சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி!
அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!
நாமெல்லாம் தூங்கிவிட்டால் புதியசமுதாயம் உருவாகிடுமோ?
நல்லோரின் வழிதனிலே நாமொன்றாய் நடந்திடுவோமே!
ஒழுக்கச் சிதைவுகளாலே! நற்பண்பும் போனதடி!
பிரிவினையின் பூசலிலே! மதவெறியும் கூடுதடி!
மனித இனத்தின் குறுகிய பார்வைகோஷ்டிப் பூசலானதடி!
உட்பகையினாலே உயிரிழப்ப்புகளும் ஆனதடி!
அரசியல் மோகத்தினாலே அனுதினமும் அடிதடி நடக்குதடி!
பதவிஆசையினாலே மனித நாகரீகம் தவிடுபொடி ஆனதடி!
பண ஆசையினாலே நல்லோரின் வழிமுறையும் மாறுதடி!
பண்பாடு மாறிப்போனால் நல்லரசு எப்படி உருவாகிடுமோ?
சாதீயம் கொல்லுதடி!~ வறுமை நமைவாட்டுதடி!
அதிகார வர்க்கத்தின் ஒடுக்குதலும் தொடருதடி!
நாமெல்லாம் தூங்கிவிட்டால் புதியசமுதாயம் உருவாகிடுமோ?
நல்லோரின் வழிதனிலே நாமொன்றாய் நடந்திடுவோமே!
தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment