பச்சை மண்ணோடு சுட்டமண்ணும் ஒட்டாதடா!வறுமையாலே
உடைந்த மனமும் அதுபோலவே என்றும் சேராதடா!அடிமையாக்கும்
தனிமனிதன் அதிகாரம் தகிடுதத்தம் செல்லாதடா!ஒடுக்குகின்ற
தனியுடைமை கொடுமை தனக்கும் முடிவும் உண்டடா!
காசென்றும் பாசத்தோடு ஒன்றுசேர எண்ணாதடா!உழைக்கும்
ஏழையென்றும் பணத்தோடு சமரசம் கொள்ளானடா!
தனியுடைமை என்றும் மனித நேயமே கொள்ளாதடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment