Popular Posts

Tuesday, August 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/விழவேண்டிய மழையினையே வேரொடு சாய்த்தது வெட்டியமரங்களே!

விழவேண்டிய மழையினையே
வேரொடு சாய்த்தது
வெட்டியமரங்களே!
சுள்ளிகளை சுமந்தோமே
வெயிலினை மறைத்திடவே!
சுள்ளிச் சுமையும் கூட நிழலானதோ?
மண்வெடிப்புகளோ?
சூரிய வெயில் போட்ட சூடோ?
மண்ணில் அழகின்றி தெரிகிறதே!
வறுமைரேகையே
மண்ணின் வெடிப்புகளிலே!
மண்ணின் வாய்திறந்தனவோ?
மண்வெடிப்புகள் ஆயினவோ?-மனிதர்களோ?
இன்னும் மரம்வளர்க்கும் திராணியின்றியே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலியே உந்தன் கண்களுக்கு நன்றிசொல்ல ஒருவார்த்தை இல்லையே!-

எங்கே உந்தன் பூஞ்சிரிப்பு?
எங்கே உந்தன் அன்பு நெஞ்சம்?-
காதலியே உந்தன்
கண்களுக்கு நன்றிசொல்ல ஒருவார்த்தை இல்லையே!-உந்தன்
நெஞ்சினுக்கு என்னெஞ்சினைத் தவிரமாற்று இல்லையே!
மான்கொடுத்த பார்வையிலே எனைமறந்தேன்!
மயில்கொடுத்த சாயலிலே எனைக்கொடுத்தேன்!
குயில்கொடுத்த பாடலிலே எனைக்கலந்தேன்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கல்லையும் கனியாக்கும் இசையாலே!ஒற்றுமை கருத்தெல்லாம் சமத்துவ உலகினையே படைக்கும்!

கல்லையும் கனியாக்கும் இசையாலே!ஒற்றுமை
கருத்தெல்லாம் சமத்துவ உலகினையே படைக்கும்!
நாதம் பிறந்ததடி கைவிரல்களிலே!
கீதம் மலர்ந்ததடி
தேன்குரலிலே!
இலையுதிர்காலம் போகட்டுண்டி!
இளவேனிற்காலம் ஆகட்டுண்டி!
உரிமைகேட்கும் உலகமெல்லாம்!- நல்லோர்
உள்ளமெல்லாம் நலமாக்கும் !
கல்லையும் கனியாக்கும் இசையாலே!ஒற்றுமை
கருத்தெல்லாம் சமத்துவ உலகினையே படைக்கும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உழைப்பாலே உழைப்பவரே உயருங்காலம் வெகுதொலைவினில் இல்லையடா!

பணத்தாலே!
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதெல்லாம் பொய்யடா!
உழைப்பாலே
உழைப்பவரே உயருங்காலம் வெகுதொலைவினில் இல்லையடா!
வாழ்விலே வறுமைக்கெல்லாம் காரணமே
விதி என்பது பொய்யடா!-அன்றாட
தேவைக்குப் போராடும் மானுடத்தின் இலக்கு பேராசை இல்லையடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இந்த உலகத்திலே! எல்லாமே இந்த வவுத்துப் பாட்டுக்குத் தானே! இல்லாமை இல்லாத பொன்னுலகம் என்றுதான் காண்போமோ?

இந்த உலகத்திலே!
எல்லாமே இந்த வவுத்துப் பாட்டுக்குத் தானே!
இல்லாமை இல்லாத பொன்னுலகம் என்றுதான் காண்போமோ?
பசி என்பது இல்லாட்டா இங்கு
பாகுபாடு என்பது இல்லையே!வறுமையில் பட்டினியாலே!
பசித்திருப்பவன் என்றும் பணம்
படைத்திருப்பவன் என்றும் பேதங்கள் ஏனோ?
ஏழ்மையிலே
பசித்திருப்பவன் நடைபாதையில் வாடிப் படுத்திருக்க-பணம்
படைத்தவன் காரினில் பவனிவரும்போது அவன் கண்ணில் இவன் தெரிவதில்லை~
பசிவந்திடப் பத்தும் பறந்துபோகுமடா!
பசிக்கு உணவின்றி துடிப்பவன் வயிறு நிறையும் காலமே!
பொருளெல்லாம் நாட்டின் பொதுவுடைமை ஆகும் காலமே!

Monday, August 30, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒவ்வொருவர் நெஞ்சிலுமே ! கோடிகோடி ஆசைகளே!-வாழ்வின் அழுவதும் சிரிப்பதும் -அவரவர் ஆசைகளின் விளைவுகளே!

ஒவ்வொருவர் நெஞ்சிலுமே !
கோடிகோடி ஆசைகளே!-வாழ்வின்
அழுவதும் சிரிப்பதும் -அவரவர்
ஆசைகளின் விளைவுகளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலிச் சித்திரமே சித்திரமே காதல் சுவர்வேண்டும் சித்திரமே!

காதலிச்
சித்திரமே சித்திரமே காதல் சுவர்வேண்டும் சித்திரமே!
சிலையழகே சிலையழகே அன்புக் கோவில் வேண்டும் கலையழகே!
காதலியே கண்பார்வை வேண்டும் இந்த காதலன் நெஞ்சம்
காலமெல்லாம் குளிர்ந்திடவே வேண்டும் வேண்டும்!
காதலிச்
சித்திரமே சித்திரமே காதல் சுவர்வேண்டும் சித்திரமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலி பூமுடித்திட பூமுடித்திட கட்டுக்கூந்தலே -என்னெஞ்ச தான்முடிந்திட தான்முடிந்திட முந்தானைதானே!

காதலி
பூமுடித்திட பூமுடித்திட கட்டுக்கூந்தலே -என்னெஞ்ச
தான்முடிந்திட தான்முடிந்திட முந்தானைதானே!
நிலவெரிக்குது நிலவெரிக்குது சித்திரைமாதமே- மாலை நேர
காத்தடிக்குது காத்தடிக்குது சில்லுனுதானே!
பூமணக்குது பூமணக்குது பாவைக் கூந்தல்தானே!
கிளுகிளுக்குது கிளுகிளுக்குது அத்தான் மனசுதானே!-காதலி

கட்டிவாரா கட்டிவாரா பட்டுத்தாவணி தானே!-கண்ண
வெட்டிபுட்டா வெட்டிப்புட்டா பம்பரக்கண்ணாலே!-காதலி
பூமுடித்திட பூமுடித்திட கட்டுக்கூந்தலே -என்னெஞ்ச
தான்முடிந்திட தான்முடிந்திட முந்தானைதானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் அரும்பாய் நேத்து!-இன்று அழகாய் பூத்து! அந்தி நேரம் காத்து!புன்னகை இதழினில் கூத்து ! -கண் மலரினில் பாத்து!-

காதல்
அரும்பாய் நேத்து!-இன்று
அழகாய் பூத்து!
அந்தி நேரம் காத்து!புன்னகை
இதழினில் கூத்து ! -கண்
மலரினில் பாத்து!- நெஞ்சினில்
இரண்டும் வேர்த்து!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலிப் பூவாய் முகிழ்த்தவளே! பிச்சிபூவா மலர்ந்தவளே! மல்லிகைப்பூவாய் மணத்தவளே! அல்லிப்பூவாய் சிரித்தவளே!

காதலிப் பூவாய் முகிழ்த்தவளே!
பிச்சிபூவா மலர்ந்தவளே!
மல்லிகைப்பூவாய் மணத்தவளே!
அல்லிப்பூவாய் சிரித்தவளே!
முல்லைப் பூவாய் விரிந்தவளே!
மகிழம்பூவாய் மகிழ்ந்தவளே!
தாழம்பூவாய் தழுவியவளே!
தாமரைபூவாய் தழும்பியவளே
செவ்வந்திப் பூவாய் நகைத்தவளே!
ரோஜாப் பூவாய் அழைத்தவளே!
காதலிப் பூவாய் முகிழ்த்தவளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பணமிருந்தால் கொண்டாட்டமோ? பணமில்லாட்டித் திண்டாட்டமோ?

வாழ்ககை என்னடா? ஒரு சீட்டாட்டமோ?-அதிலே
பணமென்னும் துருப்பு என்ன நடமாட்டமோ?
பணமிருந்தால் கொண்டாட்டமோ?
பணமில்லாட்டித் திண்டாட்டமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/யுகயுகமாகவே! கோடிக் கோடிக் காலங்களே! நானுனக்காகவே காத்திருந்தேனே! நீயுமெனக்காகவே தவமிருந்தாயோ?

யுகயுகமாகவே!
கோடிக் கோடிக் காலங்களே!
நானுனக்காகவே காத்திருந்தேனே!
நீயுமெனக்காகவே தவமிருந்தாயோ?

உறவு நூலெடுத்து
உயிர்மலரைத் தொடுத்தவளே!அந்த
நிலவின்றி அல்லிமலரும் மலர்ந்திடுமோ?-அன்பே
நானின்றி உன்பூமுகமும் சிரிந்த்திடுமோ?
யுகயுகமாகவே!
கோடிக் கோடிக் காலங்களே!
நானுனக்காகவே காத்திருந்தேனே!
நீயுமெனக்காகவே தவமிருந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இந்த மதுரை மல்லிகையே! வாசமுள்ள மரிக்கொழுந்தே!-ஆசை மச்சானின் துணைசேத்து மாலையிடக் காத்திருக்கு!

இந்த மதுரை மல்லிகையே! வாசமுள்ள மரிக்கொழுந்தே!-ஆசை
மச்சானின் துணைசேத்து
மாலையிடக் காத்திருக்கு!
ஊரெல்லாம் பாக்குவெச்சு
உறவெல்லாம் வரவழைச்சு
நல்லதொரு நாள்பார்த்தே!
இந்த மதுரை மல்லிகையே! நல்ல வாசமுள்ள மரிக்கொழுந்தே!-ஆசை
மச்சானின் துணைசேத்து
மாலையிடக் காத்திருக்கு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வாழ்வின் அன்பே ஒன்றே ஒன்று காதல் காதல் காதல் காதல் மானுடம் போற்றுகின்ற ஒன்றே ஒன்று காதல் காதல் காதல் காதல்

வாழ்வின் அன்பே ஒன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
மானுடம் போற்றுகின்ற ஒன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்

காதல் காதல் காதல் காதல்
கண்ணிரண்டில் கண்டதொன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
என்னெஞ்சிலின்று கொண்டதொன்றே ஒன்று!
காதல் காதல் காதல் காதல்!
விண்ணிலேறி பறந்ததொன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
மண்ணிலிருந்து மறக்கவைத்த தொன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
பெண்ணிலன்றோ நின்றதொன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
என்னிலிருந்து பெற்றதொன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
கோடிக் காலப் பயிராகிய ஒன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
வாழ்வின் அன்பே ஒன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்
மானுடம் போற்றுகின்ற ஒன்றே ஒன்று
காதல் காதல் காதல் காதல்

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலராம் நாமே காதலிலே கலந்திருப்போம் யுகயுகமாகவே!

காதலராம்
நாமே காதலிலே
கலந்திருப்போம் யுகயுகமாகவே!
சிறுகதையாய் புன்னகையில் பூத்த இள நகைதான் நம்
இதயமதை எழுதியதோ?
சித்திரமே விசித்திரமே என்னாசைப் பத்திரமே!-காதலராம் நாமே காதலிலே
கலந்திருப்போம் யுகயுகமாகவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-புல்லாங்குழலே உந்தன் குரலானதே! பேசும் மழலைஉந்தன் சொல்லோவியமே!”

புல்லாங்குழலே உந்தன் குரலானதே!
பேசும் மழலைஉந்தன் சொல்லோவியமே!
செந்தேன்மழை சிந்திடும் முத்தமே!
செந்தாமரை அன்பேஉன் கன்னமே!
இன்பக்கடலாம் காதல் கண்களே!
புல்லாங்குழலே உந்தன் குரலானதே!
பேசும் மழலைஉந்தன் சொல்லோவியமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எந்தன் காதலியே! கத்திவிழியாலே முத்துமொழிபேசி காதலன்புத் தத்துவத்தை தந்தாளாம்!

குண்டுவிழிக்காரி குதிரைக் கொண்டைப் போட்டு வாராபாரு!
மண்டுமொழிக்காரி மாராப்பு சரிசெஞ்சு வரப்பில வாராபாரு!
சிண்டுமுடிக்காரி சித்திரமாப் பேசி களையெடுத்து வாராபாரு!
நண்டு நடைக்காரி நாட்டாமைபண்ணி நாத்தோடு வாராபாரு!
இவ அத்தனை பேரையும் மிஞ்சி- எந்தன் காதலியே!
கத்திவிழியாலே முத்துமொழிபேசி காதலன்புத் தத்துவத்தை தந்தாளாம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல் நெஞ்சினைக் கொல்லுது கொல்லுது காதலின்பமே! உயிரினில் கலக்குது கலக்குது காதலிமெளனமே!

காதல்
நெஞ்சினைக் கொல்லுது கொல்லுது காதலின்பமே!
உயிரினில் கலக்குது கலக்குது காதலிமெளனமே!
பூவைக் கிள்ளுது கிள்ளுது குளிர்தென்றல் காற்றே!
பூங்கனியை கொத்துது கொத்துது பசுங்கிளிபறந்தே!-காதல்
நெஞ்சினைக் கொல்லுது கொல்லுது காதலின்பமே!
உயிரினில் கலக்குது கலக்குது காதலிமெளனமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வாழ்வினில் புதுப்புதுப் பாதையில் சென்றிட நீயும் ரசித்தாயே!

என்காதலியே!-உன்
இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினாயே!~
எனதன்பே நீயே முத்தமிழாகி என்னில் தித்தித்தாயே!
பனிவிழும் நீரோடையில் நீயும் நீராடினாயே!- நெஞ்சக்
குளிர்விடும் பொழுதினில் அன்பே கரையேறினாயே!வாழ்வினில்
புதுப்புதுப் பாதையில் சென்றிட நீயும் ரசித்தாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சித்தனோ அத்தனோ? பித்தனோ? எவன் தானோ? காதலன்பே -உன் மனதினில் இருப்பது யாரென்று சொல்வாயே!

அந்தரனோ? சுந்தரனோ? -வானத்துச்
சந்திரனோ? மந்திரனோ?-அழகினில்
சுந்தரனோ?காதலன்பே -உன்
மனதினில் இருப்பது யாரென்று சொல்வாயே!
சித்திரனோ?. அக்னிபுத்திரனோ? வீரபத்திரனோ?
விசித்திரனோ? விந்தையானவனோ?சித்தனோ
அத்தனோ? பித்தனோ? எவன் தானோ?
காதலன்பே -உன்
மனதினில் இருப்பது யாரென்று சொல்வாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒன்றினில் ஒன்று பிரியாமலே ஓர்தத்துவம் ஆகிவிடவா? தாலாட்டு கேட்டிடவே தாளமின்றி படித்திடவா?

முல்லைக் கொத்துக்களாய்
மெத்தையிலே துள்ளிவரவா?
முத்திரைப் பொன்னாகவே
மோகத்திலே அள்ளித்தரவா?
ஓசைகேட்காமலே மெட்டியிலே ராகமிசைக்கவா?-மெல்லிய
கைவிரல் குலுங்காமலே கட்டிலிலே கதைசொல்லவா?
தென்றலும் இடையினிலே நுழையாமலே ஒட்டிக்கொள்ளவா?
ஒன்றினில் ஒன்று பிரியாமலே ஓர்தத்துவம் ஆகிவிடவா?
தாலாட்டு கேட்டிடவே தாளமின்றி படித்திடவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன் கண்சாடையில் எழுதியது என்ன? சொல்லோவியமோ?

புதுப்பாடலை உன்கண்பார்வையில் தந்தாயோ தேனிலவே!உன்
பூமேனியில் பொன்வீணை நாதமே இசைத்தாயோ கானக்குயிலே!-என்
மனமேடையின் பொன்னோவியம் வரைந்தாயோ?இயற்றமிழே!-உன்
கண்சாடையில் எழுதியது என்ன? சொல்லோவியமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பருவம் பாட்டெழுத வந்ததோ? இதயம் இசையமைத்துத் தந்தததோ? அழகு நிலவு பாடிவிட்டுச் சென்றதோ? ஆசை உறவு பார்த்து ரசிக்க வந்ததோ?

பருவம் பாட்டெழுத வந்ததோ?
இதயம் இசையமைத்துத் தந்தததோ?
அழகு நிலவு பாடிவிட்டுச் சென்றதோ?
ஆசை உறவு பார்த்து ரசிக்க வந்ததோ?
காதல் மெளனத்தின் மொழியில்
அன்போ?அரவணைப்பின் வழியில்-காதலர் நாமே
இணைவோம் பேரின்ப நிலையில்
கலப்போம் அமைதியின் நிழலில்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உனது குழலானதோ? மழைமேகமே!-உனது இதழானதோ?மதுரசமே!

உனது குழலானதோ? மழைமேகமே!-உனது
இதழானதோ?மதுரசமே!
எனது கனவானதோ?காதலின்பமே!-எனது
உறவானதோ உன்சொந்தமே!
கடலானதோ?குளிர்வானமே!
படகானதோ? இளவேனிலே
துணையான மேல்தென்றலில்- காதலர் நாமே
இணையாக செல்வோமா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உன்கண்ணில் என்னைப் பார்த்தேனே!- நீயும் என்கண்ணில் உன்னைப் பார்த்தாயே! இருவருக்கும் கண்ணாடி தேவையில்லையடி!~

நிலவுப்பெண்ணே! நீலமேகத்தில் முகம்பார்த்தாள்!
நீலமேகமோ நீரோடையில் முகம்பார்த்ததே!ஆனாலும்
உன்கண்ணில் என்னைப் பார்த்தேனே!- நீயும்
என்கண்ணில் உன்னைப் பார்த்தாயே!
இருவருக்கும் கண்ணாடி தேவையில்லையடி!~

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தாய்மை என்றாகும் உயர்ந்த கருவல்லவா? தன்னை எண்ணாத தயாள குணம் அல்லவா?

பெண்மை ஒரு எழுதாத கவிதை அல்லவா?உண்மையில்
வெண்மை பனிதூங்கும் மென்மை மலரல்லவா?
கண்ணில் சிரித்திடும் காவியம் அல்லவா?-உரிமை
பெண்ணில் உயர்த்திடும் சமூகம் சிறப்பல்லவா?அதுவே
தாய்மை என்றாகும் உயர்ந்த கருவல்லவா?
தன்னை எண்ணாத தயாள குணம் அல்லவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-சிரிக்கும் சிரிக்கும் வெண்ணிலவு சிரிக்கும் வானவீதியில்! அழைக்கும் அழைக்கும் செவ்வலை அழைக்கும் கீழ்வானில்!

சிரிக்கும் சிரிக்கும் வெண்ணிலவு சிரிக்கும் வானவீதியில்!
அழைக்கும் அழைக்கும் செவ்வலை அழைக்கும் கீழ்வானில்!
விரியும் விரியும் பூவிதழ் விரியும் பொன்மாலைப் பொழுதில்!
பொழியும் பொழியும் தேன்மழை பொழியும் பூஞ்சோலை முழுதும்!
சிரிக்கும் சிரிக்கும் வெண்ணிலவு சிரிக்கும் வானவீதியில்!
அழைக்கும் அழைக்கும் செவ்வலை அழைக்கும் கீழ்வானில்!















தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மனதும் மனதும் பேசுதே! அன்புத் தென்றல் வீசுதே! இனிய பார்வை கூசுதே இளைய பாவை ஆடுதே!

மனதும் மனதும் பேசுதே!
அன்புத் தென்றல் வீசுதே!
இனிய பார்வை கூசுதே
இளைய பாவை ஆடுதே!
நிலவும் பெண்ணில் காணுதே!
மலரும் உன்னில் மணக்குதே!
களவும் வாழ்வில் சிறக்குதே!
காதல் உலகம் பறக்குதே!
மனதும் மனதும் பேசுதே!
அன்புத் தென்றல் வீசுதே!
இனிய பார்வை கூசுதே
இளைய பாவை ஆடுதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:சிங்காரத் தமிழ்மணக்குமே! சித்தாரக்குயில் கூவிடுமே! அலங்காரத் தேர் நடக்குமே! அம்மம்மா பார் சிறக்குமே!

சிங்காரத் தமிழ்மணக்குமே!
சித்தாரக்குயில் கூவிடுமே!
அலங்காரத் தேர் நடக்குமே!
அம்மம்மா பார் சிறக்குமே!
பூமலரும் கன்னியெனும்
பூமலரும்
தேன்சிதறும் காதலன்பில்
தேன்சிதறும்
சிங்காரத் தமிழ்மணக்குமே!
சித்தாரக்குயில் கூவிடுமே!
அலங்காரத் தேர் நடக்குமே!
அம்மம்மா பார் சிறக்குமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:உண்மைக் காதலையே தொடங்காமலும் தொடராமலும் அந்த ஆசை அன்பு பூசை அடங்கிடாதே அழுந்திடாதே

உண்மைக் காதலையே
தொடங்காமலும் தொடராமலும்
அந்த ஆசை அன்பு பூசை
அடங்கிடாதே அழுந்திடாதே-உண்மைக் காதலையே
தொடங்காமலும் தொடராமலும்
அந்த ஆசை அன்பு பூசை
அடங்கிடாதே அழுந்திடாதே
கண்ணின் பார்வையிலே
தழுவாமலும் தழும்பாமலும்
நெஞ்சின் போர்வையிலே
அணைக்காமலும் இணைக்காமலும்
அந்த ஆசை அன்பு பூசை
அடங்கிடாதே அழுந்திடாதே

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-காத்திருக்கும் காதல்மனம் ஒருதேனருவியாகும் காக்கவைக்கும் காதல்குணம் ஊடல்சுகமாகும்

காத்திருக்கும் காதல்மனம் ஒருதேனருவியாகும்
காக்கவைக்கும் காதல்குணம் ஊடல்சுகமாகும்
கண்டவுடன் காதலென்பது ஒருபொழுதாகும் -காத்து
காத்து பூத்துபூத்து சுகமென்பது மறுபொழுதாகும்
தேடிதேடி அடையும் சுகத்திற்கும் ஒருஇன்பமுண்டு!
தேடும்போது கிடைக்காது தாமதத்திலும் ஒரு இன்பமுண்டு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்வானொரு நாள் இருக்கும் நிலவின்றியே! பூமலரிருக்கும் ஒருபோது தேனின்றியே!

நானில்லாது நீயில்லையே !
நீயில்லாது நானில்லையே! - நம்காதல் அன்பு
உறவில்லாது வாழ்வில்லையே!
வானொரு நாள் இருக்கும் நிலவின்றியே!
பூமலரிருக்கும் ஒருபோது தேனின்றியே!ஆனால்
நானில்லாது நீயில்லையே !
நீயில்லாது நானில்லையே! - நம்காதல் அன்பு
உறவில்லாது வாழ்வில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்எந்த உவமையும் இல்லை நம்காதலுக்கே! எந்த காதலும் ஈடில்லை நம் நேசத்திற்கே!

அந்த ஆசைக்கு இல்லை வார்த்தைகளே!
இந்த அன்புக்கு இல்லை கதவுகளே!
எந்த உவமையும் இல்லை நம்காதலுக்கே!
எந்த காதலும் ஈடில்லை நம் நேசத்திற்கே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்இது பிரபஞ்சத்தையும் மிஞ்சிய காதலடி! இது வானத்தையும் தாண்டிய நேசமடி!

இது பிரபஞ்சத்தையும் மிஞ்சிய காதலடி!
இது வானத்தையும் தாண்டிய நேசமடி!

”உன்னை நான் விரும்புகின்றேன்:” என்று நீயென்னைச் சொல்லும்
ஒருவார்த்தையிலே என்னுயிரின் துடிப்புள்ளதடி!
எத்தனையோ?அண்டமுண்டு அதில் எத்தனையோ பூமியுண்டு!
அத்தனை மண்ணிலும் நீகொண்ட காதலுக்கு ஈடுஇணை ஏதுமில்லையடி!
இது பிரபஞ்சத்தையும் மிஞ்சிய காதலடி!
இது வானத்தையும் தாண்டிய நேசமடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்என்னுயிர் வாழ்வதே காதலி அவளின் ஒரு பார்வையிலே!அன்பான அவளின் அந்த ஒரு பார்வைதனக்கே நானே !எத்தனை யுகங்கள் !

விழியே மனதின் கதவாகவே -கண்பார்வையின்
வழியே
காதலியே மெளன
மொழியால்
நுழைந்தாள் நுழைந்தாள் மெதுவாகவே!-
என்னுயிர் வாழ்வதே காதலி
அவளின் ஒரு பார்வையிலே!அன்பான அவளின்
அந்த ஒரு பார்வைதனக்கே நானே !எத்தனை யுகங்கள்
தவம் செய்தேனோ?

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:காதலி அவள்பார்வை மின்னுது மின்னுது பனிபோலவே! அவள்வார்த்தை சொன்னது சொன்னது கனியாகவே!

காதலி
அவள்பார்வை மின்னுது மின்னுது பனிபோலவே!
அவள்வார்த்தை சொன்னது சொன்னது கனியாகவே!
அவள் கண்கள் தந்தது தந்தது இனிப்பாகவே!
அவள் நெஞ்சில் வந்தது வந்தது தவிப்பாகவே!-காதலி அவளுக்குள்
நெருக்கமா நெருக்கமா மெல்ல வரவா?-காதல
சுருக்கமா சுருக்கமா சொல்லித் தரவா?-கண்ணில்
காதல் ஒத்திகை பார்க்குது அந்த உறவு நாடகமே!- நெஞ்சில்
கலந்துவிட்டாலோ அரங்கேறுமே இன்பக் காவியமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்விழியாலே காதல் கடிதமொன்று மொழிந்தாளே!காதலியே !

விழியாலே காதல் கடிதமொன்று மொழிந்தாளே!காதலியே
அன்பாலே பொழிந்தாளே அமுத நெஞ்சாகியே ! வழிந்தாளே!துணை
வழியாலே துன்பத்தை துடைத்தாளே!செம்மொழி தமிழாலே
மொழிபேசி என்னாளும் நல்லிலக்கியம் ஆனாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம் காதல் தூக்கத்திலும் விழித்திருக்கும் கணகள் மெளனத்திலும் வார்த்தைசொல்லும்!

காதல் தூக்கத்திலும் விழித்திருக்கும்
கணகள் மெளனத்திலும் வார்த்தைசொல்லும்-ஆசை
நெஞ்சம் வானத்திலும் பறந்துசெல்லும் !-அன்பு
வாழ்வில் எல்லையில்லா இன்பமாகும்!-ஒற்றுமை
உலகம் இந்தபிரபஞ்சத்தையும் மகிழ்வாக்கும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்ஒரு காதலிலே நாளெல்லாம் அமுதானாளே! ஒருவாழ்வினிலே உலக இன்பம் ஆனாளே!

ஒருபார்வையிலே முதல் நாள் வரவழைத்தாளே!
ஒருவார்த்தையிலே மறு நாள் விருந்துவைத்தாளே!
ஒரு காதலிலே நாளெல்லாம் அமுதானாளே!
ஒருவாழ்வினிலே உலக இன்பம் ஆனாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:சொல்லாத காதல் வென்றதில்லையே!-மனதுக்குள்ளே பூட்டிவைத்த காதல் வாழ்ந்ததில்லையே!ஒருதலையாம் காதல்கூட உலகினில்ஜெயித்ததில்

சொல்லாத காதல் வென்றதில்லையே!-மனதுக்குள்ளே
பூட்டிவைத்த காதல் வாழ்ந்ததில்லையே!ஒருதலையாம்
காதல்கூட உலகினில் ஜெயித்ததில்லையே!இருமனதும்
ஒன்றான காதலென்றும் தோற்றதிலலையே!

காலம் இன்று போகுமே போகுமே!
காதல் நின்று வாழுமே வாழுமே!-உண்மைக்
காதல் என்றும் வாழ்கவே வாழ்கவே-மெய்யன்பு
காதல் என்றும் வெல்கவே வெல்கவே!-வெளியில்

சொல்லாத காதல் வென்றதில்லையே!-மனதுக்குள்ளே
பூட்டிவைத்த காதல் வாழ்ந்ததில்லையே!ஒருதலையாம்
காதல்கூட உலகினில் ஜெயித்ததில்லையே!இருமனதும்
ஒன்றான காதலென்றும் தோற்றதிலலையே!










தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதலி உன்னாலே! காதல் விரகமென்னும் -இன்பவேதனையாலே ! காதலன் நானே பனியாகவோ?மெழுகாகவோ? ஏதென்று உவமைசொல்ல முடியாமலே!

காதலி உன்னாலே!
காதல்
விரகமென்னும் -இன்பவேதனையாலே !
காதலன் நானே பனியாகவோ?மெழுகாகவோ?
ஏதென்று உவமைசொல்ல முடியாமலே!
உருகிடவே நின்றேனே!உன்னெஞ்சினில் ,உன்னுயிரினில் .,உன்னுதிரத்தில்
கரைந்திடவே கலந்தேனே!
காதலி உன்னாலே!
காதல்
விரகமென்னும் -இன்பவேதனையாலே !
காதலன் நானே பனியாகவோ?மெழுகாகவோ?
ஏதென்று உவமைசொல்ல முடியாமலே!
உருகிடவே நின்றேனே!உன்னெஞ்சினில் ,உன்னுயிரினில் .,உன்னுதிரத்தில்
கரைந்திடவே கலந்தேனே!







:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதலி உன் மாதுளம்பூ நிறத்தினில் இதழிருக்கும்-அதில் மல்லிகைப் பூச்சரத்தில் சிரிப்பிருக்கும்

அன்பே உந்தனக்கு
மாதுளம்பூ நிறத்தினில் இதழிருக்கும்-அதில்
மல்லிகைப் பூச்சரத்தில் சிரிப்பிருக்கும் -காதலி உன்முக
மாங்கனி இனிப்பினில் அமுதிருக்கும் -அன்புத்
தேன்கனி கன்னத்தில் சுவையிருக்கும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கண்கள்வழி மெளனமாகவே! காதலியர் சொன்னது காதல்மொழியாகுமே!0-அதைக் காதல் இதயங்களே!மெதுவாய் புரிந்துகொள்ளுமே!

கண்கள்வழி மெளனமாகவே!
காதலியர் சொன்னது காதல்மொழியாகுமே!0-அதைக்
காதல் இதயங்களே!மெதுவாய் புரிந்துகொள்ளுமே!-என்றும்
காதலர் வாழ்வினிலே !சுகம் இதுதான் என்று கண்மோதலில் நெஞ்ச ஊடலில் உயிர்க்கூடலில்
காதலில் தெரிந்து கொள்ளுமே!
கண்கள்வழி மெளனமாகவே!
காதலியர் சொன்னது காதல்மொழியாகுமே!0-அதைக்
காதல் இதயங்களே!மெதுவாய் புரிந்துகொள்ளுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மல்லிகையே மல்லிகையே பொன்வண்டு தீண்டாத மல்லிகையே! தாமரையே தாமரையே பூந்தென்றல் சீண்டாத தாமரையே!

மல்லிகையே மல்லிகையே
பொன்வண்டு தீண்டாத மல்லிகையே!
தாமரையே தாமரையே
பூந்தென்றல் சீண்டாத தாமரையே!
வெண்ணிலவே வெண்ணிலவே!
விண்மேகம் மூடாத வெண்ணிலவே!
பெண்ணிலவே! பெண்ணிலவே!
கண்பட்டுத் தேடாத பெண்ணிலவே!
மல்லிகையே மல்லிகையே
பொன்வண்டு தீண்டாத மல்லிகையே!
தாமரையே தாமரையே
பூந்தென்றல் சீண்டாத தாமரையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதலியே தன் கண் அம்பாலே!-காதல் அன்பாலே! வரைந்தாளே! காதல் தூது!

காதலியே தன்
கண் அம்பாலே!-காதல்
அன்பாலே!
வரைந்தாளே! காதல் தூது!-அவள்
எனைவரச் சொன்னாளே துணைபெறச் சொன்னாளே!
தனைதரச் சொன்னாளே! தனையெனக்கு தந்தாளே!
மனைதான் என்றாளே! வினையின்றி வாழ்வில்லை!
உனைபிரியேன் என்றாளே எனையுயிரே என்றாளே!
காதலியே தன்
கண் அம்பாலே!-காதல்
அன்பாலே!
வரைந்தாளே! காதல் தூது!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இன்று முறையாய் உழைக்கும் சமுதாயம் ஒன்றுபட்டாலே- நாளை மக்கள்ஜன நாயகம் நன்றாய் வாழுமடா!

இன்று முறையாய் உழைக்கும் சமுதாயம் ஒன்றுபட்டாலே- நாளை
மக்கள்ஜன நாயகம் நன்றாய் வாழுமடா!
கிடக்கட்டும் கிடக்கட்டும் நாளையடா!
நடக்கட்டும் நடக்கட்டும் இன்றடா!--கனவாய்
போகட்டும் போகட்டும் நேற்றடா!- நனவாய்
ஆகட்டும் ஆகட்டும் இன்றடா!
உழைப்பவரின் ஒன்றுபட்ட உணர்வின்முன்னாலே
எந்த சக்தி எதிர்நிற்கும் பார்ப்போமடா!
இன்று விதைதனை ஒழுங்காய் போட்டாலே- நாளை
அறுவடை சரியாய் ஆகுமடா!
இன்று முறையாய் உழைக்கும் சமுதாயம் ஒன்றுபட்டாலே- நாளை
மக்கள்ஜன நாயகம் நன்றாய் வாழுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:உழைக்காது வீணிருப்பது வீணிருப்பது சரியில்லை- தன்னலமாய் தானிருப்பது தானிருப்பது முறையில்லை!

!உழைக்காது
வீணிருப்பது வீணிருப்பது சரியில்லை- தன்னலமாய்
தானிருப்பது தானிருப்பது முறையில்லை!
தேனிருக்குது தேனிருக்குது இதழிலே!
மீனிருக்குது மீனிருக்குது விழியிலே!
மானிருக்குது மானிருக்குது நடையிலே!
நானிருப்பது நானிருப்பது அழகிலே!- நீயும்
ஏனிருக்கிறாய் ஏனிருக்கிறாய் தனிமையே!உழைக்காது
வீணிருப்பது வீணிருப்பது சரியில்லை- தன்னலமாய்
தானிருப்பது தானிருப்பது முறையில்லை!-துணையின்றி
வாழ்விருப்பது வாழ்விருப்பது அழகில்லை!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-இரவுக்கே வழிவிட்டு விடைகொடுக்குது விடைகொடுக்குது அந்திமாலைக் காலமே!

குடைபிடிக்குது குடைபிடிக்குது
விழியிமை இரண்டுமே குடைபிடிக்குது
நடை நடக்குது நடை நடக்குது
கடைக் கண்ணால் நடை நடக்குது
காதலிரு நெஞ்சமே!
படைஎடுக்குது படைஎடுக்குது
காதலிளம் பருவமே படைஎடுக்குது -இரவுக்கே வழிவிட்டு
விடைகொடுக்குது விடைகொடுக்குது
அந்திமாலைக் காலமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:சேர்ந்து வாழும் சமத்துவ சமுதாயப் பேரின்பத்திற்கு ஏதும் ஈடாகாதே!

அன்பாம்
காதலின் இலக்கணத்தையே !
கண்களில் வகுத்தவளே!-பண்பாம்
வாழ்வின் தத்துவத்தையே
நெஞ்சினில் தொகுத்தவளே!
கோடிக் கோடிக் காலங்களே !காதல் கொண்ட உறவு மாறாதே!- நம்
கோடான கோடி தலைமுறைக்கும் வாழ்வின் மெய்யின்பம் மாறாதே!
சேர்ந்து வாழும் சமத்துவ சமுதாயப் பேரின்பத்திற்கு ஏதும் ஈடாகாதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவள்பார்வையில் ஆயிரமாயிரம் காவியம் நான்படித்திடும் தேனிலவல்லவா? அவள் நெஞ்சினில் செம்மொழித் தாலாட்டுக் கேட்கும் !

அவள்பார்வையில் ஆயிரமாயிரம் காவியம் நான்படித்திடும் தேனிலவல்லவா?
அவள் நெஞ்சினில் செம்மொழித் தாலாட்டுக் கேட்கும் காலமல்லவா?-அதனாலே!
மெல்லப் பேசு மெல்லப் பேசு - என் சித்தாரச்
செல்லக்கிளியே மெல்லப் பேசு!
மெல்ல வீசு மெல்லவீசு -தென்பொதிகைத்
தென்றல் காற்றே மெல்லவீசு
என்காதலியின் தேன்மொழியை நான்கேட்கும் பொன்மாலைப் பொழுது இதுவல்லவா!-அதனாலே!
மெல்லப் பேசு மெல்லப் பேசு - என் சித்தாரச்
செல்லக்கிளியே மெல்லப் பேசு!
மெல்ல வீசு மெல்லவீசு -தென்பொதிகைத்
தென்றல் காற்றே மெல்லவீசு
அவள்பார்வையில் ஆயிரமாயிரம் காவியம் நான்படித்திடும் தேனிலவல்லவா?
அவள் நெஞ்சினில் செம்மொழித் தாலாட்டுக் கேட்கும் காலமல்லவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-உன் இதயம் அழுதபோதிலுமே -உன் இதழ்கள் சிரிக்கட்டுமே! விழுவது எழுவதற்கே! தோல்வியும் தொடர்ந்துவரும் வெற்றிதனுக்கே!

-உன்
இதயம் அழுதபோதிலுமே -உன்
இதழ்கள் சிரிக்கட்டுமே!- நீ
விழுவது எழுவதற்கே! -உன் தோல்வியும் தொடர்ந்துவரும் வெற்றிதனுக்கே!

சிறகிழந்த பறவையாகவே - இன்ப வானில்
பறந்திடவே முடியவில்லையே!
என்ற சோகங்கள் ஏனிங்கே?உலகினில்
மாற்றங்கள் இல்லாது போவதில்லையே!என்றும் துன்பங்களும்
வாழ்வினில் தொடர்ந்து வருவதிலலையே!
துயரத்தை தூரத்தே தள்ளிவிட்டு உன் நம்பிக்கை கைக்கொண்டு நிமிர்ந்திடவே வேண்டுமே!
-உன்
இதயம் அழுதபோதிலுமே -உன்
இதழ்கள் சிரிக்கட்டுமே!
விழுவது எழுவதற்கே! தோல்வியும் தொடர்ந்துவரும் வெற்றிதனுக்கே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அமுதே நிலவே நல்ல இலக்கியமே! மலரே தேனே செம்மொழி அமுதமே!

அமுதே நிலவே நல்ல இலக்கியமே!
மலரே தேனே செம்மொழி அமுதமே!
தமிழாய்!
இயலிசை நாடகம் ஆனாயே!-உன்
தளர் நடையினில் தாளமிட்டு
கையசைவினில் பாவமிட்டு
வாய்மலர்ந்து ராகமிட்டு தேனானாயோ?
தமிழாய்!
இயலிசை நாடகம் ஆனாயே!
அமுதே நிலவே நல்ல இலக்கியமே!
மலரே தேனே செம்மொழி அமுதமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்லவோ? வாழ்வின் இலக்கணமே சமத்துவத் துணையான இன்ப இலக்கே நீயல்லவோ?

நீ மறந்துவிடும் கடிகாரத்தைப் போலவே!
எனது மொத்த கனவும்!-
உனது முகம்தானே எனக்கு!- நீ படித்திடும் போதினில் மறந்திடும் சொல் போலே!
காலத்தின் மணிதனைப் பார்க்க நிமிர்ந்து பார்த்துவிடு!
நீ மறந்துவிடும் கடிகாரத்தைப் போலவே!
எனது மொத்த கனவும்!-
உனது முகம்தானே எனக்கு!-
இரவின் காலத்தை திருடிடும் நிலவினைப் போலவே - எனது
இதயத்தை திருடிடும் கள்ளி நீயல்லவோ?
உருவங்கள் மாறிவிடும் ஓர் நாளிலே - நம்
உள்ளங்கள் மாறாதே தேன மொழியே!
இதற்குமேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்லவோ?- வாழ்வின்
இலக்கணமே சமத்துவத் துணையான இன்ப இலக்கே நீயல்லவோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:உன்னோடு சேர்ந்தே!அன்புக் காதலியே! அடுத்த ஆண்டு இதே தேனிலவையே - நானே! தேனே ! எங்கு காண்பேனோ?

உன்னோடு சேர்ந்தே!அன்புக் காதலியே!
அடுத்த ஆண்டு இதே தேனிலவையே - நானே! தேனே !
எங்கு காண்பேனோ?
மாலை நேர வெண்மேகங்களே !
தூரத்தே முகாமிட்டதோ? தன்முகவரிதனைச் சொல்லியே!-கீழ்
வானத்தே தெளிந்த சிவந்த வானமே!தென்பொதிகை
தானிருந்தே செவிகுளிர்ந்த கானமே!அந்த
பால்வீதி வெளிதனிலே ஒருமுழுமையானதொரு நிசப்தமே-புன்னகையினில்
பார்த்து சிரித்திடும் வெண்மலர் மின்மினிக்களாய் மத்தாப்பு நட்சத்திரங்களையே!
நானும் உன்னோடு தனிமை நீங்கி இனிமையாகவே பார்க்கின்றேனே!இதையே !
உன்னோடு சேர்ந்தே!அன்புக் காதலியே!
அடுத்த ஆண்டு இதே தேனிலவையே - நானே! தேனே !
எங்கு காண்பேனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மெழுகும் கூட ?-காதலர் எங்களைப்போலவே இரவெல்லாமே அழுகின்றதோ!

இன்பமே உருவாய் உருவெடுத்த
கண்ணிலே காவியமாய் பிறப்பெடுத்த
அந்த அழகான காதலே எப்போதுதான்?
ஆழமான காதலாய் ஆகிடுமோ?-காதலர்
எங்களின் சோகத்தையே உணர்ந்திடவோ-மெழுகும் கூட
?-காதலர்
எங்களைப்போலவே இரவெல்லாமே அழுகின்றதோ!-பிரியாவிடை
தருகின்ற விருந்தினிலே காதலரின் உண்மைக் காதலன்பு
எப்படித்தான் சிரித்திடக் கூடிடுமோ?என் தோழி?காதலர்
சேர்ந்திடும் நன்னாளை எதிர்பார்த்தே காதல்கண்கள்
பூத்திடும் பொன்னாளினை எதிர்கொண்டே இள நெஞ்சங்களே!
போராடும் குணமன்றி காதல் மட்டுமல்ல சமுதாயமும் தான் -
பயன்கொண்டு சந்தோசம் தான்கண்டு சிரிக்காதே!

Sunday, August 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவளின் அழகிய சிறிய இதழாம் முத்து சாளரத்தையே திறந்திடும் பருவப் படிப்பினிலே!

அவளின் கண்கள்தான் எத்தனை எத்தனை சாடையினில் குழப்பமாய் புருவ துடிப்பினிலே!
அவளின் அழகிய சிறிய இதழாம் முத்து சாளரத்தையே திறந்திடும் பருவப் படிப்பினிலே!
அவள் தான் எத்தனை அமைதியாகவே! என் தோளில் சாய்வதுபோலவே நிலைக்கதவோரமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: நாட்டில் ஒற்றுமையிலே புரட்சிதனையே வாழ்த்துகின்றேன்!

புதுப்புது சவால்களுடனே என்முன்னே இருக்கும் நீண்டதூர வாழ்க்கைதனிலே!வறுமையில்லாத ,சமத்துவத்தில்
புதுமைதனைத் தேடுகின்றேன்!- நாட்டில் ஒற்றுமையிலே
புரட்சிதனையே வாழ்த்துகின்றேன்!
எனது தனித்த இதயமோ! வீடுவிட்டு நாடு நோக்கி-எனது
சிறுசிறு கனவுகளையே புறந்தள்ளிவிட்டே!துயர இடைவெளியில் கோடித்துன்பங்களே ஆனாலும் ஒன்றுபட்ட உழைப்பவரின் துணையுடனே!
துயரத்தின் நீண்ட இரவுகளையே தாண்டி எல்லோரும் வாழும் தத்துவத்தையே
ஏற்றிப் பிடிக்கும் நல்லோரின் வழிதனிலே நானும் நடக்கின்றேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இது காதலர் இன்ப தினமாம்!-தித்திக்கும் எத்திக்கும் ! இனிப்புக்கும் இனிப்பான கரும்புதினமாம்!- நாம் விரும்பும் தினமாம்!

இது காதலர் இன்ப தினமாம்!-தித்திக்கும் எத்திக்கும் !
இனிப்புக்கும் இனிப்பான கரும்புதினமாம்!- நாம் விரும்பும் தினமாம்!
மலரம்பையே நாளெல்லாம் பொழிகின்ற மன்மதனும்,ரதியும்
வாழ்த்துச் சொல்லும் பேரின்ப தினமாம்!

ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓ நீலப்பறவைகளே! ஓ நீலப்பறவைகளே!
நட்புடன் கேளுங்கள்! நுட்பமாய் கேளுங்கள்!
-காதலியவள் எனக்காகவே!
அன்புடன் சொன்ன காதல் சேதிதனைப் பண்புடன் கொண்டு வாருங்கள்!-காதலர்
இன்பத்தில் நீங்களும் பங்குகொண்டு இனிமைதனை கொண்டாடுங்கள்!
இது காதலர் இன்ப தினமாம்!தித்திக்கும் எத்திக்கும் !
இனிப்புக்கும் இனிப்பான கரும்புதினமாம்!- நாம் விரும்பும் தினமாம்!
மலரம்பையே நாளெல்லாம் பொழிகின்ற மன்மதனும்,ரதியும்
வாழ்த்துச் சொல்லும் பேரின்ப தினமாம்!
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓ நீலப்பறவைகளே! ஓ நீலப்பறவைகளே!
நட்புடன் கேளுங்கள்! நுட்பமாய் கேளுங்கள்!
-காதலியவள் எனக்காகவே!
அன்புடன் சொன்ன காதல் சேதிதனைப் பண்புடன் கொண்டு வாருங்கள்!-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவளின் கண்ணில் கோடி மின்னல் மின்னும் இன்பத்தின் எல்லையே!

அவளின் காதலில் மயக்கும் மாலைக்கு இன்னும் தொலைவில்லையே!
அவளின் கண்ணில் கோடி மின்னல் மின்னும் இன்பத்தின் எல்லையே!
அவளின் நினைவில் கொண்ட காதலன்பில் வாசத்தின் முல்லையே!
அவளின் நெஞ்சின் காணும் உறவில் தேனும் பாலும் உள்ளதே!

Saturday, August 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நான் இறக்கும் வரை நூற்றுவாழும் ஒருவசந்த கால பட்டுப்புழுவாய் !

நான் இறக்கும் வரை நூற்றுவாழும் ஒருவசந்த கால பட்டுப்புழுவாய் அன்பே நம் காதலினை நூற்றபடியே!
சந்திப்பது உன்னையே
சந்திப்பது கடினமடி!உன்னையே
சந்திக்காமல் பிரிந்திருப்பதே அதனினும் கடினமோ கடினமடி!
கிழக்குக் காற்று மறைய மறைய போகுதடி!-அன்பைக்
கிளறும் மலர்களோ! வாடி வதங்கியதடி!
நான் இறக்கும் வரை நூற்றுவாழும் ஒருவசந்த கால பட்டுப்புழுவாய் !அன்பே நம் காதலினை நானும் நூற்றபடியே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இல்லாரே இல்லாத பொன்னுலகே வேண்டினேனடா!

என் நினைவுகளிலே எப்போதுமே இருப்பது
என்னுலகிலுள்ள -அனைத்து
மானுடத்தின் அமைதிமிகு வாழ்க்கை ஒன்று தானடா!
எல்லோரும் இன்புற்று இருப்பது அல்லாமல்
வேறொன்று என்றும் அறியேனடா!
இல்லாரே இல்லாத பொன்னுலகே வேண்டினேனடா! மனித நேயத்திற்கே! பொல்லாங்கு செய்யும் -
பொல்லாரை அழித்திடவே வேள்வி கொண்டேனடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாத்தே!வாத்தே வானத்தை தொட்டுவிடலாமென்று நப்பாசைகொண்டு நீயும் மேலே மேலே பறக்காத

வாத்தே வாத்தே ஒத்தக்காட்டு
வாத்தே!வாத்தே வானத்தை தொட்டுவிடலாமென்று நப்பாசைகொண்டு நீயும்
மேலே மேலே பறக்காத!
தாங்கமுடியாத உன்னுடம்ப தூக்கி முடியாம
கீழே கீழே விழுகாதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஒருவித நோக்கமும் இல்லாமலே! ஏனோ? அலைகின்றனவே! கடைக்குட்டி மேகங்களே!?

மறைந்தனவே !மறைந்தனவே !
அடிவானத்திலே!அனைத்துப் பறவைகளுமே!
ஒருவித நோக்கமும் இல்லாமலே! ஏனோ?
அலைகின்றனவே! கடைக்குட்டி மேகங்களே!?
மின்னினவே! மின்னினவே!
தூவானம் தூவியது போலவே சித்திரப் பூக்களாய் நட்சத்திரங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:சூரிய கிரகணங்களில் மூழ்கி ஒளிர்கின்ற ஒருமகுட மலைஉச்சி!

நட்சத்திரங்களை ஒவ்வொன்றாய் மத்தாப்பாய் சிதறவிட்டபடியே!
பால்வீதிவெளி!-சூரிய
கிரகணங்களில் மூழ்கி ஒளிர்கின்ற ஒருமகுட மலைஉச்சி!
பெரு நதியின்
மீதாகத் தொங்கும் நீர்வீழ்ச்சியே வானத்திலிருந்து குதிக்கிறதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வெள்ளை நாரையே! இன்பவானத்தில் சிறகினைவிரித்து நள்ளிரவையும் தாண்டியே தூரத்திலே!

இராப்பாட்டினில் அதிர்ந்து அதிர்ந்து மூடிபனி நிறத்து வெள்ளை நாரையே!
இன்பவானத்தில் சிறகினைவிரித்து நள்ளிரவையும் தாண்டியே தூரத்திலே!
அழகாகவே பறந்துபறந்து வெகுதொலைவினையும் கடக்கின்றதே!
அகல்விளக்கோ மங்கிடும்வேளையிது ,மணல்முகட்டின் மீது
அந்த தேனிலவும் குளிர்ந்திடும் இரவிது!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:தூரத்தே துரத்திவரும் வெகுதொலைவிருந்து தூதுவரும் பூங்காற்றே!

என்னையும் உன்னையும் கடந்து போகுதே !
என்றும் முடிவில்லாத மேகத்தோடே!
வடமேற்கு எல்லையிலே எழுந்து நடந்த தெளிந்த நிலவே! நழுவியபடியே!மெதுவாகவே!
என்னையும் உன்னையும் கடந்து போகுதே !
என்றும் முடிவில்லாத மேகத்தோடே!
தூரத்தே துரத்திவரும் வெகுதொலைவிருந்து
தூதுவரும் பூங்காற்றே!-அன்பாம்
சொந்தத்தைக் கொண்டாடியே
சுழன்று சுழன்று அடித்து காதலினைச் சொல்லிடுதே!
என்னையும் உன்னையும் கடந்து போகுதே !
என்றும் முடிவில்லாத மேகத்தோடே!
வடமேற்கு எல்லையிலே எழுந்து நடந்த தெளிந்த நிலவே! நழுவியபடியே!மெதுவாகவே!
என்னையும் உன்னையும் கடந்து போகுதே !
என்றும் முடிவில்லாத மேகத்தோடே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஒருவரை ஒருவர் எண்ணி எண்ணியே நினைவலைகளிலே!

இனி எப்போது? நாம்
எந்த இரவிலோ? எந்த பகலிலோ? எந்த உலகிலோ?
என்று?எங்கு? சந்திப்போமோ? நாம்
இந்த இரவினில் இந்த நேரத்தினில்
உன்னை நினைத்து என் உணர்வுகள்
தனது மென்மையை இழந்தனவே!
என்னை நினைத்து நீயும் உன்னை மறந்திடவே!
உன்னைப் பற்றி நானும் என்னைப் பற்றி நீயும்
ஒருவரை ஒருவர் எண்ணி எண்ணியே நினைவலைகளிலே!
ஒவ்வொரு நாளும் உவகையிலே பரிமாறிக் கொண்டோமே!
இனி எப்போது? நாம்
எந்த இரவிலோ? எந்த பகலிலோ? எந்த உலகிலோ?
என்று?எங்கு? சந்திப்போமோ?நாம்

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-வள்ளலார் சொல்லியபடியே! காரல்மார்க்ஸ் நடந்த தத்துவ வழிகாட்டியபடியே !

வனங்களோ! இருளினிலே!
வாடைக் காற்றோ! புற்களைத் தாக்கியபடியே!
எங்கேடா?என்முன்னே கடந்துபோன காலங்களே
எங்கேடா?என்பின்னே வர இருக்கும் இளைய தலைமுறைகளே?
நல்லோர்கள் வழிதனிலே
நாமெல்லாமே நடந்திடுவோமே!
வள்ளலார் சொல்லியபடியே! காரல்மார்க்ஸ் நடந்த தத்துவ வழிகாட்டியபடியே !
நாமொன்றாய் விழித்தெழுந்தே! பொதுவுடைமை செயலாக்கிடுவோமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-இளஞ்சாரலே =வசந்தத்தின் இளஞ்சாரலே!ஒளிர்ந்ததே!

இளஞ்சாரலே =வசந்தத்தின்
இளஞ்சாரலே!ஒளிர்ந்ததே!
உன்னாடையே மேகமடி!
உன்முகமே நிலவானதடி!
கண்ணாடியாம் கண்ணாடியாம் குளிர் ஏரிதன்னில்
அல்லிப் பூக்கள் எல்லாம் கொத்துக் கொத்தாய் பூத்ததே!
என்னாசைக் கனவெல்லாம் ஒருசேர்ந்தது போலவே!ஏரி நீரின்
அலையெல்லாம் அல்லிமலரோடு கொஞ்சிக் குலாவிடுதே!
இளஞ்சாரலே =வசந்தத்தின்
இளஞ்சாரலே!ஒளிர்ந்ததே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று காரல் மார்க்ஸ் அவர்களும் சொன்னாரே!

சோம்பேறியாகவே! ஒன்றுமில்லாத கிளைதனைப் பார்த்துக் கொண்டிருப்பதையே விட்டுவிட்டு
பூங்காவனத்திலே ஒருமொட்டு விரிந்தால் கூட நீயும் தேடி எடுத்துவாழ்வினை சுவைத்துக் கொள்ளடா!
தேடல் இல்லாத வாழ்க்கை வெற்றிதனையே பின்னோக்கித் தள்ளுமடா!
தேடுங்கள் கிடைக்குமென்று இயேசுபெருமானும் சொன்னாரே!உலகத் தொழிலாளர்களே ஒன்று
சேருங்கள் என்று காரல் மார்க்ஸ் அவர்களும் சொன்னாரே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நீயின்றியே இளமை நிலவும் முதுமை ஆனதோ?

அன்புக் காதலியே அருமைக் காதலியே! நீயின்றியே
இளமை நிலவும் முதுமை ஆனதோ?
உன்வரவின்றி என்மாலைப் பொழுதே!
இலையுதிர்கால நதியோடே!வாடுதே
ஓடைமிகக் குளிரோடே நீயின்றி நடுங்குதே!-வாடைக்
காற்றும் என்னைவாடவிட்டு வாளைப்போல கீறிடுதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அந்த மெழுகுவர்த்திக்கும் கூட இதயமுண்டு!

அந்த மெழுகுவர்த்திக்கும் கூட இதயமுண்டு!
அதுவும் கூட பிரிவினையே வெறுக்கிறதே!-தாம்
இருந்த இடத்தின் தனித்த விடியலிலே தானும்
அழுது சிந்துகிறதே ஒரு கண்ணீர் துளிதனையே!
உனக்குக் கூட அதுவே தெரியவில்லையா என் காதலியே!
என்னைப் பிரிந்த வேதனை உனக்கே புரியவிலலையா என் தோழியே!
அந்த மெழுகுவர்த்திக்கும் கூட இதயமுண்டு!
அதுவும் கூட பிரிவினையே வெறுக்கிறதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இனியொரு விதிசெய்தே நல்லோரின் வழி நடந்திடவே சபதமேற்றேனே!

உணர்வுகள் ஏராளமே! உத்வேகம் ஏராளமே!-இருந்தும் உலகினில் குற்றங்கள்
ஒன்றுமே நடவாததது போலவே நடந்து கொள்கின்றேனே!- எனது
எண்ணங்களை ஒப்பிட்டு முகம்புதைத்து நினைத்துப் பார்க்கின்றேனே!-இருந்தாலும்
என்னாலே மனம்விட்டு சிரித்திடவே ஏன் தானோ இன்னும் முடியவில்லையோ?
ஏற்றதாழ்வு சமூகத்தையே மாற்ற நானும் முயலவில்லையே!
இனியொரு விதிசெய்தே நல்லோரின் வழி நடந்திடவே சபதமேற்றேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாழும் உலகத்திலே வெறுங்கனவு மட்டுமே காணமுடியுமா?

கத்தாழை மாடத்தின் கிராதியிலே சாஞ்சுக்கிட்டு- எந்தன்
காதலின் பெருமூச்சையே !
தூரத்தே வசந்தத்தின் தென்றலிலே கேட்டேனடி!மவுனத்தின்
முடிவில்லாததாலே ஏங்குகின்றேனே!
ஒரு
மெல்லிய பனித்துளியும் சிணுங்கிடுதே!-உயர
மேலே மின்மினியும் பறந்திடுதே!என்னில்
ஆழமாகவே வளர்ந்ததே எனது ஏக்கங்களே!- நிலவே!
ஓர்தனிமலர் போலவே மேகங்களிடையே தத்தளிக்கின்றதே!
- நானோ
வானின் நீலத்தையும் , ஆழத்தையும் பார்த்தபடியே!- நானும்
வாசலைத் தாண்டியே மலைதனைக் கடந்தே
வாழும் உலகத்திலே வெறுங்கனவு மட்டுமே காணமுடியுமா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாசமே -பூவின் வாசமே நேசமே -அன்பின் நேசமே!

வாசமே -பூவின்
வாசமே
நேசமே -அன்பின்
நேசமே!
தேசமே-காதல்
தேசமே
செம்மலர்களின் இடையே வழிந்த
ஈரத்தைக் கூட திருடியபடியே!இருந்ததடி!-காதல்
மந்திரச்சொல்லின் இளம்பனி--இதயத்தையே
துளைத்தபடி இருந்ததடி!அதன் அத்தனை
அழகுடனே கூட பொன்னிறமாகவே! மின்னி வானில் பறக்கும்
பறவையும் கூடவே சேர்ந்து அழகெழில் ஆனதடி!
வாசமே -பூவின்
வாசமே
நேசமே -அன்பின்
நேசமே!
தேசமே-காதல்
தேசமே

Friday, August 13, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:முகஸ்துதிகொண்டு நானென்றும் பாடிட மாட்டேனே!

மனித நேயத்தையே ; நல்ல மனிதரையே,மனிதத்தையே!பாடும் என் நாவாலே!-வேறு
கற்பனைத் தலைகொண்டு எதையும் ,யாரையும் ,முகஸ்துதிகொண்டு நானென்றும் பாடிட மாட்டேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எத்தனை கோடி இன்பம் வைத்தாய இறைவா என்ற பாரதியே!

தன்னை மறந்து தன்னை உணர்ந்து இன்புறும் நிலையே அர்ச்சை நிலையாகுமே!
தன்னை மறந்து தன்னை உணர்ந்து இன்புறும் நிலையே அர்ச்சை நிலையாகுமே!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய இறைவா என்ற பாரதியே-முடிவினில்
இனிது இனிது ஏகாந்தம் இனிது என்ற தீர்வுக்கு வந்துவிட்டாரே!
தன்னை மறந்து தன்னை உணர்ந்து இன்புறும் நிலையே அர்ச்சை நிலையாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:உலகம் தோன்றிய முதலாகவே!தோன்றும் ஒவ்வொரு நாளும் புதுமையே!

உலகம் தோன்றிய முதலாகவே!தோன்றும்
ஒவ்வொரு நாளும் புதுமையே! நேற்றைய தினத்திலிருந்து இன்றே நாமும் நாளைய
தினத்தின் நவீனத்தையே நன்றாய் சமைத்திட விளைந்திடுமே!
இவையெல்லாமே!
காலந்தோறும் காலத்திற்கேற்றவாறு தன் வளர்ச்சிக்கேற்றவாறு -தனக்கு
வேண்டிய ஒன்றையே கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றதே!
அவையனைத்துமே!
அந்தந்த காலத்திற்க்கு தகுந்தாற்போலவே மாற்றமும் பெறுகின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உலகமே நட்பின் கூடாரமாகுமே!இந்த பிரபஞ்சமே அன்பாலே பேரின்பம் கொள்ளுமே!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே!
பழையன கழியட்டுமே புதியன் பிறக்கட்டுமே!அது
வளரும் புதுமை மலரும் காலத்தின் கட்டாயமே!
எல்லாம் நம் ஊரே! எல்லோரும் நம் சுற்றத்தாரே!
உலகமே நட்பின் கூடாரமாகுமே!இந்த
பிரபஞ்சமே அன்பாலே பேரின்பம் கொள்ளுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலி நீயும் என் மூளையிலே! காலமெல்லாம் நிற்கின்றாயே!-

!காதலி நீயும் என் மூளையிலே!
காலமெல்லாம் நிற்கின்றாயே!-
என் நினைவிலும் கனவிலும் வந்து- காதலி நீயும்
ஏன் தானோ?காதலாம் நீண்ட கவிதைகள் தந்தாயோ?
என்னெஞ்சை விட்டு நீயும் செல்லாமலே!காதலி நீயும் என் மூளையிலே!
காலமெல்லாம் நிற்கின்றாயே!-
என் நினைவிலும் கனவிலும் வந்து- காதலி நீயும்
ஏன் தானோ? காதலாம் நீண்ட கவிதைகள் தந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மாலையிலே நினைப்பதெல்லாமே!- நீ போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!

அந்தி
மாலையிலே நினைப்பதெல்லாமே!- நீ
போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!
பூவையரே! மழலையரே! பொன்னான தோழியரே-
காதல் தலைவி எந்தனுக்கு போகாத பொழுதுள்ளதே!
காதல் தலைவி நானே தலைவன் பற்றி -அந்தி
மாலையிலே நினைப்பதெல்லாமே!- நீ
போய்தான் சொல்லாயோ பொன்வண்டே!
பூவையரே! மழலையரே! பொன்னான தோழியரே-
காதல் தலைவி எந்தனுக்கு போகாத பொழுதுள்ளதே!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-கண்டு அன்பாலே காதல் கொள்வதே! பேரின்பமாகுமே!

-கண்டு
அன்பாலே காதல் கொள்வதே! பேரின்பமாகுமே!
இயற்கைப் புணர்ச்சியாகுமே!
இன்பத்தின் எல்லையதுவே ஆகுமே!
தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவரே-கண்டு
அன்பாலே காதல் கொள்வதே! பேரின்பமாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலரே! காத்திருப்பதும் சுகமாகுமே காக்கவைப்பதும் சுகமாகுமே!

காதலரே!
காத்திருப்பதும் சுகமாகுமே காக்கவைப்பதும் சுகமாகுமே!
அகமே!அந்தரங்கசுகமே!
ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும்
கூடுகிற காலத்துப் பிறந்த பேரின்பமே!
கூடலும் கூடுதே ஊடலால் காதலினிமை மென்மேலும் கூடுதே!-காதலரே!
காத்திருப்பதும் சுகமாகுமே காக்கவைப்பதும் சுகமாகுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இதயத்திலே அந்திமாலையிலே ஆயிரமாய் கவிதை சொல்வாளோ?

இதயத்திலே அந்திமாலையிலே ஆயிரமாய் கவிதை சொல்வாளோ?
விழிகளிலே ஒருசிறிதும் வஞ்சனை இல்லாத இளம்பருவத்தாளோ?
நிலவினை விளையாட பேதையாகி அழைத்திடுவாளோ?-தன்
கண்களையே மூடிக்கொண்டு மறைத்தேன் என்பாளோ?
இதயத்திலே அந்திமாலையிலே ஆயிரமாய் கவிதை சொல்வாளோ?

Tuesday, August 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நீயில்லாது வேறொன்று நானென்றும் காண்பதில்லையே!

நீயில்லாது வேறொன்று நானென்றும் காண்பதில்லையே!
நினைவிலொன்று நினைப்பிலொன்று காண்கிலேனே!
நீயில்லாது வேறொன்று நானென்றும் காண்பதில்லையே!
நினைவில்வைத்து நினைவை மறப்பதுதான் காதலில்லையே!
எனக்குள் நீ உனக்குள் நான் என்பதையே நானும் உணர்ந்துகொண்டேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ தோழமை உணர்வோடு சேர்ந்து நடக்கின்றேனே!

தோழமை உணர்வோடு சேர்ந்து நடக்கின்றேனே!
தெளியத் தெளியத் தெளிந்தேனே! பகுத்தறிவுத் தேனே!
பொழியப் பொழிய மனம் கொண்டாடி இன்புற்றேனே!தனியுடைமைக்
கள்ளக் கருத்தையெல்லாமே கட்டோடு வேரறுத்தேனே! - நல்லோரின் பொதுவுடைமை
உள்ளக் கருத்தினையே உணர்ந்து அதன்வழி நடந்தும்,மக்களும் நடந்திடவே
அவரோடு தோளோடு தோளாகவே! தோழமை உணர்வோடு சேர்ந்து நடக்கின்றேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புகின்ற தத்துவத்தையே !~பகுத்தறியும் மெய்யறிவாலே!

நீ என்னதான் கற்றால் என்னடா? எந்த புகழும் பெற்றால்தான் என்னடா?
நீ எத்தனைப் பொருள்தான் அடைந்தால்தான் என்னடா? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புகின்ற தத்துவத்தையே !~பகுத்தறியும் மெய்யறிவாலே நீயே உன்னை உணராதபோது நீயும் எதைத்தான் இந்த உலகத்தில் அறிந்திட போகின்றாயோ மானுடமே?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எல்லோரும் வாழும் சித்தாகியே சமத்துவ அறிவியலாகியே ஆன தத்துவத்தை நான் உணர்ந்தேனே!

எல்லோரும் வாழும் சித்தாகியே சமத்துவ அறிவியலாகியே ஆன தத்துவத்தை நான் உணர்ந்தேனே!
பகுத்தறிவினாலே!
வித்தாகியே ,விழுதுவிட்ட மரமாகியே,விளைந்த கனியாகியே! தேன்மலர் பூவாகியே!
சத்தாகியே ,எல்லோரும் வாழும் சித்தாகியே சமத்துவ அறிவியலாகியே ஆன தத்துவத்தை நான் உணர்ந்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மூலமும் அறியாது முடிவும் அறியாது அரசியல் தகிடுதத்தம் போடுதடா!

மூலமும் அறியாது முடிவும் அறியாது அரசியல் தகிடுதத்தம் போடுதடா!- மக்களின் அறியாமையினாலே!ஐந்தாண்டுக்கு ஒருமுறை
வாக்கினையே வஞ்சகருக்கே!விற்றுவிட்டு ஞாலத்தில் -அவர்
படும்துயரங்கள் நாள்தோறும் தொடருதடா!

Monday, August 9, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனித அன்பு ,மனித நேய, நற்பண்பு ,சமத்துவ, நேசஅருள்பெருஞ்சோதியே!

மனித அன்பு ,மனித நேய, நற்பண்பு ,சமத்துவ, நேசஅருள்பெருஞ்சோதியே!
உலக உயிர்கள் அனைத்தும் ஒரேசாதியடா!அதில்
உயர்வென்பதும் தாழ்வென்பதும் இல்லையடா!-சாதி
சமயங்கள் அனைத்தும் பொய்யானவையடா!
சாதி,சமய சண்டைதனை விட்டு அன்பு அருள்ஜோதிதனைக் காணுவோமே!
மதமான பேய்பிடித்திடவே கூடாதடா!
சாதியும் சமயமும் பொய்யென நாம் உணர்ந்திடவேண்டும். மனித அன்பு ,மனித நேய, நற்பண்பு ,சமத்துவ, நேசஅருள்பெருஞ்சோதியே!கண்டிடவேண்டும்

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்றும் இன்றும் என்றும் வள்ளலாளரின் வழிமுறைகளே! உலகத்திலே உலகத்திலே !கவனமாகவே கடைபிடித்தே! வாழத் தகுந்த வாழ்க்கையின்

அன்றும் இன்றும் என்றும்
வள்ளலாளரின் வழிமுறைகளே!
உலகத்திலே உலகத்திலே !கவனமாகவே கடைபிடித்தே! வாழத்
தகுந்த வாழ்க்கையின் மெய்யான தத்துவமாகுமடா!
வாடிய பயிரைக் கூட கண்டபோது வாடியவர்!
பசியினால் இளைத்தே வீடுதோறும் இரந்து பசியாறாது அயர்ந்த இல்லாரை கண்டுள்ளம் பதைத்தவர்!
எம்வள்ளலார் அல்லவா!
அன்றும் இன்றும் என்றும்
வள்ளலாளரின் வழிமுறைகளே!
உலகத்திலே உலகத்திலே !கவனமாகவே கடைபிடித்தே! வாழத்
தகுந்த வாழ்க்கையின் மெய்யான தத்துவமாகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எட்டிபோலவும் கொட்டிபோலவும் நஞ்சாய் கிளைத்துவாழும் பித்தர்களே!

எட்டிபோலவும் கொட்டிபோலவும் நஞ்சாய் கிளைத்துவாழும் பித்தர்களே!-- வஞ்சகர்களே!
நீங்கள்
உங்களின் வஞ்சக எண்ணத்தாலே!
பட்டினி கிடப்போர்க்கு பழங்கஞ்சியைக் கூட கொடுக்க நினைப்பதில்லையே!
பண்ப்பெட்டி மீது பெட்டிவைத்து வாழும் தனியுடைமைத் தத்துவவாதிகளே!
பசித்த மற்றவரது வயிற்றுப் பெட்டியை நிரப்ப நினையாதது ஏனடா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தக் கால ஜூவகாருண்ய ஒழுக்க கேள்விகளும் கூட!

உடுப்பதற்கு உடைகொடு!
இருப்பதற்கு வீடு கொடு!
உழுவதற்கு நிலம் கொடு!அத்யாவசிய தேவைக்கு பொருள்கொடு!~
இது இப்போதைய கோஷம் மட்டுமல்ல !
அந்தக் கால ஜூவகாருண்ய ஒழுக்க கேள்விகளும் கூட!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பணப் பெட்டிதனை மட்டும் பார்க்கும் அடுத்தவர் நலத்தினையே பாராத கல் நெஞ்சம் கொண்டோரே!

ஏழையிடம் வட்டிமேல வட்டிவாங்கியே பெட்டிய நிரப்பும் பாதகரே!- நீங்கள்
ஏழைகளின் வயிற்றுப் பெட்டியை நிரப்ப என்றாவது எண்ணியதுண்டா?
வாராத கடனாக்கி வட்டிக்குத் தான்கொடுத்து -அந்த வட்டிக்கு வட்டிபோட்டு-அந்த
வட்டிக்கே அவர்தம் சொத்துதனையே கபளீகரம் செய்யும் நஞ்சுள்ளம் கொண்டோரே!-உங்களது பணப்
பெட்டிதனை மட்டும் பார்க்கும் அடுத்தவர் நலத்தினையே பாராத கல் நெஞ்சம் கொண்டோரே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாக்குரிமையைக் காசுக்கு விலைதனுக்கு வாங்கிடும் வீணராமே!

வட்டியப் பெருக்கிக் கொட்டியே -ஏழைமனைகவர் வஞ்சகராமே!
வாக்குரிமையைக் காசுக்கு விலைதனுக்கு வாங்கிடும் வீணராமே!
பாதகராம் !பயனெதுவும் உணராதவராமே!
அதிக அநியாய வட்டிக்கு கடன்கொடுத்தவராமே!
வட்டியப் பெருக்கிக் கொட்டியே -ஏழைமனைகவர் வஞ்சகராமே!
வாக்குரிமையைக் காசுக்கு விலைதனுக்கு வாங்கிடும் வீணராமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உயிர் காக்கும் மருந்தினிலே நஞ்சினையே சேர்க்கக்கூடாது!

முதல்வாராக் கடனுக்கே! கடன்பட்டேன் நானே!வட்டி கட்டியே என் வாழ்நாளெல்லாம் போனதே!எவரையும்
வேலையிட்டு கூலிகுறைக்கவே கூடாது!-யாரும்
கல்லும் நெல்லும் கலந்துவிற்கக் கூடாது!-உயிர்
காக்கும் மருந்தினிலே நஞ்சினையே சேர்க்கக்கூடாது!
காசுக்காக எதையும் செய்யும் வஞ்சகர்கள் வாழக்கூடாது!
கஷ்டப்படும் ஏழைகளின் வயிற்றினிலே அடித்திடவே கூடாது!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பணத்தையே தூக்கிவைத்து சந்தைப் பொருளாதாரம் தலைவிரித்து ஆடுதே இன்று!

நெல்லைக் கொடுத்து உப்பும்! உப்பைக் கொடுத்து நெல்லும்!-மாற்றுக்குப் பெற்ற
பண்டமாற்று நடந்த பழம்பெரும் தமிழகத்தையே! -எங்கள்
அக நானூறும் பாடியதடா!
பணத்திற்கு வேலையின்றி பொருளுக்கு மரியாதையே இருந்தது அன்று!-ஆனால்
பணத்தையே தூக்கிவைத்து சந்தைப் பொருளாதாரம் தலைவிரித்து ஆடுதே இன்று!

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:தனியுடைமையை எதிர்த்து போராட திராணியின்றி ஒதுங்கிப் போன மானுடத்தின் கல்லறைக்கும் உன்மொழியில் பேசி எழுப்பிடவும் !

மின்மினியே மின்மினியே
விளக்கேற்ற வந்தாயா?
அமாவாசையிலே ஒளிதரவே வேலை நிறுத்தம் செய்த நிலவுக்குப் போட்டியாகவே!
மின்மினியே மின்மினியே
விளக்கேற்ற வந்தாயா?-இல்லை
தனியுடைமையை எதிர்த்து போராட திராணியின்றி
ஒதுங்கிப் போன மானுடத்தின் கல்லறைக்கும் உன்மொழியில் பேசி எழுப்பிடவும் வந்தாயா?
மின்மினியே மின்மினியே
விளக்கேற்ற வந்தாயா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அடிமையாக்கும் தனிமனிதன் அதிகாரம் தகிடுதத்தம் செல்லாதடா!ஒடுக்குகின்ற தனியுடைமை கொடுமை தனக்கும் முடிவும் உண்டடா!

பச்சை மண்ணோடு சுட்டமண்ணும் ஒட்டாதடா!வறுமையாலே
உடைந்த மனமும் அதுபோலவே என்றும் சேராதடா!அடிமையாக்கும்
தனிமனிதன் அதிகாரம் தகிடுதத்தம் செல்லாதடா!ஒடுக்குகின்ற
தனியுடைமை கொடுமை தனக்கும் முடிவும் உண்டடா!
காசென்றும் பாசத்தோடு ஒன்றுசேர எண்ணாதடா!உழைக்கும்
ஏழையென்றும் பணத்தோடு சமரசம் கொள்ளானடா!
தனியுடைமை என்றும் மனித நேயமே கொள்ளாதடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நட்பான நல்லெண்ண பாலங்களே! நல்லோரின் வழி நடக்கும் ஞானங்களே!

வசந்தகாலங்களே !வாழ்த்தும் கோலங்களே!-வானவில்லின்
வண்ணஜாலங்களே! வர்ண மேளங்களே!- நட்பான நல்லெண்ண பாலங்களே!
நல்லோரின் வழி நடக்கும் ஞானங்களே!
மானுட வாழ்வின் சந்தோசமான மறுபதிப்புக்களே!-அன்பாலே கூடும்
மாலை நேர மந்தார தித்திப்புக்களே!மனித நேயத்தோடு எல்லோரும் வாழும்
மனதிற்கு உகந்த கூட்டுறவான வாழ்வியல் தத்துவங்களே!
வசந்தகாலங்களே !வாழ்த்தும் கோலங்களே!
நட்பான நல்லெண்ண பாலங்களே!
நல்லோரின் வழி நடக்கும் ஞானங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நட்பான நல்லெண்ண பாலங்களே! நல்லோரின் வழி நடக்கும் ஞானங்களே!

வசந்தகாலங்களே !வாழ்த்தும் கோலங்களே!-வானவில்லின்
வண்ணஜாலங்களே! வர்ண மேளங்களே!- நட்பான நல்லெண்ண பாலங்களே!
நல்லோரின் வழி நடக்கும் ஞானங்களே!
மானுட வாழ்வின் சந்தோசமான மறுபதிப்புக்களே!-அன்பாலே கூடும்
மாலை நேர மந்தார தித்திப்புக்களே!மனித நேயத்தோடு எல்லோரும் வாழும்
மனதிற்கு உகந்த கூட்டுறவான வாழ்வியல் தத்துவங்களே!
வசந்தகாலங்களே !வாழ்த்தும் கோலங்க
நட்பான நல்லெண்ண பாலங்களே!
நல்லோரின் வழி நடக்கும் ஞானங்களே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:பொதுவுடைமைக்கு வித்திட்ட எம்பொதுவுடைமை ஆசாண்! இராமலிங்க அடிகளாராம் எம்வள்ளலாரின் நல்லகருத்துக்கள் வாழியவே!

பொதுவுடைமைக்கு முன்னோடியாகவே!
உழுதுண்ண நிலமில்லார்க்கு நிலமளிக்கவேண்டும்!
என்று அன்றே பொதுவுடைமைக்கு வித்திட்ட எம்பொதுவுடைமை ஆசாண்!
இராமலிங்க அடிகளாராம் எம்வள்ளலாரின் நல்லகருத்துக்கள் வாழியவே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:எல்லோரும் எல்லாமும் பெற்று ,இன்புற்று சுகித்து இருப்பது அல்லாது வேறொன்றும் இப்பிரபஞ்சத்தில் தேவையில்லை என் தோழமையே!

வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்கவே !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கவே!
எல்லோரும் எல்லாமும் பெற்று சுகமுடன் வாழ்கவே!
இல்லாமை இல்லாத தேசம் நிலைபெற்று வாழ்கவே!
தனியுடைமை ஒழித்து பொதுவுடைமை வாழ்கவே!
ஏழைகள் இல்லாத உலகம் உயர்ந்தோங்கி வாழ்கவே!
மக்கள் ஜன நாயகம் உயர்ந்து வாழ்கவே!
ஜீவகாருண்யமே ! இம்மையில் மோட்ச வீட்டின் திறவுகோலே!
எல்லோரும் எல்லாமும் பெற்று ,இன்புற்று சுகித்து இருப்பது அல்லாது வேறொன்றும்
இப்பிரபஞ்சத்தில் தேவையில்லை என் தோழமையே!





தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:நாமிருவரும் தோழனாய் மார்க்சீய தத்துவத்தை நடைமுறைப் படுத்தும் மக்கள்ஜன நாயக புரட்சிவழியில் இணைந்து செயல்படுவோம் வா!

முன்னாலே முன்னாலே நீயும் போகாதே -உந்தன்
பின்னாலே நானும் எவரும் உன்னைப் பின்பற்றி வராமலே போயிவிடலாமே!-எனது
பின்னாலே நீயும் எவரும் வராமல் இருந்திடுங்கள்=ஏனென்றால்
என்னாலே உங்களுக்கும் யாருக்கும் வழிகாட்ட முடியாமலே போய்விடலாமே!-அதனாலே
தோழனே!
என்னோடு எப்போதும் இணைந்து நல்லோரின் வழியினிலே நடந்திடுவோம் வா!
என்றும் எப்போதும் நாமிருவரும் தோழனாய் மார்க்சீய தத்துவத்தை நடைமுறைப் படுத்தும்
மக்கள்ஜன நாயக புரட்சிவழியில் இணைந்து செயல்படுவோம் வா!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:திட்டமிடலே மக்கள் ஜன நாயகப் புரட்சியின் வெற்றியாகும்!

திட்டமிடலே நிர்வாகத்தின் மூச்சுக் காற்றே
திட்டமிடலே புரட்சியின் ஊற்றுக் கண்ணே!
திட்டமிடலே நல்லரசின் அரசியல் அமைப்பே!
திட்டமிடலே மக்கள் ஜன நாயகப் புரட்சியின் வெற்றியாகும்!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் கோடி சிந்தனைகள் செய்கின்றேனே!

காதல் தலைவனே !எனது ஆசைத் துணைவனே!- நீயும் எந்தன்
கண்ணுக்குள் பார்வையாக இருப்பதாலே!-காதலி நானும் எந்தன்
கண்ணுக்குள் மைதீட்ட வெறுத்துவிட்டேனே!
ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் கோடி சிந்தனைகள் செய்கின்றேனே!

காதலனே உனைக்கூடி நிற்கும்
காலமெல்லாம் எந்தனுக்கு குளிரானதே!-அன்புக்
காதலனே நீயும் ஊடலுற்ற
காலமெல்லாம் ஏன் தான் தீயானதோ?-இன்று
காதலனே நீயும் வந்தபோதே!இந்த
மாலை நேரம் நானும்
காதலாலே கூடிடவா?
ஊடலாலே விளையாடவா?-இல்லை
உண்மையாக உவத்திடவா?-என்று
ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் கோடி சிந்தனைகள் செய்கின்றேனே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:காம்பு நீக்காத அனிச்சம்பூவைச் சூடாதே !சூடாதே!உன் மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?

!உன்
மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?அதனாலே! நீயும்
சூடாதே !சூடாதே!எஞ்சோடியே என்னோட எளவட்ட காதலியே!
சூடாதே !சூடாதே!
காம்பு நீக்காத அனிச்சம்பூவைச் சூடாதே !சூடாதே!உன்
மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?அதனாலே! நீயும்
சூடாதே !சூடாதே!எஞ்சோடியே என்னோட எளவட்ட காதலியே!
சூடாதே !சூடாதே!
காம்பு நீக்காத அனிச்சம்பூவைச் சூடாதே !சூடாதே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:தனியுடைமைப் பணக்குறிக்கோள் உலகத்திலே பல்லுயிர் ஓம்பும் பொதுவுடைமைத் தத்துவமும் வர மனதின்றி தூங்குதடா!

சமூக அமைப்பே!
எதிர்பார்ப்புகளோடு ஏங்குதடா!
ஏமாற்றம் தான்கொண்டு கலங்குதடா!-தனியுடைமைப்
பணக்குறிக்கோள் உலகத்திலே
பல்லுயிர் ஓம்பும் பொதுவுடைமைத் தத்துவமும் வர
மனதின்றி தூங்குதடா!
அதிதீவிர வாதத்திலே!
அப்பாவி மனித உயிர்களையே-மனித
வெடிகுண்டில் தகர்க்குதடா!
போர்வெறியாலே தேசத்துக்குத் தேசம் சீர்குலைவு ஆனதடா!
மலிவான கற்பாலே
மனிதப் பண்பாடும் மாறுதடா!
பண்பாட்டுச் சீரழிவுகளே!-மண்ணில்
மலிந்துதான் போனதடா!
சமூக அமைப்பே!
எதிர்பார்ப்புகளோடு ஏங்குதடா!
ஏமாற்றம் தான்கொண்டு கலங்குதடா!-தனியுடைமைப்
பணக்குறிக்கோள் உலகத்திலே
பல்லுயிர் ஓம்பும் பொதுவுடைமைத் தத்துவமும் வர
மனதின்றி தூங்குதடா!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-:காதல் தலைவனோ!சொன்னதைச் செய்யும் உத்தமன் அல்லவா?

உந்தன் விழி இமைகளோ? விசிறியாகவே படபடக்கின்றதோ?
உந்தன் கண்களோ! உறங்கிடவே மறுக்கின்றதோ?
மாலையும் வந்ததோ! கூடவும் தலைவனின் நினைவும் வந்தததோ!
மாலைப்பொழுதே! காதல் நோயினையே கூட்டியதோ!
ஆண்மானும் தன்பிணையைத் தழுவியதோ?=களிற்று
ஆனையுமே தன் பிடிதனை தழுவி நின்றனவோ
கார்காலம் வந்தும் காதல்தலைவனின் வரவும் வரவில்லையா?-அப்படியென்றால்
கார்காலம் இன்னும் வரவில்லையே !
காதல் தலைவனோ!சொன்னதைச் செய்யும் உத்தமன் அல்லவா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எனதன்புக் காதலனே!உனது வெப்பமும் விளக்கமும் ஆதவனிடத்தும் உள்ளதே!அப்படியென்றால் ஆதவனும் நீயும் ஒன்றா?கூறிடுவாயே!

காதலனே !
-எனதன்புக் காதலனே!உனது வெப்பமும் விளக்கமும்
ஆதவனிடத்தும் உள்ளதே!அப்படியென்றால்
ஆதவனும் நீயும் ஒன்றா?கூறிடுவாயே!
காதலனே !
-எனதன்புக் காதலனே!
உனது வருகையைத்தான் காணவில்லையே!

காதலனே !
-எனதன்புக் காதலனே!உனது வெப்பமும் விளக்கமும்
ஆதவனிடத்தும் உள்ளதே!
கார்வந்தால் தேர்வருமென்று
கனிவாகவே சொல்லிச் சென்ற காதல் தலைவனே!- நீயும் கூறிய
இனிப்பான அறிகுறிகளே ! தோன்றியதே!
காதலனே !
-எனதன்புக் காதலனே!
உனது வருகையைத்தான் காணவில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவா! நம் நான்கு கண்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் நாளினை எண்ணியே!

காதல் தலைவி நானே! -உனது,எனது
காதல் நினைவுகளையே! நானும் துணையாகவே கொண்டேனே!
காதல் தலைவா!காதல் தலைவா!
நம் நான்கு கண்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் நாளினை எண்ணியே!- காதல்தலைவா!
உனது வலதுதோளும் , வலதுகண்ணும் துடித்ததோ?-காதல்தலைவி!
எனது இடதுதோளும் ,இடதுகண்ணும் துடித்ததோ?
நம் நான்கு கண்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் நாளினை எண்ணியே!
ஆதவன் தந்த அளவில்லாத வெப்பந்தன்னையே!-காதல்தலைவா!
காதல் தலைவி நானே! -உனது,எனது
காதல் நினைவுகளையே! நானும் துணையாகவே கொண்டேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அந்த தேனிசைக் குயிலுக்கும் நன்றிசொல்வேனே!

நன்றிசொல்வேனே! - நானே
நன்றிசொல்வேனே!-சங்க எமது களவு வாழ்க்கையிலே!அந்த
சோலைக்கும் -
நன்றிசொல்வேனே!மலர்வனத்திற்கும்
நன்றிசொல்வேனே!மர நிழல்களின் அன்பு நேசத்திற்கும் - நானென்றும்
நன்றிசொல்வேனே!
பிரிந்து சென்ற எனது காதல் தலைவனே!மீண்டும் வருவான் என்றே
முன்னறிவிப்பாய் குயிலும் கூவிடுதே!அந்த தேனிசைக் குயிலுக்கும்
நன்றிசொல்வேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவன் நீயே அருகில்லை என்றபோதே! வான் நிலவும் தீ நெருப்பாய் ஆனதோ?

காதல் தலைவன் நீயே அருகில்லை என்றபோதே!
வான் நிலவும் தீ நெருப்பாய் ஆனதோ?
தேன்மலரும் முள்ளாய் தைக்கின்றதோ?
மாலைத் தென்றலும் பகையானதோ?
சோலை எழிலும் எதிர்ப்பானதோ?
காதல் தலைவன் நீயே அருகில்லை என்றபோதே!
வான் நிலவும் தீ நெருப்பாய் ஆனதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாடைக் காற்றும் தன்பங்குக்கு வஞ்சனையே செய்ததே! தோழி!

கலந்தனவே!கலந்தனவே!
செம்மண் நன்னீர் போலவே-காதலர் எம்
அன்புடைய நெஞ்சங்களே !கலந்தனவே!
தோழி!
காதல் தலைவன் தலைவி என்னருகினில் இல்லாததாலே!வாடைக்
காற்றும் தன்பங்குக்கு வஞ்சனையே செய்ததே!
கலந்தனவே!கலந்தனவே!
செம்மண் நன்னீர் போலவே-காதலர் எம்
அன்புடைய நெஞ்சங்களே !கலந்தனவே!
தென்றலும் வருத்துதே! தேனிலவும் துன்புறுத்துதே!-வாடைக்
காற்றும் தன்பங்குக்கு வஞ்சனையே செய்ததே! தோழி!
காதல் தலைவன் தலைவி என்னருகினில் இல்லாததாலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:முதுமை அடைந்து விட்டாலும் முதல்காதல்-என்றும் இளமையோடு வாழும் என்று இலக்கியத்தின் கலங்கரையாம் !

முதுமை அடைந்து விட்டாலும் முதல்காதல்-என்றும்
இளமையோடு வாழும் என்று இலக்கியத்தின் கலங்கரையாம் !
எழுத்தாளர் காண்டேகரும் சொன்னாரே!
முதல் காதலிலே அன்பு முத்தமிட்ட காதலியே !அந்த
முதல்காதலிலே என்னை வென்றுவிட்ட தோழியே!
உந்தன் கண்களே!
அழகான தேன் நிறைந்த-அமுத
மலர்க்கண்களோ?- நீயே
உன்கண்ணில் என்னைக் காட்டி
உன்னிடமே என்னை அன்பாலே
அழைத்துக் கொள்ளவேண்டுமே!
முதுமை அடைந்து விட்டாலும் முதல்காதல்-என்றும்
இளமையோடு வாழும் என்று இலக்கியத்தின் கலங்கரையாம் !
எழுத்தாளர் காண்டேகரும் சொன்னாரே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வெண்ணிற மின்னலோ?பொன்னொளி செஞ்சுடர் ஒளிவீசும் வெண்ணிற மின்னலோ?

வெண்ணிற மின்னலோ?பொன்னொளி செஞ்சுடர் ஒளிவீசும்
வெண்ணிற மின்னலோ?
என்னுயிரையே துன்புறுத்தும் அழகிய முத்துக்களோ? நானதையே அறிந்திடேனே!
நானேதென்று அறிந்திடாமலே!அன்புப் பார்வையினாலே தினம் தினம் வருந்துகின்றேனே!
சோதி வட்டமோ? ஆதி அந்தமோ? உந்தன் திருமுகமே!உந்தன் அந்த அழகுமுகமோ!
காலமெல்லாம் எனது உயிரையே கொல்கின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவளின் பார்வை என்ன?மன்மதன் அவனின் மலரின் அம்பு தானோ?

எந்தன் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ?- நான்
பார்க்கும் இடமெல்லாமே! வந்து வந்து தோன்றியே!
எந்தன் இனிய உயிரினையே கொள்
எந்தன் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ?- நான்
பார்க்கும் இடமெல்லாமே! வந்து வந்து தோன்றியே!-
அவளின் அழகிய புருவவில்லே!!-மன்மதன்
அவனின் கைஉள்ள கரும்பு வில்லோ?
அவளின் பார்வை என்ன?மன்மதன்
அவனின் மலரின் அம்பு தானோ?-அவைகளே!
எப்போதுமே என்னுயிர்மேல் வந்துபொருந்தி
அன்பாலே துன்புறுத்தி அனுதினமும்
என்னையே கொல்கின்றதோ? ஊடலாலே வெல்கின்றதோ?கூடலாலே அமுதானதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எந்தன் உயிரின் உள்ளே ! ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!

எந்தன் உயிரின் உள்ளே !
ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!
என்னாளும் திரு நாளாய் ஆக்கிடும் எனதன்புத் தேவதையே!-உன்னையே

எண்ணித் தெளிவுற்றேன் காதலன்பினாலே!காதலியே!
உன்னை நானே எங்குவந்து காண்பேணோ?
எண்ணித் தெளிவுற்றேன் காதலன்பினாலே!காதலனே!
உன்னை நானே எங்குவந்து காண்பேணோ?

காதலிஉந்தன் அழகிய மலராம் இதழ்களே!
காணுமிடமெல்லாம் வந்துதோன்றியே !காணுமினிய
காட்சியாகியே என்னுயிரைக் கொள்ளை கொண்டதே!
காதலிஉந்தன் எழிலாம் கண்களே!அன்றுமலர்ந்த தாமரையோ?
கன்னி உந்தன் வடிவாகவே தோன்றிடக் கண்டேனே!

எந்தன் உயிரின் உள்ளே !
ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!
என்னாளும் திரு நாளாய் ஆக்கிடும் எனதன்புத் தேவதையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இது என்ன காதலரின் இன்பத்து எல்லையா?

என்கண்களே!என்கண்களே!நீகண்டதைத் தானே நானும் கண்டேனே!
என்னெஞ்சமே ! என்னெஞ்சமே ! நீகொண்டதைத் தானே நானும் கொண்டேனே!
என்னெஞ்சமே ! என்னெஞ்சமே !காதல் தலைவன் அவனிடமிருந்தே!-மீண்டுவரவே
ஒருவழியே ! இல்லையா!இது என்ன? காதலன்புத் தொல்லையா?
என்கண்களே!என்கண்களே!காதல் அமுதினைச் சுவைப்பதில் இருந்தே!-திரும்பிடவே
ஒருமாற்று இல்லையா?இது என்ன காதலரின் இன்பத்து எல்லையா?
என்கண்களே!என்கண்களே!நீகண்டதைத் தானே நானும் கண்டேனே!
என்னெஞ்சமே ! என்னெஞ்சமே ! நீகொண்டதைத் தானே நானும் கொண்டேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அன்பு நல்லோர் வழி நின்று நல்லதமிழ் நீயும்பாடிட வேண்டும் இங்கே!

எனக்காகவே நீயொருசொல் சொல்லிடவே வேண்டும்!
அந்தசொல்லும் அமுதான செம்மொழியாம் தமிழாகவேண்டும்!
உண்மையில்லா வார்த்தைகள் இலக்கியமாகி விடாதிந்த உலகிலே!
அன்பு நல்லோர் வழி நின்று நல்லதமிழ் நீயும்பாடிட வேண்டும் இங்கே!

Friday, August 6, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!அன்னப் பறவைகளே !

தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!அன்னப் பறவைகளே !எண்ணப் பறவைகளே!தென்றலின் துணைகொண்டே!தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!
இன்பக்கடலிலே தினம்மூழ்கியே துன்பம் சிறிதுமின்றி சேர்ந்துவாழும் !
இனிமையான இளமையான அன்னப் பறவைகளே!
தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!தென்றலின் துணைகொண்டே!தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!
-தன்காதலனாம் தன் தலைவனையே!
நாளெல்லாம் எண்ணி எண்ணியே! தன்காதலி ஒருத்தி வெண்ணையாகவே உருகி நிற்கின்றாளே!-என்று காதல் தலைவன் அன்புத் துணைவன் அவனிடமே!
தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!அன்னப் பறவைகளே !எண்ணப் பறவைகளே!
தென்றலின் துணைகொண்டே!தூது செல்லுங்களேன்!தூது செல்லுங்களேன்!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி! அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!

சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி!
அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!
நாமெல்லாம் தூங்கிவிட்டால் புதியசமுதாயம் உருவாகிடுமோ?
நல்லோரின் வழிதனிலே நாமொன்றாய் நடந்திடுவோமே!

ஒழுக்கச் சிதைவுகளாலே! நற்பண்பும் போனதடி!
பிரிவினையின் பூசலிலே! மதவெறியும் கூடுதடி!
மனித இனத்தின் குறுகிய பார்வைகோஷ்டிப் பூசலானதடி!
உட்பகையினாலே உயிரிழப்ப்புகளும் ஆனதடி!

அரசியல் மோகத்தினாலே அனுதினமும் அடிதடி நடக்குதடி!
பதவிஆசையினாலே மனித நாகரீகம் தவிடுபொடி ஆனதடி!
பண ஆசையினாலே நல்லோரின் வழிமுறையும் மாறுதடி!
பண்பாடு மாறிப்போனால் நல்லரசு எப்படி உருவாகிடுமோ?

சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி!
அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!
நாமெல்லாம் தூங்கிவிட்டால் புதியசமுதாயம் உருவாகிடுமோ?
நல்லோரின் வழிதனிலே நாமொன்றாய் நடந்திடுவோமே!
தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/கங்கையின் வெள்ளமோ?அவளின் காதலன்பின் கரைபுரண்ட நெஞ்சமே!

காதலாலே! அமுதமென் மொழியாளே! குமுதவிழியாளே!
ஆனந்தக் கண்களிலே! நீர்சிந்திடவே!
உள்ளமோ நெகிழ்ந்து நெகிழ்ந்து உடலும் தளர்ந்து உள்ளாளே!-கங்கையின்
வெள்ளமோ?அவளின் காதலன்பின் கரைபுரண்ட நெஞ்சமே!

ஆஹாஹா!ஹாஹா ஹா! எனதன்புக் காதலியே !என்மனதினில் நின்று நின்று குழைகின்றாளே!தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/

எனதன்புக் காதலியே !என்மனதினில் நின்று நின்று குழைகின்றாளே!
அவள்மனதினில் இன்று இன்று குமுறுகின்றாளே!
காதலாலே காதலாலே! அவளின் குவளைமலர்க் கண்களே!
ஆனந்த நீர்சிந்துதே!ஆஹாஹா!ஹாஹா ஹா!
எனதன்புக் காதலியே !என்மனதினில் நின்று நின்று குழைகின்றாளே!
அவள்மனதினில் இன்று இன்று குமுறுகின்றாளே!

Sunday, August 1, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின் அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?

தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின்
அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?
காதலனே!- அன்புக்
காதலனே!
இன்று வருவானோ? இல்லை நாளை வருவானோ? நானும் அறியேனே1
இல்லை மாற்று ஒன்று சொல்வானோ?-அவனையே
எனது நினைவினில் நிறுத்தி அன்புக்குள் அன்பாகி-
உயிரினில் உயிராகவே!
உள்ளத்தில் பயிராகவே!தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின்
அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/ஏக ஜோதியே ஏக ஜோதியே ஏகஜோதியே காதலாம் பேரின்பஜோதியே!

ஏக ஜோதியே ஏக ஜோதியே ஏகஜோதியே காதலாம் பேரின்பஜோதியே!
ஜோதி ஜோதி ஜோதியே -காதல்
ஜோதி ஜோதி ஜோதியே -விழி
ஜோதி ஜோதி ஜோதியே - மன
ஜோதி ஜோதி ஜோதியே-அன்புப் பார்வை
காண ஜோதியே - இன்ப
காட்சி ஜோதியே -எழில்
வான ஜோதியே -இனிமை
ஆக ஜோதியே -இளமை
யோக ஜோதியே- உணர்வின்
ஆதி ஜோதியே - பருவ
நாத ஜோதியே -காதலரின்
காதல் ஜோதியே -உலகத்தின்
ஏக ஜோதியே ஏக ஜோதியே ஏகஜோதியே காதலாம் பேரின்பஜோதியே!
தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/உழைப்போரே நாமெல்லாம் பெறுவதற்கொ ஒரு பொதுவுடைமைப் பொன்னுலகம் உண்டென்று!

செயலாம் வினையே ஆடவர்க்கு உயிரென்று குறுந்தொகையும் கூறிடுமே!
எம்கடன் பணிசெய்து கிடப்பதே என்று அப்பரடிகளும் சொன்னாரே!செயல்தனையே!
கர்மயோகம் என்றே கீதையும் கூறிடுமே!
செயலையே வினையே வாழ்க்கை என்று புத்தனும் சொன்னானே!
உழைப்பினையே பெரிதாகவே எல்லாத் தத்துவ ஞானிகளும் சொன்னாரே!
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றாரே பொதுவுடைமை ஆசானே!
உழைப்போரே ;உம்மிடத்து இழப்பதற்கு அடிமைவிலங்கு தவிர வேறொன்றுமில்லை என்றானே!
உழைப்போரே நாமெல்லாம் பெறுவதற்கொ ஒரு பொதுவுடைமைப் பொன்னுலகம் உண்டென்று!
மூலதன புத்தகத்தின் படைப்பாளனாம் காரல் மார்க்ஸ் அவனும் சொன்னானே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/நன்றாய் தூய்மையாக்கியே, வெறும் மண்ணையும் க்ண்ணாடியாய்,பொன்னாய், உழைப்போரே மாற்றிடுவாரே!

நன்றாய் நொறுக்கியே,
நன்றாய் அரைத்தே ,
நன்றாய் மாவாக்கியே,
நன்றாய் கூழாக்கியே,
நன்றாய் சூடாக்கியே,
நன்றாய் தூய்மையாக்கியே,
வெறும் மண்ணையும் க்ண்ணாடியாய்,பொன்னாய்,
உழைப்போரே மாற்றிடுவாரே!
பொல்லாத பொறாமையும்,
பொல்லாத அவாவும்,
பொல்லாத வெகுளியும்,
பொல்லாத மனக்குற்றத்தையும்.
என்னாளும் நீக்கியே! தூய்மையாக்கியே!கெட்டமயக்கம்
என்ற இருளையும் நீக்கியே!மெய்யறிவினாலே!
அன்பு மனதினைக் கொண்டே!பகுத்தறிவினாலே கூடிய
அறியும் மெய்யாம் மெய்யறிவால் ஆன தவத்தின் படி நிலையாகுமே!
தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/