இந்த சினிமாத் தொழிலினிலே அஞ்சுபத்து என்பதற்கு
அஞ்சுகோடி பத்துகோடி என்று அர்த்தமானதடா!
மூலதனம் எல்லாமே ஒன்றாகக் கூடி சினிமா உலகத்துல
மா நாடு போடுதடா! சூதாட்டம் என்று சொல்லவா?இல்லை
ஓடாத குதிரை ரேஸ் என்று சொல்லவா!
வைராஜா வை வெச்சது மேலே வை என்று
சாஞ்சா சாயுறபக்கம் சாயுர செம்மறி ஆட்டுக் கூட்டமடா!வென்ற
சினிமா பாணியில ஓடோடி படமெடுக்கும் பிலிம்சுருள் பாம்படா!
படமெடுக்க ஆசைபட்டு பரிதாப நிலையில இருப்பவங்க கோடியுங்க!
படமெடுத்து வெற்றிபெற்ற மனிதருங்க விரல்விட்டு எண்ணிவிடலாமுங்க!
நடிக்க ஆசைபட்டு கோடம்பாக்கவீதியில வாய்ப்புத் தேடும்
நடிக்க வாய்ப்பின்றி நடுரோட்டில் இருப்பவங்க ஏராளம்
நடிக்கவந்த நடிகையில் ஒருசில வெற்றிபெற்ற நடிகைதவிர-மற்ற
நடிக்கவந்த நடிகைகள் எல்லாம் துணை நடிகை ஆனவங்க ஏராளம்
நடிக்க வந்த சில பெண்களின் கற்பினையே சூறையாடிய கயவரும் இங்க இரும்புத்திரையாகவும் இருப்பதுண்டு!
நல்லவங்க கெட்டவங்க வஞ்சகர்கள் கயவர்கள் என்று எவரையும் நாம்தரம்பிரித்து பார்க்கின்ற விஷயத்தையே சினிமா உலகம் படமெடுத்துக் காட்டிடுமே!
என்ன எப்படி இருந்தாலுமே சினிமா ஆசை என்ற பேராசை இல்லாத மாந்தரில்லையே
சினிமா ஒரு மாயாஜாலம் இதில் எத்தனை விட்டில்கள் சென்று தோற்று வீழ்ந்தாலும் வெல்லும் முயற்சியில் மீண்டும் புதிது புதிதாய் புற்றீசலகளாய்
ஓடிவெல்லப் பார்த்திடும் சினிமா ஆர்வலர் பெருகி நிற்கும் உலகமுங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment