Popular Posts

Saturday, October 23, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!”

அ” வையே ஆன்னா” என்றுமே!
ஆ” வையே ஆவன்னா” என்றுமே!
இசையோடு கற்றாரே எம்தமிழரே!!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே

லு”லு”லு” லு”லு” ரீ” ரீ” ரீ” ரீ”
எனும் மழலை இசையினில் துவங்கி வாழ்வின் இறுதியிலும் பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே
தாலாட்டாய் தத்துவமாய் காதலாய் கொண்டாட்டமாய்
தனிமையாய் ஒற்றுமையாய் உழைப்பாய் உறுதியாய் பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!


நடவுப்பாட்டுக்கே
தனன் னான னானே- ஏ
நானே நானே ந்ன்னே

தெம்மாங்குப் பாட்டுக்கே
அடடா! தன்ன் ந்ன்னே நானே
நானே ந்ன்னே நானே நன்னே!

கும்மிப் பாட்டுக்கே!
தன்னனா நானன நானானே!
தன்னனா நானன நானானே!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

தாலாட்டுப் பாட்டுக்கே!
ஆராரோ ஆரிரரோ ராரோ ராரிரரோ!
ஆராரோ ஆரிரரோ ராரோ ராரிரரோ! பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

நெல்லிடிக்கும் உலக்கைப் பாட்டுக்கே!
ஏலேல குயிலே லல்லோ!
ஏலேல குயிலே லல்லோ!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

தெம்மாங்குப் பாட்டுக்கே!
ஏலங்கிடி லேலோ!
ஏலங்கிடி லேலோ!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!


வையே ஆன்னாஎன்றுமே!
வையே ஆவன்னாஎன்றுமே!
இசையோடு கற்றாரே எம்தமிழரே!!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே

No comments: