நிலவும் நெருப்பானதோ?
மலரும் முள்ளானதோ?
காதல் தலைவன் அவனே அருகில்லை என்றபோதே!காதலனோ! அன்றே!சொன்னானே!
காதலியே !
உன்னைமணம் செய்யாமலே - நானும் இந்த
உலகினை விட்டுப் போவதில்லையே என்றே!
சோலைக்கும் நன்றிசொல்லி என்ன?-மலர்
மாலைக்கும் நன்றிசொல்லி என்ன?-கனி
மர நிழலுக்கும் நன்றிசொல்லி என்ன?அன்று
பிரிந்து சென்ற தலைவனே மீண்டும் வருவான் என்றேமுன்
அறிவிப்பாயே குயிலும் கூவியென்ன?காதலி எனது
இடக்கண்ணும்,இடத்தோளும் துடித்தென்ன?தலைவனின் வலத்தோளும் வலக்கண்ணும் துடித்தென்ன!அன்புக் காதலிலே அவனின் ,எந்தன்
நான்குகண்களும் ஓர் நேர்கோட்டினிலே !சந்திக்கும் நாளினை எண்ணியே!
காத்திருக்கும் காலங்களே கனலானதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment