இந்த உலகத்திலே!
எல்லாமே இந்த வவுத்துப் பாட்டுக்குத் தானே!
இல்லாமை இல்லாத பொன்னுலகம் என்றுதான் காண்போமோ?
பசி என்பது இல்லாட்டா இங்கு
பாகுபாடு என்பது இல்லையே!வறுமையில் பட்டினியாலே!
பசித்திருப்பவன் என்றும் பணம்
படைத்திருப்பவன் என்றும் பேதங்கள் ஏனோ?
ஏழ்மையிலே
பசித்திருப்பவன் நடைபாதையில் வாடிப் படுத்திருக்க-பணம்
படைத்தவன் காரினில் பவனிவரும்போது அவன் கண்ணில் இவன் தெரிவதில்லை~
பசிவந்திடப் பத்தும் பறந்துபோகுமடா!
பசிக்கு உணவின்றி துடிப்பவன் வயிறு நிறையும் காலமே!
பொருளெல்லாம் நாட்டின் பொதுவுடைமை ஆகும் காலமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment