அவனின் தோற்றமே அவளைக் கவர்ந்ததே-
அவளின் அழகே அவனை ஈர்த்ததே!
ஒருவரை ஒருவர் உற்று நோக்கினாரே!-காதலோ!
இருவரின் நெஞ்சிலும் காவிரி வெள்ளமானதே!
இரவுக் குறியும் பார்த்ததே பகலின் அறிகுறியும் ஆய்ந்ததே!-அன்பாலே
இருவருமே ஆட்கொண்டு இடைவிடாத சந்திப்பானதே!
காலமாறிய போதிலே கடமை நெஞ்சினில் தோன்றியதே!~
காணும்போதெல்லாம் துயரங்கள் களவினில் வந்ததே!
காதல்மணங் கொள்ளென்று காதலர்மனம் சொல்லியதே!-அதையே!
காதல் தலைவனே காதல் தலைவியையே வேண்டினானே!-மணஏற்பாட்டுக்கே!
காதல்மணம் கொள்ளவே சில நாள் தலைவனே பிரிந்தானே!~அந்தப் பிரிவும்
காதல் தலைவிக்கு தனிமையாம் துன்பத்தையே தந்ததின்றே!
காணும் அந்தி நிலவும் குலவும் தென்றலும்
மாலைவேளையும் தலைவியவளை வாட்டியதே!
மாலைமறைந்தும் இரவுவந்தும் ஊரெல்லாம் உறங்கினாலுமே!
காதல் தலைவியின் கண்கள் மட்டும் உறங்கிட மறுத்திடுவதும் ஏனோ?காதல் தலைவியே
காதல் ஆற்றாமையால் தன் தோழியிடமே அழுது புலம்புகின்றாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment