சமூக அமைப்பே!
எதிர்பார்ப்புகளோடு ஏங்குதடா!
ஏமாற்றம் தான்கொண்டு கலங்குதடா!-தனியுடைமைப்
பணக்குறிக்கோள் உலகத்திலே
பல்லுயிர் ஓம்பும் பொதுவுடைமைத் தத்துவமும் வர
மனதின்றி தூங்குதடா!
அதிதீவிர வாதத்திலே!
அப்பாவி மனித உயிர்களையே-மனித
வெடிகுண்டில் தகர்க்குதடா!
போர்வெறியாலே தேசத்துக்குத் தேசம் சீர்குலைவு ஆனதடா!
மலிவான கற்பாலே
மனிதப் பண்பாடும் மாறுதடா!
பண்பாட்டுச் சீரழிவுகளே!-மண்ணில்
மலிந்துதான் போனதடா!
சமூக அமைப்பே!
எதிர்பார்ப்புகளோடு ஏங்குதடா!
ஏமாற்றம் தான்கொண்டு கலங்குதடா!-தனியுடைமைப்
பணக்குறிக்கோள் உலகத்திலே
பல்லுயிர் ஓம்பும் பொதுவுடைமைத் தத்துவமும் வர
மனதின்றி தூங்குதடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment