Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலியே நீயிருந்தாய் நெஞ்சினிலே நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!

காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை –ஆகையினால்
என்னைவிட நீங்குவதுமில்லை நீ
காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே!
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
நிறைந்ததெல்லாம் இனித்ததுவே!- நான்
ஏதேது சொன்னாலும் ஏதேது நினைத்தாலும்
ஏதேது கேட்டாலும் ஏதேது பார்த்தாலும்
ஏதேது சிந்தித்து இருந்தாலும் –காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே!
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
நிறைந்ததெல்லாம் இனித்ததுவே!

கண்ணாலே காட்டுவதும் கண்பார்வையாலே காட்டி மறைப்பதுவும்-
-நெஞ்சாலே
கூட்டுவதும் அன்புகாட்டி பிரிப்பதுவும் ஒன்றையொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் ஊடிப்பின் கூடுவதும் காதலன்றோ!
அந்தக் காதலின் கதா நாயகியே நீயனேறோ காதலியே!
காதலியே
நீயிருந்தாய் நெஞ்சினிலே!
நெஞ்சமெல்லாமே நிறைந்ததுவே!
நிறைந்ததெல்லாம் இனித்ததுவே!
உன்னைவிட நீங்குமுயிர் ஒன்றில்லை –ஆகையினால்
என்னைவிட நீங்குவதுமில்லை நீ

No comments: