உன்னோடு சேர்ந்தே!அன்புக் காதலியே!
அடுத்த ஆண்டு இதே தேனிலவையே - நானே! தேனே !
எங்கு காண்பேனோ?
மாலை நேர வெண்மேகங்களே !
தூரத்தே முகாமிட்டதோ? தன்முகவரிதனைச் சொல்லியே!-கீழ்
வானத்தே தெளிந்த சிவந்த வானமே!தென்பொதிகை
தானிருந்தே செவிகுளிர்ந்த கானமே!அந்த
பால்வீதி வெளிதனிலே ஒருமுழுமையானதொரு நிசப்தமே-புன்னகையினில்
பார்த்து சிரித்திடும் வெண்மலர் மின்மினிக்களாய் மத்தாப்பு நட்சத்திரங்களையே!
நானும் உன்னோடு தனிமை நீங்கி இனிமையாகவே பார்க்கின்றேனே!இதையே !
உன்னோடு சேர்ந்தே!அன்புக் காதலியே!
அடுத்த ஆண்டு இதே தேனிலவையே - நானே! தேனே !
எங்கு காண்பேனோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment