Popular Posts

Sunday, December 18, 2011

தமிழ்பாலா-காதல் -கவிதை-தத்துவம்-பகிர்வு-அனுபவம்- நதிகளையே தேசியமாக்க உறுதியற்ற மத்திய அரசு!:

 நதிகளையே தேசியமயமாக்க உறுதியற்ற மத்திய அரசு!-என்றும்
 நாளெல்லாம் பேசினாலும் மாநிலங்கள் சமாதானம் ஆகிடுமா?-உச்ச
 நீதிமன்ற தீர்ப்பினையே ஏற்காத மா நிலத்தின் முன்னே!-தமிழ்
மா நிலமே இரு மா நில மக்கள் ஒற்றுமையே தானே!
மாசற்ற தீர்வினையே இருமா நிலத்தும் உருவாக்கிடுமே!
பேதங்கள் பாராட்டும் அரசியல் சதிகாரர்களின்
பொய்யும் புனைசுருட்டும் புரிந்து நாமே அழித்திடுவோமே! 



Wednesday, October 26, 2011

வாழும் வாழ்க்கையிலே!

சொல்லில் இனிமைவேணும்! செயலில் உறுதிவேணும்-வாழும் வாழ்க்கையிலே! கொள்கையில் தெளிவுவேணும்!இம்மண்ணிலே இம்மூன்றும் ஒன்றிணைந்தால் எவரும் எதையும் சாதிக்கலாமே!

Monday, October 17, 2011

மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?

காலம் ஒருகோலம் போட்டதே!-அதுவும் கண்ணீரில் கரையாமல் போனதே!\ நானும் நீயும் சேர்ந்தே-என்றும் காணும் பேரின்பம் அன்பே!~-அதுவே காதலே என்றால் மிகையாமோ? எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுந்ததே! ஏட்டினில் சொன்னது கொஞ்சமடி தோழியே!!-உன் கண்ணும் என்கண்ணும் சேர்ந்த போதிலே! காணும் இன்பத்திற்கே ஓர் எல்லையுண்டோ? மாற்றம் என்றும் மாறுவதுண்டோ?வாழ்வில் ஏமாற்றம் என்பது தொடர்வதுண்டோ?-மனிதத் தோற்றம் குரங்கில் இருந்தன்றோ?அதுவும் மாறிவந்த பரிணாம வளர்ச்சி அன்றோ?

Sunday, June 19, 2011

தமிழ்பாலா/பகிர்வு/அனுபவம்/கற்றுக்கொள்ளல்/-”பத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,

பத்திரிகையாளர் ஞானி அவர்களுடன்,ஒரு அற்புதமான இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பு !காலச்சுவடு ,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திய
அற்றைத்திங்கள் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமை கொள்கின்றேன். ஞானி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களோடு இணைந்த அவரின் பகிர்வு வளரும் படைப்பாளிகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது .அதைவிட அவருடைய கலந்துரையாடல் பதில் அவரது அனுபவம் ,சமச்சீர் கல்வி,அவரது ஆணித்தரமான நேர்மையான அவருடைய அணுகுமுறை கேட்பதற்கே பிரமிப்பாக இருந்தது