மரணமென்ன? மருத்துவனைக் கண்டு நின்றிடுமோ?-போராளியின்
மறைவுமென்ன? ஆதிக்கத்தைக் கண்டு ஒதுங்கிடுமோ
புதைக்கபடவில்லை விதைக்கப்பட்டவர்கள்-போராளிகள்
சிதைக்கப்படவில்லை உரமாக்கப்பட்டவர்கள்
வர்க்கபுரட்சிக்கான ஒத்திகையாம் போராட்டத்தில்
வார்ப்பிடப்பட்டவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில்-புதிய
வரலாற்றை எழுதிவிடவே புறப்பட்டவர்கள்
இழப்பதற்கு அடிமைவிலங்குதான் உண்டு
பெறுவதற்கோ பொதுவுடைமை பொன்னுலகம் தானுண்டு
மக்கள் ஜன் நாயகபுரட்சி வாழ்க வாழ்க வெல்க வெல்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment