உன் அழகிய மலரிதழ்களே!
நான்பார்க்கும் இடமெல்லாமே வந்துதோன்றி-அன்பே
என் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ!
அன்று மலர்ந்த செந்தாமரையோ!
இன்று சிரித்த மல்லிகைபூவோ!
என்னுயிரின் உள்ளே!
ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!
உன் அழகிய கண்களே!
அமுத மொழிபேசி கோடிக் கவிதைகள் சொல்லுதடி!
உன்கோவைப் பழமாய் சிவந்த இதழ்களே!
எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாமே வந்து வந்து-அன்பே
என் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ!-உன்
அழகிய புருவவில்லே!மன்மதன் கையுள்ள கரும்புவில்லோ!அன்பே
எப்போதும் என்னுயிர்மேல் வந்துபொருந்தி துன்புறுத்துதடி!
உன்புன்முறுவலோ செஞ்சுடர் வீசுகின்ற வெண்ணிற மின்னலாகியே
என்னையே நித்தம் நித்தம் கொல்லுதடி!அவையென்ன?
என்னுயிரையே துன்புறுத்தும் முத்துக்களோ? நானும்
அறிந்தும் அறியாமலே அனுதினமும் வருந்துகின்றேனடி!
அவளின் சோதிவட்டத் திருமுகமே!
என்னெஞ்சத்தையே பிழிகின்றதே!
உந்தன் தேன் நிறைந்த கண்களுக்குள் என்னைத்தினம் நனைப்பதென்னவோ?- நீயே
உன்கண்ணில் என்னைக்காட்டி காதலியே என்னையே
உன்னிடத்து அழைத்துக் கொள்ளவேண்டுமடி
முதுமை அடைந்துவிட்டாலும் முதல்காதல்-என்றும்
இளமை கொண்டு வாழும் என்று காண்டேகரும் சொன்னாரடி!
அந்த செம்மண் நன்னீர் போலவே =- நம்
அன்புடைய நெஞ்சங்களும் கலந்ததடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment