தானானே நான நன்னே ஏ
நானானே நானே நன்னே
நடவு நட்டு வார புள்ள
நட்ட நடுவுல வர்ர புள்ள
வரிசையாக வராமலே
வம்புவழக்கு பேசிக்கிட்டு
சிரிச்சு கிரிச்சு குலுக்கிக்கிட்டு
சிங்காரமா மினிக்கிக்கிட்டு
சீதக்கமே பண்ணிக்கிட்டு
வாராளே செங்கமலம்
வம்சவழி பழமைபேசி
வக்கனையா புறம்பேசி
போறாளே பொண்ணுமக
புழப்புதழப்ப பாக்காமலே
புரியாமலே பாக்குறாளே
புரிஞ்சதாகவே பசப்புறாளே
ஆத்தோரம் தென்னைமரம்
சலசலக்கும் கீத்தோரம்
காத்தடிக்குது கனகாம்பரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment