Popular Posts

Sunday, June 19, 2011

தமிழ்பாலா/பகிர்வு/அனுபவம்/கற்றுக்கொள்ளல்/-”பத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,

பத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,ஒரு அற்புதமான இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பு !காலச்சுவடு ,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய
அற்றைத்திங்கள் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமை கொள்கின்றேன். ஞானி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களோடு இணைந்த அவரின் பகிர்வு வளரும் படைப்பாளிகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது .அதைவிட அவருடைய கலந்துரையாடல் பதில் அவரது அனுபவம் ,சமச்சீர் கல்வி,அவரது ஆணித்தரமான நேர்மையான அவருடைய அணுகுமுறை கேட்பதற்கே பிரமிப்பாக இருந்தது

Monday, June 6, 2011

தமிழ்பாலா’/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-”காதலும் காலம் கடந்தாலுமே ”

கண்ணதாசனின் கவிதைகளும்
காண்டேகரின் தத்துவ விளக்கங்களும்
எல்லா சூழலுக்கும் ஏற்ற மாதிரியே
காலம் கடந்தும் சுவை கூட்டுகின்றனவே!.-காதலியே அதுபோலவே நம்
காதலும் காலம் கடந்தாலுமே காதலின்பத்தை அளித்து மெருகூட்டிடுமே!

Saturday, June 4, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/குற்றங்களே பார்த்து வாழ்ந்தாலே

கோணல் இருந்தாலும் குணம்மாறிடுமோ? கரும்பினுக்கே!
குற்றங்களே பார்த்து வாழ்ந்தாலே சுற்றமும் நிலைத்திடுமோ?
குறைகளையே சொல்லிக் கொண்டு வாழ்ந்தாலே வாழ்க்கை இனித்திடுமோ?
குறுகிய எண்ணங்கள் தான்கொண்ட மனிதர்கள் வாழ்வும் ஜெயித்திடுமோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/படித்ததில் ரசித்தது/கட்டுரை/சொற்சித்திரங்கள்/-

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனை பாராமலே!
ஏகலைவன் துரோணரை மானசீக குருவாக ஏற்றதுபோலவே-தானும்
குருவாக ஏற்றுக்கொண்டார்!

பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா?
-சின்னராசு- அவர்களுக்கு நன்றி----

துரோணரை நேரிலே கண்டு அவரிடம் பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து அதில் தலை சிறந்தவானாய் விளங்கிய ஏகலைவன் மாதிரி, பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று பாரதிதாசனே வியந்து பாராட்டும் விதம் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்து அவரிடம் மரியாதை செலுத்தி பழகியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். அதே மாதிரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் அலாதியான அன்பை செலுத்தி வந்தார்.

கண்ணதாசன் சொந்தமாக படம் தயாரித்தபோது, அப்போது முன்னணியில் இருந்த ஒரு திரைப்பட கவிஞரிடம் தனது படத்திற்கு பாடல் எழுதித்தர கேட்டபோது, அந்த கவிஞர் மிக அலட்சியமாக, 'எனக்கு புதிதாக எழுத நேரமில்லை. இதில் ஏதாவது பாடல் தேறினால் எடுத்துக்கொண்டு போ' என்று பழைய காகிதங்களை தூக்கித் தந்ததாக வேதனையுடன் கண்ணதாசன் கூறினார்.

அதேசமயம் அந்த காலக்கட்டத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கண்ணதாசன் நேரில் பார்த்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டபோது, அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாளில் தமிழ் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சில திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்து வந்தார். அந்த ஆசிரியரின் ஏளனத்துக்கு பலியானவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர்.

ஒரு சமயம் ஒரு விழாவிற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் வந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்த நேரம், அப்பக்கமாக குறிப்பிட்ட அந்த சினிமா பத்திரிகையின் ஆசிரியர் வரவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென பாய்ந்து அந்த சினிமா பத்திரிகை ஆசிரியரின் சட்டை கழுத்தை பிடித்துக் கொண்டார். அந்த ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி ஏளனமாக அந்த வாரத்தில் தன் பத்திரிகையில் எழுதி இருந்ததை பட்டுக்கோட்டையார் குறிப்பிட்டு, 'என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?'' என்று கேட்டு உதைக்கப் பொய்விட்டார்.

தனக்காக ஒரு மனிதரிடம் சண்டைக்கு போகிற அளவு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடந்து கொண்டார் என்றால் அவருக்கு தன் மீதுள்ள மதிப்பு எவ்வளவு என கண்ணதாசன் நெகிழ்ந்து போனார்.

அதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.

சுமார் 29 வயதிலேயே காலமாகிவிட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது எழுத்தைப் போலவே உயர்ந்த சுபாவங்களை கொண்ட மனிதராவார். பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.

ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், 'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்' என்றார்.

பொதுவுடமை லட்சியம் என்றால் வாழ்க்கையில்லாதவர்களை முதலில் கை தூக்கி விடுகின்ற பணிதான் முக்கியமானது. அந்தப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் சொந்த துன்பங்களை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'

இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், 'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே'' என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமல்லாமல் நகைச்சுவையான பாடல்களும் எழுதுவதில் வல்லவர். அவரும் அந்த காலத்தில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பாடல்கள் எழுதுவதுண்டு. ஆனால் அர்த்தம் விளங்குமாறு பாடல்கள் எழுதியதுதான் சிறப்பு!

'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'


என்று மிக நயமாக பட்டுக்கோட்டை நையாண்டி செய்கிறார். 'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை விநயமாகக் கேலி செய்கிறார்.

'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'

வெறும் கேலி கிண்டல் என்றில்லாமல் ஒரு சிறந்த சிந்தனைவாதியின் சீற்றமும் பட்டுக்கோட்டையார் பாடலிலே காணலாம். 'பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.

'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'

என்று ஆத்திரமாய் கேட்கிறார். அதேமாதிரி 'கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.

'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'

என்கிறார் வேதனையுடன். இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.


'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!

என்கிறார். 'பாண்டித்தேவன்' என்ற திரைப்படத்தில் இன்றைய நாட்டு நடப்பை சொன்னதுபோல பட்டுக்கோட்டையார் எழுதியுள்ள பாடல் சில வரிகள்.

'நாடு முன்னேற பலர்
நல்ல தொண்டு செய்வதுண்டு
நல்லதை கெடுக்கச் சிலர்
நாச வேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர்
ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த
உண்மையை தெரிந்தும், நீ
ஒருவரையும் வெறுப்பதில்லை!'

என்கிறார். 'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.

'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது


பட்டுக்கோட்டையாரின் சிந்தனை செல்வமான அற்புதமான பாடல்களை குறைந்த காலத்திலேயே நிறைந்தளவு எழுதி இருக்கிறார். .

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/படித்ததில் ரசித்தது/கட்டுரை/சொற்சித்திரங்கள்/-

Friday, June 3, 2011

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-கட்டுக் கரும்பாய் இனித்திடும் நந்தவனமே!

அவளின்
காதலைச் சொன்ன கணமே கணமே!வானில்
காற்றாய்ப் பறக்குது மனமே மனமே!சுரக்கும்
காதலி அன்பு தினமே தினமே~!கட்டுக்
கரும்பாய் இனித்திடும் நந்தவனமே!

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-”செல்ஃபோனே காதல் கானமிசைத்திடும் ! இசைக்குயிலே”

செல்ஃபோனே காதல் கானமிசைத்திடும் !
இசைக்குயிலே நீயும் என்னை அழைத்திடும் போது,- நானெத்தனை
தொலைவினில் இருந்தபோதும் உன்னை நான் தொட்டிடவே மறந்திடுவேனோ?வெட்கமென்னடி? புதுமைப் பெண்ணே!-அது கூடாதடி!
காதலன்பிலே அன்பு உரையாடலிலே!அந்த ஆண்மை வேண்டிடும்
இந்த பெண்மை பேசிடும் காதல் மொழிதனில் உன்னை விரும்புகின்றேன் என்று சொல்லிடும்
முதல் ஆசை வார்த்தைதானடி!உனை நேசிக்கின்றேனே!
காதல் என்பதுதான் என்ன?
நான்கு கண்களில் சந்தித்து இருமனங்களில் சிந்தித்து கருத்தொருமித்து தோன்றுகின்ற
ஒரேஒரு உறவினில் வாழும் நனவுதானடியே!

Thursday, June 2, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/உன்மனதின் ஆழத்தையே அறியலையே!

சிட்டான சிட்டுக் குருவிப் பெண்ணே!
சிலிர்க்கும் அன்பு முல்லைப் பூவே!
வெட்டியாய் நீயும் நிற்க வேண்டாம்!
காதல் வீணை தழுவு மீட்டு!

கண்ணைக் கவரும் அத்தானே!
காதல் கனியும் நெஞ்சினிலே!
விண்ணையும் நானும் அளந்தேனே!
விரிகடலின் ஆழமும் கண்டேனே!
உன்மனதின் ஆழத்தையே அறியலையே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/ஆவணி மாதத் தென்றலே!

மணமுள்ள முல்லைப் பூவே!
மனமிறங்கி வாடி நீயே!-உன்
தாவணியும் காற்றிலாடுதே!-என்னெஞ்சில்
லாவணியும் பாடிடுதே!
ஆவணி மாதத் தென்றலே!
அணைத்திட அழைக்குது உன்னையே!=அடி
மணமுள்ள முல்லைப் பூவே!
மனமிறங்கி வாடி நீயே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”என்னிலே தொடுக்கின்ற காதல்போரினையே ”

காதல்
கள்ளிருக்கும் கண்பூவே!- நீயும்
புள்ளிருக்கும் பனித்துளிக்குத் தானே!-உந்தன்
புன்னகையைத் தந்தாயே!எனக்கில்லையோ?
எனக்கில்லையோ?
தொல்லைசெய்யும் கூரிய கண்களாலே!-என்னிலே
தொடுக்கின்ற காதல்போரினையே நீயும் நிறுத்திவிட மாட்டாயோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”உன்னுள்ளமோ உள்ளமோ! சிணுங்குது சிணுங்குத்டி!”

காதலியே கண்மலரே! தேன்மொழியே தெம்மாங்கே!
உன்மஞ்சள் முகத்தினில் மின்னும் புன்னகையும் மறைந்ததினாலே!
பஞ்சனையும் முள்ளானதே பாலும் ,
பழமும் வேம்பானதே!,உன் மாந்தளிர் மேனியிலே!
பசலையும் ஏனடியோ?உனது
இடையோ இடையோ துள்ளுது துள்ளுதடி!
உந்தன் விழியோ விழியோ? துடிக்குது துடிக்குதடி!
உன்கன்னமே கன்னமே சிவக்குது சிவக்குதடி
உன்னுள்ளமோ உள்ளமோ! சிணுங்குது சிணுங்குத்டி!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”அந்தி மலரே மலரே நீயும் மணக்காதே!”

நிலவே நிலவே நீயும் போய்விடு-என்
நிம்மதியை நீயே என்னிடமே தந்துவிடு!-அந்தி
மலரே மலரே நீயும் மணக்காதே!-இந்த
மங்கையின் நெஞ்சினை உருக்காதே!
என்
நெஞ்சமே நெஞ்சமே கலங்குது கலங்குது!=மலர்
மஞ்சமே மஞ்சமே தவிக்குது தவிக்குது!-எந்தன் பூமேனி
கொஞ்சமே கொஞ்சமே மயங்குது மயங்குது-தலைவனே நீயும் காலத்தில் வாராது
காதலின்பம் தாராது தனிமைப் பிரிவுதான் தந்தே
வஞ்சமே வஞ்சமே செய்வது நியாயமா?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”-காதல் கீழ்வானின் சிரிக்கின்ற புதிரானாளே!”

ஒடியுமோ ஒடியுமோ வண்ணக் கொடியிடையே!
அசைந்திடுமோ?அசைந்திடுமோ? பின்னல் சடையிடையே!
மிரண்டிடுமோ?மிரண்டிடுமோ? சின்ன மலர்விழியே!

சீண்டிடுமோ?சீண்டிடுமோ? கன்னக் குழி நகையே!காதலி அவளின்

இதழிரண்டும் செந்தேனோ?-தங்கத்தேராய் அந்த
இளவஞ்சி நடந்தாளா? அசைந்தாளா?-அவளோ!
கிழக்கினில் உதிக்கின்ற கதிரானாளே!-காதல்
கீழ்வானின் சிரிக்கின்ற புதிரானாளே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-”காதல் தலைவியே காதல் ஆற்றாமையால்”

அவனின் தோற்றமே அவளைக் கவர்ந்ததே-
அவளின் அழகே அவனை ஈர்த்ததே!
ஒருவரை ஒருவர் உற்று நோக்கினாரே!-காதலோ!
இருவரின் நெஞ்சிலும் காவிரி வெள்ளமானதே!
இரவுக் குறியும் பார்த்ததே பகலின் அறிகுறியும் ஆய்ந்ததே!-அன்பாலே
இருவருமே ஆட்கொண்டு இடைவிடாத சந்திப்பானதே!

காலமாறிய போதிலே கடமை நெஞ்சினில் தோன்றியதே!~
காணும்போதெல்லாம் துயரங்கள் களவினில் வந்ததே!
காதல்மணங் கொள்ளென்று காதலர்மனம் சொல்லியதே!-அதையே!
காதல் தலைவனே காதல் தலைவியையே வேண்டினானே!-மணஏற்பாட்டுக்கே!
காதல்மணம் கொள்ளவே சில நாள் தலைவனே பிரிந்தானே!~அந்தப் பிரிவும்
காதல் தலைவிக்கு தனிமையாம் துன்பத்தையே தந்ததின்றே!
காணும் அந்தி நிலவும் குலவும் தென்றலும்
மாலைவேளையும் தலைவியவளை வாட்டியதே!
மாலைமறைந்தும் இரவுவந்தும் ஊரெல்லாம் உறங்கினாலுமே!
காதல் தலைவியின் கண்கள் மட்டும் உறங்கிட மறுத்திடுவதும் ஏனோ?காதல் தலைவியே
காதல் ஆற்றாமையால் தன் தோழியிடமே அழுது புலம்புகின்றாளே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/அனுபவம்/-” காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்!”

என்வாழ்வினிலே உன்போலே ஒருபேரழகியை நானிதுவரை கண்டதில்லை!
கருவண்டாம் பார்வையிலே !முகில்தோய்ந்த நீலக்குழலினிலே மாங்கனியாய்-பிளந்த சிவந்த
கன்னங்களிலே காத்திருக்கும் சாடையிலே கானக்குயில் இசையமைக்கும்!
காணும் நேரமெல்லாம் வில்லாம் புருவங்கள் சிறகசைத்து சேதிசொல்லும்!
கண நேரமும் அமுத இதழ்கள் குவிந்ததாமரை மொட்டாகும் நெஞ்சங்களே!
கண்ணுற்றேன் மூங்கில் பொன்னிறத் தோள்கள் காதலுக்கு தோள்கொடுக்கும்!-அடிக்
கள்ளித்தோழியே உன்முத்துப்பல் வரிசையும் என்னுள்ளத்தையே ஈர்த்ததடி!

Wednesday, June 1, 2011

தமிழ்பாலா/-காதல்/க்விதை/தத்துவம்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-”தமிழக அரசின் ஆடம்பரம் இல்லாத ஒரு அரசுவிழா!

கோடையில் ஒருசின்னஞ்சிறு சிங்காரமழை!
தமிழக அரசின் ஆடம்பரம் இல்லாத
ஒரு
அரசுவிழா!
குடும்ப அட்டைகளுக்கு
விலையில்லாத அரிசி வழங்கும் மக்கள்விழா!

தமிழ்பாலா/-காதல்/க்விதை/தத்துவம்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ/ஐக்கூ/-”தமிழகத்தின் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இருபதுகிலோ அரிசி ”

கோடையில் ஓர்மழலை மழை!அதன்
சாரலில் நனைந்து குளித்தேன்!
கத்திரி வெயிலும் தாண்டி!ஒரு குலுகுலுப்பான உணர்வு!
இன்று கோடைமழை மட்டுமல்ல தமிழகத்தின்
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும்
இருபதுகிலோ அரிசி அதுவும்
விலையில்லாத அரிசியோ இன்று!-ஆனாலும்
விலையேற்றம் இல்லாத பொருள்கள் என்று?
விலையில்லாத அத்யாவிசிய நுகர்பொருள் என்று?-மக்களை
அச்சுறுத்தும் வரிகளே இல்லாத தேசமென்று?
உழைப்பிற்கு உத்திரவாதமானதொரு உலகமென்று?-தனிச்
சொத்துடைமை இல்லாத நாடாவது என்று?