எனதினிய தோழியே
காதலன் அவனோடு தூதாக வந்த கனவினிலே-
காதலி நானே என்ன விருந்து தருவேன்
கண்விருந்து ஏற்கனவே தந்துவிட்டேன் -என்
கருத்தின் விருந்து தினம் கொடுத்துவிட்டேன்- காதலனோ
கன்னிவிருந்து கேட்டு தொல்லைதந்தான்-
கனிவிருந்து தருகின்றேன் என்றேன் நான்
தனிவிருந்து நீதருவாயா? என்றான் அவன் -இல்லை
தலையணை விருந்து தந்திடச் சொன்னான் - நானோ
தலைவி எனக்குமாலை சூட்டினால் சம்மதம் என்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment