காதலி
பூமுடித்திட பூமுடித்திட கட்டுக்கூந்தலே -என்னெஞ்ச
தான்முடிந்திட தான்முடிந்திட முந்தானைதானே!
நிலவெரிக்குது நிலவெரிக்குது சித்திரைமாதமே- மாலை நேர
காத்தடிக்குது காத்தடிக்குது சில்லுனுதானே!
பூமணக்குது பூமணக்குது பாவைக் கூந்தல்தானே!
கிளுகிளுக்குது கிளுகிளுக்குது அத்தான் மனசுதானே!-காதலி
கட்டிவாரா கட்டிவாரா பட்டுத்தாவணி தானே!-கண்ண
வெட்டிபுட்டா வெட்டிப்புட்டா பம்பரக்கண்ணாலே!-காதலி
பூமுடித்திட பூமுடித்திட கட்டுக்கூந்தலே -என்னெஞ்ச
தான்முடிந்திட தான்முடிந்திட முந்தானைதானே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment