Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அமைதியை தேடிடும் உள்ளங்கள் காதல் அன்புக்குள் சொந்தமானதே!

அந்தியின் வரவுக்கு ஏங்கிடும் மனமே!-தேனிசை குயில்பாட்டு கேட்டிடுதே!
அலைபாயும் மனதிற்கு ஆறுதல் பாட்டானதே!
அருகினில் இளந்தென்றல் தழுவி தேறுதல்சொன்னதே!
அமைதியை தேடிடும் உள்ளங்கள் காதல் அன்புக்குள் சொந்தமானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/செல்லமழையே செல்லமழையே

செல்லமழையே செல்லமழையே கரைந்து போனது மணல்வீடு-தேம்பிய
சின்னஞ்சிறு சிறுமியின் தலை நீவ நீயும் வந்தாயோ?
செல்லமழையே செல்லமழையே !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நிலவின் தரிசனமே நானும் காண இருப்பதாலே!

தூக்கமே தூக்கமே நீயும் தொலைந்து போகமாட்டாயோ?-என்னையும்
தொடர்ந்துவந்து துன்பம்தந்து கொல்லாமல் இருப்பாயே!? சன்னலுக்கு வெளியே
தரிசனம் தரிசனமே ! நிலவின் தரிசனமே நானும் காண இருப்பதாலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பகலில் பகலில் ஒருஜனனமே பறவைகளின் ஓசையிலே

பகலில் பகலில் ஒருஜனனமே
பறவைகளின் ஓசையிலே
உதயம் உதயம் சூரிய உதயமே!தினமும்
உலக உயிர்களின் ஜூவபயணமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அன்பகத்து இல்லாத இல்வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாய் ஆக்குவதுண்டோ?

அந்த கள்ளிச் செடியிலும் அழகிய பூக்களே!சூடுவார் யாருமில்லையே!
இந்த பாறை மணலிலும் ஈரக்கசிவுகளே நீரைக்குடிப்பார் யாருமில்லையே!
எந்தகாலத்திலும் கானல் நீரே தாகத்தைத் தீர்த்ததாய் கண்டாருமுண்டோ?
அன்பகத்து இல்லாத இல்வாழ்க்கை இல்லறத்தை நல்லறமாய் ஆக்குவதுண்டோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆனைய பூனையா மாற்றிடுவாங்க! பூனைய ஆனையா காட்டிடுவாங்க!

ஊரையே உழக்காலே அளப்பாரே வஞ்சகரே!
நாட்டையே நாழியாலே அள்ளுவாரே துரோகிகளே!-இவர்களோ!
ஆனைய பூனையா மாற்றிடுவாங்க!
பூனைய ஆனையா காட்டிடுவாங்க!தனியுடைமை தத்துவத்தில்
ஆளவந்த அரசாங்கத்தின் கைப்பாவை ஆகிடுவாங்க!
இத்தேச மக்களுக்கே எமனாக ஆவாங்க!
மக்கள் வாழ்ந்தாலும் செத்தாலும் இவர்களுக்கு கவலையென்பது இல்லையடா!
மண்ணில் சுய நலமே உருவான ஈனங்கெட்ட மானங்கெட்ட ஜென்மங்களடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சுதந்திரமாய் சுற்றிவருகின்றாள் நிலவுதேவதையே!

வானத்தில் முல்லைமலர்ப் பந்தல் போட்டதாரு?அழகான பெண்
ஆகவந்து பறிக்கப் போகின்றாள் நிலவுதேவதையே!
ஆதாரம் ஒன்று இல்லாமலே !
அந்தரத்தில் ஓடுகின்றாள் நிலவுதேவதையே!-சொந்தம்
ஆன இடம் வானம் என்பதாலே
சுதந்திரமாய் சுற்றிவருகின்றாள் நிலவுதேவதையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/செக்க செக்க விழுங்குறானே! -அதையே செமிக்க செமிக்க இஞ்சி கசாயம் கேட்குறானே!

செக்க செக்க விழுங்குறானே! -அதையே
செமிக்க செமிக்க இஞ்சி கசாயம் கேட்குறானே!
தப்ப செஞ்சவன் தண்டனைய அனுபவிச்சு தாண்டா தீரணுமே!
உப்ப தின்னவன் தண்ணிகுடிச்சு தாண்டா தீரணுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/செம்மொழியாம் தமிழுக்குள் அமுதாவானே!அவனே யாரோ? செந்தமிழிலும் என்மனதிலும் அழகானவன் தானே!!

மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே!-என்
மனமேறி அகம்பார்க்கும் தலைவன்யாரோ?
சிரமேறி பகுத்தறிவில் பழுத்தவனாமே!
செம்மொழியாம் தமிழுக்குள் அமுதாவானே!அவனே யாரோ?
செந்தமிழிலும் என்மனதிலும் அழகானவன் தானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாக்குதனையே காசுக்கு விற்பனைசெய்யும் தேசத்தில் நீதி நேர்மை என்பது கனவாகுமடா!

ஒற்றுமையே உயர் நிலை ஆகுமடா!
அன்புடைமையே உயிர் நிலை ஆகுமடா!
உரிமைதனை விட்டுவிட்டால் இம்மண்ணில்
உயிர்வாழ்ந்து ஒருபயனும் இல்லையடா!
சுதந்திரத்தின் சுவாசத்தையே தொலைத்துவிட்டு-உயிர்
மூச்சென்பது கற்பனையில் தானிருக்குமடா!
வாக்குதனையே காசுக்கு விற்பனைசெய்யும்
தேசத்தில் நீதி நேர்மை என்பது கனவாகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அறிவும் வேண்டுமே! –பகுத்தறியும் அறிவும் வேண்டுமே!!

அறிவும் வேண்டுமே! –பகுத்தறியும்
அறிவும் வேண்டுமே!!

அறிவும் வேண்டுமே –பகுத்தறியும்
அறிவும் வேண்டுமே!
ஒன்றைக் கொடுப்பதற்கும்
ஒன்றை சேமிப்பதற்கும்
அறிவும் வேண்டுமே –பகுத்தறியும்
அறிவும் வேண்டுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இது அடுத்தவர் நலனில் அக்கறை இல்லாத தன்னலமானதொரு துப்புக்கெட்ட உலகமடா

துப்புக்கெட்ட உலகமடா-இது அடுத்தவர் நலனில் அக்கறை இல்லாத தன்னலமானதொரு
துப்புக்கெட்ட உலகமடா
துப்புக்கெட்ட உலகமடா-இது
துப்புக்கெட்ட உலகமடா- நீயும்
இனிமையாகவே இருந்தாலே
உன்னையே விழுங்கிவிடும் உலகமடா!- நீயும்
கசப்பாக இருந்தாலே
உன்னையே துப்பிவிடும் உலகமடா!
துப்புக்கெட்ட உலகமடா-இது
துப்புக்கெட்ட உலகமடா!
துப்புக்கெட்ட உலகமடா-இது அடுத்தவர்
நலனில் அக்கறை இல்லாத தன்னலமானதொரு
துப்புக்கெட்ட உலகமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வறட்டுத் தத்துவம் பேசாதேடா- நீயும் வறட்டுத் தத்துவம் பேசாதேடா-

வறட்டுத் தத்துவம் பேசாதேடா- நீயும்
வறட்டுத் தத்துவம் பேசாதேடா-

வறட்டுத் தத்துவம் பேசாதேடா- நீயும்
வறட்டுத் தத்துவம் பேசாதேடா-
பசியோடு வந்தவனிடம் –அவனின்
பசிதனையே போக்குதல் விட்டு நீயும் வெட்டித் தனமாகவே!
வறட்டுத் தத்துவம் பேசாதேடா- நீயும்
வறட்டுத் தத்துவம் பேசாதேடா-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வண்ணத் தமிழே முத்தம்தா வாழும் அன்பே முத்தம் தா!

வண்ணத் தமிழே முத்தம்தா
வாழும் அன்பே முத்தம் தா


காதல் கனியே முத்தம்தா
கன்னிக் கரும்பே முத்தம்தா
வண்ணத் தமிழே முத்தம்தா
வாழும் அன்பே முத்தம் தா

விலையில்லையே விலையில்லையே –உன் முத்தம் தனக்கு
விலையில்லையே!-காதலியே!
உன் முத்தம் தனக்கு
விலையில்லையே!-
முத்தமழை பொழியும் கடல் அலையாகியே!
முத்தே! அமுதமே முத்தம் தந்திடுவாயே!அன்புலகே! நீயும்
இளமை,இனிமை முத்தம் ஈந்திடுவாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இல்லாளே அகத்திலிருக்க -மண்ணில் இல்லாதது ஒன்றில்லையே!-

இல்லாளே அகத்திலிருக்க -மண்ணில்
இல்லாதது ஒன்றில்லையே!-
இல்லாளே அகத்திலிருக்க -மண்ணில்
இல்லாதது ஒன்றில்லையே!-அவளும்
நல்லாளாய் இருந்துவிட்டாலே
நாடோறும் நலமாகிடுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பூபாளம் பாடி நீயும் புதுக்கவிதை தருகின்ற செவ்விதழோ?

புன்சிரிப்பினையே காட்டி என்னையே வீழ்த்துகின்ற இள நிலவோ?
காதலி நீயே!
நெஞ்சிற் கவலையெல்லாமே!
நீங்கிடவே திருமுகத்தினிலே!
புன்சிரிப்பினையே காட்டி என்னையே வீழ்த்துகின்ற இள நிலவோ? -தினம்
பூபாளம் பாடி நீயும் புதுக்கவிதை தருகின்ற செவ்விதழோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/செம்மொழியில்!

செம்மொழியில்
நாவார உண்ண எம்மழலை
நன்மகனாய் பிறந்தாயோ?
தேவாரப் பாகிருக்கு!-கண்ணே
திருவாசக தேனிருக்கு!- நீயும் செம்மொழியில்
நாவார உண்ண எம்மழலை
நன்மகனாய் பிறந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலியோய்!மாமாவோய்! மாமாவோய்!

காதலியோய்!
மாமாவோய்!
மாமாவோய்!
பல்லாங்குழியாய் இங்கேதான் நானிருக்கேன்
மாமாவோய்!
மாமாவோய்!
பாண்டியும் வெளையாடவே வாரீகளா!
மாமாவோய்!
மாமாவோய்!
காதலியோய்!
காதலியோய்
சடுகுடு கோடுந்தான் போட்டாச்சு-காதலியோய்! அடி
கபடி நீயும் வெளையாட வாரியாடி!
காதலியோய்!
காதலியோய்

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொன்னதெல்லாம் மறந்தாயோ?-என்னைச் சோதனை செய்யத் துணிந்தாயோ?

சொன்னதெல்லாம் மறந்தாயோ-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாயோ?
காதலியே நீயும்
சொன்னதெல்லாம் மறந்தாயோ?-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாயோ?
[சரணம்]

வருவாய் வருவாய் என்றும் நித்தம்வரும்
வழிமேல் விழியாய் நின்றேன் தோழி!
ஒரு நாளாய் ஒருஆண்டாய் ஒருயுகமாய் போனதே!-மனிதில் நீ
ஒருத்தி இருத்தி காதலன்பும் புன்னகையானதே!

காதலியே நீயும்
சொன்னதெல்லாம் மறந்தாயோ?-என்னைச்
சோதனை செய்யத் துணிந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சுதந்திரம் வாழ்கவே!-உரிமைச் சுதந்திரம் வாழ்கவே!-

சுதந்திரம் வாழ்கவே!-உரிமைச்
சுதந்திரம் வாழ்கவே!-

சுதந்திரம் வாழ்கவே!-உரிமைச்
சுதந்திரம் வாழ்கவே!-
[அனுபல்லவி]

கடலலை போல வான்
தந்த ஞானம் போல
எல்லோரும் போற்றும்
பொதுவுடைமை போல

சுதந்திரம் வாழ்கவே!-உரிமைச்
சுதந்திரம் வாழ்கவே!-
[சரணம்]

மக்கள்சக்தி வளர்ஜோதியாய்
ஜன நாயகம் வாழ்ந்திடவே!
வாழும் சுதந்திரத்தின்
சுவாசம் நிலைக்களமாய்
எல்லோரும் வாழும் நல்
சமத்துவம் உள்ளளவும்

சுதந்திரம் வாழ்கவே!-உரிமைச்
சுதந்திரம் வாழ்கவே!-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அமுதே காதலை நீயும் சொல்ல வல்லாயோ?

அமுதே!
காதலை நீயும்
சொல்ல வல்லாயோ?

காதலை நீயும்
சொல்ல வல்லாயோ?-அமுதே
காதலை நீயும்
சொல்ல வல்லாயோ?

நானும்
கரைகின்றேன்! காதலைவேண்டிக்
கரைகின்றேன்!-இல்லையெனில்
இவ்வையத்தில் மானிட பிறப்பெடுத்து
என்னதான் பயனடியோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/!உன்விழியினிலே மகிழ்கின்றேன் மகிழ்கின்றேன் ! காதலியே !காதலியே! வாழ்கின்றேன்!வாழ்கின்றேன் உன்னெஞ்சினிலே நானும் !

!உன்விழியினிலே
மகிழ்கின்றேன் மகிழ்கின்றேன் !

காதலியே !காதலியே!
வாழ்கின்றேன்!வாழ்கின்றேன் உன்னெஞ்சினிலே நானும்
வாழ்கின்றேன்!வாழ்கின்றேன்!-என்றும்
இருக்கின்றேன்! இருக்கின்றேன்!உன்னுயிரினிலே
இருக்கின்றேன்! இருக்கின்றேன்!- நாளும்
மகிழ்கின்றேன் மகிழ்கின்றேன் !உன்விழியினிலே
மகிழ்கின்றேன் மகிழ்கின்றேன் !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாழ்வினிலே சவாலுக்கு நீயும் சந்தோசப்படு!-

வாழ்வினிலே
சவாலுக்கு நீயும் சந்தோசப்படு!-
சந்தோசப்படு நீயும் சந்தோசப்படு-வாழ்வினிலே
சவாலுக்கு நீயும் சந்தோசப்படு!-அதுதானே
ஒளிந்து கிடக்கும் உனது திறமைகளை
ஊருக்கு உலகுக்குத் தெரிவிக்குமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனிதரெல்லாம் சமமென எண்ணி உயரும் பாதை செல்லடா!

மனிதரெல்லாம் சமமென எண்ணி உயரும் பாதை செல்லடா!


மனித நேயம் கொள்ளடா ! மனித நேயம் கொள்ளடா
மனிதா நீயும் மனித நேயம் கொள்ளடா!
மதத்திற்காகவே மனிதத்தையே நீயும் தொலைத்து கொள்ளாதே!
மதவெறியாலே உன்சந்ததியையும் அழித்துச் சாகாதே!!
அன்பாலே அனைவரையும் அணைத்துவாழும் தத்துவம் மறக்காதே!
மனிதரெல்லாம் சமமென எண்ணி உயரும் பாதை செல்லடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தழுவவந்த தென்றல் காற்றே

தழுவவந்த தென்றல் காற்றே

தவமிருக்குது தவமிருக்குது பட்டுப் பூச்சிகளே
தழுவவந்த தென்றல் காற்றே

காற்றே காற்றே மெல்லவீசு
காற்றே காற்றே மெல்லவீசு
காணும் கிளைகளி லெல்லாமே-அசைந்து
ஆடும் இலைகளி லெல்லாமே
தவமிருக்குது தவமிருக்குது பட்டுப் பூச்சிகளே!தழுவவந்த தென்றல் காற்றேகாற்றே காற்றே மெல்லவீசுகாற்றே காற்றே மெல்லவீசு

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/குழந்தைகள் தினமாம் இன்று

குழந்தைகள் தினமாம் இன்று

இன்னும் இன்றும் கல்லுடைக்கும் சிறார்களே
குழந்தைகள் தினமாம் இன்று
குழந்தைகள் தினமாம் இன்று

எல்லோர்க்க்கும் கல்வி சட்டமானால் என்ன?
அதனையே நடைமுறை ஆக்குவது ஆரு? நாம்தானே!

குழந்தைகள் தினமாம் இன்று
குழந்தைகள் தினமாம் இன்று-கல்குவாரியில்
இன்னும் இன்றும் கல்லுடைக்கும் சிறார்களே

குவாரியில் இன்னும் இன்றும் கல்லுடைக்கும் சிறார்களே!
குடிக்கக் கஞ்சிக்காகவே குழந்தை உழைப்பாளிகளே!
கல்வி இன்றி காலத்தை துன்பத்தில் ஓட்டும் ஏழைக்குடும்பங்களே!
எல்லோர்க்க்கும் கல்வி சட்டமானால் என்ன?
அதனையே நடைமுறை ஆக்குவது ஆரு? நாம்தானே!

Friday, June 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் நெஞ்சினில் தூங்கியதோ? அன்புருவில் காற்றே! அந்த மூங்கில் காட்டினிலே குயில்பாடிடும் பாடலைக் கேட்டே!

நெஞ்சினில் தூங்கியதோ? அன்புருவில் காற்றே!
அந்த மூங்கில் காட்டினிலே குயில்பாடிடும் பாடலைக் கேட்டே!
கரைந்து உருகியதோ? இளந்தென்றல் காற்றே!
கண்ணில் மயங்கியதோ? புத்திளமைக் காற்றே! -காதல்
நெஞ்சினில் தூங்கியதோ? அன்புருவில் காற்றே!
அந்த மூங்கில் காட்டினிலே குயில்பாடிடும் பாடலைக் கேட்டே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மழைவேண்டும் மழைவேண்டும் அதனாலே! மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-!

உச்சி வெயிலடியோ! ஓங்கார வெப்பமடியோ!
பசிமறந்து பேசி மகிழவே மரத்துப் பறவைகளே கூடியாச்சா? - நிழல்தரும் மரத்தாலே!
பறந்து பறந்து ஓய்ந்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைச்சாச்சா?
மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-எல்லோர்
மனதும் உடலும் நனைந்திடவே
மழைவேண்டும் மழைவேண்டும் அதனாலே!
மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-!
மர நிழல் மட்டுமல்ல மரம்மாசு இல்லாத உலகத்தையும் உருவாக்குமே!அதனாலே
மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பாறைமனமோ?பாறைமனமோ? உன்மனம் என்னடி பாறைமனமோ?

பாறைமனமோ?பாறைமனமோ?
உன்மனம் என்னடி பாறைமனமோ?
காற்றுவந்து அழுதும் கரையாது இருக்க என்ன?
பாறைமனமோ?பாறைமனமோ?
உன்மனம் என்னடி பாறைமனமோ?
கண்ணின் கடைக்கண் பார்வையுன் நெஞ்சினையே இன்னும்தொட வில்லையோ?
காதல் பாடம் சொன்ன விழிக்குள் என்றும் உன்விழி சேர்ந்திடவில்லையோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வீணாகவே தூங்காதீங்க-நீங்களும் விவரமில்லாமலே தூங்காதீங்க!

சோம்பேறி இலைகளே!
சோப்ளாங்கி கிளைகளே!
வீணாகவே தூங்காதீங்க-நீங்களும்
விவரமில்லாமலே தூங்காதீங்க!
விடிந்தபின்னும் இந்த குளிர்காலம் தன்னிலே!
வீணாகவே தூங்காதீங்க-நீங்களும்
விவரமில்லாமலே தூங்காதீங்க!
சோம்பேறி இலைகளே!
சோப்ளாங்கி கிளைகளே!சுறுசுறுப்பினையே! நீங்களும்
சோம்பலில்லாத எறும்புக் கூட்டத்தையே
பார்த்து நீங்களும் கற்றுக் கொள்ளுங்களேன்!

Saturday, June 12, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தூவிடும் தூவிடும் பூமழையே! எனது இதயத்தையும் சேர்த்து நனைத்திட வந்ததோ?

தூவிடும் தூவிடும் பூமழையே!
எனது இதயத்தையும் சேர்த்து நனைத்திட வந்ததோ?
கிழிந்த குடைக்குள்ளே தூவிடும் தூவிடும் பூமழையே!
எனது இதயத்தையும் சேர்த்து நனைத்திட வந்ததோ?
ஒரு குடைக்குள்ளே இருவரும் நனைந்திடும் வேளையில்
ஓராயிரம் கோடி கனவுகள் தந்திடும் தேன்மழையே!
தூவிடும் தூவிடும் பூமழையே!
எனது இதயத்தையும் சேர்த்து நனைத்திட வந்ததோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஏ!!ஏ! வண்ணத்துப் பூச்சியே! - நீயென்ன? பூக்களில் தேன்குடிக்க வந்த காதல் திருடனோ?

ஏ!!ஏ! வண்ணத்துப் பூச்சியே!
ஏ!!ஏ! வண்ணத்துப் பூச்சியே! - நீயென்ன?
பூக்களில் அமர்ந்து வண்ணம் தீட்டிடும் ஓவியனோ?-இல்லை
ஏ!!ஏ! வண்ணத்துப் பூச்சியே!
ஏ!!ஏ! வண்ணத்துப் பூச்சியே! - நீயென்ன?
பூக்களில் தேன்குடிக்க வந்த காதல் திருடனோ?
ஏ!!ஏ! வண்ணத்துப் பூச்சியே!
ஏ!!ஏ! வண்ணத்துப் பூச்சியே!உனது
நெடுந்தூரப் பயணமே-உனது
தேடலில் தொடர்கின்றதோ?பிரபஞ்ச ரகசியமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இரவுமுழுவதும் காதல் குயில்கள் அழுததாலே!சோகத்தில் இரவும் கரைந்து வெளுத்ததோ?

இரவுமுழுவதும் காதல் குயில்கள் அழுததாலே!சோகத்தில்
இரவும் கரைந்து வெளுத்ததோ?-காதல்
உறவும் உறைந்து மறைந்ததோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஏழ்மையிலே நீயும் தலைவிரித்து ஆடுகின்றாயோ? ஏ! தென்னமரமே! ஏ! தென்னமரமே!

ஏ! தென்னமரமே! ஏ! தென்னமரமே!
-எங்க
ஏழை கூலி ஜனங்களப் போல-தலையில
எண்ணை வெக்க காசின்றி
ஏழ்மையிலே நீயும் தலைவிரித்து ஆடுகின்றாயோ?
ஏ! தென்னமரமே! ஏ! தென்னமரமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நானொரு கவிஞனே ! எனக்கு ஓடையின் சல சலப்பு உவகை தந்ததே!

நானொரு கவிஞனே !
எனக்கு ஓடையின் சல சலப்பு உவகை தந்ததே!
எனக்கு பறவையின் சிறகில் காணும் வியத்தகு வண்ணங்கள் கோடி கற்பனையானதே!இயற்கை
எனக்கு தனிக்கனவுலகினை தந்து மகிழ்வானதே!
எனக்கு ஓர் ஒடிந்த கிளையும் கவிதையானதே!-எனக்கு
ஓர் சிதைந்த மலரும் கருவானதே!-எனக்கு
ஒரு பழுத்த இலையும் படைப்பானதே--எனக்கு
ஒருவாடின முகமும் கலையானதே--எனக்கு
ஒரு தேய்ந்த குரலும் ரசனையானதே!--எனக்கு
ஒருசோக ஓலமும் தத்துவமானதே!--எனக்கு
ஒருபெருமூச்சும் பிரளயமானதே!--எனக்கு
ஒருபுன்முறுவலும் காதலானதே!--எனக்கு
ஒரு கண்சிமிட்டலும் கவிதையானதே!
நானொரு கவிஞனே !
எனக்கு ஓடையின் சல சலப்பு உவகை தந்ததே!
எனக்கு பறவையின் சிறகில் காணும் வியத்தகு வண்ணங்கள் கோடி கற்பனையானதே!இயற்கை
எனக்கு தனிக்கனவுலகினை தந்து மகிழ்வானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் பிரளயத்தையே எந்த அணையாலும் தடுத்திடத்தான் முடியுமோ?

கண்ணே! காதல் கவிதையின் இலக்கணத்தையே -ஒரு சொல்லாலே தானே
சிறைசெய்திட முடியுமோ? உன்விழியாலே இழுத்திடும் ஜீவ உணர்வினையே
எந்த விலங்காலும் கட்டிடத்தான் முடியுமோ?-காதல் பிரளயத்தையே
எந்த அணையாலும் தடுத்திடத்தான் முடியுமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உன்விழிகளிலும் அன்புமொழிகளிலும் உன்ஸ்பரிசத்திலும்-என்னமாய் என்னமாய் மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!

மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!சிறகசைக்கும்
பறவையிலும் -அதன்
விழிகளிலும் நெகிழும் அழகிலுமே-என்னமாய்
மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!உன்விழிகளிலும்
அன்புமொழிகளிலும் உன்ஸ்பரிசத்திலும்-என்னமாய் என்னமாய்
மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/எங்கே போச்சு? எங்கே போச்சு? மானாவாரி பயிர்களெல்லாமே~!

கனவாகிப் போச்சா?இன்று கனவாகிப் போச்சா?
எங்கே போச்சு? எங்கே போச்சு? மானாவாரி பயிர்களெல்லாமே~!
எங்கே போச்சு? எங்கே போச்சு?
கனவாகிப் போச்சா?இன்று கனவாகிப் போச்சா?
எங்கே போச்சு? எங்கே போச்சு?
சந்தோசத்தில் பாடும் குருவிகள் சத்தமெல்லாமே!
எங்கே போச்சு? எங்கே போச்சு?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் வீச்சே! காதல் வீச்சே!-இந்த காதலர் மனத்தையும் மயக்கிட வந்த காதல் வீச்சே! காதல் வீச்சே!

காற்றின் பேச்சே!
காற்றின் பேச்சே!-அந்த
மரத்தின் மவுனத்தையும் கலைத்திட வந்த
காற்றின் பேச்சே!
காற்றின் பேச்சே!
காதல் வீச்சே!
காதல் வீச்சே!-இந்த
காதலர் மனத்தையும் மயக்கிட வந்த
காதல் வீச்சே!
காதல் வீச்சே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் அன்பின் ஆழ்மன உணர்வுகளே !ஆத்மார்ந்த எண்ணங்களே!

ஆழ்மன உணர்வுகளே !ஆத்மார்ந்த எண்ணங்களே!என்
மனப்பரப்பினில் அமர்ந்து மவுனமாய் பேசிடும்!காதல் அன்பின்
ஆழ்மன உணர்வுகளே !ஆத்மார்ந்த எண்ணங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மந்தாரை முகத்தில் மஞ்சள் பூசி மகிழ்ந்திடும் அந்தி வானமே !அந்தி வானமே!

அந்தி வானமே !அந்தி வானமே!-அந்த
அந்தி மந்தாரை முகத்தில் மஞ்சள் பூசி மகிழ்ந்திடும்
அந்தி வானமே !அந்தி வானமே!
இங்கு வந்தாளே இனிய காதல் தேவதையே -காதல்
பொங்கத் தந்தாளே அன்பு நெஞ்சினை தேன்மொழியாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தொலைந்தனவே !தொலைந்தனவே! இந்த இனிய புல்லாங்குழலின் சப்தஸ்வரங்களே!

இந்த இனிய புல்லாங்குழலின் சப்தஸ்வரங்களே!
அந்த வெட்டப்பட்ட மூங்கிலின் குருத்துக்களிலே!தொலைந்தனவே !தொலைந்தனவே!
இந்த இனிய புல்லாங்குழலின் சப்தஸ்வரங்களே!
அந்த வெட்டப்பட்ட மூங்கிலின் குருத்துக்களிலே!தொலைந்தனவே !தொலைந்தனவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தேங்கியது தேங்கியது நீர்த்திவலையே!அதிலே முகம்பார்க்க வந்தது முகம்பார்க்க வந்தது வெண்ணிலவே!

ஓய்ந்தது ஓய்ந்தது பருவமழையே!
தேங்கியது தேங்கியது நீர்த்திவலையே!அதிலே
முகம்பார்க்க வந்தது முகம்பார்க்க வந்தது வெண்ணிலவே!
ஓய்ந்தது ஓய்ந்தது பருவமழையே!
தேங்கியது தேங்கியது நீர்த்திவலையே!அதிலே
முகம்பார்க்க வந்தது முகம்பார்க்க வந்தது வெண்ணிலவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/விடிந்தபின்னும் பிரிந்திட மறுக்கும் மவுனமென்ன? பனியே!இளம்பனியே !

விடிந்தபின்னும் பிரிந்திட மறுக்கும்
மவுனமென்ன?
பனியே!இளம்பனியே !
பனியே!இளம்பனியே !
இலைகளில் தவமிருக்கும்
பனியே!இளம்பனியே !விடிந்தபின்னும் பிரிந்திட மறுக்கும்
மவுனமென்ன?
பனியே!இளம்பனியே !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தூங்கும் பயிர்களையும் விழித்திடவே எழுப்ப வந்தது வந்தது ஆதவனே !

சென்றது சென்றது -விடைபெற்றுச் சென்றது சென்றது வெண்ணிலவே!
வந்தது வந்தது ஆதவனே !
தூங்கும் பயிர்களையும் விழித்திடவே எழுப்ப
வந்தது வந்தது ஆதவனே !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்பு அன்பான சிணுங்களிலே பின்செல்லும் மனசு -இளமனசு-

மனசு -இளமனசு-கொலுசு
சின்னக் சின்னக் கொலுசு அன்பு அன்பான
சிணுங்களிலே பின்செல்லும்
மனசு -இளமனசு-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ரோஜாக்களே !சிவந்த ரோஜாக்களே!

ரோஜாக்களே !சிவந்த ரோஜாக்களே! நேற்று உங்களையே நானும்
பார்த்திடவில்லை என்ற கோபத்தில் வாடி நிற்கும் ரோஜாக்களே !
ரோஜாக்களே !சிவந்த ரோஜாக்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பஞ்சுகளோ? வானில் பறந்திடும் வெண்ணிளம் பஞ்சுகளோ?

பஞ்சுகளோ? வானில் பறந்திடும் வெண்ணிளம் பஞ்சுகளோ?-காற்றோடு போராடும்
கொக்குகளோ? பாய்ந்து பறந்திடும் சின்ன சின்ன விமானங்களோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ மலர்களே!உங்கள் மவுனத்திற்கும் ஒருமொழி உண்டோ?

இந்த மாலையில் மவுனமாகும் மலர்களே!உங்கள்
மவுனத்திற்கும் ஒருமொழி உண்டோ?
மலர்களே! மலர்களே!
அந்தி இரவினில் மலர்ந்து விடிகாலை சிரித்து
இந்த மாலையில் மவுனமாகும் மலர்களே!உங்கள்
மவுனத்திற்கும் ஒருமொழி உண்டோ?அதுவே வாழ்வின்
மாற்றத்திற்கும் பதிலாகும் அன்றோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/!கவிதையே! வசந்த காலம் எழுதும் கிழக்கு வானின் கவிதையே!

!கவிதையே!
வசந்த காலம் எழுதும் கிழக்கு வானின் கவிதையே!
கவிதையே!
விடியல் கவிதையே!கவிதையே!
வசந்த காலம் எழுதும் கிழக்கு வானின் கவிதையே!
கவிதையே!
விடியல் கவிதையே!கவிதையே!

Friday, June 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/!வசந்தம் வந்ததோ? !பூமரமாய்? பூமிக்கு குடைபிடித்திட வந்ததோ?

வசந்தம் வந்ததோ? !வசந்தம் வந்ததோ?
!பூமரமாய்?
பூமிக்கு குடைபிடித்திட வந்ததோ?
வசந்தம் வந்ததோ? !வசந்தம் வந்தததோ?
மண்ணின்
புன்னகையை ரசித்துப் பார்க்க வந்ததோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உங்கள் குளிருக்குப் போர்வை தந்திடவே நானும் மறந்தே மனித நேயமற்றுப் போனேனோ?

பூமரங்களே! பூமரங்களே! பனிமூடிய
குளிர்காலமோ?இது
குளிர்காலமோ?பூமரங்களே!
பூமரங்களே! நீங்களும் கூனிக் குருகியே
இலைகளைப் போர்த்தி தூங்குகின்றீரோ?
உங்கள் குளிருக்குப் போர்வை தந்திடவே நானும் மறந்தே மனித நேயமற்றுப் போனேனோ?
பூமரங்களே! பூமரங்களே! பனிமூடிய
குளிர்காலமோ?இது
குளிர்காலமோ?பூமரங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இரவே !இரவே! வா!வா! நீயும் ! இரவே !இரவே! வா!வா! நீயும் !

இரவே !இரவே! வா!வா! நீயும்
இரவே !இரவே! வா!வா! நீயும் !
சன்னல் நிலவே உன்னோடும் என்னோடும் பேசிட வேண்டும் அதனாலே
இரவே !இரவே! வா!வா! நீயும் !
இரவே !இரவே! வா!வா! நீயும் !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வா வா நீயும் இளைஞனே! நல்லதையே நாமும் செய்திடவே! நடந்திடுவாம் !-இப்போதே!

வா வா நீயும் இளைஞனே! நல்லதையே நாமும் செய்திடவே! நடந்திடுவாம் !-இப்போதே!
நேற்று நீயும் தூங்கி சோம்பி இருந்திருக்கலாமே!
வா வா நீயும் இளைஞனே!
எதிர்கால நாளைகூட வராமலோ! காணாமலோ! போகலாம் இளைஞனே! அதனாலே!
இன்றே செயலாம் இனிக்கும் நல்ல இலந்தைகளை இப்போதே செயலாக்கி
இக்கணமே சுவைத்திடுவோம் வா வா நீயும் இளைஞனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மூன்றாம் பிறையாய்-நீல வானிலே நீந்தும் வெண்கொக்கின் சிறகுகளே!

மூன்றாம் பிறையாய்-நீல
வானிலே நீந்தும் வெண்கொக்கின் சிறகுகளே!
கொக்கின் சிறகுகளே!-வெண்
கொக்கின் சிறகுகளே!
மூன்றாம் பிறையாய் மூன்றாம் பிறையாய்-நீல
வானிலே நீந்தும் வெண்கொக்கின் சிறகுகளே!எத்தனை எத்தனை
மூன்றாம் பிறைகளே !அத்தனையும் காணும் அற்புதங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மழைவரும் வருகையை தெரிவிக்கும் தூதுவர்களே! அழகிய மின்மினிச் சிறகுகளே!

அழகிய மின்மினிச் சிறகுகளே!
இந்த
அந்திமழைக் காலத்திலே சுகமாய் பறந்திடக் கூசி நிற்கும்
மழைவரும் வருகையை தெரிவிக்கும் தூதுவர்களே!
அழகிய மின்மினிச் சிறகுகளே!
-இந்த
அந்திமழைக் காலத்திலே சுகமாய் பறந்திடக் கூசி நிற்கும்
அழகிய மின்மினிச் சிறகுகளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/என்னோடு காதல் கவிதையே பேசுகின்றாயோ?

அழகிய ரோஜா மலரே ! மலரே!
என்னோடு காதல் கவிதையே பேசுகின்றாயோ?
அழகிய ரோஜா மலரே ! மலரே!
பழகிடும் மாலை இளமைச் சன்னலோரம் நீயே நின்று
என்னோடு காதல் கவிதையே பேசுகின்றாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் கவிதைகளே கோடி கோடியாகவே!

காதல் கவிதைகளே கோடி கோடியாகவே!
அந்திப்பூவின் பொன்முகங்களிலே!-தங்க வண்டுகளே!
ஆனந்தமாய் எழுதிடும் -காதல் கவிதைகளே கோடி கோடியாகவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தூங்கும் பூக்களையும் துயிலெழச் செய்யும் வண்ணத்துப் பூச்சிகளே !

வண்ணத்துப் பூச்சிகளே!
வண்ணத்துப் பூச்சிகளே! வானவில்லையும் வெல்லுகின்ற
வண்ணங்களையே குழைத்துப் பூசிசிரித்திடும் வண்ணத்துப் பூச்சிகளே !-தூங்கும்
பூக்களையும் துயிலெழச் செய்யும் வண்ணத்துப் பூச்சிகளே !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அந்தி மழைஇரவின் சோக கவிதைகளாகவே!

அந்தி
மழைஇரவின் சோக கவிதைகளாகவே!
மந்தார மழைவரும் இளமாலை வேளையிலே!
மடிந்தன மடிந்தன ஈசலகளே!-அந்தி
மழைஇரவின் சோக கவிதைகளாகவே!-மின்மினிகளும்
மறைந்து ஒளிந்து போயினவே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

கடல்மணல்களின் விழிகளில் ஈரம் ஏனோ?

கடல்மணல்களின் விழிகளில் ஈரம் ஏனோ?-காதலி உந்தன்
கால்பதித்த சுவடுகளையே அழித்திடும் அலைகளின்
கொடுமைகள் செய்திடும் செயலினால் தானோ?

Sunday, June 6, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் நிலாவே!காதல் நிலாவே!நீயே நீயே! பிரபஞ்சத்திலே இணைந்து சிறப்புறவே நீயும் வந்தாயோ?

இரவு நிலாவே இரவு நிலாவே நீயே நீயே !
விழிகளுக்குள்ளே விருந்து வைத்திடவே நீயும் வந்தாயோ? இரவு நிலாவே!
இரவு நிலாவே! நீயே நீயே!
பருவ நிலாவே! பருவ நிலாவே!நீயே நீயே !
சன்னலுக்குள்ளே நெகிழ்ந்து சுகந்தரவே நீயும் வந்தாயோ?
பருவ நிலாவே! பருவ நிலாவே!நீயே நீயே !
அமுத நிலாவே!அமுத நிலாவே! நீயே நீயே!
அன்புக்குள்ளே மகிழ்ந்து களிப்புறவே நீயும் வந்தாயோ?
இன்ப நிலாவே!இன்ப நிலாவே!நீயே நீயே!
உயிருக்குள்ளே கலந்து இன்புறவே நீயும் வந்தாயோ?
காதல் நிலாவே!காதல் நிலாவே!நீயே நீயே!
பிரபஞ்சத்திலே இணைந்து சிறப்புறவே நீயும் வந்தாயோ?

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/நடுங்காதே நடுங்காதே வெண்ணிலாவே!-மார்கழிக் குளிரினிலே குளிரினிலே உறைந்திடும் நீரினில் நீயும்

நடுங்காதே நடுங்காதே வெண்ணிலாவே!-மார்கழிக்
குளிரினிலே குளிரினிலே உறைந்திடும் நீரினில் நீயும்
நடுங்காதே நடுங்காதே வெண்ணிலாவே!-மார்கழிக்
குளிரினிலே குளிரினிலே உறைந்திடும் நீரினில் - நீயும் ,காதலில் காதலர்
மயங்கிடும் மயங்கிடும் அந்திமாலையே-காதல்
மலர்ந்திட மலர்ந்திட தூதுபோவாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மயங்கிடும் மயங்கிடும் பூங்காற்றே!மூங்கிலோடு கூட்டுச் சேர்ந்து பாட்டுப் பாடிடும் பூங்காற்றே!

மயங்கிடும் மயங்கிடும் பூங்காற்றே!மூங்கிலோடு
கூட்டுச் சேர்ந்து பாட்டுப் பாடிடும் பூங்காற்றே!
மலர்ந்திடும் மலர்ந்திடும் தேன்பூவே!
காட்டுப் பூக்களின் நறுமண வாசம் முகர்ந்தே!
மயங்கிடும் மயங்கிடும் பூங்காற்றே!மூங்கிலோடு
கூட்டுச் சேர்ந்து பாட்டுப் பாடிடும் பூங்காற்றே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆதவனோ!கிழக்கினிலே! நடைபோட்டு !நடைபோட்டு ! போராடுதே!ஓஸோனில் ஓட்டையானதாலே

விடைபெறுது !விடைபெறுது !வெண்ணிலாவே!-ஆதவனோ!கிழக்கினிலே!
நடைபோட்டு !நடைபோட்டு ! போராடுதே!ஓஸோனில் ஓட்டையானதாலே-வெப்பத்தை
அடைகாத்த சூரியனோ!முடியாமல் நேரடியாய் பூமிதனை சுட்டெரிக்குதே

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தேனிசை கேட்டு மயங்கிடும் பூந்தென்றல் காற்று!-அந்தி நேரம் மொட்டு அவிழும் பூம்பாட்டு

தேனிசை கேட்டு மயங்கிடும் பூந்தென்றல் காற்று!-அந்தி
நேரம் மொட்டு அவிழும் பூம்பாட்டு-காதினில்
நானசை போட்டு நாளெல்லாம் சந்தோசக் கூத்து- தேன்
காதல் சிட்டு வந்து பறந்திடும் அன்புவானம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/புல்லாங்குழலே!புல்லாங்குழலே!-இளந்தென்றல் காற்றோடு பேசிடும் மூங்கிலின் புதிய ஜனனமே!

புல்லாங்குழலே!புல்லாங்குழலே!-இளந்தென்றல்
காற்றோடு பேசிடும்
மூங்கிலின் புதிய ஜனனமே!
இளந்தென்றல் காற்றின் வார்த்தைகளே! வார்த்தைகளே!
பசுமரத்தின் மோனத்தையே கலைத்திடவே வந்ததே!வந்ததே!
புல்லாங்குழலே!புல்லாங்குழலே!-இளந்தென்றல்
காற்றோடு பேசிடும்
மூங்கிலின் புதிய ஜனனமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காணும் இடமெல்லாம் இயற்கையின் அழகடியோ?-அதில் கருத்தினை வைத்தால் ஓடிடும் துன்பமடி!

காணும் இடமெல்லாம் இயற்கையின் அழகடியோ?-அதில்
கருத்தினை வைத்தால் ஓடிடும் துன்பமடி!
மோனக் கவிதைகள் கோடியடி!
வானச் சிறகடிக்கும் பறவையிலும்-அதன்
கான விழிகளிலும் நெகிழ்ந்திடும் அழகடியோ?
காணும் இடமெல்லாம் இயற்கையின் அழகடியோ?-அதில்
கருத்தினை வைத்தால் ஓடிடும் துன்பமடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உறங்கிக் கிடந்த பாறையின் மோனத்தையே உண்ணாமல் உறங்காமல் கலைத்தவனே சிற்பியடா!

உறங்கிக் கிடந்த பாறையின் மோனத்தையே
உண்ணாமல் உறங்காமல் கலைத்தவனே சிற்பியடா!
உளியோடு இதுவரையினில் பேசியது சிற்பமடா-எல்லோரோடும்
இனி வாழ் நாளெல்லாமே பேசிடும் சிற்படா!
உறங்கிக் கிடந்த பாறையின் மோனத்தையே
உண்ணாமல் உறங்காமல் கலைத்தவனே சிற்பியடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மார்வாடி அவன் வட்டிதனை அறிவானே -ஏழை இவர் வாழ்வுதனை அறிவானா?

அடகுக் கடையினில் தங்கத் தாலியே வட்டிப் பாடம் படிக்குமே!
இந்த மஞ்சள் கயிற்றின் மகிமை தன்னையே
அந்த மார்வாடிக் காரன் அறிவானா?-மார்வாடி
அவன் வட்டிதனை அறிவானே -ஏழை
இவர் வாழ்வுதனை அறிவானா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கண் தானமே கண் தானமே! இறப்புக்குப் பின்னும் இன்னொரு ஜனனமே!

தானமே தானமே!-கண்
தானமே தானமே!
கண் தானமே
கண் தானமே!
இறப்புக்குப் பின்னும்
இன்னொரு ஜனனமே!
தானமே தானமே-உறுப்புத்
தானமே தானமே-உடல்
உறுப்புத் தானமே-உடல்
உறுப்புத் தானமே
வாழ்வுக்குப் பின்னும்- நாமும்
வாழ்ந்திடும் உண்மை

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மோனமொழியே! மோனமொழியே! உலகமொழிகளில் எல்லாம் உயர்ந்த மொழியே!

மோனமொழியே! மோனமொழியே!
உலகமொழிகளில் எல்லாம் உயர்ந்த மொழியே!
மோனமொழியே !மோனமொழியே!சம்மதத்தையே
மோனத்தாலே உரைத்தாயோ? காதலியே
பேச எதுவும் இல்லாதபோது மோனமே சிறந்த மொழியாகுமே!
பேசவேண்டும் என்றபோது மோனமே கூட பேச முன்னே நிற்குமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உன்விழியினில் என்விழிதனை வைத்து- நானும் இன்பமொழி பெயர்த்தேனே!

உன்விழியினில் என்விழிதனை வைத்து- நானும்
இன்பமொழி பெயர்த்தேனே!
உன்பார்வை அனைத்தும் தேன்கவிதைகளே!
இயற்கையை இனிய தேன்கீதத்தையே!காதலாலே
உன்விழியினில் என்விழிதனை வைத்து- நானும்
இன்பமொழி பெயர்த்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/துண்டுபட்டால் வாழ்க்கையில்லை ஒன்றுபட்டால் இன்பத்திற்கே எல்லையில்லையே!

துண்டுபட்டால் வாழ்க்கையில்லை
ஒன்றுபட்டால் இன்பத்திற்கே எல்லையில்லையே!
இந்தவானில் இன்பவானில் சரி நிகர்சமமாய் சுதந்திரமாய் பறந்திடும் பறவைகளே!
உங்களை யாரும் பிடிப்பாருண்டோ?
உங்களின் ஒற்றுமை உள்ளவரையினிலே!
துண்டுபட்டால் வாழ்க்கையில்லை
ஒன்றுபட்டால் இன்பத்திற்கே எல்லையில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இனி நம்தேடல் என்ற ஒற்றுமை தானே உலக வாழ்க்கையாகுமடி

இனி
நம்தேடல் என்ற ஒற்றுமை தானே உலக வாழ்க்கையாகுமடி
என்பாடல் உன்பாடல் என்ற நினைப்பாடல் அன்றியே!
உன்பாடல் என்பாடல் எல்லாம் நம்பாடல் ஆனபின்னே!
உன்பாடல் என்பாடல் என்ற பேதங்கள் இல்லையடி-இனி
நம்தேடல் என்ற ஒற்றுமை தானே உலக வாழ்க்கையாகுமடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இனி நீவேறு நான்வேறு என்பதில்லை-இனி என்னாளும் துன்பமென்பதில்லை இல்லை

இனி
நீவேறு நான்வேறு என்பதில்லை-இனி
என்னாளும் துன்பமென்பதில்லை இல்லை


காதலியே
உன்னறிவில் நானொளிந்து நின்றதுபோலவே
என்னுயிரில் நீயொளிந்து நாமாகி நின்றாயே!
உள்ளமொன்று பட்டுவிட்டாலே அணைபோடத் துணிவு ஆருக்குமில்லை-இனி
நீவேறு நான்வேறு என்பதில்லை-இனி
என்னாளும் துன்பமென்பதில்லை இல்லை

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தனியுடைமை கொடுமையும் மெய்யடா!-அதை எதிர்த்த நம் ஒற்றுமையான போராட்டமும் மெய்யடா!

தனியுடைமை கொடுமையும் மெய்யடா!-அதை எதிர்த்த நம் ஒற்றுமையான போராட்டமும் மெய்யடா!
காண்பதும் மெய்யடா! கேட்பதும் மெய்யடா! பேசுவதும் மெய்யடா!
காதலும் மெய்யடா! தாய்மையும் மெய்யடா! பாசமும் மெய்யடா!
படிப்பறிவும் மெய்யடா! பகுத்தறிவும் மெய்யடா! நேசமும் மெய்யடா!
வாழ்வதும் மெய்யடா! வாழ்க்கையும் மெய்யடா! வஞ்சகர் வஞ்சமும் மெய்யடா!
வேலையின்மையும் மெய்யடா! விலைவாசி உயர்வும் மெய்யடா!
வாழ்வுக்கான போராட்டமும் மெய்யடா! தனியுடைமை கொடுமையும் மெய்யடா!-அதை எதிர்த்த நம் ஒற்றுமையான போராட்டமும் மெய்யடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பகுத்தறிவை ஆரறிந்தாரோ! –அவரே எல்லாப் பொருள்களையும் அறிந்திடுவாரே!

பகுத்தறிவை ஆரறிந்தாரோ! –அவரே
எல்லாப் பொருள்களையும் அறிந்திடுவாரே!
ஆரறிவாரோ? ஆரறிவாரோ? நீதிவழி ஆரறிவாரோ? –சித்திமுத்திஆரறிவாரோ?நற்றவங்கள்ஆரறிவாரோ?
உலகஉண்மைஅனைத்தும்ஆரறிவாரோ?பகுத்தறிவை ஆரறிந்தாரோ! அவரேஎல்லாப் பொருள்களையும் அறிந்திடுவாரே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஆணுக்கும் பெண்ணுக்கும் பகுத்தறிவு ஒன்று தானடா!-

ஆணுக்கும் பெண்ணுக்கும் பகுத்தறிவு ஒன்று தானடா!-

ஆணுக்கும் பெண்ணுக்கும் பகுத்தறிவு ஒன்று தானடா!-
ஆனாலும் மூடரோ !பேதைகுணம் பெண்ணுக்கு உண்டென்பாரே!
ஆணும் பெண்ணும் சமமென்றே நாமே கூத்தாடுவோமே!
ஆணும் பெண்ணும் சமமாகாமலே உழைப்போர்க்கே
உண்மையான விடுதலையே இல்லை இல்லையடா

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உலகினில் ஏற்றுமோ? மக்கள்ஜன நாயகமே!-உண்மையாய் போற்றுமோ? சுதந்திர வாசமே!

உலகினில்
ஏற்றுமோ? மக்கள்ஜன நாயகமே!-உண்மையாய்
போற்றுமோ? சுதந்திர வாசமே!


விடியாத காலத்தே இருளே ஆகுமே!
விடிந்தபின்னே கண்ணுக்கு வெளிச்சமாகுமே1
கிட்டுமோ? ஞானயோகம்- அடியே
கிடைக்குமோ?காதல் அன்பு!-துடிப்பாய்
கட்டுமோ? கண்பார்வை!-இனிமையே
காணுமோ?உலகப் பேரின்பம்-அறிவாகி
எட்டுமோ ?பகுத்தறிவு ஞானமே!-உலகினில்
ஏற்றுமோ? மக்கள்ஜன நாயகமே!
உண்மையாய்
போற்றுமோ? சுதந்திர வாசமே!
விடியாத காலத்தே இருளே ஆகுமே!
விடிந்தபின்னே கண்ணுக்கு வெளிச்சமாகுமே1

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

இந்தவாழ்வுக்கே போராடும் வாழ் நாளும் நிசமடா!
தந்தைதாய் நிசமடா! ஜனங்களும் நிசமடா!
மக்களும் நிசமடா! மனைவியும் நிசமடா!
இந்த மெய்யும் நிசமடா! இல்லறம் நிசமடா!
இந்தவாழ்வுக்கே போராடும் வாழ் நாளும் நிசமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலியே நீயிருந்தாய் நெஞ்சினிலே நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!

காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை –ஆகையினால்
என்னைவிட நீங்குவதுமில்லை நீ
காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே!
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
நிறைந்ததெல்லாம் இனித்ததுவே!- நான்
ஏதேது சொன்னாலும் ஏதேது நினைத்தாலும்
ஏதேது கேட்டாலும் ஏதேது பார்த்தாலும்
ஏதேது சிந்தித்து இருந்தாலும் –காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே!
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
நிறைந்ததெல்லாம் இனித்ததுவே!

கண்ணாலே காட்டுவதும் கண்பார்வையாலே காட்டி மறைப்பதுவும்-
-நெஞ்சாலே
கூட்டுவதும் அன்புகாட்டி பிரிப்பதுவும் ஒன்றையொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் ஊடிப்பின் கூடுவதும் காதலன்றோ!
அந்தக் காதலின் கதா நாயகியே நீயனேறோ காதலியே!
காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே!
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
நிறைந்ததெல்லாம் இனித்ததுவே!
உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை –ஆகையினால்
என்னைவிட நீங்குவதுமில்லை நீ

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்புக்கு முன்னே எல்லாம் இங்கே இன்பம் இங்கே!

அன்புக்கு முன்னே
எல்லாம் இங்கே இன்பம் இங்கே!


காதலுக்கு முன்னே
நானிங்கே! நீயங்கே!
காதலித்தப் பின்னே
நானுமிங்கே நீயுமிங்கே!
அன்புக்கு முன்னே
எல்லாம் இங்கே இன்பம் இங்கே!
வானெங்கும் ஒன்றாகி நின்ற உணர்வும் நீயல்லவா?-உன்னறிவில்
நானாகத் தோன்றும் சுகம் தேனல்லவா?
அலையாதிருந்த அறிவும் நீயல்லவா?-அங்கு
நிலைபெற்றிருந்த சுகமும் நீயல்லவா?
உள்ளம் கரைந்திடவே உடலும் கரைந்திடவே-ஆனந்த
வெள்ளம் அனுதினமும் கரைபுரண்டு ஓடுதடி