திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்குமே!
இலையில் சிதறும் மழைத்துளியானாய்- நானும்
இமைகொட்டும் விண்மீன் சிதறலானேன்!
தூரிகை தூவும் வர்ணச்சிதறலே!நானும்
தூவானம் தூவும் எல்லையிலா வானமானேன்!
பால்கொட்டி உலாவரும் வெள்ளி நிலாவேநானும்
பனிதூவி தேவார துயிலெழுப்பும் மார்கழி காலையானேன்
இமைபிரித்து உலகறியும் மழலையின் மந்தகாசமமேநானும்
இதயம் வருடி இதம்கூட்டும் குழலோசையானேன்
இறையின் திருமுன் அமர்ந்து தவமியற்றும் ஒற்றைப்பூவேநானும்
இன்னிசை பாடிடும் புல்லினக்கூட்டமானேன்
ஜதிகூட்டும் காட்டாற்று புதுவெள்ளமமேநானும்
ஜாலம் காட்டும் காட்டு மின்மினியானேன்
மகரந்தம் தூவும் மலர்ச்சரமே நானும்
மண்மீது துளிர்க்கும் ஒற்றைத்தாவரம்
தேன்குடித்து மயங்கி கிடந்த ராணி பட்டாம்பூச்சியே! நானும்
தின்று தித்தித்து இன்னும் கேட்ட திணை மாவுமானேன்!
பால் தேடி ஓடும் பாப்பா கன்றுக்குட்டியே!
கால் தொட்டு வளைந்து ஓடும் ஆட்டுகுட்டியானேன்!
கதைகேட்க நீவந்தாய்! கதை சொல்ல நானுமிருந்தேன்!அடியே சகியே நமக்கு
பகல்களும், இரவுகளும் போதவில்லையே!
நினைத்து சிரிக்கவும் காலமில்லை! , கனவில் மிதக்கவும் நேரமில்லையே! "
திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்க்குமே!
!
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment