Popular Posts

Saturday, July 25, 2009

தோற்றத்தைக் கண்டு நீயும் எதையும் மதிப்பிடாதே தோல்வியைக் கண்டு என்றும் பயந்து ஒதுங்கிடாதே

தோற்றத்தைக் கண்டு நீயும் எதையும் மதிப்பிடாதே
தோல்வியைக் கண்டு என்றும் பயந்து ஒதுங்கிடாதே
தோன்றுவதை எல்லாமே சொல்லித் திரியாதே
தொடர்ந்துவரும் துன்பங்கண்டு துவண்டுதான் போகாதே

முட்டாள்தனமான கேள்வியே உனக்கு முட்டாள்தனமான பதில்தானே கிடைக்குமே!

முட்டாள்தனமான கேள்வியே உனக்கு
முட்டாள்தனமான பதில்தானே கிடைக்குமே
அறிந்து கொள்ள முயலாத வாழ்வு
உலகினில் இருந்தும் இல்லாதது போலாகுமே

Sunday, July 19, 2009

பொறுத்தார் பூமி ஆள்வாரா? பொறுத்துக்கொண்டே இருந்தால்-எதிரிகள் பூமிக்குள்ளே தள்ளிவிட்டு மூடிவிடுவார் பூமியிலே !

தன்னடக்கம் என்பது ஒரு உயர்ந்த பண்பென்ற போதிலுமே
உன்னை நீயே குறைத்து மதிப்புபோடுவதும் தவறாகுமே
பொறுமை கடலிலும் பெரிதுதான் என்றபோதிலுமே
பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு பூமிதனிலே
பொறுத்தார் பூமி ஆள்வாரா? பொறுத்துக்கொண்டே இருந்தால்-எதிரிகள்
பூமிக்குள்ளே தள்ளிவிட்டு மூடிவிடுவார் பூமியிலே

உன்வார்த்தையைவிட - நீ வாழ்ந்து காட்டுவதே வாழ்த்துப்பெறுமே

உரக்கப்பேசும் உரக்கப்பேசுமே
உன்சொல்லைவிட செயல்களே உரக்கபேசுமே
வாழ்த்துப்பெறும் வாழ்த்துப்பெறுமே
உன்வார்த்தையைவிட - நீ
வாழ்ந்து காட்டுவதே வாழ்த்துப்பெறுமே

அன்பும் மாறினால் அறிவும் மாறுமே!

மது உள்ளே மது உள்ளே -அறிவாம்
மதிவெளியே மதிவெளியே-
போதை ஏறினால் பாதைமாறுமே
பாதை மாறினால் பண்பும் மாறுமே
பண்பும் மாறினால் அன்பும் மாறுமே
அன்பும் மாறினால் அறிவும் மாறுமே

நீயும் ஏமாறும் வரையினிலே ஏமாற்றும் மனிதர்களே-உன் துடையினிலே கயிறுதிரிப்பது நின்றுவிடப் போவதில்லையே!

மோசடியாகாது மோசடியாகாது
ஏமாற்றுபவனை ஏமாற்றுவதே
மோசடியாகாது மோசடியாகாது- நீயும்
ஏமாற்றவும் கூடாது ஏமாறவும் கூடாது- நீயும்
ஏமாறும் வரையினிலே
ஏமாற்றும் மனிதர்களே-உன்
துடையினிலே கயிறுதிரிப்பது நின்றுவிடப் போவதில்லையே!

மரியாதை தெரியாத நெஞ்ச்ங்களே மதிப்பென்றால் என்ன விலையென்று கேட்கின்ற உறவுகளே!

மற்றவரை மதிக்கத் தெரியாத மானுடமே-உனக்கென்றும்
மதிப்புவந்து மாலைசூட்ட போவதில்லை-வாழும்போதினில்
மதிக்காத நெஞ்சங்களே
மதிப்பென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
மரியாதை தெரியாத நெஞ்ச்ங்களே
மதிப்பென்றால் என்ன விலையென்று கேட்கின்ற உறவுகளே!

ஒங்க முட்டாள்தனத்தின் தாழ்ப்பாளே சீக்கிரமாத்தான் திறந்திடுமே!

ஒங்க முட்டாள் தனத்தை
அதிக நாளைக்குத்தான் மூடிவைக்க முடியாதே-
ஒங்க முட்டாள் தனமே சீக்கிரமே
சந்திக்குத்தான் வந்திடுமே-அடி
ஒங்க முட்டாள்தனத்தின் தாழ்ப்பாளே
சீக்கிரமாத்தான் திறந்திடுமே

நம்பாதே நம்பாதே தனியுடைமை அதிகாரந்தன்னையே!

நம்பாதே நம்பாதே
புதிய நண்பனையுமே
நம்பாதே நம்பாதே
பழைய எதிரியையுமே
நம்பாதே நம்பாதே
தனியுடைமை அதிகாரந்தன்னையே

Sunday, July 12, 2009

சலசலக்கும் கீத்தோரம் காத்தடிக்குது கனகாம்பரம்

தானானே நான நன்னே ஏ
நானானே நானே நன்னே
நடவு நட்டு வார புள்ள
நட்ட நடுவுல வர்ர புள்ள
வரிசையாக வராமலே
வம்புவழக்கு பேசிக்கிட்டு
சிரிச்சு கிரிச்சு குலுக்கிக்கிட்டு
சிங்காரமா மினிக்கிக்கிட்டு
சீதக்கமே பண்ணிக்கிட்டு
வாராளே செங்கமலம்
வம்சவழி பழமைபேசி
வக்கனையா புறம்பேசி
போறாளே பொண்ணுமக
புழப்புதழப்ப பாக்காமலே
புரியாமலே பாக்குறாளே
புரிஞ்சதாகவே பசப்புறாளே
ஆத்தோரம் தென்னைமரம்
சலசலக்கும் கீத்தோரம்
காத்தடிக்குது கனகாம்பரம்

காதலியே உன்னை அறிதற்கு ஒருயோசனை கூறடியோ? உண்மையில் நீயார் எனைவிரும்பும் தேவதையோ

தன்னை அறிந்து கொண்டேன்-காதலன்பினில்
தாரகமாய் நிற்பதுவே-காதலியே
உன்னை அறிதற்கு ஒருயோசனை கூறடியோ?
உண்மையில் நீயார் எனைவிரும்பும் தேவதையோ?

பிறர் நலத்தை அறியார் -பிரபஞ்சத்தில் வாழ்ந்தென்ன? ஒருபயனுமில்லை!

என்னதான் கற்றால் என்ன?
எப்பொருளும் பெற்றால் என்ன?
அடுத்தவரின் மனதறியார்-உலகினிலே
இருப்பென்ன? பூஜ்யமே
தன்னலத்தின் பாதையிலே
தனியுடைமை அமைப்பினிலே
பிறர் நலத்தை அறியார் -பிரபஞ்சத்தில்
வாழ்ந்தென்ன? ஒருபயனுமில்லை

தாளம் போடு பாட்டுப் பாடு ததிங்கனத்தம் போடாதே!

தென்னா தெனா தென்னா தெனா
தகிட தகதிமி தகிட தகதமி
தகதகிட தகதகிட தகதகிட தகதகிட
தாளம் போடு பாட்டுப் பாடு
ததிங்கனத்தம் போடாதே
முத்துத்தமிழ் சித்திரமே அஞ்சுகமே நெஞ்சுரமே
அத்தைமகள் ரத்தினமே புத்தம்புது புத்தகமே
பத்திரமே சித்திரையே முத்திரையே இந்திரையே
சுந்தரியே அந்தரியே மந்திரமே தந்திரமே
தாளம் போடு பாட்டுப் பாடு
ததிங்கனத்தம் போடாதே

Saturday, July 11, 2009

அன்பாலே மலரவேண்டும் பொதுவுடைமை-அதிலும் அறிவாலே அழிக்கவேண்டும் தனியுடைமை

சாதியும் பொய்யடா
சமயமும் பொய்யடா
மதமும் பொய்யடா
மனித நேயமொன்றே மெய்யடா-அன்பாலே
மலரவேண்டும் பொதுவுடைமை-அதிலும் அறிவாலே
அழிக்கவேண்டும் தனியுடைமை

மனவானில் எழுந்து இசைந்து இழையோடும் இன்பகிளுகிளுப்பே

கவிதையே இனிமையே காவியமே கலை ஓவியமே
மன நெகிழ்ச்சியே உள்மன அசைவே
மனவானில் எழுந்து இசைந்து இழையோடும்
இன்பகிளுகிளுப்பே

மலருனக்கு இதழும் குவிந்ததுவோ? நிலவுனக்கு குளிரும் குளிர்ந்ததுவோ?

கன்னியுனக்கு கரும்பும் கசந்ததுவோ?
கனியுனக்கு கனியும் தித்தித்ததோ?
மலருனக்கு இதழும் குவிந்ததுவோ?
நிலவுனக்கு குளிரும் குளிர்ந்ததுவோ?

சித்திர புழுப்போலே உந்தன் சின்ன இடை நெளிவதென்ன? - நீயும் சிரிக்காமல் எனைசிக்க வைத்து ஆடும் காதலாட்டமென்ன?

சித்திர புழுப்போலே உந்தன் சின்ன இடை நெளிவதென்ன? - நீயும்
சிரிக்காமல் எனைசிக்க வைத்து ஆடும் காதலாட்டமென்ன?
முத்திரை பசும்பொன்னே விழிமூடாத தேனே
முத்தாரமே என்சித்தாரமே வித்தாரக்குயிலே
சத்தமின்றி நீயும் புன்னகையில் தந்தமுத்தமென்ன?

என்னென்று நானின்று பிரமித்து நிற்குமுன்னே அங்குமிங்கும் ஓடோடி என்னெஞ்சில் குடியிருக்கும் காதலானதே

அவளோ
தேனூற எனை நோக்கி வாய்மலர்ந்தாள்-
அவளின்
விழியின்னும் மூடாத தேனோ-காட்டில்
தேடாத மானோ- நீரில்
ஓடாத மீனோ -மேகம்
கூடாத வானோ
என்னென்று நானின்று பிரமித்து நிற்குமுன்னே
அங்குமிங்கும் ஓடோடி
என்னெஞ்சில் குடியிருக்கும் காதலானதே

காதல் சிறகில்லை பறப்பதற்கு காற்றும் துணையில்லை மிதப்பதற்கு!

காதல் சிறகில்லை பறப்பதற்கு
காற்றும் துணையில்லை மிதப்பதற்கு
கானல் நீராய் காதலில் நீயும் போனபின்னே
கனவினில் கண்ட சுகம் தலையணைவரை வருமோ?
நினைவினில் தினம்கண்டு புன்னகை தான் தருமோ?
பிரிவினில் வந்ததுன்பம் என் எதிரிக்கும் வேண்டாமே -கனவு
உறவினில் தந்த இன்பம் கடைசிவரை கூடவருமோ?

கண்ணாலே காதலி உன்னாலே என்னெஞ்சே பின்னாலே வருவது உனக்கு தெரியவில்லையா?

செந்தமிழே நல்லிசையே தேன்மழையே
செந்தேனே பொன்மானே பூங்குயிலே- மாஞ்சோலை
வந்தேனே எனது இன்னுயிரை தந்தேனே
என்வானே மின்னி நிற்கும் விண்மீனே
கண்ணாலே காதலி உன்னாலே என்னெஞ்சே
பின்னாலே வருவது உனக்கு தெரியவில்லையா?

புன்சிரிப்பினில் மின்னும் ஆசை பின்னும் அவளின் நாட்டியத்துக் கண்கள்

விழியோடும் -காதல்
வழிதேடும் -அன்பின்
மொழிபேசும்- நேசம் அவளின்
புன்சிரிப்பினில் மின்னும் ஆசை பின்னும்
அவளின் நாட்டியத்துக் கண்கள்

கண்ணினாலே காதல் நோயை சொல்லவந்தது இரவு -உன் நெஞ்சினாலே கலந்து மேலும் மயக்கம் தந்தது உறவு!

கண்ணினாலே காதல் நோயை சொல்லவந்தது இரவு -உன்
நெஞ்சினாலே கலந்து மேலும் மயக்கம் தந்தது உறவு
மண்ணின்மேலே பேராசையாகி அழிந்து போனவர் கோடி -அழகு
பெண்ணின்மேலே மோகம்கொண்டு மண்ணில் புதைந்தவர் கோடி
தனிமையிலே ஒதுங்கி நின்று மகிழ்வினைத் தொலைத்தவர் கோடி
தனக்கென்று வாழ்ந்து தறிகெட்டு போனவர் கோடி கோடி
தன்னலத்தை மறந்து பிறர் நலத்தை பார்த்தவரோ கடைக்கோடி

காதலன் அவனோடு தூதாக வந்த கனவினிலே- காதலி நானே என்ன விருந்து தருவேன்

எனதினிய தோழியே
காதலன் அவனோடு தூதாக வந்த கனவினிலே-
காதலி நானே என்ன விருந்து தருவேன்
கண்விருந்து ஏற்கனவே தந்துவிட்டேன் -என்
கருத்தின் விருந்து தினம் கொடுத்துவிட்டேன்- காதலனோ
கன்னிவிருந்து கேட்டு தொல்லைதந்தான்-
கனிவிருந்து தருகின்றேன் என்றேன் நான்
தனிவிருந்து நீதருவாயா? என்றான் அவன் -இல்லை
தலையணை விருந்து தந்திடச் சொன்னான் - நானோ
தலைவி எனக்குமாலை சூட்டினால் சம்மதம் என்றேன்

Friday, July 10, 2009

உனக்காகவே துடிக்கும் என் இதயத்தின் வலி உனக்கே புரியாதா?!

உனக்குள் துடிக்கும் இதயத்தைவிட
உனக்காகவே துடிக்கும் என் இதயத்தின்
வலி உனக்கே தெரியாதா?
உனக்குள் இருக்கும் என் இதயத்தை
உனக்காகவே துடிக்கும் என் இதயத்தின்
வலி உனக்கே தெரியாதா?
எனக்குள் துடிக்கும் உன் இதயத்தை
உனக்காகவே துடிக்கும் என் இதயத்தின்
வலி உனக்கே புரியாதா?

என்னைத் தொட்டுச் சென்றது தென்றல் அல்ல உன்சுவாசம்!

என்னைத் தொட்டுச் சென்றது தென்றல் அல்ல
உன்சுவாசம் - நீ
என்னில் விட்டுச் சென்றது காதல் அல்ல
உன் நேசம்
என்னைச் சுட்டுச் சென்றது கண்கள் அல்ல
உன் பாசம்
என்னை கேட்டுச் சென்றது மேனி அல்ல
உன்வாசம்

வாழ்க்கைக்குள்ளே வாழ்க்கைக்குள்ளே வளமான எதிர்கால நுழைவாசலுக்குள்ளே!

நீயே நுழைவது புத்தகத்துள்ளோ-பள்ளியின்
வகுப்பறைக்குள்ளோ அல்ல அல்ல- நலமானதொரு
வாழ்க்கைக்குள்ளே வாழ்க்கைக்குள்ளே
வளமான எதிர்கால நுழைவாசலுக்குள்ளே

ஆபத்து தானடா ஆபத்து தானடா!

ஆபத்து தானடா ஆபத்து தானடா!
நெருங்கி இருந்த நண்பன் விலகிப் போனாலும்-விலகி
இருந்த எதிரி நெருங்கி வந்து விட்டாலும்
ஆபத்து தானடா ஆபத்து தானடா!

என் பார்வை எதிர்த்து நிற்கும் உனது விழிகளே

உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து
ஏங்கும் மலர்களே
என்னை சத்தமின்றி
ஒரு யுத்தமிட
அனுதினமும் என் பார்வை எதிர்த்து
நிற்கும் உனது விழிகளே

எப்போது காதல்வரும் என்று எந்தமனிதர்க்கும் தெரியாது!

எப்போது மலர்ந்தோமென்று
எந்த மலர்களும் அறியாது
எப்போது காதல்வரும் என்று
எந்தமனிதர்க்கும் தெரியாது

அனிச்சம்பூவும் அன்னச்சிறகும் அடியே உனக்கு நெருஞ்சிப்பழமோ? !

அனிச்சம்பூவும் அன்னச்சிறகும்
அடியே உனக்கு நெருஞ்சிப்பழமோ? நானும்
கனியிருக்க காயைத் தேடுவேனோ?- நீயும்
துணையிருக்க நானெங்கும் ஓடுவேனோ? நீயும்
தனியிருக்க என்னாளும் சம்மதமோ? - நானும் உன்னில்
இனிதிருக்க ஏனச்சம் தேன்குயிலே!

விழிமலராம் உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

உன்

பார்வைகளாலே - நான்

கவிதை எழுதுகிறேன்.-விழிமலராம்
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

சிறகடித்து பறக்கும் எனது
இமைகளே

-காதலின்

இனிய பாடஞ்சொல்லும்-உன்

பார்வைகளாலே - நான்

கவிதை எழுதுகிறேன்-நீயே

கவிதையானாயே- நானே

கவிதைக்குள்ளே ஒரு

கவிதை எழுதி -ஒரு

கவிஞனாக ஆனேனே.

Wednesday, July 8, 2009

தனிமைதுயர் வாட்டுமென்றே-அந்த தலைவனுக்கே தெரியாதா?

நினைத்து ஒன்று சொல்லாயோ? எனதினிய நெஞ்சே
துன்பம் வளரவரும் மாலையிளம் பொழுதினிலே-காதல்
இன்பம் மலர ஒரு கருத்தும் சொல்லாயோ?-அன்று
அணைத்து ஒன்று சொன்னவனே- அன்பில்
இணைத்து ஒன்று கொடுத்தவனே-அவனின்
துணையில் இன்று இல்லையென்றாலே
தனிமைதுயர் வாட்டுமென்றே-அந்த
தலைவனுக்கே தெரியாதா?

தலைமுறைக்கு வழிகாட்டும் நல்லதொரு படைப்பினையே - நீயும் படைப்பாயா? படைப்பாயா!

படைப்பாயா? படைப்பாயா
படைப்பாளா? படைப்பாளா?- நல்லதொரு
படைப்பினையே நீயும்
படைப்பாயா படைப்பாளா?-உந்தன்
வருங்காலமே மேற்கோள்காட்டியே - நல்ல
தலைமுறைக்கு வழிகாட்டும்
நல்லதொரு படைப்பினையே - நீயும்
படைப்பாயா? படைப்பாயா
படைப்பாளா? படைப்பாளா? நல்லதொரு
படைப்பினையே நீயும்
படைப்பாயா படைப்பாளா

நாளெல்லாமே தூங்கிவிட்டாலே இவ்வுலகிலே நல்லுலகமே மலர்ந்துவிடும் நன்னாளென்றோ?

காலம் கழிகின்றது கனவும் தொடர்கின்றது-ஆனாலும் உண்மை
சொல்லும் நிற்கின்றது- நல்ல
செயலும் வெல்கின்றது- நல்லோரின் வழியினிலே
நாமெல்லாமே நடந்துபோக எண்ணாமலே
நாளெல்லாமே தூங்கிவிட்டாலே இவ்வுலகிலே
நல்லுலகமே மலர்ந்துவிடும் நன்னாளென்றோ?

Tuesday, July 7, 2009

காத்திருப்பதிலே சுகங்கொண்டே கனவிலுமே ரசிக்க நின்றாள்!

உணவுக்கே உப்பாகவே
உரைக்கே மொழியாகவே
காதலுக்கே அன்பாகவே-சோலையிலே
காத்திருந்தாள் செங்கமலம்
காத்திருப்பதிலே சுகங்கொண்டே
கனவிலுமே ரசிக்க நின்றாள்

Wednesday, July 1, 2009

உன்மனதிற்கு கேட்கவில்லையா? உன் இதயத்தை தொட்டிடவில்லையா?

மவுனமாகவே என்கண்ண்சைவினிலே
என்வாய்மட்டும் மூடி இருந்தபோதுமே-என் தோழியே
என் அன்புணர்வு பேசுவதே-என் காதலியே
உன்மனதிற்கு கேட்கவில்லையா?
உன் இதயத்தை தொட்டிடவில்லையா?

ஏமாற்றவும் செய்யக்கூடாதே ஏமாற்றமும் அடையக்கூடாதே!

எந்த கடுமையான இதயத்தையும் மென்மையாக்கும்
அன்பல்லவா!
அந்த கற்சுவரையும் தாண்டிசெல்லும் காதல்ர் அன்பல்லவா!
இந்த காதலென்னும் விளையாட்டிலே காதலரே
ஏமாற்றவும் செய்யக்கூடாதே
ஏமாற்றமும் அடையக்கூடாதே

போராட்டமும் புரட்சியும் மக்களை வாழ உயர்த்தும் !

அன்பும் கடமையும் பேசக்கற்றுத்தரும் ஆசாண் அல்லவா!
அறிவும் பண்பும் வாழக்கற்றுத்தரும் அனுபவம் அல்லவா!-போராட்டமும்
புரட்சியும் மக்களை வாழ உயர்த்தும் தோழமை அல்லவா!-எழுச்சியும்
விழிப்புணர்வும் மக்கள்ஜன நாயகத்தின் ஊற்றுக்கண் அல்லவா!

மறுக்காதே மறுக்காதே தனியுடைமை ஆதிக்கத்தையே நீயும் அழிக்கும் தலைமையேற்கவே மறுக்காதே மறுக்காதே

சொல்லாதே சொல்லாதே
அழைப்பின்றி ஆருக்கும் ஆலோசனை - நீயும்
சொல்லாதே சொல்லாதே
மறக்காதே மறக்காதே
அ நீதியைக் கண்டு நீயும் போராடவே
மறக்காதே மறக்காதே
மறுக்காதே மறுக்காதே
தனியுடைமை ஆதிக்கத்தையே நீயும்
அழிக்கும் தலைமையேற்கவே
மறுக்காதே மறுக்காதே

மக்கள் ஜன் நாயகபுரட்சி வாழ்க வாழ்க வெல்க வெல்க!

மரணமென்ன? மருத்துவனைக் கண்டு நின்றிடுமோ?-போராளியின்
மறைவுமென்ன? ஆதிக்கத்தைக் கண்டு ஒதுங்கிடுமோ
புதைக்கபடவில்லை விதைக்கப்பட்டவர்கள்-போராளிகள்
சிதைக்கப்படவில்லை உரமாக்கப்பட்டவர்கள்
வர்க்கபுரட்சிக்கான ஒத்திகையாம் போராட்டத்தில்
வார்ப்பிடப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில்-புதிய
வரலாற்றை எழுதிவிடவே புறப்பட்டவர்கள்
இழப்பதற்கு அடிமைவிலங்குதான் உண்டு
பெறுவதற்கோ பொதுவுடைமை பொன்னுலகம் தானுண்டு
மக்கள் ஜன் நாயகபுரட்சி வாழ்க வாழ்க வெல்க வெல்க

நம்பிக்கை இருந்தாலே நாளெல்லாமே தோல்வி என்பதில்லையடா!

மெதுவாக ஆனால் விடாமல் செல்லடா- நீயும்
பந்தயத்தில் மட்டுமல்ல
வாழ்விலுமே வென்றிடுவாயே
முயற்சி இருந்தாலே எதிலும் வெற்றிதானடா- நம்பிக்கை
இருந்தாலே நாளெல்லாமே தோல்வி என்பதில்லையடா

இன்னும் எத்தனை தலைமுறை தனியுடைமை ஆதிக்கத்தில அடிமைபட்டு கிடக்கப்போறோமுனு சொல்லுங்க

முதலில் நீங்களும் யோசிங்க யோசிங்க
அப்புறமா நீங்களும் பேசு ங்கபேசுங்க
செயலிலும் இறங்குங்க இறங்குங்க- நம்ம
-முன்னோருங்க
புரட்சியபற்றி யோசிக்காதனாலே தானுங்க
பொதுவுடைமை தேசத்த
இந்தியாவுல நாம இன்னும் பாக்கலிங்க-
இன்னும்
யோசிக்காம இருந்தோமுனா செயலில இறங்காம
இருந்தோமுனா
இன்னும்
எத்தனை தலைமுறைக்குத்தான் தனியுடைமை ஆதிக்கத்தில
அடிமைபட்டு கிடக்கப்போறோமுனு சொல்லுங்க?