இதமாகச் சொல்லவோ? எப்படித்தான் சொல்லவோ?
இன்னமுஞ் சொல்லவோ இன்னமுதே தேன்சுவையே
எப்படித்தான் சொன்னாலும் எத்தனைமுறை சொன்னாலுமே
உன்மனமென்ன கல்லோ ?
நல்லதையே சொன்னாலும் பகுத்தறிவினிலே பலமுறை உரைத்தாலுமே
செந்தமிழே தெம்மாங்கே உன் நெஞ்சமென்ன?
இரும்போ பெரும்பாறையோ, சுதந்திர சுவாசத்தைபற்றி
ஏதேது சொன்னாலும் என்னென்ன பாடினாலும் கேளாது உன்
இருசெவியு மந்தமோ பழகாத பந்தமோ கண்ணே உந்தனுக்கு அடிமைவாழ்வு
அழகுதானோ?,அடிமைசுகமும் சுகமோ? தாழ்வுற்றுக் கிடப்பதிலே
என்ன மோகமோ? இதுவென்ன சாபமோ?தெரிந்துசெய்கிறாயா? தெரிந்தே செய்யும்
இதுவேவுன் செய்கைதானோ?,
விரக தாபமோ யார்மீது ஊடலாலே உன்னில் பொய்மைக் கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,அணைத்துமுத்தம் தராமலே போவேனோ?
உன்னைவிட் டெங்கு சென்றாலும் வாழ்வெனக்கு சுவர்க்கம் ஆகிடுமோ?
நான் உனையே விடுத்து வாழ்வினையே வாழ்ந்திடுவேனோ?
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை புறக்குற்றமன்றோ?
யுற்றுப்பார் உன்கண்ணில் என்கண்கள் தெரிவது தெரியலையா?
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும் நம்குற்றமாகி அதை திருத்திடல் நம்கடைமையன்றோ? நாம்
இருவரின் துணையாலே காமனை மட்டும் அல்ல இவ்வுலக அடிமைவிலங்கினையும் நொறுக்கிடுவோம் வாயென் புரட்சிகர அக்கினிக்குஞ்சே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment