Popular Posts

Thursday, November 26, 2009

நவீன காலனி ஆதிக்க அதிகாரத்தின் காலடியிலே உலகமடா!இவ்வுலகினிலே-தேசபக்த கட்டபொம்மர்களே எப்படி இல்லாமல் போனார்களோ?-எங்கிருந்து? இத்தனை எட்டப்பர்களே ?

கண்ணுக்கெதிரே எத்தனையெத்தனையோ?களேபரங்களே!-தோழனே அதைக்
கண்டும் நீயும் உணர்வின்றி வாளாதிருப்பதனோ?
காலம் நழுவும் = நவீன காலனி
ஆதிக்க அதிகாரத்தின் காலடியிலே உலகமடா!இவ்வுலகினிலே-தேசபக்த
கட்டபொம்மர்களே எப்படி இல்லாமல் போனார்களோ?-எங்கிருந்து? இத்தனை
எட்டப்பர்களே எப்படித்தான் முளைத்தார்களோ?
இதயத்தின் இரத்தக் கண்ணீராலே- மண்ணின்
உடம்பெல்லாமே கரிக்கின்றதே!
சூது கவ்விய தர்மத்தின் வாழ்வுதன்னிலே திரும்பவும் தர்மமே!
மீண்டும் வென்றிட துணிவானதொரு பாதைதான் இருக்கிறதா? நல்லோரின் துணை
நீயும்தான் கொண்டாயா?கேளிக்கையும் களியாட்டங்களிலும் மூழ்கிக்கிடக்கும் உங்களாலே-வ்ழி
மாறித் தடுமாறிக் கொண்டிருக்கும் உங்களாலே! உங்களுக்கு நீங்களே திசை
மாறிப் போவதையாவது உணரமுடிகிறதா?ஏகாதிபத்தியமே!
உங்களின் உணர்வுகளைப் பிழிந்து சக்கையாக்கியே!
உங்களின் அறிவுதனை உறிஞ்சி எந்திரமாக்கியே!- நவீன ஏகாதிபத்திய வாதிகளே!
உயிருடன் உணர்வின்றி உங்களையே உலவவிட்டிருப்பது தெரியவில்லையா?-அதுவும்
உங்களின் உழைப்பினையே சுரண்டிக் கொள்ளையடிக்கத்தான் என்ற உண்மையாவது
உங்களுக்குப் புரிகின்றதா? நீயும் மூளைச்சலவைதான் செய்யப்பட்டே! முடமாகியே
உன்னுரிமை இழந்து மூலமிழந்து நிற்கின்ற கையாகாலாத தனத்திலே
உங்களையே பார்த்திடும் போதெல்லாமே நல்லோரின் ஆவிதுடிக்கின்றதே
இந்த தேசத்தின் அங்கமெல்லாமே பதறித்தான் துடிக்கின்றதே!
உங்களது தகவல் தொழிலின் நுட்பம்தான் கண்டு நீயும் பூரிக்கின்றாயே!
உலகினைச் சுருக்கும் போக்குவரத்து என்று வியக்கின்றாயே?
அன்றைய ஆங்கிலேய அஞ்சல் சேவையும் இருப்புப்பாதையும் எதற்குப் பயன்பட்டதே
என்பதுதான் என்ற வரலாற்றினையே நீயும் தான் மறந்துதான் போனீரா?
நமது பரந்துபட்ட உலகினையே சுருக்குவது என்பதே உலகமக்களினையே
நாளெல்லாமே சுருட்டத்தான் ,சுரண்டிக் கொள்ளையடிக்கத்தான் என்பது தெரிந்தும்
நீயும் சுருண்டு கொடுக்கின்றாயே உங்களுக்கு மானமில்லையா? ஈனமில்லையா?
உங்களுக்கே ரோசமில்லையா? உணர்வில்லையா? திராணியில்லையா?
உங்களின் உடலினிலே குருதிதான் ஓடவில்லையா? நீங்கள் என்ன சுவாசமற்ற பிண்டமோ?தனியுடைமை மாற்றி,
அல்லது எதிர்த்து போராடமனமின்றி முடங்கிக் கிடக்காதே வீறுகொள்ளடா!விழித்தெழடா?

No comments: