மனைவி என்பவளே!
ஒரு கம்பளிப் போர்வை யாவாளே! -அவளை நட்புடன்
போர்த்திக் கொண்டாள் கதகதப்பு!
அவளைப் பகையுடன்
தூக்கி எறிந்துவிட்டாலோ !வாழ்க்கைப் பிரிவாம்
குளிர்தனையே தாங்கவே முடியாதே!
சொந்த மனைவி தரும் சுகம் அமுதமாகிடுமே!. படிதாண்டிவரும் காதலால் பெறும் சுகமே!
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பாகிடுமே!
அன்புக் காதலியோ! ஒரு முடிவடையாத புத்தகமாவாளே! மனைவியோ ரசித்துபடித்து முடித்த முழுப் புத்தகமாவாளே!
வரைமுறை தாண்டிய ,ஒழுக்கக் கேடான காதலே கறையான் புற்றாகிடுமே!.
கற்பினை நீ விரும்புவது போலவே உன்னை விரும்பும் மனைவியும் உன்னிடம் கற்பினையே எதிர்பார்ப்பாள் என்பதையே நீயும் மறக்காதே!
மனைவி உனக்கோ! சின்னஞ்சிறு வயதில் அன்பினைப் பகிரும் துணைவி!
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தோழியாவாளே!
உன் மனைவியின் மனதை புரிந்துக்கொள்ளாமல் அவள் எப்படி உனது மனதை புரிய முன்வருவாள்?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment