வயல்வெளியே !
வாய்க்கால் ஓரமே!
காட்டு வழியே!
காலையிளம் தென்றலிலே!
கவின்மிகு சோலையினிலே!
செந்தமிழ் பரப்பவந்த தென்பாங்கே! தெம்மாங்கே! தேனிசையே!-
எங்கள் கிராமத்து இதய ஒடையில்
எழுந்த எண்ண அலைகளின் சின்னங்களே!
தென்பாங்கே ! தெம்மாங்கே! தேனிசையே!-
வாழ்வின் எல்லைகளையே தொட்டுப் பாடிடும்!
வட்டமிடு ம் தொல்லைகளையே சீண்டிப் பார்த்திடும்!
கனவுகளை பறக்கவிட்டு பாடி நின்றிடும்
கற்பனைச் சிறகினை விரித்து வானில் பறந்திடும்
தென்பாங்கே ! தெம்மாங்கே! தேனிசையே!-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment