Popular Posts

Saturday, January 31, 2009

சமத்துவ உலகே


உன்னைப் பார்க்காத பொழுதெல்லாம்


புலராத பொழுதே


உன்னிடம்


பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே-அன்பே


தேனே பாலே திகழொளியே -என்


சித்தத்துள் தித்திக்குந் தேனே


இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காத-இன்ப


சுமையே -வாழ்க்கைத் துணையே -என் இணையே


அன்பு அணையே -சமத்துவ


பண்பு உலகே

காதல்


என்னுள்ளங் கவர்கள்வன்

என்னைத் தேடிவந்த வேளை

அந்தி நேரம் அந்த சோலையிலே

புன்னை மரங்கள் உதிர்த்த பூக்களும்,

என்னிடம் சொல்லவந்தது என்ன?

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காத-காதல்

ஆற்றின்ப வெள்ளமோ?

அன்பை


காதல்

பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவி--உன்னை

இரவும் பகலும் நினைத்தேன் நெஞ்சில்

அந்திமலர்த் தந்தமுகம் முந்திவரும் புன்னகையில்

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் தேவி

ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றே தேவி;

ஒன்று மேலானால் ஒன்று ஒளியும்

ஞானம் மேலானால்

ஆணவம் ஒளியும்,

ஆணவம் மேலானால்

ஞானம் ஒளித்து நிற்கும்

அன்பே பண்பே அறிவே நேயமே

அறிவாயா? புரிவாயா? உண்மை அன்பை

Thursday, January 29, 2009

மூங்கில்


காதலி உன் மூங்கில் முளைபோன்ற

பேசும் வெண்பற்களின் செவ்விதழ்

புன்னகையாலே

என்னை நீயும் துன்பம் செய்வதேனோ?

காதலி


உன்னையன்றி காதலி அவளுக்கு

துணை வேறு உண்டோ?மிகுந்த

அன்பினாலே ஊடல்கொண்ட

அவளன்பை உணராமலே-காதலன் நீயும்

துணையறிந்து கூடல் கொள்ளாமலே-காதல்

அணைகடக்க வைக்காமலே

அமுத நேஞ்சைத் தருவாயே

உன்னையே நம்பிவரும் காதலியே

உன்னிடமே வேறென்ன? கேட்டாள்?

பொன்னையொன்றும் கேட்கவில்லை

பொருளொன்றும் கேட்கவில்லை-வாழும்

புன்னகை இன்பம் தானே கேட்கின்றாள்

ஏனடி?நெல்வெளஞ்ச வயற்காட்டுல-இடையில


தான்வெளஞ்ச காட்டுமல்லியே -பெரிய இலைக்


காட்டுமல்லியே-தலைய


ஆட்டும் மல்லியே-அழகு


காட்டும் மல்லியே--காதலி


பார்வை சொல்லியே--ஏனடி


நீயும் கொல்லுறே

Wednesday, January 28, 2009

காதலும்


காதலும் தரவில்லை

கண்பார்வையும் வீசவில்லை

என்றாலும் அவனையேனோ?

பலமுறை திரும்பவுமே

பார்த்து மகிழ்கிறதே நெஞ்சு

பழகத் துடிக்கிறதே கொஞ்சி

Saturday, January 24, 2009

அங்கே


அவன் எங்கே? அங்கே

நான் எங்கே? இங்கே

மழைபெய்யும் அவனூரில் அவனங்கே-குவளை

மலர்பசலை முகம்கொண்டு நானிங்கே

மலைப்பாறை ஒற்றைமான் போலவே

மயங்கி நிற்கும் பருவமகள் நானிங்கே

மணமுல்லை பாராததலைவன் அங்கே

பேதமென்ன?


மெய்யான காதலிலே

உன்கனவும் நிச்சயமாய் நனவாகுமே

மதமென்ன?இனமென்ன?மொழியென்ன?-சாதி

வெறியென்ன? நாடென்ன? பேதமென்ன?


நீள்கின்றதென்னவோ


அன்பே உன் இதயத்தை

தாவிப் பிடிக்க

காதலியே

என்கரங்கள் பிரபஞ்ச அளவு-- நீளம்

நீள்கின்றதென்ன்வோ

இள


இள நெஞ்சே

உன்னை நெஞ்சாரத்தழுவி

உன்குறை கேட்க--என்காதலி

அவள் வந்தால்- நீயும்

கேட்பாயா? அன்பு நெஞ்சே

ஆறுதல் கொள்வாயா?

Wednesday, January 21, 2009

காதலியே


காதலியே

அன்புக் காதலியே

நீயே எந்தன் மாற்று

நீயே என்னை தேற்று

நீயே என்னை நடத்து

நீயே என்னை நிறுத்து

நீயே அறிவின் ஊற்று

நீயே அன்பின் பாட்டு

நீயே அழகின் கூட்டு

நீயே புரட்சி அரசு

நீயே புதுமை முரசு

நீயே சமத்துவ தத்துவம்கவிதை


]

கவிதையே என்னையொரு

கவிதை எழுத சொன்னபோது-- நானுமொரு

கவிதையாகி கவிதை சொன்னேனே--அப்போது

கவிதையோடு கவிதை சேர்ந்ததே--எங்கும்

கவிதை எதிலும் கவிதை ஆனதே-

Monday, January 19, 2009

ஈழமண்ணிலே


தேனிலும் இனிமையே

தெவிட்டாத அமுதமே

தேடிக்கிடைக்காத

ஒப்பற்ற செல்வமே--தமிழ் ஈழமே

கதவு திறந்தது

கட்டுக்கள் உடைந்தன

சுதந்திர மூச்சே

உரிமை வீச்சே

வாழ்வா? சாவா?-ஈழமண்ணில் கடும்போர்

ஏ உலக நாடுகளே--

காசாவைத்தான் பார்ப்பாயா?--உலகமே

ஈழத்தை பார்க்கமாட்டாயா?

ஒருகண்ணில் வெண்ணை

மறுகண்ணில் சுண்ணாம்பா?

உலகமக்களே நீங்கள்-ஈழத்தில்

அமைதி திரும்பவைக்க மாட்டீரா?

மாற்றாந்தாய் மனோபாவத்தை

மாற்றிடத்தான் மாட்டீரா?

நம்


வீட்டுக்குள் இருக்கும் சன்னல்கூட- நம் மனதை


விசாலமாக்கும்


வானில் தோன்றும் நிலவும் கூட- நாம்


வாழும் சமத்துவத்தை பறைசாற்றும்


Wednesday, January 7, 2009

காலம் தூரமில்லை


காலம் போய்விடாது

கவலை தொடர்ந்துவராது--வசந்த

காலம் தூரமில்லை--என்றும்

கண்ணீரும் பாரமில்லை-- நம்பிக்கை

காணும் இன்ப எல்லை--வேற்றுமை

களைய துன்பமில்லை--மனித நேயம்

கண்டால் துயரமில்லை-இனவெறி

கொண்டால் உலகில்லை--ஒற்றுமை

காணாமல் வாழ்வில்லை