Popular Posts

Tuesday, October 19, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/”-:நெஞ்சம் நிமிரவேணும்!”

நேர்பட ஒழுகவேணும்!
நெஞ்சம் நிமிரவேணும்!
ஒற்றுமை கொள்ளவேணும்!
உரிமை வெல்லவேணும்!
சுதந்திரம் காக்கவேணும்!-உழைப்புச்
சொந்தங்கள் வாழவேணும்!
பாருயர உழைக்கவேணும்!
பாட்டாளி அரசு வேணும்!
தனியுடைமை மாற்றவேணும்!
தன்னலத்தை அகற்றவேணும்!-இங்கு
தரித்திரத்தை அழிக்கவேணும்!-பூலோக
சுவர்க்கத்தை படைக்கவேணும்!

No comments: