Popular Posts

Monday, June 29, 2009

நாணயமே !இல்லாரே இல்லாத பொதுவுடைமை தேசத்தை நன்மக்கள் ஜன நாயகபுரட்சியை உருவாக்கட்டும்

நாணயமே
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
வள்ளுவரும் சொன்னாரே!
பொருள்தனை போற்றிவாழ அவ்வையும் சொன்னாரே!
நாணயமே
மனிதர்க்கு வேண்டும்
பண்டமாற்று முறையாலே
பயன்படுத்திய காலம்மாறி-பண நாணயமே
பல்வேறு வகைதனில் மதிப்பிற்கேற்றபடி
உருவானாயே
நாணயமே!
துவக்கத்தில் நீ
பொன்னாகிப்பின் வெள்ளியாகி அடுத்து
செம்பு, நிக்கல் ,கலப்பு உலோகமானாயே!
துக்ளக் காலத்தில் நீயும் தோலாக இருந்தாய்
நாணயமே!
இப்போதோ நீ காகிதத்தில் உலாவருகிறாயே!
உன்னை அச்சிடும் அளவிற்கு தங்கமும்,வெள்ளியும்
இல்லையென்றாலோ தரிங்கனத்தம் தானே

பொருளை அளவிடவும் மதிப்பிடவும்
நீ உதவுகின்றாயே நாணயமே
அவரவர் தேவைக்கு வாங்கும் சக்திக்கு
அனுசரித்து உதவியாக நீயும் ஆனாயே!
நாணயமே ! உன்னை கள்ளத்தனமாய் அச்சடித்து
பணவீக்கம் ஆக்கிடுவார் கயவரே
பணவீக்கமானால் நீ இளைத்து உன்மதிப்பும் குறைகிறதே
நாணயமே !உனை மனிதர்கள் நேர்வழியில் பெறட்டும்
நாணயமே !இல்லாரே இல்லாத பொதுவுடைமை தேசத்தை
நன்மக்கள் ஜன நாயகபுரட்சியை உருவாக்கட்டும்

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த இனியவர்களை மக்களும் தேடிசெல்லவேண்டுமே! என்றும் கூடிவாழ்ந்திட வேண்டுமே!!

கண்ணும் காதும் இல்லை என்றாலும்
உங்களுக்கு கருத்துண்டு எறும்புகளே!
தொடு உணர்வு,வாயுணர்வு,மூக்குணர்வு
உங்களுக்குண்டு
சுறுசுறுப்பினில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
இனிப்பைக் கண்டால் துடிப்புடன் படையெடுப்பீர்கள்
நீங்கள் என்றைக்கும் மனிதரைப் போல ஒரு நாளும்
நீண்டவரிசையை முந்திச் சென்றதில்லையே!
உங்கள் பாதையில் வடுத்தெரியும்
உங்கள் உழைப்பினில் வடுவில்லையே!
நீங்கள் ஊர கல்லும் தேய்ந்திடுமாமே!
நீங்கள் தேடும் உணவை அளவோடு உண்டு-எஞ்சியதை
சேமித்துவைத்து மழைகாலத்தில் உண்டுவாழ்ந்து மகிழ்வீர்கள்!
சேமிப்பின் பயனை மனிதரை உணரவைத்தீர்கள்
உங்கள் தொடு உணர்வினாலே மழைவருகை சொல்வீர்களே!
நீங்க சேமித்த அரிசிதனை பாலை நிலந்தன்னில்
சங்ககாலத்தில் சமைத்து உண்டார்களாமே!-அதையும்
புல்லரிசி என்றுகூட சொன்னார்களாமே!
உங்களைப் போலவே மக்களும்
சுறுசுறுப்பை கற்றுக்கொள்ளவேண்டுமே!
சிக்கனமாய் வாழ்ந்திடவே சேமிக்கும் குணம்வேணுமே!
இனிப்பைத்தேடும் உங்களைபோலவே
அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த இனியவர்களை
மக்களும் தேடிசெல்லவேண்டுமே!
என்றும் கூடிவாழ்ந்திட வேண்டுமே!

Sunday, June 28, 2009

மனசுக்குள்ள காதல் செந்தாழைபூ மணம் பூசுறயே தென்றலே!

தென்றலே தென்றலே
சிலுக்க சிலுக்க வீசுறயே தென்றலே
தென்றலே தென்றலே -மனசுக்குள்ள காதல்
செந்தாழைபூ மணம் பூசுறயே தென்றலே
மன்றமே மன்றமே -அன்போடு
வந்து வந்து நீயும் பேசுனயே-பண்போடு நீயும்
தென்தமிழ் மொழியோடு உறவாடி போனயே

உன் நெஞ்சத்தின் அரவணைப்பில் ஆசையிருக்குது உன் நேசத்தின் சேர்ந்திசையில் அன்பிருக்குது!

உன் கண்குறிப்பில் கண்குறிப்பில் வியப்பிருக்குது
உன் புன்சிரிப்பில் புன்சிரிப்பில் விருப்பிருக்குது
உன் மவுனத்தின் ஆழ்மனத்தில் அழைப்பிருக்குது
உன் நெஞ்சத்தின் அரவணைப்பில் ஆசையிருக்குது
உன் நேசத்தின் சேர்ந்திசையில் அன்பிருக்குது

என் சுவாசத்தின் சுவாசமே-ஒரு மனப்பூவின் அன்புவாசமே!

என் சுவாசத்தின் சுவாசமே
என்னுயிரின் உயிரோட்டமே
ஒரு நாளைக்கு
முப்பத்தோராயிரத்து அறு நூற்று எண்பது தடவை
சுவாசிக்கின்றேன் நானே-அந்தசுவாசம் முழுவதும் காதலி
உனக்காகவே-
என் சுவாசத்தின் சுவாசமே-ஒரு
மனப்பூவின் அன்புவாசமே

ஜெல்லாச்சி ஜில்லாச்சி எழுதும் பேனாவாச்சு!

பப்ரைஸ் புல்கொண்டு எழுதிய காலம் போய்


எழுத்தாணி,தூரிகை, மயிலிறகு வைத்து எழுதியது போயி-

பால்பாயிண்ட் கண்ட காலம் தாண்டி எல்லாமே

ஜெல்லாச்சி ஜில்லாச்சி எழுதும் பேனாவாச்சு கண்ணே
உன்னிடத்தில் அன்பினைச் சொல்லவந்தேன் பெண்ணே

பொன் தகடு,செப்பேடு,வெள்ளித்தகடு-அடி
கல்லு,ஓலை,துணி, தாழைமடல் போயி
காகிதம் வந்தது கண்ணே! காதல் கடிதமும் வந்தது பெண்ணே!
உன்னிடத்தில் உண்மை அன்பினை சேர்க்கவந்தேன் கண்ணே!
இப்போதோசெல்போன், இ-மெயில் ,இண்டர் நெட் வந்தாச்சுஅன்பே
உலகமே சுருங்கிப்போச்சு தேனே
உள்ளன்பே பெருகவேணும் மானே

சமுதாயத்தில் சீறி எழுகின்ற புரட்சியானதே!மனித நேய வானத்தின் சிகரமானதே

சந்தமின்றி மரபின்றி ஒரு புதுக்கவிதையே-மழலையாய்
சிரிக்கும் குழந்தையானதே-வாழ்வினில்
சிந்திக்கும் கருத்தானதே புதுமையிலே-சமுதாயத்தில்
சீறி எழுகின்ற புரட்சியானதே!!-இலக்கியத்தின் புதிய இலக்கணத்தின் இலக்கானதே-மனிதவாழ்வுயர்த்த
முன்னேற்றத்தின் மைல் கல்லானதே-உயர்வினிலே மனித நேய
வானத்தின் சிகரமானதே

பேசும் ஓவியமே பெட்டகமே பேரழகே பொற்சித்திரமே!

பேசும் ஓவியமே பெட்டகமே
பேரழகே பொற்சித்திரமே- நீ
சிரித்தாலும் அழகுதானடி
அழுதாலும் அம்சம்தானடி
சிரிப்பையும் அழுகையும் ஒன்றாக பாவிக்கும்
நிலைகொண்டால் வாழ்வினில் என்றென்றும் சந்தோசமே

நம் காதல் கொடுப்பதாகும்!

நட்பு பெறுவதாகும் அன்பு கொடுப்பதும் எடுப்பதும் ஆகும்
நம் காதல் கொடுப்பதாகும்

வேண்டும் வேண்டும் மனிதப் பண்பு-மனிதற்கு வேண்டாம் வேண்டாம் வெட்டி வீம்பு !

வேண்டும் வேண்டும் நமக்கு பொறுப்பு-வாழ்வில்
வேண்டாம் வேண்டாம் என்றும் வெறுப்பு
வேண்டும் வேண்டும் மனிதப் பண்பு-மனிதற்கு
வேண்டாம் வேண்டாம் வெட்டி வீம்பு

மின்னல் வானிலே அவள் இடைவெட்டினில் ஒளிந்துகொண்டே நடனமாடுதே!

அழகாக சடசடக்குது கோடைமழையே
புதுமணபெண் போலவே நாணங்கொண்டே
ஒளியாக தகதகக்குது மின்னல் வானிலே
அவள் இடைவெட்டினில் ஒளிந்துகொண்டே
நடனமாடுதே

Saturday, June 27, 2009

இருமனமும் இணையும் நறுமணமா?

ஒரு நாள் உன் அழகை ரசித்தேன்
மறு நாள் உன் அன்பில் திளைத்தேன்
அதற்கென்ன? ஆயுள்கால தண்டனையா?-அதுதான்
திருமணமா?-ஒருமணமா? இருமனமும் இணையும்
நறுமணமா?

எனக்கொரு காதல் கவிதை சொல்லவே -எங்கே கற்றது? உந்தன் கண்களே!

எனக்கொரு காதல்
கவிதை சொல்லவே -எங்கே கற்றது?
உந்தன் கண்களே
காதலியே நீயும்
மவுனமாகவே
ஒரு மொழியும் இல்லாமலே-உன் இதழ்குவித்து
ஒரு வார்த்தையும் சொல்லாமலே -
இமைச்சிற்கை விரித்துவைத்து
எனைவானில் மிதக்கவிட்டு
எனக்கொரு காதல்
கவிதை சொல்லவே -எங்கே கற்றது?
உந்தன் கண்களே

ஆண்பெண் விடுதலை உழைப்பவரின் விடுதலைக்குள் ஒளிந்து கிடப்பது உலகறிந்தால் சுவர்க்கமிங்கே

அடுப்பின் ஊதுகுழலகள் அல்ல -நாங்கள்
அகிலத்தின் புல்லாங்குழல்கள்
ஆணாதிக்கத்தைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்
ஆண்களையல்ல
ஆண்மையும் பெண்மையும் தராசுத்தட்டின் சமமே
ஆணடிமைத் தனத்தையும் பெண்ணடிமைத் தனத்தையும்
எதிர்த்து நிற்கின்ற புதுமைப் பெண்கள் நாங்கள்
ஆண்பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை
உடைத்துவிட ஓரணியில் திரளாமல்
ஆண்பெண் அடிமைகளுக்கு இங்கல்ல-எங்கும்
எந்த அண்டத்திலும் விடுதலையில்லை இல்லை!-எங்கள் உலக
ஆண்பெண் விடுதலை உழைப்பவரின் விடுதலைக்குள்
ஒளிந்து கிடப்பது உலகறிந்தால் சுவர்க்கமிங்கே

எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும் எங்களைத் தேடி இங்கு வரவில்லையே!

கரைகின்றதே கரைகின்றதே காகங்களே-ஆனாலும்
எங்கள் முதியோர் இல்லத்திற்கு-எந்த உறவினரும்
எங்களைக் காண எவரும் வருவதில்லையே
எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும்
எங்களைத் தேடி இங்கு வரவில்லையே

எங்கே எங்கே சுவர்க்கமுனு தேடுபவரே-இங்கே இங்கே பூலோக சுவர்க்கமுனு அறிவீரா?

சன்னலோர பயணத்திலே
சாயங்கால நேரத்திலே-
வயதாகிப்போனாலும் இளவயதே-அந்த
முதுமையும்
கூட இளமையாகுமே-
குதூகலமாய் மனதுக்குள்ளே
சந்தோச சங்கீதமே-எங்கே எங்கே
சுவர்க்கமுனு தேடுபவரே-இங்கே இங்கே
பூலோக சுவர்க்கமுனு அறிவீரா?

பேரண்ட மோதலையும் இவ்வுலகினில் விஞ்சிவிடும் அன்பே!

கோடைவெயிலும் குளிர் நிலவாய் மாறிவிடும்-காதலி நீயும்
கூடவரும்போதினிலே
வீசும் புயலும் இளந்தென்றலாய் ஆகிவிடும்-தோழி நீயும்
சேர்ந்திருக்கும் போதினிலே
காதலின் கடைக்கண்ணே காட்டிவிடு பெண்ணே--பேரண்ட
மோதலையும் இவ்வுலகினில் விஞ்சிவிடும் அன்பே

Monday, June 22, 2009

தனித்தே கழிந்ததே!

உறக்கமின்றி இன்றைய பொழுது
தனித்தே கழிந்ததே
அவன் துணையின்றி நாளையப் பொழுது
விடியாமலே போகட்டுமே

ஆண் பெண் சமத்துவத்தை கொண்டுவர வேணும் உழைப்பவர் உழுபவர் இணைந்து எழுந்து வாழ்ந்திட வேணும்!

வாழ்க்கை ஒரு கணக்கடா
உன் நண்பர்களை கூட்டிக்கொள்ள வேணும்
உன் எதிரிகளை கழித்துக் கட்ட வேணும்
உன் சந்தோசத்தையே பெருக்கிக்கொள்ள வேணும்
உன் பிரச்னைகளை வகுத்துவிட வேணும்
ஆண் பெண் சமத்துவத்தை கொண்டுவர வேணும்
உழைப்பவர் உழுபவர் இணைந்து எழுந்து வாழ்ந்திட வேணும்

இணைந்துசெல் இணைந்துசெல் வாழும் நாளெல்லாம் நல்லவரோடு இணைந்துசெல் !

+ கூட்டிக்கொள் கூட்டிக்கொள் கற்கும் போதினில்
சுவைதனையே கூட்டிக்கொள்
- கழித்துக்கொள் கழித்துக்கொள் கற்கும் போதினில்
சுமைதனையே குறைத்துக்கொள்
* பெருக்கிக்கொள் பெருக்கிக்கொள் கற்கும் போதினில்
ஆர்வத்தைப் பெருக்கிக்கொள்
/ வகுத்துக்கொள் வகுத்துக்கொள் கற்கும் போதினில்
பாடங்களை வகுத்துக்கொள்
= சமமாக எடுத்துக்கொள் சமமாக எடுத்துக்கொள்
வெற்றி தோல்விதனை சமமாக எடுத்துக்கொள்
“ இணைந்துசெல் இணைந்துசெல் வாழும் நாளெல்லாம் நல்லவரோடு
இணைந்துசெல்

மண்மகளை முத்தமிட்டு முத்தமிட்டு சென்றீங்களா

கரையோரம் கரையோரம் அலைமோதும் அலைகளே
கரையோரம் கரையோரம் காற்றுவாங்க வந்தீங்களா?-இல்லை
கரையேற கரையேற முயற்சி தான் செய்தீங்களா?-இல்லை
காலமெல்லாம் கடலளந்துதான் ஓய்ந்தீங்களா?இல்லை
மண்மகளை முத்தமிட்டு முத்தமிட்டு சென்றீங்களா?

உரிமையில்லாத மக்களோ பிரபஞ்ச சுமையாகும்

சிந்திக்காத மூளை தலைச்சுமையாகும்
செயல்பாடில்லாத அவையங்கள் உடற்சுமையாகும்
பயன்பாடில்லாத செல்வங்கள் பொக்கிஷ சுமையாகும்
தோண்டாத தங்ககட்டி மண்சுமையாகும்
தன்னம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வின்சுமையாகும்
உழைக்காத மனிதனோ உலகின் சுமையாகும்
உரிமையில்லாத மக்களோ பிரபஞ்ச சுமையாகும்

தனியுடைமை முகத்திரையினை கிழித்தோ எழுகிறது புரட்சி நடை!

கைத்தடியின் கேள்விக்குறிதனில் கூட நடக்கிறது முதுமையின் நடை
தனியுடைமை முகத்திரையினை கிழித்தோ எழுகிறது புரட்சி நடை

அந்த நாவல் மரமே கதைசொல்ல வருமோ?-தோழி!

கதைசொல்லும் கதைசொல்லும் மரமோ நாவல் மரமோ-அந்த நாவல் மரமே
கதைசொல்ல வருமோ?-தோழி

எந்தாய் நாட்டு மக்களின் வறுமையும் என்று தீருமோ??

ஒழுகும் குடிசையிலே நனையாத தூக்கமே
குடையாய் இருந்ததோ என் அன்னையின் சேலையே
பருக பாலில்லை என்றபோதும் அவளின்
அரவணைப்பில் பசியும் பறந்து போனதே-என் தாயின்
பசியென்று தீருமோ? என்பசியும் அதோடு சேர்ந்து
என்றுதான் தீருமோ? என் தாயின் பசி தீருவது போலவே
எந்தாய் நாட்டு மக்களின் வறுமையும் என்று தீருமோ?

அவள் விழித்தாள் அந்த விடியல் கூட காத்திருந்து பார்த்து வியக்குமே

அவள் வந்தாள் வேடிக்கைப் பார்க்கவரும்
அந்த பவுர்ணமி நிலவுமே
அவள் சிரித்தாள் முத்துக்களும் சிரிக்க கற்றுக்கொள்ள
ஓடோடி வந்து குவியுமே
அவள் விழித்தாள் அந்த விடியல் கூட
காத்திருந்து பார்த்து வியக்குமே!

இமையத்தை கொண்டுவரும் அவளின் சிங்காரமே!

இமைகளின் இசைதனிலே
கருவிழி நடையலங்காரமே
அவளின் கண்களிலே
அழகு ஒய்யாரமே
அமைதியை குலைத்துவிடும்
அவளின் சிருங்காரமே
இமையத்தை கொண்டுவரும்
அவளின் சிங்காரமே

நிறைகுடமும் ததும்புவதில்லையே அவளின் இடுப்பினிலே!

நிறைகுடமும் ததும்புவதில்லையே அவளின் இடுப்பினிலே-ஓரக்
குறைப்பார்வையும் சளிப்பதில்லையே அவளின் விழிதனிலே
மறைமொழியும் வெறுப்பதில்லையே அவளின் நாணத்திலே
குறையிதழும் திகட்டுவதில்லையே அவளின் முத்தத்திலே

விடுமுறையில் விடுமுறையில் பள்ளிக்கூடமே-

விடுமுறையில் விடுமுறையில் பள்ளிக்கூடமே- நீயும்
விடுமுறையில் என்றாவது எங்களைப் போலவே- நீயும்
ஒரு நாளாவது எங்காவது யாரையாவது எப்போதாவது
சுற்றிப்பார்க்கவோ? சந்திக்கவோ? சென்றதுண்டா?

தன்னுயிரை தான்கொடுத்து வேராய் புதையுண்டாலும்!

வான்மழையினில் தாய்க்கோழி நனைந்த போதிலுமே
தாய்ச்சிற்கின் குடைக்குள்ளே சேய்குஞ்சுகளே-தன்னுயிரை
தான்கொடுத்து வேராய் புதையுண்டாலும்-தன் தேச
தன்மக்களை உரிமையினாலே சுயசுதந்திரத் தோடு
உயர்த்திவிட எண்ணிடுவாரே விடுதலைப் போராளிகளே

காதல் கண்ணில் வந்த உறவு!

எல்லோரையும் உறங்கவைத்து விழித்திருக்கும் இரவு
எல்லோரையும் மறக்கவைத்து காதலன் உனை
நினைக்க வைக்கும் -காதல் கண்ணில் வந்த உறவு

மனித நேய மனித இதயங்களை இணைத்திடவேண்டும்!

அந்த பைசா நகர
சாய்ந்த கோபுர சாலையோர
சாய்ந்த தென்னைமரங்கள்
இந்த பூமியை கிழித்துக் கொண்டு
செல்லும் இந்திய
நாற்கரச் சாலைகள்-வடக்கிருந்து
தெற்குவரை சாலைகளை இணைப்பதில்
மட்டும் பெருமையில்லை-மனித நேய
மனித இதயங்களையும் இணைத்திடவேண்டும்

ஏழாம் அறிவுமுண்டு,எட்டாம் அறிவுமுண்டு!

ஏழாம் அறிவுமுண்டு,எட்டாம் அறிவுமுண்டு
மனத்திற்குமனம் தொடர்புகொண்டு
மனதின் எண்ணவோட்டத்தை
அறியும் அறிவே ஏழாம் அறிவாகும்

எதையும் அறியும் வியாபக அறிவே
எட்டாம் அறிவாகும்

Sunday, June 21, 2009

இன்றே இன்றே எந்தேசத்தோடு சேர்ந்து நானும் கடன்வாங்க கற்றுக்கொண்டேனே!

அன்றே அன்றே கடன்வாங்க கற்றுத்தந்தாரு
எங்க கணக்கு வாத்தியாரு-பழக்கதோசமே
இன்றே இன்றே எந்தேசத்தோடு சேர்ந்து நானும்
கடன்வாங்க கற்றுக்கொண்டேனே

நீயும் மீண்டும் மீண்டும் மலர்கின்றாயே!

மலர்ந்த பூவே-தினம்
மலரும் பூவே- நீயும் மீண்டும் மீண்டும்
மலர்கின்றாயே பூவேயுன்னை பூவை அவள்
அனுதினமும் பறித்திடும் போதினிலுமே

இருட்டுக்கு துணையத் தேடுகின்ற கோழைப்பசங்களா!

மழைக்குப் பயந்து அறைக்குள்ளே ஆடுகின்ற
துவைத்த துணிகளா!-இருட்டுக்கு துணையத் தேடுகின்ற
கோழைப்பசங்களா!துணிந்து விவேகமாக
எழுந்துவிட்டால் எதிர்வரு எதிர்ப்பெல்லாம்
தூள் தூளாக ஆகிடாதா?

வாழ்வில் உயரச்சொல்லும் முயற்சிகூறும் பட்டமே!

கண்ணுக்கெட்டாத தூரத்திலே
காத்துல மிதந்து சிறகடித்து
கைகால் இல்லாது வாலோடுமட்டும்
காணக்காண மகிழ்ச்சியூட்டி பரவசமூட்டி
கவலைகளை மறக்கசெய்யும் பட்டமே-வாழ்வில்
உயரச்சொல்லும் முயற்சிகூறும் பட்டமே

Saturday, June 20, 2009

இன்னும் அன்பினில் ஏனோ புரியவில்லை!

தென்றலே தென்றலே நீ வருவது
தெரிகிறதே -ஆனால் போவது
தெரியவில்லை
காதலே காதலே கண்ணில் வருவது
அறிகிறதே -ஆனால் நெஞ்சினில்
போனதும் அறியவில்லை-இன்னும் அன்பினில்
ஏனோ புரியவில்லை

காதலியே காதலியே - உந்தன் மவுனமும் கூட பேசுகின்றதே !

காதலிலே காதலிலே
காதலியே காதலியே -
உந்தன் மவுனமும் கூட பேசுகின்றதே
கண்களிலே கண்களிலே-அன்புக்
காவியமே காவியமே
தினமும் அரங்கேறி நடிக்கின்றதே

காதலில்லாமலே வாழ்விருந்து என்ன பயன்?!

நீரில்லாமலே நீந்துகின்ற மீனாகவே-உந்தன் விழிகளே
நீந்தவந்ததோ?-ஒரு
போரில்லாமலே நடத்துகின்ற யுத்தமாகவே-எனக்கு
நேர் நின்றதோ?
நீயில்லாமலே நானிருந்து என்னபயன்?- என்று அன்பு மொழிதனில்
பேசுகின்றதோ?
காதலில்லாமலே வாழ்விருந்து என்ன பயன்?-என்று பார்வைதனில்
கூறுகின்றதோ?

காதலுக்கு என்றும் மரணமில்லை இல்லை!

காதல் என்றும் மரணிக்காது
காதலுக்கு என்றும் மரணமில்லை இல்லை
காதலி அவளின் நினைவாகவே
காய்ந்த ரோஜா இதழ்களும்-இற்றுபோன காதல்
கடிதங்களும்-காதலி அவளின் அன்பு
உறவாகவே நின்று நெஞ்சினில்
நீங்காமலே ஊஞ்சலாடும் தினந்தோறுமே-பசுமைக்
கனவுகளே இன்னும் வற்றிவிடவில்லை-கண்ட
காட்சிகளே இன்னும் மாறிவிடவில்லை-கொண்ட
கோலங்களும் இன்னும் ஓடிவிடவில்லை
காதலி மறந்த போதிலுமே
காதல் என்றும் மரணிக்காது
காதலுக்கு என்றும் மரணமில்லை இல்லை

உலகப்பொருளாதாரமே நம் கைக்குள்ளே வந்துவிடுமே!

மழை நீர் சேமித்துவிடு-அதனாலே பாலைவனமும்
ஒத்திவைக்கப் பட்டுவிடுமே-பொதுத்துறையினை
காக்க விரைந்துவிடு தேசப் பொருளாதாரமும்-சீர்
தூக்கி எழுந்து நின்றுவிடுமே-பொதுப்பங்குகளை விற்கும்
போக்குகளை முறியடித்துவிடு-உலகப்பொருளாதாரமே
நம் கைக்குள்ளே வந்துவிடுமே

என்னாவினில் வந்து நீயும் காதலாகி நின்றாயே!

கன்னத்தைக் கிள்ள கிள்ள விரல்களின் சிவப்பாகவே
என்னமாய் அவளின் மவுன வெட்கம் வெட்கமே
சொன்னதை சொல்லிவிடும் கிளிப்பிள்ளையே
என்னாவினில் வந்து நீயும் காதலாகி நின்றாயே

ஏறிய விலைவாசி இறங்கிட மறுக்கின்றதே!

ஏறிய விலைவாசி இறங்கிட மறுக்கின்றதே
அட பட்ஜட்டின் சுமைகளே -அந்த
நியூட்டனின் விதிகளையும் கூட நிராகரித்து
விட்டதோ?

சிலைகளை வணங்காத பெரியாரையும் !

சிலைகளை வணங்காத பெரியாரையும் -கூட பூஞ்
சோலைதனிலே சிலையாக வைத்தாரே

அன்பு மூச்சுக்குள் சுகமாக சுகமாக-காதலி!

முடிச்சுகள் மெதுவாக மெதுவாக-அன்பு
மூச்சுக்குள் சுகமாக சுகமாக-காதலி உன்
கூந்தலுக்குள் கட்டப்படும் பூக்களே-என்மனதினில்
கொந்தளிக்கும் தினந்தோறும் தேன் துளிகளே

கண்களின் காதலே!

எட்டமுடியாததை தொட்டுப் பார்த்தேன்
தண்ணீரில் வானமே
கட்டமுடியாததை எட்டிப் பார்த்தேன்
பெண்மையில் நாணமே
ஒட்டமுடியாததை வெட்டிபார்த்தேன்
கண்களின் காதலே
வெட்டமுடியாததை ஒட்டிப்பார்த்தேன்
நெஞ்சினில் மோதலே

Thursday, June 18, 2009

இதழ்முத்த கனித்துளிகளே!

பனித்துளிகளே
விடியலில் நூலறுந்து சிதறும் முத்தைப் போலவே-இதழ்முத்த
கனித்துளிகளே
தென்றலில் நாளெல்லாம் பேசும் மேனிசுகம் போலவே

என்னுயிர் என்னுள் இல்லாததைப் போலவே !

நீர்திரட்டி காற்றுக்கு அசையும் மணலே
மீன் தேடும் முள்முருங்கை மலர்ச்சிறகு நாரையே-எனை
ஏன் தான் வருத்துமோ? இந்த வாடைக்குளிரே-இன்னும்
நான் தேடும் காதலனே வரக்காணோமே-தோழியே
என்னுயிர் என்னுள் இல்லாததைப் போலவே ஆனதே

மழைத்துளியே கேட்டிடவந்தாயோ?!

கேட்டிடவந்தாயோ?--மழைத்துளியே
கேட்டிடவந்தாயோ?-காதலனே அவன்
வாராது வந்த இந்த
கார்காலம் வரையிலுமே
காத்திருந்ததோ? காதலி என்னுயிர் என்று
கேட்டிடவந்தாயோ?--மழைத்துளியே
கேட்டிடவந்தாயோ?

இழுத்து மகிழ்ந்திடும் மழலலையைப் போலவே-!

காந்த்ளும் முல்லையும் குவளையோடு கட்டிய
பூமாலை போலவே
தளிரினும் மெல்லிய அவளின் மேனியை-கூடி
தழுவியே கலப்பதும் பேரின்பமே-சிறு
கணினியை இயக்கத் தெரிந்திட வில்லை என்றாலுமே-அதை
இழுத்து மகிழ்ந்திடும் மழலலையைப் போலவே-

குணக்குன்றே கொன்றைமலரே!

வருத்துகிறதே என்னை எனக்கு நீசெய்த சத்தியங்களே-தோழி
மணங்கொள்ள - நீ எப்போது
மனங்கொள்வாயோ?
கண நேரமும் மனம்முழுவதுமே- நீயே எப்போதும்
குணக்குன்றே கொன்றைமலரே

அன்புஓவியம் இமைத்திரையினிலே!

வருவான் வருவான் ஆசைத்தலைவன் விரைவினிலே
வரைவான் வரைவான் அன்புஓவியம் இமைத்திரையினிலே
பொறுத்திடு பொறுத்திடு கண்ணே பொன்னே
பூத்திடும் பூத்திடும் காதல் பெண்ணே
எனக்கும் விருப்பம் அவனுக்கும் விருப்பம்
என் அவன் குடும்பமும் நமக்கும் விருப்பம்
இதில்பழி போடும் ஊருக்கு என்ன இளப்பம்?
புறம்பேசும் ஊரென்ன? பேரென்ன?உலகென்ன?யாரென்ன?

காதலி எனக்குமட்டும் தானோ!

காதலனே நீசென்ற தூரதேசத்திலே
மயக்கும் மாலைகளும் இல்லையோ?
கலக்கும் தனிமை -துயரமும்தான் இல்லையோ?
காதலி எனக்குமட்டும் தானோ
மாலைகளும் தனிமைகளும் தண்டனை தந்ததோ?

ஆழிப் பேரலையாய் அன்புக்காதலே!

காதலனே உனது
காதலே நள்ளிரவு மழையாக
மறைந்துபோகும் பகலினிலே
காதலி எந்தனுக்கோ
ஆழிப் பேரலையாய் அன்புக்காதலே

பேரரருவியாய் தொடர்கிறதே

காதல் மலர்ந்து மணந்தன சுவாசங்களே!

செம்மண் நிலத்தினிலே பெய்த மழை போலவே
விழுந்து கலந்தன நெஞ்சங்களே
எழுந்து நிமிர்ந்தன நேசங்களே-காதல்
மலர்ந்து மணந்தன சுவாசங்களே

வாகை நெற்றுகளின் பெருஞ்சத்தம் ஏந்திய வெங்காற்று வீசுகையில்!

வாகை நெற்றுகளின் பெருஞ்சத்தம்
ஏந்திய வெங்காற்று வீசுகையில்--என் மச்சானே
மலைவழி போகுறானே-என் ஈரக்
குலைமொழி அறியாமலே
சிலையாகிப் போனானோ?-எதற்கும்
விலையாகி விட்டானோ?
மெல்லிய இதயத்தின் இசையோடு-இள
மென்சூட்டு மார்பினிலே துயிலவதையே விட்டுவிட்டு
மலைவழி போகுறானே-என்மச்சானே
என் ஈரக்
குலைமொழி அறியாமலே

சுத்துதடி என்காதல் நேசமே தொத்துதடி என் ஆசை தேசமே!

எதையும் அறியாமலே
உறங்கித் தொலைக்கிறதே
இந்த பாழாப்போன ஊரு
அடிசுழலும் வாடைக் காற்றினிலே
சுத்துதடி என்காதல் நேசமே
தொத்துதடி என் ஆசை தேசமே

என்மேனிப் பசலையே!

கன்றும் உண்ணவில்லையே-ஒரு
கலத்திலும் சேரவில்லையே-அந்த
நிலத்தில் சிந்திய பாலினைப் போலவே-தலைவி
என்மேனிப் பசலையே
எனக்கும் பயனில்லையே
இன் தலைவனுக்கும் பயனில்லையே
என்மா நிற அழகினையே
அந்த பசலையே
உண்கின்றதே தின்கின்றதே கொல்கின்றதே

இந்த உலகமும் நம்பிடுமோ? தோழியே!

கனவில் அல்ல களவில் மணந்தான் காதலனே-அவன்
மணக்கும் வேளை எவரும் இல்லை சாட்சியே
மணந்த அவனே சாட்சியானான் தோழியே
ஓடை நீரில் ஆரல்மீன் பார்க்கும்
ஒரு நாரையும் சாட்சியானதே தோழியே
அந்த நாரையும் சாட்சிசொன்னால்
இந்த உலகமும் நம்பிடுமோ? தோழியே

என்னுடன் எழுந்துவா என் நெஞ்சே

தனிமைக்கு துணைகண்ணீர் ஆகாது
என்னுடன் எழுந்துவா என் நெஞ்சே
இனிமைக்கு தனிமை அணை சேராது
இளமைக்கு ஒருமைமாற்றும் போதாது

கவ்வியது மீனல்ல கண்ணின் மணியே!

கனிந்து விழுந்தாய் காதல் தலைவியே
கவ்வியது மீனல்ல கண்ணின் மணியே
உன்னைத் தலைவன் அவனா? பறித்தான் -இல்லை காதல்
உள்ளம்தானா? -அடி என்னவாய்-- நீயும்
துள்ளலாட்டம் போடுகின்றாய்--அடி என்னடி
பொம்மலாட்டம் ஆடுகின்றாய் --அடி
என்னிடம் அது என்ன? வீராப்பு?

Saturday, June 13, 2009

என்னாளும் மாறாத அன்பென்னும் பூந்தென்றலே!

என்னுயிருக்கு அமுதினையே
எதிரினில் நானும் கண்டேனே
இன்னுயிரே செந்தமிழே
உண்மையின் உள்ளொளியே
என்னாளும் மாறாத
அன்பென்னும் பூந்தென்றலே
உள்ளத்து ஆனந்தகனியே
உலகத்து பேரின்பமே
மலர்விழி கலந்ததுவே-என்
உள முழுதும் நிறைந்ததுவே

அந்த ஆசை மாமனுக்கு ஆர்சேதி சொன்னாக?

இந்த பட்சிகளுக்கெல்லாமே
ஆர் சீட்டு எழுதி அனுப்பினாக?-இந்த
ஆலமரமே ஆலமரமே-இந்த
ஆலமரமே ஆலமரமே
இங்க பழுத்து இருக்குதுனு
அந்த ஆசை மாமனுக்கு
ஆர்சேதி சொன்னாக?-இந்த
அத்தைமக ரத்தினமே
அவனுக்காக காத்து கிடக்கிறேனு?

Friday, June 12, 2009

நேர்வழியே நேர்வழியே!

நேர்வழியே நேர்வழியே ஒழுக்கத்திற்கு துணையாகும்
நியாயங்கள் வெலவதற்கு முறையான வழியாகும்

காசுக்கே வாக்கினை விற்கின்ற தேசத்திலே !

எந்த முயற்சியும் எடுக்காத மனிதனுக்கோ?
எவராலும் என்னாளும் உதவிகளில்லை-வாழ்வினில்
நம்பிக்கை இல்லாத மக்களுக்கோ -
நல்ல அரசு அமைப்பதற்கோ அருதையில்லை இல்லையே-காசுக்கே
வாக்கினை விற்கின்ற தேசத்திலே நேர்மை , நியாயமெல்லாமே-சுடு
காட்டினிலே எரிகின்ற துர் நீராக நாறி நாசகாடாயிடுமே!

அதிலே இருக்குதடா வாழ்க்கையின் சூட்சுமமே!

உன்னைத்தவிர உன்னைத்தவிர யாருமுனக்கு
என்னாலும் அமைதிதந்திட முடியுமா? இந்த உலகிலே
உனக்குள்ளே இருக்குதடா? ஞானதீபமே
அதையே புரிஞ்சிகிட்டா -அதிலே
இருக்குதடா வாழ்க்கையின் சூட்சுமமே

என்றும் போராட எல்லோருக்கும் குணமிருந்தால்!

வாதாட பலருக்கும் தெரிந்திடுமே-ஆனாலும்
உரையாடவோ சிலருக்குத்தான் கைவருமே-என்றும்
போராட எல்லோருக்கும் குணமிருந்தால்
வாழ்வோடு வசந்தங்கள் சொந்தமாக்கிடுமெ

எந்த அண்டத்தையும் வலம்வருவேனே!

அன்பு நிறைந்த இன்சொல்லே உன்னாலே
அந்த இரும்புக் கதவென்ன? திறந்திடுவேனே-எந்த
அண்டத்தையும் வலம்வருவேனே

சமூக போராளியாவான் -!

வாய்ப்பினை எதிர்பார்க்காமலே-உண்டாக்கி
வாழ்கின்றவனே அறிஞனாவானே
அடிமைத்தனமும் ஒருவிதமான
மூடத்தனமே-எந்த
மூட நம்பிக்கையிலும் முடங்கிகிடக்கும்-சமூகத்தினையே
விழித்தெழச் செய்பவனே நல்லோனாவான் - சமூக
போராளியாவான் -

Wednesday, June 10, 2009

மனிதர்கள் மூட நம்பிக்கைக்குள் !

தேய்பிறை நிலவே
அண்டவெளியின்
அரைவட்ட அரிவாளே- நீயும்
தேய்ந்தபோது தேய்பிறை என்று -
ஏனோ?
மனிதர்கள் சோர்ந்து போகிறார்கள்?
இயற்கையின் மாற்றத்தை ஏன்?
மனிதர்கள் மூட நம்பிக்கைக்குள்
முட்டாள் தனத்தில்
ஆட்படுத்துகிறார்களோ?

மின்னிப் பறந்திடும் மண்ணில் மின்னிடும் மின்மினிப் பூச்சிகளா!!

மின்னிப் பறந்திடும்
மண்ணில் மின்னிடும்
மின்மினிப் பூச்சிகளா!
கண்ணில் கலந்திடும்
நெஞ்சில் அலைந்திடும்-காதலை தந்திட்ட-என்
அன்பு காதலனைக் கண்டீங்கீளா?-கண்டாலே உன்
அன்பு காதலி இங்கே மாலை மயக்கத்திலே
துன்பம் கொண்டாள் என்று எடுத்து சொல்வீங்களா?

ஏழைகளின் வீட்டினிலே!

நீராகாரமே -எங்க
பேராகாரமே-இங்க
ஏழைகளின் வீட்டினிலே
என்றென்றும் அதிகாலையிலே இள நீராகாரமே
எக்காலமுமே மலிவானதொரு நல் நீராகாரமே

கம்மங்கூழே கேப்பைக்கூழே கேப்பைக்கூழே கம்மங்கூழே!

கம்மங்கூழே கேப்பைக்கூழே
கேப்பைக்கூழே கம்மங்கூழே-எங்க
கனிவான கூழே-எங்க
கிராமத்துக் கூழே-எங்க
ஊருக்கு பீரே
அறுக்காணி அறுத்துப்போட
அத்தைமக குத்திப்போட
அம்மான்மக வேகவைத்தே
ஆறு நாளு ஊறினாலும்-உன்னைய
அசராம குடிக்கலாமே

காதலின் அன்பு என்று சொன்னாலே!

யாது மனம் நினைத்ததோ?
அந்தமன நினைவுக்கு நினைவாகவே
உள் நின்று உணர்த்துகின்ற
உண்மை உள்ளொளியே-காதலி உன்
உள்ளத்தில் ஒளிந்திருப்பதையே
உன்காதலன் நானறிந்து கொண்டேனே!-அதுவே
காதலின் அன்பு என்று சொன்னாலே
அதுவும் மிகையாகுமோ? -என்றும் நமக்கு
புன்னகையாக்குமோ?- நட்பின்
துணையாக்குமோ?-வாழ்வின்
இணையாக்குமோ?-ஆசை
அணையாக்குமோ ? -சமூக
கனிவாக்குமோ?-தோழமை
உணர்வாக்குமோ?சமத்துவ உறவாக்குமோ?

மக்கள் ஜன நாயக புரட்சியாளனுக்கோ மக்கள் நலமே பார்க்குமிடமெல்லாமே!

காமாலை கண்ணனுக்கு
காண்பதெல்லாமே மஞ்சளடா!
பொய்பேசும் பொய்யனுக்கோ
பார்போரெல்லாமே பொய்யரடா!
குற்றம் செய்யும் மனிதருக்கோ!
எல்லோருமே குற்றவாளியடா!
ஈய்யாத கஞ்சனுக்கோ
யாரைப் பார்த்தாலும் பேராசைக் காரனடா!
காமுகனின் கண்களுக்கோ
கண்டவரெல்லாமே காமுகரடா!-தனியுடைமை
ஏமாற்றும் குணங்கொண்டோனுக்கோ!
காணுமிடமெல்லாமே அதிகாரவர்க்கமடா!
மக்கள் ஜன நாயக புரட்சியாளனுக்கோ
மக்கள் நலமே பார்க்குமிடமெல்லாமே

மனதின் உண்மை தன்மை மெய்ஞானமே-அதை தினமும் தேடிதேடி அலைந்தேனே!!

காலத்தின் கோலமோ?
கற்பனை இந்திரஜால
மாயா பஜார் வித்தையோ?
மனதின் உண்மை தன்மை மெய்ஞானமே-அதை
தினமும் தேடிதேடி அலைந்தேனே!

உதைபடும் பந்தானேன் - நான்
சின்னஞ்சிறியோர் செய்திட்ட
காற்றாடியாய் அலைபாய்ந்தேனே
கடல் அலையின் துரும்பானேனே
காற்றில் பறக்கும் பஞ்சானேன்--மத்தளம்
போடுகின்ற தாளத்து அடியானேனே-தறி
ஆட்டுகின்ற பாவைப் போலவே-படாத
பாடுகளே பட்டு வாடுகின்றேனே!
காலத்தின் கோலமோ?
கற்பனை இந்திரஜால
மாயா பஜார் வித்தையோ?
மனதின் உண்மை தன்மை மெய்ஞானமே-அதை
தினமும் தேடிதேடி அலைந்தேனே!

திகிரிச் சக்கரம் போலவே!

திகிரிச் சக்கரம் போலவே
மனமும் சுழல்வது ஏனோ?-என் மனமே
என்வசமே இல்லையே
கண நேரத்தில் ஆயிரமாயிர மாகவே
எண்ணங்கள் தோன்றுகின்றனவே
அலைபாயும் மனமானதே
சற்றே கண்மூடியே
ஒரு நிலை கொள்ளாமலே
மனதில் கோடிகோடி போராட்டங்களே-ஏனோ
எழுந்து விழுந்து எழுந்து உழல்கின்றதே
மண்ணாசை பொன்னாசை காம ஆசை
சிம்மாசன ஆசை பேராசை-உலக
இன்ப ஆசை-இப்படி
திகிரிச் சக்கரம் போலவே
மனமும் சுழல்வது ஏனோ?-என் மனமே
என்வசமே இல்லையே
கண நேரத்தில் ஆயிரமாயிர மாகவே
எண்ணங்கள் தோன்றுகின்றனவே

நெஞ்சம் நிமிர்த்து வீர நடைபோட்டு நடந்திடு!

மண்புழு மண்ணை மேலும் கீழும்
தோண்டிய போதும்-அது
எப்போதாவது சோர்ந்ததா?
தூக்கணாங்குருவி கூட்டிற்கும்
பேரெறும்பின் புற்றுக்கும்
சிலந்தியின் வலைதனுக்கும்
தேனீக்களின் கூட்டிற்கும்
எத்தனைமுறை அழிவு வந்தாலும
மீண்டும் மீண்டும் அதைக்கட்டி
மேலும் அவைகள் பெருமிதத்துடன்
வாழ்க்கைதனை தொடரவில்லையா?
அதை அறிந்தும் மானுடமே! நீயும்
ஏனின்னும் தோல்விதனை தழுவியபோதும்
இடிந்து அதிர்ந்து போய்விடாதே?
தோல்விதனை படியாக்கும் பக்குவத்தை
தொடர்ந்து கைக்கொண்டு வெற்றிக்கனியாக்கு!
நெஞ்சம் நிமிர்த்து வீர நடைபோட்டு நடந்திடு!

Wednesday, June 3, 2009

இன்று நீயும் மறந்ததும் ஏனோ??

முத்துசுடர் முகம் முற்றும் சிவந்தது ஏனோ?
முல்லைமலரே தேன்புன்னகை கொண்டுவந்தாயோ?
கத்தும் குயிலினை இதழினில் வைத்திருந்தாயோ?
காத்து கிடந்ததை இன்று நீயும் மறந்ததும் ஏனோ?

எந்தன் விழிகளுக்கே!

உந்தன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
எந்தன் விழிகளுக்கே
எட்டா உயர்வானிலே
உந்தன் அமுத தமிழ் சொல்லினையே
எந்தன் செவிகள் கேட்க மறந்தனவோ?
சக்கரம் போலிருள் வானில்-முற்றும்
சாய்ந்தது சூரியவட்டமே
எக்கரை போனாலும் -உன்
சக்கரை பேச்சினை
அக்கரை கேட்டிடுவேனோ?

கருவண்டு பாடியதோ?

வானந்தான் பாடியதோ?
வானிலவு பாடியதோ?
கானக்குயில் பாடியதோ?
கருவண்டு பாடியதோ?

Monday, June 1, 2009

இன்று என்பது தானடா கையில் உள்ள பணங்காசாகும்

நேற்று என்பது
செலவான காசோலையாகும்
நாளை என்பது
கனவான கடன்பத்திரமாகும்
இன்று என்பது தானடா
கையில் உள்ள பணங்காசாகும்

நீ புரட்சியோடு பேசும் போராளியா?

நீ மனதோடு பேசும் புத்தகமோ?
நீ இதயத்தோடு பேசும் நண்பனோ?
நீ ஆன்மாவோடு பேசும் மனித நேயனா?
நீ கண்ணோடு பேசும் காதலனா?
நீ புரட்சியோடு பேசும் போராளியா?
யார் நீ?

மண்ணில் உன்முயற்சிதான் உன்வாழ்வின் அஸ்திவாரமே

மண்ணைமுட்டி மரங்களாகும் விதைகளே-உலகினிலே
மண்ணிலோடிய மழைத்துளிகளும் வெள்ளமாகுமே-இளைஞனே
மண்ணில் உன்முயற்சிதான் உன்வாழ்வின் அஸ்திவாரமே
என்றுமுந்தன் நம்பிக்கை உயர்வாக்கிடும் மறந்திடாதே?

வந்தது வந்தது -புரட்சியின் சுறுசுறுப்பில் பொதுவுடைமை வந்தது

வந்தது வந்தது -சூரியனின்
சுறுசுறுப்பில்
விடியல் வந்தது
வந்தது வந்தது -கடலின்
சுறுசுறுப்பில்
அலையும் வந்தது
வந்தது வந்தது -காற்றின்
சுறுசுறுப்பில்
சுவாசம் வந்தது
வந்தது வந்தது -காதலரின்
சுறுசுறுப்பில்
காதல் வந்தது
வந்தது வந்தது -புரட்சியின்
சுறுசுறுப்பில்
பொதுவுடைமை வ்ந்தது
வந்தது வந்தது -மரங்களின்
சுறுசுறுப்பில்
தென்றல் வந்தது
வந்தது வந்தது ஆசானின்
சுறுசுறுப்பில்
கல்வி உயர்ந்தது
வந்தது வந்தது -மாணவரின்
சுறுசுறுப்பில்
எதிர்காலம் எழுந்தது

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- இங்கு இல்லாமைஇல்லாமல் எல்லாரும் நலம்பெறவே வேண்டும்

தூய்மை மனத்தில் வேண்டும்
வாய்மை செயலில் வேண்டும்
எளிமை பதவியில் வேண்டும்
செழுமை நாட்டில் வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்-
இங்கு இல்லாமைஇல்லாமல்
எல்லாரும் நலம்பெறவே வேண்டும்

வாழ்க்கை என்பது வட்டமடா!

விதைக்குள் அடங்கிய விருட்சங்களே-அந்த
விருட்சத்தில் விளைந்த்டும் விதைகளே
வாழ்க்கை என்பது ஒருவட்டமடா-அதை
வாழ்ந்து பார்ப்போம் நம்பிக்கையுடன் உலகிலடா!

பிரண்ட்சிப் பிரண்ட்சிப்

முகத்தை துடைக்க
கர்சிப் கர்சிப்
இதயத்தை துடைக்க
பிரண்ட்சிப் பிரண்ட்சிப்!

உதிரப் போவது தெரியாமலே!

அடுத்த வினாடியில்
அடிக்கும் காற்றில்-தானும்
உதிரப் போவது தெரியாமலே
மலர்ந்த பூக்கள்
உதிர்ந்த பூக்களை
பார்த்து சிரிப்பதேனோ?

மனிதனோ அவனுக்காக ஓடுகிறானே-!

ஓடும் நதியின் ஓட்டமும்
ஓடும் மனிதனின் ஓட்டமும் -உலகினிலே
வேறுவேறு ஆகுமடா!
மனிதனோ அவனுக்காக ஓடுகிறானே- நதியோ
மனிதனுக்காக அனுதினமும் ஓடுகிறதே

காலத்தை நீமதித்தாலே!

நமக்கு மற்றவர்களின் தவறுகளே ஆசாண்களாம்-
நாம்செய்கின்ற தவறுகளோ
நமக்கே நல்ல பாடங்களாம்
காலத்தை நீமதித்தாலே-அது உன்னையே
வான் அளவு உயர்த்திடுமாம்

வாழ்விலொருகையாம் நம்பிக்கையாம்!

கைகை கையாம் நாட்டிலொருகையாம் இலங்கையாம்
கைகை கையாம் ஊரிலொருகையாம் சிவகங்கையாம்
கைகை கையாம் மரத்திலொருகையாம் முருங்கையாம்
கைகை கையாம் ஆற்றிலொருகையாம் கங்கையாம்
கைகை கையாம் அண்யிலொருகையாம் வைகையாம்
கைகை கையாம் மாதத்திலொருகையாம் கார்த்திகையாம்
கைகை கையாம் மலரிலொருகையாம் மல்லிகையாம்
கைகை கையாம் சந்தோசத்திலொருகையாம் புன்னகையாம்
கைகை கையாம் இலக்கியத்திலொருகையாம் நான்மணிக்கடிகையாம்
கைகை கையாம் உடன்பிறப்பிலொருகையாம் தங்கையாம்
கைகை கையாம் யானையினொருகையாம் தும்பிக்கையாம்
கைகை கையாம் வாழ்விலொருகையாம் நம்பிக்கையாம்