Popular Posts

Saturday, November 28, 2009

பத்தும் பசிவந்திடப் பறந்து போகுமே! பசிக்கு ருசியும் தெரிவதில்லையே!

பத்தும்
பசிவந்திடப் பறந்து போகுமே!
பசிக்கு ருசியும் தெரிவதில்லையே!
பசித்த வாய்க்கு புசிக்கத் தராதவன் மனிதனே இல்லையே!
பசித்தவன் வயிற்றுக்கு ஓடாத இடமும் இவ்வுலகினில் இல்லையில்லையே!
பசியுள்ள உலகினில் இன்பம் வாழ்விற்கு வெகுதூரமே என் தோழனே!
வசதியும் தராதபோது பசியும் அதைவிடாது துரத்துமே!பூகோள எல்லைவரையினிலே!
பசியினில் ஒருவன் வாடுவதே !அவன் உணவை ஒருவன் திருடியதே!
பசியினை வளர்த்து திருடும் தனியுடைமையே ஒரு நாளில் ஓடும் அப்போது பசியும் ஓடுமே!
பசியினை போக்கும் பொதுவுடைமை எல்லோரும் புசிக்கத் தத்துவத்தை நடைமுறை ஆக்கிடுமே!

No comments: