட அசைந்து நின்றிடும் அன்பு ஞானியே!

பூத்தது புதுமலரே புன்னகை தரும் நிலவே! பார்த்தது கண்குளிர படித்தது காதல் பாடமே!

விண்ணிழந்த!
மின்போலும் தனிமையிலே இனிமையின்றி தவித்தாள் தலைவியே!
அன்னமே நீயுரைத்த அன்னத்தை நான்கண்டேன் தனியாகவே!
முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே!
பொன்மாலை யந்திப் பொழுதே!.
பூத்தது புதுமலரே புன்னகை தரும் நிலவே!
பார்த்தது கண்குளிர படித்தது காதல் பாடமே!