Popular Posts

Saturday, October 31, 2009

ற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே பொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா?

பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு புண்ணியம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு வாழ்வே தொல்லையா?
பொருள் எல்லாமே ஓரிடத்தில் குவிந்து போனதாலே
பொருள் இல்லாரே தாழ்வுற்று தரித்திரமானாரே!
ஏற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே
பொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா?

மதன லீலையிலே காதலியர் கடுஞ்சொல்லும் கூட காதலர்க்கு இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே!

இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே!
இளங்காதலி கொஞ்சிடும் தத்தைசொல்லுமே!
காதல் பேரின்ப அன்பில் அன்பு பரிமாறும் போதினிலே!
மதன லீலையிலே காதலியர் கடுஞ்சொல்லும் கூட காதலர்க்கு
இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே!

கெட்டமனம்வைத்து சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா!

வஞ்சகமாய்
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே !
உலுத்தர்களின் சொல்கேட்டு ஊருக்குள்ளே மாண்டுதான் போகாதே!= ந்ல்லோர் துணைகொண்டு
அழுது அழுது சொல்கிறவன் உன்வாழ்வினில் அக்கறை கொண்டே- கெட்டமனம்வைத்து
சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா!

வாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா! ஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது உலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா!

வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழாதே!
தாழ்வது வந்ததானால் சோர்ந்தும் போகாதே! முயற்சியினாலே
வாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா!
ஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது
உலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா!
விதிதனை எண்ணி வீழ்ந்துபோகாத பகுத்தறிவுகொண்டு தனியுடைமை வெல்லடா!

உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப் பொழுதோர் நாளும் விடியாதோ?!

உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே
பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப்
பொழுதோர் நாளும் விடியாதோ?!
என் கண்ணிரண்டும் உறங்காதே!துன்ப
இரவே என்றும் தொடர்ந்திடுமோ?
தனிமைத் துயரம் தாங்காதே!
இனிமை என்று ஆகிடுமோ?
தலைவனின் வருகையும் தாமதமாகிடும் போதினிலே!
தென்றலும் இதமாய் உசுப்பேற்றும் நிலவும்
தெரிந்தே குளுமையில் கேலிசெய்திடுதே!!
உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே
பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப்
பொழுதோர் நாளும் விடியாதோ?!

நினைவினில்! காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் !- நனவாக்க! கடுமுழைப்புக் கொண்டிட நீயும் மறக்காதே!

கானலை நீரென்று !எண்ணிக்
கடுவெளி திரியும் மானாகாதே!-கனவினில்!!!
காதலை இன்பமென்று எண்ணி- நெஞ்சில்
காலமெல்லாம் எரிந்து சாகாதே! - நினைவினில்!
காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் !- நனவாக்க!
கடுமுழைப்புக் கொண்டிட நீயும் மறக்காதே!

ஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்! நட்பினிலே! உண்மைக் காதல் தோழமையாலே !செழித்திடவைப்போமே!

விண்ணிலே மின்னைப் போலவே!
என்னிலே உன்னைக் காண்பாய்!
உன்னிலே என்னை காண்பேன்!
உன்னையோர் உண்மை கேட்பேன்!- காதலி நீயும் கண்ணிலே கலந்து
நெஞ்சினை உணர்ந்து நினைவினில் இருந்து காதல் பேரின்பமாம்!
அன்பில் நீயும் இணைந்து வாழ்வின் தத்துவத்தின்!
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்! ஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்!
நட்பினிலே!
உண்மைக் காதல் தோழமையாலே !செழித்திடவைப்போமே!

மக்கள் ஜன நாயக புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே!

பசிப்பவருக்கு இட்டு உண்ணாத பாவியாகாதே!-என்றும்
பகிர்ந்துண்ணும் தத்துவத்தை நீயும் மறக்காதே!
கசடனாகவே கணக்கறிந்து பேசாதிருக்காதே
வெட்டிபயதனமாய் ஒரு தொழிலும் இன்றி நீயும் இருக்காதே
சோம்பேறி ஆகவே ஒன்றுக்கும் உதவாது உலகினிலே வாழாதே!
முட்டாளாகவே மரத்தைப் போலவே பெரியோர்கள் சபை நின்று
பேசாமல் இருக்காதே!
பசப்பிக்கொண்டே பரிவு சொல்லித் தழுவிக்கொண்டு திரியாதே!- மக்கள் ஜன நாயக
புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே!

கனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்! கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே காலையில் பாடிடும் பூபாளமே! பொன் எழிலே!

மதன காமவல்லியே! மன்மதனின் அழகு தேவதையே! =அடியுந்தன்
வண்டு மொய்த்த அழகுக்கூந்தலடி! =-உந்தன்
வார்குழலினில் ரீங்காரமிடும் வண்டுகளடி
மதன காமவல்லி இன்பத்தின் பேரூற்றே! -ஆற்றின்
கெண்டைபோன்ற கண்ணாளே! கிளிமொழியாளே! உன்செவ்விதழ்
வாயில் ஊறிடும் அன்பு நீரே! அதுவென்ன?=கற்
கண்டு சர்க்கரையோ? தேனோ ?கனியோடு கலந்த தேன்பாகோ?
கனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்!
கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே
காலையில் பாடிடும் பூபாளமே! பொன் எழிலே! பூரணமே! பொன்மாலையே!

நீயும் முகம் கடுத்து இடுவாய் ஆயின் முப்பழ மொடு பால் அன்னம் என்றாலுமே! எப்பசியும் இவ்வுலகினில் தீராதடா!

உலகினிலே உவகையிலே!- நீயும்
முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமுதமாகுமே! - நீயும்
முகம் கடுத்து இடுவாய் ஆயின்
முப்பழ மொடு பால்ச்சோறு என்றாலுமே!
எப்பசியும் இவ்வுலகினில் தீராதடா!

Friday, October 30, 2009

தேசப் பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா?பயனில்லையடா! .

ஆபத்துக்கு உதவாத பிள்ளை இருந்து என்னடா? பயனில்லையடா!
அரும்பசிக்கு உதவாத அன்னமிருந்து என்னடா?பயனில்லையடா!
தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்இருந்து என்னடா?பயனில்லையடா!வறுமைத்
தரித்திரம் தீர்க்காத அரசிருந்து என்னடா?பயனில்லையடா!
தனியுடைமை எதிர்க்காத போராளி இருந்து என்னடா?பயனில்லையடா!மக்களே
பொதுவுடைமை தத்துவத்தைப் புரியாதிருந்து என்னடா?பயனில்லையடா!தேசப்
பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா?பயனில்லையடா!
.

மார்க்சிய போராளியாகிய மோகனின் மார்க்சிய தத்துவத்தின் அடிச்சுவட்டில் நாம் அணிவகுப்போம் !

தமிழ்பாலாவாகிய - நானும், தோழர்.மோகனும் 78,79 களில் மார்க்சீய அனைத்து இயக்கங்களிலும்,சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்று அமைப்பு இருந்தபோது ’வேலை கொடு இல்லை நிவாரணம் கொடு என்று மறியல் செய்து மதுரை ம்த்திய சிறையினில் சுமார் ஒருமாத காலம் அரசியல் கைதியாக இருந்தபோது இருந்த அந்த அரசியல் போராட்டத்தின் மலரும் நினைவுகள் என்கண்ணில் ஒளியாகிறது,அவரது கம்பீரமான பேச்சு,சுறுசுறுப்பு ,திறமை, நேர்மை, எளிமை அர்சியல் தெளிவு,திட்டமிட்ட அரசியல் இலக்கு,மார்க்சீயத்தின் மீது மாறாத காதல் இவையெல்லாம் வரும் தலைமுறை கற்றுத் தேர்ந்து மார்க்சீயத்தை இந்திய மண்ணிற்கேற்றவாறு நிர்மாணிக்க கவனமாக அடியெடுத்து வெல்ல வேண்டிய போராட்ட காலமிது! அவர் விட்டுசெனற பணியை நாமெல்லாம் முன்னெடுத்துசெல்வோம்! இங்குலாப் ஜிந்தா பாத்!

இப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்! சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!

சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!
அத்தியின் மலரினைக் கண்டாலும் வெள்ளை காக்கையை அறிந்தாலும்மன நிலை பாதித்த
பித்தர்தம் மனத்தை நாம் கண்டறிந்து கொண்டாலும் நீரில் பிறந்த மீனின் காலை தானும் தெரிந்து கொண்டாலும்
இப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்!
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!

சுதந்திரமில்லாத உலகம் உலகமில்லை இல்லை தந்திகள் இல்லா வீணை வீணையில்லை இல்லை மனித நேயமில்லாத மனிதன் மனிதனில்லை இல்லை அன்பில்லாத பிரபஞ்சம் பிரபஞ்சமில்ல

நிலவில்லாத வானம் வானமில்லை இல்லை
தாமரை இல்லாத பொய்கை பொய்கையில்லை இல்லை
மக்கள் ஜன நாயகம் இல்லாத தேசம் தேசமில்லை இல்லை
சுதந்திரமில்லாத உலகம் உலகமில்லை இல்லை
தந்திகள் இல்லா வீணை வீணையில்லை இல்லை
மனித நேயமில்லாத மனிதன் மனிதனில்லை இல்லை
அன்பில்லாத பிரபஞ்சம் பிரபஞ்சமில்லை இல்லை

மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள் என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!

மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!
அன்னம் பழித்தநடை நடைபயின்று வந்தாள் செங்கமலம் மின்னலை ,கயலை பழித்த விழி விழிப்பார்வை விழித்தொளி தந்தாள் ,அமுதம் பழித்த மொழிகள் தித்திக்க மொழிந்தாள்
இலவம் பஞ்சாய் பெருத்த நெஞ்சில் என்னைச் சாய்த்து அணைத்தாள் கன்னங் கறுத்த குழலாளே என்னை வளைத்துப் போட்டாள் சின்னஞ் சிறுத்த இடைப் பெண்ணே அவள் சிற்றிடையாலே என்னை சுருட்டிவிட்டாள் !
மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்!
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!
சின்னஞ் சிறுக்கியவள் சிங்கார சித்திரையாளே வில்லங்கம் என்ன செய்தாளோ?
வண்ணமலர் பொய்கையிலே பூத்த தாமரை இதழ்விரித்து புன்னகைமுத்தம் தந்தாளோ?
மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!

உலகினில் தேடக்கிடைக்காத பகுத்தறிவு அழகு தேவதையோ? தெருவில் இவள் நின்ற நிலை பேரெழில் எனலாமே!

அருகில் இவளருகில் இவளருகில்
அருகில் வரவர உருகும் என்மனமே தினம்தினமே
கரிய குழல் மேனியவள்
கானமயில் சாயல் அவள்
காணக்கிடைக்காத பொக்கிஷம் அவள் என்னமாய்!
பெரிய நெஞ்சம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
என்ன அழகோ?
என்ன இனிமையோ?
என்ன இளமையோ?
என்ன அறிவோ?
உலகினில்
தேடக்கிடைக்காத பகுத்தறிவு அழகு தேவதையோ?
தெருவில் இவள் நின்ற நிலை பேரெழில் எனலாமே!

காதலினாலே! இந்த உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே!

.கலகமே செய்யும் காதலியின்
கண் இதுவே எனக்காதலனே!
மலர் அம்பு ஐந்தையும் வைத்து மன்மதனையே
வணங்கினானே!காதலினாலே! இந்த
உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே!

Thursday, October 29, 2009

காதலி உன்னை நினைத்த போதெல்லாம் அலை பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி

காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!=மின்மினி
விளக்கும் நம்மில் சாட்சியாய் ஆனதடி!
நிலவும் உறங்கும்
நீள்வானும் உறங்கும்
தென்றல் உறங்கும்
தெருவும் ஊரும் உறங்கும்
உலகும் உறங்கும் ஏன் இந்த பிரபஞ்சமும் உறங்கும்-
இரவும்கூட இங்கும் அங்கும்
எங்கும் உறங்கும் உன்கண்ணிரண்டும்
என் கண்ணிரண்டும் உறங்காதே.
நம் நெஞ்சிரண்டும் என்றும் உறங்காதே!காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் -அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!
காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!

வண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ! அன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே!

பொன்னின் மணி கிண்கிணி சத்தத்தில் அலறுதடி!
சிலம்பொலி புலம்புதடி சிரிப்பும் சில்லறைச் சிதறலாகவே!
மின்னு மணி மேகலைகள் இளந்தென்றல் காற்றினூடே!
மெல்லென ஒலிக்குதடி மின்னிடை இசைத்ததடி!
வண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ!
அன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே!

நாய்வாலை தீட்டினாலும் நற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ?

நாய்வாலை தீட்டினாலும்
நற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ?
நல்லதமிழ் உணர்வில்லாத கடையனை தமிழ் இன உணர்வு கொள்ளென்று சொன்னாலும் தாய்மொழிப்
பற்று என்பது அவனுக்கு வந்திடுமோ?தமிழினம் அழிவதைத் தடுத்து அவனும் நிறுத்திடுவானோ?

'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப் படர்ந்ததே கூறும் காதல் முகம்'.

கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்
படர்ந்ததே கூறும் காதல் முகம்'
பனியால் குளம்நிறைதல் இல்லையடி'.=வெற்றுப் பார்வையாலே
பழகிடும் நெஞ்சினில் காதலும் தோன்றாதடி!
'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்
படர்ந்ததே கூறும் காதல் முகம்'.
நெஞ்சின் உள்ளக் கருத்தினை
நித்தம் உரைத்து நேரத்தை நினையாது கனவினில் நினைவினைக் கலந்ததே!

விண்ணெங்கும் கல்வி ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லையடா!'. கல்தேயும் தேயாது கற்றசொல்லடா!'

'கற்றலின் கேட்டலே நன்று'.-செவிகாணும்
கோடிக்கோடி அறிவாம் கல்வியின் பயனே
விண்ணெங்கும் கல்வி
ஞாயிற்றைக் கையாலே மறைப்பார் இல்லையடா!'.
கல்தேயும் தேயாது கற்றசொல்லடா!'.

கைம்மாறு வேண்டாது நன்மை செய்கின்ற மழையே மாரியே

கைம்மாறு வேண்டாது நன்மை செய்கின்ற மழையே மாரியே-உனக்கே திரும்ப
இந்த உலகமும்,மக்களும் என்னதான் நன்மையே செய்திடத்தான் போகின்றோமோ?

செவியிற் சுவையுணராமலே வாயுணர்விலே மனித உருவிலே நடமாடும் பிணங்களே!

செவியிற் சுவையுணராமலே வாயுணர்விலே மனித உருவிலே
நடமாடும் பிணங்களே! நீங்கள்
வாழ்ந்தும் என்ன? வழக்கொழிந்து போனாலும் என்ன?
இருந்தும் என்ன? இல்லாமல் போனால் என்ன?
பிறந்தும் என்ன? இறந்துதான் போனாலும் என்ன?

எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!

எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு
கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!
விழியின்பேனோ?தமிழ்மொழியென்பேனோ? அறிவென்பேனோ?
அழகென்பேனோ? இன்பமென்பேனோ? உயிரென்பேனோ?= மனித நேய
அன்பென்பேனோ? பண்பென்பேனோ?.
எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு
கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!

இறப்பே உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே உறங்கி விழிப்பது போலாகுமடா

இறப்பே
உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே
உறங்கி
விழிப்பது போலாகுமடா
நில்லாத வற்றை நிலையானது என்றுணரும்
நிலையில்லாத நெஞ்சம் நமக்கு வேண்டாமே! மனிதனே
ஒருபொழுதும் வாழ்வது அறியாமலே எண்ணுவது கோடி
கோடியும் அல்ல பலவாகுமடா! இறப்பே
உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே
உறங்கி
விழிப்பது போலாகுமடா

நான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு உண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே!

வாய்மை என்பது இதுதானடா!
யாதொன்றும்
தீமை இல்லாதது சொல்லிடவே வேண்டுமடா!-
வாய்மை என்பது இதுதானடா!
பொய்மையும் வாய்மைதனிலே கலந்துவிட்டால் தன்குறைதீர்ந்து
நன்மை பயக்கும் உலகிலடா! நான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு
உண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே!

செய்திடுவாய் செய்திடுவாய் செய்வதனைத்தும் நல்லவையாகவே செய்திடுவாய் செய்திடுவாய்

சொல்லாதே சொல்லாதே!
பெரும்பயன் இல்லாத சொல்லினையே
சொல்லாதே சொல்லாதே!
செய்யாதே செய்யாதே!
ஒருபயனும் இல்லாத செயலினையே !
செய்யாதே செய்யாதே!
சொல்லிடுவாய் சொல்லிடுவாய் சொல்லனைத்தும் பயனுடையதாகவே
சொல்லிடுவாய் சொல்லிடுவாய்
செய்திடுவாய் செய்திடுவாய் செய்வதனைத்தும் நல்லவையாகவே
செய்திடுவாய் செய்திடுவாய்
சொல்லாதே சொல்லாதே பயனில்லாத சொல்லினையே.!
சொல்லாதே சொல்லாதே !

உதவிசெய்யும் மனப்பான்மை உயர்வாக்கும் உலகமடா!-பொது நல உதவி என்றும் மக்களுக்கு நன்மை தரும் மகத்தானது அல்லவா?

நல்லோரின் நன்மை கடலினும் பெரிதாகுமடா. நல்லோர்கள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிதாகுமடா!.
உதவிசெய்யும் மனப்பான்மை உயர்வாக்கும் உலகமடா!-பொது நல
உதவி என்றும் மக்களுக்கு நன்மை தரும் மகத்தானது அல்லவா?

இனிப்பாக பேசிடும் வல்லமை கொள்ளடா! இனிமையாக பழகிடும் தோழமை பாரடா!

நல்லவை
நாடி இனியது சொல்லடா!இன்.
முகத்தாலே அமர்ந்துஇனிது நோக்கடா! அகத்தாலே
இன்சொல்லினிதே அறமே ஆகுமடா!
இனிப்பாக பேசிடும் வல்லமை கொள்ளடா!
இனிமையாக பழகிடும் தோழமை பாரடா!

அன்பின் வழியது உயிர்நிலையாகும்! அதுவே உலகின் உயர் நிலையாகும்! அன்பு அகத்தில்லாத உயிர்வாழ்க்கை! இருந்தும் இல்லாத பொய்வாழ்க்கை!

அன்பின் வழியது உயிர்நிலையாகும்!
அதுவே உலகின் உயர் நிலையாகும்!
அன்பு அகத்தில்லாத உயிர்வாழ்க்கை!
இருந்தும் இல்லாத பொய்வாழ்க்கை!
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழே!
அன்பின்றி எந்த உயிரும் உயிரல்ல!
அன்பின்றி எந்த மனிதனும் மனிதனல்ல!
அன்பில்லாத உலகமும் உலகல்ல!
அன்பின் வழியது உயிர்நிலையாகும்!
அதுவே உலகின் உயர் நிலையாகும்!

வாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே

அவளே!
ஒழுக்க
நெறிநின்றாள் நீடுவாழ்வாள்!. நாமும்
அவ்வழியே பண்போடு பழகிடவே வேண்டுமே!
கற்பு நெறி என்றால் இருவருக்கும் பொதுவென்றுரைப்போமே!
தோழமை உணர்வினிலே உறவாடும் பக்குவத்தினிலே!
அவளின்
சொற்கேட்டேன் இன்பம் செவிக்கு வீணை இசையும் இனிதில்லையே!
குழலும் இனிதில்லையே யாழும் இனிதில்லையே!
குமரியவள் சொல்லினிதே -புன்னகையவளின்
குவளைமலர் சிரிப்பினிதே!
வாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே!

பொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடி!பேரெழிலே! எங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்!

விண்இன்று பொய்த்தாலே மண்கூட பொய்க்காதோ நெஞ்சினிலே இருந்து
கண் நின்று நீயும் பொய்த்தாலே காதலும் பொய்யாகாதோ?
எண்ணாத எண்ணமெல்லாமே எண்ணிவிட வைத்தாயே- நினைத்தோறும்
இல்லாத கற்பனையையே ஏன் நீயும் வளர்த்துவிட்டாயோ?
பொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடி!பேரெழிலே!மனதே
எங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்!

தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ? தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?

வான்நின்று உலகம் வளமான மழைதனையே வழங்கி வருகுதே!
தான்அமிழ்தம் என்றுணர்ந்து மக்களுள்ளமும் பேரின்பம் கொண்டு பெருகுதே!மழைதனையே
தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ?
தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?

Sunday, October 25, 2009

இன்குழ லூதும் பொழுதே!. கார்வானம் மெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே!

இன்குழ லூதும் பொழுதே!.
கார்வானம்
மெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே! நறுமண மலரெல்லாம்
புவியெங்கும் பூத்தன தோன்றி சிலமொழி பேசி சின்னஞ்சிறு சாரலாக
தூதொடு வந்த மழையே!
எழில்வானம்
நின்று மிரங்கிடும் இவளுக்கு தேன்மழைச் சுவையாகவே மண்ணெல்லாம் வளஞ்சேர்க்கும்
நல்விருந் தாக நமக்கே!

உள்ளம் ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே?-அன்பு உயிரும் கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே? கோடிக்கால பயிரான காதல் துணையுள்ள போதே!

சங்கு
சுட்டாலும் வெண்மை தருமே!
பொன்னை அடித்தாலும் ஒளியாகுமே!எந்த?
உலகே
பழித்தாலும் காதல் உயர்வாகுமே! பண்பு
உள்ளம்
ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே?-அன்பு
உயிரும்
கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே?
கோடிக்கால
பயிரான காதல் துணையுள்ள போதே!

நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில் நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!

நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில்
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!
நீ பிரிந்து போனால் நான் எங்கு போவேனோ?
அலையில் மிதக்கும் துரும்பாய் நானும் ஆனேனே!-கண்
வலையில் என்னை சிக்கிடவைத்தாயே என் துணையே!
மலையில் இருந்து வீழும் அருவியாயே நானும் வீழ்கின்றேனே!
ஊடலென்றால் சரிதாண்டி கூடலுக்கு அதுவும் துணைதாண்டி-அன்புத்
தேடலிலே சுகந்தாண்டி தேடலிலே இன்பமும் சுவைதாண்டி
ஓடிவந்தேன் உனைத்தேடி ஒதுங்கி நீயும் போகாதேடி!-காதலினிமை
பாடிவந்தேன் நினை நாடி பதுங்கும் புலியாய் ஆகாதேடி
நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில்
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!

.

அந்தியில் மறைந்த இளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்!

காலையில் தொலைந்த
என் கனவை மீண்டும் இரவினில் தேடினேன்!
அந்தியில் மறைந்த
இளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்!
இரவினில் தொலைத்த நனவினை நானும் திரும்ப பகலினில் நாடினேன்!
நனவினில் போன இன்பத்தை கனவினில் பெற்றேன்!
நனவினில் கண்ட துன்பத்தை கனவினில் துறந்தேன்!

இனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில் இன்பம் கண்டிடுவோம் என் சகியே!

இனி என் தனிமை தீர்ந்திடும் வரையினிலே உன்னோடு நானும்
பேசிக்கொண்டிருப்பேன் என்காதலியே!
இனி உன் இனிமை கலந்திடும் வரையினிலே என்னோடு நீயும்
உறவு கொண்டிடுவாய் என் தோழியே!
இனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில்
இன்பம் கண்டிடுவோம் என் சகியே!

நில்லாது ஒலித்திருக்கும் நீரருவியோ?- நறுமணம் நீடித்து நிற்கும் வண்ணமலரோ?

நினைவில் மயங்கியிருந்த நீரோடையோ?மவுனமாய்
நித்தமும் இசைமொழிந்த தேன்குயிலோ?
நில்லாது ஒலித்திருக்கும் நீரருவியோ?- நறுமணம்
நீடித்து நிற்கும் வண்ணமலரோ?

அந்த குயிலோசை உணவுக்கான தேடுதலோடு விடிகாலையில் பறந்துபோனது அந்த வறுமைப் புலம்பல்கள் காலை அவசரத்தில் கடமைச் சராசரியில் கழிந்துபோனது!

அந்த‌ப் ப‌னிம‌ழை.
வெப்பத்தைப் ப‌ருகிக் கொண்டே -- கண்ணீர் வற்றி
வேதனையில் க‌ரைந்து போன‌து!
அந்த இளமாலைப் பொழுது
இரவினைத் துணையாக்கியே--தன் நிறம் மங்கி
இருட்டினில் மறைந்து போனது!
அந்த வெண்ணிலவு
ஆதவனுடன் பேசிக்கொண்டே
பகலினில் ஒளிந்து கொண்டது!
அந்த இளந்தென்றல்
மழையோடு தோழமை கொண்டே
மழைததூரலிலே சங்கமித்துக் கொண்டது!
அந்த குயிலோசை
உணவுக்கான தேடுதலோடு
விடிகாலையில் பறந்துபோனது
அந்த வறுமைப் புலம்பல்கள்
காலை அவசரத்தில்
கடமைச் சராசரியில் கழிந்துபோனது!

Friday, October 23, 2009

!வர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்!

வானத்தில் உமிழ்ந்தால் உன்முகத்தினில் தானே அதுவீழும்= வீணர்களுடன்!
வமபளந்தால் உன்வாழ்வினில் துன்பம்தானே என்றுமே தொடர்கதையாகும்!-மூட
விதிதனை நீ நம்பும்வரையினில் இவ்வுலகினில் துயரம்தானே வாழ்வின்மிச்சமாகும்!
வர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்!

அன்பினைத் தேடும் மனிதர்களே! உண்மையான நண்பர்கள் உங்களுக்குள் நட்பிற்கு இலக்கணமாய் இருப்பார்களே!

அறிவைத் தேடும் மானுடமே !உங்களுக்கு
அதிஷ்டத்தின்
தேவதைகள் தங்களுடைய சிறகை வளைத்துக் கொடுப்பார்களே!
அன்பினைத் தேடும் மனிதர்களே! உண்மையான
நண்பர்கள் உங்களுக்குள் நட்பிற்கு இலக்கணமாய் இருப்பார்களே!

கார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது?

கார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது?
கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு ?
களமிறங்கிப் பெய்யும்?
என்று எவருக்குமே தெரியாது
!கருவுற்ற தாய்க்கு கரு எப்போது சூல்கொண்டு
கருவுற்று தாயின் மடியில் சேய் தவழும்?என்று எவருக்குமே தெரியாது
அடை மழையோ? அடைத்த கதவு திறக்காத மழையோ?
ஐப்பசி மாதத்து அடைமழையோ?
கார்த்திகை மாதத்து கனமழையோ?
கோடைகாலத்தின் அந்திமழையோ இரவுமுழுவதும் பெய்யும் மழையோ?
பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் கண்ணம்மா!
இறங்குன மழை இருந்து பெய்யும்
ஏறுனமழை ஓடிப்போகுமடி பொன்னம்மா!
இப்போ காலத்தில் ஏன் மழையில்லை சின்னம்மா?

Tuesday, October 20, 2009

நினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன்

நினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்
அனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன் சொரியும் காதலின்பமே!
தினையளவு கண்பார்வை காட்டி வானளவு கனவுகாணவைக்கும் காதலியே!
எனையாளும் அன்புதேவி என்னாளும் மறவாத மந்திரத்தை நீ தந்தாயோ?

வெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி வீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்!

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் -பகுத்தறிவாலே
வாழ்கின்றாய் தாழாத நெஞ்சமே காதல் கடலினில்- நீயேன்
ஆழ்கின்றாய் தனியுடைமை வஞ்சகரின் துன்பத்தாலே துயரத்தில் -ஏன் தானோ?
சூழ்கின்றாய் வெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி
வீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்!

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே!-பகுத்தறிவே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !

எண்ணுதற்கு எட்டாத எழிலும் ஆனவளே என்காதலியே!எனதினிய தோழியே துணையே இணையே !அணையே !மனையே! மாண்பான நல்லறத்தின் விடிவிளக்கே!
விண் பறந்தும் மண் நிறைந்தும் வாழும் மனிதம் போற்றும் அன்பாலே!,
எண் இறந்த எல்லை கடந்தும் கோடிக்கோடி ஆண்டுகள் வாழும் காதலின்பமே!
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே!-பகுத்தறிவே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !

Monday, October 19, 2009

காதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து காதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே காதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்!

பள்ளி அறையிற் பகலே இருளில்லை!
காலத் திசையிற் கலக்கின்ற சந்தியில்
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்-அன்பில்லாமலே
போவதொன் றில்லை வருவது தானில்லை-அறிவில்லாமலே
ஆவதொன் றில்லை அழிவது தானில்லை
காதல் வழிசெய்த கண்ணுடன் கண்ணினை வைத்து
காதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து
காதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே
காதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்!

பிறப்பும் இறப்பும் மெய்யாம்! மறுபிறப்பு என்பது பொய்யாம்! இம்மை என்பது உண்மை!மறுமை என்பது பொய்மை!

உள்ளது சொல்வேன் உணர்வுடை யோருக்கே!
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
இன்று இருப்பவருக்கென்ன நிரந்தரம்?
பின்னை வருபவர்க்கென்ன நிச்சயம்?
எண்ணறுங்கோடி வந்தனர் போயினர் !
என்ன மாயம் வந்தவரெல்லாம் எங்கே போயினர்?
பிறப்பும் இறப்பும் மெய்யாம்! மறுபிறப்பு என்பது பொய்யாம்!
இம்மை என்பது உண்மை!மறுமை என்பது பொய்மை!
இருந்தவர் பற்றிய நினைவுகளே! போனவர் பற்றிய கனவுகளே!
இறப்பவர் பற்றிய பீதிகளே! இனி இறப்பவர் பற்றிய யூகங்களே!
இருந்திடும் நாளில் எல்லோரும் ஒற்றுமையில் உயர்ந்திருப்போமே!
எல்லோரும் இன்புற்று வாழும் தத்துவத்தில் உய்ந்திருப்போமே!

வழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே! வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே! எல்லோரும் இன்புற்று பகிர்ந்துண்டு !

விழியல்லால் வேலில்லை கண்மலராம் மாதர்
மேனியல்லால் வில்லில்லை தென் தமிழாம்
மொழியல்லால் மொழியில்லை கனிமொழியாள்
அன்புவழி காதல் பேரின்பமல்லால்
கழியுலகில் கடலில்லை வாழ்வுலகினில்
காரியமே காரணமென்றுரைப்பார் மானுடரே!சுவர்க்கத்தை இம்மையிலே கொண்டுவர தனியுடைமைவீழ்த்திக்
காட்டும் பொதுவுடைமைநல்
வழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே!
வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே!
எல்லோரும் இன்புற்று பகிர்ந்துண்டு மகிழ்ந்திருப்போமே!

!தான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்!ஆணாதிக்க எதிர்ப்புக் குரலாலே!

கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த ஆரணங்கே!
அலையற்ற ஆரமுதக்கடலே!, அக்கடலுண்டமுகிலே!
உனக்கு இதமென்று !என்னிதயத்தை கேட்டாயோ?
எனதென்பதும் உனதென்பதுமின்றி
தனதென்றுதன்னையுங்காணாது கண்பார்வையிலே நமதென்று கண்டாயோ?
உறவே நம்முயிர் கலக்கின்ற ஓருயிருண்மையை நீயின்று அறிந்து கொண்டாயோ?
யானென்பதொன்றில்லை! நாமென்று புரிந்து நடந்து வந்தாயோ?
பொய்யான பேர்களின் பொய்யுரையையே!.
நிலையென்று நாடி நிலைநின்ற பொய்ம்மதி நீக்கிவிட்டாயே!
!தான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்!ஆணாதிக்க எதிர்ப்புக் குரலாலே!தன்சமூக மாற்றத்திற்கான போராட்டத்
தன்நற் குணத்தால் தான்நிறைவாய் தானே கூட்டிவிட்டாயே!
நீதியறியாத, தன்னிலை அறியார்க்கெல்லாம் மக்கள் சக்தி நம்சக்தி,மக்கள் ஜன நாயகம்,
வாழ்நிலையிதுவேயென்று போராளியாகி நன்னிலைசொல்லி இணைத்து சென்றாயே!

யார் இடித்தாங்க? யார் மிதித்தாங்க? யார் மோதினாங்க?

யார் இடித்தாங்க?
யார் மிதித்தாங்க?
யார் மோதினாங்க?
கதவிலதான் தான்முட்டிவிட்டு
கதவிடித்தது என்பாங்க!
கருவேலமுள் மேலதான் மிதித்துவிட்டு
கருவேலமுள் தான் தைத்தது என்பாங்க!
வண்டியிலதான் மோதிவிட்டு
வண்டிதானே மோதியது என்பாங்க!
யார் இடித்தாங்க
?யார் மிதித்தாங்க?
யார் மோதினாங்க?

Sunday, October 18, 2009

அன்பாலே நீ விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது

காதலியே என் தோழியே - உன் கண்ணின் கடைப்பார்வையிலே!
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் -அன்பாலே நீ
விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது
வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்பினைப் போல் உன்னை
நானே சுற்றிசுற்றி வருகின்ற மந்திரம்தான் என்னடி சகியே!
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்றும்-என்மனதினில்
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்கு உரித்தாக்கினையே!

எண்ணற்கரியவளே என்னவளே! வண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதே!காதலனாம் என்னையே! கண்ணுக்கினிமையாக காணவந்தாயோ?

மாலைமணம் கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டிவந்தவளே!
செண்பகமல்லிகையோடு
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகளே!
அன்பே! உன்னைஅறிந்துகொண்டேன்
எண்ணற்கரியவளே என்னவளே!
வண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதே!காதலனாம் என்னையே!
கண்ணுக்கினிமையாக காணவந்தாயோ?

உண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே! உன்முத்தமொன்று போதுமடி! மண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி-

கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்-காதலனுக்காகவே
காத்திருக்கும் காதலியே- உன் காதல்பார்வை கொண்டு என்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
தேவதையே இன்னமுதே!
உண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே!
உன்முத்தமொன்று போதுமடி!
மண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி- நாமே
கோடிக்கால பயிரைச் சமைப்போமடி!

Saturday, October 17, 2009

-இவ்வுலகினில் இல்லாமை இல்லாத பொன்னுலகம் இன்னும் உருவாகவில்லையே! மண்ணும் மலையும் கடலும் ஏழுலகும் சுதந்திர சுவாசம் கொண்டிருக்கையிலே மனிதன் மட்டும் மக்கள

வண்ணமாடங்களே வானில் உயர்ந்து நிற்கின்றதே!வறுமையிலே
வாடுகின்ற ஏழ்மையும் மனிதம் தாழ இருக்கின்றதே
முத்துமணியும் வைரமும் நன்பொன்னும் இருந்தென்ன? -இவ்வுலகினில்
இல்லாமை இல்லாத பொன்னுலகம் இன்னும் உருவாகவில்லையே!
மண்ணும் மலையும் கடலும் ஏழுலகும் சுதந்திர சுவாசம் கொண்டிருக்கையிலே
மனிதன் மட்டும் மக்கள்ஜன நாயகம் இன்றி அடிமையாகவே இருக்கலாமா?
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பணக்காரன் வீட்டினிலே
பஞ்ச குடிசையில் பசித்தீயினில் தினம் செத்துமடியுது ஏழைகளின் குச்சினிலே!
செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல் இயற்கையிலேயே-சுதந்திரமாகவே
எல்லாரும் எல்லாமே பெற்று நலமாகவாழும் உலகத்தையே நாம் உருவாக்குவோம்!

கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே! கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?

கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே!
கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?-சோதி
மலர்ந்த மலர்ச்சுடரே!சுந்தர தமிழே மயக்கமென்பது ஏனடி?- நீராய்
உருக்கி என் ஆருயிராய் ஆனவளே தயக்கமென்பது ஏனடி?
இன்பமும் துன்பமும் இனிமேல் ஒன்றுதானடி!
காண்பதற்கு அரிய பேரொளியே!ஆற்றின்ப வெள்ளமே பேரின்பமே!
கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே!
கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?

இமைப்பொழுதும் என்னெஞ்சினில் நீங்காதவளே! பொங்கும் புதுவெள்ளமே! ஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதலியே! மயக்கும் மாலைப் பொழுதே!

இமைப்பொழுதும் என்னெஞ்சினில் நீங்காதவளே!
பொங்கும் புதுவெள்ளமே!
ஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதலியே!
மயக்கும் மாலைப் பொழுதே!
எண்ணுதற்கு எட்டாத எழிலே ஆனவளே பேரழகே!
மணக்கும் மல்லிகைப் மலரே!
உன்வாய்முத்தத்திலே கறந்தபாலும் கரும்புச் சாறும்
நெய்யும் கலந்து வாசமே!
என்றென்றும் உன் நேசமே!

Friday, October 16, 2009

தோழமையே நீயும் இல்லாமை இல்லாத உலகினை ஆக்கிட வேண்டும்!

உயிரே நீஅறியா நிலையிருந்து மீண்டிடவேண்டும்!
அறிவே நீயும் அறியாததையே அறிந்திட வேண்டும்!
அன்பே நீஅறிந்ததையே அறியார்க்கு அறிவூட்டிட வேண்டும்!
உள்ளமே உண்மைப் பொருள் உணர்ந்து உலகினில்
மெய்யே நீயும் மக்களுக்கு உணர்த்திட வேண்டும்!
தோழமையே நீயும் இல்லாமை இல்லாத உலகினை ஆக்கிட வேண்டும்!

கயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி- காத்திருந்த காதலனின் நெஞ்சினிலே இன்பமாலை சிரிக்கின்ற பொழுதினிலே கோடிகோடி கவிதைகளே சொல்லியதடி

காதலாம் பொய்கையில் பாய்ந்ததே-காதலியே உனது அன்பாம்
நேசத்தின் புதுப்புனலே!
கயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி-
காத்திருந்த காதலனின் நெஞ்சினிலே
இன்பமாலை சிரிக்கின்ற பொழுதினிலே
கோடிகோடி கவிதைகளே சொல்லியதடி
மெய்கண்ட அன்பின் ஆரமுதே!என்பாசப் பேரிகையே
காரிகையே கண்முத்தமாலை கலந்தனவே!

பொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின் மெய்முகம் காட்டிடக் கூடாதா?

பொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின்
மெய்முகம் காட்டிடக் கூடாதா?உன் சிவந்த பொன்மேனி சிலிர்ந்திடக் கண்டேனே!
உன் நுண்ணிடை அசைந்திடப் பார்த்தேனே!குவளைகள் பூத்திருக்கும் குளத்தினிலே
குவியாது விரிந்திருக்கும் செந்தாமரைச் செல்வியே!ஏதோ நேயத்திலே
உன் செவ்வாய் இதழ்கள் துடிப்பதென்ன?அந்தி மாலையின் மயக்கத்தை
என் இதயத்தில் கலந்து படிப்பதென்ன?

Saturday, October 10, 2009

தனிமையிலே இனிமையின்று வாடிய ! தலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே!

அழகியமயில்கள் மகிழவே!
கடல் நீரைக் குடித்து மின்னல் இடியுடன்கூடி கார்மேக!
மழையும் வந்ததே! தலைவனைப் பிரிந்து!
தனிமையிலே இனிமையின்று வாடிய !
தலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே!

Friday, October 9, 2009

!என் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்! அரும்பிய மலர்களாலே! கண்களில் தீட்டிய மையாகவே ! காடுகள் சொல்லும் கவிதைகளடி-!அது காதலின் பேரின்ப எல்லையடி!

சென்றதலைவன் இன்று மீண்டும் வந்தான் !
அது பொய்யல்ல மெய்யாகும் தோழி!-
என் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்!
அரும்பிய மலர்களாலே!
கண்களில் தீட்டிய மையாகவே !
காடுகள் சொல்லும் கவிதைகளடி-!அது
காதலின் பேரின்ப எல்லையடி!

தலைவி நான் ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் ! ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!

தலைவி நான்!
ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் -
தலைவன் அவன் பிரிவாலே
ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!
எழில்வானம் மின்னுதே அவனின் தூது உரைத்தே!
வரி நிறப்பாதிரியும் வாடுதடி இளமணல் குளிர்ந்த காட்டினிலே
ஆலங்கட்டிகள் புரள வானமும் இடி இடித்ததே-தலைவி நான்
ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் !
ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!

நேற்று என்பது முடிந்த ஒன்றாகும்! நாளை என்பது நமது இலக்காகும்! இன்று என்பது நமது போராட்டமாகும்! தோழமை என்பது நமது உண்மை உறவாகும்!

மோனமென்பது ஞான வரம்பாகும்1
காதலென்பது அன்பின் சிகரமாகும்1
கானமென்பது மகிழ்வின் எல்லையாகும்1
காற்று என்பது உயிரின் மூச்சாகும்!
நேற்று என்பது முடிந்த ஒன்றாகும்!
நாளை என்பது நமது இலக்காகும்!
இன்று என்பது நமது போராட்டமாகும்!
தோழமை என்பது நமது உண்மை உறவாகும்!

நெஞ்சினை ஒளிக்காதே -ஒரு வஞ்சகமே செய்யாதே-அறிவுக் கண்ணினை மறைக்காதே -காதல் பெண்மையில் அமுக்காதே

நெஞ்சினை ஒளிக்காதே -ஒரு
வஞ்சகமே செய்யாதே-அறிவுக்
கண்ணினை மறைக்காதே -காதல்
பெண்மையில் அமுக்காதே-இதழ்முத்த
அமுதினை மூடாதே-உன்னாசை
அழகினுக்கு திரைபோடாதே!-உனது
உள்ளத்தில் உள்ளதை உதட்டிலே கொண்டுவா!
உதடுவரை வராதகாதலே சிதறுண்டு போகுமே!

மனைவி மனையினில் இருக்க மாற்று ஒன்று இல்லையடா-துணையான மனையாளே மனையில்லை என்றாலே வான்கூரை வீழ்ந்தது போலாகுமே!

மனைவி மனையினில் இருக்க மாற்று ஒன்று இல்லையடா-துணையான
மனையாளே மனையில்லை என்றாலே வான்கூரை வீழ்ந்தது போலாகுமே!- ந்ல்ல
மனைவி அமைவதெல்லாம் நல்லறமான இல்லறமாகுமடா!-கணவனும்,ஆண்பெண் சமத்துவத்திலே!
மனைவிக்கு நல்லகணவனாய் அமைந்துவிட்டாலே பேரின்பமாகுமடா!

பொருள் இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே இல்லானை இல்லானை இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா? செல்லாதா ? என்வாயிற்சொல்லே

இல்லானை இல்லானை
இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா?
செல்லாதா ? என்வாயிற்சொல்லே!~
இல்லாளும் வேண்டாளா? பெற்றெடுத்த தாயும் வேண்டாளா?-
பொருள்
இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே
இல்லானை இல்லானை
இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா?
செல்லாதா ? என்வாயிற்சொல்லே!-பொருள்
இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே!

மனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போல! மண்ணில் வாழும் வரையில் சமத்துவமாய் -இருந்து இனிதாக வாழும்கலை அறிந்திட வேணுமே-எல்லோரும் இன்புற்று இருப்ப்து அல்லாமலே

மனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போல!
மண்ணில் வாழும் வரையில் சமத்துவமாய் -இருந்து
இனிதாக வாழும்கலை அறிந்திட வேணுமே-எல்லோரும்
இன்புற்று இருப்ப்து அல்லாமலே நாமே
வேறொன்றும் அறியாதே வாழ்ந்திடவேணுமே

ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் - அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!

ஒன்று நினைக்க ஒன்று நடக்கும் உலகினிலே-
ஒன்றை நினையாத போதினில் ஒன்று நடக்கும் இந்த மண்ணிலே
ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் -
அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே
ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!

Tuesday, October 6, 2009

ஆரறிவார் ஆரறிவார் நீதிவழி ஆரறிவாரோ? ஆரறிவார் ஆரறிவார் நேர்மைவிழி ஆரறிவாரோ? ஆரறிவார் ஆரறிவார் சத்தியஒளி ஆரறிவாரோ? ஆரறிவார் ஆரறிவார் நியாயமொழி ஆர

ஆரறிவார் ஆரறிவார் நீதிவழி ஆரறிவாரோ?
ஆரறிவார் ஆரறிவார் நேர்மைவிழி ஆரறிவாரோ?
ஆரறிவார் ஆரறிவார் சத்தியஒளி ஆரறிவாரோ?
ஆரறிவார் ஆரறிவார் நியாயமொழி ஆரறிவாரோ?- நல்லோராம்
ஆரோ அவர்வழி நடந்தால் -இம்மையிலேயே
இவ்வுலகெல்லாம் பேரின்பமே!

என்னுயிர்க் காதலியே என்னுலக தேவதையே எனக்குள் உனைக்கலந்து உன்னையே என்னாளுமே நினைத்திடவே வரமெனக்குத்தா நானும் எத்தனையுகம் தான் உனை எண்ணியே தினந்தோறும்

என்னுயிர்க் காதலியே என்னுலக தேவதையே
எனக்குள் உனைக்கலந்து உன்னையே என்னாளுமே
நினைத்திடவே வரமெனக்குத்தா நானும்
எத்தனையுகம் தான் உனை எண்ணியே
தினந்தோறும் இந்த இனபக் காதல் தவமே!

நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே! என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே! நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே! எப்பாடல்

நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே!
என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே!
நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே!
எப்பாடல் என்று ஆனாலும் மனிதம் போற்றியுயர்ந்திடுவோமே!

Saturday, October 3, 2009

வாழ்க்கை ஒரு சின்னஞ்சிறு தீபமல்ல! வாழ்க்கை அது அதி அற்புதமானதொரு தீப்பந்தம்-!

வாழ்க்கை ஒரு சின்னஞ்சிறு தீபமல்ல!
வாழ்க்கை அது அதி அற்புதமானதொரு தீப்பந்தம்-! நம்வாழ்வினிலே
வளமாகவே வாழ்ந்து வரும்தலைமுறைக்கு பிரகாசமாகவே தானளிக்க
வேண்டுமென்பார் எம் அறிஞர் பெர்னாட்ஷாவே!
மனிதவாழ்க்கையே மதிப்புமிக்கதே நம்குறைதனையே!
மனிதவாழ்விலே ஒருகுறையாகவே எண்ணாமலே !- நம்
உள்ளத்திலே உறுதி இருந்தாலே நாமே எதையுமே சாதிக்கலாமே!

மூன்று நிமிடம் நீயும் சரியாக சிந்தித்துப்பார்த்து தெளிவுடன் நடந்தால் முப்பது ஆண்டுகள் மகிழ்வோடு வாழலாமே!

மூன்று நிமிடம் நீயும் சரியாக சிந்தித்துப்பார்த்து தெளிவுடன் நடந்தால்
முப்பது ஆண்டுகள் மகிழ்வோடு வாழலாமே! விரக்தியான தாழ்வு மன நிலையை நீயும்
மாற்றிக்கொள்வதின் மூலமாகவே வாழ்க்கைப் பாதையை செம்மையாகவே
மாற்றிகொண்டு வெற்றிக் கனிதனையே பறிக்கலாமே!
மன நிலையை ஒரு கட்டுப்பாட்டினில் நீயும் வைத்திருந்தாலே !
எந்த தாழ்வுமே எல்லாம் சரியாகிவிடுமே உலகத்திலே!

வாழும் கலையெழுத்தாய் ஆகிடுமன்றோ?

நிலையின்றி தவிக்கும் உள்ளங்களே!
நிம்மதியில்லாத மனிதர்களே!
அமைதியிழந்த மானுடமே!- நீயும்
தலையெழுத்து இது தானென்று தனக்குள்ளே முடிவெடுத்து
நிலை தடுமாறி வாழ்க்கை வாழ்ந்து
விரக்தியிலே வெந்துபோகாமலே -வாழ்வுதனை
வெறுத்து வழிதெரியாமல் வாடுகின்ற நிலைவிட்டு
தன்னம்பிக்கைகு மறுபெயர்தான் வாழும் தலையெழுத்தென்று
தனக்குத் தானே தானும் உணர்ந்துவிட்டாலே நீசொல்லும்
தலையெழுத்தே வாழும் கலையெழுத்தாய் ஆகிடுமன்றோ?

Thursday, October 1, 2009

காண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்! கண்ணில் உலகத்தை காணவந்தேன்!

காண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்!
கண்ணில் உலகத்தை காணவந்தேன்!
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே!
அன்பினில் விளைந்த ஆரமுதே-இம்மையே உன்னையே
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே
அத்தனே ஆனனே சித்தமே போனனே உன்னாலே!
பித்தனே ஆனனே எத்தனை காலமே -உன் நெஞ்சினில்!
சிக்கிடும் கோலமே நானுனைத் தொடர்ந்து
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே!

உள் உருகும் காதலன்பே! இன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே!

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதவளே!-எனக்குள்
உனக்குள் கலந்த அன்பும் ஆகிக் கசிந்து உள் உருகும் காதலன்பே!
இன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே!
உலாவரும் இளந்தென்றலே உண்மையான மெய்ஞானமே!