Popular Posts

Saturday, November 7, 2009

காலம்போகும் வேகத்திற்கு காதலும் ஓடுதே! கலந்துப் பழகத்தான் துடித்துத் தான்போகுதே!

-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத!
காதலும் காதலாக இருப்பதில்லையே
கண்ணனென்று காதலாலே கொஞ்சுவதும் !
கருத்தில்வைத்து அன்பாலே மிஞ்சுவதும்!- நேரம்பார்த்து
காத்திருந்து நாணத்தாலே அஞ்சுவதும் !-கனவினிலே!
காதலிலே காலம் அறியாது துஞ்சுவதும்!
காதலியரின் இலக்கணமென்று அறிந்தாலும்!-இந்த
காலத்திலே விஞ்ஞானக் காதலாகவே,விரைந்துதான் பறக்குதே!
காலம்போகும் வேகத்திற்கு காதலும் ஓடுதே!
கலந்துப் பழகத்தான் துடித்துத் தான்போகுதே!
கலந்து பழகாத காதலும் காதலில்லையே
-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத!
காதலும் காதலாக இருப்பதில்லையே

No comments: