"காதலிப்பவனுக்கு காதலிதான் அழகாவாளே!..
காதலிக்காதவனுக்கு அழகானவள் எல்லாம் காதலியாவாளே!
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம் செய்திடமுடியுமா?
..கல்யாணம் செய்தவனெல்லாமே
மனைவியைத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியுமா?
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது காமமாகும்.
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதலாகும்
மனைவியை மட்டும் காதலிக்க
நினைப்பது நல்லபுத்தியாகும்
காதலிப்பவரையெல்லாமே மனைவியாக
நினைப்பது என்பது வக்கிரபுத்தியாகும்
"காதலித்த பொண்ணையே கல்யாணம் செய்கின்றவன் தைரியசாலி
கல்யாணம் செயத பொண்ணையே காதலிக்கிறவன் புத்திசாலி
காதலி அவள் அழகென்று சொல்கின்றவனின் காதல் பொய்க்காதலாகும்
காதலி அவள் அன்பானவளென்று சொல்கின்றவனின் காதல் மெய்க்காதலாகும்
"காதலியை மனைவியாக ஆக்கமுடியாதவனே அவனின் மனைவியையே
காதலியாக ஆக்கிவிடுவான்!
"கல்யாணத்தில் காதல் முடியலாம்.. ஆனாலும்
காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் முடியும்! முடியாமல் போனாலும் போகும்!
"காதலிக்கும் பெண்ணையே
கல்யாணம் செய்திட
முடியுமென்று சொல்ல முடியுமா?..
கல்யாணம் செய்தவன் எல்லாமே
மனைவியைத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியுமா?
!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment