Popular Posts

Friday, December 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே! தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

எவ்வளவு பெரிய மக்கள் நெரிசலிலும்
எவ்வளவு நிறையக் கூட்ட கும்பலிலும்

எனக்கென்றே ஒரு தனிப் பார்வை
எனக்கென்றே உன் இதயத்திலே ஒரு தனியிடம்

எப்போதுமே உன்னிடத்தில் மிச்சம் இருக்குமே என் தோழி!

நிலவைத்
தொலைத்த வானம் மெளனமாய்
அழுகிறது போலவே அடிஉந்தன் கண்களில் அது என்ன கண்ணீர்
மழை !

நான்கு பகுதியாகவே ,
பிரிந்து கிடந்தபோதிலும் -இதயமே ,
ஒன்றாக சேர்ந்து துடிக்கிறதே!

கண்கள் நான்காய் தனித்தனியாய் இருந்த போதிலும்-ஒரே காட்சியாகியே
காதலினில் ஒன்றாகவே சேர்ந்து உறவானதே!.

முதல் பார்வைத் துடிப்பினிலே ஆயிரங்காலத்துப் பயிராம்
உயிர் ஒன்று பிறக்கிறதே!-உன்

ஒவ்வொரு அன்புப் படிப்பிலும்
உண்மைக் காதல் ஒன்று வாழ்கிறதே!

துன்பத்திலும்,
இன்பத்திலும்,காதலன்பே
அது இனிய அனுபவத்திலும் அனுதினமும் புதிய
உணர்வுகளுடனும் துடிக்கிறதே..

இதயத்தின் அந்த துடிப்பானதொரு அன்புச்
சத்தம் மட்டும் ஆண்டாண்டு காலமாகவே ,
உணர்தலின் நேச தேடலிலே காதில் ரீங்காரமாகியே
கேட்கிறதே!.




















Saturday, December 25, 2010

ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்ப்போடுதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பார்ப்ப்போடு துவங்கிடுதே
அதுவும் ஒரு நல்ல அனுபவத்தோடு முடிகின்றதே!வாழ் நாளின்
ஒவ்வொரு நொடியும் நமக்களித்த கொடையல்லவா?-என்றும்
உண்மை வாழ நாமும் உறுதிகொள்வது நம் கடமையல்லவா?








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஈசல் குஞ்சுகளே !

தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!-தம்முயற்சியினாலே!
தன்னம்பிக்கையாலே !
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!-மானிடர்க்கோ!-எத்தனைமுறை
வீழ்ந்தாலும் எழுந்து நிற்கும் சூட்சுமத்தை சொல்லித் தந்தனவே!

அந்திவேளை இது
ஆரஞ்சு ஒளிக்கோடுகளாய்
கூட்டம் கூட்டம் கூட்டமாய் இறகுகள் மினுங்கவே!
நூற்றுக் கணக்கினில் ஈசல் குஞ்சுகளே!-சுயமாய்
தாங்களும் பறந்திடவேண்டி
ஆகாயம் தேடிப் பறந்து போயினவே!-ஆனாலும்
பூமிதன்னில் சோர்ந்து வீழ்ந்தனவே!
சோர்ந்து வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிப் பறந்தனவே!
தானொரு நாள்வாழ்ந்தாலுமே-ஈசல் குஞ்சுகளே
தளராதத் தத்துவமாய் வாழ்ந்தனவே!
மீண்டும் மீண்டும்
ஓடிஓடிப் பறந்தனவே!












தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்மனசே என்மனசே!

என்மனசே என்மனசே!
ஒத்தையடி பாதையையும் மறந்துட்டியா>--அந்தகுளிர்

வேப்பமர நிழலையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னத்தமக போட்டுவச்ச அழகான
பரங்கிப்பூ வெச்சபச்சரிசி கோலத்தையும் மறந்துட்டியா?>

என்மனசே என்மனசே-என்னாசை
அத்தமகள காணப்போன கொல்லையிலே
தும்பப்பூவ உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சியையும் மறந்துட்டியா?

என்மனசே என்மனசே
காலமெல்லாம் காதுல ரீங்காரம் பண்ணுகின்ற- நம்ம
நாட்டுப்புறப் பாட்டையுந்தான் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே-
நானொருபக்கம் அவளொருபக்கம் உச்சிகுளிரும்
ஓடை நீரு குளியலையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அந்தக் குளத்து நீருல மழைவிழுகின்ற
அழகும் கொப்புளச் சத்தத்தையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
ஆடும்கம்பால் கொல்லைவிட்டுப் பறந்திடும்
காட்டுப் பறவைகளின் குரலோசையும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
அசையும் சிலந்தி வலையிலும் அழகுசெய்யும்
இளம்பனித் துளியைப் பார்த்ததையும் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
கருப்பசாமி கோவில் திருவிழாக் கொண்டாட்டம்-அந்த
வழுக்கை மண்டைத் தாத்தா கிண்டலுந்தான் நீ மறந்துட்டியா?
என்மனசே என்மனசே
என்னதான் வருமானம் என்றாலுமே இழந்துபோன-பெரிதான
அந்தகிராமத்து சுகங்களையும் தான் நீயும் மறந்துட்டியா?
என்மனசே என்மனசே!












Thursday, December 23, 2010

!தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் தேனமுதையே”

வெள்ளை நிறக் காகிதத்தில் ஒரே ஒரு வரியினிலே ஒரு கவிதை எழுதினேனே!!அதுவே
காதலியே உந்தன் பெயரானதோ?-இல்லை

உள்ளமிரண்டிலும் வெள்ளமான காதல் தேனமுதையே குழைத்து

நம்மிருவருக்கும் இன்பத்தின் எல்லையினை உணர்த்திய காவியமானதோ?


தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நெஞ்சினிலே!

மண்ணினைத் தொடாத விழுதாம் அவளின் கூந்தலிலே
அந்த காதல் ஒற்றை ரோஜாவே
ஊஞ்சலாடுகிறதே!
அன்பினையே ஒரு புன்முறுவலிலே எடுத்துச் சொல்லியே
ஆனந்த நடனத்தையே நெஞ்சினிலே ஆட்டுவித்ததே!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலாம் ஒரே தூண்டிலிலேதமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

கண்ணாம் இரு மீன்கள்
மாட்டிக் கொண்டனவோ!
ஒரே தூண்டிலிலே -காதலாம்
ஒரே தூண்டிலிலே!
நெஞ்சாம் நேசத்திலே
நெருக்கும் பாசத்திலே
சிக்கிக் கொண்டனவோ!
அன்புகொண்ட இதயங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒருதலைக் காதலே!

அவன் ஒருதலையாகவே !
கானலுக்குள்
மீன் பிடித்தானே!
அவள்
கைகளுக்குள் அகப்படாத குரவைக் குஞ்சாகவே
கண்களுக்குள் சிக்காத புள்ளிமானாகவே துள்ளி ஓடிவிட்டாளே!
காதலிலே இருவருக்கும் கருத்தொருமித்திட வேண்டுமே!
கருத்தொற்றுமை இல்லையென்றால் அதுகாதலில்லை ஒருதலைக் காதலாகுமே!
தாடி வளர்த்தாலும் தத்துவம் பேசினாலும் ஓடி அடையாது ஒருதலைக் காதலே!!
தன்னுயிரினை மாய்த்துக் கொண்டாலும் கடையேறிடுமோ ஒருதலைக் காதலே!

தமிழ்பாலா-த/காதல்/கவிதை/தத்துவம்-மேகம் அழுகிறது.!

மண்ணில் வரதட்சணைக் கொடுமைகண்டு

மேகம் அழுகிறது....மழையாகவே


ஒரு சோக இலக்கியமாகவே !


பட்டுப்புடவையிலே சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சிகளே ஒரு துன்ப
ஓவியமாகவே அழுகின்றனவே!.
இனிக்கும் பாகாகவே சுவையாக்கும்
ஆலையினிலே அரைபட்ட ..
கட்டுக் கரும்புகளே ஒரு சோக
இலக்கியமாகவே தவிக்கின்றதே!



த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-எங்கோ பிறந்த இலக்கியமே ,!

எங்கோ பிறந்த விதையும், நிலமும்,
கலந்தபோதோ வெள்ளாமையிலே!...

எங்கோ பிறந்த நதிகள்,
கலப்பதென்னவோ கடலினிலே!...........

எங்கோ பிறந்த இலக்கியமே ,
கலந்ததென்னவோ வாசகனின் உள்ளந்தன்னிலே!...

எங்கோ பிறந்த தேனும் பாலும்
கலப்பதென்னவோ சுவையினிலே!.
..

எங்கோ பிறந்த நானும், நீயும்,

\\\கலந்துவிட்டோமே நம் திருமணத்திலே!


த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-எங்கோ பிறந்த இலக்கியமே , த மிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-

எங்கோ பிறந்த விதையும், நிலமும்,
கலந்தபோதோ வெள்ளாமையிலே!...

எங்கோ பிறந்த நதிகள்,
கலப்பதென்னவோ கடலினிலே!...........

எங்கோ பிறந்த இலக்கியமே ,
கலந்ததென்னவோ வாசகனின் உள்ளந்தன்னிலே!...

எங்கோ பிறந்த தேனும் பாலும்
கலப்பதென்னவோ சுவையினிலே!.
..

எங்கோ பிறந்த நானும், நீயும்,

\\\கலந்துவிட்டோமே நம் திருமணத்திலே!


Friday, December 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-/-”:கடைத்தேங்காய்க் கடைகள்”

கடைத்தேங்காய்க் கடைகள் இருக்கின்ற வரையினில்-இங்கு
வழிப்பிள்ளையார்களுக்கு கொண்டாட்டம் தான்!
கையினில் காசு உள்ளவர்கள் எல்லாம் தேங்காய் உடைப்பார்கள்
காசில்லாத ஏழைகளோ! சூடத்தை ஏற்றிடுவார்கள்.
சூடத்தை ஏற்றிடக் கூட முடியாதவர்கள் கைதனைக் கூப்பி
ஆண்டவனைத் தொழுதிடுவார்கள்!
அவரவர் ஆண்டவனை அவரவர் வழியினில்
ஆண்டாண்டுக் காலமாய் தொழுதிடுவார் மக்கள் அனைவருமே!
மனதினை ஒருமுகப் படுத்திடவே முன்னோர்கள் வகுத்திட்ட
வழிமுறைகள் மரபுவழி வழிபாடுகள் ஆயினவே!-ஆனாலோ
மனிதரோ! பலபேதங்கள் கொண்டு மதவெறி கொண்டாரே!
ஒற்றுமைக்கு வழிசொன்ன முன்னோர் வழிவிட்டு
வேற்றுமையில் ஏனோ மனிதர்கள் பிரிந்து கிடக்கின்றாரோ?






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-/-:

Sunday, December 5, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /- அவளுக்கு !

மருதாணியே மருதாணியே - நீயும்
தலையத் தலைய ஆட்டாதடி! -என்னையே
சீண்டித்தான் பார்க்காதடி! -
என்காதலியின் மேனி வழவழப்பாகவே -உன்னையே
அரைச்சுத் தேய்த்துக் குளிக்கச் சொல்லப் போறேண்டி!

கோரைக் கிழங்கே கோரைக் கிழங்கே!
காலையே தீண்டாதே !-என்காதலியாம் கனிமொழியாம்
அவளுக்கு !
காலமெல்லாம் அழகு மெருகு ஏறிடவே!
உன்னைய
தேனுல கலந்து உண்டுவரவே அவளோட
மேனி பொலிவு பெறும் அதனாலே
உன்னையே வேரோட எடுத்திடப் போறேனே!

அருகம்புல்லே அருகம்புல்லே சும்மா சும்மா ஆடாதே!
என்காதலிக்கு முகத்தழகும் கூடிடவே!
உன்னைய நீர்விட்டு நன்றாய்
அரைத்து வெல்லம் சேர்த்து கண்ணே
அனுதினமும் உண்டுவரச் சொல்லப் போறேண்டி!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /- என்னருமைக் காதலியே !

வசீகரமே -
முகவசீகரமே
கொண்டவளே
இனியவளே என்னவளே!
என்னருமைக் காதலியே!-அடி
சந்தனக் கட்டையில எலுமிச்சைச் சாற்றில்
அரைத்து நீயும் பூசி வந்தாயோ?

தேவதையோ?
தென்பாங்குப் பாட்டே!
தென் திசைத் தென்றலே!
உன்முகமோ பிரகாசமாய் மினுமினுக்குதே
-அட நீயும்
கானா வாழையும் மாவிலையும் -சமமாய்
கலந்து காய்ச்சி வடிகட்டி முகத்தில் தடவி
-அரைமணிக்
-காலம் கழித்து கழுவித்தான் நீயும் வந்தாயோ?

அடிச் சித்திரைக் கள்ளியே!
உம்மேனி ஆரஞ்சு மேனியாய்
மினுமினுத்து பளபளப்பது ஏனடியோ?
ஆரஞ்சுப் பழந்தன்னையே நீயும்
அனுதினமும் உண்டுவந்த காரணந்தானோ கூறடி?

காதலியே -உன்
கன்னஞ்சிவந்த காரணம் தெரியும் அது
காதலன் என்னை நீயும் கண்டதினாலே தானே
காதலியே -உந்தன்
கன்னிமேனி சிவந்த காரணம் என்னடி?
அட எஞ்சோடிக் காதலனே!- நான்
வெள்ளரிக்காய்தான் நறுக்கி மஞ்சள அரைச்சு
வேப்பம்பூவ சேத்து என்மேனியில பூசிக்
குளித்து குதித்து வந்தேனே எனதன்புக் காதலனே!

Saturday, December 4, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் --" இலங்கைத் தமிழர்கள் "

சுனாமியில் சுருட்டிச் சென்றவர்கள் எண்ணிலடங்காத மக்கள்- ஆனாலும்
சிங்கள வெறியர்களாலே கொலையுண்ட ஈழத் தமிழ்மக்களோ!
அதைவிட ஆயிரக்கணக்கினில் மாண்டு போனார்களே!
சம உரிமை கேட்டதாலே ஒரு இனமக்களையே அழித்து
சிங்களவெறியர்கள் பேயாட்டம் ஆடி பிணங்களைக் குவித்தார்கள்!
சுனாமியில்
சுருட்டிச் சென்றவர்கள் எண்ணற்றோர்
ஆனாலும் ,அதைவிட
ஈழமண்ணில் ,குருதிச்சேற்றில்
சிங்களவெறியர் களாலே
சூறையாடப்பட்ட
எங்கள்
ஈழத்
தமிழர்கள்
ஏராளமே!





Friday, December 3, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஹைக்கூக் கவிதைப் பறவையே!

ஹைக்கூக் கவிதைப் பறவையே!
தடையிருந்தும் தனி நடையினில்
தனித்துவமாய் வானைக் கிழித்து சிறகடித்துப்
- புதுமையாய்
தாரணியில் தனிவலம் வருகின்ற -இலக்கிய வானத்து
தன்னிரகற்ற ஆதவனே!
ஹைக்கூக் கவிதைப் பறவையே!

உன்னில் நீளமில்லை ஆனால்
உன்னில் ஆழமிருக்கிறதே!
உன்னில் பிரமாணடமில்லை ஆனால்
உன்னில் பிரபஞ்சமே ஒளிந்திருக்கிறதே!

உன்னில் எளிமையுண்டு ஆனாலும்
உன்னில் உண்மையுமுண்டே!!
உன்னுருவமோ சிறிதாகும் ஆனாலும்
உன்கருத்துக்களோ! பெரிதாகும் !

உன்னில் எந்ததேச மொழியும் பின்னிப் பிணைந்திருக்கும்
உன்னில் தேச,இன,மொழி,மத,பாகுபாடின்றி மொழிவளம் நிறைந்திருக்கும் !
உன்னில் புரட்சி இருக்கும், உன்னில் வசந்தம் இருக்கும் ,உன்னில் இயற்கை இருக்கும் !
உன்னில் மக்களின் சுதந்திரம் இருக்கும் ,உன்னில் மக்கள் ஜன நாயகம் இருக்கும்!

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /தமிழே!"

தமிழே நீ தனித்துவம் ஆனதாய்!
-எந்த திசைச் சொல்லையும் ,
-எந்த மொழி வளத்தையும் , எந்த பிரபஞ்ச தத்துவத்தையும் ,எந்த விஞ்ஞான முன்னேற்றத்தையும் ,
-எந்த தேசப் பொருளையும் , எந்த இலக்கியப் புதுமையையும் ,எதையும் உன் சேயாய் ஏற்கும் தாய்மை உள்ளம்
உன்னில் புதைந்து கிடக்கின்றதாலே!





தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

தமிழ்பாலா /காதல் / கவிதை / தத்துவம் / சின்ன சின்ன ஆலவிதைக்குள்ளே !"

சின்ன சின்ன ஆலவிதைக்குள்ளே !
எத்தனை பெரிய ஆலமரமே ஒளிந்திருக்கின்றதே!
சின்ன சின்ன மழலைக்குள்ளே !
எத்தனை எத்தனை தலைமுறைகளே ஒளிந்திருக்கின்றதே!



Monday, November 29, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"சின்னஞ்சிறு குயில்நான்!"

அரண்மனை அந்தப்புரத்தை அல்ல!
உழைக்கும் சமுதாய அந்தப்புரத்தைப் பாடும்
சின்னஞ்சிறு குயில்நான்!
சிம்மாசன சிங்காரத்தைப் பாடும் முகஸ்துதிக் கவிஞன் நானல்ல!
தனியுடைமையாலே !
சீரழிந்த சமூகத்தை சீர்தூக்க சிறப்பாகப் பாடும்
சின்னஞ்சிறு குயில்நான்!
பொதுவுடைமைக்கு
போராளிகளை உருவாக்கும் போர்ப் பாசறையில் புரட்சியைப் பாடும்
சின்னஞ்சிறு குயில்!நான்!





Friday, November 26, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /+-இம்மையில் எல்லோரும் வாழ வழி ""

ஒரு நாள் மலராய் மலர்வேனோ?
உன்கூந்தலில் தேனினை வடிப்பேனோ?
அழகையும் அமுதையும் கலப்பேனோ?
அன்பையும் காதலையும் பெறுவேனோ?
பார்வையில் உலகினைப் படிப்பேனோ?
உன்பருவத்தில் இளமையை அடைவேனோ?
உன்னுயிரினில் உயிரினைக் கொடுப்பேனோ?
உன் துணையினில் புது உலகினைப் படைப்பேனோ?
இம்மையில் எல்லோரும் வாழவழி காண்பேனோ?






தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"உணர்வினில் கலந்திடவே "

நீயும் பேசிட நினைத்தும் மவுனத்திலே பேசாதிருத்தல் போலவே நானும் மவுனத்திலே இருந்திடுவோனோ?
நீயும் பார்த்திட நினைத்தும் என்பார்வைதனையே பாராதிருத்தல் போலவே நானும் எனது இமைதனையே மூடிடுவேனோ?
நீயும் நினைத்திருந்தும் நினைவுக்குள்ளே நினையாதிருத்தல் போலவே நானும் உன் நினைவினையே மறந்திடுவேனோ?
நீயும் உணர்ந்திருந்தும் உணராதிருத்தல் போலவே நானும் உன் உணர்வினில் கலந்திடவே மறுத்திடுவேனோ?





Thursday, November 25, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"ஹலோ "

ஹலோ....!
ஹலோ! ஹாலா..என்ற செர்மன்
வார்த்தையின் பரிணாமம்
தமிழில் வணக்கம் செய்கின்றோம் நண்பர் விருந்தினரை சுற்றத்தாரை
அழைத்து மகிழ்கின்றோம்!அனைவர்
நலங்களையும் விசாரிக்கின்றோம்!
ஹலோ#!
உலக அமைதிதான் சர்வதேச
ஹலோ தினத்தின் சாரமாகுமே!
ஹலோ!
உறவுகளைத் தொடர்கிறது!
நட்பை வலுவாக்குகிறது!
வீண்சண்டைகளை மறப்போம்!உலகினில்
வாழும் சமாதானம் கொள்வோம்!
அடிமையாகவும் இன்றி அடிமைப்படுத்தவும் முயலாத
எல்லோரும் சுதந்திரத்துடன் இல்லாமை இன்றி வாழும் தத்துவம் அரங்கேற்றிடுவோம்!






தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"இந்த முதாலாளித்துவ சமுகம் உள்ளவரை !'

அது என்ன? பெண்களுக்கு மட்டுமே !
இது என்ன?
அன்றாட
நிகழ்வுகளாய் சமூகத்திற்கே வேண்டாத நிகழ்ச்சியாய்
அவர்களுக்காகவே ஸ்டவ் வெடிக்கிறது?
தீப்பிடிக்கிறது!
அன்று !
கற்புக்காக மட்டுமே!
சீதையை ராமன் எரித்தான்!
அவளோ!
நெருப்பிருந்து மீண்டுவந்து
கற்புக்கரசி என்று நீரூபித்தாளாம்!
ஆனால் இன்று!
எங்கள் சகோதரிகளோ!
அன்றாடம்
வரதட்சணைக்காக ,காசிற்காக,கட்டித் தங்கத்திற்காக!
சுடு நெருப்பினில் எரிக்கப் படுகின்றார்கள்!

அய்யகோ !இவர்களோ அந்த சீதையைப் போலவே!
நெருப்பிலிருந்து மீண்டு மீண்டும் வரவில்லையே!
இந்த ஆணாதிக்க சமூகத்தையே எரித்திடவில்லையே! அதிகாரத்தில்
சொத்துடைமை சமூகமாம் இந்த முதலாளித்துவ சமூகம் உள்ளவரை
இந்த அவலங்கள் தொடர்வது நிற்காதே!




Tuesday, November 23, 2010

தமிழ்பாலா -/காதல் /கவிதை /தத்துவம் /-பெண் தான் உலகமடா !"

ஆதிமனிதன் பற்றிக் கூறிடும் மனித வரலாறே! ஏனடா?
ஆதிமனுசி பற்றிக் கூறிடவில்லை?
தாய்வழி சமூகத்தின் வரலாறையே மறைத்ததுதான் யாரடா?
தாயான பெண்ணையே அடிமையாக்கி வைத்துதான் யாரடா?
பெண்ணின்றி மண்ணில்லையே!-சமூகந்தன்னிலே!
பெண்ணின்றி ஏதுமில்லையே!
பெண் தான் தாயடா! பெண் தான் தாரமடா!
பெண் தான் தோழியடா! பெண் தான் துணையடா!
பெண் தான் உலகமடா! பெண் தான் உண்மையடா!




தமிழ்பாலா /காதல்/ கவிதை/ தத்துவம்/ -"பொருளாதார சுதந்திரமே !"

பொருளாதார சுதந்திரமே! முதலாளும் ஆதிக்க
ஒடுக்குமுறை எதிர்த்து !ஆண் பெண் விடுதலையோடு
சமூக விடுதலைக்குப் பயணிக்கும்!



தமிழ்பாலா /காதல்/ கவிதை/தத்துவம்/-"ஆணாதிக்க !"

பெண்!
வாரிசை விதைக்கும் மண்!
அவளை தெய்வம் என்று தலையில் தூக்கிவைத்து ஆடுவதுபோல் நடித்து!
-அவளின்
புனிதத்தைக் காக்கவென்று போலி வேடம் போட்டுக்கொண்டு!
ஆணாதிக்க சமூகமே!
அதிகாரம் கையில்கொண்டு- பெண்ணை
அடுக்களையில் வைத்து கதவினை சாத்தி
அடிமைவிலங்கு பூட்டி அனுதினமும் பெண்கள்
அவர்களைப் போராடவைத்து ரசித்துப் பார்க்கும் ஆணாதிக்க வக்கிரங்கள்!







தமிழ்பாலா /காதல்/கவிதை/தத்துவம்/-" ஆணாத்திக்க " :"

ஆணாதிக்க சமூகத்திலே !
ஆணுக்கு வாழ்க்கை என்றும் எந்த வகையிலுமே!எப்படியுமே வாழ்க்கை என்ற ஆதிக்க அதிகாரத்திலே!
ஆனால் பெண்ணுக்கோ! ஆணாதிக்க சமூகவரைமுறைகளே!
அவளை ஆண்டாண்டு காலமாய் அடிமைபடுத்தும் புரையோடிய தத்துவங்களே!
அவளுக்கு மட்டுமே ஒழுக்கம் என்ற !கட்டுப்பாடே
அவளுக்கு மட்டுமே கற்பு என்ற கவசங்களே!
ஆணுக்கு ஏதுமில்லை கட்டுப்பாடே!-பெண்
அவளுக்கு மட்டுமே சமுகந்தன்னிலே!
அச்சம் ,மடம், , நாணம் பயிர்ப்பு என்ற அடிமை விலங்குகளே!





Saturday, November 13, 2010

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”
தலைப்பு-” என்னிடமே நூலகமே சொன்னதடா!”
என்னிடமே !என்னிடமே!
நூலகமே சொன்னதடா!
என்னைத்தேடி நீயும் வந்தால் !
என்னைத் தேடி நீயும் வந்தால்!
உன்னைத் தேடி உலகம் வருமென்றே!

என்னிடமே என்னிடமே!
நூலகமே சொன்னதடா!

படித்திடுவோம் படித்திடுவோம்-புத்தகத்திலே இந்த
உலகத்தினையே படித்திடுவோம்!-இந்த
உலகத்தினையே புத்தகமாகவே படித்திடுவோம்!
உயர்ந்திடுவோம் உயர்ந்திடுவோம்!-அறிவாலே
உயர்ந்திடுவோம் வெட்டுகின்ற அரிவாளையே
தவிர்த்திடுவோம் தவிர்த்திடுவோம் !பகுத்தறிவாலே
உயர்ந்திடுவோம் உயர்ந்திடுவோம் நல்லோரின் சிம்மாசனமே
அமர்ந்திடுவோம் அமர்ந்திடுவோம்!
உண்மைவழி உணர்ந்திடுவோம் உணர்ந்திடுவோம்!ஊருக்கெல்லாம்
நல்லவழி காட்டிடுவோம் காட்டிடுவோம்!
புத்தகத்தைப் வாசித்திடுவோம் -வாசித்திடுவோம் -படைத்திடுவோம்
புதுவித்தகத்தைப் படைத்திடுவோம் படைத்திடுவோம்!- நூலகம் என்பது
நமக்கெல்லாம் ஓய்வு நேர உலகமடா!-அந்த நூலகம் என்பதே
நம்மை இயக்குவது என்பது இல்லையடா!-அந்த நூலகம் என்பதே
நமது வாழ்க்கை தன்னில் இயக்கமாகுமடா!
நாம் படிக்கின்ற நூல்களாலே மனிதத்தின் நைந்த நேயங்களையே
நாள்தோறும் தைத்திடுவோம் தைத்திடுவோம்!
படித்திடுவோம் படித்திடுவோம் நல்ல நூலகளையே படித்திடுவோம்!
படைத்திடுவோம் படைத்திடுவோம் புதுயுகமே படைத்திடுவோம்!-புத்தகத்தைப்
பதித்திடுவோம் பதித்திடுவோம் நன்னூல்கள் பதித்திடுவோம்!-புது நடைப்
போட்டிடுவோம் போட்டிடுவோம் கோடிப்பூக்களையே மலரவைப்போம்!
எல்லோரும் வாழ்கின்ற பொன்னாட்டையே படைத்திடுவோம் படைத்திடுவோம்! படித்திடுவோம் படித்திடுவோம் சரித்திரத்தைப் படித்திடுவோம்!
படைத்திடுவோம் படைத்திடுவோம் ஒரு சரித்திரமே படைத்திடுவோம்!

என்னிடமே என்னிடமே !
நூலகமே சொன்னதடா!








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

Tuesday, November 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வளர்ந்தபின் துதிக்கின்றதும்”

வளர்வோரையே தடுக்கின்ற சமூகமே-அவரையே
வளர்ந்தபின் துதிக்கின்றதும் நீதானே!
வளர்கின்ற பருவத்தில் இருக்கின்ற-எத்தனையோ
வளர்வோரை நீயும் காணாமல் இருப்பதுவும் ஏனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒன்றுமறியாத அப்பாவித் தொண்டர்களே!”

கொள்கையில்லாத கோடிக் கட்சிகளின்
குப்பைமேட்டுக் கொள்கைகளையே!
கோபுரமாகவே எண்ணிஎண்ணி ஏமாறுகின்ற
கோட்பாடற்ற ஒன்றுமறியாத அப்பாவித் தொண்டர்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்னத முன்னேற்றப் பயணமே!”

எந்தன் தேடலுக்கு எத்தனையோ உலகங்கள் காத்திருக்கின்றதே!
எந்தன் பயணம் பெரிதாகுமே-செல்லும் பாதையோ தூரமாகுமே!-
என்னதுன்பம் வந்தபோதும் முன்னேறிச் சென்றிடுவேனே!
நானும்
மலைப்பின்றி முன்னேறிச் சென்றிடுவேனே!-
மனித வாழ்வு என்றும் முன்னேறிச் செல்லும் உன்னத முன்னேற்றப் பயணமே!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எம் ஆசாண் மார்க்ஸ் அவனின் தத்துவச் சொல்”

இந்தவறுமைத் துன்ப உலகினை மாற்றி அமைப்பதே உழைப்பவர் நமது தலையாய கடமையாகுமே!-எம் ஆசாண் மார்க்ஸ் அவனின் தத்துவச் சொல்
கூழாங்கற்களையும் வைரமாக்கிடுமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காணவேண்டும் புதுயுகமே!”

காலம் என்றே கூறிடுவார்-மனிதர் அதன்
கரைதனை யார்தான் காண்பாரோ?
காலத்தை வென்றிடும் கலைகளையே- நாமே!
காண்கின்ற பாதை கொண்டிடுவோம்?-எதிர்
காலத்தை எதிர் நோக்கும்
காலம்தானே உருண்டோடும்!- நேற்றுப் போன
காலங்களும் திரும்பாதே!-இன்றே இப்போதே இன்றைய
காலத்தை முறையாக்கியே- நாமே உண்மையாம் தத்துவத்திலே!
காணவேண்டும் புதுயுகமே!

Monday, November 1, 2010

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”பலகோடி மக்கள் பசிக்கும் வயிற்றோடு”

இன்றும் இம்மண்ணில் பலகோடி மக்கள் பசிக்கும் வயிற்றோடு
உறங்கச் செல்கின்றாரே!
-இந்தநிலை
தொடரும்வரை
நமதுமுன்னேற்றம் நமதுவெற்றி என்பதிலே!- நாமெல்லாம்
நாள்தோறும் சொல்வதிலே ஒருபொருளுமில்லையே
நாம்மார்தட்டுவதிலே ஒருபயனுமில்லை இல்லையே!
இல்லாமையே பொல்லாமையே அதைக் கொல்லாமலே-துன்பம்
இல்லாத நாட்டினையே காண்பது என்பதுவே கானல் நீராகிடுமே!

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”எனதினிய தோழனே தோழனே!- ”

தோழனே தோழனே!-எனதினிய
தோழனே தோழனே!-மனிதனைவிட ஒருதேவனையே நீதான் கண்டதுண்டா?இல்லை இந்த வையகம்தான் கண்டதுண்டா?
தோழனே தோழனே!-எனதினிய
தோழனே தோழனே!- மனிதத்தைவிட ,மனித நேயத்தைவிட
ஒரு உன்னதத்தையே நீதான் கண்டதுண்டா?
இந்த பிரபஞ்சமும் தான் கண்டதுண்டா?

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதத்தோடு வாழ்வது ஒன்றுதான்”

பிறப்புக்கு முன்னே நீயும் இருந்தது தான் எங்கே எங்கே?
இறப்புக்கு பின்னே நீயும் இருக்கப் போவதுதான் எங்கே எங்கே?-வாழும்
வாழ்வுக்கு மத்தியில் அன்பு ,மனித நேயம் தான் கொண்டு மனிதத்தோடு
வாழ்வது ஒன்றுதான் வாழும்மண்ணிதில் வசந்தமாக்கிடும் இங்கே இங்கே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மையான கின்னஸ் சாதனையாமே!”

காதலிலே
உயர்ந்தசாதிக் காதலென்றும் தாழ்ந்தசாதிக் காதலென்றும்!
உண்மைக் காதல் அன்பினிலே பேதமென்பது இல்லை இல்லையே!
இவ்வுலகிலே
இருப்பாரின் காதலென்றும் இல்லாரின் காதலென்றும் பிரித்துப் பாராமலே!
ஒன்றாக பார்க்கின்ற நல்லோர்கள் சொல்லும் காதலும் ஒன்றே தானடா!
இம்மண்ணில்
இனமொழி நாடு பேதம் பாராமல் வாழ்த்துகின்ற காதலின் நேசத்தையே
ஏற்றுக்கொள்ளும் பக்குவமே இவ்வுலகின் உண்மையான கின்னஸ் சாதனையாமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன் அன்பில்லாது”

நினைப்பதொன்று நடப்பதொன்று நானும் கண்டதில்லையே!-தோழியே
இம்மண்ணிலே உன் அன்பில்லாது,
நீயில்லாது , நானறிந்தது வேறில்லையே!-காதலியே
நினைப்பதுவும் மறப்பதுவும் வாழ்வென்பது இல்லைஇல்லையே!
அனைத்துமாய் அன்புமாய் இன்பத்துள் இன்பமானதே!
உனக்குள்ளே நான் எனக்குள்ளே நீ என்பதெல்லாமே
இவ்வுலகத்தில் கனவல்ல நடக்கின்ற நனவானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மைக் காதலாலே”

என்னிலே இருந்த காதலொன்றையே-காதலியே
உண்மைக் காதலாலே அறிந்துகொண்டேன்!
என்னிலே இருந்த அன்பொன்றையே-காதலியே
உயிரின் கலப்பாலே தெரிந்துகொண்டேன்!
என்னிலே இருந்த உன்னையும் நான் - காதலியே
உன்னிலே இருந்த என்னால் புரிந்து கொண்டேன்!
நம்மிலே இருந்த நம்மையும் நாம்-காதலியே
நம்முணர்வினில் நாமும் உணர்ந்து கொண்டோம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மக்கள் ஜன நாயகம்”

ஓடி ஓடி ஓடியே உட்கலந்த அன்பு சோதியையே மனித நேயத்தையே!
நாடி நாடி நாடியே பகுத்தறிவினில் ஏற்றுக் கொண்டால் இன்பமாகிடுமே!- தனியுடைமைச் சுரண்டலாலே சுரண்டப்பட்ட மனிதர்கள்
வாடி வாடி வாடியே அடிமட்டத்தில் அமிழ்ந்துவிட்ட மாந்தர்கள்
கோடி கோடி கோடியே மண்ணில் எண்ணிறந்த கோடியே!அனைத்து மக்களும்
கூடி கூடி கூடியே ஒற்றுமையில் கூடியே!போராடி போராடி போராடியே!
தேடி தேடி தேடியே உண்மைச் சுதந்திரத்தைத் தேடியே!-மக்கள் ஜன நாயகம்
பாடி பாடி பாடியே எல்லோரும் வாழும் சுவர்க்கம் காணுவார்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பகுத்தறிந்திடும் அறிவாலே ”

அறிந்ததையே பகிர்ந்து கொள்ளடா!
அறியாததையே தெரிந்து கொள்ளடா!
அறியாமையையே நீக்க பாடுபடுடா!-பகுத்தறிந்திடும்
அறிவாலே உலகினையே உயர்த்தடா!-மூட
நம்பிக்கையையே அழித்து உயரடா!-வாழ்வினில் தன்
நம்பிக்கையிலேயே வாழ்ந்து காட்டிடா!

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எல்லோரும் வாழுகின்ற தத்துவத்தைப் பாடலாமோ?”

கோடிக் கோடி யோசனையே செய்கின்றேன் தலைவி நானே-அன்புக்
காதலனே வந்துவிட்டானே!-ஆசை
தோழனே வந்துவிட்டானே!
கூடலாமோ? ஊடலாமோ?-இளமையிலே இனிமையினையே!
தேடலாமோ?-உண்மை அன்பினையே
நாடலாமோ?-இந்த பிரபஞ்ச வெளியினிலே ஓடலாமோ?- நல்லோரின் வழியினிலே அவர்தம் துணையினிலே!
காலமெல்லாம் எல்லோரும் வாழுகின்ற தத்துவத்தைப் பாடலாமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இன்பத் தேடலில் கலந்தான்!”

கூடலில் குளிர்ந்தான் -பொய்ப்பிரிவாம்
ஊடலில் எரிந்தான் காதல் தலைவனே!-அன்புப்
பாடலில் மலர்ந்தான் இன்பத் தேடலில் கலந்தான்!
நேசத் துணைவனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்மேனி தாங்கிடுமோ இலவம்பஞ்சே!”

உன்மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?காம்புடனே கூடிய
அனிச்சம்பூவினையே சூடாதே ! அன்புக்காதலியே!
உன்மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?
உன்கூந்தலுக்கு நீயும் மல்லிகை மலரினையே சூடாதே!
அதன்சுமையாலே உன்மேனி தாங்கிடுமோ இலவம்பஞ்சே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல்தருவார் வருவார் ”

கார்வந்தால் தேர்வரும் தேர்வந்தால் காதல்தருவார் வருவார் என்று
காதலி என்னிடமே!
காதல்தலைவன் அன்றுசொன்ன அறிகுறிகள் தோன்றுதடி!
ஆனாலும் எனதினிய தோழியே! காதலனாம்
அவனின் இனியவரவினைத்தான் காணலியே!
எனது விழியிமைகளோ! விசிறியாகவே படபடப்பதென்னவோ?
என்கண்களுமே உறங்கிடவே இமைமூட மறுப்பதென்னவோ?
மாலைக்காலமும் வந்ததடி கூடவே -
காதல் தலைவனின் நினைவும் கூடவே வந்ததடி!
ஆண்மானும் தன்பிணையையே தழுவியதடி!களிற்று
ஆனையுமே தன்பிடியினைத் தழுவி நின்றதடி!
மாலைவந்ததே காதலினையே அதிகமாக்கிடவே தானோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நான்குகண்களும் ஓர் நேர்கோட்டினிலே !”

நிலவும் நெருப்பானதோ?
மலரும் முள்ளானதோ?
காதல் தலைவன் அவனே அருகில்லை என்றபோதே!காதலனோ! அன்றே!சொன்னானே!
காதலியே !
உன்னைமணம் செய்யாமலே - நானும் இந்த
உலகினை விட்டுப் போவதில்லையே என்றே!
சோலைக்கும் நன்றிசொல்லி என்ன?-மலர்
மாலைக்கும் நன்றிசொல்லி என்ன?-கனி
மர நிழலுக்கும் நன்றிசொல்லி என்ன?அன்று
பிரிந்து சென்ற தலைவனே மீண்டும் வருவான் என்றேமுன்
அறிவிப்பாயே குயிலும் கூவியென்ன?காதலி எனது
இடக்கண்ணும்,இடத்தோளும் துடித்தென்ன?தலைவனின் வலத்தோளும் வலக்கண்ணும் துடித்தென்ன!அன்புக் காதலிலே அவனின் ,எந்தன்
நான்குகண்களும் ஓர் நேர்கோட்டினிலே !சந்திக்கும் நாளினை எண்ணியே!
காத்திருக்கும் காலங்களே கனலானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தென்றலே துன்புறுத்தாதே!”

தென்றலே துன்புறுத்தாதே!
தேனிலவே துயரந்தராதே!-வாடைக்
காற்றதுவும் வஞ்சனைதான் செய்கின்றதே!
காதலனே அவனருகினில் இல்லாத பொல்லாத காலந்தானோ!-காதல் தலைவனே!அவனே
காதலியே நான் துடிக்கும் வேதனைதான் அவனும் அறிந்தானோ?
காதல் தலைவியின் உயிர்துடிப்பில் அவனிருந்தால் உடனே வந்திடுவானே!
காதலுக்கு மரியாதை செய்து அன்பினிலே கலந்திருப்பானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காண்டேகரும் சொன்னாரடி!”

உன் அழகிய மலரிதழ்களே!
நான்பார்க்கும் இடமெல்லாமே வந்துதோன்றி-அன்பே
என் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ!
அன்று மலர்ந்த செந்தாமரையோ!
இன்று சிரித்த மல்லிகைபூவோ!
என்னுயிரின் உள்ளே!
ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!
உன் அழகிய கண்களே!
அமுத மொழிபேசி கோடிக் கவிதைகள் சொல்லுதடி!
உன்கோவைப் பழமாய் சிவந்த இதழ்களே!
எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாமே வந்து வந்து-அன்பே
என் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ!-உன்
அழகிய புருவவில்லே!மன்மதன் கையுள்ள கரும்புவில்லோ!அன்பே
எப்போதும் என்னுயிர்மேல் வந்துபொருந்தி துன்புறுத்துதடி!
உன்புன்முறுவலோ செஞ்சுடர் வீசுகின்ற வெண்ணிற மின்னலாகியே
என்னையே நித்தம் நித்தம் கொல்லுதடி!அவையென்ன?
என்னுயிரையே துன்புறுத்தும் முத்துக்களோ? நானும்
அறிந்தும் அறியாமலே அனுதினமும் வருந்துகின்றேனடி!
அவளின் சோதிவட்டத் திருமுகமே!
என்னெஞ்சத்தையே பிழிகின்றதே!
உந்தன் தேன் நிறைந்த கண்களுக்குள் என்னைத்தினம் நனைப்பதென்னவோ?- நீயே
உன்கண்ணில் என்னைக்காட்டி காதலியே என்னையே
உன்னிடத்து அழைத்துக் கொள்ளவேண்டுமடி
முதுமை அடைந்துவிட்டாலும் முதல்காதல்-என்றும்
இளமை கொண்டு வாழும் என்று காண்டேகரும் சொன்னாரடி!
அந்த செம்மண் நன்னீர் போலவே =- நம்
அன்புடைய நெஞ்சங்களும் கலந்ததடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”என்னாளும் போராடி”

என்னெஞ்சமே உன்னிடமிருந்து மீண்டுவரவே ஒருவழியே இல்லையா?-என்று நானே சிந்திக்கும் முன்னே!
உன்னிலிருந்து மீண்டுவிட்டேன் என்றுஇறுமாந்து நானிருந்தேன் காதலியே!
ஆனாலும் மீண்டும்மீண்டும் உன்னில் நான்கலந்து என்னைஉனதாக்கி கொண்டேனே!
உன்னைஎனதாக்கி நான்கொண்ட அன்பினிலே கோடிக்கோடிக் காலங்கள் கண்டேனே!
உன்னெஞ்சம் கண்டதுவே நானும்கண்டேனே !என்னெஞ்சம் கொண்டதுவே நீயும் கொண்டாயே!
எண்ணித்தெளிவுற்றேன் ஏகாந்த தத்துவமே !என்னாளும் போராடி வெல்வோமே வாழ்வினிலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலென்ற அன்பினில் ”

எனக்காகவே நீயே எனக்கு ஒருசொல் சொல்லிடவேண்டுமே!~
அதுவும் காதலென்ற அன்பினில் கூடுகின்ற இன்பமாக வேண்டுமே!
நமக்காகவே நாமவாழ்கின்ற நல்லெண்ணம் இனிமையாக வேண்டுமே!
நாளெல்லாம் நல்லோர்கள் வாழ்த்துகின்ற பொன்னாளாக வேண்டுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மையான தீபாவளி என்று?

உண்மையான தீபாவளி என்று?-இல்லாமை இன்றி
எல்லோருக்கும் அத்யாவசிய எல்லாத் தேவைகளும் பெற்று -எல்லோரும் சுதந்திர சுவாசத்திலே!
மக்கள் ஜனநாயகத்திலே!
இன்புற்று வாழ்கின்ற இன்னாள் தான் அன்று
அதுவே பூலோக சுவர்க்கத்தை கொண்ட பொன்னாள் அன்றோ!

Tuesday, October 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒரு வினோதமே!”

மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்ததே!
அடியே
உன்னதம் உன்னதமே வாழ்க்கை ஒரு உன்னதமே!
ஒவ்வொரு நாளும் நமக்குள் நடப்பதெல்லாமே!
ஒரு வினோதமே!
என்றென்றும் வாழ்ந்து பார்த்திடுவோம் சந்தோசமே!










Saturday, October 23, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!”

அ” வையே ஆன்னா” என்றுமே!
ஆ” வையே ஆவன்னா” என்றுமே!
இசையோடு கற்றாரே எம்தமிழரே!!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே

லு”லு”லு” லு”லு” ரீ” ரீ” ரீ” ரீ”
எனும் மழலை இசையினில் துவங்கி வாழ்வின் இறுதியிலும் பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே
தாலாட்டாய் தத்துவமாய் காதலாய் கொண்டாட்டமாய்
தனிமையாய் ஒற்றுமையாய் உழைப்பாய் உறுதியாய் பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!


நடவுப்பாட்டுக்கே
தனன் னான னானே- ஏ
நானே நானே ந்ன்னே

தெம்மாங்குப் பாட்டுக்கே
அடடா! தன்ன் ந்ன்னே நானே
நானே ந்ன்னே நானே நன்னே!

கும்மிப் பாட்டுக்கே!
தன்னனா நானன நானானே!
தன்னனா நானன நானானே!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

தாலாட்டுப் பாட்டுக்கே!
ஆராரோ ஆரிரரோ ராரோ ராரிரரோ!
ஆராரோ ஆரிரரோ ராரோ ராரிரரோ! பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

நெல்லிடிக்கும் உலக்கைப் பாட்டுக்கே!
ஏலேல குயிலே லல்லோ!
ஏலேல குயிலே லல்லோ!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

தெம்மாங்குப் பாட்டுக்கே!
ஏலங்கிடி லேலோ!
ஏலங்கிடி லேலோ!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!


வையே ஆன்னாஎன்றுமே!
வையே ஆவன்னாஎன்றுமே!
இசையோடு கற்றாரே எம்தமிழரே!!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே

Friday, October 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”கம்பன் தமிழோ-”

கானாப் பாட்டினுக்கோ!
கம்பன் தமிழ்தேவை இல்லை என்பாரே!=ஆனாலும்
கம்பன் தமிழோ--எம்
கன்னித்தமிழ் மண்ணுக்குத் தேவையாய் இருக்கின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சினிமா”

ஏற்கனவே ஆட்டுரலாம் குடைகல்லில்
ஆட்டியமாவு-இப்போதோ
கிரைண்டரில் ஆட்டப் படுகின்றது!









தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சினிமா வாய்ப்பு தேவதையோ!”

சினிமா வாய்ப்பு தேவதையோ!
சிலருக்கோ வாய்க்கின்றாள் மாலைபோட்டு வாய்ப்பினைத் தருகின்றாள்!
பலரையோ ஏய்க்கின்றாள் !பம்பரமாய் சுற்றவிட்டு ஏமாற்றுகின்றாள்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இந்த சினிமாத் தொழிலினிலே ”

இந்த சினிமாத் தொழிலினிலே அஞ்சுபத்து என்பதற்கு
அஞ்சுகோடி பத்துகோடி என்று அர்த்தமானதடா!
மூலதனம் எல்லாமே ஒன்றாகக் கூடி சினிமா உலகத்துல
மா நாடு போடுதடா! சூதாட்டம் என்று சொல்லவா?இல்லை
ஓடாத குதிரை ரேஸ் என்று சொல்லவா!
வைராஜா வை வெச்சது மேலே வை என்று
சாஞ்சா சாயுறபக்கம் சாயுர செம்மறி ஆட்டுக் கூட்டமடா!வென்ற
சினிமா பாணியில ஓடோடி படமெடுக்கும் பிலிம்சுருள் பாம்படா!
படமெடுக்க ஆசைபட்டு பரிதாப நிலையில இருப்பவங்க கோடியுங்க!
படமெடுத்து வெற்றிபெற்ற மனிதருங்க விரல்விட்டு எண்ணிவிடலாமுங்க!
நடிக்க ஆசைபட்டு கோடம்பாக்கவீதியில வாய்ப்புத் தேடும்
நடிக்க வாய்ப்பின்றி நடுரோட்டில் இருப்பவங்க ஏராளம்
நடிக்கவந்த நடிகையில் ஒருசில வெற்றிபெற்ற நடிகைதவிர-மற்ற
நடிக்கவந்த நடிகைகள் எல்லாம் துணை நடிகை ஆனவங்க ஏராளம்
நடிக்க வந்த சில பெண்களின் கற்பினையே சூறையாடிய கயவரும் இங்க இரும்புத்திரையாகவும் இருப்பதுண்டு!
நல்லவங்க கெட்டவங்க வஞ்சகர்கள் கயவர்கள் என்று எவரையும் நாம்தரம்பிரித்து பார்க்கின்ற விஷயத்தையே சினிமா உலகம் படமெடுத்துக் காட்டிடுமே!
என்ன எப்படி இருந்தாலுமே சினிமா ஆசை என்ற பேராசை இல்லாத மாந்தரில்லையே
சினிமா ஒரு மாயாஜாலம் இதில் எத்தனை விட்டில்கள் சென்று தோற்று வீழ்ந்தாலும் வெல்லும் முயற்சியில் மீண்டும் புதிது புதிதாய் புற்றீசலகளாய்
ஓடிவெல்லப் பார்த்திடும் சினிமா ஆர்வலர் பெருகி நிற்கும் உலகமுங்க

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எனதினிய சினிமா தேவதையே!”

எனது இனிய சினிமா தேவதையே!- நீயோ
இன்றைக்கும் வனப்பாகவே வலம்வருகின்றாயே!-உன்
வசீகரமும் வாடாமலே!
வண்ணக் கலவையாகவே!-ஊடக
சிற்றிடைதான் கொண்டு சிலிர்க்கின்றாயே!-மக்களின் உண்மைமுகத்தினை
சிறு நடை பயின்று சிரிக்கின்றாயே!
பேசும் நிலவாக திரைவானிலே உலவுகின்றாயே!எம்முலகத்தின்
இனியவளே இனிப்பவளே!காதில் தேனாகவே
இசையாகி சுவைப்பவளே!-என்
மனதுக்கு உகந்த மலரானவளே!-எந்தன்
மானசீக வண்ணத்திரை காதலியே!-எனது
சிந்தனைகளையே செழிக்கச் செய்தவளே!
தமிழர் எங்களது வாழ்வினையே!
சீரும் சிறப்பும் பேரும் புகழும் ஆக்கியவளே!-திரைக்
கதா நாயகன் , நாயகிகளையே முதுமையாக்கிவிட்டு நீயோ!
இன்றும் இளமை குன்றாமல் இருக்கின்றாயே எனதினிய சினிமா தேவதையே!

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மூடவிதியை நம்பிடும் மூடர்கள் ”

அதிஷ்டத்தை மட்டுமே நம்பாதே!-பகுத்தறிவினையும்
உனது உன்னதமான உழைப்பினையும் அவ நம்பிக்கையோடு பார்க்காதே!
துரதிஷ்டம் என்பது மூடவிதியை நம்பிடும் மூடர்கள் சொன்ன சோம்பேறிகளின் தத்துவமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஆரூர்தாஸ் அவர்கள் சொன்னது---”

”நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கின்னஸ் போன்ற சாதனையாளர் திரைக்கதை வசன கர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் சொன்னது---”
”காட்டில் காற்று வேகத்தில் பாய்ந்து கலைமான்களை வேட்டையாடி அவற்றின் செங்குருதியைக் குடிக்கும் இந்த சிங்கத்திற்கு நான் என்றும் அழுகிய மாமிசத்தை வீசியது இல்லை”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எல்லா மனிதருக்கும் உணவு,உடை,வீடு,சுதந்திரம் !”

குருவித் தலையில பனங்காய வைக்கவும் கூடாது-யானைப்
பசிக்கு சோளப்பொரியும் போட்டிடவும் கூடாது!
அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல் உழைப்பினைக் கொடுத்திட வேணும்!
அவரவர் திறமைக்கு ஏற்றாற்போல் வாய்ப்பினைத் தந்திடவேணும்!
அறிவினை அறிந்து அறிவியல் கற்று உலகினில் உயர்ந்திட வேணும்!
உண்மையை புரிந்து நன்மையை செய்து வாழ்ந்திட வேணும்- நல்லோர்
அடிச்சுவட்டில் நாம் நடந்து இம்மண்ணின் மேன்மையாக்கிட வேணும்!
தனிமனிதன் இடத்து தேவையன்றி சொத்துக்களும் இருந்திடவே கூடாது!-எல்லா
மனிதருக்கும் உணவு,உடை,வீடு,சுதந்திரம் இல்லாமலிருக்கவே கூடாது!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மூச்சுப் பயிற்சியிலே”

கற்பனையே! -உயர்ந்த
கற்பனையே! சிந்தனைக் கவிதையே,சீர்மிகு இலக்கியமே!-அது
இமைக்கும் பொழுதினிலே தோன்றும்!
இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும்!
கற்பனையே! - காவிய
கற்பனையே! இயற்கையின் ஒப்பனையே,இனிமையின் அரசாங்கமே!-அது
எப்படி வேண்டுமானாலும் சிறகினை விரித்துப் பறந்திடுமே!
எவ்வளவு உயரத்திற்கும் தொலைவிற்கும் சென்றிடுமே!
இப்பொழுது மூளைசரியில்லை என்று சொல்பவனே மூடனே!
எதையும் சரிவர செய்திட திராணியில்லாத முட்டாளே!
மூச்சுப் பயிற்சியிலே முன்னோர்கள் சொன்னபடியும்
யோகாசனங்கள் செயாதாலே எந்த சோர்வினையும் போக்கிடலாமே!

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”ஒரு மக்கள் இலக்கியப் படைப்பாளன்!”

எழுத்தாளனாகிய நான்!
விதையாகவே மண்ணில் விழுந்து
முளையாகவே முளைத்து எழுந்து வேர்விட்டுப் பதிந்து!
விருட்சமாகவே கிளைகள் விரித்து கனிகொடுத்து மக்களைக் காத்து
யுகயுகமாகவே ப்ரவித் தழைக்கின்றவன்!
நான்
சிறுகாற்றுக்கு ஒடிந்து விழும் ஒதியமரமல்ல!
சிறுசலசலப்பில் முறிந்து வீழஒன்றும் முருங்கை மரமும் அல்ல!
நான்
காலத்தைக் கடந்து நிற்கும் பிரபஞ்ச ஆலமரம்
காலத்தின் கண்ணீரையும் துடைத்து நிற்கும் ஒரு மக்கள் இலக்கியப்
படைப்பாளன்!
எனக்கு இறப்பு என்பது என்றைக்கும் இல்லை இல்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எமதுதிரை ஆசாணே சார்லிசாப்ளினே!”

சார்லிசாப்ளினே !பொதுவுடைமை தத்துவத்தையே
தைரியமாகவே திரையினில் அரங்கேற்றிய
சரித்திரப் புகழ்பெற்ற எமது திரைஆசாணே!
மெளனப் படக்காலத்திலேயே!
மக்களை மகுடிஓசை கேட்ட நாகமாகவே மயக்கிய !
மட்டற்ற மகிழ்ச்சிக் கடலிலே மக்களையே வசப்படுத்திய!
சிரிக்கவைத்தும் ,சிந்திக்கவைத்தும் நடித்த சிறந்த ஆற்றல்பெற்ற சாதனையாளனே!
சீர்மிகு சிந்தனையாளனே!
எமதுதிரை ஆசாணே சார்லிசாப்ளினே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இமயத்தின் உச்சிக்கும் போவதுண்டே!”

ஒரு நல்ல மூலக்கதையே!
ஒரு திறமையறற திரைக்கதை எழுத்தாளராலே!
ஒன்றுக்கும் உதவாமல் சிதைக்கப்பட்ட பூவாகிப் போய்விடுமே!
ஒரு சாதாரண மூலக்கதையே!
ஒருதிறமையுள்ள எழுத்தாளராலே! இமயத்தின் உச்சிக்கும் போவதுண்டே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வள்ளலாளரின் ,காரல்மார்க்சின் கோள்கைவழி”

நல்லதமிழில் நானும் எழுதிட் வந்தேனே
நல்லதையே சொல்லிடவே விளைந்தேனே!
ஏடெடுத்தேனே! -தேனே
எழுதுகோலைத் தொட்டேனே!-மானே !!நீதிகேட்டு கெட்ட உலகத்தில்
நேர்மை அம்பைத் தொடுத்தேனே! பொதுத் தொண்டு ஆற்றிடவே
வள்ளலாளரின் ,காரல்மார்க்சின் கோள்கைவழி நானும் நடந்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நியாயமானதொரு தேர்தலும் இல்லை ”

இனியொரு தஞ்சைக் கோவிலுமில்லை
இனியொரு ராஜராஜனும் இல்லை இல்லை
இனியொரு கல்லணையும் இல்லை இல்லை
இனியொரு க்ரிகால்சோழனும் இல்லை இல்லை
இனியொரு தாஜ்மஹாலும் இல்லை இல்லை
இனியொரு ஷாஜஹானும் இல்லை இல்லை
இனியொரு குதுப்மினாரும் இல்லை இல்லை
இனியொரு குத்புதீனும் இல்லை இல்லை
இனியொரு கோகினூர் வைரமும் இல்லை இல்லை
இனியொரு எலிஸபத்ராணியின் மகுடமும் இல்லை
இனியொரு நியாயமானதொரு தேர்தலும் இல்லை இல்லை

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தில்லுமுல்லு அரசியல் வாதிகளே”

தோப்புக் கரணம் தோப்புக் கரணமே!எம்தமிழ் மக்களே!
போடுவது பிள்ளையாரிடத்தும் வாத்தியாரிடத்துமே!-ஆனாலும்
வாக்குரிமை பறிக்கின்ற தில்லுமுல்லு அரசியல் வாதிகளே
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அவர்கள் மக்களிடத்து
தோப்புக் க்ரணம் போட்டுவிட்டு ஐந்தாண்டு முழுவதுமே- மக்களையே
தோப்புக்கரணம் போடவைப்ப்து எந்த விதத்தில் நியாயமாகிவிட்டதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஓர் நிலையில் நின்று ”

நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகம் ஏதுக்கடி?
கூடுமோ கூடாதோ என்ற விரக்தி ஏதுக்கடி?
தேறுமோ தேறாதோ என்ற அவ நம்பிக்கை ஏதுக்கடி?
ஆகுமோ ஆகாதோ என்ற சஞ்சலமும் ஏதுக்கடி?
எந்த உறுதி இல்லாத மன நிலையும் நமக்கேதுக்கடி?
ஓர் நிலையில் நின்று விடாமுயற்சி செய்துபார்த்தால்
இந்த மண்ணிலே ஆகாததும் உண்டோ தேன்மொழியே!

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”-போலிஅரசியல்வாதி சண்டாளர்கள்”

குப்பைக் கூந்தலுடன் சேர்த்து பின்னப்பட்டு-சடங்குமுடிந்து
போனபின் அவிழ்த்து வைக்கப்பட்டு விடும்-அந்த
சவரியுடன் கூடிய நீள்கூந்தல் ஒன்றும் நிரந்தர மானதல்லவே!அதுபோல
சம்பரதாயத்திற்கு நம்மைத் தேர்தலன்று இமயத்தில் நிறுத்தி
சாஷ்டாங்கமாய் நம்காலினில் விழுந்து ஓட்டினை வாங்கிவிட்டு -போலிஅரசியல்வாதி
சண்டாளர்கள் நம்மை வீதியில் தூக்கி எறிந்துவிடுகிறார்களே!








தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”வெறும் கிளிஞ்சல்கள் தானே!”

தனியுடைமைக் கோலோச்சும் ஒருசிலருக்கு மட்டும் வஜ்ரமீன்கள் கிடைத்திடும் போதினில்- மறைமுகமாய் வாங்கும் சக்தியின்றி!
அடிமைப்பட்டு வாழும் சுதந்திரமின்றி வாடுகின்ற இந்தியமக்களுக்கோ
கிடைப்பதென்னவோ! வெறும் கிளிஞ்சல்கள் தானே!







தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”வாக்குரிமை விற்றுத் தாழ்வாச்சு!”

பொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி
உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு!
உரிமையின்றி அடிமைத்தனத்தில் ஊறிப்போன நிலைகெட்ட மண்ணாகவே!
இம்மண்ணும் சூடுசுரணைதான் கெட்டுவாக்குரிமை விற்றுத் தாழ்வாச்சு!







தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-” சுதந்திரக்காற்றின் ”

அன்பு ஊடினதோர் இடமெங்கே?-காதல் தேனிசை
ஒலிதான் கேட்பதெங்கே?-கண்ணில்
ஒன்றாக காணுகின்ற ஆசைக்களி நடனமெங்கே!?
இன்பத்தில் இணைக்கின்ற இல்லறவாழ்வின் தத்துவமெங்கே?

விட்டுக்கொடுத்து வாழ்கின்ற வாழ்வினிலே துன்பமென்றும் இல்லையடா!
வீண் தர்க்கம் செய்து விதண்டாவாதம் சமூகவாழ்வினிலும் தொல்லையடா!
அன்புகொண்ட மனங்களின் ஒற்றுமையே உன்னதமாக்கிடும் இம்மண்ணிலே!
உறுதிகொண்ட சுதந்திரக்காற்றின் உரிமைவேட்கை என்றும் வென்றிடுமடா!









தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”அன்புப் பூவுதிர்ந்து ”

படுத்தாலே பல நினைவு வந்ததடி!
பாயெல்லாம் கண்ணீரு வெள்ளமடி!
உண்டாலே உறக்கமில்லை தேன்மயிலே!
உறங்கினாலும் தூக்கமில்லை செம்மொழியே!

சேர்ந்தோமடி சேர்ந்தோமடி கண்ணுக்குள்ளே!-காதலாலே!
செடியிலிட்ட பூப்போல பூத்தோமடி!-காதல்
செடியறுந்து -அன்புப்
பூவுதிர்ந்து போயிவிட்டாலே!-இந்த
சென்மத்திலே சேர்வதுவே எக்காலமடி?










தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”புரிஞ்சிகிட்டா துன்பமில்ல!”

குணமயிலே உன் தடத்தை
குச்சிகட்டிக் காத்திடவா?
ஆத்தாடி கண்ணாத்தா!
அடிமடியில கட்டட்டா?
கள்ளியம்பூச் சாரலிலே!
அள்ளட்டா முள்ளட்டா?
ஆதரவு சொல்லாத்தா!
அன்புக்குள்ள நில்லத்தா!
ஆசைவெள்ளம் கொள்ளத்தா!
ஏழைமனம் வெள்ளைதான்!
பாவிமனம் படும்பாடுதான்
வாயாலே சொல்லமுடியாத
வார்த்தைகள கண்ணாலே
காதகியே சொல்லுறயே!
கண்ணுக்குள்ள காரணத்த
காலமெல்லாம் சொல்லாம
பூட்டிவெச்ச மன்சுக்கு
பூலோகம் சொந்தமில்ல!- நீயும்
புரிஞ்சிகிட்டா துன்பமில்ல!

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”காத்திருந்த கோலமென்ன ?”

கையோடு கைசேர்த்து! - காதலாம் கனவினில்!
கானல்வழி நடக்கையிலே!-அன்பினில் அன்பே!
மெய்சோர்ந்து விழுந்ததென்ன?
மென்குயிலே கண்ணாட்டி!
காலமென்னும் நதியினிலே!
கன்னிஓடம் ஓடையிலே!
காளைக்கரை சேராமலே!
காத்திருந்த கோலமென்ன ?கண்ணாட்டி!
கையோடு கைசேர்த்து! - காதலாம் கனவினில்!
கானல்வழி நடக்கையிலே!-அன்பினில் அன்பே!
மெய்சோர்ந்து விழுந்ததென்ன?
மென்குயிலே கண்ணாட்டி!

Tuesday, October 19, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-: ”மனைவி என்பவளே! ”

மனைவி என்பவளே!
ஒரு கம்பளிப் போர்வை யாவாளே! -அவளை நட்புடன்
போர்த்திக் கொண்டாள் கதகதப்பு!
அவளைப் பகையுடன்
தூக்கி எறிந்துவிட்டாலோ !வாழ்க்கைப் பிரிவாம்
குளிர்தனையே தாங்கவே முடியாதே!

சொந்த மனைவி தரும் சுகம் அமுதமாகிடுமே!. படிதாண்டிவரும் காதலால் பெறும் சுகமே!
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பாகிடுமே!

அன்புக் காதலியோ! ஒரு முடிவடையாத புத்தகமாவாளே! மனைவியோ ரசித்துபடித்து முடித்த முழுப் புத்தகமாவாளே!
வரைமுறை தாண்டிய ,ஒழுக்கக் கேடான காதலே கறையான் புற்றாகிடுமே!.


கற்பினை நீ விரும்புவது போலவே உன்னை விரும்பும் மனைவியும் உன்னிடம் கற்பினையே எதிர்பார்ப்பாள் என்பதையே நீயும் மறக்காதே!

மனைவி உனக்கோ! சின்னஞ்சிறு வயதில் அன்பினைப் பகிரும் துணைவி!
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தோழியாவாளே!



உன் மனைவியின் மனதை புரிந்துக்கொள்ளாமல் அவள் எப்படி உனது மனதை புரிய முன்வருவாள்?.

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-?:வாழ்வுயர்த்தும் தத்துவமாகு!”

மோகத்தினையே முனித்துவிடு!-அன்புக்
காதலையே உயர்த்திவிடு!= தோழமையில்
வாழ்த்துகின்ற நட்போடு!-ஒற்றுமையில்
வாழ்வுயர்த்தும் தத்துவமாகு!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/”-:நெஞ்சம் நிமிரவேணும்!”

நேர்பட ஒழுகவேணும்!
நெஞ்சம் நிமிரவேணும்!
ஒற்றுமை கொள்ளவேணும்!
உரிமை வெல்லவேணும்!
சுதந்திரம் காக்கவேணும்!-உழைப்புச்
சொந்தங்கள் வாழவேணும்!
பாருயர உழைக்கவேணும்!
பாட்டாளி அரசு வேணும்!
தனியுடைமை மாற்றவேணும்!
தன்னலத்தை அகற்றவேணும்!-இங்கு
தரித்திரத்தை அழிக்கவேணும்!-பூலோக
சுவர்க்கத்தை படைக்கவேணும்!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/”-இம்மையிலே சுவர்க்கம் ”

ஒப்புரவு ஒழுகடா!
உழைப்பினை மதியடா!~
உழைப்பவர் அதிகாரம் அரியணையில் ஏறிடும் வரையினிலே!
உந்தனுக்கே உறக்கம் ஏதடா?
உழைக்கின்ற பேர்களுக்கும் உழைப்பினையே சுரண்டுகின்ற் அரக்கருக்கும்
ஒருபோர் நடக்குதிங்கே உழைப்பவரே வெல்லும்காலம் தூரத்தில் இல்லையே!
இரண்டுவர்க்கம் இல்லாத பொதுவுடைமைச் சமுதாயமே உருவாக்கிட ஓடிவாடா!
ஒருவர்க்கம் அடிமைப் படுத்திடும் த்னியுடைமை ஆளும்வர்க்கம்
ஆடுகின்ற ஆட்டத்திற்கே நீயும் முற்றுபுள்ளி வைக்காமலே
இந்த உலகினில் இம்மையிலே சுவர்க்கம் என்பது இல்லையடா!

ஒப்புரவு ஒழுகடா!
உழைப்பினை மதியடா!~
உழைப்பவர் அதிகாரம் அரியணையில் ஏறிடும் வரையினிலே!
உந்தனுக்கே உறக்கம் ஏதடா?

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”;காட்டுமிராண்டிக் காலத்திலேயே -”

காட்டுமிராண்டிக் காலத்திலேயே -மனிதன் ராகத்தோடு’ ஓ” வென்றே!
பாடத்துவங்கி விட்டானே!-இசையில்
பயணிக்கத் துவங்கி விட்டானே!-மொழிக்கும் முன்னாலே
பாடகனாய் ஆகிவிட்டானே!-சங்கீதத்தை
படித்திடவே நடந்துவிட்டானே!

ஆதிமனிதன் அவன் கத்தியதுமே! பாடலானதே!-அவனின்
உள்ளக் கிளர்ச்சி தோன்றிய போதே- மனிதன் அவனே
பாடத் துவங்கி விட்டானே!

கதைகளும் சொன்னானே!-விடு
கதைகளும் போட்டானே!-தன்
அனுபவ மொழிகளையே
அவன் தன் பாடலாலே அறிவித்தானே!

பேச்சுமொழி தோன்றுமுன்னே-ஆதிமனிதன்
பேசினானே!

சைகை மொழியானது ஒருகாலமே!
பேச்சு மொழியானது பின்னொரு காலமே!
எழுத்து மொழியானது வளர்ந்த காலமே!
சைகை பேச்சான போது போனது-பின்
பேச்சு எழுத்தான போது அறிவாய் பதிவானது
எழுத்தும் பரிணாமத்தில் மனிதனின் நாகரீக பகுத்தறிவானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”இலக்கியமே இலக்கியமே!”

இலக்கியமே இலக்கியமே!
மனிதன் தன் எழுச்சிதனையே வெளியிடவே!
மட்டற்ற விருப்பம் கொண்டதுதான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
மனிதகுல வாழ்விலும் செயலிலும்
மனித நேயம் கொண்டதுதான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!- ந்ல்லோர் கூறும்
மனிதத்தின் உள்ள ஆசையிலே
மனிதக் க்ற்பனை உலகினைப் படைத்திட வேண்டும் என்ற
மனித ஆசையிலே பிறந்தது தான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
இசையிலான ஒலிகளுக்கும் , நல்லசொற்களுக்கும்
ஓர் அழகிய உருவத்தையே உண்மையின் உயிர்ப்பினிலே
அமைத்திட வேண்டும் என்ற உந்துதலே இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
மனிதனின் சிந்தனை ஓட்டமே இலக்கியமே!








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நாட்டுப்புறப் பாடல்களே!”

உள்ளத்தையே திறந்து காட்டும் வெள்ளை இலக்கியங்களே!
எம்கிராம மக்கள் வாய்மொழியாலே பாடும் நாட்டுப்புறப் பாடல்களே!
காட்டுப் பூக்களாகவே!
காண்பாரற்று கிடக்கின்ற
கண்ணான இலக்கிய படைப்பாளர்களே எத்தனைக் கோடிப் பேர்களோ?







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”தேசத் தந்தையாம் ”

நான் மீண்டும் இந்தியாவிலே பிறப்பேன் என்றாலே
நான் தமிழகத்திலேயே -ஒரு
தமிழனாகவே! பிறப்பேனென்றே -எம்
தேசத் தந்தையாம் காந்திமகானும் சொன்னாரே!-அவரையே
தேன்மொழியாம் தமிழே அமுதமாய் தித்திக்கச் செய்திருந்ததோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”;கண்களுக்கு நன்றிசொல்லி”

எனது
உள்ளங்கனிந்த நன்றியை நானுனக்கு உரித்தாக்குமுன்னே
என்காதலியே
எனது
கண்கள் உனது கண்களுக்கு நன்றிசொல்லி கலந்துவிட்டதே!
எனது
முகத்தையே நானுன் மனக்கண்ணாடியிலே பார்க்குமுன்னே!
எனது
முகத்தையே உனது கண்களே பிரதிபலித்தனவே!-இனி
எனதென்பதும் உனதென்பதும் வேறு வேறு இல்லையடி
நமதென்பதே நாமானதாலே நாள்தோறும் சந்தோசமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”;மூளையில் நான் சிந்தித்தையே”

எனது,உனது உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்த
அந்த காரணி காதல் அல்லவா!
நான் பார்த்ததையே நீ நீயும்பார்த்தாயா?-கண்ணில்
நான் படித்ததையே நீ நீயும்படித்தாயா?- நெஞ்சில்
நான் உணர்ந்ததையே நீ நீயும்உணர்ந்தாயா?-மூளையில்
நான் சிந்தித்தையே நீ நீயும் சிந்தித்தாயா?
எனது ,உனது உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்த
அந்த காரணி காதல் அல்லவா!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”செம்மொழி வாசமாகுமே”

மண்ணின் வாசனை தானோ?
மணக்கும் தாலாட்டின் இசையே தேனோ?
கண்ணாம் தமிழினையே வாய்மொழியாலே!
காலங்காலமாகவே பாடிமகிழ்ந்திடும் தமிழ்மண்ணே!
நாட்டுப்புற பாடலாலே நாள்தோறும் சுவைகூட்டுமே!
நல்லதமிழ் கிராமமெல்லாம் செம்மொழி வாசமாகுமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தமிழ் இசைதனுக்கே ”

இலக்கணம் அறியாதவனே!
இலக்கியம் புரியாதவனே!- நாட்டார்
இசைபாடும் உழவனே!- தமிழ்
இசைதனுக்கே மெருகூட்டும் பாடகனே!-தமிழ்
இசைதனுக்கே மெருகூட்டும் பாடகனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”சுதந்திரத்தையே ”

கல்வி அறிவு இல்லாத பேரினையே ஞானமில்லா மனிதரென்றே!
காலமெல்லாம் அடிமையாக்கி கோலோச்சிடுமே தனியுடைமையே!
கல்விகற்று பகுத்தறிவால நல்ல நூல்களையே தேடி படித்திடவேண்டுமே!
கண்ணான சுதந்திரத்தையே அடகுவைக்காமலே தலை நிமிரவேண்டுமே!

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”புதுத்தண்ணி வந்தாச்சு ”

தவளையே குலவை இட்டாச்சு
தாமரையும் தடாகத்துல பூத்தாச்சு!
பொன்னான செவ்வல்லி பூத்தாச்சு பொய்கையிலே!
புதுத்தண்ணி வந்தாச்சு ஆசைமச்சான் மட்டும் வரவில்லையே!
அவனோட அன்பு நெஞ்சை இன்னும் ஏனோ தரவில்லையே!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”துரோகிகளின் கோட்டைகளும் கொடிகளும்”

துரோகிகளின்
கோட்டைகளும் கொடிகளும்
ஒரு நொடிக்குள் மாறிவிடும்- கண்ணே உன் செங்கொடி இடை சேர்ந்தே இரட்டைஇலைவிழி நிமிர்ந்தே-உன் அன்பின் ஆட்சியிலே
உன்கொடி பறந்திடும் ஆகாசமே!
அதுகோட்டை தனையே அலங்கரிக்குமே!
அந்நாள் வெகுதொலைவினில் இல்லை இல்லையே!
அந்நாள் ஏழைக்கு பொன்னாளாய் ஆக்கிடும் நன்னாளாம்!








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”போரெடுத்த களம்போல”

காதல்
கண்ணான கண்ணனுக்கு கண்ணேராம்
சுண்ணாம்பு மஞ்சலுமாய் சுற்றியெறி கண்ணனுக்கு
ஆனாலும் அவன்குசும்பு போகலையே ராக்கம்மா!
காலையில் பூத்ததாமரைப் பூ நானிருக்க
காடுசுத்தி அத்தைமகன் காடுமேடாய் சுத்துறானே!
உச்சியிலே பூத்த்பூவு குண்டு மல்லி நானிருக்க
ஊருசுத்தி மச்சானே ஊரு ஊரா சுத்துறானே!
உன்னோடு நான்கூடி உலகெல்லாம் பேரெடுத்தேனே!
போரெடுத்த களம்போல பொங்குதடி எம்மனசு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல் வழக்கம் என்பது ”

கண்ணின் பழக்கம் என்பது காதலில் புதிதாய்
கண்பாவையிலே பழகிவந்தது-காதல்
வழக்கம் என்பது ஆதிகாலந்தொட்டு,சங்ககாலம் தொடர்ந்து-அன்பாலே
வழங்கி வாழ்த்தி போற்றிவந்தது







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல் கவிதைக்கு விழிகள் உண்டு’

கதைக்குக் கால்கள் இல்லை இல்லை -ஆனாலும்
கதைக்கு சிறகுகள் உண்டு உண்டு-காதல்
கவிதைக்கு மொழிகள் இல்லை இல்லை- ஆனாலும் காதல்
கவிதைக்கு விழிகள் உண்டு உண்டு

கதைக்கு கால் அல்லது இல்லை இல்லை என்பாரே!
கதைக்கு கால்பாகம் உண்மை உண்மை
கதைக்கு முக்கால்பாகம் கற்பனைதானே!-கதைக்கும் ,கவிதைக்கும்
கற்பனை இருந்தால் சிறகினை விரிக்கும் வானிலும் பறந்திடுமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நெலா மொட்டையாண்டி”

எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!
எங்க நாம போனாலும் பின்னாலேயே வாறானே!
ஒளிகொடுத்து வழிசொன்னான் போகும் பாதையெல்லாமே!
அந்திவேளையிலே இளந்தென்றல் தாலாட்டவே
வந்து வந்து காதல் காவியமாய் சிரித்து நின்னானே!
எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!
போடானு சொன்னாலும் போகவே மாட்டேனுறானே!ஆனாலும்
காலையது வந்துபுட்டா காணாமத்தான் போயிடுறானே!
கருமிருட்டையே மிரட்டி அடிபணியவெச்சு ஒருராஜாங்கம் நடத்துறானே!
எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒருதேன்கூடாம்!”

ஆகாச உசரத்துல ஒருதேன்கூடாம்!
இருட்டுப் பாதையிலே
இடிவிழுந்த பாறையிலே!
நான்வைத்த காதல் தேன்கூட்டுக் கட்டுச்சோறு
நனையாமல் இருக்கின்றதா?
நான்கேட்டு சுவைக்கின்றதா?
நலமாகவே திளைக்கின்றதா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:எங்க இளைய கொழுந்தன்”

ங்க இளைய கொழுந்தன் உப்பில்லாமலே!
என்னகறி வைப்பேனோ?அதுல
என்னசுவைதான் சேர்ப்பேனோ?


கடுகு,மிளகு.சீரகம்
காருகுறிச்சி வெங்காயம் கொடைரோடு முட்டைக்கோஸ்,
காட்ரோடு காரட் எல்லாமே இருந்தாலுமே!

எங்க இளைய கொழுந்தன் உப்பில்லாமலே!
என்னகறி வைப்பேனோ?அதுல
என்னசுவைதான் சேர்ப்பேனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!-”

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!-காளான்
மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!
அர்த்த ராத்திரியிலே ஆருமில்லா வேளையிலே
அத்துவானக் காட்டுக்குள்ளே மழையில்லா வேளையிலும்
கூடி நின்னு குடைபிடிப்பாராம்!
ஆரு என்ன சொல்லிதூற்றினாலும்
அவரு அசிங்கப் படமாட்டாராம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”என்சாபம் உன்னைவிடாது!”

பருத்தி இளம்பருத்தி!
பாங்கான செம்பருத்தி!
வருத்தமும் ஏனடியோ?
வாய்விட்டுச் சொல்லாயோ?

ஆத்துக்கு அக்கரையில்
அத்தைமகன் நீயே காத்திருக்க
வாய்திறந்து பாடுகின்றேன்!-எந்த இசையும்
வார்த்தைக்குள்ளே அடங்கவில்லையே!

ஆசை பெருகுதடி உனக்குள் அழகுதுரை என்னாலே!
எனக்குள்ளே நீயாக என்ன பதில் வைத்துள்ளாய்
ஆசைமச்சான் வார்த்தைக்குள் நானிருப்பேன்!
அன்பான சம்மத்தையே நான் தருவேன்!

ஆசை பெருகினாலும் அழகுதுரை மன்மதனே!
என்னைவெச்சு ஆதரிக்க என்னதான் நீதருவாயோ?
என்ன தருவேன் என்று ஏந்திழையே கேட்டுவிட்டாய்-என்
ஆவிதனைக் கேட்டாலும் அன்னமே நானுனக்கு தருவேனே!

ஆத்திரந்தான் தீருமட்டும் ஆயிரபொய் கூறிவிட்டு
சுகத்தை அனுபவித்தால் என்சாபம் உன்னைவிடாது!
என்மேலே ஏனுனக்கு சந்தேகம் தீராதோ?
என்னுயிர் உள்ளவரையினில் நானுன்னுயிராய் இருப்பேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”கற்பனைக் காட்டாறே!”

கன்னி இளந்தேனே!
கற்பனைக் காட்டாறே!-காதல்
கற்கண்டுக்கே எந்தப்பக்கம் இனிப்பென்றே!
சந்தேகத்தோடு கேள்விகளே ஏதுக்கடி?காதலி உன்
கடைக்கண்ணில் ஒருகாவியத்தையே சுவைத்தேனே!
காலமெல்லாம் பேரின்பத்திலே நானும் திளைத்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-””அழிப்பான் கதையா?-அடி நொடிக்கதையா?பிசியா?”


அழிப்பான் கதையா?-அடி நொடிக்கதையா?பிசியா?

வெடிக்கதையா? அவிழ்க்கும் கதையா?
விடுகதையா?புதிர்ச் சொலவடையா?- நானும்
சொல்லாலே முடிச்சுப் போடவாரேன்!-அடியே துணிவிருக்கா?
சொல்முடிச்ச அவிழ்ப்பதுதான் யாரு?

சின்ன பையனும் சின்னப் பொண்ணும்
சிரித்துக் கட்டுன மாலை -இதை சிக்கலில்லாம அவிழ்த்தவர்க்கே திருவருட்பா புத்தகமே தாரேன்!
அது என்ன?குருவிகளே!
நடை நடையா நடந்து பறந்து பறந்து
சின்ன சின்ன சுள்ளிகளை பொறுக்கி
வண்ண வண்ண கூடுகட்டும் தூக்கணாங்குருவிக் கூடு அதுதானடி!

தன்னைத் தானே பலிகொடுத்து
தான் மற்றவர்க்கே ஒளிகொடுப்பது யாரு?
தன்னைக் கொடுத்து தன் தேசத்தை பாதுகாத்திடும் போராளியைப் போன்ற
மெழுகுவர்த்தி தானடி!

காவி உடை அணிந்து கள்ளத் தவசியைப் போலவே!
கரை ஓரத்திலே கடுந்தவம் செய்வதுதான் யாரு?
கடவுள் நம்பிக்கை கொண்டவரை பக்தி என்ற போர்வையிலே
காலமெல்லாம் ஏமாற்றிவரும் போலி சாமியாரைப் போலவே!
கரையோரத்தில் ஏமாந்த மீன்களையே இரையாக்க துடித்திடும் கொக்குதானடி!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/::”கற்பனைச் சிறகினை விரித்து ”

வயல்வெளியே !
வாய்க்கால் ஓரமே!
காட்டு வழியே!
காலையிளம் தென்றலிலே!
கவின்மிகு சோலையினிலே!
செந்தமிழ் பரப்பவந்த தென்பாங்கே! தெம்மாங்கே! தேனிசையே!-
எங்கள் கிராமத்து இதய ஒடையில்
எழுந்த எண்ண அலைகளின் சின்னங்களே!
தென்பாங்கே ! தெம்மாங்கே! தேனிசையே!-
வாழ்வின் எல்லைகளையே தொட்டுப் பாடிடும்!
வட்டமிடு ம் தொல்லைகளையே சீண்டிப் பார்த்திடும்!
கனவுகளை பறக்கவிட்டு பாடி நின்றிடும்
கற்பனைச் சிறகினை விரித்து வானில் பறந்திடும்
தென்பாங்கே ! தெம்மாங்கே! தேனிசையே!-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:”காதல் மெட்டு ஒன்று தானடி! ”

தேனொடு கலந்த தெள்ளமுதே! தெம்மாங்கே! தென்பாங்கே! தேன்பாகே!
காதல் மெட்டு ஒன்று தானடி! காணும் இன்னிசையோ கோடியாகுமடி!
தேங்கிளியே! பாசுரமே ! திருவாசகமே!-பாடிடும் காதலர் மட்டுமே
மாற்றி மாற்றி வேறு வேறு இன்னிசையில் பாடிட வந்தோமே!-காதலினையே
போற்றி போற்றி நெஞ்சினில் இருத்தி மகிழ்வினில் வாழ்வோமே!

காதல் மெட்டு ஒன்று தானடி!
தேங்கிளியே! பாசுரமே ! திருவாசகமே!-
காணும் இன்னிசையோ கோடியாகுமடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:”உன் நினைவில்லாத இந்த பிரபஞ்சம்”

நீ இல்லாத இந்த மண்ணில்
நான்
நிலவில்லாத வானம்
நீரில்லாத பூமி
உன்
நினைவில்லாத இந்த பிரபஞ்சம்
எனக்கு மகிழ்வில்லாத பாலைவனம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:-கையூட்டாம் வைட்டமின் “ப”

-கையூட்டாம்
வைட்டமின் “ப” கேட்கும்
தேசம் எங்கள் தேசமடா!
காசிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தவறான தத்துவத்தையே
கையிலெடுத்த தட்டுக்கெட்ட தேசம் எங்கள் தேசமடா!-இது
தன்வாக்கினையே காசுக்கு விற்கும் மானங்கெட்ட தேசமடா!

காசுள்ள கனவான்களின் கைக்குள்ளே சிக்கி நாறும் தேசமடா!- நல்ல
கடமையுள்ள மனிதர்கள் நாணிக்குறுகி நிற்கும் தேசமடா!

பிறப்பு,இறப்பு சான்றிதழ்களுக்கு கூட -கையூட்டாம்
வைட்டமின் “ப” கேட்கும்
தேசம் எங்கள் தேசமடா!-தங்கள்
கடைமைதனைச் செய்வதற்கே காசுதனை எதிர்பார்க்கின்ற
கடைந்தெடுத்த கேடுகெட்ட நாசாமாக போயிவிட்ட தேசமடா!
இப்படிப்பட்ட லஞ்சமாம் பேர்களுக்கே!~
நாமெல்லாம் சரியான கடிவாளம் போடவேணுமே!
சாட்டைதனைச் சுழற்றிடுவோம்! தவறினையே மாற்றியே!- நாட்டினையே
சரியான பாதைதனுக்கே திருப்பிடுவோமே!

Monday, October 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதத்தையே”

காணடா! மனிதா!
சாதிமத இனமொழி நாடு உலகம் என்னடா? எதுவும் நமக்கில்லையடா!
இந்த பிரபஞ்சமும் நமக்கில்லையடா!
மனித நேய நட்புதான் நமக்கு எல்லையடா!
மனிதத்தையே உயர்த்துவது தான் நமதுமுதல் வேலையடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”பகுத்தறிவில் ”

வெளியேதடா? வெளிக்குள்ளே வெளியங்கேதடா?
வேதாந்த வெளிகடந்த ஒளியங்கேதடா?
காற்றுக் கடந்த அண்டமும் ஏதடா?-அப்புறத்தே
தோன்றுகின்ற சோதியும் ஏதடா?
நினைவும் ஏதடா? மறப்பும் ஏதடா?
நித்தியம் ஏதடா? நிர்குணமும் ஏதடா?
நேரான பூரணத்தின் நாதமும் ஏதடா?
சுழியேதடா? சுழியடக்கும் சூட்சுமமும் ஏதடா?
எல்லாமே பகுத்தறியும் பகுத்தறிவில் அறிந்துவிடும் மெய்ஞானமே ஆகுமடா!

மண்ணேதடா? விண்ணேதடா?
கண்ணேதடா?கருத்தேதடா?
எல்லாமே பகுத்தறியும் பகுத்தறிவில் அறிந்துவிடும் மெய்ஞானமே ஆகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:பகுத்தறிவாலே”

மோகமென்ற உரலுக்குள்ளே உன்மனதும் சிக்காமலே!-உண்மை
காதலன்புக்குள்ளே நீயும் உறவு கொள்வாயே!
காலத்தச்சன் வருமுன்னே காணும் நாளெல்லாமே- நல்லோரின்
கால்சுவட்டில் அடியெடுத்து பகுத்தறிவாலே நல்லனவே செய்திடுவாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:பகுத்தறிவினாலே”

காதல் மருந்தறிந்தேனே !-பார்வையாலே
கண்ணின் மணியறிந்தேனே!-பருவத்தாலே!
மோக மந்திரம் அறிந்தேனே!களவாலே!
முத்த சூத்திரம் அறிந்தேனே!

நல்லோரின் உறவாலே!
நல்லமதி அறிந்தேனே!பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலிலே!
அன்புவிதி புரிந்தேனே!-பகுத்தறிவினாலே
வாழ்க்கை உண்மை நிலை நானறிந்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-::::;;”மனிதத்தையே ”

ஆனந்தத் தேனே ஆனந்தத் தேனே!
அறிவாம் அமுதே அறிவாம் அமுதே!
மதிமுக அமுதே சுக அக அழகே! இளங்குயிலே!
அஞ்சித ரஞ்சித குஞ்சித மாதே!
இம்மையிலேயே நன்மைசெய்யும் பாங்குகொண்டு
இவ்வுலகினில் மனிதத்தையே உயர்த்திடுவோமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”பகுத்தறிவுதான் ”

நின்ற நிலை பேராமல் நினைவில் தீயன ஒன்றும் சாராமல்-ஆய்ந்தறிந்து
சென்ற நிலை பகுத்தறிவுதான் என்பேனே!
சோம்பலிலே நிற்காமல் சுறுசுறுப்பில் அனுதினமும் - நற்கடமை ஆற்றி
நாடெல்லாம் நல்லோரின் கூடாரம் ஆக்கிடுவேனே!

Saturday, October 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:’பால்வெளியே”

விண்ணிலிருந்து மண்ணிற்கே பால்வெளியே வெண்மழையாகவே பொழிந்தது போலவே!
இமயமாம் மலையினில் பனியும் வெண்ணுரையினில் சிரிக்கின்றதே !
அந்தக் குளிரினில் அமுத சுகத்தினில் பேரின்ப வெள்ளமானதே!
ஆகாயமே வெண்ணிறத்தினில் நீலமும்மறைந்து தூயமையானதோ?

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”மறையாத ஞாபகங்களே!!”

என் மனதில் என்றும் மறையாத ஞாபகங்களே!!
காதலி அவளின் கடைக்கண் பார்வையின் வீச்சுகளாகவே!

நீங்காத நினைவுகளே!

நின்றாடும் கனவுகளே!
நிழலாடும் புதுமைகளே!
நீந்துகின்ற உறவுகளே!
அன்றன்று எழுதுகின்ற புதுக்கவிதைகளாகவே!
அதிகாலை மலர்கின்ற மலர்களாகவே!
அந்திமாலை தழுவுகின்ற தென்றலாகவே!
என் மனதில் என்றும்
ஆர்ப்பரித்திடும் அலைகளாகவே!


என் மனதில் என்றும் மறையாத ஞாபகங்களே!!
காதலி அவளின் கடைக்கண் பார்வையின் வீச்சுகளாகவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”காதலியே! என் தோழியே! ”

காதலியே! என் தோழியே! என் துணையே!என்னுயிரே!
நீயருகினில் இருந்த போது உனது அருமை எனக்குத் தெரியவில்லைய்டி!
உனது அருமை தெரிந்தபோதோ நீயோ என்னருகினில் இல்லையடி!
நெஞ்சினில் நீயும் வந்தபோதே என் காதலையே சொல்லவில்லையே!-காதலினையே
சொல்லவேண்டும் என்ற நினைவுவந்தபோதோ நீயென்னருகே இல்லையடி!
தூரத்திலே நீயும் சென்ற போதிலுமே நம்காதல் அன்பதுவும் மாறித்தான் போயிடுமோ?
அருகினிலென்ன? தூரத்திலென்ன?எங்கிருந்த போதிலுமே நம்காதலே!
உலகம் , நாடு, சாதிமத,இனமொழி கடந்து வாழும் பேரின்பமில்லையா?

காதலியே! என் தோழியே! என் துணையே!என்னுயிரே!
நீயருகினில் இருந்த போது உனது அருமை எனக்குத் தெரியவில்லைய்டி!
உனது அருமை தெரிந்தபோதோ நீயோ என்னருகினில் இல்லையடி!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”ஓர் கடைக்கண் பார்வையிலே !”

உன்குளிர்ந்த ஓர் கடைக்கண் பார்வையிலே !பூத்துக் குலுங்கும்
அன்புமலர் என்று ஒன்று இருப்பது தெரியாமலே!உன்விழியழகைப்
பாராமலே உன்காதலனும் பாராமுகமாகவே
தூரத்திலே செல்வதும் ஏனோ!-காதல்
பேரின்பம் கொள்ளாததும் ஏனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:கொடுமையான வில்லனாய் ”

ஆதவனே ! நீயும்
புல்லின் மீது பனிகொண்ட காதலை உன் வெம்மையாலே எரித்தே!
உண்மைக் காதலை விரும்பாத கெட்ட பெற்றோரைப் போலவே அதிகாலையிலேயே!
கொடுமையான வில்லனாய் மாறிப் போனதும் ஏனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:அன்பின் வழியது ”

அன்பின் வழியது உயிர் நிலை ஆகுமடா!
அதுவே மனிதத்தின் உயர் நிலையும் ஆகுமடா!
அன்பின் மொழியே வாழ் நிலை ஆகுமடா!
அதுவே உலகின் உன்னத நிலையும் ஆகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”அன்பின் தோழமையால் ”

அன்பின் பெயரால் உண்ணுகின்றேன்!
அன்பின் சுவாசத்தால் வாழுகின்றேன்!!
அன்பின் உறவால் மகிழ்கின்றேன்!
அன்பின் தோழமையால் உயர்கின்றேன்!
அன்பின் ஆட்சியால் புன்னகைக்கின்றேன்!
அன்பின் மாட்சியால் புளங்காகிதம் அடைகின்றேன்!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”அன்பே மிகப்பெரிதாமே!”

அன்பே மிகப்பெரிதாமே!
அன்பினைப் போற்றுபவரே மிகப்பெரியவராமே!
அன்பே! நன்மையுமே!
அன்பே! உன் நன்மை அல்லாது வேறில்லையே!
அன்பே!
உன்னையன்றி வேறு ஏற்றப் படுதலும் இல்லையே!
எந்த அன்பிற்கே!
நல்லோரை நீங்களும் நேசித்தீரோ?
அந்த அன்பினை
எல்லோரும் நேசிக்க வைப்பீரே!
அன்பே மிகப்பெரிதாமே!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:எல்லாப் புகழும் அன்பினுக்கே!”

எல்லாப் புகழும் அன்பினுக்கே!
எல்லா உறவும் மனிதத்துக்கே!
அன்பினுக்கே மதமொன்று இல்லையடி!
அன்பில்லாத நெஞ்சினிலே மகிழ்வென்பது இல்லையடி!
வணங்கப் படுவது அன்பன்றி வேறு இல்லையடி!
ஆட்சியும் அனபினுக்கு உரியதே!
எல்லாப் புகழும் அன்பினுக்கே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-::”அன்பைத் தவிர ”

வணக்கத்துக்கு உரியது அன்பைத் தவிர வேறொன்றுமில்லையடா?
வாழ்த்துக்கு உரியது மனித நேயமன்றி வேறொன்றும் இல்லையடா?
வாழ்வதற்குரியது மக்கள்ஜன நாயக மன்றி வேறொன்றும் இல்லையடா?
வணங்குவதற்குரியது பொதுவுடைமை அன்றி வேறொன்றும் இல்லையடா?

Sunday, September 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம் /-”ரவுடிப் பய நாட்டாமை ”

குமருன்னு இல்லாம வாக்கப்பட்டேன்- நானே
மலடுன்னு இல்லாம பிள்ளை பெத்தேன்
கொண்டவன் துணையுன்னு வாழவந்தேன் -ஆனா எனக்கு
வாச்சவனோ குடிகார நாயாச்சே!-எங்க திரும்பினாலும் -இங்க
டாஸ்மார்க் கடையாக ஆச்சே!இந்த குடிகாரனோ!
கூலிய எல்லாம் குடிச்சானே-இங்க
கும்பி பசியாலே வாடிப் போச்சே!-பள்ளிக்கூடத்து
பக்கத்துல சாராய கடையிருக்கே!
படிக்கவாற புள்ளைக்கு எல்லாம் இடைஞ்சலாச்சே!-ரவுடிப் பய
நாட்டாமை இங்க பெருத்துப் போச்சே!
நல்லவங்க கருத்து எளைச்சுப் போச்சே!-இங்க
நல்லது எப்போ? நடக்குமுனு கேள்வியாச்சே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இலக்கியமே! இலக்கியமே!”

தன் எழுத்தாலே!
முடிவில்லாமல் வாழ்கின்ற
இலக்கியமே! இலக்கியமே!

மனிதன் வாழ நினைத்த எதையுமே தன் படைப்பாகவே!
முடிந்து போகும் மனிதனின் வாழ்கின்ற
வாழ்க்கை பற்றியே பேசவந்தது -தன் எழுத்தாலே!
முடிவில்லாமல் வாழ்கின்ற
இலக்கியமே! இலக்கியமே!
மறுவாசிப்பினிலே!ஒருபுத்தகமே -தன்னையே தகர்த்துக்கொண்டே!
தன்னைத் தானே சுத்திகரித்து-உலகினிலே
எந்தக் கருத்தும் இறுதி அல்லவென்றே!
ஒவ்வொரு படைப்பிற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தமாயிருக்கின்றதே!

தன் எழுத்தாலே!
முடிவில்லாமல் வாழ்கின்ற
இலக்கியமே! இலக்கியமே!

Saturday, September 25, 2010

தமிழ்பாலா-/காதல்/க்விதை/தத்துவம்/-”மெளனமே ” !

மெளனமே! நம்பிரிவாம் ஊடல் அமைதியானதோ?
மெளனமே !நம்காதலினை வேதமாக்கியதோ?
மெளனமே !நம்தவறினையே யோசிக்க வைத்ததோ?
மெளனமே ! நம்மிதய வலிதனுக்கே மாமருந்தானதோ?
மெளனமே !நம்சேரும் உள்ளங்களின் நம்பிக்கையானதோ?
மெளனமே !நம்வெட்டி வாதங்களையே அழிக்கவந்ததோ?
மெளனமே ! நாம்மீண்டும் உறவாடவே வழிசொன்னதோ?
மெளனமே ! நம்காதல் தியானத்திற்கே நிலையானதோ?
மெளனமே ! நம் நல்வாழ்வினிற்கே சம்மதமானதோ?






Friday, September 24, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்”காதலில்லாத உலகமில்லையே!”

What you Feel! What you See!What you hear!

காதலில்லையென்றால் அது உலகமில்லையே!
காதலில்லாத மனிதரும் மனிதரில்லையே!
காதலில்லாமலே எந்த ஜூவனும் இல்லையே!
காதலில்லாமலே எந்த பிரபஞசமும் இல்லையே!

நீயென்ன உணர்ந்தாயோ? நெஞ்சினிலே
நீயென்ன பார்த்தாயோ? கண்களிலே
நீயென்ன புரிந்தாயோ? நினைவினிலே!
நீயென்ன அனுபவித்தாயோ? காதல் அன்பினிலே
நீயென்ன கற்றாயோ? வாழ்வின் துணையினிலே!
காதலில்லாத உலகமில்லையே!
காதலிக்காதோர் உலகிலில்லையே!
காதலில்லையென்றால் அது உலகமில்லையே!
காதலில்லாத மனிதரும் மனிதரில்லையே!
காதலில்லாமலே எந்த ஜூவனும் இல்லையே!
காதலில்லாமலே எந்த பிரபஞசமும் இல்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”காதல்மொழியாலே!””

கதிரவனே கதிரவனே இன்னும் உதயமாகவில்லையே!-இன்ப
மோகனமான இருள் உன்னையே தழுவுகின்றதே!
காதலான திரைதான் உன்னை என்னுள் ஆக்குகின்றதோ?
உன்
வதனத்திலும் உன்கண்களிலும் உறக்கத்திலும் விழிப்பினிலும்
வந்து சேர்ந்த அன்பின் அமைதியிலும் என்னசாந்தி என்னசாந்தி?
இந்த வசந்தமான இளமையான அதிகாலையில் தடுமாறும் என்வார்த்தைகளில்
அந்த தென்றல் இழைந்தோடும் அருவி நீரின் சலசலப்பிலும் என்கவிதையே!

இளையவளே இனியவளே! அன்புக்கு உரியவளே! என் துணையானவளே!-உனக்கேற்ற
இளையவனே சிறந்தவனே நல்லவனே நான் தான் அல்லவா?
உன்னிதயத்தில் ஒலிக்கின்ற பருவத்தின் இலக்கியமல்லவா?
உனது கனிந்த குளுமையான பார்வையிலே அன்பே நீயும்
என்னையே ஒருபோது திரும்பி பார்த்திடவே மாட்டாயோ?
உலகமெங்கும் ஒரேமொழி உண்மைபேசும் காதல்மொழியாலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!”காதல் பண்பினிலே தேடடி!”

காதலியே உந்தனுக்கே காதல்வரும்
நீயும் வந்து பாரடி!
நெஞ்சாரவே பாடடி!
நேசத்திலே கூடடி!
நெருக்கத்திலே ஊடடி!
பருவத்திலே நாடடி!-காதல்
பண்பினிலே தேடடி!

குளிர் நிலவும் வந்ததடி!
கோலமயிலும் ஆடுதடி!
நீலக்குயிலும் பாடுதடி!
தென்னங்கீற்றும் சலசலக்கவே! தென்றலிலே
தெம்மாங்கும் கலகலத்ததடி!காதலியே உந்தனுக்கே காதல்வரும்
நீயும் வந்து பாரடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”நல்லதொரு இலக்கியம்””

கவிஞனே காவியக் கவிஞனே! இலக்கியம் படைத்திடவே வந்தானே!
மொழிவேகங் கொண்டு
சொல்லின் நயங்கொண்டு-அன்பு
மனலயங் கொண்டு மக்கள் கலையின் பொருள்தான் கொண்டு
கவிஞனே காவியக் கவிஞனே! மக்களுக்கே! நல்லதொரு
இலக்கியம் படைத்திடவே வந்தானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”பகலும் இரவும்”

பகல்மீனைப் பிடித்திடவே இரவுவலை வீச வந்ததோ?-இல்லை
இரவுக் கதா நாயகனுக்குப் பயந்து பகல்வில்லனும் ஓடிவிட்டானோ?
பகலின் இன்பமே இருந்துவிட்டால் இரவின் துன்பம் அறியாதென்றே!
பகலும் போயிடவே இரவும் தன் ஆட்சிதனையே நடத்திடவே வந்ததோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்பில்லாத

நிலவில்லாத வானில் இருள்கூட்டி மூழ்கும் கார்மேகமானேனே!
நீரில்லாத ஆற்றில் தரைதட்டி நிற்கும் கப்பாலானேனே!
நினைவில்லாத மனதினிலே அலைமோதிடும் எண்ணமாகினேனே!
நீயில்லாத உலகந்தன்னில் அன்பில்லாது ஏங்கினேனே!

Wednesday, September 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சன்னல் நிலவு”

காதலியவள் உருவினிலே!
அமாவசையன்றும் அழகிய நிலவினையே எதிர்வீட்டு சன்னலில் பார்க்கச் சொல்லியென்னை தொட்டுச் சென்று அணைத்து
ஆதரவாக அழைத்துச் சொன்னது இளந்தென்றல் காற்றே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” காதலர்க்கு மட்டுமே”


காதலில் மட்டுமே
ஊடலும் , கூடலும்
வெற்றியானது!
கண்களில் மட்டுமே
நோயும் , மருந்தும்
விருந்தானது!
நெஞ்சினில் மட்டுமே
காத்திருப்பதும் ,காக்கவைப்பதும்
சுகமானது!
காதலர்க்கு மட்டுமே
காலமும்,பொழுதும்
மறைவானது!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” திருவாசமோ?”


உனது அழகிய தாமரைச் செவ்விதழ்களிலே!-அமுத இன்பவார்த்தையாம் தேன்
வரிகளில் நீயும் எத்தனை எத்தனையோ அனுபவப் பாடங்கள் சொல்லிடத்தான் வந்தாயோ!
உனது அந்த தித்திக்கும் இதழ்கள் என்ன திருவாசகமோ?
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” விளம்பரம்”


கோடிகோடியாய் செலவுசெய்து மாளிகை கட்டி அன்னைஇல்லம் என்று பெயர் வைப்பார்-அவரின் தாய் தந்தையரோ! முதியோர் இல்லத்தில் வசித்திருப்பார்-அவர்
தான் பெற்றுக்கொண்ட குழந்தைகளின் நல்வாழ்வில் அக்கறையின்றி நடந்துகொள்வார்-ஆனாலும்
அனாதை குழந்தையர்க்கு ஆயிரமாய் செலவுசெயகின்றோம் என்று
அனுதினமும் பத்திரிகையில் விளம்பரம் செய்திடுவாரே!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-: ”காதலாகி”

உனது நிழலை ஓவியமாக்கிடும் சூரியக் கதிராம் தூரிகையே!
உனது குழலைக் காவியமாக்கிடும் தென்றல் தாலாட்டியே!
உனது மழலைச் சொல்லினையும் தமிழிலக்கிய மாக்கிப் பார்த்திடுமே!
உனது பழகும் அன்பு நெஞ்சினிலும் காதலாகி கனிந்திடுமே!











தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”
அந்தியிலே அழுதவானம் எழுதிப் பார்த்திடும் ஆசை அந்தரங்ககளோ?
அமுத மழைச் சாரலிலே தூவுகின்ற தூவானச் சின்னஞ்சிறுத் துளிகளே!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:

Tuesday, September 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:தாடி வளர்த்ததாலே

சோகத்தின் அடையாளமா?
சிந்தனையின் அடையாளமா/
அழகின் அடையாளமா?-இல்லை
சோம்பேறிகளின் அடையாளமா?
எதுவென்று தெரியவில்லை!
ஆனால் தாடியோ!
புல்லைப் போலவே மண்டிக்கிடக்குது தாடியுள்ள முகத்தினிலே!
ஞானியும் தாடி வெச்சு இருக்காரு!-விரக்தி
ஆனவரும் தாடி வெச்சு இருக்காரு!-காதல் தோல்வி
ஆனவ்ரும் தாடி வெச்சு இருக்காரு- தீவிர
வாதிகளும் தாடி வெச்சு இருக்காங்க!முடிதனை
எடுத்திட மறந்தாரும் தாடி வெச்சி இருக்காங்க!
சங்க காலத்துல கருந்தாடி ஆண்மைக்கு அழகுனு சொன்னாங்க! நாகரீகமா
குறுந்தாடி வெச்சு சிலகாலம் சிலரும் அலட்டி இருந்தாங்க!
எது எப்படி இருந்த போதில்லும் தாடி வளர்த்ததாலே மழிக்கிற செலவு மிச்சமாச்சுதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:உண்மையான ஆண்மகனே!

ஆடிப் பாவையைப் போலவே துணைவி சொல்லும் சொல்லுக்கெல்லாம் ஆடுவான்!-அவள்
ஆடுவதற்கெல்லாம் அவள்சொல்லாமலும் கூட கணவனவன் ஆடுவான்!பெண்டாட்டி
அவள்தனக்கு கூஜா தூக்கியே அவளின் பின்னே செல்லும் அந்த ஆண்மகனே!
ஆணுக்குப் பெண்ணிங்கே சளைத்தவளில்லை சமமானவள் என்று சம உரிமையில்
தோள்கொடுத்து தோழமையோடு நாட்டின் நலத்திற்கு உழைப்பவனே உண்மையான ஆண்மகனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:யாதும் நம்மூரே!

காதல் தலைவா! உனது நாட்டினில்
கலங்கிய நீரும் இனிக்கிறது என்றால்!
கனிவாய் சுவைப்பது நீரா?இல்லை உனது அன்பா?
அன்பின் முதல்வா! ஆசை துணைவா!
யாதும் நம்மூரே! யாவரும் நம் சுற்றத்தவரே!
உலகம் நம்வீடே !உலகத்தோர் எல்லாம் நம்சொந்தங்களே!

Sunday, September 19, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நீயொரு விதிசெய்து

கரைதொடும் வரையினில்
கால்களே அணையாகவே!
தேடுது தேடுது கண்களே! எங்கே எங்கே கரையென்று?
துடுப்பில்லாத படகுக்கோ! அலைகளே மாலுமியானதோ?

விதியே முடியுமென்று?-
யார்சொன்னது?-மூட
விதிதனை எண்ணுதல் விட்டு-
அடியே புதிய
விதிதனை செய்திடுவோமே!
காற்றுத் துணையிருக்கும் வரையினில் [எந்த
கடலிலும் தொடரும் வாழ்க்கையடி!
சிலரோ!
விதியுண்டு ஒதுக்கிவிட்டு கடமையைசெய் என்பாரே!
சிலரோ!
விதிக்குள் அடங்கி அதன்வழி செல் என்றும் சொல்வாரே!
வேறு சிலரோ!-மூட
விதி என்பது இல்லையென்றாலும் இருந்தாலும் நீயொரு
விதிசெய்து அதன்வழி ஒழுங்கு வழுவாம்லே வாழச் சொல்வாரே!

கரைதொடும் வரையினில்
கால்களே அணையாகவே!
தேடுது தேடுது கண்களே! எங்கே எங்கே கரையென்று?
துடுப்பில்லாத படகுக்கோ! அலைகளே மாலுமியானதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நம்காதலுக்கு!

காதலியே என் தேவதையே !
கண் இல்லையோ கண்ணில்லையோ?- நம்
காதலுக்குக் கண்ணில்லையோ? நம்காதலுக்குக்

கண் இல்லை என்றாலே!கண்ணே
காலம் நம்மையே காதலிலே
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
எப்படித்தான் சேர்த்திருக்குமோ?
இன்பக் கவிதைதான் எழுதி இருக்குமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் என்பது!

காதல் என்பது
கவிதை ஆனது கண்ணால் வாசித்து பார்த்தேனே!

காதல் என்பது
கணிதம் ஆனது வாழ்க்கைக் கணக்குபோட்டு சேர்ந்தேனே!
காதல் என்பது
கடும்பனி ஆனது ஒன்றுபட்டு வெற்றி கொண்டேனே

கண்ணீர் காதலின் வரவு என்றாரே
அதையும் போராடி நானும் ஆனந்த கண்ணீர் ஆக்கினேனே!
காதல் என்பது கானல் நீர் என்றாரே காதலில் தோல்வி கண்டோரே!
காதல் என்பது சோலைவனம் என்று நானும் காதலியை கைப்பிடித்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-மனிதத்தின் உண்மையாம்!

உன்விழியோடு என்விழிபேசும் காதல் மொழியினிலே!
என்முகம்காண சன்னலோரம் காத்திருக்கும் வழியினிலே!காதலியே
உனக்கு மட்டும் தானே தெரியும் உனக்கும் எனக்கும் தெரிந்த மனிதத்தின் உண்மையாம்!
காதலென்ற இனிமையது வாழும்
கவிதை என்று நம்மை
வாழ்த்தும் அன்பு என்று

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:பயணம்

பயணம் பயணம் பயணமடி-வாழ்க்கைப் பயணமடி
பிறப்புமுதல் இறப்புவரை வாழும் நாள்வரையில்
பயணம் பயணம் பயணமடி-வாழ்க்கைப் பயணமடி
பயணம்
துவங்கிய போதோ நினைவில் இல்லை-பயணம்
தொடரும் நாளிலோ வாழ்வும் புரியவில்லை-பயணம்
முடியும் இடம் தெரிந்தபோதும் இப்போதே போக முடியவில்லை
பயணத்தை இன்றே முடித்திட நானொன்றும் கோழையில்லை!

அனுதினமும் நடக்கின்ற பயணத்தில் இன்ப இலக்கினை அடையவில்லை-பயணத்தில்
அன்றாட தேவைக்குப் போராடும் பாதைக்கு இன்னும் குறைவில்லை!
அரசியல் வேடதாரிகளின் சொல்கேட்டு என் ஏமாற்றத்திற்கோ பஞ்சமில்லை-ஐந்து
ஆண்டுக்கு ஒருமுறை என் தலைமொட்டை அடிக்கப்படுவது இன்னும் நிற்கவில்லை
கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன் நானிதுவரை நல்லது கெட்டது தெரியாமலே
காலத்தை ஓட்டிய முட்டாள் தனத்தை எண்ணி நிமிர்ந்து விழித்து எழுந்து நிற்கின்றேன்!
பயணம்
எங்கே போகிறேன் என்று இப்போது நானே தெளிவாய் தெரிந்துகொண்டேன்
நல்லமனிதரின் துணையோடு புதியபாதை நானும் நடக்கின்றேன்

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்காதல் தேசத்து எனதினிய தேவதையே! உன்முகத்தை என்முகத்தில் பார்த்திடுவாயே!

உன்விழிகள் பேசும் காதலன்பு மொழியடி!
எந்தபள்ளியிலும் எந்த ஆசாணாலும் அதையே கற்றுத்தர முடியுமோடி!
என்காதல் தேசத்து எனதினிய தேவதையே!
உன்முகத்தை என்முகத்தில் பார்த்திடுவாயே!
உலகமொழிகள் அனைத்தும் எனக்குப் புரிகிறது
ஊரும் உலகும் பேசும் ஏச்சும் தெரிகிறது
ஆனாலோ?காதலியோ என்விழியோடு
உன் விழிகள் பேசும்-மெளனமான அந்த ஒருவேளையிலே உலகத்தை மறந்து விண்ணில் பறந்து நேசமந்திரத்தில் இணைந்த பொழுதினிலே!அது ஏனோ?
உன்விழிகள் சொன்ன அந்த
வார்த்தை மட்டும் புரியவில்லையே
உன்விழிகள் பேசும் காதலன்பு மொழியடி!
எந்தபள்ளியிலும் எந்த ஆசாணாலும் அதையே கற்றுத்தர முடியுமோடி!

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அந்தஒரு கடைக்கண் பார்வையே, காதல் இன்பத்தின் எல்லைதனையே தொட்டதே!

காதல் இன்பத்தின் எல்லைதனையே தொட்டதே!
கண்ணில் ஒருகாவியத்தையே படைத்து விட்டதே!
காதலிலே! காதலிலே!
காதலியே! உந்தன்
கள்ளத்தனமான
அந்தஒரு கடைக்கண் பார்வையே,
காதல் இன்பத்தின் எல்லைதனையே தொட்டதே!
கண்ணில் ஒருகாவியத்தையே படைத்து விட்டதே!







-:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்

கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்!
உண்டாலே மதுமயக்கமே!-காதலியே உன்னையே
கண்டாலே காதல் மயக்கமே!
சுவைத்தாலே தேன் தித்திப்பே!-காதலியே உன்னிதழைச்
சேர்த்தாலே அமுத தித்திப்பே!
கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: இயற்கையாகவே காதலின் அணிகலனாய் கொண்ட பேரழகியே! செயற்கையான ஒப்பனைகளே அலங்கார ஒப்பனைகளே! காதலி உனக்கு ஏதுக்கடி?

காதலி உனக்கு ஏதுக்கடி?
ஒப்பனைகளே அலங்கார ஒப்பனைகளே!
காதலி உனக்கு ஏதுக்கடி!
பெண்மானின் இளமை துள்ளும் பார்வையும்
இன்னும் , நாணத்தையும் இயற்கையாகவே காதலின்
அணிகலனாய் கொண்ட பேரழகியே!
செயற்கையான ஒப்பனைகளே அலங்கார ஒப்பனைகளே!
காதலி உனக்கு ஏதுக்கடி?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: காதலி அவளாலே! எனக்கோ! காதலன்புத் துன்பமில்லையே!`

காதலி இவளின் விழிப் புருவங்களே!
சாய்ந்து நெளிந்து குழைந்து மயக்கி
வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால்,- காதலி அவளாலே!
எனக்கோ! காதலன்புத் துன்பமில்லையே!`

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:பார்வையிலே மிச்சம் வைத்து காத்திருக்கும் ஊடல் பெருமூச்சோ?

என்னென்பேனோ? ஏதென்பேனோ?
என்காதலியின் காதல்கொண்ட பார்வையே!
உயிர்பறிக்கும் பிரளயமோ? நினைவினில்
உறவாடும் விழியோ? அன்பு மீறிய ஆசைக்குள்ளே!
அச்சம் கொண்ட பெண்மானின் விழிவீச்சோ? பார்வையிலே
மிச்சம் வைத்து காத்திருக்கும் ஊடல் பெருமூச்சோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: பெண்மையின் வார்ப்படமாகவே !அவளம்புப் பார்வையிலே!

பெண்மையின் வார்ப்படமாகவே !அவளம்புப் பார்வையிலே!காதலி
அந்தப் பேதையின் கண்கள் மட்டும் ஏனோ எந்தன் உயிரைப் பறித்ததே!
எந்தன் உயிரைப் பறித்த கண்கள் ஏனோ?திரும்ப திரும்ப
என்னையே பார்த்து பார்த்து பரவசமானதோ-காதலாம்
பேரின்பத்தில் என்றுதான் கொண்டுவந்து சேர்ப்பாளோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: எனை வாட்டும் அழகானாள்! என்னிலாடும் வண்ண மயிலானாள்!

எந்தன் நனவிலும் நனவானாள்!
எந்தன் நினைவினில் நினைவானாள்!
எந்தன் கனவிலும் நனவானாள்!
எந்தன் நனவிலும் கனவானாள்!
எந்தன் கனவிலும் கனவானாள்!
எனை வாட்டும் அழகானாள்!
என்னிலாடும் வண்ண மயிலானாள்!
எனதன்புக் காதலியை எனதினிய நெஞ்சமே!
என்னாளுமே ஏனோ? கண்டு மயங்கிடுதே எனதினிய நெஞ்சமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தினமும் வானில் பறக்கும் பற்வைகளே! அந்தப் பறவைகளே! தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே! அடுத்தவர் நலனை

தன்கையில்
வரைபடமில்லை எரிபொருள் இல்லை -ஒரு
தேடுதல் மட்டும் கொண்டு-தினமும்
வானில் பறக்கும் பற்வைகளே!
அந்தப் பறவைகளே!
தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே!
அடுத்தவர் நலனையே என்றும் பறித்ததில்லையே!
அதிகாரத்தால் யாரையும் அடிமைப் படுத்துவதில்லையே
விலைவாசி ஏற்றத்தால் என்றும் அவை பாதித்ததில்லையே
வாக்குக்காக உறையில் காசு என்றும் வாங்கியதில்லையே-கிம்பளம்
வாங்கவேண்டிய அவசியம் அவற்றிற்கு என்றும் ஏற்பட்டதில்லையே!போலி அரசியல்
வாதிகளையே தேர்ந்தெடுத்துவிட்டு அவையென்றும் ஏமாந்ததில்லையே!
-தன்
தேடுதலில் அவையென்றும் அலைந்து திரிந்து சளிப்பதில்லையே!
வாழ்வினை ஒவ்வொரு நாளும் புதிதாய் சந்திப்பதிலே என்றும் பின்வாங்குவதில்லையே!
உலகமே!மனிதர்களுக்குள்ளே! அனுதினமும்
தன் தேவையற்ற காரணங்களாலே ஒருஅதிகார யுத்தம் நடத்தும் வேளையிலே
அந்த பறவைகளே எல்லாத் துன்பங்களையும் தாண்டி தங்களின் தேடலுக்காகவே!
தன்வாழ் நாளெல்லாமே தங்களின் பாதையிலே பறக்கின்றனவே!
தினமும்
வானில் பறக்கும் பற்வைகளே!
அந்தப் பறவைகளே!
தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே!
அடுத்தவர் நலனையே என்றும் பறித்ததில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்-அது தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!

காதல்
பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்!-அது
தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!
பார்வை
அணைப்பில் இருக்கும்போது சுகத்தினில் மயங்கும்!-அது
அன்பில் திளைக்கும் போது அகத்தினில் தயங்கும்!
காதல் !
பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்!-அது
தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நானும் காதலி உன்னையே-எத்தனையோ? பூக்களுக்கு உவமைசொல்லித் தோற்றுவிட்டேன் எந்தப்பூவும் உனக்கு உவமை இல்லையடி!

ஆகாசத்தில் முகம்பார்க்கும் -மண்ணின்
கோடிகோடிப் பூக்களே!-பூமித்தாயே
தன்னை ஒவ்வொரு நாளும்
எத்தனை எத்தனை பூக்களாலே தன்னையே அலங்காரமே செய்து மகிழ்கின்றாளோ?
காதலி நீயே !
வேப்பம்பூவின் வாசமோ?
ஏ! நீயும்
எள்ளுப் பூவின் அழகோ?
அந்த
தும்பைப் பூவின் தேனோ?
மஞ்சள்
பூசனிப் பூவின் நிறமோ?
என்று ஏதேதோ! நானும் காதலி உன்னையே-எத்தனையோ?
பூக்களுக்கு உவமைசொல்லித் தோற்றுவிட்டேன்
எந்தப்பூவும் உனக்கு உவமை இல்லையடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_மழையே!உன்னில் எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும் ஏழுசுரத்தினையும் :

மழையே!தூவும் கலையே!
உன்சாரல் தூரல் தன்னிலே!- மழையே!உன்னில்
எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து
ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும்
ஏழுசுரத்தினையும் தான் மிஞ்சியதோ?
ஓர் தியானத்திலே
என்னையே ஏதோ ஓர் இன்பந்தன்னிலே!
அமிழ்ந்து போகச் செய்திடும் மழையே நீ ஒரு ஞானியே!-உன்
ஈரத்தின் நுண்கால்களிலே மென் உணர்வுகளிலே!உன்சாரல் தூரல் தன்னிலே
மழையே!உன்னில்
எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து
ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும்
ஏழுசுரத்தினையும் தான் மிஞ்சியதோ?
சன்னல் கதவுகளையே மின்னல் வெளிச்சமே தட்டிப் பறித்திட துணிந்ததோ?- அந்தோ!
அந்த நீலவானத்தையும் மழையே நீயும் மறைத்திட விழைந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_:-மழையே நீ செய்திடும் சேவைக்கெல்லாம் மக்கள் என்னகைமாறுதான் செய்திடுவாரோ?

ஓ!மழையே உவகையின் குழந்தையே!
ஒருபுள்ளியில் நீயும் தெரியாமலே!
நான் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இன்ப வேளையிலே
ஓரிடத்தில் மையம் கொண்டு நீயும்
அங்கேயே சஞ்சாரம் செய்திடவே துணிந்து விட்டாயோ?
காற்றின் போக்கினிலே காலாற நடந்துதான் நீயும் போனாயோ?
கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பார்வைக்கு தெரியாமலே
கண்ணான நீரினையே கொட்டிவிட்டு கொண்டாட்டம் தான் நீயும் போட்டாயோ?
மரத்தினையும் ஆட்டிவிட்டு காற்றோடு நீயும் ஆனந்த தாண்டவம் தான் போட்டாயோ?
மண்ணுக்கு வளஞ்சேர்க்கும் பொது நலனில் தோழமைதான் நீயும் கொண்டாயோ?-மழையே
நீ செய்திடும் சேவைக்கெல்லாம் மக்கள் என்னகைமாறுதான் செய்திடுவாரோ?அவரோ
மரந்தனையே வெட்டாமல் இருந்தாலே உனக்கும் உலகுக்கும் நன்மை ஆகிடுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_:வெயில் என்தோழன் என் தோளில் கைபோட்டு என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!

வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!
கரைகளற்ற நதியாகவே அவன் எல்லாத் திசைகளிலும்
கங்குகரையின்றி தங்குதடையின்றி
எங்கும் பறந்து பாய்ந்தோடினானே!
சிலவேளை அவனே சிறுமழலை போலவே
மெல்ல மெல்லவே சன்னல்வழியே எட்டிப் பார்ப்பானே!-மாலை
மறுவேளை இளந்தென்றலோடு சேர்ந்து என்னைஅணைத்தே தாலாட்டுவானே!
அவனென் உடலிலும் உள்ளத்திலும் வரைந்த சித்திரங்கள் என்றும் அழியாதவையே!
வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_தென்றலின் துணையோடு ஓராயிரமாம் கவிதைகளே!சொல்வது- என்வீட்டு சன்னல் அல்லவா?-:

தென்றலின் துணையோடு
ஓராயிரமாம் கவிதைகளே!சொல்வது-
என்வீட்டு சன்னல் அல்லவா?-இயற்கையிலே
உலகமே என்னோடு உவகையோடு அன்பாம் உறவு கொண்டதே!
என்னெஞ்சினில் என்றும் மாறாத பசுமையிலே!
வான்வெளியும் குளிர் நிலவும் விண்மீன்களும்
தேன்மழையும் உயர்மலையும் மகிழ் அருவிகளும் -இயற்கையிலே
உலகமே என்னோடு உவகையோடு அன்பாம் உறவு கொண்டதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:நீயும் வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே! ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ! ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே

ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே!
உன்னைப் பிரிந்த உன்சிறு இறகினாலே கூட நீயும்
வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே!
ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ?-உன்
அனுபவத்தையே மானுடமும் ஒரு படிப்பினையாய்
ஆக்கி முன்னேறும் வாழ்வினையே கொண்டதோ?
உன்சிறு இறகினாலே கூட நீயும்
வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே!
ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ!
ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே!

Thursday, September 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:என் தேச நதிகளெல்லாம் எனக்கு ஒற்றுமை சொன்னதே!

இயற்கையான
காதலின்ப அன்பாம்
என்வார்த்தையின் வசீகரமே!- நம்
இனியவாழ்வின் விருட்சமே!

உலகின் தீராத நறுமணங்களின் காட்டுவனங்கள்
புதைந்து கிடப்பன எத்தனையோ?
எந்தத் திசையிலோ? யாரும் அறியாமலே
அரும்பி மணத்திடும் பூக்கள்தான் எத்தனையோ?

அந்த ஆலமரத்து நிழலும்
இந்த சிறிய புல்லின் நிழலும் சமமாகவே எந்தனுக்கே காதலியே
வியப்பானதே ஓர் இயற்கை அற்புதம் ஆனதோ?

வாழ்க்கைப் பயணம் முழுவதுமே கண்ணில் கொள்ளாத காட்சிகளே!-அன்பே என் உணர்வு
வான்கரையேறி எல்லையில்லாத இன்பந்தான் கொண்டே ததும்பிடுதே!

பூமிப் பந்தின் இயற்கைஅன்னை எனக்குள் ஏதேதோ சொன்னாளே!
என்பள்ளிக்கூடமும் எனக்குப் போதிமரம் ஆனதே!
என்புத்தகங்கள் எனக்குப் பகுத்தறிவினை தந்ததே!
என்வீட்டு பூவரசும் எனக்கு ஆசாணானதே!
என் தேச நதிகளெல்லாம் எனக்கு ஒற்றுமை சொன்னதே!
என்னூரின் மலையருவி கூட ஓர்கவிதை ஆனதே!அந்த
சின்னஞ்சிறு எறும்புகூட என்கூட தோள்கொடுக்கும் தோழனானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மனித நேயத்தில் நாள்தோறும்! தேடல் கொண்டு மனிதத்தை அறியத் துடிக்கும் மாமனிதர்களே!

சுதந்திரமான நல்லஅன்பு மனித நேயத்தில் நாள்தோறும்!
தேடல் கொண்டு மனிதத்தை அறியத் துடிக்கும் மாமனிதர்களே!
வானில் சிறகினை விரித்துப் பறக்கும் ராஜாளிப் பறவைகளே!
தானுண்டு தன்வேலையுண்டு என்பாரே!கிணற்றுத் தவளைகளாமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-உண்மை நெஞ்சில் தயங்காதே காதலினையே பார்வையில் சொல்லு சொல்லு!

ஆதியென்ற மணிவிளக்கே!
அகண்ட பரிபூரணமே!-அன்பாம்!
சோதியென்ற பெருவெளியே!=-உன்னையே!
சொந்தமென்று தேடிவந்தேனே!

காணாத காட்சியெல்லாம் கண்ணில் காணும்!
கலங்காதே மெய்மயக்கம் மெத்தவாகும்-காதலி கண்ணே!
மயங்காதே மெளனத்திலே நீயும் நில்லு நில்லு!-உண்மை நெஞ்சில்
தயங்காதே காதலினையே பார்வையில் சொல்லு சொல்லு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கெட்ட தனியுடைமை போரிடும் உலகினை எதிர்த்து என்றும் போராடுகின்ற துணிவிலும் வாழ்விருக்குது!-

படிக்கவும் நாவிருக்குது பாடவும் இதழிருக்குது!
பிடிக்கவும் கரமிருக்குது அணைக்கவும் நெஞ்சிருக்குது!
நடிக்கவும் இமையிருக்குது பார்வையில் கண்ணிருக்குது!
துடிக்கவும் ஊடலிருக்குது துஞ்சவும் மார்பிருக்குது!
அன்பிலும் துணையிருக்குது பகுத்தறியும் பண்பிருக்குது!கெட்ட தனியுடைமை போரிடும் உலகினை எதிர்த்து
என்றும் போராடுகின்ற துணிவிலும் வாழ்விருக்குது!-
நட்பிலும் நாடுகின்ற நலத்திலும் தோழமையிருக்குது!
நல்லவர் உறவினிலே பொதுவுடைமை நேயமிருக்குது!
எல்லாம் வாழுகின்ற சமதர்ம அரசு அமைந்திடும் போது!
இன்பம் என்கின்ற சொல்லுக்கே பஞ்சமில்லை இல்லையே!

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் கண்கொண்ட பேரின்பத்தையே !எப்போதும் என்னாலே மறைக்கவும் முடியவில்லையே!;

காதல் கண்கொண்ட பேரின்பத்தையே !எப்போதும்
என்னாலே மறைக்கவும் முடியவில்லையே!;
காதலுக்குக் காரணமான காதலரிடமே நான்கொண்ட நாணத்தால்
காதல் தனையே என்னாலே அவரிடமே உரைக்கவும் முடியவில்லையே!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-அரைக்க அரைக்க சந்தனமும் மணக்குமடியோ?-ஊடல் மெளனத்திலே உரைக்க உரைக்க காதலின்பமும் தழும்புமடியோ? .

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீரடியோ? பிறர் அறியாமலே
மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகுமடியோ?
அரைக்க அரைக்க சந்தனமும் மணக்குமடியோ?-ஊடல் மெளனத்திலே
உரைக்க உரைக்க காதலின்பமும் தழும்புமடியோ?
.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல் தொடாமல் சுடுகின்றதே -காதலே இது, பிரிவிலும் சுடுகின்றதே!

நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல்
தொடாமல் சுடுகின்றதே
-காதலே
இது, பிரிவிலும் சுடுகின்றதே!

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் -காதலரே!
பிரிந்திருக்கும் போதினிலே!
காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுகின்றதே!
நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல்
தொடாமல் சுடுகின்றதே
-காதலே
இது, பிரிவிலும் சுடுகின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட காதல் பிரிவே கொடுமையானதே !

பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட
காதல் பிரிவே கொடுமையானதே
காதலன் பிரிவே துயரமானதே!
நம்மை உணர்ந்து நம்மை மதித்து நம்மை போற்றி
அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானதே !; அதைவிடத் துன்பமானதே-என் அன்புக்கு இனிய காதலரைப் பிரிந்து வாழ்வதே!
பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட
காதல் பிரிவே கொடுமையானதே !
காதலர்ப் பிரிவே துயரமானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் தலைவரையே விடைபெறும் காலம் வந்து என்னைக் கொல்லுமோ?-என்ற அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!

அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!-காதல் தலைவரையே
விடைபெறும் காலம் வந்து என்னைக் கொல்லுமோ?-என்ற
அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!
முன்பு அன்புக் காதலர் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமானதே!ஆனால், இப்போதோ! மெய் தழுவிக் களிப்பதும் பிரிவை எண்ணுதே!ஏக்கம் தான் கொள்ளுதே!
எங்கே அன்புக் காதலரையே விட்டுப் பிரிந்திடுவோமோ?என்ற அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்னைவிட்டு நீயும் பிரிந்து செல்வதில்லையென்றால்! அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்!

அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்
காதல் தலைவனே!
கண்ணின் மணியனே!
என்னைவிட்டு நீயும்
பிரிந்து செல்வதில்லையென்றால்!
அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்!
அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் நீயும் சொல்.சொல்!இறுதியாக
நீ போவது உண்மையென்றாலே! நீ திரும்பி வரும்போது
யார் உயிரோடு இருப்பாரோ?அவரிடமே
இப்போதும் விடைபெற்று நீயும் செல் செல்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் நிலவினையே குரைக்கும் ஊர்நாயாலே விரட்டமுடியுமா? வானத்து விண்மீன்களையே மேகஅலையாலே விரட்டிடவே முடியுமா?

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வும் அடங்கிடுமோ?
எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைத்திடவே முடியுமா?
காதல் நிலவினையே குரைக்கும் ஊர்நாயாலே விரட்டமுடியுமா?
வானத்து விண்மீன்களையே மேகஅலையாலே விரட்டிடவே முடியுமா?







/-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலர் ஒன்றாய் கருத்தொருமித்து ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலுக்கே!

காதலர் ஒன்றாய் கருத்தொருமித்து ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலுக்கே! ஊர்மக்கள் பேசும் ஏச்சுக்களே!எருவானதே!காதலி அவள்
அன்னையின் வசவுமொழியையும் காதல் பயிர் நீராகக் கொண்டு வளருமே அல்லாது என்றும் கருகிப் போய்விடாதே!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-என்னை யாரும் வைய வைய வைரக்கல்லே!

நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-என்னை
யாரும் வைய வைய வைரக்கல்லே! நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-ஊரார்
அவரின் தூற்றுதல் எல்லாமே - நானும்
போற்றுதல் ஆக்கிக் கொண்டேனே!-அவ்வாறு
இல்லையென்றால் காதலர் எங்களின்
இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்அல்லவா?.
நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-என்னை
யாரும் வைய வைய வைரக்கல்லே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எவரும் எம்காதலையே பழிதூற்றி பேசுவதாலே!இன்றே எம்காதல் வளரும் மதியாய் ஆகிடுமே!

எம் காதலைப் பற்றி தூற்றுவார் தூற்றட்டும்
எம் அன்பினைப் பற்றி பொறுமுவார் பொறுமட்டும்!எவரும்
எம்காதலையே பழிதூற்றி பேசுவதாலே!இன்றே
எம்காதல் வளரும் மதியாய் ஆகிடுமே! நன்றே
எம்காதல் கைகூடும் நாளாய் ஆக்கிடுமே!காதல் வாழ்ந்திடும்
என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறதே !
என்பதையே இந்த
ஊரார் அறிந்திட மாட்டாரே!-எம்காதலின்
உண்மை உறவினையே தெரிந்திட மாட்டாரே!







:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனித நேயமே ஆரறிவாரோ? ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனிதத்தையே! ஆரறிவாரோ?

ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- நீதிவழி
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- சித்திமுத்தி
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- அன்பனைத்தும்
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனித நேயமே
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனிதத்தையே!
ஆரறிவாரோ?

Tuesday, September 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-ஊடல் கால சிறிய இன்பமும் காதலுலகத்தின் பேரின்பமாகுமே !

ஊடல் கால சிறிய இன்பமும் காதலுலகத்தின் பேரின்பமாகுமே !
ஊடலுக்குப் பின்னே வரும் கூடலிலும் கோடி இன்பமே கொள்ளை கொள்ளுமே!
காதலன்பின் ஊற்றாகும் ஊடலை வரவேற்கும் விழியிரண்டும் வழிபார்த்தே!
காணாத உலகமெல்லாம் நெஞ்சுக்குள்ளே நேசம்கண்டு இனிமையாக்குமே!








-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-அந்த ஊடல்தானே என்னில் அன்பை வளர்க்குமோ இல்லை வம்பை வளர்க்குமோ?

என்மீது ஒருகுற்றமும் இல்லையே தோழி-ஆனாலும்
என்மீது ஊடல்கொண்டாளே தலைவி-அந்த
ஊடல்தானே என்னில் அன்பை வளர்க்குமோ இல்லை வம்பை வளர்க்குமோ?
ஏதும் நானறியேனே என் தலைவியின் அன்புத்தோழியே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ காதல் அன்போடு சிரித்தாளே!

காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ
காதல் அன்போடு சிரித்தாளே!மென்மையான அவளின்
மோகச் புன்முறுவல் தனிலே ஒருஇன்ப குறிப்புமுண்டே!-அந்த
ஆசைக் குறிப்பினிலே ஒருபேரின்பம் கண்டுகொண்டேன்!
காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ
காதல் அன்போடு சிரித்தாளே!







:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இவளின் ஒருபார்வையே காதல் நோய்தந்தது! இவளின் மறுபார்வையே காதலின் நோய்தீர்த்ததே!

இவளின் மையுண்ட கண்களுக்கு
இரண்டு பார்வையுண்டு தோழி
இவளின் ஒருபார்வையே காதல் நோய்தந்தது!
இவளின் மறுபார்வையே காதலின் நோய்தீர்த்ததே!
இவளின் நினைவினுக்கே ஒரேகாதல் இன்பமானதே!
இவளின் நெஞ்சினிலே அன்புக் காதலன் உறவானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவள் தந்த காதல் நோய்க்கு அவளே மருந்தானாளே!

காதல் நோய் தீர்க்கும் மருந்தாய்-அந்தக் காதலியே ஆவாளே!.
அவள் தந்த காதல் நோய்க்கு அவளே மருந்தானாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலர்கள் ஒன்றுசேர்ந்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்ட்னவே !:

காதலர்கள்
ஒன்றுசேர்ந்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்ட்னவே !அந்த மாலையில்
இன்பச் சோலையிலே!இனியென்ன?
வாய்ச்சொற்கள் தேவையில்லையே!