அழிப்பான் கதையா?-அடி நொடிக்கதையா?பிசியா?
வெடிக்கதையா? அவிழ்க்கும் கதையா?விடுகதையா?புதிர்ச் சொலவடையா?- நானும்
சொல்லாலே முடிச்சுப் போடவாரேன்!-அடியே துணிவிருக்கா?
சொல்முடிச்ச அவிழ்ப்பதுதான் யாரு?
சின்ன பையனும் சின்னப் பொண்ணும்
சிரித்துக் கட்டுன மாலை -இதை சிக்கலில்லாம அவிழ்த்தவர்க்கே திருவருட்பா புத்தகமே தாரேன்!
அது என்ன?குருவிகளே!
நடை நடையா நடந்து பறந்து பறந்து
சின்ன சின்ன சுள்ளிகளை பொறுக்கி
வண்ண வண்ண கூடுகட்டும் தூக்கணாங்குருவிக் கூடு அதுதானடி!
தன்னைத் தானே பலிகொடுத்து
தான் மற்றவர்க்கே ஒளிகொடுப்பது யாரு?
தன்னைக் கொடுத்து தன் தேசத்தை பாதுகாத்திடும் போராளியைப் போன்ற
மெழுகுவர்த்தி தானடி!
காவி உடை அணிந்து கள்ளத் தவசியைப் போலவே!
கரை ஓரத்திலே கடுந்தவம் செய்வதுதான் யாரு?
கடவுள் நம்பிக்கை கொண்டவரை பக்தி என்ற போர்வையிலே
காலமெல்லாம் ஏமாற்றிவரும் போலி சாமியாரைப் போலவே!
கரையோரத்தில் ஏமாந்த மீன்களையே இரையாக்க துடித்திடும் கொக்குதானடி!
No comments:
Post a Comment