Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நெலா மொட்டையாண்டி”

எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!
எங்க நாம போனாலும் பின்னாலேயே வாறானே!
ஒளிகொடுத்து வழிசொன்னான் போகும் பாதையெல்லாமே!
அந்திவேளையிலே இளந்தென்றல் தாலாட்டவே
வந்து வந்து காதல் காவியமாய் சிரித்து நின்னானே!
எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!
போடானு சொன்னாலும் போகவே மாட்டேனுறானே!ஆனாலும்
காலையது வந்துபுட்டா காணாமத்தான் போயிடுறானே!
கருமிருட்டையே மிரட்டி அடிபணியவெச்சு ஒருராஜாங்கம் நடத்துறானே!
எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!

No comments: