Popular Posts

Monday, November 29, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"சின்னஞ்சிறு குயில்நான்!"

அரண்மனை அந்தப்புரத்தை அல்ல!
உழைக்கும் சமுதாய அந்தப்புரத்தைப் பாடும்
சின்னஞ்சிறு குயில்நான்!
சிம்மாசன சிங்காரத்தைப் பாடும் முகஸ்துதிக் கவிஞன் நானல்ல!
தனியுடைமையாலே !
சீரழிந்த சமூகத்தை சீர்தூக்க சிறப்பாகப் பாடும்
சின்னஞ்சிறு குயில்நான்!
பொதுவுடைமைக்கு
போராளிகளை உருவாக்கும் போர்ப் பாசறையில் புரட்சியைப் பாடும்
சின்னஞ்சிறு குயில்!நான்!





Friday, November 26, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /+-இம்மையில் எல்லோரும் வாழ வழி ""

ஒரு நாள் மலராய் மலர்வேனோ?
உன்கூந்தலில் தேனினை வடிப்பேனோ?
அழகையும் அமுதையும் கலப்பேனோ?
அன்பையும் காதலையும் பெறுவேனோ?
பார்வையில் உலகினைப் படிப்பேனோ?
உன்பருவத்தில் இளமையை அடைவேனோ?
உன்னுயிரினில் உயிரினைக் கொடுப்பேனோ?
உன் துணையினில் புது உலகினைப் படைப்பேனோ?
இம்மையில் எல்லோரும் வாழவழி காண்பேனோ?






தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"உணர்வினில் கலந்திடவே "

நீயும் பேசிட நினைத்தும் மவுனத்திலே பேசாதிருத்தல் போலவே நானும் மவுனத்திலே இருந்திடுவோனோ?
நீயும் பார்த்திட நினைத்தும் என்பார்வைதனையே பாராதிருத்தல் போலவே நானும் எனது இமைதனையே மூடிடுவேனோ?
நீயும் நினைத்திருந்தும் நினைவுக்குள்ளே நினையாதிருத்தல் போலவே நானும் உன் நினைவினையே மறந்திடுவேனோ?
நீயும் உணர்ந்திருந்தும் உணராதிருத்தல் போலவே நானும் உன் உணர்வினில் கலந்திடவே மறுத்திடுவேனோ?





Thursday, November 25, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"ஹலோ "

ஹலோ....!
ஹலோ! ஹாலா..என்ற செர்மன்
வார்த்தையின் பரிணாமம்
தமிழில் வணக்கம் செய்கின்றோம் நண்பர் விருந்தினரை சுற்றத்தாரை
அழைத்து மகிழ்கின்றோம்!அனைவர்
நலங்களையும் விசாரிக்கின்றோம்!
ஹலோ#!
உலக அமைதிதான் சர்வதேச
ஹலோ தினத்தின் சாரமாகுமே!
ஹலோ!
உறவுகளைத் தொடர்கிறது!
நட்பை வலுவாக்குகிறது!
வீண்சண்டைகளை மறப்போம்!உலகினில்
வாழும் சமாதானம் கொள்வோம்!
அடிமையாகவும் இன்றி அடிமைப்படுத்தவும் முயலாத
எல்லோரும் சுதந்திரத்துடன் இல்லாமை இன்றி வாழும் தத்துவம் அரங்கேற்றிடுவோம்!






தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"இந்த முதாலாளித்துவ சமுகம் உள்ளவரை !'

அது என்ன? பெண்களுக்கு மட்டுமே !
இது என்ன?
அன்றாட
நிகழ்வுகளாய் சமூகத்திற்கே வேண்டாத நிகழ்ச்சியாய்
அவர்களுக்காகவே ஸ்டவ் வெடிக்கிறது?
தீப்பிடிக்கிறது!
அன்று !
கற்புக்காக மட்டுமே!
சீதையை ராமன் எரித்தான்!
அவளோ!
நெருப்பிருந்து மீண்டுவந்து
கற்புக்கரசி என்று நீரூபித்தாளாம்!
ஆனால் இன்று!
எங்கள் சகோதரிகளோ!
அன்றாடம்
வரதட்சணைக்காக ,காசிற்காக,கட்டித் தங்கத்திற்காக!
சுடு நெருப்பினில் எரிக்கப் படுகின்றார்கள்!

அய்யகோ !இவர்களோ அந்த சீதையைப் போலவே!
நெருப்பிலிருந்து மீண்டு மீண்டும் வரவில்லையே!
இந்த ஆணாதிக்க சமூகத்தையே எரித்திடவில்லையே! அதிகாரத்தில்
சொத்துடைமை சமூகமாம் இந்த முதலாளித்துவ சமூகம் உள்ளவரை
இந்த அவலங்கள் தொடர்வது நிற்காதே!




Tuesday, November 23, 2010

தமிழ்பாலா -/காதல் /கவிதை /தத்துவம் /-பெண் தான் உலகமடா !"

ஆதிமனிதன் பற்றிக் கூறிடும் மனித வரலாறே! ஏனடா?
ஆதிமனுசி பற்றிக் கூறிடவில்லை?
தாய்வழி சமூகத்தின் வரலாறையே மறைத்ததுதான் யாரடா?
தாயான பெண்ணையே அடிமையாக்கி வைத்துதான் யாரடா?
பெண்ணின்றி மண்ணில்லையே!-சமூகந்தன்னிலே!
பெண்ணின்றி ஏதுமில்லையே!
பெண் தான் தாயடா! பெண் தான் தாரமடா!
பெண் தான் தோழியடா! பெண் தான் துணையடா!
பெண் தான் உலகமடா! பெண் தான் உண்மையடா!




தமிழ்பாலா /காதல்/ கவிதை/ தத்துவம்/ -"பொருளாதார சுதந்திரமே !"

பொருளாதார சுதந்திரமே! முதலாளும் ஆதிக்க
ஒடுக்குமுறை எதிர்த்து !ஆண் பெண் விடுதலையோடு
சமூக விடுதலைக்குப் பயணிக்கும்!



தமிழ்பாலா /காதல்/ கவிதை/தத்துவம்/-"ஆணாதிக்க !"

பெண்!
வாரிசை விதைக்கும் மண்!
அவளை தெய்வம் என்று தலையில் தூக்கிவைத்து ஆடுவதுபோல் நடித்து!
-அவளின்
புனிதத்தைக் காக்கவென்று போலி வேடம் போட்டுக்கொண்டு!
ஆணாதிக்க சமூகமே!
அதிகாரம் கையில்கொண்டு- பெண்ணை
அடுக்களையில் வைத்து கதவினை சாத்தி
அடிமைவிலங்கு பூட்டி அனுதினமும் பெண்கள்
அவர்களைப் போராடவைத்து ரசித்துப் பார்க்கும் ஆணாதிக்க வக்கிரங்கள்!







தமிழ்பாலா /காதல்/கவிதை/தத்துவம்/-" ஆணாத்திக்க " :"

ஆணாதிக்க சமூகத்திலே !
ஆணுக்கு வாழ்க்கை என்றும் எந்த வகையிலுமே!எப்படியுமே வாழ்க்கை என்ற ஆதிக்க அதிகாரத்திலே!
ஆனால் பெண்ணுக்கோ! ஆணாதிக்க சமூகவரைமுறைகளே!
அவளை ஆண்டாண்டு காலமாய் அடிமைபடுத்தும் புரையோடிய தத்துவங்களே!
அவளுக்கு மட்டுமே ஒழுக்கம் என்ற !கட்டுப்பாடே
அவளுக்கு மட்டுமே கற்பு என்ற கவசங்களே!
ஆணுக்கு ஏதுமில்லை கட்டுப்பாடே!-பெண்
அவளுக்கு மட்டுமே சமுகந்தன்னிலே!
அச்சம் ,மடம், , நாணம் பயிர்ப்பு என்ற அடிமை விலங்குகளே!





Saturday, November 13, 2010

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”
தலைப்பு-” என்னிடமே நூலகமே சொன்னதடா!”
என்னிடமே !என்னிடமே!
நூலகமே சொன்னதடா!
என்னைத்தேடி நீயும் வந்தால் !
என்னைத் தேடி நீயும் வந்தால்!
உன்னைத் தேடி உலகம் வருமென்றே!

என்னிடமே என்னிடமே!
நூலகமே சொன்னதடா!

படித்திடுவோம் படித்திடுவோம்-புத்தகத்திலே இந்த
உலகத்தினையே படித்திடுவோம்!-இந்த
உலகத்தினையே புத்தகமாகவே படித்திடுவோம்!
உயர்ந்திடுவோம் உயர்ந்திடுவோம்!-அறிவாலே
உயர்ந்திடுவோம் வெட்டுகின்ற அரிவாளையே
தவிர்த்திடுவோம் தவிர்த்திடுவோம் !பகுத்தறிவாலே
உயர்ந்திடுவோம் உயர்ந்திடுவோம் நல்லோரின் சிம்மாசனமே
அமர்ந்திடுவோம் அமர்ந்திடுவோம்!
உண்மைவழி உணர்ந்திடுவோம் உணர்ந்திடுவோம்!ஊருக்கெல்லாம்
நல்லவழி காட்டிடுவோம் காட்டிடுவோம்!
புத்தகத்தைப் வாசித்திடுவோம் -வாசித்திடுவோம் -படைத்திடுவோம்
புதுவித்தகத்தைப் படைத்திடுவோம் படைத்திடுவோம்!- நூலகம் என்பது
நமக்கெல்லாம் ஓய்வு நேர உலகமடா!-அந்த நூலகம் என்பதே
நம்மை இயக்குவது என்பது இல்லையடா!-அந்த நூலகம் என்பதே
நமது வாழ்க்கை தன்னில் இயக்கமாகுமடா!
நாம் படிக்கின்ற நூல்களாலே மனிதத்தின் நைந்த நேயங்களையே
நாள்தோறும் தைத்திடுவோம் தைத்திடுவோம்!
படித்திடுவோம் படித்திடுவோம் நல்ல நூலகளையே படித்திடுவோம்!
படைத்திடுவோம் படைத்திடுவோம் புதுயுகமே படைத்திடுவோம்!-புத்தகத்தைப்
பதித்திடுவோம் பதித்திடுவோம் நன்னூல்கள் பதித்திடுவோம்!-புது நடைப்
போட்டிடுவோம் போட்டிடுவோம் கோடிப்பூக்களையே மலரவைப்போம்!
எல்லோரும் வாழ்கின்ற பொன்னாட்டையே படைத்திடுவோம் படைத்திடுவோம்! படித்திடுவோம் படித்திடுவோம் சரித்திரத்தைப் படித்திடுவோம்!
படைத்திடுவோம் படைத்திடுவோம் ஒரு சரித்திரமே படைத்திடுவோம்!

என்னிடமே என்னிடமே !
நூலகமே சொன்னதடா!








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

Tuesday, November 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வளர்ந்தபின் துதிக்கின்றதும்”

வளர்வோரையே தடுக்கின்ற சமூகமே-அவரையே
வளர்ந்தபின் துதிக்கின்றதும் நீதானே!
வளர்கின்ற பருவத்தில் இருக்கின்ற-எத்தனையோ
வளர்வோரை நீயும் காணாமல் இருப்பதுவும் ஏனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒன்றுமறியாத அப்பாவித் தொண்டர்களே!”

கொள்கையில்லாத கோடிக் கட்சிகளின்
குப்பைமேட்டுக் கொள்கைகளையே!
கோபுரமாகவே எண்ணிஎண்ணி ஏமாறுகின்ற
கோட்பாடற்ற ஒன்றுமறியாத அப்பாவித் தொண்டர்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்னத முன்னேற்றப் பயணமே!”

எந்தன் தேடலுக்கு எத்தனையோ உலகங்கள் காத்திருக்கின்றதே!
எந்தன் பயணம் பெரிதாகுமே-செல்லும் பாதையோ தூரமாகுமே!-
என்னதுன்பம் வந்தபோதும் முன்னேறிச் சென்றிடுவேனே!
நானும்
மலைப்பின்றி முன்னேறிச் சென்றிடுவேனே!-
மனித வாழ்வு என்றும் முன்னேறிச் செல்லும் உன்னத முன்னேற்றப் பயணமே!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எம் ஆசாண் மார்க்ஸ் அவனின் தத்துவச் சொல்”

இந்தவறுமைத் துன்ப உலகினை மாற்றி அமைப்பதே உழைப்பவர் நமது தலையாய கடமையாகுமே!-எம் ஆசாண் மார்க்ஸ் அவனின் தத்துவச் சொல்
கூழாங்கற்களையும் வைரமாக்கிடுமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காணவேண்டும் புதுயுகமே!”

காலம் என்றே கூறிடுவார்-மனிதர் அதன்
கரைதனை யார்தான் காண்பாரோ?
காலத்தை வென்றிடும் கலைகளையே- நாமே!
காண்கின்ற பாதை கொண்டிடுவோம்?-எதிர்
காலத்தை எதிர் நோக்கும்
காலம்தானே உருண்டோடும்!- நேற்றுப் போன
காலங்களும் திரும்பாதே!-இன்றே இப்போதே இன்றைய
காலத்தை முறையாக்கியே- நாமே உண்மையாம் தத்துவத்திலே!
காணவேண்டும் புதுயுகமே!

Monday, November 1, 2010

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”பலகோடி மக்கள் பசிக்கும் வயிற்றோடு”

இன்றும் இம்மண்ணில் பலகோடி மக்கள் பசிக்கும் வயிற்றோடு
உறங்கச் செல்கின்றாரே!
-இந்தநிலை
தொடரும்வரை
நமதுமுன்னேற்றம் நமதுவெற்றி என்பதிலே!- நாமெல்லாம்
நாள்தோறும் சொல்வதிலே ஒருபொருளுமில்லையே
நாம்மார்தட்டுவதிலே ஒருபயனுமில்லை இல்லையே!
இல்லாமையே பொல்லாமையே அதைக் கொல்லாமலே-துன்பம்
இல்லாத நாட்டினையே காண்பது என்பதுவே கானல் நீராகிடுமே!

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”எனதினிய தோழனே தோழனே!- ”

தோழனே தோழனே!-எனதினிய
தோழனே தோழனே!-மனிதனைவிட ஒருதேவனையே நீதான் கண்டதுண்டா?இல்லை இந்த வையகம்தான் கண்டதுண்டா?
தோழனே தோழனே!-எனதினிய
தோழனே தோழனே!- மனிதத்தைவிட ,மனித நேயத்தைவிட
ஒரு உன்னதத்தையே நீதான் கண்டதுண்டா?
இந்த பிரபஞ்சமும் தான் கண்டதுண்டா?

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதத்தோடு வாழ்வது ஒன்றுதான்”

பிறப்புக்கு முன்னே நீயும் இருந்தது தான் எங்கே எங்கே?
இறப்புக்கு பின்னே நீயும் இருக்கப் போவதுதான் எங்கே எங்கே?-வாழும்
வாழ்வுக்கு மத்தியில் அன்பு ,மனித நேயம் தான் கொண்டு மனிதத்தோடு
வாழ்வது ஒன்றுதான் வாழும்மண்ணிதில் வசந்தமாக்கிடும் இங்கே இங்கே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மையான கின்னஸ் சாதனையாமே!”

காதலிலே
உயர்ந்தசாதிக் காதலென்றும் தாழ்ந்தசாதிக் காதலென்றும்!
உண்மைக் காதல் அன்பினிலே பேதமென்பது இல்லை இல்லையே!
இவ்வுலகிலே
இருப்பாரின் காதலென்றும் இல்லாரின் காதலென்றும் பிரித்துப் பாராமலே!
ஒன்றாக பார்க்கின்ற நல்லோர்கள் சொல்லும் காதலும் ஒன்றே தானடா!
இம்மண்ணில்
இனமொழி நாடு பேதம் பாராமல் வாழ்த்துகின்ற காதலின் நேசத்தையே
ஏற்றுக்கொள்ளும் பக்குவமே இவ்வுலகின் உண்மையான கின்னஸ் சாதனையாமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன் அன்பில்லாது”

நினைப்பதொன்று நடப்பதொன்று நானும் கண்டதில்லையே!-தோழியே
இம்மண்ணிலே உன் அன்பில்லாது,
நீயில்லாது , நானறிந்தது வேறில்லையே!-காதலியே
நினைப்பதுவும் மறப்பதுவும் வாழ்வென்பது இல்லைஇல்லையே!
அனைத்துமாய் அன்புமாய் இன்பத்துள் இன்பமானதே!
உனக்குள்ளே நான் எனக்குள்ளே நீ என்பதெல்லாமே
இவ்வுலகத்தில் கனவல்ல நடக்கின்ற நனவானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மைக் காதலாலே”

என்னிலே இருந்த காதலொன்றையே-காதலியே
உண்மைக் காதலாலே அறிந்துகொண்டேன்!
என்னிலே இருந்த அன்பொன்றையே-காதலியே
உயிரின் கலப்பாலே தெரிந்துகொண்டேன்!
என்னிலே இருந்த உன்னையும் நான் - காதலியே
உன்னிலே இருந்த என்னால் புரிந்து கொண்டேன்!
நம்மிலே இருந்த நம்மையும் நாம்-காதலியே
நம்முணர்வினில் நாமும் உணர்ந்து கொண்டோம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மக்கள் ஜன நாயகம்”

ஓடி ஓடி ஓடியே உட்கலந்த அன்பு சோதியையே மனித நேயத்தையே!
நாடி நாடி நாடியே பகுத்தறிவினில் ஏற்றுக் கொண்டால் இன்பமாகிடுமே!- தனியுடைமைச் சுரண்டலாலே சுரண்டப்பட்ட மனிதர்கள்
வாடி வாடி வாடியே அடிமட்டத்தில் அமிழ்ந்துவிட்ட மாந்தர்கள்
கோடி கோடி கோடியே மண்ணில் எண்ணிறந்த கோடியே!அனைத்து மக்களும்
கூடி கூடி கூடியே ஒற்றுமையில் கூடியே!போராடி போராடி போராடியே!
தேடி தேடி தேடியே உண்மைச் சுதந்திரத்தைத் தேடியே!-மக்கள் ஜன நாயகம்
பாடி பாடி பாடியே எல்லோரும் வாழும் சுவர்க்கம் காணுவார்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பகுத்தறிந்திடும் அறிவாலே ”

அறிந்ததையே பகிர்ந்து கொள்ளடா!
அறியாததையே தெரிந்து கொள்ளடா!
அறியாமையையே நீக்க பாடுபடுடா!-பகுத்தறிந்திடும்
அறிவாலே உலகினையே உயர்த்தடா!-மூட
நம்பிக்கையையே அழித்து உயரடா!-வாழ்வினில் தன்
நம்பிக்கையிலேயே வாழ்ந்து காட்டிடா!