பருத்தி இளம்பருத்தி!
பாங்கான செம்பருத்தி!
வருத்தமும் ஏனடியோ?
வாய்விட்டுச் சொல்லாயோ?
ஆத்துக்கு அக்கரையில்
அத்தைமகன் நீயே காத்திருக்க
வாய்திறந்து பாடுகின்றேன்!-எந்த இசையும்
வார்த்தைக்குள்ளே அடங்கவில்லையே!
ஆசை பெருகுதடி உனக்குள் அழகுதுரை என்னாலே!
எனக்குள்ளே நீயாக என்ன பதில் வைத்துள்ளாய்
ஆசைமச்சான் வார்த்தைக்குள் நானிருப்பேன்!
அன்பான சம்மத்தையே நான் தருவேன்!
ஆசை பெருகினாலும் அழகுதுரை மன்மதனே!
என்னைவெச்சு ஆதரிக்க என்னதான் நீதருவாயோ?
என்ன தருவேன் என்று ஏந்திழையே கேட்டுவிட்டாய்-என்
ஆவிதனைக் கேட்டாலும் அன்னமே நானுனக்கு தருவேனே!
ஆத்திரந்தான் தீருமட்டும் ஆயிரபொய் கூறிவிட்டு
சுகத்தை அனுபவித்தால் என்சாபம் உன்னைவிடாது!
என்மேலே ஏனுனக்கு சந்தேகம் தீராதோ?
என்னுயிர் உள்ளவரையினில் நானுன்னுயிராய் இருப்பேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment